Saturday, 31 December 2011

அதுவும் இதுவும் அல்லாதது, இது !

             வள்ளுவர் சொல்லுவார்..., " பற்றுக பற்றற்றார் பற்றினை" என்று!   எந்த பொருள் மீதும் பற்று இல்லாதவர்களிடம் பற்று  வைக்க சொல்கிறார்!  அப்படி எதன் மீதும் பற்று இல்லாதவன் உலகில் உண்டா? என்றால், இறைவனைத் தவிர யாரும் இல்லை என்றுதான் சொல்லுவோம்.  புத்தர்கூட, இந்த கருத்தை ஒட்டியே ஆசையே நமது துன்பங்களுக்கு எல்லாம் மூல காரணம் என்று  அவர் வழியில் உபதேசித்துள்ளார்!  சிலர் இன்று அத்தனைக்கும் ஆசைப்படு என்று உபதேசித்து  வருகிறார்கள்! அனைத்துக்கும்   ஆசைபட்டால்  திகார் ஜெயிலில்  மீதும் ஆசை கொள்ள வேண்டியிருக்கும்! எய்ட்ஸ்மீதும், எல்ல நோய்கள்மீதும் கூட ஆசைவரும்!      எனவே ,நமது நியாயமான விருப்பங்கள் ஆசைகள்என்ன?  என்பதில் நமக்கு ஒரு தெளிவான பார்வையும்,திடமான முடிவும் அவசியம் இருக்கவேண்டும்! அதனை நோக்கிய பார்வையும் பயணமும் நமது வாழ்க்கைப் பயணமாக அமைத்துக் கொள்ள வேண்டும்!  சாமியாராக ஆகவேண்டுமா? உனது தேவைகளை குறைத்துக்கொள்! ஆசைகளை ஒதுக்கி,உன்னுள் அடங்கி ஆண்டவனைத் தியானி!  மாறாக, மற்றவர்களிடம் இருக்கும் அபரிமிதமான செல்வத்தையும் நீ வாங்கிவைத்துகொண்டு  சமுகத்தை சீரழிக்காதே!  சாமிகளையும் மாமிகளையும்  ஏமாற்றாதே!!


 
           சம்சாரியாக வேண்டுமா? உனக்கு மட்டுமின்றி,உன்னை சார்ந்து நிற்கும்  மனைவி, மக்கள்,உறவு ,நட்பு, அனைவரின் தேவைகளை நிறைவேற்றும் ஆற்றலை வளர்த்துக்கொள், ஆனந்தத்தை அனைவருக்கும் வழங்கிடும் வழியை கண்டுபிடி!ஆசைகளை பங்கிட்டு செலவிடு!!  எது வேண்டுமோ, அதனை தேர்ந்தெடு!  தேர்ந்தெடுத்த வழியில் செல்.! மாறாக  சென்று மனதை குழப்பிக் கொள்ளாதே! வாழ்கையை தொலைத்துவிட்டு வருத்தத்தை  வாழ்க்கையாக்கிக் கொள்ளாதே!


                 இரண்டு நிலையான  வாழ்க்கைப் பாதையில்,  ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து வாழ்வது தவறில்லை! ஆனால்  இரண்டு விதமான வாழ்க்கை மீதும் ஆசைகொண்டு வாழ்வதும், அவ்வாறு வாழ நினைப்பதும் சரியா? என்று எண்ணிப் பார்க்கவேண்டும்! இரண்டு விதமாகவும் வாழ்பவர்களை, பொய்யான,போலியான  வாழ்க்கையை  வாழ்பவர்களை  என்னவென்று சொல்வது?  வேடதாரிகள் என்பதா? நடிகர்கள் என்பதா? சாமியார்கள் என்பதா? ஆண்டவனின் அவதாரங்கள்  என்பதா?அல்லது ஆணும் அல்ல  பெண்ணும் அல்ல, எனபது போல இரண்டுமே இல்லாத போலி வாழ்க்கையை வாழ்பவர்கள் என்பதா?  சொல்லுங்கள்!


      இதுபோன்ற முரணான  வாழ்க்கையை வாழ்பவர்களை நம்பியும் ஏற்றுக்கொண்டும் இருந்தோம் எனில் நமது வாழ்க்கையை நாம்  நல்லவிதத்தில் அமைத்துக்கொள்ள  முடியாது., நலமாக நம்மால்   வாழ முடியாது! துன்பத்தை வலிந்து அழைத்துக் கொண்டு, வருந்துவதில்  பயன் இல்லை!  ஆண்டவனையும், ஆன்மீகத்தையும் துணைக்கு அழைத்தும் பயனில்லை!! அவற்றாலும் நமக்கு ஆவது ஒன்றுமில்லை.!

          எனவே, இந்த புத்தாண்டில்  புதிய சிந்தனைகளை கைகொள்ளுவோம்.!, புதுமைகளைப்  படைக்கும் மனிதர்களாக,  வலம் வருவோம்.!  பகுத்து  அறியும் பழக்கத்தை  வழக்கமாக்குவோம்!! அதுவே நமது வாழ்க்கையை வளப்படுத்தும் என்பதை அறிவோம்!
                   உண்மையான கல்வி எனபது  நமது ஆற்றலை,அறிவை, வாழ்வை, முன்னேற்றத்தை வளர்க்கும் கல்விதான்!  அத்தகைய  கல்வியாளர்களாக  நாம் உருவானால் மட்டுமே  நாம் வாழ்ந்த வாழ்க்கை நலமாகும். இல்லை யென்றால்  ஏன்  வாழ்ந்தாய்? என்று  இறைவன்கூட  நம்மை  கேட்பான்!

  " தெளிவான கல்வி கற்றால்,தேசமது  வசியமாகும்,
   பழியா மரியாதை பாவலர்கள் தன் வசமாம்!"
       - பாம்பாட்டி சித்தர்.

    "இருள்நீங்கி  இன்பம்  பயக்கும்  மருள்நீங்கி
     மாசறு காட்சி யவர்க்கு."
         - திருவள்ளுவர்,(மெய்யுணர்தல்  அதிகாரம்).

         ஒண்ணுமில்லைங்க,  சும்மா... அரசியல், கவிதையின்னு  பதிவு போட்டு  எனக்கே,  போரடிக்குது!   புத்தாண்டில் நம்ம  பதிவர்கள் மட்டுமின்றி,  எல்லோருமே  சில உறுதிமொழி  எடுப்பது  வழக்கம்!    நம்ம தரப்பு  ஆலோசனையாக ... சொல்லிதான்  பார்ப்போமே என்று நினைத்து   போட்டது, இந்த பதிவு!

  (பார்த்திபன் ) ' இதப் போடச் சொல்லி யாரு கேட்டாங்க?'
 (வடிவேலு ).  அய்யோ, அய்யோ..!    இதைபோய்  சீரியசா,  எடுத்துகலாமா?  விட்டு தள்ளுங்க..சார்!
Thursday, 29 December 2011

நமக்கு முன்பே.. நாத்திகம் பேசிய சித்தர்கள்!

         நமது  தலைமுறைக்கு முன்பு  வாழ்ந்த  நமது  இரண்டு தலைமுறைகளை  பற்றி மட்டுமே  நாம் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறோம். அவர்களின் பேச்சும்,செயலும் சிந்தனையும், எழுத்துக்களும்,அவர்களின் போராட்டமும் வாழ்க்கையும் நமக்கு  அச்சுகளில், ஒலிஒளி நாடாக்களில் கிடைப்பதும்  அதிகமாக புழங்குவதும்  காரணம் என நினைக்கிறேன். தவிர, நமது முன்னோர்களின்  வாழ்க்கை வரலாறுகளை  அறிந்து கொள்ளும்  ஆர்வம்  நமக்கு இல்லாததும் காரணமாக இருக்கலாம்!


         நாம் அதிகம் அறிந்துள்ள நமக்கு முன் வாழ்ந்த இரண்டு தலைமுறைகளில்  நமது பண்பாடு, வாழ்க்கைமுறை, , நமது வழிபாடு முறை ஆகியவைகள் குறித்து புரட்சிகர கருத்துக்களை, பொதுவுடைமை தத்துவங்களை, தமிழரின் தனித்தன்மை மற்றும் பெருமைகளை சொன்னவர்கள் பலரையும்  நாம்   நாத்திகர்கள் என்று  பொதுபெயரில்  அழைத்து வந்துள்ளோம்!  அவற்றிற்கு காரணம்  இன்றைய நமது  இறைவழிபாடு  மற்றும்  சம்பிரதாய சடங்குகளில்  நமக்கு உள்ள  மோகம்தான்!  இன்று நாம்  பூசை,புனஸ்காரங்கள், சம்பிராய  சடங்குகள்   என்று ஏற்றுக்கொண்டு, போற்றிவரும்  அனைத்துமே ஆரிய ஆதிக்கத்தினால் வந்தவைகள்தாம்!  அவர்களால்  திணிக்கப்பட்டு, தொடர்ந்து வலியுறுத்தப் பட்டு, நம்மை ஏற்றுகொள்ள செய்யப் பட்டவைகள்தான்!
 இவைகளால் நாம் அடையும் நன்மைகளை விட  அவதிகளும் தொல்லைகளும் அதிகமாகும்!   அனுபவித்த அனைவருக்கும் இது தெரியும்!   அதே நேரத்தில்  இன்றைய சம்பிரதாய,சடங்குகளால் வழிபாட்டு முறைகளால் யாருக்கு நன்மைகளும் பயன்களும் கிடைகிறது என்பதும் நாம் புரிந்துகொண்டு இருக்கிறோம்!


               நமது இனத் தாழ்வுக்கும் பொருளாதார வீழ்வுக்கும்,நமது பிரச்சனைகளுக்கும்  கூட  இன்றைய  நமது வழிபாட்டு முறைகள் காரணிகளாக உள்ளதாக கருதுகிறேன்! போகட்டும், இன்றைய வழிபாட்டு முறைகள்,பூசை புனஸ்காரங்களை  வலிந்து திணித்தும்,புகுத்தியும் வந்தவர்களான அன்றைய  பக்தி இயக்கத்தினரின் இத்தகைய  செயல்களை  நமது முன்னோர்கள்  எப்படியெல்லாம்  கிண்டல் செய்து, பழித்து, உள்ளார்கள் என்பதை அறிந்த  எனக்கு  ஆச்சரியம் தருகிறது!  அவர்கள் இன்று இருந்தால் அவர்களையும் நாம் நாத்திகர்கள் என்று  கண்டித்து  ஒதுக்கி இருப்போம்!  அவர்கள் அன்று  சித்தர்கள்,மெய்ஞானிகள்,என்று அழைக்கப் பட்டார்கள்!  மக்களை விட்டு அவர்களே ஒதுங்கி தனியாக வாழ்ந்தார்கள்! நம்மை வலிந்து, ஏற்றுகொள்ள செய்த நமது இந்து மதம்  அவர்களை தங்களது  மதத்தினராக இப்போது அடையாளப் படுத்தும்  கேவலத்தை வெக்கமின்றி, செய்துள்ளது!


