Saturday, 17 September 2011

நமது சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழைகளா?

சட்டப்பேரவையில் நடந்த பொதுத் துறை ,ஓய்வுதியம்,பணியாளர்கள் மற்றும்நிர்வாக சீர்திருத்தத் துறை,திட்டம், ஆகியவற்றின் மானியக் கோரிக்கை விவாதத்தில்,முதல்வர் சட்டமன்ற இந்நாள் முன்னாள் உறுப்பினர்களுக்கு தொகுதிப்படி,ஓய்வுதியம் போன்றவற்றை அதிகரித்து உள்ளார். வாயெல்லாம் பல்லாக,உறுப்பினர்கள் வாழ்த்தி வரவேற்று மகிழ்து உள்ளனர் . பாவம் ஏழைகளுக்கு இதுவாவது கிடைத்து இருக்கிறதே என நாமும் சந்தோஷப்பட வேண்டியதுதான்! ஏன் எனில்  நம்ம சட்டமன்ற உருப்பினர்களைப்போல்  வேறு யாரும் கஷ்டபடுபவர்கள் வேறு யாரும் தமிழ்நாட்டில் இல்லை என்பதால்!   அவர்கள் படும்  கஷ்டங்களை கேட்டால் நமக்கு மட்டுமல்ல, எல்லோருமே கண்ணீர் விடவேண்டியது இருக்கும் 
.                                                                                                  


கட்சியில மெம்பராகி,தலைவர்கள் சொல்லும் கட்சிப்பணியை மட்டும் பார்க்காமல்,தலைவர்களோட தனிப்பட்ட தேவைகளும் கவனிக்கணும்.அறிவிக்கும் எல்லா போராட்டங்களிலும் கலந்துக்கணும்.பொதுக்கூட்டம் மாநாடுன்னு எங்கே நடந்தாலும் ஆளுங்களை கூட்டிட்டு போகணும். அவங்களுக்கு சாப்பாடு முதற்கொண்டு, சம்பளம்,கொட்டர்,பிரியாணி எல்லாம் வாங்கித்தந்து பவரை கட்டி, கட்சியிலே  போஸ்டிங் வாங்கணும். எப்பவும் நம்மை சுத்தி பத்து பேராவது  இருக்குற மாதிரி பார்த்துக்கணும். நம்மைப்போலவே கட்சிப்பணி பார்குறவங்களை பத்திஅப்போ நேரில்போய் அண்ணே நீங்க இல்லாட்டி, நானில்லை! உங்க தெறமை யாருக்கு வரும் என்பதுபோல பாராட்டி தொலைக்கணும்.அவங்களுக்கு தெரியாம, தலைமைக்கு போட்டுக்கொடுத்து,தலைமையிடம் நல்லபேரு வாங்கணும்! 


 தலைவர்களை அவ்வப்போது,தனியாகவும் கூட்டமாகவும் போய்பார்த்து,அவங்க மனசிலும்,அவங்களுக்கு பிடிச்சவங்க மனசிலையும் இடம் பிடிக்கணும்.                தெர்தல்நிதியா? பொதுக்கூட்ட செலவா?  பொதுமக்களை,வியாபாரிகளை மிரட்டி வசூல் பண்ணி தரணும்! போலீஸ், ரவுடிகளை சரிகட்டி கட்ட பஞ்சாயத்தும் செய்யணும். அப்படியும் வழக்கு போட்டுட்டா,அதையும் சமாளிக்கணும்!  


