Wednesday, 24 August 2011

அன்னா ஹசாரே போராட்டம் உள்நோக்கம் உடையதா?

  அன்னா ஹசாரே போராட்டம் குறித்து,  இந்திய அளவில் மட்டும் இன்றி, உலகம்     முழுவதும் பேசப்படும் நிகழ்ச்சியாக மாறி உள்ளது. இளைய தலை முறையினர், காந்தியின் அவதாரமாக பார்க்கத் தொடங்கி வருகின்றனர் . அவரது போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு,முழி பிதுங்கி வருகிறது .ப.ஜ.க  போன்ற எதிர் கட்சிகள் , உழலுக்கும், கருப்பு பணத்திற்கும எதிரான போராட்டத்தை அரசியலாக்கி, ஆதாயம் பார்க்க துடிக்கிறார்கள் .  இவ்வாறு ஆதாயம் அடையத்துடிக்கும், எதிர் கட்சியான ப.ஜ க , கட்சிதான், முன்பு ஆட்சியில் இருந்தது! அப்போது அந்த கட்சி ஊழலுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லைஎன்பதோடு,  கார்கில் போர் ஊழல் , சவப்பெட்டி ஊழல்போன்ற   குற்றசாட்டுக்களுக்கு ஆளானது .                                                                                                         

                                                                     தகவல் உரிமைச் சட்டம்,வேலை  உறுதி அளிப்பு சட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அருண் ராயின்  தலைமையல்  இயங்க்கும் பொது சமூகப் பிரதிநிதிகள் ஹஜாறேவின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்,. அரசின்  பாரம்பரியப் பொறுப்புகள் கார்பரடுக்களுக்கும்,அரசு சாராத நிறுவனங்களுக்கும் பெரும் அளவில் பகிர்ந்து அளிக்கும் சூழலில்,ஹஜாறேவின் லோக்பால் மசோதா கார்பரடுக்களையும்,அரசு சாராத நிறுவனங்களயும் முற்றிலும் தவிர்த்து உள்ளதாக அருந்ததிராய் கண்டனம் தெரிவித்துள்ளார்.  தவிர,    இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னணி வகிக்கும் யூத் பார் equality  என்ற அமைப்புடன் ஹசாரே தொடர்பில் இருக்கிறார். ஹசாரே  உடைய அரவிந்த் கஜ்ஜ்ராவால் அமைப்புக்கு போர்ட் பவுண்டஷன்  4லட்சம்   அமெர்க்க டாலர் பெற்று உள்ளது.   

                                                                                                                                           
                                                                                    ஊழலுக்கு எதிராக போராடும் இந்த  அமைப்புகள்  எதுவும்  கடந்த காலங்களில் வெகுஜன மக்களின் உரிமைப் போராட்டங்களில் பங்கு கொண்டவை அல்ல. குறைந்தபட்சம்  குரல் எழுப்பியவை,அல்ல. கண்டு கொள்ளாமல்  இருந்தவைதான். கடந்த 10 வருடங்களாகப் போராடிவரும் ஆயுதப்படைகளுக்கு வழங்கயுள்ள சிறப்பு அதிகாரங்களை திரும்பப் பெறப் கோரி பட்டினிப் போராட்டம் நடத்திவரும்இரோம் ஷர்மிளாவுக்கு அதரவு அளிக்கும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ,  போஸ்கோ திட்டத்துக்கு எதிராக,6-வருடங்களாக  போராடி வரும் ஜகத்சின்க்பூர் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் மக்கள் போராட்டம் இல்லை.கங்கை ஆறு மாசுபடுவதை எதிர்த்தும்,சுரங்கதொழிலை கட்டுப்படுத்தவும் கோரி, பட்டினிப் போராட்டம் நடத்திய சுவாமி நிகமனந்தவுக்கு அதரவு தெரிவித்தவர்கள் போராட்டம் இல்லை.

                                                             வேதானந்த நிறுவனம் நியம்கிரியில் நடத்திவரும் சுரண்டலுக்கு எதிராகப் போராடி வரும் பழங்குடி மக்களுக்கு ஆதரவு அளித்த மக்களின் போராட்டமும் இல்லை! ஹரியானாவிலும் நொய்டாவிலும் தற்கொலை செய்துகொண்டு சாகும் உழவர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்களின் போராட்டமும் இல்லை! கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களுக்கும் கூட ஹஜறேயின் ஆதரவாளர்கள் யாரும் போராடியதில்லை!

                                                                     ஹசாரே போராட்டத்திற்கு கஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆதரவு பெருகி வருவதாக கூறப்படுவது,வேறு பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் செயலாகவும் தோன்றுகிறது.        ஒடுக்கப்படும் மக்களுக்கு உரிமைக் குரல் எழுப்பாமல் , இன்று ஊழலை ஒழிப்பதாக போராடும்போது  உள்நோக்கம் உள்ளதாக நினைப்பதில் தவறு இருப்பதாக  தோன்றவில்லை!

Friday, 19 August 2011

ஊழலை நீக்க உண்ணாவிரதம் உதவாதா?


