Wednesday, 16 November 2011

போதிதருமரும், காஞ்சி புத்தர் தெருவும்!

               ஏழாம் அறிவு திரைபடத்தின் மூலம் இப்போது தமிழர்களுக்கு, காஞ்சியில் பிறந்த போதிதர்மரை பற்றி தெரிந்து இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! போதிதர்மர்  போலவே காஞ்சியில்  தர்மபாலர், தின்னாகர் பிறந்தவர்கள் என்பதை யார்{ படம் எடுத்து }சொல்லபோகிறார்கள்?  போதிதர்மர் சீன நாட்டிற்கு போனார்.. வேறு பெயரில் அழைக்கபட்டார்..., குங்க்பு தற்காப்புக் கலைக்கு, அவரே பிதாமகன்!, என்பதற்கு ஆதாரமான வரலாறு என்னிடம் இல்லை!     ஆனால் போதிதர்மர்  ஒரிசாவில் உள்ள,ராஜகிரி என்ற இடத்தில் ஹர்ஷவர்தன மன்னரால் ஆரம்பிக்கப் பட்ட, நாலந்தா  பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார் என்பது குறித்த வரலாறு தெரியும்!   போதிதர்மர் மட்டுமல்ல,   அவரைப் போலவே காஞ்சியில் பிறந்தவர்களான, தர்மபாலர், தின்னாகர் ஆகியோரும் நாலந்தாவில் பேராசிரியர்களாக இருந்தவர்கள்தான்!         பெளத்த சமய தர்மத்தை பல்வேறு நாடுகளில் பரப்புவதில்,  நாலந்தா பல்கலை கழகத்தில் பயின்ற அறிஞர்களுக்கு பெரும் பங்குண்டு!     போதிதர்மர், தர்மபாலர், தின்னாகர் போன்றவர்கள் பௌததர்மத்தை போதிக்கும் பேராசிரியர்களாக உருவான காஞ்சி பகுதியில் அப்போது பௌத்தர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?  கி.பி.640 -வாக்கில் காஞ்சிப் பகுதிக்கு வந்த,  சீன யாத்திரிகர்,"குயுன்சங்" என்பவர் தரும் விவரம் இது:  " இந்த நாட்டில் 100 -சங்கிராமங்கள்பெளத்த மடங்கள்} உள்ளன. பதினாயிரம் பௌத்தத் துறவிகள் இருகின்றனர். சைவ,வைணவ,சமணக் கோயில்கள் சுமார் 80 இருகின்றன. திகம்பர சமணர் பலர் திராவிட நாட்டில் இருகின்றனர்" என்று தனது பயணக் குறிப்பில் குறித்துள்ளார்.  மற்ற எல்லா சமயதவர்களையும் விட அதிகமான பௌத்தர்களும், எல்ல சமயத்தவர்களின் கோயில்களை விட அதிகமான பெளத்த மடங்களும் இருந்து வந்ததை அறிந்துகொள்ள  முடிகிறது!           பௌத்தமும்  சமணமும்  நமது, 'புண்ணிய மதமான' இந்து மதம் எனப்படும் பக்தி மதத்தால் அளிக்கப்பட்டது. அதனுடன் நாம்  நின்றுவிடவில்லை.    பிறரது சமய மடங்களையும்,கோயில்களையும் அழித்து ஒழித்ததுடன்,   அவற்றை பலவந்தமாக கைப்பற்றி, நமது  தெய்வங்கள் உறையும்," புனிதக் கோயிலாக" ஆக்கிகொண்டோம்!    "அன்பே சிவம்" "அன்பே கடவுள்"  என்று இப்போதும் சொல்லிக் கொள்ளும் நாம்தான், கொல்லாமைத் தத்துவத்தை சொன்ன சமணத்தையும், 'அறிவே உண்மை மதம்' என்ற பௌத்தத்தையும் இந்திய மண்னில இருந்து அகற்றினோம்! இப்போதும்கூட, பாபர் மசூதியை இடித்துவிட்டு, அங்கே  ராமர் கோயிலைக் கட்டப் போராடிவருகிறோம்!   இந்திய இறையாண்மையைப்  பற்றி  நமக்கு கவலைஇல்லை,  நாடே கலவரமாவது பற்றிக் கவலை இல்லை, நாட்டின் முன்னேற்றம் குறித்தும் கவலை இல்லை  என்ற நிலையில் இருந்து வருகிறோம்!         இன்று காஞ்சி என்றால் நமக்கு நினைவுக்கு வருவது,    இரண்டு விசயங்கள்தான்! ஒன்று  பட்டு புடவை,. மற்றொன்று சங்கர மடமும்தான்!   காஞ்சியில் இப்பொது, "காமாட்சியம்மன் சன்னதித் தெரு" என்று  இப்போது அழைக்கப்பட்டு வரும் தெருவின் பெயர், "புத்தர் தெரு" என்று அழைக்கப்பட்டு வந்ததும், இந்த தெருவில் வசித்துவந்த பாலகிருஷ்ண முதலியார் வீட்டுக்கு பின்புறம் இருந்த தோட்டத்தில் இருந்து  இரண்டு புத்தர் சிலைகள் கண்டெடுக்கப் பட்டதும்   உங்களுக்கு தெரியுமா?   புத்தர் சிலைக்கு பதிலாக,  சிவனோ,புள்ளையாரோ கிடைத்திருந்தால்  என்ன நடந்திருக்கும்? நிலைமை எப்படியிருக்கும்? முஸ்லிம்கள் படையெடுப்பின் போது,இவைகள்  அகற்றப்பட்டவை   என்று, பத்திரிக்கைகள் வெளிச்சம்போட்டு, பரபரப்பை உண்டுபண்ணி இருக்கும்!  கண்டெடுத்த சிலைகளுக்கு பாலாபிசேகம் நடத்தப்பட்டு, புதிதாக  நன்கொடை வசூலிக்கப் பட்டு, ஒரு பிரமாண்டமான கோயில் வந்திருக்கும்!!


