Tuesday, 29 November 2011

அண்ணாவின் கேள்வியும் கலைஞரின் துரோகமும்!

ஒரு முறை கவியரசர் கண்ணதாசனிடம் கவிதைகளை யார் நன்றாக எழுதுகிறார்கள்? என்று கேட்டதற்கு,{கேட்டது நானில்லை} காதலிப்பவர்களும்,காதலில் தோல்வி அடைந்தவர்களும்,கம்யுனிஸ்டுகளும் நன்றாக எழுதுகிறார்கள்! என்று சொன்னாராம்.
     நான் காதலிக்கிறேனா? என்று சொல்ல தெரியவில்லை! காதலில்  தோல்வி அடைதவனா என்றும் சொல்ல முடியவில்லை! பிறகு கம்யுனிஸ்டா என்று கேட்டாலும், இல்லை! -  என்பதுதான் எனது பதிலாகும்.  ஆனால், நானும் கவிதைகளை எப்போதாவது எழுதுவது உண்டு!   கல்லூரிக்கால,  சகவாச தோஷம்.! !  எப்போது அதிக கோபமும் வெறுப்பும் எனது உணர்சிகளை ஆக்கிரமிப்பு செய்கிறதோ, அப்போதெல்லாம் கவிதை எழுதத் தோன்றும்!  சிலருக்கு மகிழ்ச்சியான,தனிமையான தருணங்களில்  கவிதை வரும்  என்று சொல்ல கேட்டிருகிறேன். இப்போது எதற்கிந்த பீடிகை அல்லது முன் அறிவிப்பு? என சிலர்  நினைக்கலாம். விசயமாகத்தான் இதனை சொல்லி இருக்கிறேன்.
     ஈழத்தில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக,  செத்து மடிந்த தருணம் அது..., புலிகளின் இறுதிப்போர் உக்கிரம்  அடைந்து, சில மைல பரப்பில் சுருங்கி,சுருண்டு கிடந்த சமயத்தில், தாயக தமிழர்களின் ஒருங்கிணைந்த ஆதரவும்,தமிழக அரசின் தலைவராக இருந்தவரும், தமிழால் வாழ்தவருமான கருணாநிதியின் ஆதரவை, போர்குரலை, சங்க நாதத்தைக் கேட்க, உலகத்தமிழர்கள்  அத்தனை பேரையும் போல,   நானும் ஆவலாக எதிர்நோக்கி காத்திருந்தேன்!
        கருணாநிதி, எல்லோரும் எதிர்பார்த்தபடி எதுவும் செய்யவில்லை! நாற்பது எம்பீக்களை ராஜினாமா செய்ய சொல்லவில்லை. மந்திரிகளை ராஜினாமா செய்யச் சொல்லவில்லை. மத்திய அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெறுவேன் என்று மிரட்டவில்லை. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.!   ஈழ தமிழர்களைக்  காப்பாற்ற உருப்படியாக எதையும் செய்யாமல், அண்ணா சமாதிக்கு போய்,  உண்ணாவிரதம் இருந்தார்!  உண்ணாவிரதம் என்ற நாடகத்தை தொடங்கினார்!!   எனக்கு வந்த கோபமும்,எரிச்சலும்,வெறுப்பும் வார்த்தைகளில் சொல்லத் தரமற்றதாக இருந்தது!  அப்போது சூடாக ஒரு கவிதை எழுதி, அறம்பாடி கவிதை எழுதி, பிரபல வார இதழ்களுக்கு மெயிலில் அனுப்பி வைத்தேன். எந்த இதழும் பிரசுரிக்கவில்லை! ஒருவேளை நமக்கு ஏன் பொல்லாப்பு என்று நினைத்திருக்கலாம்!. வம்பு, வழக்கு வரும் என்று தவிர்த்து இருக்கலாம்! !
        இப்போது கனிமொழி சிறைமீண்டு வருவதை கோலாகலமாக கொண்டாடும் மூடில்,மகிழ்ச்சி அளிப்பதாக  சொன்னதை கேட்டு ,  மீண்டும் அவர்மீது கோபம் வருகிறது! இவரையா.. தமிழ் இனத் தலைவர் என்றும் தானைத் தலைவர் என்றும் கொண்டாடுகிறார்கள்? என்ற கேள்வியால் எழுந்த கோபம்! அந்த கோபத்தில் அண்ணா சமாதியில் கருணாநிதி,  உண்ணாவிரத நாடகம் நடத்தியபோது...  நான் எழுதிய கவிதையை பதிவு செய்தால் என்ன என்று தோன்றியது!   இது கவிதைதானா? என்பதையும்  உங்கள் முடிவுக்கே விடுகிறேன்!  அந்த கவிதை இதுதான்:

        "  அண்ணாவின் கேள்விகள் "

       எதையும் தாங்கும் இதயத்தை -நீ,
       எதற்கு கேட்டாய் தம்பி?
       எனது கிளையின் முன்னேற்றத்திற்கு,
       இரவல் கேட்டேன் அண்ணா!
      
       ஈழத் தமிழர் இழிவு கண்டும்
       இறங்காததா, எமது இதயம்?
      எல்லாதமிழர் இன்னல்  கண்டும்,
       தங்கிக் கொள்ளுதே உன்{என்}இதயம்!
     
       இருப்பது நமக்கு ஓருயிர்-அதை,
       இழக்கும் தருணம் இதுவல்லவா?
       இருப்பதைக் காக்க.. இன்னும் பலநாள்,
       இதயம் தேவை என் அண்ணா!
      
        பதவி நமக்கு தோள் துண்டு-என
       பகர்வது  தானே,நம் கொள்கை?
       கொள்கை யாவும் கோவணத்துக்கு ஆகும்!
        கோடிகளைத் தருமா, சொல் அண்ணா?!

        மது மயக்கமும்,புகழ் மயக்கமும்,
        நமது தேவையா,சொல்தம்பி?
        பதவியும்,பணமும் என் உடனிருக்க,
        உதவிடும் தேவைகள் அவை,அண்ணா!
  
       ஆரிய மாயைபோல் திராவிட மாயையும்,
       ஆகி விட்டதோ...நம் தமிழகத்தில்?
        பகுத்தறிவை பறித்து எடுக்க,-வேறு,
       வழி இருந்தால், சொல் அண்ணா!

       தமிழினத்தின் எதிர்காலம் தடம் மாறுதே தம்பி?
       எழுதிய விதியை மாற்றி எழுதும்,
       ஈசனனேன்... நான், அண்ணா!-உன்
      தம்பி ஆண்டவன் ஆனதாய், மகிழண்ணா!

   என்னை விட,கொள்கையை விட-இன்று
    எது பெரிதுனக்கு,சொல் தம்பி?
    கண்ணின் மணிகள் ஸ்டாலின்,அழகிரி;
    கனிமொழி... பெரிதாய்த் தெரியுதண்ணா!
   
    எனக்கும் கவிதை எழுத தெரிமில்லே... என்று, எதிர் கவிதை எழுதுவோரும் இந்த பதிவுக்கு கருத்துரை இடலாம்!
    
     

Saturday, 26 November 2011

காந்தி தேசம் V/S சோனியாவின் நேசம்!

           ஊரில் சிலரைப் பற்றி சொல்லும்போது, அவர் ரொம்ப பிடிவாதக் காரர், ஒன்றை செய்வதாக தீர்மானிச்சுட்டா,  எக்காரணத்தை முன்னிட்டும்  பின் வாங்க மாட்டார், என்று சொல்லுவதை பார்த்திருக்கிறேன்! அப்படியான குணம் கொண்டவர்  என, அன்னை சோனியா காட்சி தருகிறார்! இந்தியாவை மீண்டும்,அந்நிய சக்திகளிடம்  அடகு வைப்பதாக, இந்தியர்களை மீண்டும் அடிமைப்படுத்துவதாக, எப்போது,யாருக்கு எங்கு வைத்து, என்ன உத்திரவாதம் செய்தாரோ,தெரியவில்லை! ஆனால் அப்படி செய்யும் காரியத்தை செய்வதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்! அதையும்  நேரடியாக செய்யாமல்,  தனது கைக்கூலிகளாகவும், காங்கிரசு போர்வையில் உலவும் கழிசடை தலைவர்களின் மூலமே செய்ய முன்று வருகிறார்! என்று சந்தேகம் வருகிறது!        இந்தியா சில்லறை வணிகத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் இப்போது, அந்நிய முதலீடுகளின் அளவை ஐம்பத்தி ஒரு சதவீதமாக உயர்த்தும் தீர்மானத்தை  மத்திய அமைச்சர்களின் ஒப்புதலோடு நிறைவேற்றி இருக்கிறார்! உதட்டளவில் சுதேசம் பேசிக் கொண்டு விதேசிகளாக வாழ்ந்துவரும்  நமது எதிர்கட்சித் தலைவர்களும், தேசபக்தி வேடத்தை  தேர்தலுக்கு மட்டும் போட்டுக்கொள்ளும், போலி தேசியவாதிகளும் எதிர்த்து, கூக்குரல் போட்டு,நாடாளுமன்றத்தின்   நான்காவது நாளையும்   முடக்கிப் போட்டு உள்ளனர்! ஓட்டுமொத்த இந்தியர்களின் சுய சார்பு குறித்த, எந்தப் பிரச்சனையையும்  பொதுமக்களின் பார்வைக்கும் கருத்துக்கும் வைக்கும்படி இந்த நாட்டில்  எவருமே இதுவரை கேட்பதில்லை! பத்திரிகைகளும், சமூக ஆர்வலர்களும், நாட்டின் நலன் விரும்பும் அறிவாளிகளும் கூட நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் பிரச்சனையில் போது மக்களின் கருத்துக்களை கேட்டு, போது விவாதம் நடத்தி முடிவுக்கு வரவேண்டும். அப்படி முடிவு செய்வது தான் உண்மையான ஜனநாயகமாகும்! என்று எண்ணாமல் உள்ளது ஆச்சரியமும் அதிர்ச்சியையும் அளிக்கிறது!       இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது,  நமது தலைவர்களுக்கு நாட்டின் தொழில்  வளர்ச்சியில்,பொருளாதார முன்னேற்றத்தில், அக்கறை இருந்தது! நாட்டு மக்களின்மீது அக்கறை இருந்தது!  வங்கிகள் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பதற்காக அரசுடமை ஆனது! இந்தியனாக  இருப்போம் இந்தியப் பொருட்களையே வாங்குவோம் என்று கோஷமெல்லாம் எழுப்பப் பட்டது!தொழில்கள் வளர்ச்சியடைந்தன.இந்தியா பொருளாதாரம் வளர்ச்சியடைந்து, வளர்ந்து வரும்  நாடாக,அறிவிக்கப் பட்டது! காந்தின் கனவான சுதேசி இந்தியா உருவாகிவிடும் என்று தோன்றியது!       அனால் இன்றோ,வெளிநாட்டு  கார்களில் தான்  இந்தியா தலைவர்களும் எடுபிடி தொண்டர்களும்,அரசு அதிகாரிகளும் பவனி வருகின்றனர்! பப்பேகளும், பார்டிகளும்,  ஆடல் பாடல்களும்  மக்களின் வாழ்க்கையை .பற்றிய கவலை இன்றி,கொஞ்சமும் குற்ற உணர்வின்றி,  மக்கள் பணத்திலேயே ஆட்சியாளர்களாலும், அதிகாரிகளாலும் வீணடிக்கப் படிக்கிறது! உள்ளூர் தொழில்கள் நாசமாகி விட்டது! கைத்தறி நெசவாளர்களின் கண்ணீருக்கு இவர்கள்  கவலைப் படுவதில்லை. மூடிய பல்லாயிரம் சிறு மற்றும் பெரும் தொழில் கூடங்களைப் பற்றியோ, அந்த தொழில் கூடங்களில் பணியாற்றி இப்போது வேலை இன்றி தவிப்பவர்கள் பற்றியோ ஆட்சியாளர்கள் கவலைப் படுவதில்லை!  விவசாயிகளின் இன்னலும், வேதனையும் இவர்களது கண்ணுக்கு தெரிவில்லை! நாளொன்றுக்கு இந்தியாவில் இருபதாயிரம் பேருக்குமேல்  பட்டினியாலும் போதிய உணவு இன்றி செத்து மடிவது பற்றி கவலை இல்லை! கூடங்குளம் பற்றியும்  கவலை இல்லை,  மீனவர்கள் படுகொலை,தமிழீழ அகதிகள், கொள்ளைபோகும் இந்திய  வளங்களைப் பற்றியும் கவலை.!!     ஆனால் தங்களது பாதுகாப்பு குறித்து கவலைப் படுகிறார்கள்! அந்நிய முதலீடு ஐம்பத்தொரு சதவீதமாக அதிகரிப்பது குறித்து கவலைப் படுகிறார்கள்! பன்னாட்டு கம்பனிகளுக்கு சலுகை வழங்குவது குறித்து கவலை கொள்ளுகிறார்கள்!  இத்தனைக்கும் காரணம்.. காந்தி தேசத்தை விட, இவர்களுக்கு சோனியாவின் நேசமும் பாசமும் பெரிதாகத் தெரிவதால் தான்! மெல்ல இனி இந்தியா,  இல்லையில்லை விரைவில் இந்தியா அன்னை சோனியாவின் ஆசையால், அன்னியர் பூமியாகும்!

