Saturday, 22 August 2015

நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் நான்...

நரேந்திர மோடி குறித்தும், அவர் வெகுஜன மக்களின்  நலனுக்கு எதிராரனவர்,கார்பரேட்டுக்கள்,பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்கானவர், உழைக்கும் மக்கள் விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியவர்களுக்கு அவரது ஆட்சியால் எந்த நன்மையையும் ஏற்படாது, மாறாக அவர்கள் மிகவும் பதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே,மோடியை ஆட்சி அமைக்கும் முட்டாள்தனத்தைச் செய்யக்கூடாது என பல புள்ளி விவரங்களுடன், ஆதாரங்களுடன், காரிய காரணங்களுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு சில பதிவுகளை இட்டு இருந்தேன், ஊடக மேதாவிகள்,கார்பரேட்டு ஆதரவு அறிவு ஜீவிகள் ஆகா.. ஓஹோ..நரேந்திர மோடிதான் சரியான ஆள்... அவர் ஆட்சிக்கு வந்துவிட்டால்  இந்தியா வேகமாக முன்னேறிவிடும், பாலாரும் தேனாறும் பாயும், 100-நாளில் கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15,00,000-லட்சம் ரூபாயை போடுவார், என்று ஓவராக அலப்பரை செய்தன. இன்று அவர்களின் எண்ணங்களில் மாறுதல் உள்ளதா? இன்னும் மோடியை ஆதரிகிறார்களா? நிலத்தை விவசாயிகளிடம் இருந்து அபகரிக்கும் நிலா ஆர்ஜித சட்டத்தை அமல்படுத்த ஏன்? மோடி அரசு இவ்வளவு மெனக் கெடுகிறது? மோடி ஆட்சியில் விலைவாசி கட்டுப்படுத்தப் பட்டு உள்ளதா? இன்றைய வெங்காயம் விலை என்ன? பருப்பு விலை என்ன? மாநில அரசுகளுடன் மோடி அரசின்  ஒருங்கிணைந்த செயல் பாடு என்ன? மோடி ஏன் பல முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பாமல் மவுனம் காக்கிறார்? வெளிநாடுகளில் அவ என்ன செய்கிறார்? இந்திய நலனை விட அந்நிய முதலீடுகளில் அக்கறை காட்டுவதேன்? என பல்லாயிரம் கேள்விகளும் சிந்தனையும் என்னைப் பாடாகப் படுத்துகின்றன.
எனவே, மீண்டும் எனது எண்ணங்களை பகிர்ந்துகொள்ள இந்த பிளாகிற்கு வருகிறேன். ஆரோக்கியமான ஆலோசனைகள்,கருத்துகள், எண்ணங்களை உங்களிடம் இருந்து வரவேற்கிறேன்.! தனிநபர் விமர்சனம், நீ இப்படிதான் என கணிப்பு, ஆபாசமான வசவுகள் ஆகியவைகளைத் தவிர்க்கும் படி அன்புடன் வேண்டுகிறேன்..

Monday, 7 July 2014

காமராசரும்,கல்விக் கொள்ளையர்களும்..

         இந்திய அரசியல் சட்டம் குடிமக்களுக்கு கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளில் கல்வி உரிமை முதன்மையானது . இந்த அடிப்படை கல்வி உரிமையைப் பற்றி இப்போதுள்ள அரசுகள் கவலைபடுவதில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

        காமராசர் முதல்வராக இருந்தபோது,அரசின் மொத்த வருமானத்தில் கல்விக்காக 30% வருவாயை செலவிட்டார். அனால் 50 ஆண்டுகள் கழிந்து நடக்கும் இன்றைய அரசு வெறும் 14% மட்டுமே செலவிடுகிறது. 

      இலவச,அடுப்பு,கேஸ்,மிக்சி,கிரைண்டர்,இலவச மடிக்கணணி,இலவச சைக்கிள்,  ஆடு, மாடு ஆகியவைகளை கொடுப்பதால் மட்டுமே ஒரு சமூகம் அறிவார்ந்த சமூகமாக மாறிவிட முடியாது  என்பதை ஆட்சியாளர்களும், அரசும் புரிந்துகொள்ளவேண்டும்.  அனைவருக்கும் தரமான கல்வியை, தாய் மொழிக் கல்வியை கொடுப்பதே  ஒரு சமூகத்தை அறிவார்ந்த சமூகமாக மாற்றும் என்ற உண்மையைத்  தெரிந்துகொண்டு, அதனை செயல்படுத்த முன்வர வேண்டும் !