         இந்து மதத்தை எள்ளி நகையாடிய, கண்டித்த;  நமது முன்னோர்கள்  பூசை, சடங்கு,சாஸ்திரம், போன்ற முட்டாள் தனமான  வழிபாட்டு நிகழ்சிகளை  எப்படியெல்லாம் கண்டித்து  நம்மை நல்வழிப் படுத்த  முயன்றுள்ளார்கள் என்பதை பாருங்கள்!,

     பூசை,பைசாசமடி,அகப்பேய் ,போதமே கொஷ்டமடி!
     ஈசன் மாயையடி,அகப்பேய்,எல்லாமும் இப்படியே!
     சரியை ஆகாதே,அகப்பேய்,சாலோகம் கண்டாயே!
     கிரியை செய்தாலும் அகப்பேய்,கிட்டுவது ஒன்றுமில்லை!

                         -  அகப்பேய் சித்தர்.

    சதுர்வேதம் ஆறுவகைச் சாத்திரங்கள் பல
    தந்திரம்,புராணங்  காலை சாற்றும் ,ஆகமம்
    விதம் விதமான வேறு நூல்களும்
     வீணான நூல்களே என்று ஆடுபாம்பே!

                   -  பாம்பாட்டி சித்தர்.

     பொயவேதம் தன்னைப் பாராதே- அந்தப்
     போதகர் சொற்புத்தி போத வாராதே!

                    -   காடுவெளி சித்தர்.

     பார்ப்பனர்கள் கட்டிய பாழான வேதத்தைச்
    சோதித்துத் தள்ளாடி குதம்பாய், சோதித்துத் தள்ளாடி!

                  -  குதம்பை சித்தர்.

    நேமங்கள் நிஷ்டைகள் வேதங்கள் ஆகம நீதி
    ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செபமந்திர யோகநிலை
    நாமங்கள் சந்தானம் வெண்ணீறு பூசி நலமுடனே
   சாமங்கள்  தோறும் இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே!

                - படினத்தார். ( சர்ப்பனையே-வஞ்சனையே)

   சாத்திரத்தைச் சுட்டு, சதுர்மறையைப் பொய்யாக்கி;
   சூத்திரத்தைக் கண்டு துயரறுப்பது எக்காலம்?

              -   பத்திரகிரியார்.          மேலே குறிப்பிட்டு பாடல்களை ( பாடங்களும்) பாடி உள்ள இவர்களே, மெய்யான ஞானிகள்!  நமது உண்மையான  முன்னோர்கள்!!    இவர்களுக்கு  இருந்த அறிவையும் , அனுபவத்தையும்   வைத்து மக்கள் மீதுள்ள அன்பாலும் அவர்களது நலத்தை கருதியும்  நம்மை நல்வழிப் படுத்தவும், நமது நல வாழ்வுக்கும்  இதுபோல பல அரிய போதனைகளை அளித்துள்ளனர்!  அவற்றை கடைபிடிப்போம், நல்ல முறையில் நமது வாழ்கையை அமைத்து கொள்ளவோம்! !

      அனைவருக்கும்  எனது  இனிய  நல்வாழ்த்துக்கள்!

Wednesday, 28 December 2011

ராகுல் காந்தியின் அரசியல் காதல்!

          ராகுல் காந்தி  வயசுக்கு  வந்துவிட்டார்.! அதுதாங்க, பக்குவம் மிக்க  அரசியல் தலைவராகி  விட்டார்  என்று திக் விஜய சிங் முதல் பிரதமர் மன்மோகன் சிங் வரை  சான்றிதழ் கொடுத்து விட்டார்கள்!  அடுத்த காங்கிரசின் தலைமைப் பொறுப்புக்கு மட்டுமின்றி இந்தியாவின் ஆட்சி தலைமைப் பொறுப்புக்கும் அவரை கொண்டுவரும் எண்ணத்துடனும்  காங்கிரஸ் கட்சி இருப்பது  தெரிகிறது!          ராகுல்ஜியும்  தனது தனித் தன்மையை, திறமையை,ஆளுமையை  கட்டுகிறேன் பேர்வழி என்று ஆங்கில ஊடகங்களுடன் உத்திரபிரதேச மாநிலத்திற்கு அடிக்கடி செல்கிறார்! சென்று எதாவது  ஏழை அல்லது விவசாயி வீட்டு ரொட்டியை  சாப்பிட்டும், குழந்தைகளை கொஞ்சியும், கட்டிலில் படுத்தும்  ஏழைகளின் தோழனாக காட்டிக்கொண்டு வருகிறார்!  போதாக்குறைக்கு, உத்திர பிரதேசத்து மக்களை  ஆளும் கட்சியான  பகுஜன் சமாஜ் கட்சியும், மாயாவதியும் பிச்சைக்காரர்களாக  ஆக்கிவிட்டதாக  குற்றம் சாட்டுகிறார்! பத்திரிகைகள்  தவறாமல் படத்துடன் செய்தி வெளியிட்டு  விளம்பரப் படுத்தி  வருகின்றன!         ராகுல் காந்திக்கு ஏழைகளின் பேரில் காதலும் கரிசனமும் வருவதற்கு காரணம்  உத்திர பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் காரணம் என்று சந்தேகம் இல்லாமல் நமக்கு தெரிகிறது! பிரதமர்களை உருவாக்கும் பெரிய மாநிலமான உ.பி.யில் பிரதமர் காதலுடன்,பிரமாதமான கனவு காணும்  ராகுல்ஜி  இதுவரை  தேசத்தின் ஜீவாதார பிரச்சனைகளிலோ, சர்ச்சைக்குரிய  அலைகற்றை ஊழல், தெலுங்கான போராட்டம், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், காமன்வெல்த் ஊழல், கருப்புப்பணம் வைத்துள்ளவர்கள் பற்றியோ, அயல் நாட்டில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வருவது குறித்தோ, லோக்பால் மசோதா குறித்து, மகளிர் இடஒதுக்கீடு  மசோதா, சிறுபான்மை மககளுக்கு இடஒதுக்கீடு, இந்தியாவை  அச்சுறுத்தும் மத தீவிரவாதம், வெடிகுண்டு பீதிகள்,  போன்ற  எந்த பிரச்சனையைப் பற்றியும்  தனது  கருத்தை  நிலைபாட்டை  அறிவிக்க வில்லை! 

    அதுமட்டுமின்றி, தமது பாட்டிஇந்திராகாந்தி, கொள்ளுத் தாத்தா நேரு வரை  காங்கிரஸ் காட்சி பெரும்பாலும் ஆண்டு வந்தும் இன்றும் நீடித்து வரும்  வறுமையை  பற்றியோ, வேலை இல்லாத் திண்டாட்டம், பட்டினி சாவுகள்,விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்னை என பலவற்றிற்கும்   கூட கருத்துடையவராக  தெரியவில்லை!  இருந்தும், அரசியல் மேல் இப்போது அதிகம் காதல் கொண்டு செயல்பட்டு வருகிறார்!

         கண்ணதாசனின் கவிதை வரிகள் இப்படி சொல்லுகிறது:

      "  நாடகங்கள் ஆடுமாறு
            நாயகன்தன் கட்டளை!
        நாடகங்கள் எனும்பேரில்
            நடப்பதுதான் எத்தனை?
       அன்பு ஒன்று  செய்யுமாறு
               அண்ணல் இட்ட  கட்டளை!
       அன்புஎன்னும் வாள்கொண்டு
               ஆள் அறுப்போர் எத்தனை?"

      ராகுல்ஜி,   ஏழைகளின் வீடு தேடிச் சென்ற செய்திகளை  படிக்கும்போதும்,அவரது அரசியல் சேட்டைகளை நோக்கும்போதும்  எனக்கு மேலே குறிப்பிட்ட கவிதை வரிகளே நினைவுக்கு வருகிறது!        இதுவரை பாரதிய ஜனதா கட்சி ,முலாயம் கட்சி,மாயாவதி கட்சி என்று தேர்தலுக்கு தேர்தல் அணிமாறி  அரசியல் நடத்திய, அஜித்சிங்  கட்சியுடன்  கூட்டணி வைத்துக் கொண்டு, கூட்டணிக்கு அட்சாரமாய் விமானதுறை மந்திரி பொறுப்பும்  வழங்கி,  உ.பி.யில்  தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல்ஜி,போன்ற வாரிசு ராஜாக்களின்  அரசியல் வினோத,விசித்திர, செயல்களை  எண்ணி அழுவதா? ஆதங்கப் படுவதா? ஆவேசம் கொள்வதா? என்றே தெரியவில்லை!   Monday, 26 December 2011

காந்தி,இந்திராவை சுட்டவர்களும் இந்தியாவை சுடுபவர்களும்!

         சுதந்திரம் பெறும்வரை  மகாத்மா காந்தியின் உயிருக்கு  இந்தியர்களால் மட்டுமின்றி, ஆங்கிலேயர்களாலும் ஆபத்து நேரிடவில்லை! சுதந்திரம்  அடைந்து ஆறு மாதங்களில் காந்தி, இந்துமத வெறியன் நாதுராம்  கோட்சேவால் சுட்டு சொல்லப் பட்டார்!      ஆர்.ஆர்.எஸ்.தொடர்பும்,  வீர் சாவர்கர் பின்னணியுடனும்  செயல்பட்ட  நாதுராம் கோட்சே என்பவன் மகாத்மா காந்தியை சுடும்போது, தனது கையில்  "இஸ்மாயில் "என்று  முஸ்லிம் பெயரை பச்சை குத்தி இருந்தான்.!    முஸ்லிம் ஒருவனால் காந்தி சுடப்பட்டு,  இறந்ததாக   கருதப்பட வேண்டும்..,!   இந்துக்களுக்கும்   முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் வரவேண்டும், ஒருவருக்கொருவர், வெட்டிக்கொண்டு  சாக வேண்டும் !!  என்ற  படுபயங்கரத் திட்டமுடன்             காந்தி படுகொலை சம்பவம் நடந்தது! 
       காந்தியை  படுகொலையை  செய்தவர்களுக்கு,    பாகிஸ்தான்  தனி நாடக  பிரிந்து போனதும்,  பாகிஸ்தான்   ஒரு முஸ்லிம் நாடு  என்றும்  மதசார்புள்ள நாடு என்றும்  பிரகடனப் படுத்திக் கொண்டதுபோல, " இந்தியா ஒருஇந்துநாடு" என்று அறிவிக்காமல்  போன வருத்தமும்  இருந்தது! காந்தி உயிரோடு  இருக்கும்வரை அது நடக்காது என்ற  கோபமும் அவரது படுகொலைக்கு காரணமாக அமைந்தது! 
 
