Thursday, 20 September 2012

நாடும் நடப்பும் இப்படி இருக்கு!

       ஒருவழியா  திரிணமுல் காங்கிரஸ் மதிய அரசுக்கு தந்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து  முடிவுக்கு வந்துவிட்டது தெரிகிறது!

          அசுர பலத்துடன் மேற்குவங்கத்தில் ஆட்சி செய்யும் மம்தாவுக்கு  உள்ள தைரியம் பாராட்டத் தக்கதுதான்! ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு வெளியானபோது  எதிர்ப்பு தெரிவித்து,ஆதரவை வாபஸ் பெற நினைத்தவர் மம்தா பானர்ஜி! இதனால்..  இனி, மம்தாவை நம்பினால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதை காங்கிரசும் உணர்ந்து உள்ளது!

     எனவே, அது.. பிற கூட்டணிக்கட்சிகளுடன் நெருக்கம் காட்டி,ஆட்சியை தக்க வைத்துகொள்ளும்  சூழ்ச்சியைக் கடைபிடித்து வருகிறது!  மம்தா அளித்துவரும்  ஆதரவை  விளக்கிக் கொண்டாலும் கூட  மதிய அரசு  கவில்துவிடாது என்பதும், காங்கிரஸ் ஆட்சிக்கு உடனடியாக ஆபத்து நேரிடாது என்றும் உறுதியாக நம்பலாம்!

    காங்கிரஸ் கட்சி  இதனை நன்கு அறிந்திருப்பதாலேயே, உயர்த்திய டீசல் விலையைக் குறைக்க மறுத்துவருகிறது. சிலிண்டர் மானிய கட்டுப்பாட்டை தளர்த்த மறுத்து வருகிறது! சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டு அனுமதியை திரும்ப பெற மறுத்து பிடிவாதமாக உள்ளது! காங்கிரசின் இத்தகைய போக்குக்கு  உதவியாக  அதன் கூட்டணிகட்சிகளின்  செயல்களும் இருந்துவருகின்றன .

     காங்கிரசின் கூட்டணியில் நீடித்துவரும்  தி.மு.க, சமாஜ்வாதி காங்கிரஸ் போன்ற கட்சிகளும், அநியாயத்துக்கு முட்டுகொடுக்க தயாராக உள்ள  முலாயம் சிங் யாதவ் ,லாலு பிரசாத் யாதவ் போன்றவர்களும்  தயாராக  உள்ளனர்!   காங்கிரசின் முடிவுகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும்  அதனை  பேருக்கு விமர்சனம் செய்துவிட்டு, பிறகு கண்டுகொள்ளாமல்  விட்டு விடுவதை,  காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சிகளும், கூட்டுறவுத் தலைவர்களும்  வாடிக்கையாக கொண்டுள்ளன!

     "நான் அடிப்பது போல நடிக்கிறேன், நீ அழுவதுபோல நடித்தால் போதும " என்று  செயல்பட்டு வருகின்றன!

   விலைவாசி உயர்வா? மத்திய அரசை கண்டித்து அறிக்கைவிட்டால் போதும்! பெட்ரோல் டீசல் உயர்வா? கண்டனம் தெரிவித்துஊடகங்கள் மூலம்  பேசினால் போதும். உர விலை ஏற்றமா? தண்ணீர் பிரச்சனையா? நெசவாளர்கள்  பிரச்னையா? விவசாயிகள் பிரச்னையா? எல்லாவற்றுக்கும் கண்டன ஆர்பாட்டம், இல்லையெனில் ஒருநாள் அடையாள அணிவகுப்பு, "பந்த்" என்று  ஏதாவது ஒருவகையில் மத்திய அரசுக்கு  நமது எதிர்ப்பைக் காட்டிவிட்டு,  அப்புறம் பிரச்னை தீர்ந்ததுபோல  நடந்து கொள்கின்றன!

     ஆதர்ஷ் ஊழல் விவகாரம் வெளியானபோதும், காமன் வெல்த் விளையாட்டு முறைகேடுகள்  வெளிவந்தபோதும், 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தேசமே  வெட்கி, தலைகுனிந்த போதும், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றபோதும்  இந்த கட்சிகள்  கண்டித்து,ஒப்பாரி இட்டன! பிறகு ஒதின்கிக்கொண்டு,வழக்கம்போல  காங்கிரசுக்கு ஆதரவு அளித்துவருகின்றன!

    நிலகரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டிலும் அவ்வாறுதான்  இருந்து வருகின்றன! இப்போது சில்லறை வாணிபத்தில் அந்நிய  நேரடி முதலீட்டு அனுமதியிலும் அவ்வாறே செயல்பட்டு வருகின்றன!

         இவைகளில் இருந்து நமக்கு தெரிவது என்னவென்றால்  எல்லா கட்சிகளும்  காமராஜர் சொன்னதுபோல,  "ஒரே குட்டையில்  ஊறிய மட்டைகள்" என்பதுதான்!

      மக்களின் நலனினோ,தேசத்தின் பாதுகாப்பு, முன்னேற்றம் குறித்து எந்த கட்சியும் இன்றைய  தலைவர்கள் எவரும்  பெரிதாக கவலைபடுவதில்லை என்பதுதான்!

      இதனை  நன்கு உணர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி,  "நித்திய கண்டம்  பூரண  ஆயுசு"  என்பதுபோல ஆட்சியை நடத்திவருகிறது! கிடைத்தவரை  லாபம்  என்ற எதிர்பார்ப்பில்  காங்கிரசுக்கு  மற்ற கட்சிகள் ஆதரவு அளித்து,ஆதாயம் அடைந்து வருகின்றன!

     இவர்களை நம்பியுள்ள மக்கள்தான் விழிபிதுங்கி,மனம் புழுங்கி தவித்து வரும்  நிலையில் உள்ளனர்!

ஈரோடு தமிழன்பன் ஒரு திரைபடத்திற்கு பாட்டு எழுதி இருந்தார்:

      
       கையில காசு,வாயில தோசை..
       குத்தினேன் முத்திரை,கொடுத்தாங்க சில்லறை!
       வாழ்க ஜனநாயகம்! வாழ்க ஜனநாயகம்!! 

        ஜனங்க என்ன ஆனா என்ன அண்ணாச்சி,         நமது ஜனநாயகம் வாழ்தால் போதும் அண்ணாச்சி !

    அவர் எழுதியபாட்டு போலத்தான்  நடக்குது, நம்ம.. இந்திய ராஜாங்கம் !?

Tuesday, 18 September 2012

தீக்குளிப்பு என்பது போராட்டமா?அல்லது சமூக அவலமா?


        சேலம் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் விஜயராஜ் என்பவர்,இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தீக்குளித்து உள்ளதாக நாளிதழ் செய்தி வேதனைத்தீ  மூட்டுகிறது!

          முன்பு செங்கொடி,முத்துகுமார் ஆகியோர்கள் இதுபோலவே  அரசியல் காரணத்துக்காக,அரசியல் போராட்டத்தின் அங்கமாக கருதி,தங்கள்  அங்கங்களில்  தீமூட்டி கொண்டு,இன்னுயிர் நீத்தார்கள்! இப்போது சேலம் விஜயராஜ் என்பவர் தீயிட்டுக் கொண்டுள்ளார்!

            தீக்குளிப்பு செயல்கள், அரசியல் போராட்டத்தின் ஒருபகுதியாக ஆக்கப் பட்டு விட்டதாக தோன்றுகிறது! இன்ன காரணத்துக்காக,  இவர் தீக்குளித்தார்  என்று நாளிதழ்களில்,ஊடகங்களில் இப்போதெல்லாம் செய்திகள் அதிகம் வருகிறது!

       தீக்குளிப்பு எனபது ஒரு போராட்டவகையா? போராட்ட வகை என்றாலும் அது நியாயமான போராட்டமா?  என்று நம்மில் பலரும்  எண்ணிப் பார்க்கவேண்டும்! சமூக ஆர்வலர்கள், அரசியல் அறிஞர்கள்,மனித நேய பண்பாளர்களும் தங்கள் கவனத்தை இந்த விசயத்தில் செலுத்த வேண்டும்!

     முன்பு ,வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்துகொள்பவர்கள்  பூச்சி மருந்து,விஷம்,போன்றவற்றை பயன்படுத்தியும்,தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டார்கள். இப்போது உடலில்  பெட்ரோலோ, மண்ணெண்ணையோ  ஊற்றி,தீயிட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து உள்ளது!

        சிறுசிறு காரணங்களுக்கும்,கோரிக்கைகளுக்கும் கூட.. இப்போதெல்லாம் சகிப்புத்தன்மை  இன்றி,   தீயிட்டுகொள்வது மக்களிடம்   சமீபத்தில் அதிகரித்துள்ளது..மக்களின்  இத்தகைய போக்கு சமூக சீரழிவைக் கட்டுவதுடன் கவலை  அளிப்பதாகவும் உள்ளது!

       தீக்குளிப்பு நிகழ்சிகள் தடுக்கப்பட வேண்டிய சமூக அவலம் எனபது எனது கருத்தாகும்!  தீக்குளிப்பு  போன்ற செயல்களை தடுத்து நிறுத்துவது நமது அவசிய கடமை என்று நினைக்கிறேன்! குறித்து யாருக்கும்  இதைப் பற்றி நாம் இன்னும் போதிய விழிப்புணர்ச்சி பெறவில்லை  என தோன்றுகிறது!நமக்கு தீக்குளிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பதிலாக,அதனை தடுக்கும் கடமையுள்ள,மக்களின் நலத்தை பேணவேண்டிய, அரசியலார்களும்,  ஆட்சியாளர்களும்  தீக்குளிப்பாளர்களை( இறந்தவர்களை) தியாகிகள் ஆக்கி,அவர்களின் குடுப்பதுக்கு நிவாரணம் வழங்குவதும்,நினைவுநாள் நிகழ்சிகள் நடத்துவதும்தீக்குளிப்பு போன்ற சமூக அவலங்களை  மறைமுகமாக   ஊக்குவித்து வருவதாக எண்ண  வைக்கிறது!

       இதுபோன்ற அரசின் செயல்கள் ஒருவகையில்  தீக்குளிப்பு சம்பவங்களை மேலும்  அதிகரிக்க வைக்கிறது எனபது உண்மையாகும்!

           மனித வாழ்வு எனபது  மகத்தான ஒன்று! நம்மை சுற்றியுள்ள சக மனிதர்களுக்கு, சமூகத்துக்கு  நல்லமுறையில் பயன்படுத்துவது  மிக சிறந்த வாழ்க்கை முறையாகும். அதனை விடுத்தது, உணர்ச்சிவசப்பட்டு, அற்ப காரணங்களுக்காக  உயிரைப் போக்கிக் கொள்வது  வீரமும் இல்லை,விவேகமும் இல்லை! கோழைத்தனம் ஆகும்!

        வாழ்வதற்காக பிறந்த யாரும்  இயற்கையாக ஏற்படும் மரணம் வரை வாழ்வதே,  வாழ்க்கையின் உண்மையான தத்துவமாகும்! அதை நினைக்காமல்  தற்கொலை செய்துகொள்வதும், அதுவும் தீக்குளிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு,உயிர் விடுவது தவறான செய்கையாகும்!

      தற்கொலை,தீக்குளிப்பு  போன்ற செயல்களை எந்த மதமும் ஆதரிப்பது இல்லை! ஏற்பதும் இல்லை.!!  மனித நேயம்,அன்பு,கருணை,சகோதரத்துவம் ஆகியவற்றை போதிக்கும் அனைத்து  மதங்களும்  மனிதர்களும் ஏற்கமுடியாத செயலை,    எக்காரணத்தைக் கொண்டும் செய்யாமல் இருக்க முன்வரவேண்டும்! தற்கொலை,தீக்குளிப்பு செயல்களை தடுக்க முற்பட வேண்டும்  அது குறித்து விழிப்புணர்வை  ஏற்படுத்த அரசும்,மற்றவர்களும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்!

உயிர், மனிதநேயம்,வேண்டுகோள்Saturday, 15 September 2012

முதலாளியே வருக,எங்களைக் காத்தருள்க!

      கிராமங்களில் அடுத்தவரின் இன்ப,துன்பங்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத,இரக்கம் அற்றவர்களை,சுயநல பேர்வழிகளைப் பற்றி சொல்வதற்கு என்றே,ஒரு பழமொழி இருக்கிறது! உங்களுக்கும் அது தெரிந்திருக்கும் என நினைக்கிறன். "பொண்ணு செத்தா என்ன மாப்பிள்ளை செத்தா என்ன? மலைக்கு பணத்தைத் கொடுக்கணும்!"என்பார்கள்!  இத்தகைய மன நிலையில் நமது மதிய அரசு இருந்துவருவதாக தெரிகிறது!

     அதாவது மக்களின் துயரங்களை,அவர்களது வேதனைகளை, வாழ்க்கையைப் பற்றிய அக்கறையின்றி, தான்தோன்றித் தனமாக செயல்பட்டு வருகிறது என்பதையே  மதிய அரசின் சமீப அறிவிப்பான  டீசல் விலையேற்றமும் ,ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் சமையல் எரிவாயுவுக்கு  மட்டுமே அரசு மானியம் என்று அறிவித்து உள்ளது !

        மக்களுக்கு மட்டும்தான் மானிய விலையில்)ஆறு சிலிண்டர் ! நமது  மக்கள் பிரதிநிதிகளுக்கு (எம்,பி,களுக்கு )ஆண்டுக்கு 300  சிலிண்டர்கள் வழங்கிறது,அதில் மாதரம் இல்லை,கட்டுப்பாடும் இல்லை!