      இன்றைய கல்வியாளர்கள் யாரென்று பார்ப்போமானால, கள்ளச் சாராயம் விட்ரவர்கள் கல்லூரி அதிபரகளாக இருப்பதும்,முன்னாள் அரசியல்வாதிகள் கல்வித்  தந்தைகளாக காட்சி அளிப்பதும்,சட்டவிரோதமாக மணல் கடத்தியவர்கள் கல்வி வள்ளல்களாக போற்றபடுவதும் தெரியும். சாமானிய மக்களைக் கொள்ளையடித்து, வள்ளல்களாக மாறிய இவர்கள், பத்திரிக்கை, தொலைகாட்சிகள் நடத்துவதும்  சாத்தான் வேதம் ஓதுவதுபோல நீதியைப் பற்றியும் நேர்மையை பற்றியும் பேசி, அரசுக்கு புத்தி சொல்வதையும் காணலாம்.

       ஒரு குடும்பத்தின் முழு வருமானமும்  குழந்தைகளின் படிப்புக்கே செலவிடப்படும் கொடுமையான சூழல் சமூகத்தில் இருப்பது, வெட்கப்படவேண்டிய தேசிய அவமானமாகும்

        பல ஆங்கிலபள்ளிகள்  ஒரு குழந்தையை L K G-யில் சேர்பதற்கு ரூ. 2 லட்சம் வரை வசூளிக்கின்றன்.  பிளஸ் 2-வரை படிப்பதற்கு பல லட்சம் செலவு செய்யவேண்டியது இருக்கிறது.  தனியார் கல்லூரிகள்  ஆண்டுக்கு 5, 6 லட்சம் நன்கொடை வாங்கிக்கொண்டுதான் கல்லூரியில் இடம் கொடுக்கின்றன. மருத்துவ படிப்பின் நிலையோ இன்னும் மோசம்.   ஒரு M.B.B.S -சீட்டு ஒரு கோடி வரை விற்கப்படுகிறது.  மருதுவ மேல்படிப்புக்கு  ரூ.3 கோடி செலவாகிறது..  மூன்று கோடி கொடுத்து மருத்துவம் படித்த மருத்துவர் ஏழைகளுக்கு எப்படி மருத்துவம் பார்க்க முடியும்? அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம்  இது.

           இன்று கல்வி ரியல் எஸ்டேட் தரகர்கள்,கள்ள சாராய வியாபாரிகள், திரைப்படம் எடுத்து நொடிந்து போனவர்கள்,அரசியலில் காணாமல் போனவர்கள் என அனைவரையும் வளாவைக்கும் துறையாக கல்வித்துறை மாறிவிட்டது.  பங்கு சந்தையை விட அதிக லாபம் தரும் தொழிலாக மாறிவிட்டது. கஞ்சா,சாராயம் விர்ப்பதைவிட அத்க லாபம் தருவது கல்வி என்றாகிவிட்டது.

         இந்த நிலைமை மாறவேண்டும். கல்வியை வியாபாரமாக்கும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடமையாக்க வேண்டும். கல்வி நிறுவனங்களை   அரசுடமையாக்க கோரி அனைவரும் குரல்கொடுக்கவும், போராடவும் வேண்டும்.

 ( தமிழக மக்கள் ஜனநாயக கட்சி இதனை வலியுறுத்தி ஜூலை-15-ம் தேதி D P I - வளாகம்  சென்னையில் போராட்டம் நடத்துகிறது )

 Saturday, 5 July 2014

எரியும் கொள்ளிக்கு பயந்து எண்ணைசட்டியில் விழுந்தது போல..

          காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நடந்த முறைகேடுகள், மக்களுக்கு எதிரான் செயல்கள்,விலைவாசி பிரசனை ஆகியவைகளால் அதிருப்பதிஅடைந்த பொதுமக்கள்  பி.ஜே.பி-க்கு ஆதரவளித்து, அறுதிப் பெரும் பான்மையுடன்  அக்கட்சியை ஆட்சியில் அமர்த்தி இருகிறார்கள்.

         பி.ஜெபி-அரசு தட்டிகேட்க ஆளில்லை என்ற மிதப்பில் மக்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாமல்,  தான் தோன்றிதனமாகவும், தன்னிச்சையாகவும் ,செயல்பட ஆரம்பித்து உள்ளதை  அதன் சமீபத்திய செயல்பாடுகள் காட்டுகின்றன.

        எரிவாயு சிலிண்டர் விலையை  ரூ 250 வரை உயர்த்த போவதாகவும், மண்ணெண்ணெய்,பெட்ரோல்,டீசல் விலையை  எண்ணெய் நிறுவனங்களே தங்கள் விருப்பபடி உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கவும் ஆலோசித்து வருகிறது

        போதா குறைக்கு மக்களுக்கு அளித்துவரும் மானியங்களை குறைத்தும், வழங்காமல் மறுக்கவும் முயற்சி செய்வதாக செய்திகள் வருகின்றன.