                         


 இப்படி,லோல்பட்டு,கஷ்ட்டப்பட்டு போராடி தெர்தல்வந்தால் சீட்கேட்டு போய்,தலைவரை பார்த்தால், எவ்வளவு காசு வச்சியிருப்பே? எனக்கு எவ்வளவு,கட்சிக்கு எவ்வளவு கொடுப்பே? எவ்வளவு செலவு செய்வே? என்று  கேட்டால்...கொட்டிக் கொடுக்கணும் செஅட் வாங்கணும், ஒருவழியா அதையும் சமாளிச்சி சீட்வாங்கிட்டு வந்துட்டால், கட்சியிலே இருக்குற கோஷ்டிகளை எல்லாம் தாஜா பண்ணனும், அவங்களுக்கு தகுந்தமாதிரி,பேசி செட்டில் செய்யணும்! நாமினேசன் தாக்கல் பண்ணிட்டு, கூழை கும்பிட்டு போட்டுக்கிட்டு, தெருதெருவா,ஊருஊரா நாயிமதிரி தேர்தல்முடியறவரைக்கும் சுத்தணும். சும்மா சுத்திட்டா நம்ம ஜனங்கள் வோட்டு போட்டுடுவாங்களா? கட்சிக் காரங்கதான் வோட்டு கேட்டு நம் பின்னாடி வருவாங்களா?  நோட்டை இரைக்கணும்!  அப்பவும் தேர்தல் நடக்குற நாளிலும் வோட்டு எண்ணுற நாளிலும்! இப்படி செய்து,  ஜெயித்துதாங்க நாங்க சட்டமன்றத்துக்கு போக முடியுது.  


                                                                                                                                                                                                        தொகுதிப்பக்கம் கூட எட்டிப்பார்க்காத  என்போன்றவர்களுக்கு தொகுதிநிதி தராங்க ,சம்பளம் தராங்க, பென்ஷன் தாரங்க..  என்று நீங்கள் கேட்பது சரியா? மககளுக்கு சேவை செய்யறதுக்கோ, நாங்க ஏழை என்பதற்கோ இதுவெல்லாம் தருவதாக சொல்லப்பட்டாலும், எங்க கடந்த கால கஷ்டத்தை பார்த்து, தருவதாக எண்ணி ஆறுதல் அடைவதை விட்டுவிட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழைகளா,அவர்களுக்கு தொகுதிநிதியை ஐயாயிரத்தில் இருந்து பத்தாயிரமாக,அதிகரித்து கொடுப்பது நியாயமா? என்று கேட்பதும்,வேதனைபடுவதும் வேண்டாதசெயல் என்பதோடு, எங்களை மட்டுமின்றி, ஜனநாயகத்தையும் கொச்சை படுத்துவதாகும்!   இப்படிக்கு, சட்டமன்ற உறுப்பினர்களை பார்த்து பரிதாபம் கொள்ளும் ஜனநாயகத்தின் பிரஜை!

Wednesday, 14 September 2011

தமிழக உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க.வெற்றிபெறுமா?