         நேரடியாக மக்களை துன்புறுத்தும் டீசல்,பெட்ரோ, சமையல் எரிவாயு போன்றவை குறித்தும்,அதனால் சரக்கு கட்டண உயர்வு,விலைவாசி உயர்வு என்று அல்லாடும் மக்களைப் பற்றி கவலை கொள்ளாத மதிய அரசு, நிலக்கரி சுரங்கங்களை கட்டணம் இன்றி  தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்குவது பற்றி கவலை படுவதில்லை! தனியார்கள் அரசாங்கத்தின், தனித்த கவனத்தில் இருக்கும் செல்வச் சீமான்கள், செல்லப் பிள்ளைகள் அல்லவா? அதனால்தான் அவர்களுக்கு இந்தகைய சலுகைகள் வழங்கப் படுகிறது!  மூன்று ஆண்டில்    கார்பரேட் நிறுவனங்களுக்கு இந்திய அரசு வழங்கியுள்ள வரிச் சலுகை 13,00,000 கொடிகள்!  ஆனால் ,ஒட்டுமொத்த  இந்திய மக்களுக்கு எரிவாயு  சிலிண்டர் மணியம் 37,000 கோடி  மட்டும்தான்! அதனை வழங்க அரசு முன்வரவில்லை என்று அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகிறார்!

       இது வெல்லாம் போதாது என்று.., இன்னொரு மகத்தான திருப்பணியாகஇந்திய அரசு   அந்நிய முதலீட்டை சில்லறைவணிகத்தில்     51% சதவீதம் வரை அனுமதித்து,ஒப்புதல் வழங்கியுள்ளது!

     இரண்டு மதங்களுக்கு முன் அமெரிக்க அதிபரான," பராக் ஒபமா"  இந்தியா சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க முன்வரவேண்டும்"  என்று வலியுறுத்தி  இருந்ததை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!
 பராக் ஒபாமா வலியுறுத்தி  சொன்னதை நிறைவேற்றவே, சில்லறை வணிகத்தில்  வேகமாக  அந்நிய முதலீடு அனுமதிக்கும்  திட்டத்துக்கு மதிய அமைச்சரவை  ஒப்புதல் வழங்கியுள்ளது!

   ஆமாம்,வலியுறுத்துவது  இந்தியாவின் குப்பனோ,சுப்பனோ இல்லை! அவர்கள் வலியுறுத்தினால்  கிடப்பில் போட்டுவிடலாம்.!  சர்வ வல்லமையுள்ள அமெரிகாவின் அதிபரே  வலியுறுத்திய  பிறகு, சும்மா விட்டுவிட முடியுமா என்ன?  அந்நிய முதலீட்டை 51% வரை அனுமதித்து அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடனே இந்திய பங்கு  வர்த்தகம் ரெக்கைகட்டி பறக்கத்  தொடங்கிவிட்டது! எவ்வளவு வளர்ச்சி பாருங்கள்!!

     இந்தியாவின் சுய சார்புக் கொள்கைகள் என்னாவது?என்று நீங்கள் நினைக்கலாம்! காந்தி உப்பு காய்ச்சியது,ராட்டையில் நூல் நூற்றது, அந்நிய துணிகளை பகிஷ்கரித்தது  ஆகியவைகள்  எதற்காக? என்று நினைக்கலாம்! காந்திக்கு இந்தியாவின் மீது ,இந்திய மக்களின் மீது அக்கறை இருந்தது! அவர்களை அடிமைத் தளையில்  இருந்து விடுவிக்கவேண்டும்,சுதந்திர மனிதர்களாக்க வேண்டும்  என்ற ஆசை இருந்தது! ஆகவே,காந்தி அவைகளைச் செய்தார்!

   இன்றைய  ஆட்சியாளர்களுக்கு மகாத்மா காந்திக்கு இருந்த ஆசைபோல, இலட்சியங்கள் போல எதுவும் இல்லை! இந்திய மக்களின் எதிர்காலம், இந்தியாவின் சுய சார்ப்பு, இந்திய மக்களின் வாழ்க்கை நிலை, சுதந்திரப் போக்கு   என்று  எதன்மீதும்  ஆசை இல்லை! அக்கறையும் இல்லை!  அதுகுறித்த இலட்சியங்களும்  இல்லை!!

       ஆனால், அமெரிக்க மீது தீராத காதல் மோகம்  இருக்கிறது! அதன் சொல்லுக்கு  கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்ற அடிமை புத்தி  இருக்கிறது! ஆகவே...  இன்று,  காந்திய( வியாதிகள்) ஆட்சியாளர்கள்,  இந்தியாவின் நலன் குறித்தும்,மக்களின் வாழ்க்கை நிலைகுறித்தும் கவலைகொள்ளாமல்,  அலட்சியப்படுத்தி  வருகிறார்கள்!

   கள்ளமோகமும், கள்ள உறவும் உள்ள காமுகன்,  நியாய தர்மங்கள்,ஒழுக்க உணர்வின்றி   நடந்துகொள்வதைப் போல, இந்திய  ஆட்சியாளர்கள் இருந்து வருகிறார்கள்!

     மீண்டும் நாட்டை அடிமைப்படுத்தவும், மக்களை சீரழிக்கவும் எண்ணி இதுபோல  செயல்படுகிறார்களோ?  என்று நினைக்கத்  தோன்றுகிறது! அப்படி நாட்டை மீண்டும் அடிமைபடுதுவது கூட ஒருவகையில் நல்லது என்று நினைக்கவும் வைக்கிறது!

     ஏனெனில்,அப்படி இந்தியா  அடிமைபடுவதால்  அப்துல் களம் கண்ட,இந்திய    வல்லரசு கனவு விரைவிலேயே  நிஜமாகிவிடும் என்று உறுதியாக கூறலாம்! அமெரிகாவின் நேரடி ஆட்சியில் நமது இந்தியா வந்துவிட்டால்,  அப்போதும்  இந்தியா வல்லரசு நாடுதானே?!

"முதலைத் தொடர்ந்து, முடிவொன்று தோன்றும்;
முடிவைத் தொடர்ந்து, முதலொன்று தோன்றும்! "

  - கண்ணதாசனின் கவிதை வரிகளில் சொன்னால்......,

 முன்பு ,இந்தியா அடிமைத்தளையில் இருந்து சுதந்திர நாடானது! இப்போது சுதந்திர நாடு  என்பதில் இருந்து, அடிமைத்தளைக்கு மாறுகிறது, அவ்வளவுதான்!  எனக்கு என்ன வருத்தம் என்றால்,இப்போதுஅமெரிக்காவின்   இடைத்தரகர்கள்  ஆட்சியில்  இருக்கிறோம் என்பதுதான்!

இவர்களுக்குஇடைத்தரகர்கள் ஆட்சியில் இருப்பதைவிட, முதலாளியின் நேரடி நிர்வாகத்தில் இருப்பது  நல்லதலவா?!   ஆகவே,  முதலாளியே வருக! இடைதரகர்களிடம் இருந்து எங்களைக் காத்தருள்க!!
Friday, 14 September 2012

இன்றைய அரசியலின் மோசமான நிலை!

    இந்தியாவின் அரசியல் நிலை குறித்து சற்று கூர்ந்து கவனித்தால்  அரசியல் சுய லாபம்.இன்றி,அரசியல்வாதிகளும்,ஆட்சியாளர்களும் இன்று  செயல்படுவதில்லை என்ற உண்மை தெரிய வரும்!

   பொதுமக்களின் நல்வாழ்வுக்கு தேவையான திட்டங்களை  செயல்படுத்தும் பொது,ஏன் திட்டங்கள் குறித்து அறிவிப்பதில் இருந்தே அரசியல் ஆதாயம் என்ற கண்ணோட்டம்  ஆரம்பமாகிவிடுகிறது! ஒரு சுகாதார வளாகம் கட்டுவதாக இருந்தாலும்,சாலைகள்,மேம்பாலங்கள்,பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவதில் கூட அரசியல் ஆதாயம் இருக்கிறதா என்று பார்த்தே செய்யப்படுகிறது! அதனால்தான்  பிறகு வரும் ஆட்சியாளர்கள் முந்தைய ஆட்சியாளர்களால் தொடங்கப்பட்ட திட்டங்களை கைகழுவி விட்டு விடடு புதிதாக  திட்டங்களை தொடங்கும் நிலை ஏற்படுகிறது!

கர்மவீரர் காமராஜர்  முதலமைச்சராக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சியை சொல்லவேண்டும்!இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்பெண்ணை   ஆற்றின்  குறுக்கே, புதிய ஆணை கட்ட  திட்டமிட்டு,பணிகள்  தொடங்கப் பட்டது! நிருபர் ஒருவர், "காமராஜரிடம்,அய்யா தாங்கள் பிறந்த மாவட்டமான விருதுநகர் மக்களுக்கு பயன்படுமாறு அணைகட்ட தோன்றவில்லையா?" என்று கேட்டார்!

    காமராஜர், "எனக்கு இங்கே (கிருஷ்ணகிரி பகுதியில்)அணைகட்டுவது முக்கியம் என்று  தோன்றியதால்,அணைகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது! நான் பிறந்த விருதுநகர் பகுதியில் அணை கட்ட வேண்டும் என்று... பிறகு யாருக்காவது தோன்றினால், அவர்கள் அங்கே கட்டட்டும்" என்று பதிலளித்தார்!

 மக்களுக்கு தேவையான செயல்களை  அரசியல் கண்ணோட்டம் இன்றி பொதுநல நோக்கத்தோடு செயல்படுத்தியவர், காமராஜர்!

இன்றைய ஆளுவோர்களின் குறுகிய கண்ணோட்டத்தை,  நினைக்கும்போது  வேதனை மிகுகிறது!

  ஆட்சி மாறினால்  தொடங்கப்பட்ட திட்டங்கள்  கைவிடப்படுவதும், புதிய திட்டங்களை தீட்டி, திட்டப் பகுதிகளும்,பயனாளிகளும்,பயன்பாடும் மாறுதல் செய்யப்படும் நிலையையும் பார்க்கிறோம்! முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்டு முற்றுப் பெறாத திட்டங்களில்  முடங்கும் பணமும் மக்களின்அடிப்படை  தேவையும் கேள்விக்குறியாகி விடுகிறது!  அதைப் பற்றி ஆட்சியாளர்கள் கவலைப் படுவதும் இல்லை!

 இது ஒருபுறம் இருக்க,இப்போது  அடிப்படை தேவைகளுக்காக, நியாயமான  கோரிக்கைகளுக்கு அரசின் கவனத்தை ஈர்க்க  நடத்தப்படும் ஜனநாய  வழியிலான  போராட்டங்கள்,ஆர்பாட்டங்களும்  இன்று  அரசியல்  கண்ணோட்டத்துடன்  பார்க்கப்பட்டு,அவைகளை  முறியடிக்கும் வகையில்  எதிர்போரட்டங்கள்  நடக்கும் அளவுக்கு  அரசியல் சுயநலப் போக்குடன்   மாறிவிட்டது! தேசத்தின் எதிர்காலம்  குறித்த  கவலையை ஏற்படுத்துகிறது!

         தமிழகத்துக்கு தண்ணீர் விடக் கேட்டு  தமிழர்கள் போராடினால்,தண்ணீர் விடகூடாது  என்று கர்நாடகத்தில் எதிர்போராட்டம் நடக்கிறது! கூடங்குளம் அணு உலைகள்  ஆபத்தானது!,அது வேண்டாம்!! என்று போராடினால்,  அதற்கு எதிர் போராட்டம்  நடக்கிறது!  இவைகளுக்குப் பின்புலத்தில் ஆட்சியாளர்களின் சுயநலமும்,ஆதாயமும்   காரணங்களாக இருப்பதை காண முடிகிறது! பொது நலம், சேவை,சமுதாய மேம்பாடு,நாட்டு முன்னேற்றம் போன்ற உயர்ந்த பண்புகள் இந்திய அரசியலில் இருந்து விலக்கப்பட்டு,சுயநலமும் சுரண்டலும், ஆதாயம் பெறும்   குறுக்கு வழியாக இந்திய  அரசியல் மாற்றம் பெற்றுவிட்டது!

சரி, இப்படியே ... ஒவ்வொரு போராட்டத்துக்கும், ஒவ்வொரு செயலுக்கும், ஒவ்வொரு  திட்டத்துக்கும் நாம்   எதிர்வினை ஆற்றிகொண்டிருந்தால்  என்னவாகும்?

       எதுவும் உருப்படியாக நடக்காது! "ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு  கொண்டாட்டம் "என்பதுபோல  போராட்டத்துக்கு எதிர்போராட்டம் என்று  மக்கள் தங்களுக்குள் போராடிக்கொண்டு,இருக்கும்ஒற்றுமையை மேலும்  சிதைத்துக் கொண்டு,  இருப்பார்கள்! அரசியலை தங்களது ஆதாயம் மிக்க தொழிலாக நினைக்கும் அரசியல் வாதிகளுடன் சேர்ந்துகொண்டு,அதிகாரிகளும் சுரண்டல் பேர்வழிகளும் இந்தியாவை சீரழிப்பார்கள்!

      அது தேசத்தின் முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் நல்லதல்ல!  இதனை அனைவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்! புரிந்துகொண்டு,  நியாயமான போராட்டங்களை ஆதரிக்க முன்வரவேண்டும்!  குறைந்த பட்சம் ஜனநாயக வழியில் நடைபெறும் போராட்டங்களை எதிர்க்காமல், எதிர் போராட்டம் நடத்தாமல்  இருக்க மக்கள்  முன்வரவேண்டும்!

 சுயநல,சூழ்ச்சி  அரசியலை  புரிந்து,அதனை ஒதுக்கிவிட்டு, பொதுநல எண்ணத்துடன்  பிரச்சனைகளை  அணுக மக்கள்  சிந்திக்க வேண்டும்! அப்படி  மக்கள்  தங்களுக்குள் சுயமுனைப்பு  கொள்ளாதவரை,அரசியல் சூழ்ச்சியில் இருந்து  விடுவித்துக் கொள்ளாதவரை,மக்களுக்கு ஆட்சியாளர்களால் எந்தவித நன்மையையும் ஏற்பட போவதில்லை!  பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வுகளும் கிடைக்கப்போவதில்லை!

 "  எங்கும் பிலாக்கணங்கள்,எப்பாலும் பேய்க்கணங்கள்;
    தங்குமிடம் அத்தனையும்,சரஞ்சரமாய்  முட்கதிர்கள்!
    மங்கையர்க்கும்,மானிடர்க்கும்,மண்ணிலுள்ள யாவருக்கும்;
    ஒன்றல்ல உள்ளம்! உள்ளே இரண்டு மனம்! "

கண்ணதாசன் அன்று மனிதர்களுக்கு சொன்னது,இன்றைய அரசியல் சூழலுக்கும்  பொருந்துகிறது!