      இந்தியாவில் அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கும், தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கும், இந்திய அரசு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. உற்பத்தி பொருள்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு வரி சலுகை, மின்சாரம், குறைந்த வட்டியில் கடன், குறைந்த மதிப்பீட்டில் நிலம் வழங்கி, அந்நிய சக்திகளின் கொள்ளை லாபத்துக்கும்,சுரண்டலுக்கும் அனுமதி அளித்து வருகிறது.

        ஆனால், தனது சொந்த நாட்டு மக்களுக்கு இந்திய அரசு, சூடு வைக்கிறது.  அவர்களது வாழ்க்கையை வளபடுத்தத்   தேவையான நடவடிக்கைகளை  எடுக்க முன்வராமல், மேலும் மேலும் அவர்களுக்கு பதிப்புகளை ஏற்படுத்தவே  முனைந்து செயல்படுகிறது.

         பி.ஜே.பி-அரசு ரயில்வேதுறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது  இதனால் இலட்சக் கணக்கான  இந்திய தொழிலாளர்களின் வேலை  வாய்ப்பைபு, வருமானம் எதிர்காலம் கேள்வி குறியாகும்,  இரயில் போக்குவரத்தை நம்பியுள்ள,கோடிக் கணக்கான மக்களின் வாழ்வும் பாதிக்கப்படும் அபயம் ஏற்பட்டு உள்ளது.

         பொதுவாக முதலீடு செய்யும் எந்த முதலாளியும்,எந்தஒரு நிறுவனமும் தனது  முதலீட்டுக்கு ஏற்ப அதிக லாபத்தை எதிர்பார்ப்பது வியாபார நியதியாகும்.   லாபத்தை எதிர்நோக்கி  முதலீடு செய்யும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தங்களது முதலீட்டுக்கு  ஏற்ப அதிக லாபத்தை அடைய வேண்டி முதலீடு செய்யும் துறையின் நிர்வாகத்தில் சீர்திருத்தம் என்ற பெயரில்   குறுக்கீடு செய்வது தவிர்க்க இயலாததாகும்.

           இரயில்வேயில் முதலீடு செய்யும் அந்நிய நிறுவனங்கள்  முதலில் அதிகமாக தொழிலாளர்களை வேளையில் இருந்து நீக்குவார்கள், பயணிகளின் வசதியை அதிகரிப்பதாக கூறி,     இரயில் கட்டணத்தை தங்கள் இஷ்டத்துக்கு உயர்த்துவார்கள்,  சரக்கு     இரயில் போக்குவரத்தும் பாதிக்கப்படும்.  உணவுப் பொருட்களும் பிற அத்தியாவசியப் பொருட்களும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது கூட சிரமமாகும்

 இதனால , செயற்கையான தட்டுப்பாடும், அதன் தொடர்ச்சியாக பொருட்களின் விலையேற்றமும்  வரலாறு காணாத வகையில் உயரும் நிலை ஏற்படும்.

     எல்லாவற்றிலும் கொள்ளை லாபமும்,சுரண்டலும் நடக்கும். பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்கு  அப்பாவி பொதுமக்களின் உழைப்பும் வாழ்க்கையும்  பலியாகும்.       எந்த காரணத்திற்க்காக பொதுமக்கள் காங்கிரசை வெறுத்து, பி.ஜே.பி-அரசை  கொண்டுவந்தார்களோ,  அதனை  பி.ஜே.பி அரசு காங்கிரசை விட வேகமாக செய்ய முனைந்து வருகிறது.

      இதனைபார்க்கும்போது, எரியிற கொள்ளியில் தலையை சொறிவதற்கு பயந்து எண்ணைச் சட்டியிலே விழுந்துவிட்ட கதைபோல தெரிகிறது,இந்திய மக்களின் நிலை !


   

  

Wednesday, 2 July 2014

பிரதமர் மோடியின் கவர்ச்சி எத்தனை நாட்கள்?

              இந்தியாவை காப்பற்ற வந்தவர்,அவதாரம்,வளர்ச்சியின் நாயகன் என்று தேர்தலுக்கு முன்பு தூக்கி கொண்டாடிய இந்தியமக்கள் இரயில் கட்டண உயர்வு,சர்க்கரை விலை உயர்வு,பெட்ரோல்,டீசல் விலை உயர்வு,சரக்கு கட்டணங்கள் உயவு,தொடர்ச்சியாக காய்கறிகள்,அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றம் ஆகிய பிரச்னைகளில் இப்போது  சிக்கித் தவிக்கிறார்கள்.!

           தேர்தலில் மோடிக்கு வாக்களிக்காதவர்களுக்கு மட்டும் இந்த பிரசனை இல்லை. வாக்களித்தவர்களுக்கும்,மோடியை வானளாவப் புகழ்ந்தவர்களுக்கும் சேர்த்துதான் இப்போது பிரசனை ஏற்பட்டு இருக்கிறது.