உள்ளாட்சித் தேர்தலுக்கு போட்டி  இட விரும்புவோர்களிடம்,மனுக்களை பெற்று வருகின்றன,இன்று எல்லகட்சிகளும்.கடந்த முறை  உற்சாகத்துடன் களம் கண்ட தி.மு.க.வும் மனுக்களை பெருகிறது. ஆனால், முன்பு இருந்த உற்சாகம் தி.மு.க தொண்டர்களிடம் இல்லை என்கிறார்கள். காரணம் ஆட்சி இல்லை. பலரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வருவதற்குள் யார்யார் உள்ளே இருப்பார்கள்,யாரெல்லாம் வெளியே இருப்பார்கள் என்று சொல்லமுடியாத அவலம் தி.மு.கவுக்கும்,அதன் தொண்டர்களுக்கும் உள்ளது. செப்டம்பர் 15 - தேதியை முப்பெரும் விழாவாக தவறாமல் கொண்டாடிவந்த கட்சியான தி.மு.கவுக்கு இந்த ஆண்டு அதனைக்கூட உரியகாலத்தில் கொண்டாட முடியாத நிலை ஏற்ப்பட்டு உள்ளது,அக்கட்சியின் துரதிஸ்டம் எனலாம். 
                                                                                                                                                                           சட்டமன்ற  தேர்தலில் தோல்வியை சந்தித்த திமுக எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலாவது வெற்றிபெறுமா? அல்லது முந்தைய தேர்தலைப்போலவே தொல்வியடைய்மா? என்று பட்டிமன்றம் நடத்தாத குறையாக பேசப்படுகிறது!  ஆள்பலம்,அதிகாரபலம்,பணபலத்துடன் கடந்த தேர்தல்களை சந்தித்தது போல இம்முறை திமுகவால் முடியாது என்பது நிதர்சனமாகும்!  பணபலத்தை வைத்து ஜனநாயகத்தை கைக்கொண்ட முந்தைய தேர்தல்களில் கூட திமுகவின் வெற்றியென்பது,நூலிழை வெற்றி ஆகவே இருந்துள்ளது. இப்போது,அதிகாரமும் இல்லை.ஆள்பலமும் இல்லை. தவிர ஆட்சியில் இருக்கும் அண்ணா திமுக மீது பெரிதாக மக்களுக்கு அதிருப்தி இருப்பதாகவும் தெரியவில்லை. போதாகுறைக்கு இலவச திட்டங்களை இந்த ஆட்சியையும் செய்துவருகிறது.    
                                                                                                                                                                                                                               சட்டமன்ற தேர்தலில் திமுக  தோல்வியடைந்ததற்கு  சொல்லப்பட்ட காரணங்களில்,  ஒன்று தி மு கவின் கீழ்மட்ட நிர்வாகிகள் கூட ஊழலில் திளைத்தும்,பொதுமக்களிடம் வெறுப்பை சம்பாதித்ததும் ஆகும்.  உள்ளாட்சித் தேர்தலில் இவர்களே போட்டியிடுவார்கள்,கட்சியும் இவர்களுக்குத்தான் வாய்ப்பளிக்கும்
.
                            இவர்கள் மீதுள்ள வெறுப்பு உணர்வு மாறாமல் இருப்பதும், வெற்றிபெற்றாலும்  உள்ளாட்சியில் பெரிதாக எதுவும் செய்ய முடியாது  என்பதாலும் திமுக உள்ளாட்சித் தேர்தலிலும்  தோல்வியையே சந்திக்கும்! எனத் தெரிகிறது. கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி,விடுதலை சிறுத்தைகள் விலகி சென்றுள்ளதையும் பார்க்கும் பொது அப்படித்தானே எண்ண வேண்டியுள்ளது! ?

Saturday, 10 September 2011

கவிதைகள் சமூக அவலத்தை போக்க உதவுமா?

   எனக்கும் கவிதைகளுக்குமான  பரிச்சயம்   பள்ளி நாட்களுடன்  ஆனது. கல்லூரி காலத்தில், எல்லோருமே கவிதை எழுதுவதாக தோன்றியதால் கவிதை எழுதுவதை விட்டுவிட்டு, கவிதைகளை படிக்கும் ஆசை வந்தது. எளிமையான, மரபுக் கவிதைகளும்,பொருள்செறிந்த புதுக்கவிதைகளும் எனக்கு பிடித்தவைகள் என்பதைவிட கிறுக்கு பிடிக்கவைத்தவை என்பதுதான் உண்மையாகும்!  
                                                                                                                                               வாழ்க்கை பாதையில் பொருளையும் வேலையும்,சமூக அங்கீகாரமும் வேண்டி,ஓடும்போது கவிதைகளும் என்னைப்போலவே தொலைந்து போய்விட்டது!   கண்ணதாசன் கூறுவது போல்," பஞ்சத்தில்  ஏழை பார்க்கும் பழங்கணக்கு ஆனது" எனது கவிதைகளும் தாகமும்!   இன்றும் கவிதைகள் என்னை கவனிக்கும்போது, அவைகள் என்னை அலைகடலாக்கி, ஆர்பரிப்பது போன்று தோன்றுவதுண்டு!  இப்போது கவிதைகளைப்போல அவைகள் குறித்த கவலைகளும் வருகிறது. எது கவிதை? தனிமனிதனின் உணர்சிக்குவியல்கள? அல்லது சமூக ஆதங்கங்களா? தனிமனித உணர்சிகள்தான் என்றால், கவிதைகளுக்கு என்ன சிறப்பும் பெருமையும் வேண்டிக்கிடக்கிறது? சமூக ஆதங்கம்தான் என்றாலும் கூட அவைகளால் என்ன மாற்றம் நேருகிறது?                              கவிதைகளின் நோக்கம் இவைகள் எதுவும் இல்லை!  ஆனால், தன்னைபோன்ற மனிதர்களுக்கு ஆறுதலும் தைரியத்தையும் கவிதைகள் தருகின்றன. பாலையில் சோலையாய், உற்ற தோழனாய் , உணர்வுகளை பகிர்ந்துகொள்ளவும், வலிகளுக்கு மறுந்திடுவதகவும் கவிதை இருக்கிறது!