   திட்டங்கள்!

Sunday, 9 September 2012

பலிகளும், பட்டாசு தொழிலும்!

   சிவகாசி பட்டாசு விபத்து சமீபத்தில் நடந்த மிகப்பெரும் சோகம்!

      இந்த ஆண்டில் பத்துக்கு மேற்பட்ட விபத்துகள்  நடந்துள்ளன! ஒன்பது முறை பட்டாசு தொழிற்கூடங்களில் விபத்து நடந்தபோதும்  கண்டுகொள்ளாத, தடுப்பு முறைகளை கடை பிடிக்காத  பட்டாசு ஆலை முதலாளிகள்,பத்தாவது முறையாக...  பல அப்பாவி தொழிலாளர்களின்  உயிரைப் பறித்த பிறகு, இறந்த உயிர்களுக்கும்,நடந்த விபத்துக்கும்  துக்கம் அனுசரிக்க போவதாக அறிவிகிறார்கள்!

          பத்துக்கும் மேற்பட்ட விபத்து நடந்து  பல உயிர்கள் பலியானபிறகு, தவறு நடந்துவிட்ட பிறகு  எதிர் காலத்தில்  இதுபோன்ற தவறு நிகழக்கூடாது  என்று காட்டிகொள்வதற்கும்,அரசும் நிர்வாகமும் சரியாக இயங்குவதாக கட்டுவதற்கும்  பட்டாசு தொழிற்சாலைகளின்  பாதகாப்பு குறித்தும், விபத்துகளைத் தடுப்பது குறித்தும்  குழுக்கள் அமைத்து ஆய்வு செய்ய போவதாக அரசும் அரசு அதிகாரிகளும்  அறிவிக்கிறார்கள்!

        தும்பைவிட்டு வாலைப் பிடிப்பதே  அரசின் வேலையாக இருக்கிறது! விபத்து போன்ற விபரீதங்கள் நடந்த பிறகு,  அரசு அறிவிக்கும் இதுபோன்ற நடைமுறைகளால்  புதிதாக எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை ! சிறிது  காலத்துக்குப் பிறகு  புதிதாக நடைமுறைப் படுத்தபட்ட விதிமுறைகள் , சட்ட திட்டங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு, தங்கள்  விருப்பம்போல் நடந்துகொள்ளவதும், அரசு அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளாமல் போவதும் வாடிக்கையாகி விடுகிறது!  அவ்வாறு பிறகு நேர்ந்தாலும்  விபத்துகளில் தொழிலாளர்கள்  இறந்துவிட்டாலும் ,  ஒரு லட்சமோ,இரண்டு லட்சமோ நிவாரணம் கொடுப்பதோடு,அரசு  தனது கடமையை முடித்துக்  கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க போயவிடும்!

       பட்டாசு போன்ற பொருட்களால் இப்படி மனித உயிர்கள் பலியாவதும் அரசு அலட்சியமாக செயல்படுவதும் ஒருபுறம் இருக்கட்டும்! உண்மையிலேயே பட்டாசு நமக்கு தேவைதானா? மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றா?
முன்பெல்லாம் ஏதோ தீபாவளி பண்டிகை என்றால்,அன்றுமட்டும்  தேவைப்படும் பொருளாக இருந்த பட்டாசு இன்று  நுகர்வு கலாச்சாரத்தாலும், சிலரின் சுயநலத்துக்கு ஆகவும்  எப்போதும் பயன்படுத்தும் பொருளாக ஆக்கப்பட்டு உள்ளது!

      இந்தியாவில்  இப்போது  ஒருவிதமான  பட்டாசுபோதை ஏற்றப்பட்டு உள்ளது!  யாராவது இறந்துவிட்டாலும்  பட்டாசு வெடிக்கிறார்கள்.! தேர்தலில் நாமினேசன் போடப்  போனாலும், போட்டுவிட்டு(? ) வந்தாலும் வெடிக்கிறார்கள்!  ஜெயிச்சா  வெடிக்கிறார்கள்.! யாராவது தலைவர்கள் வந்தால், வரவேற்க வெடிக்கிறார்கள்.! தலைவர்கள் பிறந்த நாளுக்கு வெடி வைக்கிறான் ! ஊர்வலமா? அதற்கும்  பட்டாசு வெடிக்கிறார்கள். மாநாடா  அப்போதும் பட்டாசு சத்தம் கேட்கிறது! கிரிகெட்டுல ஜெயிச்சா... சொல்லவே வேண்டாம்,  ஊரே அமர்களமாகுது ! சமயங்களில்  ஏழைகளின் குடிசைகளும் பட்டசுக்களால் எரிகின்றன!

       முன்பெல்லாம் தீபாவளிக்கு  ஒருவாரமோ,பத்து நாட்களுக்கு முன்போ பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு, வியாபாரம் நடக்கும்! ஆனால், இப்போது ஆண்டுமுழுவதும் கடைகளில் வியாபாரம் செய்யபடுகிறது! நகரங்களில் முக்கிய சாலைகள்,மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடங்களிலும் பட்டாசு குடோன்கள்  எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றப்படாமல் ஸ்டாக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது!

       எந்த நேரத்தில் எந்த இடத்தில வெடிக்குமோ?,விபத்து ஏற்படுமோ!,மனித உயிர்கள்இழப்பும்  பொருளாதார பதிப்பும்  ஏற்படுமோ? என்று  நமக்கு கவலை ஏற்படுகிறது! ஆனால் இவைகளையெல்லாம்  கவனிக்கவேண்டிய,  தடுக்க வேண்டிய அரசும் அதிகாரிகளும் அதிகாரிகள்  கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார்கள்!


        பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தும் தேவையற்ற  உற்பத்திப் பொருளான  பட்டாசு  உற்பத்தியை,இத்தனை ஆபத்துக்களுக்கு பிறகும்  ஏன் தொடரவேண்டும்? தொடர்ந்து நடத்த அரசு அனுமதிக்கவேண்டும்?அரசும் சமூக நலத்தில்,சுற்று சூழலில் அக்கறையுள்ளவர்களும் சிந்திக்க வேண்டும்!

     மக்களின் காசையும் கரியாக்கி,நமது நாட்டையும் மாசுபடுத்தும்  பட்டாசுகளை,  ஏன் உற்பத்தி செய்ய வேண்டும்? அதனால் நாட்டுக்கு என்ன பெரிய வருவாய் கிடைத்துவிடப்போகிறது? அப்படியே கிடைத்தாலும் அந்த  வருவாய் நமக்கு தேவைதானா?  பட்டாசுகளால் ஏற்படும் பாதிப்புகள், இழப்புகளுக்கு அது ஈடாகுமா? யோசியுங்கள்!

      பட்டாசு தொழில் ஈடுபடும் அப்பாவி தொழிலாளர்களுக்கு, அவர்கள்  செத்தபிறகு கொடுக்கும் அரசு கொடுக்கும்  நிவாரணங்களை...தொழிலாளர்கள்  உயிருடன் இருக்கும்போதே,  அவர்களுக்கு  வட்டி இல்லாத கடனாகவோ, உதவித் தொகையாகவோ வழங்கி,அவர்களை  பாதுகாப்பான வேறு தொழில்களை செய்யவும்,வேறு தொழிலில் ஈடுபடுத்தவும் அரசுகள் முன்வரவேண்டும்! நிரந்தரமாக பட்டாசு போன்ற மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தொழில்களை தடை செய்யவேண்டும்! அப்படி செய்யாமல்  பேருக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளால் எந்தபிரயோசனமும் ஏற்படப்போவதில்லை!!

     அப்பாவிப் பொதுமக்களின்  உயிருக்கு  அப்போதுதான் அரசுகள்  மதிப்பளிப்பதாக  இருக்கும்! இல்லையென்றால்,சிவகாசி விபத்துகள்   தொடர்வதும்  மனித உயிர்கள் பலியாவதும் தடுக்கமுடியாது!

 நடவடிக்கை!

Thursday, 6 September 2012

சுரங்க ஊழலும், அதுசொல்லும் பாடமும்!

        நிலக்கரி சுரங்க ஒதுகீட்டில் முறைகேடு நடந்துள்ளது,முறையற்ற ஒதுக்கீட்டினால்  அரசுக்கு 1,86,000,00,00,000 கொடிகள் இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று தணிக்கைக் குழு கொழுத்திப் போட்ட அறிக்கையினால் காங்கிரஸ் கட்சி விழி பிதுங்கி வருகிறது! பி.ஜே.பி, விட்டேனா பார் என்று ஒதுக்கீடு உரிமங்களை ரத்து செய்,பிரதமர் பதவி விலகவேண்டும் என்று கூறி பாராளுமன்றத்தை நடத்த விடாமல் முழக்கம் இட்டு வருவதும் தான் இன்றைய சூடான விவாதப் பொருளாக இருந்து வருகிறது!

    இதற்குமுன்  2 ஜி.அலைகற்றை ஊழல் முறைகேடுகள் குறித்து எழுந்த புகாரின் பேரிலும் ஏறக்குறைய  இதுபோன்ற நிலைமையே நீடித்தது!

   இந்திய அரசியல்வாதிகளுக்கு  ஊழலும் முறைகேடுகளும் புதியதில்லை.! சொல்லபோனால் ஊழலுக்கு எதிராக போராடுவதாக இன்று  சொல்லும்  பி.ஜே.பி-க்கும்  ஊழலும் முறைகேடுகளும் புதிதல்ல.! அந்த கட்சியின் ஆட்சி காலத்தில் சவப்பெட்டி வாங்கியது முதல் ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்கியது வரை  ஊழல் குற்றச்சாட்டுகள்  எழுந்ததை மறந்துவிட முடியாது!  பின் எதற்கு  ஆளும் காங்கிரசும்,எதிக்கட்சியான பி.ஜே.பி-யும்  இப்படி முட்டி மோதிக் கொள்கின்றன?

      எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டே  இரண்டுகட்சிகளும்  ஒன்றை ஒன்று  சாடிக் குற்றம் சுமத்தி  வருகின்றன! இதன்மூலம் இரண்டு கட்சிகளுமே மக்களின் அடிப்படை பிரச்சனைகளில்  தங்களது பங்களிப்பைச் செய்யத் தவறி வருகின்றன! தங்களுக்கு இருக்கும் நெருக்கடிகளை திசைதிருப்ப  ஊழல்,முறைகேடுகளை பயன்படுத்தி வருகின்றன! இத்தகைய போக்கு ஜனநாயகத்துக்கு மிகவும் கேடானதாகும்! அப்பாவி மக்களின் எதிர்பார்ப்புகளைப் புறக்கணித்து விட்டு, ஊழால் செய்வதில் நான் முந்தியா? நீ யோக்கியமா  என்று கேட்டு  இக்கட்சிகள் போராடுவதும்,அதனை ஒட்டுமொத்த  நாடும் மவுனமாக பார்த்துக்கொண்டு,சகித்துக் கொண்டு இருப்பதும்  சரியா?  என்று சிந்திக்க வேண்டியுள்ளது!

       முறைகேடுகளால்  இந்திய அரசுக்கு ஏற்ப்பட்டுள்ள (இழப்பு)நிதியானது  , மக்களின் அடிப்படை  திட்டங்களை செயல்படுத்த  பயன்படடவேண்டிய  நிதியாகும்! அந்த நிதி  மக்களுக்கு சேராமல் தடுக்கப்பட்டு,கொள்ளையிடப்பட்டு உள்ளது!  சிலரின் சுரண்டல்,சுயலாபத்துக்காக  அரசு செயல்பட்டு,ஒட்டு மொத்த மக்களின் நலத்துக்கு தீங்கு இழைக்கப்பட்டு உள்ளது!

அரசின் தவறான கொள்கைகளால்,முறைகேடுகளால் ஏற்படும்  வருவாய் இழப்பை அரசு எப்படி சரிசெய்யும்  என்று பார்த்தால்  ஏற்கனவே,விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் மக்களிடம் மேலும் கூடுதலாக  வரிவிதிப்புகள் செய்து ஈடுகட்டவே வேண்டியது இருக்கும்! அந்தவகையில் அரசுக்கு ஏற்படும் ஒருரூபாய் இழப்பு எனபது மக்களைப் பொறுத்தவரை  இருமடங்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் எனபது எதார்த்தமாகும்!  

       இதில் வேதனை என்னவென்றால்போராடும் அம்மக்களின் போராட்டம் எவ்வளவு நியாமானது என்பதை  நியாய உணவுள்ளவர்கள் நினைத்துப் பார்க்கவேண்டிய தருணம் இது!

    நிலக்கரி,,இரும்புத் தாது உள்ளிட்ட கனிமவளங்களை,இயற்கை வளங்களை  சிலர் சுரண்டி கொள்ளை லாபம் அடைவதையும்,அவர்களால் தங்களது வசிப்பிடங்கள்,வாழ்வாதாரங்கள்  பறிபோவதையும்  எதிர்த்து போராடும் மக்களை,  ஒருபுறம் அழித்து  கொண்டே... மறுபுறம் இத்தகைய  முறைகேடுகளை  செய்துவருவதுதான்!

     தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருவதைத் தடுக்கவும்,முறைகேடுகளைக் களையவும் வழிவகைகளை ஆராய வேண்டும்! ஊழல் அரசியல்வாதிகளின்,அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய மக்கள் ஒன்று திரண்டு போராட முன்வரவேண்டும்! உடந்தையாக இருந்த அதிகாரிகள்  அனைவரையும் தண்டிக்கவும் பதவி நீக்கம் செய்யவும் கோரி போராட வேண்டும்!
 