Friday, 25 November 2011


அரசின் ஊழலுக்கு எதிராக் விழுந்த அறை,சொல்லுவது என்ன?

         விலைவாசி  உயர்வு  குறித்த பிரச்னை நாடாளுமன்றத்தில், எதிர்கட்சிகளை கிளர்ந்து எழச் செய்துள்ளது! குளிர்கால கூட்டத் தொடரின் மூன்று நாட்கள் விவாதம் இன்றி ஒத்திவைக்கப் பட்டுள்ளது! ஊழல் குறித்த அரசின் நடவடிக்கைகள், கருப்புப்பணம் வைத்துள்ளவர்களின் எழுநூறு பேரின் பட்டியலை  வெளியிடாமல் உள்ளத்தில் இருந்து இந்த அரசு,ஊழலை ஆதரிப்பதாகவும், ஏற்றுக்கொண்டு அங்கீகரிப்பது போலவும் உள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அந்நிய சந்தையில் பணத்தின் மதிப்பு குறைந்துள்ளதால்  பணவீக்கம்,அதிகரித்துள்ளது,அதனால் விலைவாசி உயர்ந்துள்ளது.என்று கூறுகிறது! பிரதமர் மன்மோகன் சிங் போன ஆண்டு நவம்பரிலேயே, விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப் படும் என்று கூறினார். இப்போது,பிரணாப் முகர்ஜி,மார்ச் மதத்துக்குள் கட்டுப் பட்டுவிடுவதாக  கூறுகிறார்! சாமானிய மக்களின் வாழ்கையை விலைவாசி உயர்வு எந்த அளவு பதிக்கிறது,என்பது பற்றி நமது ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. அக்கறை இல்லை.யுக வணிகமும்,வணிக சூதாட்டமும் ஆன, online  வர்த்தகத்தை தடி செய்ய வேண்டும் என்று அனைத்து கட்சிகளுமே கேட்டும்,காங்கிரசில் உள்ளவர்கள் குரல் கொடுத்ததும் கூட, ஆன்லைன்  வர்த்தகத்தை தடை செய்யாமல் இருந்து வருகிறது,!
   இவைகளை எல்லாம் பார்க்கும்போது,இந்த அரசு  அடித்தட்டு மக்களின் நலனுக்காக செயல்படும் அரசு இல்லை என்பது தெரிகிறது! பின் யாருக்காக இந்த அரசு செயல்பட்டு வருகிறது? நாட்டின் வளத்தை கொள்ளையிடும்  பன்னாட்டு தொழில் அதிபர்களுக்கும்,நிறுவனங்களுக்கும் செயல்பட்டு வருகிறது! அதுவும் நமது வரிப்பணத்தை வாரி இறைத்து,சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு, நமக்கு எதிராக செயல்பட்டு வருகிறது! 
      நமது நாட்டை அந்நியர்களிடம் அடகு வைக்கும் ஏவல்  நாய்களாக இன்றைய ஆட்சியாளர்கள் உள்ளனர்! எண்பதுகளில் இந்திராகாந்தி அம்மையார்,  "வறுமையே வெளியேறு" {கரீபி ஹட்டாவோ} என்ற கோஷத்தை எழுப்பி தேர்தலை சந்தித்தார். பல்லாயிரம் கொடிகளை ஓதிக்கியும்,பல திட்டங்களைப் போட்டும் வறுமையை ஒழிக்கப் போவதாக பீற்றிக் கொண்டார்! அவரால் வறுமையை இந்தியாவில் ஒழிக்க முடியவில்லை! அவர்க்குப் பின்பு ராஜிவ்காந்தி,நரசிம்ம ராவ், ஆகியோர்கள் வந்தார்கள். அவர்களாலும் ஒழிக்க முடியவில்லை! இந்தியாவில் இன்னும் வறுமை நீடிக்கிறது! வறுமை வளர்ந்து வருகிறது.!!  நமது ஆட்சியாளர்கள் வறுமையை ஒழிப்பதாக சொல்லியே நாட்டின் பொருளாதரத்தை ஒழித்து வருகின்றனர்.  வறுமையில் வாடும் மக்களை ஒழிக்க முன்று வருகின்றனர்!
      அதான் விளைவே இன்று பெரும் தொழில் அதிபர்களும் பெரும்பாலான அரசியல் வாதிகளும் பதிக்கி வைத்துள்ள கருப்பு பணமாகும்!  வறுமையை ஒழிக்க கொட்டப் பட்ட கொடிகள் எல்லாம் இவர்களால் கொள்ளையிடப்பட்டு  கருப்பு பணமாக மற்றப் பட்டுள்ளது! எனவேதான் கருப்பு பணத்தை மீட்பது குறித்து எதுவும் சொல்லாமல் இரும்து வருகிறார்கள்!  மக்கள் படும் வேதனைகளைத் தாங்க முடியாத மனித நேயம் உள்ள,தார்மீக கோபம் கொண்ட இந்திய பற்றுள்ள குடிமகன் ஒருவர், விலைவாசி உயர்வு பற்றி பொறுப்பில்லாமல்,கிண்டலாக பதில் அளித்த மதிய விவசாய மந்திரி சரத் பவாரை கன்னத்தில் அறைந்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்!  அப்படி அவர் கண்டனத்தை பதிவு செய்துள்ளதை தவறு என்று நிதி மந்திரியும்,பிரதமரும் கண்டித்து உள்ளனர்!
      முன்பு உள்துறை மந்திரிக்கும், அத்வானிக்கும் செருப்பு வீச்சு நடந்தது! இப்போது, சரத் பவருக்கு அறை விழுந்துள்ளது! இவைகள்  எல்லாம் சாமானிய மக்களின் சமூக கோபமே என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஒட்டுமொத மக்களும் இதுபோல் கோபத்தை காட்டும் சூழ்நிலையை  ஏற்படுத்தாமல் இருப்பது நல்லது என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்!
     இல்லையென்றால் இன்னோறொரு உரிமைப் போர்  இந்தியாவில் நடப்பதை  தடுக்க இயலாமல் போய்விடும்! அப்படி ஏதேனும்  நடந்தால்.... அது காந்தி சொன்ன அறவழியில் நடக்குமா என்று சொல்ல முடியவில்லை! காரணம் காந்தி இன்று இல்லை என்பதுடன், இன்றுள்ளவர்களில் எவருக்கும்  காந்தியாகும் தகுதியும், யோக்கிதையும் இல்லை என்பதுதான்!
 


Sunday, 20 November 2011

தலை உள்ள தீக்குசிகளும்,முகமூடி மனிதர்களும்!

                        முந்தைய எனது  பதிவு, நிறைய செய்திகளை எனக்கு தந்துள்ளது! பதிவு  குறித்த தங்களது கருத்துக்களை   சொல்வதை விட,எதிர் கருத்தாளர்களின்  மோதல் களமாக இருந்ததை கவனிக்க முடிந்தது! எனது கருத்துக்கள்,அல்லது  பதிவில் சொன்ன கருத்துகள் உடன்பாடானதா? மறுக்கத் தக்கதா? உடன்படுவதாக இருப்பின் அது தொடர்பான கூடுதல் கருத்துகளை சொல்லியும்,வரவேற்றும், பாராட்டியும் சொல்வார்கள் என்ற எனது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை! அதே போன்று,மறுப்பவர்கள் கூட ஆதாரங்களை, அல்லது நான் சுட்டிக்காட்டாமல் விட்டுள்ள விசங்களை தெரிவித்து மறக்கவில்லை!
    என்ன நடந்தது என்று பார்க்கும்போது, எனக்கு சில செய்திகள்{உண்மைகள்}தெரிந்தது. சகோதரர் ராபின் அவர்கள்,ஒரு போது பிரச்சனையை,மனித உரிமைப் பிரச்சனையை,குறித்து தனது கருத்தைச் சொல்லவில்லை.!     அமெரிக்காவின் ஆதிக்க மனோபாவத்தைப் பற்றி எந்த செய்தியும் தரவில்லை! ஏன்?,அமெரிக்காவுக்கு ஆதரவாகவோ, இரானுக்கு எதிர்ப்பாகவோ கூட... எதுவும் சொல்லவில்லை!     ஆனால், இந்த பதிவு அவருக்கு  பிடிக்கவில்லை என்பதை உணர்த்தியுள்ளார்! பதிவு குறித்து  எந்தவித கருத்தையும் சொல்லாமல், பதிவின் தாக்கத்தைக் குறைக்கவும், பதிவின் நோக்கத்தை திசை திருப்பவும் எண்ணி,  அந்த  முயற்சியில் ஈடுபட்டு,, மதத்தை துணைக்கு அழைத்தும், உண்மைகள் பதிவரை உணர்சியுட்டியும்,தேவையே இன்றி வம்புக்கு இழுக்கும் விதத்தில் குறிப்பிட்டும்,  தனது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்!  அவரது திறமையை, சாமர்த்தியத்தை பாரட்டுகிறேன்!           அதே நேரத்தில், ராபினுக்கு பதில் சொல்வதாக நினைத்தோ, எனக்கு ஆதரவான கருத்து சொல்வதாக நினைத்தோ, நண்பர்கள் உணர்ச்சிவயம் அடைந்து, கருத்துகளை கொட்டியுள்ளனர்!. அவர்களுக்கு எனது நன்றியை சொல்வதுடன், உரிமையுடன் ஒரு வேண்டுகோளாக சொல்கிறேன், "ஜாதி மதம்,  என்பவைகள், மனிதனின் அறிவையும் நிதானத்தையும் அழிக்கும் கத்திகள்!        ஒரு   மதத்தின் மீது நமக்குள்ள பற்று, பிற மதத்தின் மீதும், அம்மத மக்களின் மீதும் வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது!   நமது ஜாதியோ, மதமோ இழிவுபடும் போது, நமக்கு கோபம் வருகிறது!  கோபத்தில் நாம் அறிவையும் நிதானத்தையும் இழந்து விடுவதால், நம்மை ஆத்திரமூட்டி, பிரச்சனைகளை திசைதிருப்புவது, அல்லது உண்மையான பிரச்சனைகளை மறக்க செய்வது, உருவாக்கப்பட்ட புதிய பிரச்சனையை விசிறிவிட்டு,  ஆதாயம் அடைவது! என்பது போன்ற பல முகமூடிகளையும், அத்தகைய செயல்களை செய்யும் முகமூடி மனிதர்களையும் கொண்டு  வளர்வதே ஆதிக்கமாகும்! ஆதிக்க சக்திகளுக்கு உதவிடும்  வகையில் செயல்படும் , அத்தகைய முகமூடிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது   காலத்தின் தேவை ! " என்பதை நினைவில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்!                         தீக்குச்சிகளுக்கு போலவே, மனிதர்களுக்கு தலை உள்ளது.!   ஆனால் மனிதர்களுக்கு அறிவு உள்ளது,  தீக்குச்சிகளுக்கு அது இல்லை!  தீக்குச்சியை உரசினால் பற்றி எரிந்து,அழிகிறது! !    மனிதர்கள் அறிவுள்ளவர்கள் ஆதலால் எரிவதைப் பற்றியும்,அழிவதைப் பற்றியும்  யோசிக்க வேண்டி இருக்கிறது!!   அப்புறம் இன்னொரு செய்தி. முகமூடிகள்  தானே இயங்குவதில்லை, இயக்கப் படுபவைகளே!  ஏனெனில், அவைகள் தலைகளில்லை!...என்பதையும் கவனத்தில்வைப்பது நல்லது!
  {    நண்பர் சூரிய ஜீவா  மன்னிக்கவேண்டும்! ஐ.நா.-பற்றியும்,வீட்டோ அதிகாரம்  பற்றியும்  இன்னொரு தருணம் தொடரலாம்! }


Friday, 18 November 2011

அமெரிக்காவின் ஆதிக்கமும், இஸ்லாம் எதிர்ப்புணர்வும்!