 
 
      இந்திராகாந்தி படுகொலை அவரது பாதுகாப்பு படையில்  இருந்த  'பியாந்த் சிங்','சத்வந்த் சிங்' என்ற சீக்கியர்களால்  நடைபெற்றது. காரணம் இந்துமதத்தில் இருந்தும் முஸ்லிம் மதத்தில் இருந்தும் வேறுபட்டு , தங்களுக்கு என்று புதிய மதமும் கொள்கைகளும்,நடவடிக்கைகளையும்   கொண்டிருந்த சீக்கியர்களின் புனித இடமும் பொற்கோவிலும்  ஆன இடத்தில்  இந்திய ராணுவத்தை இந்திராகாந்தி அனுப்பி நடவடிக்கை எடுக்கச் செய்தது.! 
 
 
 
       'ஆப்ரேசன் ப்ளூ ஸ்டார்'  என்ற பெயரில், அமிர்தசரஸ் பொற்கோவிலில்  இந்திய ராணுவம் புகுந்து தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது.    பொற்கோவிலில் ராணுவம், "பூட்சு" காலுடன்  நுழைந்து..  "காலிஸ்தான்" கோரிப போராடிய சீக்கியர்களை சுட்டுகொன்றது.!   இத்தனைக்கும் இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றவர்கள்,   இந்திராவால்    தீவிரவாதிகளாக   அறிவிக்கப்பட்டு,  சுட்டுக் கொல்லப்பட்ட   " பிந்தரன் வாலே" போன்றவர்களை  அரசியல்  காரணங்களுக்காக  வளர்த்து விட்டவரே, பயன்படுதியவரே  இந்திரா  காந்திதான்!   
 
                                          
 
                   தனக்கு பிரச்சனை என்று வந்தவுடன் தன்னால் வளர்க்கப் பட்டவர்களை  தீர்த்துக்கட்ட  ராணுவத்தை,    அதுவும்  அவர்கள்   புனித, வழிபாட்டுதளமாக  கருதும்,    பொற்கோவிலில் நுழைந்து, தாக்குதல்  நடத்தியதை  சீக்கியர்கள்  மன்னிக்க தயாராக இல்லை!    விளைவு?   தனது சீக்கிய பாதுகாப்பு அதிகாரிகளால் இந்திரா காந்தி   சுட்டுகொல்லப்  பட்டார்! 
 
 
 
              இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்திய வரலாறில் பெரும் அதிர்ச்சியையும்   மாற்றத்தையும் எற்படுதியவைகள்!  இந்திய மதவாதிகள் குறித்த தெளிந்த பார்வையையும் படிப்பினையையும் தருபவைகள்! இந்தியாவின் முன்னேற்றம், பொதுஅமைதி, வளர்ச்சி, தேச பாதுகாப்பு, ஆகியவைகளுக்கு என்றுமே "மதம்" உதவாது! என்பதை நிருபித்த, நிதர்சன உண்மைகள் ஆகும்!     மக்கள் நலனுக்கு மதங்களால்   நேரிடும்  அபாயத்தை தெரிவிப்பவைகள்!   மேலும் மதங்களையும்  மதவாதிகளையும்  அரசியலில்  இருந்து அப்புறப் படுத்தவும், அவர்களிடம் இருந்து ஆட்சியாளர்கள்   விலகி  நிற்கவும்   சொல்லித் தரும் பாடங்கள்....  காந்தி,   இந்திராகாந்தி படுகொலைகள்! ! 
 
 
 
                  இந்த பாடத்தையும் படிப்பினையையும்  ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ளவில்லை, அறிந்து வழிநடத்தவில்லை என்பது கசப்பான உண்மையாக உள்ளாது!    அன்றி, ஊழல்,கருப்பு பணம், போன்ற மோசமான செயல்களை தடுத்து நிறுத்தி, மக்களையும் நாட்டையும் வழி நடத்த வேண்டிய இந்திய ஆட்சியாளர்கள்,    இன்று அவைகளை வளர்க்கும், ஊக்கப்படுத்தும்   கீழ்த்தரமான செய்கைகளில் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடு!    இதோடு மட்டுமின்றி, மாநிலங்களுக்குள் மோதலை நீடிக்க விட்டும், மதவெறியை வளர்த்தும் வருவது, இந்திய இறையாண்மைக்கு  ஆபத்து விளைவிக்கும் செயலாகும்!  காந்தியைப் போல,  இந்திரா காந்தியைப்  போல,    இந்திய தேசியத்தை  சுட்டு... ,இடுகாட்டுக்கு அனுப்பும் அறிவீனம் ஆகும்!
 

 
       இப்போதுதான் ஆரம்பித்தது போலுள்ளது. ஆயினும் இது எனது ஐம்பதாவது பதிவு!   உங்களது ஆதரவை வேண்டுகிறேன்!
 
 
 
 

Saturday, 24 December 2011

விவேக சிந்தாமணியும் அவிவேக சிந்தாமணியும் தெரியுமா?

              மனிதன் எப்படி வாழவேண்டும் என அறிவுரைகளை, வாழ்வியலை சொல்லும் கவிதைநூல் ஒன்று உள்ளது! விவேக சிந்தாமணி என்று பெயர்! அந்த பழமையான நூலில் பல்வேறு கருத்துகள் உள்ளது!

              உதாரணத்துக்கு ஒன்று கீழே:

                   ஆபத்துக்கு உதவாத பிள்ளை
                            அரும்பசிக்கு உதவாத அன்னம்;
                    தாபத்தை போக்கா தண்ணீர்,
                             தரித்திரம் அறியா பெண்டீர்;
                   கோபத்தை அடக்கா வேந்தன்,
                                குருமொழி கொள்ளா   சீடன்;
                    பாவத்தை போக்கா தீர்த்தம்,
                                 பயனில்லை ஏழும்தானே!
                      இதைபோலவே, வாழ்க்கையை சிறந்த முறையில் அமைத்துக் கொள்ளாமல், மனம்போன போக்கில் வாழந்து... வருத்தப்படும் கவிஞர் ஒருவர் எப்படியெல்லாம் வாழக் கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று அவிவேக சிந்தாமணி என்ற தலைப்பில் கவிதைகளை எழுதிஉள்ளார்!
  பொதுவாக யாரையாவது  முன்வைத்துதான் அறிவுரையோ,உபதேசமோ செய்ய இயலும்!  அவ்வாறு யாருக்கு உபதேசிப்பது என்பது கவிஞருக்கு தெரியவில்லை போலும்!  அதனால் என்ன?  இருக்கவே இருக்கிறான், இறைவன் என்று  ஒருவன்!   என்று நினைத்து,  அதிலும் அன்புகொண்ட அன்னையைப் போலுள்ள, மதுரை மீனாட்சியிடம்  முறையிடுவது போல  நினைத்து,  தன்னைப்பற்றி புலம்புகிறான்!  அவன் புலம்பலில்  அவனது உள்ளத் துடிப்பு தெரிகிறது! ஆதங்கம் தெரிகிறது!  அவனது துன்பமும் அனுபவமும் தெரிகிறது! எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் கூட தெரிகிறது!  அவன் எழுதிய  அவிவேக சிந்தாமணி  எனக்கும் பிடித்தவைகள்  ஆகும்!  காரணம்  எனது வாழ்க்கையும் நிலையம் கூட கவிஞரின் வாழ்க்கையையும் நிலையையும் ஒத்திருக்கிறது!               கவிஞர் எழுதிய  அவிவேக சிந்தாமணியில்  இரண்டு பாடல்களை  கீழே பாருங்கள்:
                      
பாடல் ஒன்று }               
                                 திருடனும் அரகரா சிவசிவா,
                                           என்றுதான் திருநீறு பூசுகிறான்!
                                 சீட்டாடும் மனிதனும் தெய்வத்தின்                                                                                                   பேர்சொல்லி  சீட்டை புரட்டுகிறான்;
                                 முரடனும் அரிவாளில் காரியம்
                                          பார்த்தபின் முதல்வனை கூவுகிறான்,
                                 முச்சந்தி மங்கையும் முக்காடு
                                          நீக்கையில் முருகனை வேண்டுகிறாள்;
                       
                                  வருடுவாருக்கு எல்லாம் வளைகின்ற தெய்வம்
                                            என் வாழ்க்கையைக் காக்கவில்லையே!
                                 மலர்கொண்ட கூந்தலை தென்றல் தாலாட்டிடும்
                                                 மதுரை மீனாட்சி உமையே?

பாடல் இரண்டு}
                                    தான்பெற்ற பிள்ளையை ஏன் பெற்றோம்
                                           என்றுதான் தாயன்று மாண்டு போனாள்!
                                    தந்தையும் இப்பிள்ளை உருபடாது என்றுதான்'
                                            தணலிலே வெந்து போனான்!
                                   ஊன்பெற்று யானுமோர் உயிர்கொள்ள வைத்தவன்,
                                             உயரத்தில்  ஒளிந்து கொண்டான்!
                                   உதிரத்தின் அணுவிலே தமிழன்னை மட்டும்தான்
                                             கருவாக வந்து நின்றாள்!

                                  வார்கின்ற கவியன்றி வேறொன்றும் இல்லையே,
                                            வைகையில் பூத்த மலரே!
                                  மலர்கொண்ட கூந்தலை தென்றல் தாலாட்டும்
                                            மதுரை மீனாட்சி உமையே?             எனது நெஞ்சில் நிழலாடும் கவிதைகளில் இவைகளும் உண்டு!  விவேக சிந்தாமணி  பழைய பாடல்கள் எனபது தெரியும் ஆனால் அதை எழுதியது யாரென்று  எனக்கு தெரியாது!    அவிவேக சிந்தாமணியை எழுதியது  யாரென்று தெரியும்!  அவனது பெயர்  முத்தையா என்பதாகும்!  சிறுகூடல் பட்டியில் பிறந்த முதையாதான்,  "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு'' என்ற பாடலையும் எழுதியவன்!
                           கிருஸ்துமஸ் வருது, ஆங்கில புத்தாண்டு வருது.   அதனால....  எல்லோருக்கும்  எனது  இனிய வாழ்த்துக்களை  சொல்லிக் கொள்ளகிறேன்!  அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்!!Thursday, 22 December 2011

நாயால் தமிழுக்கு கிடைத்த நல்ல கவிதை!

             தமிழ் கூறும் நல்லுலகத்தில் அவனுக்கு என்று ஒரு இடம் உள்ளது! கவிதைகள்,சினிமா பாடல்கள்,நாவல்கள் என்று எழுதி குவித்த அந்த குழந்தை மனம் கொண்ட கவிஞரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் எனலாம்!  அன்பும் கருணையும் மிகுந்த அவனை ஏமாற்றியவர்கள் ஏராளம்.!  மனிதர்களிடம் அவன்  எதிர்பார்த்த  நட்பும்,அன்பும்,நன்றியும்   கிடைகாத காரணத்தாலோ,   என்னவோ, அவனொரு நாயை வளர்த்து வந்தான்!.  அந்த நாயும்  அவன்மீது  அலாதி பிரியத்துடன் பழகிவந்தது! " சீசர்" என்று பெயரிட்டு அழைத்து வந்த, அவனது  நாய்  ஒருநாள் இறந்துவிட்டது. !  அதன் இறப்பையும் பிரிவையும்  அவனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை!