      நிலக்கரிசுரங்க  ஒதுக்கீடு,முறைகேட்டில் இருந்தும்,அரசுக்கு ஏற்பட்டு உள்ள வருவாய் இழப்பில் இருந்தும்  நிலக்கரி சுரங்கங்களுக்காக  தங்களது வாழ்விடங்களை இழந்து, வெளியேற்றப்படும்  அம்மக்களின் போராட்டம் எவ்வளவு நியாமானது என்பதை   நியாய உணவுள்ளவர்கள் நினைத்துப் பார்க்கவேண்டிய தருணம் இது!

       உரிமை கோரி போராடும் அம்மக்களின் போராட்டத்தை அங்கீகரிப்பதுடன்  நாமும் ஊழல்,முறைகேடுகளை எதிர்த்து  குரல்கொடுக்க முன்வர வேண்டியது  காலத்தின் கட்டாயமாகும்!

     இந்த மெகா ஊழலில்,ரிலையன்ஸ் நிறுவனம் 30,000 கோடி பயன் அடைந்த விவகாரமும் அரசு விமான நிறுவனத்தின் நிலத்தை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ஏற்பட்டு உள்ள 4,500 கோடி இழப்பும் காணமல் போய் விட்டது !  தவிர  குஜராத் குற்றவாளிகள் பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெறுவதும் தடுக்கப்பட்டு விட்டது!

        ஒரு ஊழலை மறைக்க வேண்டுமா? அதைவிட பெரிய ஊழலை செய்தால் போதும்  என்றாகி விட்டது,இந்திய  திருநாட்டில்!

       என்ன தந்ததாம் இந்த சுதந்திரம் ?
       அப்பனின் திருவோட்டைப்  
       புதிரனுக்குப் புதுப்பித்து தந்தது 
       இந்த சுதந்திரம்! 

        அயல்நாட்டன் இட்ட..
        விலங்குகளை உருக்கி,
        உள்நாட்டு விலங்குகளை 
        உற்பத்தி செய்தது,சுதந்திரம்!

     -கவிஞர்  வைரமுத்து கவிதை இது! இந்திய உழைக்கும் மக்களின் நிலைக்கு இன்றும்  சரியான எடுத்துகாட்டு!

Tuesday, 4 September 2012

பாசிச இந்துத்துவ படைகளும் செயல்களும் !


    உலகமெங்கும் உரிமைகோரிப் போராடும் மக்களுக்கும் இந்தியாவில் போராடும் மக்களுக்கும் இடையில்  ஒரு வித்தியாசம் இருப்பதை பார்க்க முடிகிறது!

   ஒடுக்கப்படும் மக்கள் , தங்களை தொடர்ந்து ஒடுக்கிவரும் பாசிச சக்தியை  எதிர்க்கவும், தங்களது உரிமைகளை பெறவும்,தங்களை ஒடுக்கி வரும் பாசிச சக்திகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்  கொள்ளவும் ஒரு அமைப்பாக,ஒரு  அணியாக  ஒன்றிணைந்து போராடுவது உலகமெங்கும் இருந்து வரும் நடைமுறையாகும்!

   உலகில் நிலவிவரும் இத்தகைய  நடைமுறைக்கு,  வழக்கத்துக்கு மாறாக, இந்தியாவில்  பாசிச சக்திகள் ஒன்று சேர்ந்தும்,   அமைப்புகளாக  திரண்டும் ஒடுக்கப்படும் மக்களை  மேலும் ஒடுக்க முற்பட்டுவரும்  விபரீதத்தை  இந்தியாவில்தான் பார்க்க முடியும்!

 உழைக்கும் மக்களுக்கு எதிரான  இத்தகைய அமைப்புகள்  ஒடுக்கும் மக்களை  அழித்துவிட...  அணிதிரண்டு வருகிற பயங்கரமும் கொடூரமும் இந்தியாவில் தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லை என்றே கூறலாம்!

          ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராக  அணி திரண்டு,அமைப்பாக செயல்பட்டுவரும்  இந்துத்துவ பாசிச சக்திகள், இந்தியாவில் பல்வேறு அமைப்புகளின் பெயரில்  தொடர்ந்து இயங்கியும் வருகின்றன!  இத்தகைய பாசிச சக்திக்கு  இணையாக  வேறு எந்த நாட்டின் பாசிச சக்திகளையும்  இணையாக சொல்ல முடியாது!  எனவே,   இந்தியாவில் உள்ள இந்துத்துவ பாசிசத்தை,ஏனைய நாடுகளின்   பாசிச சக்திகளுக்கு  முன்னோடி என்றே சொல்லலாம்! பாசிசத்தின் ஆணிவேர் என்றும் இந்துத்துவ பாசிசதைச் சொல்லலாம்!

     பாசிச இந்துத்துவ சக்தியானது,  ஏனைய பாசிசத்துக்கு முன்னோடியாக உள்ளதுடன், அது, இந்தியாவில் தொடர்ந்து  உழைக்கும் மக்களை  சுரண்டி,ஒடுக்கி வருவதுடன், நின்றுவிடவில்லை!   அவைகள்  உழைக்கும் மக்களையே  தங்களது நோக்கத்தை  செயல் படுத்துவதற்கு   பயன்படுத்திக்கொள்ளும் உத்தியையும்,அதாவது தங்களது பாசிச அமைப்புகளுக்குஉறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு  இந்து மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தியும் வருகிறது!  மதத்தின் பெயரால் செய்து வரும்  பாசிசம் ,சமீப காலமாக  தனது நோக்கத்தில்  வெற்றியும்  அடைந்தும் வருகிறது!

         இந்துத்துவ பாசிசத்தின் இத்தகைய  வெற்றிக்கு காரணம்  அது,ஆர் எஸ்.எஸ்  மூலம் ஊடகம்,உளவுத் துறை  என்ற இரண்டு அசைக்க முடியாத{ஆயுதத்தை } சக்தியைப் பயன்படுத்தி, இந்தியா முழுவதும் குறுகிய காலத்தில் தன்னுடைய பாசிச சிந்தனையை பரப்பியதால்தான்.!

            இன்று நாடுமுழுவதும் 44000 கிளைகளை (ஷாகாஸ்)யும் 30000 நகரங்களிலும்,ஊர்களிலும் ஆர்.எஸ்.எஸ் இயங்கிவருவதாக ஒரு  புள்ளி விவரம் கூறுகிறது!

      22,டிசம்பர் 2008-யில் வெளிவந்த,"அவுட் லுக் " இதழில்  "அருந்ததி ராய் ",         "9 IS NOT 11 AND NAVEMBER ISN'T SEPTEMBER " என்ற கட்டுரையில்-ஆர்.எஸ்.எஸ்-க்கு  45000 கிளைகள் உண்டு,அதனுடைய அறக்கட்டளைகள்,மற்றும்ஏழு மில்லியன்  தன்னார்வ ஊழியர்கள்  மூலம் இந்தியா முழுவதும்( சிறுபான்மையினர் மீது )தன்னுடைய வெறுப்புக் கொள்கையை பரப்பி வருகிறது என்கிறார்! 

   பாசிச இந்துத்துவம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள,அதாவது உழைக்கும் மக்களை  தொடர்ந்து சுரண்டிவரவும்,அவர்களை தொடர்ந்து ஒடுக்கி வரவும்   பல்வேறு செயல் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறது ! இந்துத்துவ பாசிசத்தின்  இந்த செயல்திட்டங்களை நிறைவேற்ற  பாசிச சக்திகள்   அரசியல் பிரிவு,வன்முறைப் பிரிவு,மாணவர் பிரிவு, கல்விப் பிரிவு,சிந்தனைப் பிரிவு,எழுத்துத் துறை,மதப் பிரிவு,சமுக ஒருங்கிணைப்புப் பிரிவு தத்துவப் பிரிவு  என்று பல்வேறு பிரிவுகளாக அணிதிரண்டுள்ளன.

பச்சிச சக்திகளின் இத்தகைய  பிரிவுகள் அனைத்தும் இந்தியாவை  இந்து ( பாசிச )நாடாக்க வேண்டும் என்ற  பொது சிந்தனையைக் கொண்டு,செயலாற்றி வருபவைகளே!

      இந்தியாவை   இந்து நாடாக்க வேண்டும் என்றால்,  அனைவரையும் இந்துக்களாக  மாட்டவேண்டும்!  அது இந்த்யாவின் இறையாண்மைக்கு,சமய நல்லிணக்கத்துக்கு  எதியானது மட்டுமல்ல,எப்போதும் நடைபெற இயலாத ஒன்று  என்பதால்தான்,இந்தியாவில்   இந்துவாக இல்லாத மக்களை, அதாவது முஸ்லிம்கள்,கிருத்துவர்கள் போன்ற சிறுபான்மை மக்களை தொடர்ந்து எதிர்த்து வருகிறது! சிறுபான்மை மக்களை  தொடர்ந்து  ஒடுக்க முற்ப்பட்டு வருகிறது!

பாசிச இந்துத்துவத்தின்  இந்த  ஒடுக்குமுறைக்கு  ஆதரவாகவே இந்தியாவில்  மதகலவரங்கள் நடத்தப்படுகின்றன!மதக் கலவரங்களை  பெரிய அளவில் நடத்தவும், சிறுபான்மையினரை  ஒடுக்கி,அழிக்கவும் வேண்டியது   பாசிச  இந்துவத்தின் தேவை,மற்றும்  செயல் திட்டமாக  உள்ளபடியால்,  பாசிச  அணிகள் நாடொறும்  சிறுபான்மை இன மக்கள்  தேச துரோகிகள் என்றும், அவர்கள்  தீவிரவாதிகள்  என்றும்  சாமானிய மக்களிடம்  துவேசத்தை பரப்பியும்,வளர்த்தும்  வருகிறது!

சிறுபான்மை இனத்தவர்களை  நாட்டின்  பொது  பொது எதிரியாக காட்டி வருவதால் தங்களது   சுரண்டலை தொடர முடியும் என்று பாசிச இந்துத்துவம்  நம்பிவருவதுடன்  மூலம்  உழைக்கும் மக்களை  கொண்டே  சிறுபான்மை இனத்தவர்களை  அகற்றிவிடவும் முடியும் என்ற உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளது!  இத்தகைய நோக்கத்துக்கு பயன்படுவதே," நாமெல்லாம் இந்து"என்பதும்,"இந்துக்களே ஒன்று சேருங்கள்" என்பதுபோன்ற கோஷங்கள்  பாசிச சக்திகளால்  முன்வைக்கப் பட்டு வருகின்றன!

ஆகவே ,இந்து என்றபாசிச  உணர்வு   எப்போதும்  உழைக்கும் மக்களுக்கு எதிரானது! அது ஒரு குறிப்பிட்ட சாதியினரின் சுரண்டலுக்கும்,சுக போகத்துக்கும்  உருவாக்கப்பட்டது! இந்துத்துவம் என்ற பாசிச வெறி உள்ளவரை,அதன் ஆதிக்கம் இந்தியாவில் நீடிக்கும் வரை இந்தியா கல்வி,வேலை, பொருளாதாரம்,நாகரீகம், பண்பாடு உள்ளிட்ட எதிலும் தன்னிறைவு அடைய முடியாது! உண்மையான  சமத்துவமும், ஜனநாயகமும் ஏற்படாது .  ஏழ்மையும், அடிமைத்தனமும் நீடிக்கும் நாடாகவே அது இருந்துவரும்! எப்போதும் சமஆரிமையும்,சகோதரத்துவமும் அமைதியும்  இல்லாத  நாடாகவே இந்தியா இருந்து வரும்!


குறிப்பு :இணைய நண்பர்களுக்கு வணக்கம்! 

 (எனது பதிவுகளை பார்வையிட்டு, கருத்துக்களை,விமர்சனங்களை வழங்கிய அனைவருக்கும்  நன்றி!

         இப்பதிவுகளை "பாசிசத்தின் ஆணிவேர்- பிராமணீயம்" என்ற தலைப்பில் நூலாக வெளியிட உள்ளேன்! நூலாக வரும்போது,பதிவுகளில் விடுபட்டுள்ள   ஆதாரங்கள், தேவையான சேர்க்கைகள் ஆகியவைகளுடன் எனது  தீர்வாகவும் சிலவற்றை கூறுவேன்!

            இந்துத்துவம் குறித்த தொடர்பதிவுகளால் நடப்பு  அரசியல், பல்வேறு நிகழ்வுகள் குறித்து  எழுத முடியவில்லை! இனி தொடர்ந்து நடப்பு அரசியல் குறித்து எழுதுவேன்!

- அன்புடன், ஹோசூர் ராஜன்!


Wednesday, 1 August 2012

இந்துத்துவ சக்திகளின் இந்து ஒற்றுமை முழக்கம் எதற்காக?

       இந்துத்துவ சக்திகள்,இந்துக்களே ஒன்று சேருங்கள்,நாம் இந்துக்கள் என்று அவ்வபொழுது கோஷமிட்டு வருகின்றன! உண்மையிலேயே இந்துக்கள் ஒன்றாக  வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அவைகள் இப்படி கூறுவதாக,வலியுறுத்துவதாக நினைப்பது பேதைமையாகும்!
 
     இந்தியாவில், இந்துகளாக அடையாளப்படுத்தும் மக்கள் 4000-க்கு மேற்பட்ட சாதியினர்  உள்ளனர்!

   தமிழகத்தில் அரசு இதழ்களில் பட்டியலிட்டுள்ள சாதிகளில், பிற்படுத்தப்பட்டோர்கள் பிரிவில் 132 சாதிகளும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 41சாதிகளும் ,இவர்களுடன் சீர் மரபினர்  என்ற வகையில் 68 சாதிகளும் உள்ளனர்! தாழ்த்தப்பட்டோர்கள் சாதியினர் மட்டும் 76 உள்ளனர். பழங்குடியினர் பட்டியலிட்டுள்ள சாதிகள் 36 இருக்கிறது! இவர்களை விடுத்து,முற்படுத்தப்பட்ட சாதிகள்  என்னும்  பட்டியலில் ஏராளமான சாதிகள் இருந்து வருகிறது!

       இப்படி.. மனுதர்மத்தின் நால்வகை  சாதிகள்,  இன்று  பல்கிப்பெருகி இருப்பதை எல்லோரும் அறிவர்!