              ஈராக் அதிபராக சதாம் உசேன் இருந்த போது,ஈரானை தூண்டிவிட்டது அமெரிக்கா. ஏழு ஆண்டுகளுக்கு மேலாக,முஸ்லிம்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டனர்!  பிறகு இராக்கில் பயங்கர ஆயுதங்கள் இருபதாக கூறி இராக்கை ஆக்கிரமித்தது .சர்வதேச  அணுசக்திக் கழகம் ஈராக் முழுவதும் சோதனை போட்டும்  ஆயுதம் இருந்ததாக தெரியவில்லை.ஆனாலும் வம்படியாக ஈராக் ஆக்கிரமிக்கப் பட்டது, சதாம் தூக்கில் இடப்ட்டார்! இராக்கில் 43500 அமெரிக்கப்   படையினர்,-இன்றுவரைஇருந்து ஈராக்கின் இயற்கை வளத்தை கொள்ளையிடுகின்றனர்!     இராக்கில் பல்லாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டு, கொள்ளப்பட்ட பட்ட செய்திகளும், படங்களும் ஊடகங்களில் வெளியானது!    அமெரிக்காவுக்கு காவல் காக்கும்  ஐ.நா.சபை கண்டுகொள்ளவில்லை!     மனித உரிமை மீறல்கள் பற்றி  மார்தட்டும் மற்ற நாடுகளும்,  மக்களும் கூட கண்டு கொள்ளவில்லை!அப்புறம் ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின் லேடனைத் தேடுவதாக சொல்லி, ஆக்கிரமித்தது!.  ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு விட்ட பின்னரும்   அமெரிக்கா தனது படைகளை திரும்ப அழைத்துக் கொள்ளவில்லை!  இன்று  98 ,000  அமெரிக்கா வீரர்களும்  9500 - இங்கிலாந்து வீரர்களும்  ஆப்கானை ஆக்கிரமித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இப்போது  ஈரானை தாக்கவும் ஆக்கிரமிக்கவும் தயாராகிவருகிறது அமெரிக்கா! தனது தாக்குதலுக்கு  ஆதரவாக ஈரானை, "தீமைகளின் மயமாக" அமெரிக்க அதிபர் ஒபமா குறிப்பிட்டு பேசுகிறார்! அமெரிக்க எதிர் கட்சிகளும் ஆமோதிகின்றன.
           உண்மையில் பார்த்தால், ஓட்டுமொத்த நாடுகளுக்கும்,   மக்களுக்கும், ஏன்,மனிதகுலத்துக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்து வருவது அமரிக்காதான்!. அது வைத்துள்ள நாசகார ஆயுதங்கள்தான்!!     அத்தகைய நாடு,   ஈரான் அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளதாக குற்றம் சாட்டுகிறது !  அணுஆயுத பரவல் தடைச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு,  தனது நாட்டு அணுஉலைகளை சர்வதேச கண்காணிப்புக்கு உள்ளாகிவரும் ஈரானை தாக்குவதற்கு தயாராகி வருகிறது!  அணுஆயுத பரவல் சட்டத்தை ஏற்றுகொள்ள மறுத்து இஸ்ரேல,பாகிஸ்தான்,இந்திய இன்றுவரை உள்ள நிலையில்,  அந்த நாடுகளை கண்டிக்க முன்வராத  அமெரிக்கா,  ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதால் தாக்குகிறோம்  என்று சொல்லுவது,   எத்தனை  கேலிக்குரிய குற்றசாட்டு என்பது நமக்கு தெரியும்!
          ஈரானைத் தாக்குவதற்கு,காரணம் அந்த நாட்டின் எண்ணெய் வளம் என்பது வெளிப்படையான காரணமாக இருந்த போதிலும்,அதுமட்டுமே காரணம் என்று சொல்லமுடியவில்லை! ஈரானில் 1979 -வாக்கில் மதபுரட்சி நடக்கும்வரை, அமெரிக்காவுக்கு அடிபணிந்து நடந்த,  ஈரான் இப்போது அடிபணிவதில்லை!  மத்திய ஆசியாவில் தனது மேலாதிக்கத்தை இஸ்ரேலின் உதவியுடன் நிலைநிறுத்துவது மற்றொரு காரணம்!   தவிர,  சிறந்த  பண்பாட்டு கலாச்சாரம் கொண்ட இஸ்லாமியர்களைக்  கொன்று குவித்து,   இன அழிப்பை    செயல் படுத்தவும்,,  தனது யூத வெறிஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும் படி செய்வதும்,அங்கே   அடிவருடி முஸ்லிம் தலைவர்களை வைத்து,, நுகர்வு கலாசாரத்தை ஈரானில்  திணிப்பதும், அதன்மூலம் ஈரானின் நிரந்தர வளத்தை கைபற்றுவதுவே அமெரிக்காவின்  மறைமுக செயல் திட்டங்களாகும்!  தன்னை எதிர்த்த கடாபியைக் கொன்று,லிபியாவை   ஆக்கிரமிக்கும் பணியை செய்து முடித்து விட்டு,   ஈரானின் மீது இப்போது பார்வையை பதித்து வருகிறது!
      அமெரிக்காவை எதிர்க்கும் எந்தநாடும்,தலைவரும்இருக்க கூடாது என்ற ஆதிக்கவெறிக்கு முற்றுப் புள்ளி  வைக்கவேண்டும். ஆதிக்க வெறியோடு ஆக்கிரமிப்புகளை நடத்தி,பிற நாடுகளுக்கு தந்துவரும் அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.பிற நாடுகளின் இறையாண்மையைப் பறிக்கும்,பிற நாடுகளுக்குள் அமெரிக்கா ஏற்படுத்தி வரும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தும் பொறுப்பு ஐ.நா-வில் உறுப்பு நாடுகளாக உள்ள அனைத்து நாடுகளுக்கும் உள்ளது!
   ஐ.நா- போன்ற போது அமைப்புகள்  பொய்யான காரணங்களைக்  கூறி உலகில் போரையும்,அழிவையும் வலிந்து திணித்து வரும் அமெரிக்கா மீது,    உலகின் பயங்கரமான நாடு, பயங்கர வாதத்தை  வளர்க்கும் நாடுகளுக்கு{இஸ்ரேல்}  ஆதரவு தரும் நாடு, மனித உரிமைகளை மண்ணில் போட்டு மிதித்து வரும் நாடு,   என்று ஐ.நா- வில் தீர்மானம் கொண்டுவந்து  கண்டிக்க வேண்டும் அமெரிக்காவின் வீட்டோ அதிகாரத்தை ரத்துசெய்யவும் தீர்மானம்  கொண்டுவரவேண்டும்!       இரானைத் தாக்கினால்  எல்லா நாடுகளும் அமெரிக்காவுக்கு எதிராக கிளர்ந்து எழவேண்டும், தூதரக உறவுகளை முறித்து கொள்வதுடன், பொருளாதார தடையையும் அந்த நாட்டுக்கு  விதிக்க முன்முயற்சி எடுக்கவேண்டும!  . இல்லையென்றால், அமெரிக்காவின் ஆதிக்க வெறிக்கு, எல்லா நாடுகளும் பலியாவதை தடுக்க முடியாது!


Wednesday, 16 November 2011

போதிதருமரும், காஞ்சி புத்தர் தெருவும்!

               ஏழாம் அறிவு திரைபடத்தின் மூலம் இப்போது தமிழர்களுக்கு, காஞ்சியில் பிறந்த போதிதர்மரை பற்றி தெரிந்து இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! போதிதர்மர்  போலவே காஞ்சியில்  தர்மபாலர், தின்னாகர் பிறந்தவர்கள் என்பதை யார்{ படம் எடுத்து }சொல்லபோகிறார்கள்?  போதிதர்மர் சீன நாட்டிற்கு போனார்.. வேறு பெயரில் அழைக்கபட்டார்..., குங்க்பு தற்காப்புக் கலைக்கு, அவரே பிதாமகன்!, என்பதற்கு ஆதாரமான வரலாறு என்னிடம் இல்லை!     ஆனால் போதிதர்மர்  ஒரிசாவில் உள்ள,ராஜகிரி என்ற இடத்தில் ஹர்ஷவர்தன மன்னரால் ஆரம்பிக்கப் பட்ட, நாலந்தா  பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார் என்பது குறித்த வரலாறு தெரியும்!   போதிதர்மர் மட்டுமல்ல,   அவரைப் போலவே காஞ்சியில் பிறந்தவர்களான, தர்மபாலர், தின்னாகர் ஆகியோரும் நாலந்தாவில் பேராசிரியர்களாக இருந்தவர்கள்தான்!         பெளத்த சமய தர்மத்தை பல்வேறு நாடுகளில் பரப்புவதில்,  நாலந்தா பல்கலை கழகத்தில் பயின்ற அறிஞர்களுக்கு பெரும் பங்குண்டு!     போதிதர்மர், தர்மபாலர், தின்னாகர் போன்றவர்கள் பௌததர்மத்தை போதிக்கும் பேராசிரியர்களாக உருவான காஞ்சி பகுதியில் அப்போது பௌத்தர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?  கி.பி.640 -வாக்கில் காஞ்சிப் பகுதிக்கு வந்த,  சீன யாத்திரிகர்,"குயுன்சங்" என்பவர் தரும் விவரம் இது:  " இந்த நாட்டில் 100 -சங்கிராமங்கள்பெளத்த மடங்கள்} உள்ளன. பதினாயிரம் பௌத்தத் துறவிகள் இருகின்றனர். சைவ,வைணவ,சமணக் கோயில்கள் சுமார் 80 இருகின்றன. திகம்பர சமணர் பலர் திராவிட நாட்டில் இருகின்றனர்" என்று தனது பயணக் குறிப்பில் குறித்துள்ளார்.  மற்ற எல்லா சமயதவர்களையும் விட அதிகமான பௌத்தர்களும், எல்ல சமயத்தவர்களின் கோயில்களை விட அதிகமான பெளத்த மடங்களும் இருந்து வந்ததை அறிந்துகொள்ள  முடிகிறது!           பௌத்தமும்  சமணமும்  நமது, 'புண்ணிய மதமான' இந்து மதம் எனப்படும் பக்தி மதத்தால் அளிக்கப்பட்டது. அதனுடன் நாம்  நின்றுவிடவில்லை.    பிறரது சமய மடங்களையும்,கோயில்களையும் அழித்து ஒழித்ததுடன்,   அவற்றை பலவந்தமாக கைப்பற்றி, நமது  தெய்வங்கள் உறையும்," புனிதக் கோயிலாக" ஆக்கிகொண்டோம்!    "அன்பே சிவம்" "அன்பே கடவுள்"  என்று இப்போதும் சொல்லிக் கொள்ளும் நாம்தான், கொல்லாமைத் தத்துவத்தை சொன்ன சமணத்தையும், 'அறிவே உண்மை மதம்' என்ற பௌத்தத்தையும் இந்திய மண்னில இருந்து அகற்றினோம்! இப்போதும்கூட, பாபர் மசூதியை இடித்துவிட்டு, அங்கே  ராமர் கோயிலைக் கட்டப் போராடிவருகிறோம்!   இந்திய இறையாண்மையைப்  பற்றி  நமக்கு கவலைஇல்லை,  நாடே கலவரமாவது பற்றிக் கவலை இல்லை, நாட்டின் முன்னேற்றம் குறித்தும் கவலை இல்லை  என்ற நிலையில் இருந்து வருகிறோம்!         இன்று காஞ்சி என்றால் நமக்கு நினைவுக்கு வருவது,    இரண்டு விசயங்கள்தான்! ஒன்று  பட்டு புடவை,. மற்றொன்று சங்கர மடமும்தான்!   காஞ்சியில் இப்பொது, "காமாட்சியம்மன் சன்னதித் தெரு" என்று  இப்போது அழைக்கப்பட்டு வரும் தெருவின் பெயர், "புத்தர் தெரு" என்று அழைக்கப்பட்டு வந்ததும், இந்த தெருவில் வசித்துவந்த பாலகிருஷ்ண முதலியார் வீட்டுக்கு பின்புறம் இருந்த தோட்டத்தில் இருந்து  இரண்டு புத்தர் சிலைகள் கண்டெடுக்கப் பட்டதும்   உங்களுக்கு தெரியுமா?   புத்தர் சிலைக்கு பதிலாக,  சிவனோ,புள்ளையாரோ கிடைத்திருந்தால்  என்ன நடந்திருக்கும்? நிலைமை எப்படியிருக்கும்? முஸ்லிம்கள் படையெடுப்பின் போது,இவைகள்  அகற்றப்பட்டவை   என்று, பத்திரிக்கைகள் வெளிச்சம்போட்டு, பரபரப்பை உண்டுபண்ணி இருக்கும்!  கண்டெடுத்த சிலைகளுக்கு பாலாபிசேகம் நடத்தப்பட்டு, புதிதாக  நன்கொடை வசூலிக்கப் பட்டு, ஒரு பிரமாண்டமான கோயில் வந்திருக்கும்!!