          தேர்தலுக்கு முன்பு  எதையெல்லாம் காங்கிரஸ் அரசின் மோசமான செயல்பாடாக,நிர்வாக சீர்கேடாக சொல்லி,பி.ஜே.பி  கட்சி பிரசாரம் செய்ததோ அத்தனை பிரச்னைகளும் மோடியின் நிர்வாக மேம்பாட்டால் அதிகரித்து உள்ளது.

         வெகுஜன மக்களிடம் அரசும்,காங்கிரசின் இமேஜும் சரிந்துவிடும் என்று நினைத்தும்,இடதுசாரிகள் போன்ற கட்சிகளின் எதிர்ப்பை சந்திக்க வேண்டி  இருக்குமே என்ற தயக்கதாலும் காங்கிரஸ் அரசு புதிய பொருளாதாரக் கொள்கையை, சீர்திருத்தங்களை மெதுவாக செய்துவந்தது.

         ஆனால்,  மோடியின் அரசு மக்களுக்கு எதிரான,மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களை மிக வேகமாக செய்ய ஆரம்பித்து இருக்கிறது.கசப்பு மருந்தை சாப்பிட்டுதான் ஆகவேண்டும் என்று விளக்கம் சொல்லுகிறது. உண்மையில் அது கசப்பு மருந்துதானா? நோயை குணமாக்குமா?அல்லது உயிரைப் பறிக்கும் விஷமா?  என்று பலருக்கும்  குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

        இதனை மோடியின் அரசின்மீது எனக்குள்ள அதிருப்தியை காட்டவோ, அல்லது வெறுத்தோ எழுதுவதாக யாரும் கருதவேண்டியதில்லை..

         மோடியை பிரதமராக்கிய கார்பரேட்டுகள், பன்னாட்டு முதலீட்டாளர்கள்,  இந்தியாவை சுரண்ட இந்தியாவில் அந்நிய முதலீடுகளை அதிக அளவில் செய்ய உத்தேசித்து இருப்பவர்கள்  மோடியை சுயமாக செயலாற்ற விடுவார்களா? அதுவும் எதையும் உடனே தங்களுக்கு சாதகமாக செய்துகொள்ள நினைக்கும் பேராசை பெருமுதலாளிகள் நிர்பந்தத்தின்  பேரிலேயே மோடியின் அரசு நடந்து கொள்வதாக  தோன்றுகிறது.       ஜூன் 2-ம் தேதியில் இருந்து 27-ம் தேதிவரையில் இந்தியாவில் அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு ரூ.31764 கோடி செய்யப்பட்டு உள்ளது. இந்திய பங்குகளில்,கடன்பத்திரங்களில்,ஊகபேர வர்த்தகம் என்னும் ஆன்லைன் வர்த்தகத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடு இந்திய பொருளாதாரத்தை, உழைப்பே இன்றி அந்நிய முதலீட்டாளர்கள் சுரண்டவும்,கைப்பற்றவும் மேற்கொண்டிருக்கும்  முயற்சியாகும்.

        கார்பரேட்டு கம்பனிகள்,பன்னாட்டு நிறுவனங்கள்,பெருமுதலாளிகள் நலனை விரும்பும் மோடி அரசால், ஏழைகள் நடுத்தரமக்கள் தங்களது அன்றாட வாழ்கையை நடத்துவதற்கே சிரமப்படும் நிலைக்கே ஆளாகி வருவார்கள். அத்தகைய மக்களிடம் மோடிமீது அவர்களுக்கு இருக்கும் கவர்ச்சி இன்னும் எவ்வளவுகாலம் நீடிக்கும்?  என்பதே நமது சிந்தனையாகும்!    

Wednesday, 23 April 2014

தேர்தலில் இருக்கு நோட்டும் நோட்டாவும்..!

         நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயத்தின் மீது விரக்தியும், நமது வேட்பாளர்கள் மீது உள்ள அதிருப்தியையும் ஆளும் வர்க்கம் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டு இருக்கிறது. அதன் அடையாளமாகவே வாக்கு பதிவு இயந்திரத்தில் உள்ள பதினாறு பட்டன் களில் ஒன்றாக நோட்டா( NOT ABOVE THE OPTION ) இடம் பெற்று இருக்கிறது.

          ஒரு தொகுதியில் நிற்கும் வேட்பாளர்கள் யாரையும் பிடிக்கவில்லை, வாக்கு அளிக்க விருப்பமில்லாதவர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்கலாம்.!

        நோட்டாவுக்கு செல்லும் வாக்குகள்  செல்லாதவையாக கருதப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

        மேலும் ஒரு தொகுதியில் நோட்டாவுக்கு வேட்பாளர்களைக் காட்டிலும் அதிக வாக்குகள் பதிவானால் அந்த தொகுதியல் மறுதேர்தல் நடத்தபடுவதும், தற்போது வேட்பாளர்களாக உள்ளவர்களை மறுதேர்தல் நடைபெறும்போது தகுதி நீக்கமும் செய்வதுதான் சிறந்த ஜனநாயகமாக இருக்கமுடியும் !