9 comments:

 1. காஞ்சிபுரத்தில் புத்தர்கள் வாழ்ந்தார்கள் என்பதும் அங்குள்ள மக்களுக்கு அறியப் படவில்லை, வந்தவாசியில் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ராணுவப் புரட்சி நடந்த முதல் கோட்டை உள்ளதை அந்த மக்கள் அறிந்துக் கொள்ளவில்லை... என்று அந்த ஊர்களின் வரலாறுகள் அந்த ஊர் மக்களுக்கே அறியாமல் இருக்கும் விஷயம் எண்ணற்றவை...

  ReplyDelete
 2. தோழர் அருமையான பதிவு


  ///போதிதர்மர் ஒரிசாவில் உள்ள,ராஜகிரி என்ற இடத்தில் ஹர்ஷவர்தன மன்னரால் ஆரம்பிக்கப் பட்ட, நாலந்தா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார்///


  மேலே நீங்கள் கூறியது போல் நாளந்தா தற்போதைய ஒரிசாவில் இல்லை அது பீகாரில் உள்ளது .

  ReplyDelete
 3. ஆராய்ச்சிகள்பலவிதம் அவர்கள் தோண்டி எடுத்தது ஒருபங்கு நீங்கள்கொடுத்தது கூடுதல் பங்கு
  ஆராய்ச்சிகள் ஓங்கி வளரட்டும்

  ReplyDelete
 4. அண்ணா..... ஒரு மதத்தில் இருந்து கொண்டு அந்த மதத்தை விமர்சிப்பதும், ஒரு மொழியை தாய் மொழியாகக் கொண்டு அந்த மொழியை தவறாக விமர்சிப்பதும் இந்து சமயத்தில் பிறந்த தமிழனால் மட்டும் தான் முடியும் ..... உங்களுடைய விவாதத்தின் படி சண்டை அனைத்துக்கும் இந்து சமயத்தை பின்பற்றும் நாம் தான் கரணம் என்று கூற வருவீர்கள் போல உள்ளது........ அன்பே கடவுள் , ஞானமே உண்மை மதம் , வேறு மதமே தேவை இல்லை என்று வாழ்ந்த கௌதம புத்தரை கடவுளாக்கி புதிய மதத்தை உண்டாகியது அவருக்கு செய்த அநீதி..... அது மட்டுமன்றி எமது நாடு வந்து பாருங்கள் அண்ணா அவரின் பெயரினால் செய்யப்படும் இன அழிப்பையும் , மத அழிப்பையும்...................... இதை எமது நாட்டில் வாழும் எந்த ஒரு பௌத்த சிங்களவனயாவது ஒத்துகொள்ள சொல்லுங்கள் பார்க்கலாம்.... இதுதான் நமக்கும் அவனுக்கும் உள்ள வித்தியாசம்.... நம்மை தாழ்த்திக்கொள்ள வேறு யாரும் தேவை இல்லை.. நாமே போதும்.... தவறாக ஏதும் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.....

  ReplyDelete
 5. நன்றி சூரிய ஜீவா ,வரலாற்றை நாம் மறந்து விட்டதால், தமிழர்களின் உண்மை வரலாறு திரிக்கபட்டும்,சிதைக்கப் பட்டும் வருகிறது!

  ReplyDelete
 6. ராஜகிரி இருப்பது பீகார்தான். அவசரத்தில் தவறாக குறித்துவிட்டேன்! அந்தோணி அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 7. கூடல் குணாவின் ஆசியும், சன்முகவேலுவின் பாராட்டும் "பாலோடு தேன் கலந்து பருகியதைபோன்ற" உணர்வை ஏற்படுத்துகிறது!

  ReplyDelete
 8. வைரவர் அவர்களுக்கு, நமது மதம், நம்ம ஆளு, நம்ம மொழி என்பதற்காக, தவறுகளை எற்றுகொள்வதும்,கண்டுகொள்ளாமல் இருப்பதும் நீதியான செயலா? தாங்க ஊசி என்பதற்காக கண்ணை குத்திக் கொள்வதைப் போன்றதல்லவா? சமன்செய்து சீர்தூக்க சொன்ன நம்ம வள்ளுவருக்கு எதிரானது இல்லையா? எனவேதான், நமது மதமே ஆனாலும், தவறாக எனக்குப்படுவதை சுட்டிக் கட்டுகிறேன்!. அதற்கும் இரண்டு காரணங்கள் இருக்கிறது. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரனும் நம்ம ஆளுதான் என்பதொன்று. மற்றொன்று, என்னுடைய மொழி, மதம்,இனம் ஆகியவைகளை சீர்படுத்தி செப்பனிடும் பொறுப்பும் கடமையும் எனக்கு இருக்கிறது என்ற தார்மீக உரிமையாகும்! தவிர மற்ற மதத்தினர் தவறு செய்கிறார்களே? என்பதற்காக நாமும் செய்வது சரியா? நமது தரத்தை தாழ்த்திக் கொள்வது ஆகாதா? மற்றபடி ஈழத்தில் நடந்த படுகொலைகளுக்கு மதம் மட்டுமே காரணமாக சொல்லமுடியாது! அதில் அரசியல் ஆதிக்கம், நுகர்வு கலாசாரத்தின் எதிர் விளைவாக தொன்மையான தமிழ் கலாச்சாரத்தை அழிக்கும் அவசியம் என்று பல விஷயங்கள்உள்ளன! வாய்ப்பு நேரும்போது,அது பற்றிய பதிவுகளை செய்வேன்!

  ReplyDelete