     இன்று  பெருகி உள்ள சாதிகள் குறித்து ...       "இந்து மதமானது, மிகவும்  உயர்ந்த மதம்,புண்ணிய புருசர்கள், எத்தனையோ   மகான்கள், ஞானிகள், அவதார புருஷர்கள் தோன்றி அதன் புகழை  நிலைநாட்டிய மதம் என்று  வாய்கிழிய  பேசும் இந்துத்துவ சக்திகளுக்கும்,  ஆன்மீக மடாதிபதிகள், சாமியார்கள்,காமியார்களுக்கும்" அறிந்த உண்மைதான்!

      நம்மைபோலவே அறிந்த உண்மையான இதனைப் பற்றி,  இந்துமதத்தில் உள்ள சாதிகளைப் பற்றிமேற்சொன்ன மேதாவிகள் யாரும்   கவலைப் பட்டவர்கள் இல்லை! சாதி  என்ற கருவியானது, மனிதனை பாகுபடுத்தி,பிளவு படுத்தி  வருகிறது. மனிதர்களிடையே வேற்றுமையை வளர்த்து வருகிறது!  மனிதர்களிடம் அன்பையும்,அமைதியையும் ஏற்படுவதற்கு தடையாக இருக்கிறது!  என்று உணர்ந்தவர்கள் இல்லை! உணர்ந்து  அதனை அகற்றப் போரடியவர்களோ, அதுகுறித்து தெளிவான சிந்தனை கொண்டவர்களோ இல்லை!

     மாறாக , சாதிய வேறுபாடுகள்  இருப்பதை உணர்ந்து, அதனை அங்கீகரித்தும்,  அதனை நியாயப்படுத்தி ,சென்றவர்களாகவே இந்துமத ஞானிகள, மடாதிபதிகள்  இருந்து உள்ளனர்! இன்றும் இருந்து வருகின்றனர்!

       இந்துக்களிடம் ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் இந்துத்துவ வாதிகள் யாரும் இல்லை!  ஒரே சமயத்தைச் சேர்ந்த,இந்துக்களான மக்களிடம் இத்தனை சாதிகள் இருப்பது தவறு என்று சொல்லக்கூடியவர்கள் இல்லை,அதனை நீக்கப் போராடுபவர்கள் இல்லை! குறைந்த பட்சம் ஆலயத்தில் எல்லோரும் ஒன்றாக சென்று, ஆண்டவனை வணங்கலாம்!  என்று சொல்லகூட தைரியம் இல்லாத, முன்வராத  ஆன்மீக குருக்கள்,லோக குருக்கள்,சாமியார்கள்தான்  இன்றுவரை   இருந்துவருகிறார்கள்! 

      இத்தகைய காரணங்களால், இந்துவாகப் பிறந்த பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகியோர்கள் பல கோயில்களில் நுழையவே முடியாத நிலை இருந்து வருகிறது!

     இந்து சம்பிரதாயங்கள்,நம்பிக்கைகள் கொண்ட இனங்கள்,   இந்துகளாக அடையாளப்படுத்தப் பட்டு,உள்ளார்கள் ! இந்துக்கள் என்போரின் வழிபாடு முறைகளும்,வழிபாட்டு அளவீடுகளும்,அவர்கள் நடத்தும் திருவிழாக்கள், பண்டிகைகளும் கூட...   சாதிக்கு சாதியும்  இனத்துக்கு இனமும்   வேறாக இருப்பதை காணலாம்!  இந்தியாவில் இந்துக்கள் எனபடுபவர்கள் ஒரே இனமாக உள்ளவர்கள் இல்லை!   எனவே  இத்தகைய முரண்பாடுகள், ஏற்றதாழ்வுகள்  உள்ள,  பல்வேறு நம்பிக்கை,கலாச்சாரம்உள்ள மக்களை  "இந்து"  என்று சொல்லி  அவர்களிடம் ஒற்றுமை ஏற்படுத்த முடியாது!  முடியவே முடியாது!! 

   இந்துக்கள் ஒன்றுபடுவது,சாத்தியமில்லை  என்பதை தெரிந்தும்,   நடக்கவே இயலாத ஒன்றை பின் எதற்காக  இந்துத்துவ சக்திகள் தெரிந்தே முழங்கி வருகிறார்கள்?  கூக்குரல் இடுகிறார்கள்?

     கட்டுக் கோப்பான மதமாக உள்ள சிறுபான்மை சமூகங்களில் உள்ள மக்களின் உழைப்பை,  இந்துத்துவ பாசிச சக்திகளால் சுரண்ட முடியாது.!  ஆனால், ஒடுக்கப்பட்டு,பெரும்பான்மையாக  உள்ள இந்து மக்களை சுரண்ட முடியும் என்பதாலும்,அவ்வாறு சுரண்டப்படும் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள்,  தங்களது  சுரண்டலுக்கும்,ஊழலுக்கும் எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் கிளர்ந்து எழாமல் பார்த்துகொள்ளவும், கிளர்ந்து  அவர்களின் எழுச்சியைத் தடுப்பதற்கும்  தேவைப்படும் சதித் திட்டம்தான்   " இந்து ஒற்றுமை" என்பதாகும்! இதனாலேயே  இந்து ஒற்றுமைக்  கோஷம் இந்துத்வ, பாசிசவாதிகளால் தொடர்ந்து எழுப்பப்படுகிறது!

      இந்து ஒற்றுமை என்ற கோஷம் , ஒடுக்கப்பட்டபெரும்பான்மை  மக்கள், இஸ்லாமியர்,கிருத்துவர்,சீக்கியர்கள் போன்ற மக்களுடன் இணைவதையும்,அவர்களுடன் சேர்ந்து தங்களது மனித உரிமைகளைப் பறிக்கும் உயர்சாதி இந்துத்துவ  சக்திகளை எதிர்ப்பதையும்  தடுகிறது!

   ஒடுக்கப்பட்ட மக்களின் பொது எதிரி இந்துத்துவ பாசிச சக்திகள் ஆகிய நாங்கள் இல்லை என்று காட்டவும் பயன்படுகிறது!

    தொடர்ந்து.. இந்துத்துவ பாசிச சுரண்டலுக்கும் சுகபோகத்துக்கும் இந்து ஒற்றுமை கோஷம்  பயன்படுகிறது!

     ஒடுக்கப்பட்ட மக்களுக்கு  ஆதரவாக  மண்டல் கமிஷன் அமுலாக்கப் பட்டபோது,உயர்சாதி இந்துக்கள் அதனை எதிர்த்து போராடினார்கள்! ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள்,தங்களுக்கு எதிராக உயர்சாதி இந்துக்கள்,ஆதிக்க சக்திகள்  போராடிய பொது, இந்துமதத்தில் தங்களது நிலை என்ன என்பதை  உணர்ந்தனர்! "தாங்கள் இந்துக்கள் இல்லை" என்று  உணர்ந்து கொள்ளவேண்டிய தருணம் ஏற்பட்டது!

        உயர்சாதி  இந்துகளை  எதிர்க்க, ஓரணியில் திரண்டனர்! ஒடுக்கப்பட்ட மக்களை நேரடியாக  எதிர்க்க முடியாத,உயர்சாதி இந்துக்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு  தங்கள்மீது ஏற்பட்டு இருக்கும் எதிர்ப்பை திசை திருப்ப, பாபர் மசூதியை,ராமன் பிறந்த இடம் என்று கூறி திசைதிருப்பினர்!, இந்து ஒற்றுமை என்ற  முகமூடியணிந்து, தங்களை தற்காத்துக் கொண்டதுடன்,அதனை இஸ்லாமிய எதிர்ப்பாக மாற்றவும் செய்தனர்!

 பாசிச , இந்துத்துவத்தின்  முகமூடிகளில்,தந்திரங்களில் ஒன்றாக இந்து ஒற்றுமை என்ற முழக்கம் பயன்படுகிறது!Saturday, 28 July 2012

இவர், இந்திய அடையாளம்! இப்போது காணவில்லை!!

     இந்துதுவசக்திகள் பிரதானமாக முன்வைக்கும் முழக்கமாக இருப்பது, "இந்துக்களே ஒன்று படுங்கள்" எனபதுதான்! இந்துக்களின் ஒற்றுமையை முக்கியமானதாக வலியுறுத்தும்  இவர்களின் உள்நோக்கம், "பாசிச ஆதிக்கத்தை தொடர உதவுங்கள்"  எனபதுதான்.! தவிர மதத்தின் பெயரால் இந்துக்கள் எல்லோரும் ஒன்று(? )  என காட்டி,முஸ்லிம்களை  அந்நியர்கள்,இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று அடையாளபடுத்தி,அப்புறம் அவர்களை ஒடுக்குவதுதான்! 

     இந்துத்துவ பாசிச சக்திகள், தீய நோக்கத்துடன் முன்வைக்கப்படும்      இந்துக்களின் ஒற்றுமை என்ற  கோஷத்தை பிறகு பார்க்கலாம்.!

       அதற்கு முன், "இந்தியாவின் ஒற்றுமையை நிலைநாட்டப் பாடுபட்டவரும் அந்த ஒற்றுமையின் அடையாளமாக திகழ்ந்தவர்" என்று நேருவால் ( Jawaharlal Nehru slected works,Page 61 XIII) குறிப்பிடப்பட்ட, அபுல் கலாம் ஆஸாத்  பற்றி பார்க்கலாம்! 

     இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த,பொதுவாழ்வில் தூய்மையும்,அரசியல் வாழ்வில் நேர்மையையும் கடைபிடித்த, மாமனிதர் அவர்! 

     பிரிவினையின் பெயரால் பிளவுபட்ட தனது தாய் நாட்டின் நிலையை எண்ணி மனவேதனையால் துவண்டுபோன ஆசாத்தின் வாழ்க்கையானது, "நாட்டின் ஒற்றுமையையும்,ஒருமைப்பாட்டையும் நிலை நாட்ட அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை, அவருடைய வாழ்க்கை!" என்று உறுதியாக கூறலாம்!  

    "நாம் பிரிவினையை ஆதரித்தால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது.  என்று நான் ஜவகர்லால் நேருவிடம் தொடர்ந்து எச்சரித்து வந்தேன் " என்று அவரது (INDIA WINS FREEDOM Page:202}நூலிலும் குறிப்பிட்டு உள்ளார்!

     மேலும் அவர், இந்தியா பிளவுபட்டு, அகஸ்ட் 15,1947-யில் சுதந்திரம் அடைந்ததை பற்றி,"என்னால் இயன்ற அளவு நான் முயன்றேன். துரதிஷ்டவசமாக  எனது நண்பர்களும்,சக ஊழியர்களும் எனக்கு போதிய ஒத்துழைப்போ ,ஆதரவோ, அளிக்கவில்லை.பதவி கிடைக்காத வெறுப்பில் பலரும் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து  கொண்டனர்.ஒருவேளை அகஸ்ட்,15 என்ற தேதிகூட,மவுண்ட் பேட்டன் பிரபுவின் வசீகரத்திலும் ,மதிநுட்பத்திலும் மயங்கியதன் விளைவால் குறிக்கப்பட்ட தேதியாகும்"  (INDIA WINS FREEDOM Page:226}என்று வருந்தியவர்!

      "நாட்டின் சுதந்திரத்தை விடவும், இந்து-முஸ்லிம்  ஒற்றுமையை நிலைநாட்டுவதில் மிகுந்த  அக்கறை கொண்டிருந்த ஆசாத், "சுதந்திரம் கிடைப்பதற்கு தாமதம் ஆனாலும் பரவாயில்லை,இந்தியத் தாய்க்கு ஒருநிமிடம் கூட வேற்றுமையின் பாரத்தைத் தாங்கும் சக்தியில்லை" (Al Balagh,n-7,Page 118-1119) எழுதியவர்! 

    "நான் ஒரு முஸ்லிம்! அதற்காக பெருமைபடுகிறேன்.அதே அளவு,நான் ஓர் இந்தியன் என்பதிலும் பெருமிதம் கொள்கிறேன்" என்று  சொன்னவர்.!

     " ஒரு இந்து சகோதரர்,நான் ஓர் இந்துவாகவும் இந்தியனாகவும் இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று சொல்வதைப் போலவே,ஒவ்வொரு இஸ்லாமியனும்  சொல்கிறான்,நானும் ஓர் இந்தியன்தான் ; இஸ்லாமை ஏற்றுக்கொண்டு,அதன் உயரிய விழுமியங்களைப் பின்பற்றி வாழும்    இந்தியன் "(AICC Papers,National Archives,NewDelhi) என்று சொல்லி,இந்தியனாக வாழ்ந்த ஆசாத் அவர்கள்தான்  இந்தியாவின்  அடையாளம்! 

   அபுல்கலாம் ஆஸாத் ,  இந்திய ஒற்றுமையின் அடையாளம்,மத சார்பற்ற தன்மைக்கும், இந்திய சமய நல்லிணக்கத்துக்கும் அடையாளம்!இந்தியாவின் முன்னேற்றம்,நல்வாழ்வு,அமைதிக்குஅவரே  அடையாளம்! 

      இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த அவர்தான், சாகித்ய அகாடமி,லலிதகலா அகாடமி,நாடக அகாடமி,சங்கீத அகாடமி,யு.ஜி.சி  ஆகியவைகள் ஏற்படுத்தினார். நூற்றுகணக்கான நூலகங்கள்,ஆவணக் காப்பகங்கள்  ஏற்படுத்தியதும் அவர்தான்! ஐ.ஐ.டி ,மருத்துவ கல்லூரிகள்,நவீன ஓவியக் கூடங்கள், ஆயிரகணக்கான பள்ளிகள் கல்லூரிகள்  என்று ஏற்படுத்தி,  இந்தியாவின்  அறியாமையைப் போக்க,கல்வி வளர்ச்சிக்குப்  பாடுபட்ட  அபுல்கலாம் ஆசாத்தை இன்று...எல்லோரும்  மறந்து விட்டார்கள்! இந்திய தேசம் மறந்து விட்டது! இந்துத்துவ சக்திகள் மறக்கடித்து விட்டார்கள்!! 