                                                                                             ஆனால்,கவிதைகள் இவைகளையும் தாண்டி வரவேண்டும் என்பது எனது ஆசையாகும். சமுகமாற்றங்களுக்கும் அவைகள் பயன்படவேண்டும்  என்பது எனது எண்ணமாகும்!   சுதந்திரத்துக்கு முன்பு,பாரதியின் கவிதைகளைப்போல இப்போதும் சமுகத்தை மாற்றும் வீரிய விதைகளாக வேண்டும்!  இன்று இணையத்தளத்தில் கவிதைகளை படைக்கும் எல்லோருக்கும் எனது அன்பான வேண்டுகோளாக இதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.      

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                


                                               "எந்திர வித்தைகள் வீணது கற்றோம்,                                                                                                                                                           
                                               என்னெனவோ பல புதுமைகள் பெற்றோம்,                                                                                                                                  
                                                      சந்திரன் செவ்வாய் மண்டலத்தோடு,                                                                                                                                                        
                                                     சங்கதி பேசும் வழிகளைத்    தேடும்,
                                                                                                                                                                                                         அந்தமில்லா பல சக்திகள் பெற்றும்,  
                                                                                                                                                                                                 
                                       அடிதடி சண்டையை விட்டிட மட்டும்


                                         தந்திரம் ஒன்றும் அறிந்திலம் அய்யா!


                                           தரணியில் மக்கள் தவிப்பது பொய்யா? "
 
                                                                               
                                          காக்கையின் குஞ்சு,                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     பச்சையாகவா...   பரிணமிக்கும்? 

                                                                                                                                        
                                          இன்று,     சீர்செய்கிறேன்..                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     நாளை, சீர்பட்டுவிடும் என்று!"                                                                                                                                            

Wednesday, 7 September 2011

இந்திய அரசியலும்,குண்டுவெடிப்பும்..!