Tuesday, 15 November 2011

ஒரு ரோஜா தோட்டமும்,சாக்கடை நாற்றமும்.!

       ஒருவர்   ஆடம்பரமான, எல்ல வசதிகளும் உள்ள மாளிகையில்  அனைத்து வசதிகளுடன் இருக்கிறார். ஆனால் அவர் வசிக்கும் வீட்டை சுற்றி,குப்பைகளும்,அசுத்தக் கழிவுகளும்கொட்டி கிடக்கிறது. அதைபற்றிய கவலை, அக்கறை அவர்க்கு இல்லை. இப்படி இருப்பதால் என்ன நடக்கும்? விரைவில் ஈக்கள், கொசுகள் படையெடுக்கும்..., டைபாயிடு,மலேரியா,டெங்கு,காய்சல், மற்றும்  பலவித  நோய்தொற்று  ஏற்படும், ஆரோக்கியத்தை இழந்து மருத்துவமனைகளில் காலம் கழிக்கும் நிலை வீட்டில் உள்ளவருக்கு ஏற்படும்!  மற்றொருவர்,போதிய வசதி இல்லாத, ஆனால் சுற்றிலும் பூந்தோட்டம் உள்ள குடிசையில் வசிக்கிறார். அவரது நிலை எப்படி இருக்கும்? உடல்நலத்துடன் அமைதியான மன நிலையுடன் அவர் சந்தோசமாக இருப்பார்!     முன்னவர்,சுற்று சூழ்நிலைபற்றிய அக்கறை இல்லாதவர், தான் வசதியுடன் இருந்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவர், பின்னவர் தனது வசதிகளை பெரிதாக கர்தாதவர், சுற்றுசூழ்நிலை நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புபவர்!  
          நமது மக்களில் பலர் இப்போது, முன்னவரைபோல தான் , தனது, என்ற குறுகிய வட்டத்தை போட்டுகொண்டு, எவர் எப்படி இருந்தால் நமக்கென்ன? நாம் நன்றாக இருக்கிறோமா? அதுபோதும்! என்றசுயநலனுடன் வாழ்ந்து வருகிறார்கள்! தன்னை சுற்றியுள்ள சக மனிதனின் பிரச்சனை என்னா? சமுகத்தில் நிலவும் அவலங்கள் என்ன?  என்பதைப்பற்றி கவலை இன்றி இருப்பது நமக்கு நாமே  தேடிக்கொள்ளும் துன்பம் என்பதை முதலில் அவர்கள் உணரவேண்டும்!  இல்லை எனில்   உங்களது சுயநல எண்ணமே உங்களுக்கு தீமையை தேடித்தரும் என்பது மட்டும் உறுதியாகும்!
       தன்னை சுற்றியுள்ள சமுகத்தை புறக்கணிக்கும் எவரும், சிறந்தவர்களாக,வாழ்வாங்கு வாழ்ந்தவர்களாக,வையம் மதித்ததில்லை! வரலாறும் சொல்லவில்லை!!
                " பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
               கருமமே கட்டளைக் கல்."

     - வள்ளுவர் பாவம் பிறந்ததற்கு, நல்லதாக எதாவது சொல்லவேண்டுமே என்று இதுபோல பலதை சொல்லிவிட்டு,போய்விட்டார்!  நாம்தான் அத்தனை பின்பற்றுவது இல்லை!  வள்ளுவர் சொல்லுவதையே கேட்காத நம்ம மக்கள்  நாம் சொன்னால் கேட்பார்களா?  இருந்தும் சில நேரத்தில் மனது கிடந்தது தவிக்கும்!,சொல்லித்தான் பார்ப்போமே, ஊதுற சங்கை ஊத்திதான் பார்ப்போமே என்று நினைக்கும்!  அப்படியான நினைப்பு இன்று...அதன்  எதிரொலி, இந்த பதிவு!

ஒரு ரோஜா தோட்டமும்,சாக்கடை நாற்றமும்.!

ஒருவர்   ஆடம்பரமான, எல்ல வசதிகளும் உள்ள மாளிகையில்  அனைத்து வசதிகளுடன் இருக்கிறார். ஆனால் அவர் வசிக்கும் வீட்டை சுற்றி,குப்பைகளும்,அசுத்தக் கழிவுகளும்கொட்டி கிடக்கிறது. அதைபற்றிய கவலை, அக்கறை அவர்க்கு இல்லை. இப்படி இருப்பதால் என்ன நடக்கும்? விரைவில் ஈக்கள், கொசுகள் படையெடுக்கும்..., டைபாயிடு,மலேரியா,டெங்கு,காய்சல், மற்றும்  பலவித  நோய்தொற்று  ஏற்படும், ஆரோக்கியத்தை இழந்து மருத்துவமனைகளில் காலம் கழிக்கும் நிலை வீட்டில் உள்ளவருக்கு ஏற்படும்!  மற்றொருவர்,போதிய வசதி இல்லாத, ஆனால் சுற்றிலும் பூந்தோட்டம் உள்ள குடிசையில் வசிக்கிறார். அவரது நிலை எப்படி இருக்கும்? உடல்நலத்துடன் அமைதியான மன நிலையுடன் அவர் சந்தோசமாக இருப்பார்!

     முன்னவர்,சுற்று சூழ்நிலைபற்றிய அக்கறை இல்லாதவர், தான் வசதியுடன் இருந்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவர், பின்னவர் தனது வசதிகளை பெரிதாக கர்தாதவர், சுற்றுசூழ்நிலை நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புபவர்! 

          நமது மக்களில் பலர் இப்போது, முன்னவரைபோல தான் , தனது, என்ற குறுகிய வட்டத்தை போட்டுகொண்டு, எவர் எப்படி இருந்தால் நமக்கென்ன? நாம் நன்றாக இருக்கிறோமா? அதுபோதும்! என்றசுயநலனுடன் வாழ்ந்து வருகிறார்கள்! தன்னை சுற்றியுள்ள சக மனிதனின் பிரச்சனை என்னா? சமுகத்தில் நிலவும் அவலங்கள் என்ன?  என்பதைப்பற்றி கவலை இன்றி இருப்பது நமக்கு நாமே  தேடிக்கொள்ளும் துன்பம் என்பதை முதலில் அவர்கள் உணரவேண்டும்!  இல்லை எனில்   உங்களது சுயநல எண்ணமே உங்களுக்கு தீமையை தேடித்தரும் என்பது மட்டும் உறுதியாகும்!
       தன்னை சுற்றியுள்ள சமுகத்தை புறக்கணிக்கும் எவரும், சிறந்தவர்களாக,வாழ்வாங்கு வாழ்ந்தவர்களாக,வையம் மதித்ததில்லை! வரலாறும் சொல்லவில்லை!!

            " பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
               கருமமே கட்டளைக் கல்."
     - வள்ளுவர் பாவம் பிறந்ததற்கு, நல்லதாக எதாவது சொல்லவேண்டுமே என்று இதுபோல பலதை சொல்லிவிட்டு,போய்விட்டார்!  நாம்தான் அத்தனை பின்பற்றுவது இல்லை!  வள்ளுவர் சொல்லுவதையே கேட்காத நம்ம மக்கள்  நாம் சொன்னால் கேட்பார்களா?  இருந்தும் சில நேரத்தில் மனது கிடந்தது தவிக்கும்!,சொல்லித்தான் பார்ப்போமே, ஊதுற சங்கை ஊத்திதான் பார்ப்போமே என்று நினைக்கும்!  அப்படியான நினைப்பு இன்று...அதன்  எதிரொலி, இந்த பதிவு!

Monday, 14 November 2011

பில்ஸ்பெரி சப்பாத்தியும், பீட்டர் இங்கிலாந்து சட்டையும்,சொல்லும் ரகசியங்கள்!