            அத்தகைய நடைமுறையை கடைபிடிக்க  முன்வராமல் தேர்தல் ஆணையம் நோட்டாவுக்கு  அடுத்து அதிக வாக்குகள் பெற்றவரை வெற்றிபெற்றவராக அறிவிக்கும் முடிவை எடுத்து உள்ளது,இது கண்டிக்க வேண்டிய ஒன்றாகும்.!

       அதிக பணத்தைக் கொடுத்து, ஜனநாயகத்தை பணநாயகமாக, ஊழல், முறைகேடு உள்ளதாக  நமது அரசியல்கட்சிகள் பலவும் செய்துவிட்டன, வாக்களர்களுக்கு  பணம் கொடுத்து,  தங்களது தவறுகளை மறைக்க அரசியல்வாதிகள்  நினைகிறார்கள.!

        தாங்கள் சுரண்டிய  பணத்தை, முறைகேடாக சேர்த்த பணதைகொண்டே அடுத்த சுரண்டலுக்கும், முறைகேடுகளுக்கும்  மக்களிடம் அனுமதி வாங்கும் நோக்கத்தில் அரசியல்வாதிகள் நடந்துகொண்டு அப்பாவி மக்களுக்கு வாக்களிக்க பணம் தருகிறார்கள்.!

          அப்பாவி மக்களும், வறுமையில் வாடும் கிராமப்புறத்து ஏழைகளும்  இதனை அறியாமல், தங்களது வாக்குகளின் வலிமையைப் பற்றிய விழிப்புணர்வு இன்றி,  வேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிகொண்டு வாக்களிக்கும் அவல  நிலை இருந்து வருகிறது.!

  இதுபோன்ற காரணங்களால்,இ ந்தியாவின் ஜனநாயகம்  நாளுக்கு  நாள் ஏகாதிபத்தியமாக,அதிகார  வர்க்கங்களால் மாற்றப்பட்டு வருகிறது.!

  சர்வாதிகார,ஏகாதிபத்தியமாக இந்திய ஜனநாயகம் மாறி வருவதன் எதிரொலியே,  "இந்துக்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் வேற்று சமூகங்களுக்கு இடமில்லை"  என்ற கொள்கையுள்ள மோடி பிரதமர்  என்று கொக்கரிப்பதும், தேர்தலுக்கு முன்பே பிரவீன் தொக்காடியா  முஸ்லிம்கள் வெளியேறவேண்டும் என்று திமிராக பேசுவதும் மோடிக்கு வாக்களிக்க வில்லை என்றால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என்று கிரிராஜ் சிங் என்பவர் கொக்கரிப்பதும்  போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.

         இவர்கள் சொல்லியதையே, முஸ்லிம்களோ, கிருஷ்தவர்களோ, சொல்லியிருந்தால்  அவர்கள்மீது இந்நேரம் பயங்கரவாத தடைச்சட்டம் பாய்நதிருக்கும், தேசத்தின் இறையாண்மைக்கு, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக கைது செய்து சிறையில் அடைத்து இருப்பார்கள். !

       பிரவீன் தொகடியா,கிரிராஜ் சிங் ஆகியோர்களுக்கு அவ்வாறெல்லாம் நடைபெறவில்லை.நடைபெறப் போவதுமில்லை.!

       எனவே, இந்தியா எங்கு போகிறது?  இந்தியாவின் பிரதமராக யார் வரவேண்டும்?  யார் வரகூடாது.  இந்தியா இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானதாக இருக்க வேண்டுமா?  அனைத்து சமூகங்களுக்கும் ஆனதாக இருக்க வேண்டுமா? என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கிறது.

        ஆகவே, நோட்டாவை பயன்படுத்தினாலும் ஒன்றும் ஆவப்போவதில்லை. நோட்டை வாங்கிகொண்டு  நமது வாக்குகளை வீனடிகாதீர்கள். !

       நமது வாக்குகளை  அயோக்கியர்களுக்கு, நாட்டை துண்டாட நினைப்பவர்கள்,  வன்முறையாளர்கள், மதவெறி, சாதிவெறியர்கள்,  சுரண்டல் பேர்வழிகள்  ஆகியவர்களுக்கு அளிக்காதீர்கள்.!

       நல்லவர்களைத்தேர்ந்தெடுக்க,  நமது வாக்குகளைப் பயன்படுத்துவோம்.!   நமது ஜனநாயகத்தைக் காக்க அதுவே சிறந்த வழியாகும்.!