            நாயின் பிரிவால் துடித்த அவனுக்கு அந்த நாயைப் பற்றி எழுதத் தோன்றியது!     தமிழ்மகளின் ஆசியும் அருளும் பெற்ற  அவன்... அதையும் ஒரு கவிதையாக வடித்து, இறந்த நாய்க்கு  கண்ணீர் அஞ்சலியாக படைத்தான்!   கொஞ்சி விளையாடிய  அவனது நாயால்   நல்ல கவிதை ஒன்றும் தமிழுக்கு கிடைத்தது!   கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிதை பாடும் என்பது உண்மையா? என்று தெரியாது! ஆனால்,   தமிழ் கவியின் வீட்டில் வளர்ந்த   நாயாலும் தமிழுக்கு ஒரு நல்ல  கவிதை கிடைக்கும் என்பது  தெரிந்தது!     நாயால் நற்றமிழுக்கு கிடைத்த கவிதை  இதுதான்:

                       பன்றிக்கு மலமே தீனி,
                                   பருந்துக்கு பிணமே தீனி;
                       கன்றுக்கு புல்லே தீனி,
                                     கழுதைக்கு ஏடே தீனி,
                        குன்றத்துப் பாம்புக் கெல்லாம்
                                    குழி எலி,தவளை தீனி!
                        என்றைக்கும் தீனிக் கென்றே,
                                   இவை தந்தான் தேவஞானி!
           
                        பன்றியை வளர்த்துப் பார்த்து,
                                  பருந்துக்கும் உணவு போட்டு;
                       கன்றையும் வைத்துக் காத்து,
                                  கழுதைக்கும் காவல் நின்று;
                       குன்றத்து பாம்பையெல்லாம்,
                                 கூடவே வைத்து பார்த்தும்
                       நன்றியைக் காணாதாலே,
                                  நாய் ஒன்றை வாங்கி வந்தேன்!
    
                      சீசர்'ரென்று அந்த நாய்க்கு,
                                 செல்லப் பெயரிட்டு அழைத்தேன்!
                       ஆசையாய்  எடுத்து கையில்,
                                   அணைத்து  மகிழ்வேன் நெஞ்சில் !
                       சீசரின் நேசத்தை பெற்றதாயின்
                                பாலிலும் கண்டேன் இல்லை!
                       தேசத்தை நேசிப்போருக்கு தேவை
                                  ஒரு நாயின் நெஞ்சம்!

                         வாலிலே நன்றி சொல்லும்,
                                   வாயில்லா பிள்ளை ஆகும்!
                          காலிலே அன்பு காட்டும்,
                                  கண்ணிலே உறவு காட்டும்;
                         தோலிலே  முளைத்து எழுந்த,
                                  ரோமமும் தோழன் ஆகும்!
                          வேலினால் தாக்கினாலும்-என்,
                                   தான்  விழுந்து  சாகும்!

                           வளர்த்தவன் சிரிக கின்றானா?
                                   வாய் விட்டு அழுகின்றானா?
                            தளர்ச்சியில் விழுகின் றானா?
                                    தனிமையில் குமைகின்றானா?
                            கிளர்ச்சியில் எழுகின் றானா?
                                    கேலியில் சமைகின்றானா?
                            உளத்தில் உள்ளது  எல்லாம்,
                                     உணர்வது நாயின் நெஞ்சம்!

                              குடத்திலே இடுமுன் விரைந்து,
                                       தொடர்ந்து வந்து சோற்றை;
                              வெடுக்கென பறிக்கும்;-மாந்தர்
                                         விழுங்கிய பருக்கை உள்ளே,
                              படுக்குமுன் கேலி பேசும்,
                                         மானிடப் பதர்கள் போல,
                            நடக்குமோர் குணம் இல்லாத
                                        நாய் எந்தன் சீசர் குட்டி!

                           அன்னையே உன்னை கேட்பேன்,
                                      அடுத்ததொர் பிறவி உண்டேல்;
                             என்னையும் நாயாய்ப் பெற்று,
                                      இத்தலை  கடனை தீர்ப்பாய்!
                             தன்னையும் உணர்ந்து ,தன்னை
                                       தழுவிய கையும் காக்கும்;
                             மன்னவன் பிறப்பு நாய்தான்!
                                       மனிதராய் பிறப்பது அல்ல!!
                            
                   எழுதியது கவியரசு கண்ணதாசன்!   இறந்தது அவர் வளர்த்த நாய்தான்!   என் நெஞ்சில் நிழலாடும் கவிதைகளில் இதுவும் ஒன்றாகும்! 

 

              நாயைப் பற்றி நம்மிடம்  அனேக தகவல்கள்  இருக்குதுங்கோ...,  மனிதர்களைப் பற்றி ஆய்வு செய்ய பயந்து  நாய்களைப் பற்றி ஒரு தருணம் ஆய்வு செய்கிறேன் என்று கிளம்பி.. அப்புறம், நாயிடம் கடிபட்டு, வடிவேலு கணக்கா புலம்பியதெல்லாம் உண்டுங்க! நமக்கு " நாயபாசம் " இருப்பதால் தான் இந்த கவிதை கூட மனசுல" பச்சக்குன்னு" ஒட்டிகிட்டது.! 

        
  

Wednesday, 21 December 2011

ஜெயலலிதாவின் அதிரடியும்.., சசிகலா{கும்பலின்} எதிர்காலமும்.!

            போயஸ் தோட்டத்தில் இருந்தும்   கட்சியில் இருந்தும்  ஜெயலிதாவின் இனிய தோழி, ஜெயலலிதாவால் வெளியேற்றப் பட்டுள்ளார்!     அவரது உறவினர்களும்  படை பரிவாரங்களும் கூட அவருடன் வெளியேற்றப் பட்டுள்ளனர்!  அ,தி.மு. க-வில் மட்டுமின்றி அரசியலை கவனித்து வருபவர்களும்   ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கையை, சசியின் வெளியேற்றத்தை வரவேற்று உள்ளனர்!   முன்பு ஒருமுறையும் ஜெவுக்கும்,சசிக்கும் பிரச்னை ஏற்பட்டு, சசி வெளியேற்றப் பட்டு  இருக்கிறார்! ஆனால் விரைவிலேயே    சமரசமாகி,    மீண்டும் போயஸ் தோட்டத்திற்குள் நுழைந்து, முன்பைவிட செல்வாக்குடனும், அதிக சாமர்த்தியத்துடனும்  அவரால் {சசியால்}  செயல்பட முடிந்தது!    இப்போதும் அவரால் மீண்டும் ஜெயாவிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று தோன்றுகிறது காரணம்  ஆட்சி,அதிகாரம்  செல்வாக்கு ஆகியவைகளை அனுபவித்த சசிகலாவும்  அவரது படை, பரிவாரங்களும்  அவைகளை இழந்து விட்டு புதிய சூழலில்  தொடர்ந்து வாழ்வது இயலாத காரியம் என்பதுதான்!


         மதுரை தினகரன்  பத்திரிக்கை அலுவலகத்தை கொளுத்தி, மூன்று பேர்கள் செத்தபிறகும், அறிவாலயத்தில் இருந்து சன் டி.வி.அலுவலகத்தை காலி செய்ய வைத்த பிறகும், மத்திய அமைச்சர் பதவியை பறித்து, ஆண்டிமுத்து ராஜாவிடம்  கொடுத்த பிறகும் கூட  கருணாநிதி குடும்பத்துடன்  தயாநிதியும்,கலாநிதியும் சமரசம் ஆனதற்கு காரணம்,  அவர்கள் ஆட்சி அதிகாரத்தை சுவைத்து இருந்ததும் அதில் கிடைக்கும் ஆனந்தமும் தான்!   ஒருமுறை பதவி சுகத்தை-அதிகார சுகத்தைக்  கண்டவர்களுக்கு அதனை லேசில் விட்டுவிடும் எண்ணம் இருப்பதில்லை என்பதே நடைமுறை உண்மையாகும்!  ஐந்து முறை முதல்வராக இருந்த  பழுத்த, முதிர்ந்த,அரசியல்வாதியான முன்னாள் முதல்வரான  கருணாநிதி,  " நான் கண்ட கனவெல்லாம் போச்சே" என்று அரற்றுவதற்கும்,ஆதங்கம் கொள்வதற்கும் காரணம் இந்த அதிகார வெறியே!  அதிகார வெறிக்கு ஆளானவர்கள் எளிதில் அதிகாரத்தை விட்டவிட்டு இருப்பதில்லை! சசிகலாவும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்பதே எனது கருத்தாகும்!            ஆகவே, ஜெயலலிதாவை சமாதானப் படுத்தும்  திரைமறைவு வேலைகள் தொடர்ந்து நடக்கும்! சரணாகதி அடையும் நிலையை சசி கும்பல் மேற்கொள்ளும்!  ஜெயலலிதா எதிர்வரும் நாட்களில் தனது நிலைபாட்டில் உறுதியுடன் இருப்பாரா? அல்லது, ஆருயிர் தோழி,ஆசை தோழியின் மீது மீண்டும் அன்புகொண்டு  சேர்ப்பாரா? என்பது இப்போது தெரியாது! ஆனால் மீண்டும் சசிகலா கும்பலை தன்னுடன் சேர்த்துக் கொள்ள ஜெயலலிதா முன்வந்தால், தன்னை  தாழ்த்திக் கொள்வதுடன்  தமிழ் நாட்டை தாழ்த்தும் செயலையும் செய்கிறார்  என்று நம்பலாம்!                 நாயைப் போல நன்றி வேண்டும், விசுவாசம் வேண்டும் என்று நாமெல்லாம் ஆசை படுகிறோம்,.   விரும்புகிறோம்!  நாயின் மற்றொரு குணம்  என்ன தெரியுமா?  நாம் வளர்க்கும் நாயை , கோபத்தில் அடித்தாலும்,துன்புறுத்தினாலும் கூட  அப்போதைக்கு மட்டும் சிறு எதிர்ப்பை-வெறுப்பைக் காட்டிவிட்டு, பிறகு நம்மிடமே புகலிடம் தேடி மீண்டும் வந்துவிடும்!

           நிழலாக ஆதிக்கம் செலுத்துபவர்களும்  , அதிகாரத்தை சுவைத்தவர்களும், நம்மிடம் அன்பு காட்டுபவர்களும்   கூட இந்த வகையினர்தான்!     நாம் வளர்க்கும் நாய்களைப் போலவே,   போக்கிடம் இல்லாதவர்கள்!!


Saturday, 17 December 2011

வைகை அணை பிரச்சனைக்கு வாருங்கள்!