               உலக மயமாக்களில் இந்தியாவுக்கு கிடைத்திருப்பது, பில்ஸ் பெரி சப்பாத்தியும், பீட்டர் இங்கிலாந்து சட்டையும் என்பது நமக்கு தெரியும்! இவைகள் மட்டுமா நமக்கு கிடைத்து உள்ளது?"லேய்ஸ்,குர்குரே,பீட்சா, பெப்சி, கோகோகோலா, என்ற உணவும் பானமும்  கூட, உலகமயமாக்கலால் நமக்கு கிடைத்தவையே!  இன்னும்  பிடி பருத்தி,பிடி கத்திரிகாய்,மரபணு மாற்றம் செய்யப்பட்ட வித்தைகள் என பலதும் கிடைத்துள்ளன!     புதிய பொருளாதாரக் கொள்கையில் இந்தியா கையெழுத்திடும் பொது, இந்த ஒப்பந்தம்  காலத்தின் கட்டாயம், இந்திய போன்ற வளர்ந்து வரும் நாடுகளால் தங்களது வளர்ச்சிக்கு தேவையான தொழில் நுட்பங்களை இதன்மூலம் பெறமுடியும்,  என்று கூறியதாக நினைவு!   இந்தியாவில் இனி தேனாறும் பாலாறும்  பாயபோகிறது என்று கனவு கண்டேன்.   அந்த கனவு இன்றுவரை கனவாகவே இருக்கிறது! ஆனால நடந்தது என்னவோ அதற்கு நேர்மாறாக இருந்தது!  தொழில் துறையில் சிறிய பெரிய தொழிலதிபர்கள் எல்லாம் தங்களது தொழிற்கூடங்களை மூடிவருகின்றனர். காரணம், அந்நிய பகசூரக் கம்பனிகளுடன் போட்டிபோட அவர்களுக்கு தெம்பிலாமல்போனதுதான்! பன்னாட்டு கம்பனிகளுக்கு, இறக்குமதியில்,உற்பத்தியில்,மின்சாரத்தில் சலுகைவழங்கும்,  நமது இந்தியா   உள்நாட்டு தயாரிப்பாளர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதுடன், கூடுதலாக வரிச்சுமையில் தள்ளியது தான் காரணமாம்!  இந்திய கம்பனிகளை நசியவைத்து உள்ளது புதிய பொருளாதாரகொள்கை!  இந்திய கம்பனிகளில் நிரந்தர பணியாளர்களாக இருந்த பல்லாயிரம் பேர்கள் வேலை இழந்து,வெளியேறி உள்ளனர். அவர்களின் குடும்பங்கள் வறுமையில் தத்தளிக்கிறது!    இது ஒருபுறம் இருக்க, இந்தியாவின் பாரம்பரிய உணவு பயிர்கள் மறைந்து விட்டது. காரணம் உலகிலேயே மிகத்தரமான கோதுமை இந்தியாவில் பஞ்சாபில் விளைகிறது. அவை இன்று பில்ஸ் பெரி  சப்பாத்திகளாக உருமாறி இன்று இந்திய சந்தைக்கு வந்துவிட்டது!  மகாராஷ்டிரா,கோவை பருத்தி ஏற்றுமதியாகி, மீண்டும் இங்கே பீட்டர் இங்கிலாந்து சட்டையாக வந்து விட்டது! விளைவு? திருப்பூர், மும்பை,சூரத், ஆகிய ஜவுளி நகரங்களில் வேலைபார்போர் எதிர்காலம் கேள்விகுறியாகி விட்டது!        பாகெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை  செய்யப்படும்   லேய்ஸ்,குர்குரே போன்றவற்றால்  மக்கள் மருத்துவமனைகளில் வரிசை கட்டி நிற்பது, வாடிக்கை ஆகிவிட்டது! மருந்துகளில் விளையும், மருத்துவர்களின் கொள்ளையும் இதனுடன் சேர்ந்து படுத்தி வருகிறது!  பெப்சி, கோலா சேர்ந்து   இந்திய தயாரிப்பு பானங்களை ஒழித்துவிட்டது,  சுய தொழில்,சிறு தொழில் செய்த பலரும் இன்று காணமல் போய்விட்டனர்.தண்ணீரை உணவு என்று உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தீர்ப்பு வழங்கிய பின்பு, இன்று தண்ணீர் கூட, இந்தியாவில்  பல்லாயிரம் கோடி மதிப்புள்ள  விற்பனைப் பொருளாகி விட்டது!
   வைரமுத்து கவிதை வரிகள் இவை:
       " என்ன தந்ததாம் இந்த சுதந்திரம்?
          அப்பனின் திருஓட்டை..
         புத்திரனுக்கு புதுப்பித்து,
          தந்தது,சுதந்திரம்!

          அயல்நாட்டான் இட்ட 
           விலங்குகளை உருக்கி,
           உள்நாட்டு விலங்குகளை
           உற்பத்தி செய்துள்ளது,சுதந்திரம்!!"

   -- புதிய பொருளாதாரம் இந்தியாவை முன்னேற்றிய கதை இதுதான்! 

பில்ஸ்பெரி சப்பாத்தியும், பீட்டர் இங்கிலாந்து சட்டையும்,சொல்லும் ரகசியங்கள்!

உலக மயமாக்களில் இந்தியாவுக்கு கிடைத்திருப்பது, பில்ஸ் பெரி சப்பாத்தியும், பீட்டர் இங்கிலாந்து சட்டையும் என்பது நமக்கு தெரியும்! இவைகள் மட்டுமா நமக்கு கிடைத்து உள்ளது?லேய்ஸ்,குர்குரே,பீட்சா, பெப்சி, கோகோகோலா, என்ற உணவும் பானமும்  கூட, உலகமயமாக்கலால் நமக்கு கிடைத்தவையே!  இன்னும்  பிடி பருத்தி,பிடி கத்திரிகாய்,மரபணு மாற்றம் செய்யப்பட்ட வித்தைகள் என பலதும் கிடைத்துள்ளன!!
     புதிய பொருளாதாரக் கொள்கையில் இந்தியா கையெழுத்திடும் பொது, இந்த ஒப்பந்தம்  காலத்தின் கட்டாயம், இந்திய போன்ற வளர்ந்து வரும் நாடுகளால் தங்களது வளர்ச்சிக்கு தேவையான தொழில் நுட்பங்களை இதன்மூலம் பெறமுடியும்,  என்று கூறியதாக நினைவு!   இந்தியாவில் இனி தேனாறும் பாலரும் பாயபோகிறது என்று கனவு கண்டேன்.   அந்த கனவு இன்றுவரை கனவாகவே இருக்கிறது! ஆனால நடந்தது என்னவோ அதற்கு நேர்மாறாக இருந்தது!  தொழில் துறையில் சிறிய பெரிய தொழிலதிபர்கள் எல்லாம் தங்களது தொழிற்கூடங்களை மூடிவருகின்றனர். காரணம், அந்நிய பகசூரக் கம்பனிகளுடன் போட்டிபோட அவர்களுக்கு தெம்பிலாமல்போனதுதான்! பன்னாட்டு கம்பனிகளுக்கு, இறக்குமதியில்,உற்பத்தியில்,மின்சாரத்தில் சலுகைவழங்கும்,  நமது இந்தியா   உள்நாட்டு தயாரிப்பாளர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதுடன், கூடுதலாக வரிச்சுமையில் தள்ளியது தான் காரணமாம்!  இந்திய கம்பனிகளை நசியவைத்து உள்ளது புதிய பொருளாதாரகொள்கை!  இந்திய கம்பனிகளில் நிரந்தர பணியாளர்களாக இருந்த பல்லாயிரம் பேர்கள் வேலை இழந்து,வெளியேறி உள்ளனர். அவர்களின் குடும்பங்கள் வறுமையில் தத்தளிக்கிறது!
    இது ஒருபுறம் இருக்க, இந்தியாவின் பாரம்பரிய உணவு பயிர்கள் மறைந்து விட்டது. காரணம் உலகிலேயே மிகத்தரமான கோதுமை இந்தியாவில் பஞ்சாபில் விளைகிறது. அவை இன்று பில்ஸ் பெரி  சப்பாத்திகளாக உருமாறி இன்று இந்திய சந்தைக்கு வந்துவிட்டது!  மகாராஷ்டிரா,கோவை பருத்தி ஏற்றுமதியாகி, மீண்டும் இங்கே பீட்டர் இங்கிலாந்து சட்டையாக வந்து விட்டது! விளைவு? திருப்பூர், மும்பை,சூரத், ஆகிய ஜவுளி நகரங்களில் வேலைபார்போர் எதிர்காலம் கேள்விகுறியாகி விட்டது!   பாகெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை  செய்யப்படும்   லேய்ஸ்,குர்குரே போன்றவற்றால்  மக்கள் மருத்துவமனைகளில் வரிசை கட்டி நிற்பது, வாடிக்கை ஆகிவிட்டது! மருந்துகளில் விளையும், மருத்துவர்களின் கொள்ளையும் இதனுடன் சேர்ந்து படுத்தி வருகிறது!  பெப்சி, கோலா சேர்ந்து   இந்திய தயாரிப்பு பானங்களை ஒழித்துவிட்டது,  சுய தொழில்,சிறு தொழில் செய்த பலரும் இன்று காணமல் போய்விட்டனர்.தண்ணீரை உணவு என்று உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தீர்ப்பு வழங்கிய பின்பு, இன்று தண்ணீர் கூட, பல்லாயிரம் கோடி மதிப்புள்ள  விற்பனைப் பொருளாகி விட்டது!

   வைரமுத்து கவிதை வரிகள் இவை:
       " என்ன தந்ததாம் இந்த சுதந்திரம்?
          அப்பனின் திருஓட்டை..
         புத்திரனுக்கு புதுப்பித்து,
          தந்தது,சுதந்திரம்!

          அயல்நாட்டான் இட்ட 
           விலங்குகளை உருக்கி,
           உள்நாட்டு விலங்குகளை
           உற்பத்தி செய்துள்ளது,சுதந்திரம்!!"
   புதிய பொருளாதாரம் இந்தியாவை முன்னேற்றிய கதை இதுதான்! 


Friday, 11 November 2011

இந்தியாவின் ராஜபாட்டையால் யாருக்கு லாபம்?

வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது, இந்தியாவின் முக்கிய நகரங்களான  சென்னை,கொல்கத்தா,மும்பை,டெல்லி ஆகிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டம்  தங்க நாற்கரசாலைத் திட்டம் என்று பெருமை படுத்தப்பட்டு, தொடங்கப்பட்டது!  இன்று நன்குவழிப் பாதை, ஆறுவழிப் பாதையாக மாற்றப் பட்டு வருகிறது! இந்த திட்டத்தை தொடங்கியபோதே, அமெரிக்காவின் ஆதிக்க வெறிக்கும், அவர்களது எதிர்கால இந்திய சுரண்டலுக்கும் கொள்ளைக்கும்தான் செய்கிறார்கள் என்று எனது விடியலும் விடுதலையும் என்ற சிறு நூலில் சுட்டிக்காட்டி இருந்தேன்!  தரிசு நிலா மேம்பாடு திட்டம், போக்குவரத்துக்களை சீர்குலைக்கும் செயல்கள் மூலம் போக்குவரத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் எண்ணம், ஆகியவைகளைப் பற்றி இன்று திட்ட கமிசன்  துணைத் தலைவராக இருக்கும் மண்டேக்ஸ் சிங் அலுவாலியா பொருளாதார மாற்றத்திற்காக வழங்கியிருந்த ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் காட்டி எழுதியிருந்தேன்!         அன்று சொன்னது, இப்பொது நடந்து வருகிறது!  கார்கில் என்றொரு உலக அளவில் உணவுப் பொருட்களை விற்பனைசெய்யும் நிறுவனத்தின் பணி என்னவென்றால், உலகில் எங்கு,என்ன பொருள் விளைவிக்க முடியுமோ அத்தனை உற்பத்தி செய்து, எங்கு அதிகவிலை கிடைக்கிறதோ அங்கு கொண்டுசென்று, அத்தனை விற்பதுதான்! மேலோட்டமாக பார்த்தால், எல்லோரும் கடைபிடிக்கும்  நியாயமான வழிமுறையாக இதுதொன்றும்! இந்தோனேசியா,கியுபா , போன்ற நாடுகளில் சர்க்கரை அதிகம் கிடைக்கும்  ஆனால் அந்த நாட்டு மககளுக்கு சர்க்கரை கிடைக்காது, இந்தியாவில் அதிகம் இப்போது கிடைக்கும் கோதுமை, அரிசி போன்றவை எதிகாலத்தில் இந்தியர்களுக்கு கிடைக்காது! காரணம்  இவைகளை உற்பத்தி செய்யும் நிலங்கள்,  பத்தாயிரம் இருபதாயிரம் ஏக்கர் கொண்ட பண்ணை நிலங்களாக, அன்னியர் கைகளில் இருக்கும்!  அந்நியர்களின் கைகளில் ஒப்படைக்கும் அற்புத பணிக்குத்தான் இந்திய அரசாங்கம்,  தரிசு நில மேம்பாடு திட்டத்தை  கொண்டுவந்துள்ளது!         தரிசாக இருக்கும் நிலங்களில் மாற்றம் கொண்டுவருவது, நல்லதுதானே? என்பவர்களுக்கு... இருக்கிற நிலத்துக்கு தண்ணீர் கிடைக்காது,விவசாயிகளுக்கு  வழங்கிவரும் உரம்,பூச்சிமருந்து,ஆகியவற்றின் மானியம் ரத்து செயயபடுகிறது.டீஸல், பெட்ரோல் விலை உயர்வும் பாதிக்கிறது.,  இப்போது விவசாயம் செய்வதற்கு ஆளில்லை, அப்படியே செய்தாலும் நஷ்டம்தான் வருகிறது! விளைவு?  இந்தியாவில் உள்ள விளைநிலங்கள் திட்டமிடலுடன் அரசாங்கமே உதவிசெய்து, தரிசாக்கப் படுகின்றன!. மேலும் விரைவில் தரிசாக வேண்டும் என்பதற்கு மலட்டு விதைகள், காட்டாமணக்கு  போன்ற பயிர்களை பயிரிட சொல்கிறார்கள்! விவசாய நிலம்  தரிசாகிறது, இப்படி தர்சாக்கப் படும் நிலம், தனியாரின் பண்ணை நிலமாகும், நிலத்தை இழந்த மண்ணின்  மைந்தர்கள்,சொந்த மண்ணில்,சொந்த நாட்டில கூலிகளாக,அடிமை சேவகம் செய்வர்! விளைவிக்கும் பொறுப்பு மட்டுமே அவர்களுக்கு இருக்கும்! விலைபொருள் அன்னியரது உரிமையாகும்!        அப்புறம் அத்தனை ஒரோ இடத்தில இருந்து மற்றொரு இடத்துக்கும், துறைமுகங்கள், விமானநிலையங்கள் போன்றவற்றிக்கு எடுத்துசெல்ல ரோடு வசதி வேண்டும் இல்லையா? அதற்காக போடப் பட்டுள்ளது தான்  இந்தியாவின் ராஜபாட்டையான, தேசிய நெடுஞ்சாலைகள்! இந்த நெடுஞ்சாலைகளில் இப்போதே சுங்கவசூல் கொள்ளை நடந்து வருகிறது! நமது மக்கள் பிரதிநிதிகளும், மந்திரிகளும் மட்டுமே கப்பம் கட்டாமல், கார்களில் இப்போது பவனிவருகின்றனர்!
          யாருக்காக...?   இந்த ராஜ்யமும், இந்திய ராஜபாட்டையும் யாருக்காக ?  நமது இறையாண்மை எங்கே போயகொண்டிருகிறது? என்று கேட்கவேண்டியுள்ளது!