Saturday, 12 April 2014

மோடி எத்தனை முகமூடியடி!

            ராமன் எத்தனை ராமனடி என்று ஒரு பாடல் உள்ளதைபோல இன்று மோடி எத்தனை முகமூடியடி என்று பாடவேண்டும் போலிருக்கு! 

           அத்தனை வேசங்கள் போட்டு இந்தியாவில் தேர்தல் பிரசாரம் செய்துவரும் நரேந்திர மோடி இதுவரை தான் கல்யானமகதவர் என்று போட்டுவந்த வேசத்தை முதல்முதலாக கலைத்துவிட்டு, தனக்கு திருமணம் ஆனது, தனது மனைவி ஒரு பள்ளி ஆசிரியை,ஓய்வு பெற்றுவிட்டார். தனியாக வாழ்ந்துவருகிறார்.அவரது பெயர் ஜசோதாபென் என்று தனது வேட்புமனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

        இதுவரை தனக்கு திருமணம் நடந்ததை மறைத்ததாக அவர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

         தான் ஒரு பெண்ணுக்கு தாலி காட்டியதையே,தனக்கு திருமணம் நடந்ததையே,தனது மனைவி உயிருடன் இருப்பதையே, மறைத்த மோடி -இதுவரை எவை எதை மறைத்து இருப்பார் என்று இப்போது பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது !

        பிரதமர் பதவிக்காக தன் மனைவியை முதன்முதலாக அறிமுகபடுத்திய மோடி எவ்வளவவு பெரிய மோசடிகாரராக, போய்யானாக இருக்க வேண்டும் தன் மனைவியையே மறைத்த மோடி, நாளைக்கு நம் நாட்டை எதிரிகளுக்கு  காட்டியும் கொடுத்துவிட்டு அதனை  நம்மிடம் இருந்து மறைக்க எவ்வளவ நேரம் ஆகும? என்ற கேள்வி எழுகிறது! 


 Photo: மனைவியையே மறைத்த மோடி -எதை எதை மறைத்து இருப்பார் ? சிந்திக்கவும்

பிரதமர் பதவிக்காக தன் மனைவியை அறிமுகபடுத்திய மோடி எவ்வளவவு பெரிய போய்யானாக இருக்க வேண்டும் ?

தன் மனைவியையே  மறைத்த மோடி - நாளைக்கு நம்  நாட்டை எதிரிகளுக்கு  கூட்டியும் காட்டியும் கொடுத்துவிட்டு - நம்மிடம் இருந்து மோடி அதை மறைக்க எவ்வளவவு  நேரம் ஆகும் : இந்தியனே சிந்திக்கவும் !

தன் மனைவியை இந்தியர்களிடம் மறைத்த மோடி - நாளைக்கு நம் நாட்டை எதிரிகளுடன் கூட்டியும் காட்டியும் கொடுத்துவிட்டு - நம்மிடம் இந்த பொய்யன் அதை மறைத்துவிட்டால். .. ? நம்மிடம் மறைக்காமல் இருப்பார் என்பதற்கு என்ன சான்று ?

இந்தியனே சிந்திக்கவும் !

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது வேட்பு மனுவில் தான் ஜசோதாபென் என்ற பெண்ணை திருமணம் செய்ததாகவும், அவர் ஓய்வு பெற்ற ஆசிரியை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதுவரை தனக்கு திருமணம் நடந்ததை மறைத்ததாக அவர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடாவில் இன்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

மோடி எத்தனை முறை தேர்தல்களில் போட்டியிட்டார் என்பது தெரியாது. இதுவரை எந்த தேர்தலிலும் அவர் தன் மனைவி பெயரை குறிப்பிடவில்லை. முதல் முறையாக அவர் தனக்கு திருமணமானதை இப்போது எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் 2009-ம் ஆண்டு மோடி அரசின் உத்தரவின்பேரில் இளம்பெண் ஒருவர் வேவு பார்க்கப்பட்டார். ஆனால், அதன்பின்னர் டெல்லியில் பெண்களுக்கு மரியாதை அளிப்பதாக பா.ஜனதா கட்சியினர் போஸ்டர்கள் ஒட்டினார்கள். பெண்களுக்கு இப்படிப்பட்ட மரியாதையைத்தான் அளிக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.       தன் மனைவியை  பற்றிய உண்மையை நாட்டுக்கு சொல்லாமல் இதுவரை மறைத்த மோடி நம்பிக்கையுள்ளவரா? நம்பத்தகுந்தவரா? நாட்டை ஆள தகுந்தவரா?   நம் நாட்டை அவரிடம் ஒப்படைத்தால் நாளை எதையெல்லாம் அவர் மறைப்பார்.? மறைக்க மாட்டார்  என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது ?

        ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடாவில்   நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் "ராகுல் காந்தி, மோடி எத்தனை முறை தேர்தல்களில் போட்டியிட்டார் என்பது தெரியாது. இதுவரை எந்த தேர்தலிலும் அவர் தன் மனைவி பெயரை குறிப்பிடவில்லை.  முதல் முறையாக அவர் தனக்கு திருமணமானதை இப்போது எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். குஜராத்தில் 2009-ம் ஆண்டு மோடி அரசின் உத்தரவின்பேரில் இளம்பெண் ஒருவர் வேவு பார்க்கப்பட்டார். ஆனால், அதன்பின்னர் டெல்லியில் பெண்களுக்கு மரியாதை அளிப்பதாக பா.ஜனதா கட்சியினர் போஸ்டர்கள் ஒட்டினார்கள். பெண்களுக்கு இப்படிப்பட்ட மரியாதையைத்தான் அளிக்கிறார்கள்."என்று கூறி உள்ளார். 


     மோடி தனக்கு திருமணம் ஆனதை மட்டும்தானா மறைத்துள்ளார்.? தனது ஆட்சியில் பாதுகாக்க வேண்டிய முஸ்லிம்களை படுகொலை செய்ய உதவியதை, போலி என்கவுண்டர்களை மறைத்தார் ! ஊழல் அதிகாரிகளை, சமூக குற்றவாளிகளுக்கு புகலிடம் அளித்ததை மறைத்தார் !.அரசு நிலங்களையும்,விவசாயநிலங்களையும் கார்பரேட்டு கம்பனிகளுக்கு அடிமாட்டு விலைக்கு கொடுத்ததை,அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதை மறைத்தார்,!  

      சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் சலுகைகளை வழங்க மனமின்றி திருப்பி அனுப்பினார்.! ஒட்டு மொத்த குஜராத்தில் ஏழைகளின் அவலத்தை வளர்ச்சியாக காட்டி ஏமாற்றுகிறார்.! குடிக்க தண்ணீர் இன்றி குஜராத் மக்கள் அவதி படுவதையும் அபரிதமான வளர்ச்சியாக காட்டி ஏமாற்றி வரும் மோடி  ஒரு மோசடிக்காரர்.! பச்சை பொய்யன்.!

         மோடி தான் மறைத்த உண்மைகளை ஒப்புகொண்டால்..  உலகின் சர்வதேச பயங்கரவாதி போல தெரிவார்.!
 
       இப்படிப்பட்ட முகமூடியைத்தான் கார்ப்பரேட்டு கம்பனிகளும், ஊடகங்களும்   ஊதி,ஊதி  மோடியை அவதார நாயகனாக காட்டி மக்களை ஏமாற்றி வருகின்றன. !

         மோடியால் ஒட்டுமொத்த பெண்களும் அவமானபடுத்தபட்டு உள்ளனர்.! பெண்ணியத்துக்கு எதிரியான மோடி பிரதமரானால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்னவாகும்? சிறுபான்மையினர் நலம் என்ன? 

        இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையே மாற்றவேண்டும் என்று பேசும் பி.ஜே.பி-ஆட்சிக்கு வந்தால் நாடு.. சுடுகாடாகிவிடும் என்பதுதான் எதார்த்தம்.!
Tuesday, 8 April 2014

மீத்தேன் வாய்வுக்கு பின்னுள்ள பயங்கரம்!

            நூறுபேர் வாழ்வதற்கு, நாலு பேர் உயிர் விட்டால் தப்பிப்பில்லை என்று நியாயம் பேசுவார்கள்,ஆனால், மீத்தேன் திட்டம் இது போன்றதல்ல.. நான்கு பேர் வாழ்வதற்க்கு நூறுப் பேரை கொல்லும் திட்டம்.! .

        சாதாரணமாவே இது மாதிரியான திட்டங்களால் சுற்று சூழல் மாசுபடும், மக்களின் வாழ்வாதரங்கள் பாதிக்கப்படும், அதைவிட அவை மனித உயிர்களுக்கே உலை வைக்கும்!   இது மாதிரியான திட்டங்களால் எதிர் வினைகள் மிக மோசமானதாக இருக்கும்.!

           "மீத்தேன் வாயு திட்டம்"  என்ற பெயரில் கிட்டதட்ட 50 லட்சம் தமிழர்களை   விவசாயிகளை  காவிரி படுகையிலிருந்து துரத்தியடித்து விட்டு தெற்கே ஓர் தார் பாலைவனத்தை உருவாக்க முயல்கிறது மத்திய அரசு!

           நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பூமிக்கு கீழே ஏராளமான  மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உறபத்தி செய்யப் போவதாகவும் மத்திய அரசு இதற்கான ஒப்பந்தத்தை “ கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் லிமிடெட்” என்ற நிறுவனத்திற்கு 100 ஆண்டுகளுக்கு வழங்கி இருக்கிறது.   பாகூரிலிருந்து ராஜ மன்னார்குடி வரை. சுமார் 1,64,819 ஏக்கர் நிலப்பரப்பு வரை  திட்டம் பரந்து விரியப் போகிறது!