              நம்ம மாப்பிள்ளைக்கு மதுரையிலே  பொண்ணு அமைஞ்சது!  மாப்பிள்ளே, சுத்த தங்கம்.  இந்த காலத்து விடலைகளைப் போல இல்லை! கல்யாணத்துக்கு அப்புறம்தான் காதல், பெண்வாசனை, தாம்பத்தியம் என்று கட்டுக் கோப்பாக இருந்தவரு...  அப்படிப்பட்ட  மாப்பிளைக்கு கல்யாணம் முடிந்ததும் காதல் பொங்குது! புது பொண்டாடியிடம் தன்னோட ஆளுமையை காட்டவும், அன்பை கொட்டவும், ஆசையை தீர்த்துக்கவும் ஆளாய் பறக்குறார்; தவியாய் தவிக்கிறார்!  போதாத குறைக்கு கல்யாணம் முடிந்ததும் மறுவீடு அழைப்பு, விருந்து உபசாரம் என்று மாப்பிளையை  மனப்பொண்ணு பொறந்த வீடு இருக்கும் மதுரைக்கு கூட்டிட்டு போயிடறாங்க. அங்கே போனாலும் பொண்ணோட அன்பா பழக முடியலை! பொண்ணோட சிநேகிதிங்க, உறவு காரங்க,  அக்கம் பக்கம்  தெரிஞ்சவங்க  என எல்லோரும் வந்து பேசியும்,கேலி கிண்டலும் செய்தும்  சந்தோசமா இருகிறாங்க..
      நம்ம மாப்பிளையிடம் வேறு  குசலம் விசாரிக்கிறதும், உத்தியோகம், வருமானம் பற்றி கேட்டு தெரிஞ்சுக்கறதும் என்று நடக்குது! இடையிடையே,  பலகாரம் சாப்பிடுங்க..., பழம் சாப்பிடுங்க.., காலை சிற்றுண்டி ஆச்சா? சாப்டீங்களா? என்று விசாரிப்பு வேறு நடக்கிறது!                                                                                    " நெய்யில் பிணைந்த பலகாரம்,
                             நித்தம் நித்தம் உபசாரம்!"


            பாவம், மாப்பிள்ளை!   அவருக்கு அதுவா,  இப்போ... முக்கியம்?

          புது பொண்டாட்டியை கொஞ்சணும்,  தனிமையில் அவளை ஆரத் தழுவி ஆலிங்கனம் பண்ணனும்! அதாங்க... சில்மிஷம் பண்ணனும், என்று மனதும், உடம்பும் துடியாய் துடிக்குது! ஆனால் சந்தர்ப்பம்தான் கிடைக்கலை!
    நம்ம மாப்பிள்ளை படுற   தவிப்பு, மதுரை   பொண்ணுக்கும் தெரியுது!  குறவன் பாஷை குறத்திக்கு தெரியாமலா இருக்கும்?  ஒருவழியா..   தனிமையான சூழலை  மாப்பிள்ளைக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறாள்!       தனிமையான சூழலை மட்டுமா ஏற்படுத்தி கொடுக்கிறாள்? தன்னையே கொடுக்கிறாள்! இன்பத்தை கொடுப்பதுடன்,அவளும் இன்பத்தைப் பெறுகிறாள்! இவைகள் எங்கே நடக்கிறது தெரியுமா?  வைகை அணையில்  அங்கே  இருவரது அன்பும் காதலும் நதியைப்போல பொங்கி பிரவாகமாக  பெருகுகிறது! 


   

                             தையல் அருகில் இருந்தாலும்,
                                    தழுவிட கைகள் துடித்தாலும்;
                            பையல் பலரின் சூழ்நிலையால்,
                                   பசியால் ஏங்கும் வாழ்வுற்றேன்!
                            சைகை தெரிந்த புதுமனைவி,
                                   சாகசத்தால் வழி கண்டாள்!
                            வைகை அணையைப் பார்த்திடுவோம்
                                   வருக! என்றாள்; பின் சென்றேன்!
               
                            கையால் அணையின் கரைகாட்டி,
                                   கனிவாய் தனிமை இடம் கூட்டி;
                            வைகை என்றாள், அணை என்றாள்;
                                   வார்த்தைக்கு இரண்டு பொருள் சொன்னாள்!
                            வைத்தேன் கையை, அணைத்திட்டேன்;
                                     வாயால் வாய்க்கும் அணையிட்டேன்!
                            பொய்யில் விளைந்த நாணத்தால்,
                                      பூவை சிவந்த புதிரென்ன?!

      - எழுதியது கு.மா.பாலசுபிரமணியன்.என்று நினைவிருக்கு.!  நெஞ்சில் நிழலாடும் கவிதைகளில் இதுவும் ஒன்று!!
    
      அப்புறம் ஒரு செய்தி: ஏதோ வைகை அணைப்  பிரச்னை என்றதும்                      "என்னடா இது,  மதுரைக்கு வந்த சோதனை! "என்று கவலைப்படக் கூடாதே!  என்ற நல்ல{ ?} எண்ணத்திலும்,  முல்லைப் பெரியார்  அணைப் பிரச்சனையில் கவலை படுகிறவர்களுக்கு  ஆறுதலாக? இருக்கட்டுமே!  என்றும்  இந்த  வைகை அணைக் கவிதை!
       கோவிச்சுக்க  கூடாது... கோவிச்சுகிட்டா..., அப்புறம், இதுபோல கவிதைகளை போட்டு,  இம்சைபண்ணிடுவேன்!!


    

Thursday, 8 December 2011

இந்திய அரசின் பரமபத விளையாட்டும் ஆடுபுலி ஆட்டமும்!

            மக்களது பிரச்சனையில் கவனம் செலுத்துவது  இல்லை  என்று  தீர்மானித்து  கொண்டு  இந்திய அரசு  செயல்படுகிறதோ ? என்ற சந்தேகம்  எனக்கு வருகிறது!
       பணவீக்கம் அதிகரித்து, ஏழை, நடுத்தர மக்கள்  முழி பிதுங்கி  வருகிறார்கள்! பண வீக்கத்தைக் குறைக்க உருப்படியான நடவடிக்கை எடுக்க  அக்கறை  காட்டியதாக தெரியவில்லை!  உர விலை  கடந்த 6 மாதத்தில் தாறுமாறாக  இரண்டு,மூன்று மடங்கு உயர்ந்து,   விவசாயிகள் தவிக்கிறார்கள். அதைபற்றியும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது!  நெசவாளர் பிரச்னை நீடிக்கிறது, அரசு மௌனம் காக்கிறது!  தெலுங்கானா பற்றி எரிகிறது, தேமே என்று பார்த்து கொண்டு இருக்கிறது. இப்போது, முல்லை பெரியார் அணையை உடைப்பதா? புதிதாக அணையை கட்டுவதா? என்று தமிழர்களும்,  அணையால் ஆபத்து.. அதனால் புதிய அணையை கட்டியே தீருவோம் என்று கேரளர்களும்  வரிந்து கட்டி  சண்டை இடுகிறார்கள்! ஆளாளுக்கு மண்டையை உடைத்துக் கொள்கிறார்கள், இப்போதும் பிடித்துவைத்த பிள்ளையார் கணக்காக மன்மோகன் சிங், காட்சி தருகிறார்!


      
        இந்த பிரச்சனைகள் மட்டுமல்ல, ஆதிவாசிகளின் ஜீவாதார பிரச்னை, மாவோயிஸ்ட்கள் பிரச்னை,  சுரங்க கொள்ளை பிரச்னை, கூடங்குளம் பிரச்னை, எப்போதும் தீர்க்க முடியாத  தமிழர்களின் பிரச்னை, மீனவர்களின் படுகொலைகள், பட்டினி சாவுகள், என்று வரிசை கட்டி நிற்கும்  பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லை! 
                  ஆனால் இவைகளைத் தீர்க்கவும், வழிவகைகளைக் காணவும் உருப்படியாக எந்தவித ஆலோசனையோ, திட்டமோ, அரசிடம் இல்லை என்பது போல  நடந்து கொள்ளுகிறது!  குறைந்த பட்சம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இந்த பிரச்சனைகளைத் தீர்ப்பது எப்படி? என்று ஆலோசிக்க கூட முன்வராமல்   இருந்து வருவது, அதிர்ச்சி அளிக்கிறது! இந்த அரசின் நோக்கம்தான் என்ன என்ற கேள்வி எழுகிறது!


     
       இந்தியாவின் நதிகளை இணைத்தால், வறுமை ஒழியும்.!  விவசாய உற்பத்தி பெருகும், விவசாயம் சார்ந்த தொழில்கள் பெருகும், வேலை இல்லாத்  திண்டாட்டம் குறையும், குடிநீர் தட்டுபாடு  இருக்காது, நதி வழியே போக்குவரத்து  வசதியும் செய்யலாம்!  தரைவழி போக்குவரத்து செலவும் மக்கள் அவதியும் குறையும், பெட்ரோல் டீசல் தேவையும் குறையும் விலைவாசி உயர்வு  கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் ஏற்றுமதி வாய்புகள் அதிகரிக்கும் அந்நிய செலாவணியும் கிடைக்கும்! அண்டை நாடுகளிடமும் பன்னாட்டு நிதியமிடமும் பெற்றுள்ள கடனும் குறையும்! 

            ஆனால் அதுகுறித்து உருப்படியாக சிந்திகாமல் இருந்து வருகிறது! நடிகர் ரஜினிகாந்த் கூட, ஒருகோடி நிதியை நன்கொடையாக தருவதாக சொன்னார்! தந்தார என்று தெரியவில்லை! நதிகளை இணைப்பது குறித்த செலவு  இந்தியாவுக்கு ஒரு பொருட்டே அல்ல என்பது எனது கருத்தாகும்! இப்போது, தெரிந்துள்ள கருப்பு பணத்தை கைப்பற்றினாலே போதும், போதாது என்றால்  இரட்டை அலைவரிசை ஊழலில் பரிமாறப் பட்ட  பணத்தை கைப்பற்றி, செலவு செய்து   திட்டத்தை நிறைவேற்றலாம்!  மனது இருந்தால் மார்க்கமும் ஆதரவும் பெருகும்!
         ,ஆனால் அதைப்பற்றி இந்த அரசுக்கு அக்கறை இல்லை என்று தெரிகிறது! ஏன் மக்களின் மீது அக்கறை இல்லை என்பதுபோல நடந்து கொள்ளுகிறது! பிறகு இந்த அரசுக்கு எதில் அக்கறை  என்று பார்த்தால், ஊழல்வாதிகளைக்  காப்பற்றவும்,அவர்களது கருப்பு பணத்தை காப்பாற்றவும் அக்கறை படுகிறது! அடுத்த பிரதமராக ராகுல் காந்தியை  அடையாளம்  காட்டவும்,முன் நிறுத்தவும் அககறைப்படுகிறது!  அந்நிய முதலாளிகளை, இந்திய  மண்ணில் கடைவைக்க அக்கரைபடுகிறது! அவசர அவசரமாக ஆட்சியாளர்கள் ஆலோசனை செய்கிறார்கள், எதிர்ப்பு தோன்றியதும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கெஞ்சுகிறார்கள்!
        இவைகளைப் எல்லாம் பார்க்கும்போது, பிரச்சனைகளை கொண்டே , மக்களை திசை திருப்பவும், பிரச்சனையின் வீரியத்தை குறைக்கவும், மறக்க செய்யவும் முயன்று வருகிறதோ இந்த அரசு? என்று தோன்றுகிறது!  இந்தியாவில் தீவிரவாதம் வேகமாக பரவி வருகிறது... இந்த நகரங்களுக்கு  ஆபத்து!  உளவுத்துறை எச்சரிக்கை!  மம்தாவுக்கு மாவோயிஸ்டுகளால் ஆபத்து, முக்கிய தலைவர்களை கொள்ள தீவிரவாதிகள் திட்டமிடுகிறார்கள்!  உபி- மக்களை மாயாவதி பிச்சை காரர்கள் ஆக்கிவிட்டார். மகாராஷ்டிராவில் உள்ள வேறு மாநிதவர்களுக்கு வேலை இல்லை, வெளியேற வேண்டும்!  என்பது போன்ற செய்திகள் மக்களை திசைதிருப்பும் யுக்திகளோ என்று தோன்றுகிறது !