    ஆசாத் அவர்களைப் பற்றி, அவரது வாழ்க்கை,தியாகம், இந்தியன் என்ற நாட்டுப் பற்று , அவ்வளவு ஏன்? கல்வி வளர்ச்சிக்கு அவர்செயதவைகள்  குறித்து  என...  எந்த தலைப்பிலும் ( பாடங்கள்}போதனைகள் ,  இந்திய கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்களில்  இடம்பெறுவதே இல்லை! 

        இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார்? என்று கூட, அரசுநடத்தும்  பொது தேர்வுகளில் கேள்வி கேட்பது கூட இல்லை!அபுல் கலாம்  ஆசாத் பற்றி இன்றைய ஆசிரியர்கள் அறிந்திருப்பார்களா என்பதுகூட சந்தேகம் தான்!

      ஆனால், இந்துத்துவ சக்திகள்,அபுல்கலாம் ஆசாத் ஏற்படுத்திய கல்விநிறுவனங்களில், இந்து- முஸ்லிம்  ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு பதிலாக, முஸ்லிம் எதிர்ப்பு உணர்வை விதைத்து வருகிறார்கள்!

    "இந்து ஒற்றுமை" என்று கூறி வேற்றுமையை வளர்த்து வருகிறார்கள்! இத்தகைய பாசிச சக்திகள் இந்தியாவில் இன்று, அரசியல் அமைப்பு சட்டத்தை வடிவமைத்த,  அண்ணல். அம்பேத்கர் பற்றி பள்ளி, கல்லூரிகளில் கேலிசெய்து, பாடப்புத்தகங்களில்  " கார்டூன்"  வைக்கும் அளவுக்கு  (ஆக்கிரமிப்பு) ஆதிக்கம் பெற்று இருகிறார்கள்!

     இவர்களால் சுதந்திர இந்தியாவில்,  மதசார்பற்ற இந்தியாவில்,                      " பகவத் கீதை"  பாடமாக வைக்க முடிகிறது!

    இந்துத்துவ சக்திகளின்" இந்து ஒற்றுமை  முழக்கம்" குறித்து  அடுத்து பார்ப்போம்! Wednesday, 25 July 2012

இவரைப்போல ஆங்கிலேயர்களை எதிர்த்த மன்னர் இல்லை!

  முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு பேரரசில் உள்ள அரசுகள் சுதந்திரம் அடைந்தன. சுதந்திரம் அடைந்த அரசுகளில் வங்காளமும் ஒன்றாக இருந்தது.வங்காளத்தை ஆண்டுவந்த ஆளுநர் அலிவர்திகான் என்பவர் 1741-லில் சுதந்திரப்பிரகடனம் செய்திருந்தார்.1756-யில் அவர் இறந்தார்.அவரது பேரன் சிராஜ் உத் தௌலா என்பவர் வங்காளத்தின் மன்னரானார்.

    கல்கத்தாவில் இருந்த ஆங்கிலேயர்கள் நவாப் சிராஜ் உத் தௌலா  உத்திரவுக்கு கீழ்படிய மறுத்ததுடன்,  புதிய கோட்டைகள் அமைத்து தங்களை பலப்படுத்தியும் வந்தனர்.வணிகத்துக்காக வந்த ஆங்கிலேயர்கள் இந்திய மன்னர்களிடம் நிலவிவந்த ஒற்றுமையின்மை,ஆட்சியில் ஏற்பட்ட குளறுபடிகளை உணர்ந்து,அவைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முனைந்தார்கள்.இதனால் பல்வேறு மன்னர்களின் நிர்வாகத்தில் தேவையற்ற குறுக்கீடுகளை செய்து பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்தார்கள்

(ஆட்சியதிகாரத்தை விரும்பும் ஆதிக்க சக்திகள் வழக்கமாக கடைபிடிக்கும் தந்திரங்களில் ஒன்று, பிறநாடுகளில் உள்நாட்டு பிரச்சனைகளை,குழப்பத்தை  ஏற்படுத்தி,மக்களை பிரித்துவைத்து, அந்த நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படித்திக் கொள்வதாகும்! இந்துத்துவ ஆதிக்க வாதிகளான பிராமணர்கள் இதனை காலங்காலமாக செய்துவந்தது குறித்து  முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளதை நினைவில் கொள்ளவும் )

  ஆங்கிலேயர்களின் இத்தகைய குறுக்கீடுகளை அறிந்த சிராஜ் உத் தௌலா ஆங்கிலேயர்களுக்கு பாடம் கற்பிக்க நினைத்தார்.300-க்கும் மேற்பட்ட ஆங்கிலேயர்களைப் பிடித்து,ஒரு பெரிய கிணற்றில் வைத்து அவர்களை கொன்றார்!  வரலாறு இந்த நிகழ்ச்சியை கருங்குழி சோகம் (BLOCK HOLE TRAGITY) என்று குறிப்பிட்டு வருகிறது! { ஆங்கிலேயர்களைக் கொன்றால் அது சோகமாம். இந்தியர்களைக் கொன்றால் அது சோகமில்லையா ?}

  (ஆதிக்க சக்திகளுக்கு எப்போதும் தங்களதுஅவர்களது உயிர் முக்கியமானது! பிராமணர்கள்  கொலையே செய்தாலும் அவர்களை  தண்டிக்கக் கூடாது என்றும் வேண்டுமானால் அவர்கள் தலையை  மொட்டை அடித்து,அவர்களது பொருளையும்  அவர்களிடமே கொடுத்து,ஊரை விட்டு வெளியற்றிவிட வேண்டும் என்று  பிராமணர்களின் மனுதர்ம சாஸ்திரம் கூறுவதை  நினைவில் கொள்ளலாம்! ராஜிவ்காந்தி என்ற ஒற்றை (ஆதிக்கசக்தி)மனிதரின்  படுகொலைக்கு, ஈழத்தில் சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இந்தியாவின் உதவியுடன் கொண்டுகுவிக்கப்பட்டது சமீபத்திய உதாரணம்! )

     ஆங்கிலேயர்களை சிராஜ் உத் தௌலா  கொன்றது ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சியையும்,கோபத்தையும் அளித்தது. சிராஜ் உத் தௌலா போல இந்திய மன்னர்கள் தங்களுக்கு தண்டனை  கொடுத்தால், என்னவாகும்?இந்தியாவை அடிமைப்படுத்தி ஆள  திட்டமிட்டு இருக்கும்  நமது திட்டம் நிறைவேறாமல் போய்விடும்,நாடாளும் ஆசையை மறந்துவிட வேண்டியிருக்கும்  என்று  எண்ணினார்கள்.! "சிராஜ் உத் தௌலா" வை விட்டுவைக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தனர்!

   சிராஜ் உத் தௌலா -வை,சதியால் வெற்றிகொள்ள நினைத்தனர்.! இந்திய மன்னர்களில் சிலரை தங்களுக்கு ஆதரவாக செயல்படுமாறு செய்தனர். அவர்களும்  நேரடியாகவும்,மறைமுகமாகவும் ஆங்கிலேயர்களுக்கு  ஆதரவும்,உதவியும் அளித்தனர்! சிராஜ் உத் தௌலா-வின் படைத் தலைவர்களில் சிலரும்கூட,ஆங்கிலேயர்களுக்கு மறைமுகமாக துணை நிற்கும் கொடுமை நிகழ்ந்தது!

        இங்கிலாந்தில் இருந்து ஆங்கிலேயர்களின் வேண்டுகோளின்பேரில் ஒரு பெரும்படை  கல்கத்தா துறைமுகத்தில் கொண்டுவந்து இறக்கப்பட்டது! ஆங்கிலேயரின் சூழ்ச்சியை அறிந்த, சிராஜ் உத் தௌலா,ஆங்கிலேயர்களை கடற்கரையிலேயே எதிர்கொண்டு சந்திக்க தாயரானர்.துறைமுகத்தை முற்றுகையிட்டார்! 


   முற்றுகையின் பொது,தொடர்ந்து நான்கு மணிநேரத்துக்கு அப்பகுதியில் பெரும் மழைப் பெய்தது! சிராஜ் உத் தௌலா  வசமிருந்த துப்பாக்கி,பீரங்கி குண்டுகளுக்கு தேவையான வெடிபொருட்கள்,வெடிமருந்து  ஆகியவை நனைந்து போரில் பயன்படுத்த முடியாமல் போனது! (அன்று இயற்கையும் கூட சிராஜ் உத் தௌலா-வுக்கு எதிராகவும் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகவும்  சதியில் ஈடுபட்டது}போரில் சிராஜ் உத் தௌலா தோல்வியடைந்தார். இந்தியாவில் முதன்முதலாக ஆங்கிலேயர்களின் ஆதிக்கம்,ஆட்சி  வங்காளத்தில் ஏற்பட்டது! 


    இந்த போரை வரலாறு," பிளாசிப்போர் " என்று குறிபிடுகிறது! இன்றைய கொல்கத்தாவுக்கு 300 கி.மி.தொலைவில்" பிளாசி" என்ற இடத்தில நடந்த இந்தபோர்தான்,  ஆங்கிலேயர்களுக்கு எதிராக சமமான படைபலத்துடன் நடந்த போர் ஆகும்!அதற்குப் பிறகு  எந்த அரசனும் ஆங்கிலேயர்களை இவ்வளவு தீரத்துடன் எதிர்க்கவில்லை, மைசூர் புலி,தீரர் திப்புவைத் தவிர! 


     பிளாசிப்போர்  23.06.1757-யில் முடிவுக்கு வந்தது! இந்தபோருக்குப் பின்பு, இந்தியர்களுக்கு   சொந்தமானதாக இந்தியா இருக்கவேண்டுமா?அல்லது அந்நிய ஆங்கிலேயர்களின் நாடாக வேண்டுமா?என்றசிந்தனை பொது மக்களிடம் ஏற்பட்டது! சிராஜ் உத் தௌலா'வின் படையில் இருந்த போர்வீரர்கள்,முஸ்லிம்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர்! அவர்கள் நாடோடிகளாக(பக்கீர்கள்)  இந்தியாவெங்கும் திரிந்து  பொது மக்களிடம் சுதந்திர தாகத்தை  ஏற்படுத்தியது எல்லாம் பிந்தைய வரலாறு ஆகும்!


    சுதந்திரப்போரட்டதில்  இன்றைய ஆதிக்க,பாசிச இந்துத்துவ சக்திகளை விட அதிகமாக  ஈடுபட்டவர்களும்,பாதிக்கப்பட்டவர்களும், இந்திய நாட்டுக்காக உயிர் துறந்தவர்களும், தியாகம் செய்தவர்களும் முஸ்லிம்கள்தான்! இன்று நாட்டுக்காகப் போரிட்ட அந்த மண்ணின் மைந்தர்கள் அந்நியர்கள் என்றும் நாட்டுக்கு எதிரானவர்கள் என்றும் கூசாமல் இந்துத்துவ பாசிச வாதிகள் சொல்கிறார்கள்!


       இன்றைய ராணுவத்தில்  முஸ்லிம்களுக்கு இடம் இல்லை!இந்துத்துவ தீவிரவாதிகளின் பிடியில் இந்திய ராணுவம் அகப்பட்டு கொண்டுள்ளது! கூவர் நாராயணன் போன்றவர்கள் இந்திய நாணுவ ரகசியங்களை அன்னியருக்கு விற்றனர்! பெண்சாமியார் பிரக்யா சிங் உடன், கர்னல்  புரோகித் போன்றவர்கள் (மலேகான் ) குண்டுவெடிப்பு சதி செயல்களில் ஈடுபடுகிறார்கள். தேசத்தைக் காக்க பயன்படவேண்டிய ஆயுதங்கள்,ராணுவ வெடிபொருட்கள், நாட்டில் தீவிரவாத, நாசவேலைகளுக்கு பயன்படுகிற நிலை ஏற்பட்டு உள்ளது!


  வாங்கப்படும் ஆயதங்கள்,ராணுவ தளவாடங்கள் முதல்  கமிஷன்,பேரம் என்று ஊழல்  சந்தி சிரிகிறது! சவப்பெட்டியைக் கூட விட்டுவைக்க மாட்டேன் என்கிறார்கள்! தேச நலனும்,செல்வமும் சீரழிகிறது, பாசிசத்தின் சுரண்டலுக்கு பலியாகி வரும் அவலம் நீடிக்கிறது!  


       இந்துத்துவ பாசிசத்தின்  மோசமான செயல்களில் மீதம் சிலவற்றை அடுத்து பார்க்கலாம்!  

Monday, 23 July 2012

பகதுர்ஷா'வும்,நேதாஜி சுபாஷ் சந்திர போஸும் !

      முஸ்லிங்கள் என்ற மாற்று மத  வெறுப்பின் அடிப்படையில் இந்துத்துவ பாசிசவாதிகள்,முஸ்லிம்களின் தியாகத்தையும்,நாற்றுப்பற்றையும்  ஏற்றுகொள்ள மறுத்து வருகிறார்கள். மேலும் அவர்களின் நாட்டுப்பற்றை,தியாகத்தை பிறர் அறியாமல் செய்யும்  முயற்சிகளில்,          ஈடுபட்டும் வருகிறார்கள்.!

   அதனாலேயே, முஸ்லிம்களின் வரலாற்றையும் தவறாக எழுதி வருகிறார்கள்.! முஸ்லிம்களின் நாற்றுப்பற்றும், தியாகமும் மறைக்கப்பட்டு,வரலாற்றில்இந்துத்துவ பாசிச சக்தியால்  திரிக்கப்பட்டு வருகிறது!

      காந்தியின் படுகொலையில் குற்றவாளியாக கருதப்பட்ட "வீரசாவர்க்கர்" ஆங்கிலேயர்களிடம் உயிர்பிச்சை கேட்டு, கெஞ்சி கடிதங்கள் எழுதி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக," தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதில்லை" என்ற உத்திரவாதத்தின் பேரில் அந்தமான் சிறையில் இருந்து  விடுதலையானார்! 