 டெல்லி உயர்நிதிமன்றதின் நுழைவு வாசலில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. 10 -நபர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் 50 -  பேர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.ஆளும் கட்சியும்,எதிர் கட்சிகளும் வழக்கம் போல கண்டித்து  அறிக்கை விட்டு ஆதங்கபட்டுள்ளன. தீவிரவாதிகள் இந்தியாவின் உறுதியை சீர்குலைக்கும் நோக்கத்தில் குண்டுவெடிப்பை நடத்தி உள்ளதாக பிரதமர்  கருத்து தெரிவித்துள்ளார். குண்டு வெடிப்புக்கு யார் காரணம் என்று தெரியவில்லை  தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தும்  என  பாராளுமன்றத்தில்  அறிக்கை வாசித்துள்ளார்!  ஊடகங்கள் தங்கள் பங்களிப்பை நிறைவேற்றும் கடமையாக கருதி, நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
 இந்தியாவில் முதல் முதல் குண்டுவெடிப்பு, நடந்தபோது  என்ன நடைமுறையை கடைபிடிதோமோ, அவைகள் மாறாமல் அப்படியே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எந்த முறைகளில் குண்டுவெடிப்புக்கள் நடந்து வந்ததோ,அப்படியே குண்டுவெடிப்புக்களும் நடந்து வருகின்றன.  புலனாய்வு அமைப்புக்களும் சுருதி மாறாமல் விசாரணையை நடத்தி வருகின்றன! அப்பாவி பொதுமக்களும் பலியாகி வருகின்றனர். நாட்டில் பதட்டமும்,பரிதவிப்பும் தொடர்ந்து நீடித்து வருகிறது.                                                                               இவை யாவும் அடுத்ததொரு பிரச்சனை மக்கள் மனதில் இடம்பெரும்வரை தான், அப்புறம் இந்த குண்டுவெடிப்பும் ஏனைய குண்டுவெடிப்பை போல இயல்பாகி விடும் அடுத்த குண்டுவெடிக்கும் வரை!  


                                                                                                                                                                                               இப்படித்தான் நடந்து வருகிறது நமது நாட்டில் .  குண்டுவைப்பவர்கள் யார்? குண்ட்வைப்பதற்க்கு காரணம் என்ன,என்ன?  அந்த காரணங்கள்,தீர்க்க கூடியவைகளா?   தீர்க்ககூடியவைகள் என்றால், தீர்க்கப்பட்டிருகிறதா?  தீர்வுக்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு இருக்கிறதா? எடுக்கப்பட்டு இருந்தால், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?  அத்தகைய நடவடிக்கைகளை மக்களுக்கு சொல்லி இருக்கிறோமா?ஊடகங்கள் இது போன்ற நிகழ்வுகளில் இடம்பெறுகிறதா? என்று பாராளுமன்றதிலும்,சட்டமன்றங்களிலும் இதுவரை யாரும் விவாதிக்கவில்லை என்று நினைகிறேன். எதுஎதர்க்கோ, கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருகிறார்கள் இதுபோன்ற தேச நலனுக்கு தேவையான முக்கிய பிரச்சனைகளில்  அக்கறைகொள்ள யாரும் முன்வருவதில்லை!  


                                                                                                                                                                                                                                          போகட்டும் இதுவரை குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பு உடைய  அனைத்துகுற்றவாளிகளையும் நாம் என்ன செய்திருக்கிறோம்?  விசாரணைகளை  துரிதமாக நடத்தி வருகிறோமா?  என்று பார்த்தால்  சோகமாகும்!    ஓட்டுமொத்த குண்டுவெடிப்புக்களையும்  ஒருங்கிணைத்து, ஒரு தனியான,  நியாயமான, பொதுஅமைப்பு ஒன்றை ஏற்ப்படுத்தி அதன்கீழ்  விசாரணை நடத்தினால்  குண்டுவெடிப்புக்கான  காரணங்களும் தெரியும்! குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவார்கள். எதிர்காலத்தில் குண்டுவெடிப்புகள் நடப்பதையும் தடுக்கமுடியும்!                                                                                     இந்தியாவில் நடத்தப்படும் குண்டுவெடிப்பில் அரசியலும் இருக்கிறது,என பேசப்படுகிறது.   அரசியல் காரணங்களுக்காக  காங்கிரஸ் கட்சியும், இந்துமதவாத கட்சிகளும் குண்டுவெடிப்பை அனுமதித்து வருவதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், தேச நலனிலும் மக்கள் நலனிலும் அக்கறை கொண்ட  ஆட்சியாளர்கள் முன்வரவேண்டியது  காலத்தின்  கட்டாயமாகும்! 