Thursday, 10 November 2011

கூடா நட்பும்,நல்லநட்பும்- ஒரு பார்வை!

கருணாநிதி அவர்கள் தேர்தல் தோல்விக்கு பிறகு கூடா நட்பு குறித்து புலம்பியபோதே, எது நல்ல நட்பு?  என்பதான பதிவு ஒன்றை செய்ய நினத்திருந்தேன். சமயம் வாய்க்கவில்லை!   கூடாநட்பு குறித்து கருணாநிதி புலம்பியபோது, எனக்கு வேடிக்கையாக இருந்தது!.   " வாழும் வள்ளுவரே!"  "ஐந்தாம்  தமிழே!!"   "மனுநீதி சோழனே!!! "என்று, போகுமிடம் எல்லாம் அவரது  உடன்பிறப்புகள் தமிழகம் எங்கும் விளம்பரப்  பதாகைகளை வைத்து...  செய்த ஆர்பாட்டங்கள் நினைவுக்கு வந்தது!
            அது மட்டுமின்றி,  வாழும் வள்ளுவரான  இந்த பெரியவர், திருக்குறளை குறளோவியமாக தீட்டிய கதையும்  நினைவில் வந்ததால், என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை!   குரலோவியம் எழுதிய வாழும் வள்ளுவர்,  கூடாநட்பைப் பற்றி குறிப்பிட்டது,'  பட்டபின் உணரும் பட்டினத்தாரின் பழக்கமாகவும்', 'கண்கெட்டபின்பு கிடைத்த ஓவியம்  போன்றும்'  அல்லாவா இருக்கிறது?!     கூடாநட்பு குறித்து,   வள்ளுவர்  முன்பே சொல்லிஇருந்தும், இவரே அதை குறளோவியமாக காட்டி இருந்தும், இவர்  பின்பற்றவில்லை,   முன்னுதாரனமாக வாழ்ந்து காட்டவில்லை என்றுதானே ஆகிறது?பாவம்  கூடா நட்பைப் பற்றி  இப்போது புலம்புகிறார்!   பலவிசயங்களுக்கு இதுபோல் அவர்  வருந்த வேண்டியவர்!     வருந்தும்போது   பார்க்கலாம்...         ( சமண வள்ளுவனை,அய்யன் வள்ளுவனாக ஆக்கியதும்  இவர்தான்!  எதிர்காலத்தில்...,வரலாற்றை திரித்து எழுதபோகும் புண்ணியவான்களுக்கு உதவும் விதத்தில், அய்யன் வள்ளுவராக்கி உள்ளார். அவர்களும், மிகப்பெரிய தமிழ் அறிஞரான(?)  கருணாநிதியே, வள்ளுவர் அய்யர்தான் என்றுஉறுதிபடுதிள்ளார், பாருங்கள்என்று  சிலர் வரலாற்றை மாற்றும் ஒரு கூத்தும் நடக்கப் போகிறது! )          நல்ல நட்பு எதுவென்று தெளிவது, கூடாநட்பை தவிக்கவும்    உதவும் என்பது என்னுடைய எண்ணமாகும்! நமக்கு முன் வாழ்த்த சான்றோர்களுக்கு நேரமும் சமூகத்தைப் பற்றிய நல்ல எண்ணமும் இருந்ததால், நல்ல நட்பைப் பற்றி, அதையும் தரம் பிரித்து சொல்லியிருகிறார்கள். மூன்று விதமான நட்பு நல்லது என்று உதாரணத்துடன் விளக்கி உள்ளார்கள்!
    எப்போதாவது நாம் ஒருவர்க்கு செய்த நன்மையை,உதவியை மறவாமல் நினைவில்
வைத்துக்கொண்டு,நமக்கு பிரச்சனை வரும்போது எல்லாம் தன்னால் இயன்றவரை உதவுபவர்கள், பனைமரத்தைப் போல நல்ல உள்ளம் கொண்ட நட்பாளர்கள்!.
     அவவப்பொழுது, நாம் உதவிவருவதைபோலவே, நமக்கும் உதவி செய்பவர்கள் தென்னை மரத்தைபோன்றவர்கள்,  நல்ல நட்புள்ளவர்கள்!
      நாம் தொடர்ந்து உதவி செய்துவரும்போது,நமது உதவிகளால்,பயன் பெறுபவரும்,நமக்கு தேவையானவற்றை திருப்பி செய்து வருபவர்கள், வாழையைப் போன்றவர்களாம்! இவர்களும் நல்லவர்களே,( அண்டை வீட்டார் போல ) நட்பு கொள்ளத் தக்கவர்களே!      கண்ணதாசன் இவர்களைப் பற்றி எழுதியுள்ள  கவிதையின் சிலவரிகள்:
           " நண்பரிலே பனை,தென்னை, வாழைஎன்று
                 நல்ல விதங்கள் உண்டு!-இவர்
           நன்றியிலும்,செய்யும் செய்கையிலும்,
               மூன்று விதமும் உண்டு!-நான்,
           கண்ட நண்பர்கள் மூன்று வகையில்லை,
                  நாலாம் வகையடியோய்!-இவர்
          வாங்கிகொள்வார்,ஒரு நன்றி சொல்லார்,
                 இது வாழும் முறையடியோ?"

       மூன்றுவகையான  நல்ல நட்புகொண்டவர்களையும்  நாம் அருகில் வைத்திருப்பது நல்லது!   நாலாவது வகையான,நான்காம்தரமான மனிதர்களிடம்  நட்பு கொள்வது எப்போதும்  ஆபத்தானது! சுயநலத்தையே கொண்டுள்ள இவர்கள்தான்,  நட்பு என்ற போர்வையில் நம்மை சுற்றிகொண்டு,பயனடைந்து வருபவர்கள்!  நட்புகொள்ள கூடாத,நமக்கு ஆபத்தையும்,அவப் பெயரையும் ஏற்படுத்திவரும்" கூடா நட்பாளர்கள்" இவர்களே,அரசியலில் தவிக்கப் படவேண்டியவர்கள்!   அரசியலில் அதிகமாக உள்ளவர்களும் இவர்கள்தான்!!

          

Tuesday, 8 November 2011

தமிழர்களின் தொடர் தொல்லைகளுக்கு காரணம் !

ஒரு மொழி வாழவேண்டுமால், அந்த மொழிபேசும்  மனிதர்கள் வாழவேண்டும்!  அந்த  இனத்தின் நாகரீகம், கலாச்சாரம், வரலாறு, மொழி  அனைத்தையும் போற்றி பாதுகாக்கப் படவேண்டும்!     அந்த இனத்தினரின் வாழ்வாதாரங்களுக்கு,  ஆளுபவர்களும்,ஒட்டுமொத்த சமூகமும் பாதுகாப்பும்,உறுதியும் அளித்து உதவ  முன்வர வேண்டும்!

       தமிழினமும் வாழவேண்டும் என்ற  எண்ணம் ஆட்சியில் உள்ளவர்களிடம் உள்ளதா? என்றால் இல்லை என்பதுதான் நிலவரமாகும்!    தொன்மையான பண்பாடு,கலாச்சாரம், வரலாறு,உள்ள தொன்மையான மொழியாகிய,தமிழ் மொழியைப் பேசும் தமிழர்களுக்கு  என்ன செய்துள்ளது? தமிழர்களின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப் படுகிறதா? இல்லை பறிக்கப் படுகிறதா? என்று பார்த்தால்,  அவைகள் திட்டமிட்டு,  பறிக்கபடுகிறது  என்ற உண்மை புரியும்!      இந்தியாவிலேய மிகவும் வளமான பகுதியும்,  தொன்மையான கலாச்சாரமும் கொண்ட பகுதி என்பது, திராவிடர்களின் வாழ்விடங்களான  கருநாடகம்,ஆந்திரம்,கேரளா,தமிழகம் ஆகிய பகுதிகளாகும்!
வளமான இந்த பகுதிகளின் இன்றைய நிலை என்ன? இந்த பகுதிகளின் வளர்சிக்கு,மக்களின் நலனுக்கு,  ஆட்சியாளர்கள் செய்தது என்ன?  செய்தது ஒன்றுமில்லை! மாறாக இருப்பதையும் சுரண்டியதுதான் அதிகமாகும்!   மேலும் இந்த மக்களை பிளவுபடுத்தி, பேதபபடுத்தி,  இவர்களுக்குள் எழும் சிறிய பிரசனையயும் பெரிதாக ஆக்கி,  வந்ததால்  இன்று, திராவிடர்களுக்குள் வேற்றுமை விஷமாகப் பரப்பப்பட்டு  நிலைநிறுத்தப் பட்டு உள்ளது!
              தமிழர்களுக்கும்  கன்னடர்களுக்கும் பிரச்சனை..,  அதனால் காவிரி தண்ணீர் தமிழகத்துக்கு வருவதே  பிரச்சனை!  தமிழர்களுக்கும் கேரளர்களுக்கும் பிரச்சனை அதனால் முல்லை பெரியாறு  தமிழர்களின் இன்னொரு  தொல்லை!  ஆந்திரர்களுக்கும் தமிழர்களுக்கும் தகராறு அதனால் கிருஷ்ணாவில் தண்ணீர் வருவதும், சென்னையின் தாகம் தீருவதும் கானல் கனவு!    விளைவு?    தமிழகம் வறண்டு பாலையாகிவிட்டது!  குடிநீருக்கே மக்கள் இன்று திண்டாடும் நிலை!   போதாக்குறைக்கு தமிழர்களிடம் இருக்கிற கொஞ்சம் நிலத்தையும் பறிக்கும் வேலைகளையும் ஏற்படுத்தி உள்ளது!      பிளாட்டு போடவும், எவனோ பெரிய கார்பறேட்டு கம்பனியாம்  அவன் கொழுக்க, அப்புறம் ரோடு போட, நீச்சல் குளத்துடன் பண்ணை வீடுகள் கட்ட,  இப்படி கன்றாவிக்  கருமாந்தறதுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு, நாடோடியாக.... நாடிழந்து தமிழர்கள்  போகணும்! நாய்களாக வாழணும், அல்லது ஈழத்து சொந்தங்களைப் போல சாகணும்!    என்பதே  இந்தியாவை ஆளும், ஆதிக்க வர்கங்களின் ஆணவ போக்கும், தமிழர்கள் பற்றிய பார்வையுமாக இருக்கிறது!