              அதைப்போலவே, உச்சநிதிமன்ற தீர்ப்பை கர்நாடக மதிக்காது,ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளாது! ! கேரளா  அரசு மதிக்காது. மத்திய அரசு கேள்வி கேட்காது! தமிழக மீனவர்களை சிங்கள கடல் படை  கொன்று குவிக்கும், இந்திய கடலோர காவல்படையும் இந்திய அரசும் எதுவும் சொல்லாது! என்பதெல்லாம்  ஆட்சியில்  உள்ளவர்கள் ஆடும் நாடகமாகவும்  பரமபத விளையாட்டு போலவும் தோன்றுகிறது!          { வடிவேலு பாணியில்  }  :         யாரங்கே ?" இந்திய அரசு குறைந்த பட்சம் நதிகளையாவது  தேசியமாக்குமா?" என்று கேட்டு," ஓலை" ஒன்று அனுப்புங்கள்!  அதாங்க, கடுதாசி  அனுப்புங்கள்!    யார் பெயரில்  அனுப்புவது என்றா கேட்கிறாய்?   "பராக் ஒபாமா"  பெயரில்  அனுப்பு, அப்படியாவது வேலை நடக்கட்டும்!!


Tuesday, 6 December 2011

புதுவித சுகம் தரும் கவிஞன் நான், ." நெஞ்சில் நிழலாடும் கவிதை"

           "எங்கும் பிலா  கணங்கள்,
                   எப்பாலும் பேய் கணங்கள்:
            தங்குமிடம் அத்தனையும்
                சரம்சரமாய் முட்கதிர்கள்!"  
                                  -என்பது கண்ணதாசனின்  கவிதை வரிகள்!
        
         பஸ் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, போதாக்குறைக்கு மின்சார தட்டுப்பாடு! தமிழகத்தில் மக்கள் படும் இன்னல்களுக்கு நானும் விதிவிலக்கு இல்லை! இவைகளைத் தவிர பள்ளிப் குழந்தைகளுக்கான கல்விக்கட்டணம், மருத்துவ மனைகளுக்கு கொட்டியழுவது, மருந்து மாத்திரை செலவு, மளிகை செலவு, வாங்கிய சிறுகடனுக்கு வட்டியாக பெரும் தொகையைத் திரட்டும் பொறுப்பு, கூடவே மனைவி,மககளுக்கு துணிமணி வாங்கவேண்டுமே? எப்படி என்ற சிந்தனை! அடிக்கடி வரும் பண்டிகை செலவு, சும்மா உங்களைப் பார்த்துட்டு போகலாமே என்று வந்தோம் என,அழையா விருந்தாளிகளின் செலவு!....என்று ஒரு சம்சாரி படும் பாட்டை நினைத்தால், காவிகட்டிக் கொண்டு போய்விடலாம் என்று தோன்றும்!  காவி கட்டிக் கொண்டு போனாலும், நம்மால் நிம்மதியாக இருக்க முடியும் என்று தோன்றவில்லை!  நித்தியானந்தா, பிரேமானந்தா போன்றவர்கள் பட்ட பாடுகள்  கண்ணில்வந்து கலக்கம் ஏற்படுத்துகிறது!  
       இந்த கவலைகளை நினைத்துதான், நம்ம பதிவர்கள் பலரும் தங்கள்  மனதை' சினிமா','கனிமா', என்றும், 'பாட்டு- கூத்து','கவிதை' என்றும்  திசை மாற்றி, தங்களுடைய கவலைகளை மறந்து வருகிறார்கள் என்று நினைகிறேன்!   தங்கள் கவலைகளை மறப்பதுடன், நம்மைப் போன்றவர்களின் கவலையை மறக்கவும் உதவுகிறார்கள்!    அந்த வகையில்  இணயதள பதிவர்களின் சேவையை  எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

     என்னைபோலவே, நடப்பதைப் பார்த்து மனம் பொறுக்காமல், அவர் வாழ்ந்த காலத்திலேயே  கண்ணதாசன்  புலம்பிய கவிதை வரிகள் தான்  ஆரம்பத்தில் நான் குறிபிட்டுள்ள கவிதைவரிகள்!  சம்சாரியாக ஆவது, இன்றைய நிலையில் எவ்வளவு சிரமம் என்பது, சிலருக்கு முன்கூட்டியே தெரிந்து விட்டதால்    மறந்தும் சம்சாரி ஆகும் எண்ணமே இன்றி, அவர்கள் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள் என்று நினைகிறேன்! 
      ஒரு அழகிய பெண்ணுக்கு ஆடவன் ஒருவன்  மீது  காதல் வருகிறது.   ஆடவனுக்கும் அந்த பெண்ணை மணந்து  கொள்ளும் ஆசை இருக்கிறது!  இருந்தும்  பலருடைய  காதல் அனுபவமும்  குடும்ப வாழ்க்கை குறித்த  அச்சமும்  அவனைக் குழப்பத்தில் தள்ளுகிறது. அந்த ஆடவுனுக்கு  கவிதை வருகிறது!  அழகிய பெண்ணிடமே அவனது மனக் குழப்பத்தைக் கவிதையில் கேட்கிறான்!
        ஆடவன்  எழுதிய கவிதைதான் இது:

          சாடையில் கண்களைத்  தூது விட்டாய்,
                  சாமந்தி மஞ்சத்தில் தூவி வைத்தாய்;
           ஆடையை இரவினில் பறக்க விட்டாய்,
                  ஆயிரம் முறை எனை தழுவ விட்டாய்-மலர்
          வாடையில் தலைவைத்து தூங்கிவிட்டு,
                 வரவையும் செலவையும் மறந்துவிட்டு,
          பாடையில் ஒருநாள் போகையிலே
               பக்கத்து  துணை யார் பைங்கிளியே?

         மதுவினைக் கொஞ்சம் பருக தந்தாய்,
             மலரிதழ் தேனையும் அருந்த தந்தாய்;
        வதுவையின் சுகம்தர உருகி நின்றாய்
            வஞ்சிக் கொடியென  குனிந்து நின்றாய்-எனை
       புதுவித சுகம் தரும் கவிஞன் என்றாய்,
          பூங்கவி இசை தரும் கலைஞன் என்றாய்,
      எதுவரை உறவுகள் சொல்கிளியே,
         இறந்தபின் யார் துணை சொல்மொழியே?

      ஆறடிக் கூந்தல் உன் சொந்தமடி,
          ஆயிரம் கனவுகள் உன் பந்தமடி,
     தேரென மென் நடை நடந்திடுவாய்,
           தெள்ளென மின் இடை மிளிர்ந்திடுவாய்,
     ஆரிந்த மானென மனம் வியக்கும்,
               இடைகொடி தழுவிட கரம் துடிக்கும்,
      ஆரடி இறந்தபின் துணை வருவார்,
             ஆறடி மண் தான் அணைத்திடுமே!
 
         என்றோ படித்த இந்த கவிதையை எழுதியவர் எம்.பி.கலிங்கன் என்று நினைவிருக்கு.! இந்த கவிதையும் என் நினைவில் இருந்து வருவதால் "என் நெஞ்சில் நிழலாடும் கவிதை" எனலாம்!  இதைபோலவே  நெஞ்சில் நிழலாடும் கவிதைகளை  தருணம் வாய்க்கும் போது எழுதலாம் என்று நினைக்கிறேன்! அதுவும் உங்களது வரவேற்பைப் பொருத்து!

 
    

Monday, 5 December 2011

தேசபக்தி, தீவிரவாதமான சுவாரசியமான கதை... இது!

         இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர்கள், உயிர் நீத்தோர், சிறையில் சித்திரவதைப் பட்டோர், ஆங்கிலேயரால் மரண தண்டனை அடைந்தவர்கள்  பலர். அவர்களில் சிலரே காங்கிரசுகாரர்கள்!  வெகு சிலரே  இன்று,  தேச  பக்தியை    ஏகபோகமாக,  தங்களது உரிமையாக கொண்டாடிவரும்  இந்துத்துவ வாதிகளாவர்!  இன்று தேசபக்தியை காட்டும் இவர்கள்... அன்று.... ஆங்கிலேயருக்கு எதிராக நாம் போராடினால் ஆபத்து என்று நினைத்து,  இந்தியமக்களை சமாதானப் படுத்தவும், அவர்களுக்கு சிற்சிறு சலுகைகளைக்  கொடுக்கவும், ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட காங்கிரசு கட்சியில் கூட தங்களை இணைத்துக் கொண்டு போராட முன்வரவில்லை. !

       இன்றைய இந்துத்துவ  வாதிகளும், அவர்களது தலைவர்களும்  இந்திய தேசத்தின் விடுதலையை விட, அன்று பெரிதாக நினைத்தது என்ன தெரியுமா?  ஆங்கில அரசின் அடிவருடிகளாய் இருந்து,   அவர்களிடம்  ஊழியம் பார்த்து, ஊதியம் பெற்று, உண்டி வளர்ப்பதைதான்! வங்காளத்திலே பஞ்சம் ஏற்ப்பட்டு, மக்கள் மடிந்தபோது... இவர்கள் ஆங்கில அரசாங்கத்துக்கு, நம்மை அடிமைப் படுத்தி, அடக்கி ஆளும் ஆங்கிலேய ராணுவத்துக்கு உணவுப் பொருளை விநியோகிக்கும் ஒப்பந்தம் போட்டு, தங்கள் வருமானத்துக்கு வழி செய்து கொண்டவர்கள்! இந்திய மககளுக்கு இப்படி தாங்கள் செய்த துரோகத்தை, ஆங்கிலேயருக்கு தாங்கள் காட்டிய விசுவாசக் கதையை- வரலாறை இன்று மறந்துவிட்டார்கள்! மக்களின் பார்வையில் படாமலும் மறைத்து விட்டார்கள்!