   ஆங்கிலேயர்களிடம் மண்டியிட்டு உயிரைக் காப்பற்றிகொண்ட வீரசாவர்க்கர் , இன்று இந்துத்துவ சக்திகளினால் மிகசிறந்த தியாகியாக, சுதந்திர போராட்ட வீரராக சித்தரிக்கப்பட்டு வருகிறார்!  அவரது சிலை பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டு உள்ளது!  


       வெள்ளையரை எதிர்த்து, இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்த, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களால்  பாராட்டப்பட்ட, ஆங்கிலேயர்களால் ரங்கூனுக்கு நாடுகடத்தப்பட்,டு அங்கேயே மரணம் அடைந்த முஸ்லிம் மன்னர் பகதுர்ஷா குறித்து இந்துவசக்திகள் இப்போது மட்டுமல்ல, எப்போதும் பேசியதே இல்லை! அவரைப் பாராட்டியது இல்லை!அவரது தியாகத்தைப் பற்றி,நாட்டுப் பற்றைப்பற்றி,இன்றைய தலைமுறையினருக்கு சொன்னதே இல்லை! சொல்லவேண்டும் என்று எண்ணியதும் இல்லை!


     காரணம், அவர் ஒரு முஸ்லிம் என்பதுதான்!  பகதூர் ஷா தேசபக்தி உள்ளவர், நாட்டின் விடுதலைக்காக,ஆங்கிலேயர்களால் நாடு கடத்தப் பட்டர் என்று இந்துத்துவ வாதிகள் சொல்லிவிட்டால்,உண்மையை ஏற்று கொண்டால், முஸ்லிம்கள் மீது இந்துத்துவ சக்திகள் விதைத்து வரும் வெறுப்புணர்வை அவர்களால் தொடர முடியாது என்பதுதானே? 


  1847-ஆண்டு,ஈத் பெருநாளில் இந்து-முஸ்லிம் கலவரத்தை தூண்ட ஆங்கிலேய அதிகாரி, "கெய்த் " என்பவன் சதி செய்தான்!  இந்துக்கள் புனிதமாக நினைக்கிற மாடுகளை முஸ்லிம்கள்ஈத் பெருநாளில்" பலி" கொடுகிறார்கள்{ஆங்கிலேயர்கள் மாடு சாப்பிடுபவர்கள் தான்!} என்று விஷமப் பிரசாரம் செய்து, இந்து-முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் ஆங்கிலேயர்கள்  குளிர்காய நினைத்தனர்!! கெயித்'யின்  சூழ்ச்சியை அறிந்த மன்னர் பகதூர் ஷா, ஈத் பெருநாளில் மாடுகள் பலியிடுவதை தடுத்து நிறுத்தி, ஆடுகளை பலியிட்டு ஈத் பெருநாள் கடமையை செய்வித்தார்! ஆங்கிலேயர்களின் கலவர சூழ்ச்சி முறியடிக்கப் பட்டது!


      ஆங்கிலேய அதிகாரி, "மேஜர் ஹட்சன்" என்பவன் கைது செய்து சிறையில் இருந்த மன்னர் பகதுர்ஷா-வுக்கு காலை உணவாக கொடுத்தது என்ன தெரியுமா? அவரது மகன்களான மிர்சாமொஹல், கிலுருகல்தான் ஆகிய இரண்டு மகன்களின் தலைகளை வெட்டி,ஒருதட்டில் வைத்து,அதனை துணி ஒன்றால் மூடி எடுத்துவந்து கொடுத்தான்! 


      நினைத்துப்பாருங்கள்!  எத்துனை கொடூரமான செயல் என்று! மன்னர் பகதுர்ஷா'வின் மனத்துடிப்பு எப்படி இருந்திருக்கும்? என்பதையும் ஆங்கிலேயர்களுக்கு அவர்மீது இருந்த கோபத்தையும்,வன்மத்தையும் எண்ணிப்பாருங்கள்!


        இத்தகைய கொடுமைகளை செய்த,ஆங்கிலேயரிடம் {வீர்சாவர்கர் போல) அவர் மண்டி இடவில்லை,! தனது மகன்களின் தலை வெட்டப்பட்டதற்கு பின்பும் அவர் இந்தியாவுக்கு விசுவாசியாக இருந்தார். !  தனது மகன்களதலை ஆங்கிலேயர்களால் வெட்டப்பட்ட போதும், அவர் அதனை இந்திய தேசத்துக்காக தனது மகன்கள் செய்த தியாகமாக நினைத்து தாங்கிகொண்டார்! 


         இறுதிவரை ஆங்கிலேயர்களுக்கு அடிபணியாமல் இருந்த அவரை வேறுவழியின்றி,ஆங்கிலேயர்கள்பர்மாவின்  ரங்கூனுக்கு நாடு கடத்தினர்! அங்கே 17.11.1862-யில் மரணம் அடைந்த மன்னர் பகதுர்ஷவின்  சமாதியை பிறகு நேதாஜி சுபாஷ்  புதுப்பித்துக் கட்டினார்.அவரது சமாதியில் இருந்து ஒரு கைப்பிடி அளவு மண்ணை எடுத்து,தான் வைத்திருக்கும் கைத்தடியின் பிடிக்குள் வைத்துகொண்டார்! 


      ரங்கூனில் நடந்த கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் ,"நமது வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும்,பகதுர்ஷாவிடம் இருந்ததுபோன்ற நாட்டுப்பற்றில் அணுவளவாவது இருக்கும்வரை ,நமது( இந்துஸ்தான் }நாட்டின் போர்வாள் கூர்மையுடன் இருக்கும்,ஒருநாள் லண்டன் வாசல்கதவை அது தகர்க்கும்"என்று அப்போது சூளுரைத்தார் !


  தேசபக்திக்கும், தியாகத்துக்கும் இலக்கணமாக திகழ்ந்த, மன்னர் பகதுர்ஷா இன்று இந்துத்துவ சக்திகளால் துரோகிகளாக,தேசவிரோதிகளாக ஆக்கப்படுகிறார்!  காரணம் துரோகிகள் இன்று தேசபக்தர்களாக,தியாக சீலர்களாக ஆகிவிட்டதால்! 


       இந்துத்துவ பாசிசவாதிகள்  இதுபோல இந்திய நாட்டுக்கு செய்த,இந்திய மக்களுக்கு செய்த பல  துரோகங்களும் கூட... நியாயப்படுதப்பட்டு, இந்தியாவின் இறையாண்மைக்கு,மதசார்பின்மைக்கு எதிரான, துரோகிகள் பலரும்   இன்று தியாகிகளாக,தேசப் பற்றாளர்களாக காட்டப்படுகின்றனர்! அவர்களைப் பெருமையுடன் நினைவு கூறும்படியாக,   புனைந்து உரைத்து வரும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது!    இதுதான் இந்துத்துவத்தின் பாசிச குணமாகும்!


        இந்திய வரலாற்றில்  மறைக்கப்பட்ட,அல்லது மறக்கடிக்கப்பட்டு வரும் முஸ்லிம்கள் பலர் உள்ளனர்!  இந்திய தேசப் பற்றாளர்களும், சுதந்திரப் போராளிகளும்,தியாக சீலர்களும் ஆன  முஸ்லிம்களைப் பற்றி குறிப்பிடாமல்,அவர்களது தியாகத்தைப் போற்றாமல் இருந்துவரும் இந்துத்துவவாதிகள், முஸ்லிம்களை இன்று தேச விரோதிகளாக சித்தரிப்பது எதற்காக?  என்பதை நடுநிலையாளர்கள் சிந்தித்துப் பார்க்க  வேண்டும்!

இப்படி நான் கேட்பதில் உள்ள நியாத்தை உணராமல், பதிவுலகில் சிலர் ,நான் முஸ்லிம்களின் ஆதரவாளன், இந்துக்களின் எதிரி என்று தாங்களே கற்பிதம் செய்துகொண்டு,என்னை  விமர்சனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்!

      இந்துத்துவத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வரும் எனது  முடிவுகளை ஒட்டி, இந்த பதிவுகளை வெளியிடுகிறேன் என்பதை அவர்கள்  தெரிந்துகொண்டால் நல்லது!தெரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்!

    "சிராஜ்- உத்-தவுலா" வின் ஆங்கிலேய எதிர்ப்பு போரை அடுத்து பார்க்கலாம்!


Friday, 20 July 2012

பிராமணர்கள் எதிர்க்கும் முகலாய மன்னர்!

    சத்திரபதி சிவாஜியை இந்துத்துவ வாதிகள் ஆதர்ச நாயகனாக ஏற்று போற்றிவருவதையும் (தெரியாதவர்கள் எனது 2.2.2012 தேதியிட்ட பதிவை பார்க்கவும்) முகலாய அரசர் அவுரங்கஜேபை இஸ்லாமிய  மதவெறியராக இன்றும் தொடர்ந்து காட்டி வருவதையும் நடுநிலையாளர்களும் அறிந்துள்ள செய்திதான்!

     முகலாய அரசர்  அவுரங்க ஜேப்,இந்துத்துவ வாதிகள்  சொல்வதுபோல இஸ்லாமிய மதவெறியரா? என்றால் அது உண்மையில்லை. தனது தனித்த வருமானத்தில் தனது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு,அரசின் பொது வருமானத்தை நிர்வாக செலவுக்கும்,பொதுமக்களின் நல்வாழ்வுக்கும் செலவு செய்து நல்லாட்சி செய்து வந்தவர். அதுமட்டும் இன்றி,தனது பேரரசுக்குள் இருந்துவந்த பல்வேறு இந்து சமயத்தைச் சேர்ந்த  சிற்றரசர்களுடனும்  நட்புடன் பழகி வந்தவர். சமய வேறுபாடுகளை காட்டாதவர். இந்து சமய மக்களின் சமய நம்பிக்கையில் தலையிடாமல்,அவர்களது வழிபாட்டினை மதித்து, ஏற்றுக் கொண்டவர்!.

    இப்படி  உண்மையை   சொன்னால், எங்கே ஆதாரம் என்று கேட்டு எகத்தாளம் செய்வதற்கு என்றே சிலர் இருக்கிறார்கள்! அவர்களுக்கு நான் எத்தனைதான் ஆதாரம் காட்டினாலும் அதனை  ஆதாரமாக ஏற்றுகொள்ள மாட்டார்கள்.   எனது ஒவ்வொரு பதிவுக்கும் ஆதாரம் என்று காட்டிக் கொண்டே இருப்பது வீண் வேலை என்பதால், பெரும்பாலும் ஆதாரங்களை  தவிர்த்து வருகிறேன்!(இந்த பதிவில் வரும் அவுரங்கஜெப்  குறித்த செய்திக்கு ஆதாரத்தை  குறிப்பிட்டு உள்ளேன்)


      அவுரங்கஜெப் தமது குறுநில மன்னர்களுடன் வங்காளம் நோக்கி செல்லும்போது,வாரணாசி வழியாக சென்றார்.அப்போது,அவருடன் வந்த குறுநில மன்னர்கள் ஒருநாள் வாரணாசியில் தங்கினால் தமது ராணிகள் கங்கையில் குளித்து  விசுவநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்துவிட்டு புறப்பட ஏதுவாக இருக்கும் என்று கேட்டனர்.

உடனே அவுரங்கஜெப் மன்னர் அவர்கள்,இந்து குறுநில மன்னர்களின் மத உணர்வுக்கு மதிப்பளித்து, தனது படைவீரர்கள் அனைவரையும்(பல்லக்கு தூக்குபவர்கள் தவிர) ராணிகள் குளிக்கும் இடத்துக்கு அயிந்து மைகளுக்கு அப்பால் கூடாரம் அமைத்து தங்குமாறு ஆணையிட்டார்.படைவீரர்களும் கூடாரம் அமைத்து தங்கினர்.

   சிற்றரசர்களின் ராணிகள் மட்டும் கங்கைக்கு சென்று,குளித்து ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயத்தில் பூஜைகள்  முடித்துவிட்டு திரும்பும்போது "கச் "பிரதேச ராணி மட்டும் காணாமல் போயிருந்தார்.உடனே அவரை தேட ஆணையிட்டும் தேடியும்,அவரைக் காணவில்லை. இதுபற்றி ஆலம்கீர் அவுரங்கஜெபிடம் முறையிடப்பட்டது. அவர் ஒற்றர் படையை அனுப்பி,வாரணாசி விஸ்வநாதர் ஆலயத்தை அலசும்படி ஆணையிட்டார் முதன்மை  அதிகாரி உடன்,  ஒற்றர்படையினர் கோவிலை சோதனை இட்டனர்.சோதனையில் அந்த கோயிலில் அமைந்து இருந்த கணேசர் சிலை அசையக்கூடிய அமைப்பில் இருப்பதைக் கண்டு,அந்தசிலையை திருகிப் பார்த்தனர்

     கணேசர் சிலை அசைந்து திருகியதும்,அதன் அடியில் படிகட்டுகள் தெரிந்தன.படிக்கட்டுகள் சுரங்கப் பாதையுடன் கீழ் அறைக்கு சென்று முடிவடைந்தது.வீரர்கள் அதன்வழியே சென்று பார்த்தபோது,சுரங்க அறையில்,  புனித  கங்கையில் நீராடிய,பாவத்தைப் போக்கும் விஸ்வநாதர்  ஆலயத்தில் தரிசிக்க வந்த,  "கச்"பிரதேச ராணி கற்பழிக்கப் பட்டு கிடந்தார்.கசங்கியிருந்த ஆடையுடன், கத்திய குரலுடன்,கண்ணீர் சிந்திய நிலையில் இருந்த அவளை கோயில் சுரங்க அறையில்  இருந்து மீட்டுவந்தனர்.சுரங்க அறை ,ச்ற்ற்ர் விஸ்வநாதர் ஆலய மூலவரின் சிலைக்கு நேர் கீழே இருந்தது.

அரசியின் கோலத்தைக் கண்டு சிற்றரசர்கள் கதறினார்கள், குமுறினார்கள், நடந்தது குறித்து அவுரங்க ஜெபிடம் முறையிட்டு,தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு நீதி வழங்குமாறு கேட்டு கொதித்தனர். பெண்களைக் கற்பழித்து இழிவுபடுத்திய கோயில் மூலவர் சிலை  வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தப் பட்டது. கோயில் தரை மட்டமாக்கப் பட்டது.கோயில் நிர்வாகிகள்,பூசாரிகள் அனைவரும் தண்டிக்கப்பட்டனர்.