          இந்த நிலப்பரப்பின் கீழ் சுமார் 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன் வாயு இருக்கிறதாம்.,இந்த தொகைக்காக இவ்வளவு பெரிய நிலப்பரப்பை   நமது மத்திய அரசு பலி கொடுக்கிறது.இத்திட்டத்தின் பின்னே ஆழமான பயங்கர  நோக்கம் இருக்கிறது.!

         நம் காவிரி படுகையின் கீழே மாபெரும் நிலக்கரி சுரங்கம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்! .இந்த மீத்தேன் வாயு எல்லாம் முதல் 35 ஆண்டுகள் மட்டும்தான். அதன் பிறகு  நிலக்கரியைத்  தோண்டி எடுக்கவே  இந்த திட்டம் ! ஆனால், செய்திகளில் “மீத்தேன் வாயு திட்டம்” என்றுதான் முன்னிலை படுத்துகிறார்கள்!  ஏன்என்றால் முதலில் மீத்தேன் வாயுவை வெளியேற்றினால்தான்  நிலக்கரியை தோண்டி எடுக்க முடியும் இல்லையெனில் தீ விபத்து ஏற்படும்!  அதற்காக மீத்தேனை வெளியே எடுக்க வேண்டுமானால் முதலில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்ற வேண்டும்!

          நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால் பின் மெல்ல மெல்ல அந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு, பூமியின் கீழ் ரசாயன கழிவுகள் செலுத்தப்பட்டு, பின்  பூமியின் மேலே  நிலம் நஞ்சாகிவிடும்!இவையெல்லாம்  35 ஆண்டுகளுக்குள் நடக்ககூடும்!

          அப்புறம்  என்ன? அந்த பகுதி மக்கள் வேறு வழியில்லாமல், விவசாயம் செய்ய முடியாமல், நிலங்களை பாதி விலைக்கு விற்றுவிட்டு அந்த பகுதியை விட்டே வெளியேறி விடுவார்கள்  அப்புறமென்ன? எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் நிலக்கரி தோண்ட ஆரம்பித்து விடுவார்கள்!  என்ன  ஒரு மாபாதக திட்டம் இது! .

         அமெரிக்கா, கனடா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்  மீத்தேன் எடுக்கிறார்கள் என்றால், மக்கள் அடர்த்தி குறைந்த பகுதியிலும,மக்கள் அதிகம் வசிக்காத நிலப்பரப்பிலும்  இந்த திட்டத்தை செயல் படுத்துகிறார்கள்!

          ஆனால், இங்கே காவிரி டெல்டாவில் ஊர்களும் வயல்களும் இனைந்தே இருக்கிறது. .ஏற்கனவே திருவாரூர் பகுதியில் குழாய்கள் அனகொண்டா போல் ஊர்முழுவதும் புதைக்கப்பட்டு இருகிறது!

          நெற்களஞ்சியமாக காணப்பட்ட விளைநிலங்களை விலை நிலங்களாக மாற்றுவதோடு   பாலை வனமாகவும் மாற்ற கிளம்பி உள்ளார்கள் ! இந்த பயங்கரம்  நம் மாவட்டதில் ,தஞ்சையில் நடக்கிறது    இனியும் நினைக்காதீர்கள்.!

         தமிழனின் வீரம் ஜல்லிக்கட்டிலும், இளவட்டக்கல்லிலும் மட்டும் இல்லை...எங்கெல்லாம் தமிழனுக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் தமிழனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதும் வீரம் தான்! 

          நம் விவசாய நிலங்களை காக்கவேண்டிய மகத்தான பொறுப்பு இன்று நமக்கு இருக்கிறது! நம் வருங்கால சந்ததியினருக்கு சொத்துக்களை சேர்த்து வைப்பதை விட இயற்கை வளங்களையும் வளமான வாழ்வையும் ஏற்படுத்தி தருவதே நம் கடமை.!

          நம்   சந்ததியினர் சாப்பிடப் போகும் தட்டில்.. நாம் அரிசியை தரப் போகிறோமா? அல்லது கரியை தரப் போகிறோமா என முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டு உள்ளது. நமது மண்ணைக் காக்க,தமிழர்களைக் காக்க, விவசாயிகளைக் காக்க, நிலத்தடி நீரைக்காக்க, இயற்கை வளத்தைக்காக்க ,  உணவுதேவையைக் கருதி, எதிர்வரும் சந்ததிகளின் நலத்தைகருதி மீத்தேன் வாயுத் திட்டத்தை எதிர்போம் !
(நன்றி; பனிமலர் வைத்தி )