மனிதர்கள்  மிக  பொல்லாதவர்கள் காரணம், அவர்களது மனம்தான். மனதிலும் இரண்டு மனம்  இருப்பதை நாம் அறிவோம் !புற மனம் , அகமனம் !               கவியரசு கண்ணதாசன் அவர்கள் , "சொல்ல நினைபதெல்லாம் சொல்லாமல் போவதற்கு உள்மனதில் உள்ள ஊமைப்புண் காரணமாம் " என்பார்.நான்  சொல்லும்  மனம் என்பது அதுவல்ல.சொல்லநினைப்பதை,எதிர்மறையாக சொல்ல்வது.அல்லது எதிர்மறையாக நாம் புரிந்துகொள்ளச் செய்வது.  நம்ம பிரதமரின் சுதந்திர தின உரையை பார்த்திர்களா? அன்ன ஹசாரே  உண்ணாவிரதத்தால் நிகழ்ந்துவரும் குழப்பங்கலை   பொறுக்காமல் , உண்ணாவிரதத்தால் , ஊழல் ஒழியாது  என்று சுதந்திரமாக  தனது கருத்தை சொல்கிறார்     
                                                                                                                                                                                            ஒன்று நினைவுக்கு வருகிறது, உண்ணாவிரதம்  என்னும் மிகப் பெரிய ஆயுதத்தை  கையில் எடுத்து, காந்தி இந்தியாவுக்கு சுதந்திரம் பெறக் காரணமாக இருந்தார்.  சுதந்திர இந்தியாவில் பெருகிவிட்ட ஊழலை   நீக்க உண்ணாவிரதம் உதவாது என்று பிரதமர் கூறுகிறார்.இது எதிர்மறையாக தோன்றவில்லையா? விசித்திரம் என்னவென்றால் ஊழலை நாங்கள் ஒழிக்க மாட்டோம் ,ஆதரிப்போம்.அதனை நீங்கள் சகித்துக்கொள்ள வேண்டும்.என்று தலைமைப்பொறுப்பில் உள்ள ஒருவர் கூறுவது ஒட்டுமொத்த மக்களையும் தேசத்தையும் அவமானப்படுத்தும் செயல் அல்லவா? இப்படித்தான் நடக்கிறது.


                                                                         நமது நாட்டின் அரசியல் ஆட்சிமுறையில் நமக்கெல்லாம் அவ்வளவாக அறிவும் இல்லை.அக்கறையும் இருப்பதில்லை.நயன்தாரா மதம் மாறிவிட்டார்.பிள்ளையார் பால் குடிக்கிறார்.ரஜினியின் ரானா படம் வருமா,வராதா? திரிஷாவுக்கு நிச்சயமாகிவிட்டதாமே ,எதிர்த்த வீட்டு பொண்ணு நேத்து லேட்டா வந்தாளாமே? என்பது போன்ற முக்கியமான செய்திகளை பகிர்ந்து கொள்வதில் உள்ள சந்தோசமும் சுவாரஸ்யமும் பிரதமரின் சுதந்திர உரையில் இல்லாத பொது அதைப்பற்றி நமக்கு என்ன கவலை இருக்கும்?

                                                                        பொதுவாக நமது சுபாவம் என்னவென்றால் நமது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைப்போம்.வீட்டு குப்பைகளை வீதியில் கொட்டி அசுத்தமாக ஆக்குவோம்.அதைப்பற்றி கவலைப்பட மாட்டோம்.நாட்டைப்பற்றிய நமது அக்கறையும் அப்படித்தான் இருக்கிறது.

                                                                               

Friday, 12 August 2011

அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா?


இந்தி மொழி சம்பந்தமான தீர்மானத்தின்போது அண்ணாவுக்கு பேசும் வாய்ப்பு கிடைத்த்து.அப்போது அண்ணா மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.அவையில் இருந்த ஷேக் கோவிந்த்தாஸ்,மெட்ராஸ் ஸ்டேட் என்பது நல்ல ஆங்கில வார்த்தை,உலகம் முழுவதும் உள்ள மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வார்த்தை,அதை அகற்றிவிட்டு பிராந்திய உணர்வோடு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோருவது பிரிவினைவாதம் என்று குறிப்பிட்டார்.

                                இதற்கு பதிலளித்த அண்ணா பார்லிமெண்ட் என்பது நல்ல ஆங்கில வார்த்தை,அதுவும் உலகம் முழுதும் உள்ளம் மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வார்த்தை,அதை மாற்றி உங்கள் தாய்மொழியில் (இந்தி)பார்லிமெண்டை லோக்சபா என்றும்,கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸை ராஜ்யசபா என்றும் அழைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறீர்களோ,அதைவிட மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்று அழைத்தால் நான் பெரிதும் மகிழ்வேன் என்றார்.

                                 தொடர்ந்து பேசிய வட இந்திய உறுப்பினர்கள் இந்தியாவில் வாழுகின்ற பெரும்பான்மையான மக்கள் பேசுகின்ற மொழி இந்தி மொழியாகும்.அதனால் லோக்சபா,ராஜ்யசபா என்று பெயர் சூட்டினோம் என்றார்கள்.

                                  விடுவாரா அண்ணா? இந்தியாவில் எங்கே பார்த்தாலும் நமது கண்ணுக்கு காக்காய்கள்தான் தெரிகிறது.காட்டுப்பகுதியில் எங்கேயோ அபூர்வமாகத்தான் மயில் தென்படுகிறது.அபூர்வமாக தெரியும் மயிலை இந்தியாவின் தேசிய பறவையாக அங்கீகரித்துள்ளோம்.கண்ணுக்குத்தெரிகிற காக்கை இனத்தை ஏன் தேசியப்பறவையாக அங்கீகரிக்கவில்லை என்றார்.