        அதுமட்டுமா?  அன்று.. ஆங்கில அரசுக்கு எதிராக,      தீவிரமாக போராடியவர்களது தியாகத்தையும் வீரத்தையும் கூட மக்களின் பார்வையில் படாமலும் மறைத்து விட்டதுடன், சுதந்திரப் போராட்ட  வரலாற்றில் இருந்து மறைத்து விட்டார்கள்!  அவ்வாறு மறைக்கவும் மறக்கவும் செய்துவிட்டு...   இன்று,   இந்தியாவை காப்பாற்ற பிறந்த தேசபக்தர்களாக  தங்களை   சித்தரித்துக் கொண்டு வருகிறார்கள்! அதுமட்டுமா? அன்று யாரெல்லாம் இந்த தேசத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து தீரமுடன் போராடினார்களோ, அவர்களை இன்று தேச விரோதிகளாகவும், தீவிரவாதிகளாகவும்  காட்டி வருகிறார்கள்!

      சுதந்திரத்துக்காக  தங்களது சுகபோகங்களைத் துறந்து போராடியவர்கள், இன்று வரலாற்றில் இருந்து மறைக்கப் பட்டு,  வருபவர்கள்    யார் தெரியுமா?  இந்த மண்ணின் மைந்தர்களான... இந்துமத  இழிவை ஏற்றுக்கொள்ளாமல் ,  வெளியேறிய...  முஸ்லிம்கள்தான்!  காங்கிரசு கட்சியில் மட்டுமின்றி, முஸ்லிம் லீக்  கட்சியல்  மட்டுமின்றி, தனிநபர்  போராளிகளாகவும்  பல்வேறு சமஸ்தானத்தின் கீழும் சுதந்திரத்துக்காக  போராடிய முஸ்லிம்களின்  எண்ணிக்கை  பல்லாயிரம் கணக்கில் இருக்கும்! இவர்களது சுதந்திரப் போர், ஆங்கிலேயருக்கு  எதிராக மட்டும் நடந்த போராட்டம் இல்லை,  ஆதிக்கத்துக்கு எதிராகவும்,ஒட்டுமொத்த அந்நியர்களுக்கு எதிராகவும்  நடந்த போராட்டமாகும்!

      இருபத்தி அயிந்து போர்கப்பலுடனும், கோலத்ரி மன்னனின் ஆதரவுடனும் வந்த போர்த்துகீசிய படைத்தளபதி  மார்டின் டி சோஸா-வை "நமது தாயக மண்ணில் அன்னியரை காலுன்ற அனுமதிக்க கூடாது"என்று  குஞ்சாலி மரைக்காயர் 200 -  போர்க்கப்பலுடன் 1523 -லில்  இருந்து 1538 - வரை போரிட்டு, போர்துகீசியர்களை பலபோர்களில் தோற்கடித்தார்!

    1921 - ஆகஸ்டில்  துவங்கிய  { ஒத்துழையாமை இயக்கப்} புரட்சியில் மலபார் பகுதியில் ஆங்கிலேயரின் மிருகத்தனமான தாக்குதலில் இறந்தவர்கள் 2266 -பேர்கள்.! காயமடைந்தவர்கள் 1615 -பேர்கள்.! கைதுசெய்யப் பட்டவர்கள்,5688 -பேர்கள்!
கிளர்சியில் கைதுசெய்யப்பட்டவர்கள்  19 .11 . 1921 -லில்  ஷோரனூரில்    இருந்து கோவை சிறையில் அடைக்க  சரக்கு வாகனத்தில் அனுப்பப்பட்டனர்  மூச்சு திணறி 70 - பேர்கள் இறந்தனர்!    இப்படி நமது சுதந்திரத்திற்காக, நமது நாட்டுக்காக போராடிய தேசபக்தர்களான  முஸ்லிம்கள் தான் இன்று தீவிரவாதிகளாக  ஆக்கப் பட்டுள்ளனர்!  ஆங்கிலேயருக்கு அன்று அடிமைச்  சேவகம் பார்த்த,,   ஆதிக்கவெறி    பிடித்த  இன்றைய    இந்துத்துவா கும்பல்களால்!  


       அதுமட்டுமில்லை, இந்துமதப்போர்வையில்,இன்று அவர்களை வேட்டையாடி வருகின்றனர்!  இந்திய சுதந்திரத்துக்கு பின், மதக் கலவரங்கள் என்ற போர்வையில் கொள்ளப் பட்டவர்களில் முஸ்லிம்களே அதிகமாகும்!

           1960 -முதல்  1970   வரை நடந்த 7974  கலவரங்களில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள்-833 பேர்கள்.      1971 - முதல் 1981 - வரை 5000 கலவரங்களில்  765 முஸ்லிம்கள் . 1981 ஆண்டு 319 கலவரங்களில் 150 முஸ்லிம்கள்.  1982   ஆண்டு 474 கலவரங்களில் 181 -  முஸ்லிம்கள் .  1983  ஆண்டு 500 கலவரங்களில் 210 முஸ்லிம்கள். 1984 ஆண்டு 476 கலவரங்களில் முஸ்லிம் எண்ணிக்கை தெரியவில்லை. 1985 ஆண்டு 525 கலவரங்களில் முஸ்லிம் எண்ணிக்கை தெரியவில்லை. 1986 ஆண்டு 145 கலவரங்களில் முஸ்லிம் எண்ணிக்கை தெரியவில்லை,காயமடைந்தவர்கள் 432. 1989 ஆண்டு மும்பை கலவரத்தில் 11 முஸ்லிம்கள். 1990 - பரோடாவில் நடந்த கலவரம் எண்ணிக்கை தெரியவில்லை. 1992 ஆண்டு இந்தியா முழுவதும் 1700 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 500 பேர்கள் காயம் அடைந்தனர். மும்பையில் மட்டும் 1100 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 1993 ஆண்டு  மும்பையில் 880 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.  1997 ,   1999 ,2000 ,   2002 ,  2003-யில் குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரங்கள்,படுகொலைகள் போதாது என போலிசு துப்பாக்கி சூடுகள்!

       நேர்மையான இந்தியா ஜனநாயக வாதிகள்...  இந்த படுகொலைகளுக்கு என்ன காரணம் என்பது  குறித்து சிந்திப்பதில்லை! அப்படியே சிந்தித்தாலும்   அதனை வெளிப்படையாக்குவது இல்லை!!   ஏன் என்றால்,  முஸ்லிம்கள்  தேசபக்தர்கள்  என்பது  மறைக்கப்பட்டு, தீவிரவாதிகள்  ஆக்கப் பட்டு விட்டது தான் !!      ஆங்கிலேய அடிவருடிகள், இன்று தேசபக்தர்களாக  வேஷம் போட்டு மக்களை ஏமாற்றி வருவதுதான்!

     இந்த கதைக்கு படங்கள் தேவைபடுவோர் .. தாங்களே  மனதில் தோன்றும் படங்களைப் பொருத்திக்  கொள்ளலாம்!

   


    

Saturday, 3 December 2011

"இந்துத்வா " என்பது மதமா, ஆதிக்கத்தின் ஆணிவேரா?

       இந்து மதத்தை  கண்மூடித்தனமாக பின்பற்றும்,ஆதரிக்கும் கொள்கைகளை தமிழர்களாகிய  நம்மில் பலரும் ஏற்றுக்கொண்டு உள்ளது வேதனை அளிக்கிறது! இந்துத்துவம் என்பது, இந்துமதக் கொள்கைதான்   என்ற  குறுகிய கண்ணோட்டம் தவறானது. அது, ஆதிக்கத்தின் மறுவடிவம்,பிரதி பிம்பம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதையும் சமத்துவத்திற்கும்  ,சமஉரிமைக்கும், சமநீதிக்கும்,   ஏன்? ஓட்டுமொத்த மனித நியதிகளுக்கு எதிரான ஒரு கொள்கை என்பதை அவர்கள்  புரிந்து கொள்ளவில்லை  என்றும் நினைக்கத் தோன்றுகிறது!


    
            இன்று,    இந்திய நாட்டில் நிகழ்ந்துவரும் பல்வேறு குளறுபடிகளுக்கும், உரிமை மறுப்பு போராட்டங்களுக்கும் பின்னணியில் இருந்து வருவது, இந்த இந்துத்துவம் என்ற முகமூடிக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் ஆதிக்க வெறிதான் காரணம்!  காஷ்மீர் பிரச்னை,தெலுங்கான பிரச்னை,கூடங்குளம் பிரச்னை,     ஈழத்து தமிழர்களின் பிரச்னை,     மேற்கு வங்க மக்களின் போராட்டம்,ஆதிவாசிகளின் வாழ்வாதாரப் போராட்டம், முல்லை பெரியாறு பிரச்னை,  என்று..... இந்தியாவில் நிலவியும், நீடித்தும் வருகிற,      எந்த போராட்டமானாலும், அதற்கு பின்னணியில் இந்துத்துவம் என்ற ஆதிக்கவெறி இருந்துவருவதைக் காணமுடியும்!     சாதிய மோதல்கள்,மத மோதல்கள்,  அது தொடர்பான  கலவரங்கள், சர்ச்சைகளுக்குப் பின்னாலும்  இவைகளே இருந்து வருவதைக் காணலாம்!


           கீதைக்கண்ணன்  சொன்னதுபோல," எல்லாப் பொருளிலும் நான் இருக்கிறேன்,எல்லாப் பொருளும் எனக்குள் அடக்கம்" என்றதைப் போலவே   இந்துத்துவம் என்பதும் ,   " நமது எல்லாப் பிரச்சனைகளுக்கும்,  நமக்கு ஏற்படும்  தீமைகளுக்கும் காரணமாக உள்ளது!"   இந்துத்துவம்  என்பது, ஆதிக்கத்திற்கு எதிரான எந்த ஒரு நிகழ்வையும்  நாம் செய்ய   அனுமதிப்பதில்லை,.  ஏற்றுக் கொள்வதும் இல்லை!    இந்துத்துவாவை,  'ஆக்டோபஸ்' என்ற  கடல் பிராணிக்கு ஒப்பிடலாம்.   ஆக்டோபஸ் எப்படி தனது,  "  எட்டு  ரத்த உறிஞ்சிகால்களைக் கொண்டு     தனக்கு  அருகில் வரும்,    உயிர்களைப் பிடித்து இரையாக்கிக் கொள்கிறதோ...,   அப்படி,   இந்துத்துவாவும் தனது ஆதிக்கத்திற்கு எதிராக செயல்படும் எவரையும் விட்டுவைப்பது   இல்லை! எதிராக  செயல்படும் அமைப்புகளையும்  விடுவதில்லை!!     ஒன்று அடக்கிவைப்பது,     முடியாவிட்டால் அழித்து விடுவது என்று  செயல்பட்டு வருகிறது!.              இந்துத்துவம் தனது ஆதிக்க வெறியை தொடரவும், தக்க வைத்துக் கொள்ளவும் பயன்படுத்தி வரும் சில உபாயங்கள்:

   1 ] தங்களது ஆதிக்கத்தை எற்றுகொண்டவர்களை அரவணைத்து,அடிமைகளாகி தனது ஆதிக்கத்தின் கீழ் நீடிக்க செய்துவருவது!                {  பிற்படுத்தப் பட்ட இந்து மக்கள், தாழ்த்தப் பட்ட ஆதிதிராவிட மக்கள்}

