Monday, 26 December 2011

காந்தி,இந்திராவை சுட்டவர்களும் இந்தியாவை சுடுபவர்களும்!

         சுதந்திரம் பெறும்வரை  மகாத்மா காந்தியின் உயிருக்கு  இந்தியர்களால் மட்டுமின்றி, ஆங்கிலேயர்களாலும் ஆபத்து நேரிடவில்லை! சுதந்திரம்  அடைந்து ஆறு மாதங்களில் காந்தி, இந்துமத வெறியன் நாதுராம்  கோட்சேவால் சுட்டு சொல்லப் பட்டார்!      ஆர்.ஆர்.எஸ்.தொடர்பும்,  வீர் சாவர்கர் பின்னணியுடனும்  செயல்பட்ட  நாதுராம் கோட்சே என்பவன் மகாத்மா காந்தியை சுடும்போது, தனது கையில்  "இஸ்மாயில் "என்று  முஸ்லிம் பெயரை பச்சை குத்தி இருந்தான்.!    முஸ்லிம் ஒருவனால் காந்தி சுடப்பட்டு,  இறந்ததாக   கருதப்பட வேண்டும்..,!   இந்துக்களுக்கும்   முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் வரவேண்டும், ஒருவருக்கொருவர், வெட்டிக்கொண்டு  சாக வேண்டும் !!  என்ற  படுபயங்கரத் திட்டமுடன்             காந்தி படுகொலை சம்பவம் நடந்தது! 
       காந்தியை  படுகொலையை  செய்தவர்களுக்கு,    பாகிஸ்தான்  தனி நாடக  பிரிந்து போனதும்,  பாகிஸ்தான்   ஒரு முஸ்லிம் நாடு  என்றும்  மதசார்புள்ள நாடு என்றும்  பிரகடனப் படுத்திக் கொண்டதுபோல, " இந்தியா ஒருஇந்துநாடு" என்று அறிவிக்காமல்  போன வருத்தமும்  இருந்தது! காந்தி உயிரோடு  இருக்கும்வரை அது நடக்காது என்ற  கோபமும் அவரது படுகொலைக்கு காரணமாக அமைந்தது! 
 
 
 
      இந்திராகாந்தி படுகொலை அவரது பாதுகாப்பு படையில்  இருந்த  'பியாந்த் சிங்','சத்வந்த் சிங்' என்ற சீக்கியர்களால்  நடைபெற்றது. காரணம் இந்துமதத்தில் இருந்தும் முஸ்லிம் மதத்தில் இருந்தும் வேறுபட்டு , தங்களுக்கு என்று புதிய மதமும் கொள்கைகளும்,நடவடிக்கைகளையும்   கொண்டிருந்த சீக்கியர்களின் புனித இடமும் பொற்கோவிலும்  ஆன இடத்தில்  இந்திய ராணுவத்தை இந்திராகாந்தி அனுப்பி நடவடிக்கை எடுக்கச் செய்தது.! 
 
 
 
       'ஆப்ரேசன் ப்ளூ ஸ்டார்'  என்ற பெயரில், அமிர்தசரஸ் பொற்கோவிலில்  இந்திய ராணுவம் புகுந்து தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது.    பொற்கோவிலில் ராணுவம், "பூட்சு" காலுடன்  நுழைந்து..  "காலிஸ்தான்" கோரிப போராடிய சீக்கியர்களை சுட்டுகொன்றது.!   இத்தனைக்கும் இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றவர்கள்,   இந்திராவால்    தீவிரவாதிகளாக   அறிவிக்கப்பட்டு,  சுட்டுக் கொல்லப்பட்ட   " பிந்தரன் வாலே" போன்றவர்களை  அரசியல்  காரணங்களுக்காக  வளர்த்து விட்டவரே, பயன்படுதியவரே  இந்திரா  காந்திதான்!   
 
                                          
 
                   தனக்கு பிரச்சனை என்று வந்தவுடன் தன்னால் வளர்க்கப் பட்டவர்களை  தீர்த்துக்கட்ட  ராணுவத்தை,    அதுவும்  அவர்கள்   புனித, வழிபாட்டுதளமாக  கருதும்,    பொற்கோவிலில் நுழைந்து, தாக்குதல்  நடத்தியதை  சீக்கியர்கள்  மன்னிக்க தயாராக இல்லை!    விளைவு?   தனது சீக்கிய பாதுகாப்பு அதிகாரிகளால் இந்திரா காந்தி   சுட்டுகொல்லப்  பட்டார்! 
 