        தமிழர்களை தொடர்ந்து தொல்லைக்கு,  உள்ளாக்குவதற்கு  காரணங்கள் இவைகள்தான்!  , தமிழர்கள்,  இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதும், ஆளுவது  அந்நிய மண்ணில் இருந்து வந்தவர்களின் வாரிசுகள் என்பதும்,   வந்தேறிகளுக்கு ஆக்கிரமிப்பும, அடக்குமுறையும் ஆயுதங்கள் என்பது தமிழர்களுக்கு தெரியாமல்இருப்பதும் ஆகும்!     ஒரு இனத்தை, அதுவும் தமிழினம் போன்ற  தொன்மையான இனத்தை முற்றாக   அளிக்கவேண்டும் என்றால் , தொடர்ந்து  தாக்குதல்களை, தொல்லைகளை கொடுத்து வரவேண்டும் என்ற "அரசியல்சாணக்கியத்தால்"  தமிழர்கள் தாக்குதலுக்கு  ஆளாகி வருகிறார்கள்!      தமிழக மீனவர்கள் தாக்குதல்,  நிலத்தில் இருந்து அப்புறப்படுத்துதல்{  கூடங்குளம்}, வாழ்வாதாரத்தை பறித்தல்{அல்லது} சிதைத்தல்,  கலவரம் போன்றவற்றை ஏற்படுத்தி உயிரைப் பறித்தல்ஆகியவைகள்  இன அழிப்பின் செயல்திட்டங்களில் சிலவாகும்!   ஈழத்தில்  உள்ள தமிழர்களுக்கு நேற்று நடந்ததை, இன்று  தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார்கள்!

     

Monday, 7 November 2011

தமிழ்மொழி செம்மொழியா, காட்டுமிராண்டி மொழியா?

தந்தை பெரியார் தமிழ்மொழியை காட்டுமிராண்டி மொழியென்று சொன்னதாக படித்திருக்கிறேன்!  கருணாநிதி தமிழுக்கு செம்மொழி மாநாடு நடத்தியததையும் பார்த்திருக்கிறேன்!  அதனால் வந்த சந்தேகமே இந்த கேள்வியும் தலைப்பும்!
      தவிர நான் ஏதொ,பயங்கரமான இந்துமத எதிர்பாளன் என்பதுபோலவும்,தமிழர்களுக்காக வக்காலத்து வாங்குவது போலவும் சிலர் புரிந்துகொண்டு,'கருத்து கந்தசாமியாக'        'கமெண்டும்' போட்டுள்ளதால் சர்சைகளை உருவாக்காத பதிவு ஒன்றை போடவேண்டும் என்று நினைத்ததன் விளைவும்  இந்த பதிவுக்கு  காரணமாகும்!      இதுவும் சர்சையானால், கலைஞரைப்போல 'என் ராசி அப்படி' என்று புலம்பி தீரவேண்டும்!


  "  நாரதர் கலகம் நன்மையில் முடியும்"? என்று ஆன்மீக அன்பர்கள் சொல்லுவதைப்போல, { அப்பாடா, அவர்களிடம் இருந்து சமாளிக்க ஒரு வழியை கண்டுபிடித்து விட்டேன்}  நன்மையில் முடிந்தால் சந்தோசம்!
       " நான்.. சண்டையை தொடங்குகிறேன், சமாதானத்துக்காக!, நீயோ... சமாதானமாக இருக்கிறாய், என்னோடு சண்டையிடுவதற்காக!!" என்று வைரமுத்து சொன்னதைப்போல, இப்போது சமாதானமாக இருப்பவர்கள் என்னோடு சண்டைபோட்டாலும் சரிதான்!      சிலருக்கு சும்மா இருந்தாலும் பிரச்சனைகள் சுத்தி,சுத்தி வரும்!   வடிவேலு சினிமாவுல வருவரே அப்படியான பாவராசி, நம்முடைய ராசி!
     தமிழை,  " கல்தோன்றி,மண்தோன்றா காலத்தே, முன் தோன்றிய மூத்த மொழி"  என்று சொல்லுகிறார்கள்!  அது எப்படிங்க?  மனிதன் தோன்றுவதற்கு முன்பு மொழி தோன்றி இருக்க முடியும்?         பழமையான மொழி, "தமிழ் மொழி" என்று காட்டுவதற்காக, " உயர்வு நவில்சியாக" அப்படி கூறி இருப்பதாக நாம்  புரிந்து கொள்ளுகிறோம்!   தமிழ், 'காட்டுமிராண்டி மொழி' என்று பெரியார் சொன்னதுக்கு காரணமும், மனிதர்கள் நாகரிகம் அடைவதற்கு முன்பு, காடுகளில் பிராணிகளுடன் பிராணியாக{ வேண்டுமென்றால் அப்பிராணியாக என்று   நினைத்துகொள்ளுங்கள்} வாழ்த்த காலத்தில் இருந்தே பேசப்பட்டு, வழக்கத்தில் இருந்துவரும் மொழி,தமிழ்மொழி என்ற பொருளில் கூறி இருக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம்!
    தமிழ்மொழி, உங்க பார்வையில் செம்மொழியா என்று கேட்பவர்களுக்காக,    கீழே  இந்த நிகழ்ச்சியை தந்திருக்கிறேன்!      தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் ஒரு பட்டிமன்றம் தருமபுரியில் நடந்தது. பட்டிமன்றம் தொடங்கும்  நேரமாகியும், பட்டிமன்றத்தில் பேசவேண்டிய பேச்சாளர் ஒருவர் வந்து சேரவில்லை! அந்த பேச்சாளர், பாலகோடு உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றுபவர், அருகில் இருந்த கடைமடை என்ற ஊரில் வசிப்பவர், எல்லோரும் பரபரப்பாக அவரை எதிர்பார்த்தனர். எங்கிருந்தோ அவசர அவசரமாக வந்த அவரை பார்த்துவிட்ட அடிகளார்,  மிக சத்தமாகவும்,சந்தோசமாகவும் '' வாரும் கடைமடையரே!'' என்று வரவேற்றார்!
         பட்டிமன்ற பேச்சாளரும் பதிலுக்கு குன்றக்குடி அடிகளாரைப் பார்த்து, அதே சந்தோஷ கூச்சலுடன், ''வணக்கம் மடத் தலைவரே!'' என்றார்.  பட்டிமன்றம் குலுங்கியது அன்று தமிழால்! இதற்கு பொருள் விளக்கம் நான் சொல்லபோவது இல்லை, நீங்கள்தான்....! தமிழ்மொழி காட்டுமிராண்டி மொழியா, செம்மொழியா என்பதையும் நீங்களே சொல்லிவிடுங்கள்!

      { இதற்கு முந்தைய எனது பதிவுகளை   காரமாக நினைப்பவர்களுக்கு, கொஞ்சம் ஆறுதலாக,வழங்கியுள்ள  இனிப்பு   இது}. 

Saturday, 5 November 2011

அத்வானி யாத்திரையும்,வெடிகுண்டு கலாட்டாவும்!

             அத்வானி யாத்திரை என்று கிளம்பியபோதே, என்ன நேருமோ? என்று அச்சப்படுவதாக பதிவை செய்திருந்தேன்!   மனுஷன் என்னநடந்தாலும் பரவாயில்லை என்று யாத்திரை கெளம்பி,தமிழ்நாட்டுக்கு வந்தபோது குண்டு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது!  நல்லவேளை, வெடிக்கும் முன்பு கண்டுபிடித்துவிட்டார்கள்!  கண்டுபிடித்து, காவல்துறையினர் அல்ல,   ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள்தான்!   கண்டுபிடிக்காமல், குண்டுமட்டும் வெடித்து இருந்தால்,   என்ன நடந்து இருக்கும் என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது!   முன்புஒருமுறைஅத்வானி கோவை வந்தபோது, வெடித்த குண்டுகளால்,அப்பாவி முஸ்லிம்கள் 18 பேர் கொல்லப்பட்டனர்!  ஷோபா ஜவுளிக்கடை சூறையாடப் பட்டது!  பல முஸ்லிம்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டது, நூற்றுக்கும் அதிகமானவர்கள் வீடு,வாசலை இழந்து அனாதை ஆனார்கள்!, ஜாமீன்கூட கிடைகாமல்,சிறையில் சீரழிந்தனர்!  புண்ணியவான் போகும் இடமெல்லாம்  முஸ்லிம்கள் பாதிக்கப்படுவது, வாடிக்கையாக உள்ளது!           கோவை குண்டுவெடிப்புக்கு பிறகு  குஜராத்,ராஜஸ்தான் பகுதியில் இருந்த மார்வாடிகள் கோவைக்கு வந்து தமிழகபிரஜைகளாக ஆகமுடிந்தது! இன்று  கோவையில்  உள்ள  வடஇந்தியர்களின்  எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு மேல் இருக்கும்!    தமிழீழ அகதிகளைவிட,  தமிழகதிற்கு வந்து, தமிழர்களை அகதியாக்கி வாழும்  வடஇந்தியர்களின் எண்ணிக்கை  அதிகமாகும்!      வந்தாரை எப்படியெல்லாம் தமிழகம்வாழவைக்கிறது?!     எல்லாம் அத்வானி போன்ற தேசியவாதிகளின் கைங்கரியம்தான்!


  இந்தமுறை அத்வானி மதுரைக்கு வந்தபோதும், இப்படி ஏதாவது நடந்துவிடுமோ? என்று பயந்தேன்!.   நல்லவேளை அப்படியேதும் நடக்கவில்லை!  ஒருவேளை, இப்போது குண்டு வெடித்தால் 'அவாளான'   நம்ம ஆளுக்குதான் சிக்கல்வரும் என்று   வெடிக்க விடவில்லையோ? தெரியவில்லை!    ஆனாலும் வரிந்து கட்டிக்கொண்டு,போலீசுப் புலிகள் புலனாய்வில் இறங்கிவிட்டனர். , , குண்டுவைத்தது  முஸ்லிம்கள்தான்!  என்ற ஒரே கோணத்துடன்!   அத்வானி வரும் வரும்வழியில்  வெடிகுண்டு இருந்ததா?   ஐயோ,அய்யையோ! குண்டு வைத்தவர்களை  சும்மா விடலாமா?  அத்வானிக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லாதநிலை ஏற்பட்டுவிட்டதே,   என்று அவாள்களின் பத்திரிகைகள் இப்போது  கூக்குரல் போடுகின்றன!       கண்டெடுக்கப் பட்ட குண்டு,  ராணுவத்தில் பயன்படுத்தப் படும்   குண்டுவகையாம்!  ஆட்டோ ஓட்டும்,பழகடை வைத்திருக்கும் பக்கீர்களுக்கு எப்படி கிடைக்கும்? உள்துரைமந்திரியாக, துணை பிரதமராக, கர்னல் ப்ரோகித் போன்றவர்களை கட்டுபடுத்தும், அத்வானி போன்ற ஆட்களுக்கு வேண்டுமானால் கேட்டால் கிடைக்கும்!