Monday, 5 September 2011

தி.மு.க.வின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

  பெரியாருக்கும்,அண்ணாவுக்கும் இடையில் தோன்றிய முரண்பாடுகளால் தி.மு.க தோன்றியது!  சென்னை ராபின்சன் பூங்காவில் தொடங்கப்பட்டபோது அண்ணாவுடன்  கருணாநிதி இருக்கவில்லை. பிறகு வந்து சேர்ந்து கொண்டார். தனது பேச்சு,எழுத்து செயல்,ஆளுமை அனைத்தையும் பயன்படுத்தி அண்ணாவுக்குப்பின் தன்னை தலைவராக நிலைநிறுத்திக் கொண்ட கருணாநிதியை பற்றி கூறும்போது,தி.மு.க.வின் வரலாற்றை முதல் பாதியை நான  எழுதுகிறேன் , பிற்பாதி வரலாற்றை எனது தம்பி கருணாநிதி எழுதுவார, என்றார்.  அத்தனை, நம்பிக்கையும்,ஆற்றலும் படைத்தது இருந்த கருணாநிதிக்கு பிறகு தி.மு.க.வின் தற்போதைய நிலை என்ன என்பதை இன்று நாம் கண்முன்னே காணுகிறோம்!


                                                 கடந்த 10 -வருடங்களுக்கு முன்பு இருந்த தி.மு.க விற்கும்,இப்போது உள்ள தி.மு..கவிற்கும் மலைஅளவு வித்தியாசம் இருப்பதை அறிவோம்!   ஆரம்பிக்கப்பட்டபோது,தி.மு.கவிற்கு தமிழர் நலம்,திராவிட இனஉணர்வு, மொழயுணர்வு,சுயமரியாதை,சமத்துவம், தீண்டாமை எதிர்ப்பு,போன்ற கொள்ள்கைகளும்,இலட்சியங்களும் இருந்தது,பேசப்பட்டது!   மாற்றத்தை விரும்பிய இளைஞர்களும் சமூக ஆர்வலர்களும் தி.மு.கவை ஆதரித்தனர். தி,மு.க. வேகமாக வளர்ச்சி அடைந்தது,வெற்றி பெற்று ஆட்சியைபிடித்தது.  தேசிய கட்சிகள் மாநிலங்களில் செல்வாக்கு இழந்தனன.                                                                                                                இன்று.........,எந்த பொது நோக்கத்துக்காக,தி.மு.க  தோன்றியதோ, அத்தனை நோக்கங்களும் மாறி விட்டது, தேசிய கட்சிகளின் வழியில், ஊழலிலும்,ஒழுங்கீனம அற்ற செயல்களிலும் ஈடுபட்டு  வெகுஜன மக்களின் வெறுப்புக்கு ஆளாகி உள்ளது!  நீ யோக்கியமா? நீ ஊழல் செய்யவில்லையா?  என்பது தான் அரசியல்  எனும் நிலைக்கு, வந்து விட்டது!       ஜனநாயக வழியில், ஆட்சியை பிடித்து, மன்னர்கள் போல நடந்து கொண்டதால், மக்களின் சேவகர்கள் என்ற நிலையை மறந்து, எஜமானர்  போல நடந்து வந்ததால் தி.மு.கவின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிஉள்ளது!     
                      

வெற்றிகரமாக அண்ணா ஆரம்பித்த, தி.மு.க. இப்போது,தோல்வியை நோக்கி... அதாவது, முடிவை நோக்கி போவது போல தோன்றுகிறது.  ஸ்டாலின்,அழகிரி  பதவிப் போட்டிகளும் , கனிமொழி , தயாநிதி சந்தித்து வரும் பிரச்சனைகளும்,  தி.மு.கவின்  தளபதிகளான,மாவட்ட செயலாளர்கள்,மாஜி மந்திரிகள் கைது செயப்பபட்டு வருவதற்கான காரணங்களும் பெரியாருக்கு பிறகு தி.கவின்  நிலையை  தி.மு.க. அடையுமோ?     என எண்ணவைத்துள்ளது!