 
 
              இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்திய வரலாறில் பெரும் அதிர்ச்சியையும்   மாற்றத்தையும் எற்படுதியவைகள்!  இந்திய மதவாதிகள் குறித்த தெளிந்த பார்வையையும் படிப்பினையையும் தருபவைகள்! இந்தியாவின் முன்னேற்றம், பொதுஅமைதி, வளர்ச்சி, தேச பாதுகாப்பு, ஆகியவைகளுக்கு என்றுமே "மதம்" உதவாது! என்பதை நிருபித்த, நிதர்சன உண்மைகள் ஆகும்!     மக்கள் நலனுக்கு மதங்களால்   நேரிடும்  அபாயத்தை தெரிவிப்பவைகள்!   மேலும் மதங்களையும்  மதவாதிகளையும்  அரசியலில்  இருந்து அப்புறப் படுத்தவும், அவர்களிடம் இருந்து ஆட்சியாளர்கள்   விலகி  நிற்கவும்   சொல்லித் தரும் பாடங்கள்....  காந்தி,   இந்திராகாந்தி படுகொலைகள்! ! 
 
 
 
                  இந்த பாடத்தையும் படிப்பினையையும்  ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ளவில்லை, அறிந்து வழிநடத்தவில்லை என்பது கசப்பான உண்மையாக உள்ளாது!    அன்றி, ஊழல்,கருப்பு பணம், போன்ற மோசமான செயல்களை தடுத்து நிறுத்தி, மக்களையும் நாட்டையும் வழி நடத்த வேண்டிய இந்திய ஆட்சியாளர்கள்,    இன்று அவைகளை வளர்க்கும், ஊக்கப்படுத்தும்   கீழ்த்தரமான செய்கைகளில் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடு!    இதோடு மட்டுமின்றி, மாநிலங்களுக்குள் மோதலை நீடிக்க விட்டும், மதவெறியை வளர்த்தும் வருவது, இந்திய இறையாண்மைக்கு  ஆபத்து விளைவிக்கும் செயலாகும்!  காந்தியைப் போல,  இந்திரா காந்தியைப்  போல,    இந்திய தேசியத்தை  சுட்டு... ,இடுகாட்டுக்கு அனுப்பும் அறிவீனம் ஆகும்!
 

 
       இப்போதுதான் ஆரம்பித்தது போலுள்ளது. ஆயினும் இது எனது ஐம்பதாவது பதிவு!   உங்களது ஆதரவை வேண்டுகிறேன்!
 
 
 
 

5 comments:

 1. காந்தியை படுகொலை செய்த சம்பவத்தை எவ்விதத்திலும் நியாயப் படுத்த முடியாது என்பதில் தெளிவு.

  ஆனால், நாதுராம் கோட்சேவைப் பற்றிய தவறான தகவல்களைத் தந்துள்ளீர்கள். "The Murder of the Mahatma" by Justice G.D. Khosla எழுதிய புத்தகத்தைப் படிக்கவும். ஜஸ்டிஸ் கோஸ்லா கோட்சேவின் மேல் முறையீட்டு மனுவை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவராக இருந்தவர்.

  எதற்காக காந்தியை சுட்டார் என்ற முக்கியமான விஷயத்தையே தப்பாக சொல்லி இருக்கிறீர்கள். தந்துள்ள் தகவல்களை சரி பார்க்கவும்.

  ReplyDelete
 2. காந்தியின் உதவியாளராக இருந்தமதன் பியாரிலால் எழுதிய புத்தகத்தை பாருங்கள்! உண்மை புரியும்!

  ReplyDelete
 3. "இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் வரவேண்டும், ஒருவருக்கொருவர், வெட்டிக்கொண்டு சாக வேண்டும் !! என்ற படுபயங்கரத் திட்டமுடன் காந்தி படுகொலை சம்பவம் நடந்தது!"

  இதுக்காகத் தான் காந்தியை சுட்டான் என்று சொல்வீர்களானால்....விவாதித்து பயனில்லை !

  ReplyDelete
 4. வணக்கம் நண்பரே உங்களது பதிவு ஒன்றை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளோம் நன்றி.நேரம் கிடைக்கும்போது பார்த்துச் செல்லவும்
  http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_29.html

  ReplyDelete
 5. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html

  ReplyDelete