Friday, 4 November 2011

2- ஜி ஊழலில் சுபிரமணியசாமியின் பங்களிப்பு என்ன?

அரசியல்வாதிகளில் நேரடியாக மக்களைசந்திப்பவர்கள், பிரச்சனையை சந்திப்பவர்கள் ஒருரகம் இருகிறார்கள்! சிதம்பரம்,தயாநிதி,ஏன் பிரதமரே கூட அத்தகையவர் எனலாம்!  மக்களை சந்திக்காமல்,மக்களின் பிரச்சனைகளில் அக்கரைகொள்ளாமல்,  தனக்கு ஏற்ற, ஆதாயம் அடையும் விசயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, ஓட்டுமொத்த மக்களையும் ஏமாற்றி, அரசியல்வாதிகளையும் ஏமாற்றி, பத்திரிக்கைகளில் மட்டுமே சவடால் அடித்து வரும் அரசியல்வாதி ஒருவரை சொல்லவேண்டும் என்றால் இவரைத்தான் சொல்லவேண்டும்!  பிளாக்மெயில் அரசியலுக்கு பேருபோன சுபிரமணிசாமி  2- ஜி ஊழலில் ஆரம்பம் முதலே ஆர்வமுடன் இருந்துவருவது, ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது!


    இவரது ஆர்வத்துக்கு காரணம்,நாட்டு  மக்கள் மீது கொண்ட அக்கறைதான் என்பது நம்பும்படி இல்லை! காரணம், ஒட்டு கோவணத்துடன் காட்டிலும்,கழனியிலும் கஷ்டப்படும் இந்திய பற்றுள்ள குடிமகனாக இவரை  யாரும் எண்ணமாட்டார்கள்!  ஹார்வர்டு பேராசிரியரான இவருக்கு கொவனாண்டிகளுடன் கொஞ்சும் பழக்கமில்லை! குபெரர்களான,தொழில் அதிபர்களுடந்தான் உறவுகொள்ளுவார்!  எனவே,  2- ஜி ஊழலில் சிக்கியுள்ள பெரும்பணக்கரர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் இவர்  விரோதியும் இல்லை!  தவிர, நாட்டில் நடக்கும் ஊழல்களையும், முறைகேடுகளையும் அம்பலப்படுதியவரும் அல்ல!   குறைந்த பட்சம்  கண்டித்தும் கருத்து தெரிவித்தும் வருகிற  ஆசாமியும் இல்லை!  பிறகு ஏன் இந்த ஊழலில் மட்டும் சிறப்பான கவனத்தை செலுத்திவருகிறார்?            ராசாவின் பங்கு பத்துசதவீதம்,  தி.மு. கவின் பங்கு முப்பது சதவீதம்    சோனியாவின் பங்கு அறுபது சதவீதம் என்று கூறும் சாமிக்கு,   ஊழலில் கொள்ளை  அடித்த பணம்,  எங்கெங்கே பதுக்கபட்டு  இருக்கிறது, என்பதுதெரிந்ததால்,      அவற்றில் இருந்து  தனது பங்கைப் பெறுவதற்காக  பாய்ச்சல் கட்டுகிறாரோ  என்று சந்தேகம் ஏற்படுகிறது!    கனிமொழியை காப்பாற்ற  இவரிடம் உதவிகேட்டது,  நமக்கெல்லாம் தெரிந்த கதை!    கனிமொழியை காப்பாற்ற   இவர்கேட்டது என்னவென்பது,தெரியாத கதை!!      தயாநிதிமாறனை மந்த்ரிசபையில்  இருந்து வெளியற்றியது நமக்கு தெரிந்த கதை!,      நீரா ராடியா,ரத்தன்  டாட்டா  ஆகியோர்கள் இன்றுவரை தப்பித்து வருவதன் பின்னணி நமக்கு தெரியாத கதை! !

 
                   கனிமொழியை ஜெயிலில் அடைக்க  சொல்லப்பட்ட காரணங்களை விட,  நீரா ராடியா- வை  ஜெயிலில் அடைபதற்கான  காரணங்கள் கூடுதலாகவே   உள்ளது!    வைஷ்ணவி கம்யுநிகேஷன்  என்று நிறுவனம் வைத்து,  மந்திரிகள்,அரசியல் தலைவர்கள் எல்லோரையும் தனது சுண்டுவிரலில் வைத்து வேலைவாங்கியவர்,     அம்பானிக்கும்,ரத்தன்டாடாவுக்கும் இவரே தரகர்!   ராசா தொலைதொடர்பு அமைச்சரானது, தயாநிதிமாறன் ஆறுநூறு கோடியை கொடுத்து அமைச்சரானது,எல்லாம் இவரது டேப்புகளில் இருந்துதான் நாட்டுமக்கள் தெரிந்து கொள்ள முடிந்தது!    இந்திய அரசின் ஆணிவேரை அசைத்துப் பார்த்த 'கென்யா' பெண்மணியை கைது செய்ய சாமி நிர்பந்தம் செய்யவில்லை!  காங்கிரசும்  கைது செய்யவில்லை! அதற்கான காரணமும் தெரியவில்லை! சாமிக்கு தெரியுமோ என்னவோ?
             ஆனால் சாமிக்கு நிச்சயம் தெரிந்த விஷயம், என்னதான் கரடியாக கத்தினாலும் நீரா ராடியவையே   கைது செய்யாதபோது, சிதம்பரதைபோய் கைது செய்வார்களா?  கைதுசெய்யமாட்டார்கள்!,     பிரதமரை விசாரிக்கமட்டார்கள்,  எப்படியும் இந்த 2- ஜி வழக்கை போர்த்தி மூடி,  விடுவார்கள், என்பதை  தெரிந்து கொண்டுள்ள  சாமி, "வேகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம்" என்று செயல்பட்டு வருவதாக தெரிகிறது! கருணாநிதிக்கு கனிமொழி,ராசா, தயாநிதி மூலம் பாடம் புகட்டியதுடன் தி.மு.கவையும் அகற்றியாகிவிட்டது! , நம்மாளை ஆட்சியிலும் அமர்த்த முடிந்தது!, காங்கிரசையும் வரும் தேர்தலோடு,காணமல் போய்விடும்  நிலையில் உள்ளது!    அப்புறம்  என்ன?  மனுதர்ம ஆட்சிதான் என்ற கணக்கோடு செயல்படுகிறாரோ என சந்தேகமாக உள்ளது!

Tuesday, 1 November 2011

தூக்குத்தண்டனை கண்ணாமூச்சு

  ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமான  'பெல்ட் பாம்'  யாரால் தயாரிக்கப் பட்டது?   என்பதைகூட கண்டு பிடிக்காத நிலையில், பெல்ட்பாம் செய்ய பேட்டரி வங்கிக் கொடுத்ததாகவும், அவர் வங்கிக் கொடுத்ததற்கு ஆதாரமான,    பேட்டரி வாங்கிய ரசீது 23  நாட்கள் கழித்து, அவரது சட்டை பையில் இருந்து எடுத்ததாகவும் போலிசு கூறிய  பொய்யின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.   23 நாட்களாக ஒரு சட்டையை   மாற்றாமலும்    துவைக்காமலும் வைத்திருக்கும் அப்பாவிப் பிள்ளை பேரறிவாளன் என்றுதானே ஆகிறது!?       போகட்டும், பேட்டரி [செல்] வாங்கினால்,  எந்த கடைக்காரன்    ரசீது போட்டு கொடுக்கிறான்?
 

        ராஜீவ்காந்தி படுகொலையில் சுப்பிரமணி சாமிக்கும், சந்திரா சாமிக்கும் தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது,  புடுங்கி கத்தை கட்டும்  இந்திய  புலனாய்வு புலிகள் லண்டனுக்குவிசாரிக்கப் போனார்கள்!  விமான நிலையத்தில் கொண்டுபோன ஆவணங்களை காணோம்,தொலைந்து விட்டது என்று கையை வீசிக்கொண்டு திரும்பி வந்தார்கள்! ஆவணங்களின்  பிரதிகளைக் கூடவா எடுத்துவைக்காமல்,அசால்டாக  ராஜீவ்காந்தி கொலைவழக்கை விசாரணை செய்தார்கள்?  இன்று இரட்டை அலைவரிசை ஊழலில், 'யோக்கிய சிகாமணி சுப்பிரமணி சாமி' என்னையும் வழக்கில் சேர்த்து விசாரிக்க கோருகிறார்!, ராஜீவ் கொலைவழக்கில் இவரையும் சேர்த்து விசாரிக்க யாருமே முன்வரவில்லை! 

      சுதந்திர  இந்தியாவில் இதுவரை தூக்கிலிடப் பட்ட அனைவருமே  தங்களை  தற்காத்துக் கொள்ளும் திராணியற்ற, சிறந்த வக்கீல்களை அமர்த்த முடியாத,  ஏழைகள்தான் என்பது எத்தனைபேருக்கு தெரியும்? ஒருவரின்  பொருளாதார  நிலையைப்  பொறுத்தே, அவருக்கு  நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நிலை  இருக்கும் நாட்டில், துக்குதண்டனை  நடைமுறையில் உள்ளதும் , தண்டனை தருவதும் நியாயமான செயலா? என்று கேட்க வேண்டிஉள்ளது!


      ராஜிவ்  கொலைவழக்கை  விசாரித்து,தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான, முன்னாள்  உச்சநீதி   மன்றத்தின்  நீதிபதிகளில் ஒருவரான கே.டி.தாமஸ் 12 09 .2011 -.அன்று   'ASIAN AGE '  பத்திரிக்கைக்கு  அளித்த பேட்டியில் கூறுகிறார்!      " என்னுடைய நீண்ட அனுபவத்தில் இருந்து உங்களை எச்சரிக்கிறேன். ஒரு குற்றவாளி எப்படி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க சாத்தியங்கள் உள்ளதோ, அதேபோல,  ஒரு  நிரபராதி  குற்ற்றவாளி என தண்டிக்கப்படும் சாத்தியங்களும் நடைமுறையில் உள்ளன!. இதற்கு வரலாற்றிலும்  ஒரு முன்னோடி  உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,  ஒரு முட்டாள் கூட்டத்தை திருப்திப்படுத்தும் நோக்கில்  குற்றம் சாட்டப்பட்டவர், குற்றமற்றவர்  என்பது ஐயமுற தெரிந்தும்,  ஒரு நீதிபதி மரணதண்டனை தீர்ப்பினை அளித்தார்!. அந்த நீதிபதியின் பெயர்,' போன்டியாஸ்.{pontitus }பிலதோஸ்' என்பதும்,  குற்றம்  சாட்டப்பட்டவர்,' ஏசுபிரான்' { yeshua the Nazarene } என்பதையும் யூகித்திருப்பீர்கள் " 
 
          இன்று  நம் மதங்களும், புத்தரும், ஏசுவும், காந்தியும்  போதித்த  மனித நேயம்  வீணாகிவிட்டது!  உண்மையான ராஜீவ்  கொலைகாரர்களை  காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம், முட்டாள் கூட்டத்தை திருப்திப்படுத்தும்  நோக்கம் ஆகியவற்றால், அப்பாவி தமிழர்களான,   பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகியோர்களை  தூக்குமேடைக்கு அழைத்து செல்ல துடிக்கிறார்கள்!!   மத்திய  அரசும்,  மாநில அரசும்  தமிழர்களின் உயிர் பிரசனையில் கண்ணாமூச்சு ஆடுகின்றன!