Tuesday, 15 November 2011

ஒரு ரோஜா தோட்டமும்,சாக்கடை நாற்றமும்.!

       ஒருவர்   ஆடம்பரமான, எல்ல வசதிகளும் உள்ள மாளிகையில்  அனைத்து வசதிகளுடன் இருக்கிறார். ஆனால் அவர் வசிக்கும் வீட்டை சுற்றி,குப்பைகளும்,அசுத்தக் கழிவுகளும்கொட்டி கிடக்கிறது. அதைபற்றிய கவலை, அக்கறை அவர்க்கு இல்லை. இப்படி இருப்பதால் என்ன நடக்கும்? விரைவில் ஈக்கள், கொசுகள் படையெடுக்கும்..., டைபாயிடு,மலேரியா,டெங்கு,காய்சல், மற்றும்  பலவித  நோய்தொற்று  ஏற்படும், ஆரோக்கியத்தை இழந்து மருத்துவமனைகளில் காலம் கழிக்கும் நிலை வீட்டில் உள்ளவருக்கு ஏற்படும்!  மற்றொருவர்,போதிய வசதி இல்லாத, ஆனால் சுற்றிலும் பூந்தோட்டம் உள்ள குடிசையில் வசிக்கிறார். அவரது நிலை எப்படி இருக்கும்? உடல்நலத்துடன் அமைதியான மன நிலையுடன் அவர் சந்தோசமாக இருப்பார்!     முன்னவர்,சுற்று சூழ்நிலைபற்றிய அக்கறை இல்லாதவர், தான் வசதியுடன் இருந்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவர், பின்னவர் தனது வசதிகளை பெரிதாக கர்தாதவர், சுற்றுசூழ்நிலை நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புபவர்!  
          நமது மக்களில் பலர் இப்போது, முன்னவரைபோல தான் , தனது, என்ற குறுகிய வட்டத்தை போட்டுகொண்டு, எவர் எப்படி இருந்தால் நமக்கென்ன? நாம் நன்றாக இருக்கிறோமா? அதுபோதும்! என்றசுயநலனுடன் வாழ்ந்து வருகிறார்கள்! தன்னை சுற்றியுள்ள சக மனிதனின் பிரச்சனை என்னா? சமுகத்தில் நிலவும் அவலங்கள் என்ன?  என்பதைப்பற்றி கவலை இன்றி இருப்பது நமக்கு நாமே  தேடிக்கொள்ளும் துன்பம் என்பதை முதலில் அவர்கள் உணரவேண்டும்!  இல்லை எனில்   உங்களது சுயநல எண்ணமே உங்களுக்கு தீமையை தேடித்தரும் என்பது மட்டும் உறுதியாகும்!
       தன்னை சுற்றியுள்ள சமுகத்தை புறக்கணிக்கும் எவரும், சிறந்தவர்களாக,வாழ்வாங்கு வாழ்ந்தவர்களாக,வையம் மதித்ததில்லை! வரலாறும் சொல்லவில்லை!!
                " பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
               கருமமே கட்டளைக் கல்."

     - வள்ளுவர் பாவம் பிறந்ததற்கு, நல்லதாக எதாவது சொல்லவேண்டுமே என்று இதுபோல பலதை சொல்லிவிட்டு,போய்விட்டார்!  நாம்தான் அத்தனை பின்பற்றுவது இல்லை!  வள்ளுவர் சொல்லுவதையே கேட்காத நம்ம மக்கள்  நாம் சொன்னால் கேட்பார்களா?  இருந்தும் சில நேரத்தில் மனது கிடந்தது தவிக்கும்!,சொல்லித்தான் பார்ப்போமே, ஊதுற சங்கை ஊத்திதான் பார்ப்போமே என்று நினைக்கும்!  அப்படியான நினைப்பு இன்று...அதன்  எதிரொலி, இந்த பதிவு!

10 comments:

 1. தனது, என்ற குறுகிய வட்டத்தை போட்டுகொண்டு, எவர் எப்படி இருந்தால் நமக்கென்ன? நாம் நன்றாக இருக்கிறோமா? அதுபோதும்! என்றசுயநலனுடன் வாழ்ந்து வருகிறார்கள்! தன்னை சுற்றியுள்ள சக மனிதனின் பிரச்சனை என்னா? சமுகத்தில் நிலவும் அவலங்கள் என்ன?///நிதர்சன உண்மை..

  ReplyDelete
 2. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 3. நெஞ்சு பொறுக்குதில்லையே, அதுதான் எனது இந்த ஆதங்கப் பதிவு! கருத்துக்கு, நன்றி நண்பா!

  ReplyDelete
 4. thank you for your kind information brother. iam busy now. i call you later!

  ReplyDelete
 5. தெரிந்து கொள்ளுங்கள். இதோ வியப்பான உண்மை தகவல்கள்.

  வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
  சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

  ****
  அதிசயத்தக்க‌ வரலாறு. இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித். இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் முதலில் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.. இறை தூதர் நிலவை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டிய நிகழ்வு
  ****


  **** ஒட்டுமொத்த இந்திய இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்க அறிவாளியொருவர்……. விடியோ விளக்கம் *****

  **** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள்.
  மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்……எல்லா சூழ்நிலைக‌ளிலும் அகிலத்தில் ஒவ்வொரு விநாடியும் அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல்.
  ****

  .

  ReplyDelete
 6. //வள்ளுவர் சொல்லுவதையே கேட்காத நம்ம மக்கள் நாம் சொன்னால் கேட்பார்களா? இருந்தும் சில நேரத்தில் மனது கிடந்தது தவிக்கும்!,சொல்லித்தான் பார்ப்போமே, ஊதுற சங்கை ஊத்திதான் பார்ப்போமே என்று நினைக்கும்! //

  பெரும்பாலும் இப்படி நினைத்தே சொல்கிறார்கள்.நன்று.

  ReplyDelete
 7. வாழும் சூழலைப் பொறுத்தே அமைகின்றன மனமும் குணமும். சுற்றுச் சூழலைப் பொறுத்து அமைகின்றன அமைதியும் ஆரோக்கியமும் என்பதை சரியாக ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளீர்கள். மனமுவந்த பாராட்டுகள்.

  ReplyDelete
 8. வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் நன்றி, சண்முகவேல் !

  ReplyDelete
 9. ரொம்ப திறமை உள்ளவரா வாஞ்சூர் இருக்கிறார்! இல்லையென்றால், கமண்டுலையே ஒரு கட்டுரை எழுத முடியுமா?

  ReplyDelete
 10. நிறைய ரோஜா பூக்களால் ஆனா பூங்கொத்து {போக்கே} கொடுத்ததுபோல் உள்ளது, உங்கள் பாராட்டு! நன்றி கீதா!!

  ReplyDelete