  2 } இந்து மதம் மேன்மையானது,   எனப் பொய்யான தகவல்களைக் கூறியும், பரப்பியும் தொடர்ந்து,      அவர்களை தங்களது சேவைக்கு பயன்படுத்தி கொள்வது!    { கோவில்களைக் கட்ட, எதிரிகளான பிறமதத்தினரை தாக்க, தங்களை தலைவர்களாக போற்றும்படி செய்ய,}

 3 } சாதி வேறுபாடுகளை கடைபிடித்து,சமூகத்தில் தொடர்ந்து அதை நீடிக்க செய்வது,                              {சோ அய்யர், சிதம்பரம் செட்டியார்,வெங்கைய நாயுடு,  கருப்பையா மூப்பனார், முத்துராமலிங்க தேவர், வரதராஜ முதலியார், கிருஷ்ண சாமி ரெட்டியார்,  }

4 ] தங்களது மேலாதிக்கத்திற்கு, ஆதிக்க வெறிக்கு உதவ, கடவுள்களையும், ஆன்மீகத்தையும், போர்வையாக கொண்டு செயல்படும் அமைப்புகளை உருவாக்கி நடத்துவது, அவைகளை ஊக்குவித்தும், ஆதரித்தும் வருவது!,              { அனுமன் சேனா, பஜ்ராங்கதல்,,ஜன மோர்ஜன்,ஜன கல்யான், விஷ்வ இந்து பரிஷத், சங்கரமடம்,சிவசேனா}  {கண்டகண்ட கருமாந்திரங்கள் பெயரில் பல அமைப்புகள் உள்ளன.நினைவுக்கு கொண்டுவந்து,நிரப்பிக் கொள்ளுங்கள்.}        தந்தை பெரியார் , {மயிலாடுதுறையில் நடந்த பொதுக்கூட்டம் என்று நினைவு}   நான்கு வர்ணங்கள்  என்றால் என்ன? பிராமணர்கள் என்பவர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்போர் யார்? என்பதுபற்றி  விளக்கி பேசிக்கொண்டிருந்தார்!.    கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து, "அய்யா,,  நான்கு சாதிகள் சரி, 'பஞ்சமர்கள்'  என்று...  ஒரு சாதியைப் பற்றி, சொல்லுறாங்களே?,  அவங்கல்லாம் யாரு?"  என்று பெரியாரிடம்    கேட்டார். பெரியார்அதற்கு, "அவங்கதான், அப்பா-அம்மாவுக்கு{ முறையா }  பிறந்தவங்க"!   என்று சொன்னதுடன், " இந்துமதத்தில்  உள்ள ஏற்ற தாழ்வுகளை கண்டு, அந்த மதத்தை வெறுத்து ஒதுக்கி, இந்துமதத்தை விட்டு  வெளியேறிய  பிற மததினரையே, பஞ்சமர்கள் என்று இந்துமத வாதிகள் அழைக்கிறார்கள்!"  என்றும் விளக்கினார்!

      இந்துமதத்தை வெறுத்து வெளியேறி, பிற மதத்தில் தஞ்சம் அடைந்த, பிற மதத்தை தழுவியவர்கள்  ஆன , "பஞ்சமர்கள்" என்ற  சிறுபான்மையினர் மீது, இந்துத்துவ வாதிகளுக்கு,   தங்களது ஆதிக்கத்தை  ஏற்றுக்கொள்ளாமல், தங்களை விட்டு விலகி சென்றவர்கள் என்பதால், எப்போதும்  வெறுப்புணர்வும்,  பகையுணர்ச்சியும்    இருந்து வருகிறது!  அதன விளைவே,  இந்தியாவில் இதுவரை நடந்து வந்த மதக் கலவரங்களும், அதன் தொடர்ச்சியாக     நடந்து வரும்   இனப் படுகொலைகளும்  ஆகும்!                                                
                           மதக் கலவரங்களில்  படுகொலையான பஞ்சமர்களைப் பற்றி,...            பிறகு பார்க்கலாம்!


Thursday, 1 December 2011

பகவத்கீதை புனித நூலா? 'மனுதர்ம' கையேடுவா?

             மகாபாரத்தில் அருசுனனுக்கு கண்ணன் கூறுவதை கீதோபதேசம் என்றும் அதையே,   " பகவத்கீதை " என்றும்  சொல்கிறார்கள்!     இந்த பகவத் கீதையைத்தான்   இந்துக்களின் புனித நூலாக,  இந்து மதத்தில் சிறிய அளவில உள்ள பிராமிணர்கள் வலிந்து கூறிவருகிறார்கள்!    எத்தனையோ புராணங்கள், திருவிளையாடல்கள், பக்தி நூல்கள், பஜனைப் பாடல்கள், பாமாலைகள், இருக்க,        அவைகளுக்கு இல்லாத சிறப்பும் பெருமையும்  பகவத் கீதைக்கு இருப்பதால் தான் புனித நூலாக சொல்லுகிறார்களா? என்ற கேள்வி  என் மனதில் அவவப்போது,   எழுவதுண்டு!
      இந்துமதத்தில் ' சைவம்- வைணவம் 'என்ற இரண்டு பிரிவுகள் உள்ளநிலையில், வைணவ நூலான பகவத் கீதையை எப்படி சைவர்கள்  புனித நூலாக ஏற்றுக்கொண்டார்கள்?  இத்தனைக்கும் வைணவர்களை விட இந்துமதத்தில் சைவர்களே அதிகம் இருகிறார்கள் என்கிற நிலையில்,  சைவர்களும் பகவத் கீதையை புனித நூலாக  ஏற்றுகொண்டார்கள்  என்பது  உண்மையாக  இருக்குமானால்,  சைவர்களின் எந்த நூலுக்கும் புனித நூலாகும் தகுதி இல்லை என்பதை  சைவர்கள்  ஒப்புக் கொண்டுள்ளார்கள்  என்றுதானே ஆகிறது?  போகட்டும், அது சைவர்களின் கவலை!
          பகவத் கீதையை  இந்துமதத்தின் புனித நூலாக ஏற்றுக் கொள்ளுவதற்கு காரணம் ,   அதை பகவான் கண்ணன்  அருளியது.என்று சிலர் வாதிடலாம்!   அப்படி வாதிட்டால், மற்ற அனைத்து பக்தி நூல்களும், இந்து மத புராணங்களும் மனிதர்களால் ஆக்கப்பட்ட  குப்பைகள்தான் என்பதை ஏற்றுகொள்ள வேண்டி வரும்!   இது ஒருபுறம் இருக்கட்டும், பகவத் கீதையில் அப்படி பகவான் கண்ணன் என்னதான் சொல்லியிருகிறார்?   எதனைப் புனிதமானதாக கூறுகிறார் என்று பார்த்தால்,    ராஜாஜி முன்பு தமிழகத்தில் கொண்டுவந்தாரே,   'குலக் கல்வி'  என்று?  அதைப்போல பகவான் கண்ணனும், அவரவருக்கு உரிய தொழிலை கைவிடக்கூடாது, எனக் கூறுகிறான்! அதாவது நான்கு வர்ணதர்மத்தை வலியுறுத்துகிறார்.

        குருஷேத்திர யுத்தத்தில்  எல்லோருக்கும் பொதுவான தர்மத்தை, அறத்தை,போதிக்க வேண்டிய கண்ணன்,பார்பனியத்தை.. சாதிப் பாகுபாடுகளை   நியாயப் படுத்துகிறான்!  பார்பனீயத்தை வலியுறுத்தி வருவதால்தான், பகவத் கீதையை  இந்துகளின் புனித நூலாக வைணவர்கள் எனப்படும் பிராமிணர்கள் காட்டுகிறார்கள்!  அர்ச்சுனன்,      புத்தமதக் கொள்கையாகிய  'கொல்லாமையை 'நினைத்து கூறுகிறான்,        " எதிரில் இருக்கும்  எனது உறவினர்களை     ஈவு இரக்கமின்றி கொல்ல.... நான் விரும்பவில்லை.!     கண்ணா,  போர்களத்தை விட்டு நான் போகிறேன்"

         அதற்கு கண்ணன்,    "அர்சுனா   நீ.. சத்திரியனாக பிறந்து விட்டு,  உனது சுதர்மத்தை விட்டு-உனது கடமையை விட்டு ,போகிறாய்.   ஒருவன் தனது சுதர்மத்தை விட்டுவிடக் கூடாது.   வேறு ஒருவரின் தர்மத்தைப் {புத்தர்} பின்பற்றவும் கூடாது"  என்றும்   "ஒருவன் தனது சாதிக்கு உரிய தர்மத்தை செய்து  மரணமடைவது, பிறருடைய தர்மத்தை  செய்து பெருவாழ்வு வாழ்வதைவிட மேலானது!" என்றும் கண்ணன் கூறுகிறான்.      { டாக்டர். ராதாகிருஷ்ணன் மொழிபெயர்ப்பு}  அதாவது,  அர்ச்சுனன் பிறந்த சாதியைக் குறிப்பிட்டு,  உன் சாதித் தொழிலை விடக்கூடாது  என்று வலியுறுத்துகிறார். மனுஷ்மிருதியில், '"வேறு சாதித் தொழிலைச் செய்வது பெரிய குற்றம்' " என்பதையே மனதில் கொண்டு, கண்ணன் பகவத் கீதையில் அவ்வாறு கூறுகிறார்!         கண்ணன் அதைமட்டுமா, கூறுகிறார்?  " நானே கடவுள்,. நானே.. நான்கு வர்ணங்களைப் படைத்தேன்,    நானே நினைத்தாலும் இதை மாற்ற முடியாது.!" அதாவது,     சாதி முறையைக் கடவுள்தான் படைத்தாராம்.   அந்த கடவுள் நினைத்தாலும் சாதி முறையை மாற்ற முடியாதாம்!?    சாதிமுறையை யார் மாற்ற முனைந்தாலும்  அப்போது, "நான் பிறந்து,அவர்களை அழிப்பேன் " என்று பயங்கரவாதத்தை அர்ச்சுனன் மனதில் கண்ணன் விதைக்கிறான்!
   " எப்போதெல்லாம் தர்மம் வீழ்ச்சியடைந்து, அதர்மம் மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் நான் பிறக்கிறேன்" இங்கே தர்மம் என்று கண்ணன் கூறுவது சாதீய தர்மம்தான்! 

            நமது புனித நூலின் பெருமையைப் பார்த்தீர்களா?   இந்த நூலைத்தான் நீதிமன்றங்களில் சத்தியம் வாங்க பயன்படுத்துகிறார்கள்!  ராஜஸ்தான் மாநில அரசு, பகவத் கீதையை,  பள்ளி பாடத்திட்டத்தில் சேர்த்து உள்ளதாம்.!            நமது நாடு,   மதசார்பற்ற  நாடுன்னு  பெருமைப் பட்டு,   எல்லோரும் ஒருமுறை   ஜோரா கைதட்டுங்க...,!