(ஆதாரம் ஓடிஸா மாநில கவர்னராக இருந்த பிஷம்பர்நாத் பாண்டே அவர்கள் எழுதி,ஓடிஸா மாநில அரசு வெளியிட்ட அரசு வெளியிட்ட இஸ்லாமும் இந்திய கலாச்சாரமும் நூல் பக்கம் 70,71)

பட்னா மீயுசியம் ,முன்னாள் ஆவணக் காப்பக இயக்குனராக இருந்த டாக்டர்.குப்தா என்பவரிடம் இருந்து பெற்ற ஆவணங்களுடன் பட்டாடி சீதாராமையர் தன எழுதிய நூலிலும் ஆதாரமாக இந்நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு உள்ளார்.

மற்றொரு நிகழ்சியையும் பார்ப்போம். அவுரங்கஜெபுக்கும் பார்ப்பனர்களுக்கும் நடந்த உரையாடல்

"என்ன நடக்கிறது இங்கே?"

"அந்த பெண்ணின் கணவன் இறந்துவிட்டான்"

"அதற்காக "

"அந்த பெண்ணும் அவனுடன் இறக்க வேண்டும்"

"சரி"

"அவள் மறுக்கிறாள்"

"அதனால்"

"நாங்கள் அவளை கணவருடன் எரிக்க முயன்று கொண்டிருக்கிறோம்"

"இது படுகொலை"

"இல்லை, இது எங்களின் பண்பாடு,மதச்சடங்கு"

"காட்டுமிராண்டித்தனம்"

"எங்கள் மதச்சடங்கைத் தடுக்க,விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை"

"இது எனது ஆளுகைக்கு உட்பட்ட இடம்.இங்கு படுகொலைகளை அனுமதிக்க முடியாது"

"நீங்கள் எங்கள் மதவிவகாரங்களில் தலையிடுகிறீர்கள்"

அவுரங்கஜெப் தனது வாளைஉருவி,"இங்கு யாராவது இந்த பெண்ணை பலாத்காரம் செய்தால் அவர்களின் தலை கீழே உருளும்" கோபத்துடன் சொல்லுகிறார்.

அந்த பெண்ணை பலாத்காரம் செய்தவர்கள் அவளை விட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள். அந்தப் பெண் அவுரங்கஜெபை நன்றிப் பார்வை பார்த்துவிட்டு  அங்கிருந்து செல்கிறாள்!

இப்படிப்பட்ட அவுரங்கஜெபைதான் மதம்மாற மக்களை பலாத்காரம் செய்தான்,மாறாதவர்கள் மீது ஜசியா வரி விதித்தான் என்றெல்லாம் நமது பாடப் புத்தகங்களில் எழுதிவருகிறார்கள்.(நாமும் படித்து வருகிறோம்)  ஜெர்மன் நாஜி இட்லர் இப்படித்தான் வரலாற்றில் யூதர்கள் ஜெர்மானியரைக் கொடுமைப் படுத்தினார்கள் என்று மாற்றி எழுதிவைத்தான்.

நாசி இட்லர் வழியில், நமது பார்பன வரலாற்று ஆசிரியர்கள் அவுரங்கஜெபை இழிவுபடுத்தி எழுதி வருகிறார்கள்!

கடவுளின் பெயரால் காமக்களியாட்டம்.அதுவும் கடவுள் உள்ளதாக சொல்லப்படும் கோயில்களிலேயே! அரசிகளைக்கூட அஞ்சாது கற்பழிக்கும் அநியாயம்!!

தவறான செயல்களைக் கண்டித்துதண்டித்த அவுரங்கஜெப் மதவெறியராம்! கடவுள் இருக்கிறார் என்று நம்பிவந்த கோயிலிலேயே  கற்பழித்து, இரக்கமின்றி நடந்துகொண்ட,மனிதத் தன்மையற்ற செயல்களைச்  செய்தவர்கள்  பிராமணர்கள்,இந்துத்துவவாதிகள்  சாத்வீக,அஹிம்சா வாதிகளாம்.!!

   "இந்துத்துவ பாசிசம்" எனபது எப்போதும் தனது தவறுகளை,குற்றங்களை மறைத்து,.இருட்டடிப்பு செய்தும் வருவதுடன், தங்களது தவறுகளை  கண்டிப்பவர்கள் மீது,அவர்கள் எத்தனை உயர்ந்த மனிதர்களாக இருந்தாலும்  அவதூறு செய்து,பொய்யுரைத்து களங்கப்படுத்தவும் தவறுவதில்லை!

      இந்துத்துவ பாசிச வாதிகள் ,அவுரங்கஜெபை  இன்றும் தொடர்ந்து மதவெறியராக காட்டி வருவது ஏன்? ஏனென்றால்,அவுரங்கஜெபைப் படிக்கும் அனைவருக்கும் அவர்மீது வெறுப்பு வரவேண்டும்.என்பதுதான். அவுரங்கஜெப் மீது,அவரது ஆட்சிமீது  வெறுப்பு வந்தால்தான்,அவர் பலவந்தமாக மாற்றியதாக கூறும் முஸ்லிம்களின் வம்சாவளியினர் மீது,அதாவது இன்றைய  முஸ்லிம் மக்கள் மீதும் வரவேண்டும்  என்பதற்காகத்தான்  அவுரங்கஜெப் குறித்து தவறான வரலாறு  எழுதி, அதனை உண்மை என மக்களை நம்பசெய்து  வருகிறார்கள்!


Thursday, 19 July 2012

பாசிச சக்திகளின் பொது எதிரி, இஸ்லாம்!

        ஏன் பாசிச சாதிகள் முஸ்லிம்களை அழிக்கவும்,  வெகுஜன மக்களிடம் அவர்களை  எதிரியாக காட்டவும்,தொடர்ந்து முயன்று வருகிறார்கள்? 

     " இந்துத்துவம்" என்ற பாசிசம் இஸ்லாம் மதத்துக்கு எதிராக வெகுஜன மக்களை திசை திருப்பி வருவதற்கு காரணம் என்ன?முஸ்லிம்களின் மீது துவேஷத்தை கொண்டு செயல்பட்டு வருவது எதற்காக?   

எதற்காக என்றால்,பாசிச சக்திகளுக்கு  உலகம் எங்கும் ஒரு பொது எதிரி தேவைப்படுகிறது என்பதும் அந்த பொது எதிரியாக," இஸ்லாம் " சித்தரிக்கப்பட்டு வருவதும்தெரியவரும்.!


         உலகம் எங்கும் உள்ள பாசிச சக்திகளுக்கு,   தங்களது சுரண்டல் கொள்கையினை மக்கள் உணர்ந்து கொண்டால்,தங்களுக்கு எதிராக வெகுஜன மக்கள், விழிப்புணர்வு பெற்றுவிட்டால் தங்களின் கதி என்னவாகும் என்ற அச்ச உணவு இருந்துவருகிறது.

       பாசிச சக்திகளின் அத்தகைய அச்ச உணர்வாலும்,வெகுஜன மக்களின் ஒருங்கிணைப்பை தடுக்கவும் வேண்டிய அவசியமும் அதற்கு உள்ளது! இந்த தேவையின் காரணமாகவே பாசிச சக்திகள் பல்வேறு உத்திகளை, செயல்களை செய்து வருகின்றது !

           மதத்தின் பெயரால் சர்ச்சைகளை உருவாக்கி, மத ரீதியாக பிளவுபடுத்தி உழைக்கும் மக்களை ஒன்றுசேராமல்  தடுப்பது, அவர்களுக்குள் பிரிவையும்,வேற்றுமை உணவர்வையும் வளர்ப்பது,தொடர்ந்து அதே நிலையில்அவர்களை இருக்கும்படி பார்த்துக் கொள்வது,வேற்றுமை உணர்வை,  மதவெறியாக்கி ,உழைக்கும் மக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ள செய்வது!


         இந்த மோதல்கள், சர்ச்சைகள் மூலம் பெரும் கலவரத்தை உருவாக்கி, அவர்களது வாழ்வுரிமையைப் பறிப்பது ,தொடர்ந்து பாசிசத்தை எதிர்க்கும் உழைக்கும் மக்களை, வறுமை நிலையிலேயே வைத்திருப்பது! அவர்களை ஒன்றிணைக்கும் மனிதர்களை, சாதி-மத பார்வையில் சித்தரித்து,தீவிர வாதிகளாக.... தேச விரோதிகளாக... காட்டுவது ! சமயங்களில் அவர்களை கொன்றுவிடுவது!  போன்ற அனேக செயல் திட்டங்களையும், உக்திகளையும் கொண்டு பாசிச சக்திகள்  இயங்கி வருகின்றன.

        இதன் மூலம்  பாசிச சக்திகள் வெகுஜனமக்களிடம் எழும் கோபத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும்,அவர்களின் கோபத்தை திசை திருப்பி விடவும் செய்கின்றன.  வெகுஜன மக்களுக்கு எதிரியாக ,அதாவது பாசிச சக்திகளுக்கு பொது எதிரியாக சித்தரிக்க வேண்டிய கட்டாயத்தின் பேரில் இஸ்லாமையும் ,உலகமெங்கும் உள்ள முஸ்லிம்களை பொது எதிரியாக பாசிசம் காட்டிவருகிறது!

        உலகின் மிக பெரிய பாசிச சக்தியான அமெரிக்காவும்,அதன் மூளையான இங்கிலாந்தும்,அவைகளின் அடிமைச் சேவக நாடான இஸ்ரேலும்  முஸ்லிம்களின் நாடுகளில் செய்துவரும் அராஜகங்களும், கொள்ளைகளும், அத்துமீறல்களும்,அந்த நாடுகளில் நிகழ்த்திவரும் படுகொலைகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் காரணம் இதுதான்!


ஒரு நாயைக் கொல்லுவதாக இருந்தால் அதற்க்கு வெறிபிடித்து உள்ளது என்று முதலில் சொல்லவேண்டும் அப்புறம் அதனைக் கொன்றால் யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள் என்பதுபோல!  

       இந்தியாவில் உள்ள பாசிச சக்தியான "இந்துத்துவா சக்திகள்" முஸ்லிம்களை தேச விரோதிகளாக சித்தரித்து, வெகுஜன மக்களிடம் அவர்களை ஒட்டுமொத்த எதிரியாக காட்டி வருகிறது.! தொடர்ந்து காட்டியும் வரும்!

        முஸ்லிம்களை பொறுத்தவரையில், தங்கள் மீது சுமத்தப் படும் அவதூறுகளுக்கும் பொய்யுரைகளுக்கும் மறுப்பு சொல்லும் வலிமை இல்லை!  இந்துத்துவா சக்திகளின்" நியாயமும் தர்மமும்" அவர்களுக்கு புரியவில்லை என்று தோன்றுகிறது!

 கீழே வரும் நிகழ்ச்சியை பாருங்கள்.

     "என்ன திமிர் இருந்தால் நான் குடிக்கும் தண்ணீரை நீ களங்கப் படுத்துவாய்?"என்று ஓநாய் கர்ஜித்தது.


"அய்யா,நீங்கள் மேலே நின்றுகொண்டு நீர் குடிக்கிறீர்கள்,நான் கீழே நின்றுகொண்டு இருக்கிறேன்.நான் எவ்வாறு நீங்கள் குடிக்கும் நீரை களங்கப்படுத்த முடியும் " மிகவும் அடக்கமாக பதில் கூறியது ஆட்டுக்குட்டி.


"பொடியனே.. என்னிடமே தர்க்கமா? பெரியவர்களிடம் எப்படிப் பேசுவது எனபது உனக்குத் தெரியாதா?போன மாதம் நீதானே என்னைப்பார்த்து கேலி செய்தாய்?"


அய்யா,நான் போனமாதம் பிறக்கவே இல்லை"


"அதனால் என்ன?அது உன் தாயாக இருக்கலாம்"


"எனது தாய் இப்போது இல்லை"


" சரி...அதன் வாரிசு நீதான் இருக்கிறாயே"- ஒரே பாய்ச்சலில் ஆட்டுக்குட்டியைக் கொன்றது ஓநாய் 


இந்த நியாயம்தான்," பாசிச சக்திகளின் நியாயம்!". 


    பாசிசம் எனபது ஓநாயைப் போன்றது ,  இந்துத்துவம் என்பதும் இல்லை யென்றால் தேசிய நினைவுச் சின்னமான, உண்மையில் இருந்த  பாபர் மசூதியை இடிப்பார்களா? இல்லாத ராமர் பாலத்தை இருப்பதாக சொல்லி,அதனை தேசிய சின்னமாக அறிவிக்குமாறு கூச்சல் போடுவார்களா? 

              பாசிச சக்திகள் இவ்வாறு உரிமைகோரும் மக்களுக்கு இஸ்லாமை  ஒரு பொது எதிரியாக காட்டிவருகிறார்கள். உழைக்கும் மக்களின்  கவனத்தை  திசை திருப்பி,தங்களது சுரண்டலை தொடர்ந்து வருகிறார்கள்! 

. உரிமை கோரிப் போராடும் மக்களை இவ்வாறு ஏமாற்றி வரும் பாசிச சக்திகள். சமயங்களில் உழைக்கும் மக்களையே  தங்களது நோக்கத்துக்கு பயன்படுத்திக் கொள்ளவும் தவறுவதில்லை!  குஜராத் மதக் கலவரங்களில், வன்முறைகளில், முஸ்லிம்களின் உடமைகள் சூறையாடலில்....
    உழைக்கும் மக்களும்,உரிமைகோரிப் போராடும் மக்களும் பாசிச சக்தியால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுமான பழங்குடி இன மக்களும் பாசிச சக்திகளுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து கொண்டது இதனை உணர்த்துகிறது !!


      முஸ்லிம் மன்னரை எதிர்த்த சத்திரபதி சிவாஜியை போற்றி கொண்டாடும் பாசிச சக்திகள்  அவுரங்கஜேபை இந்துமத எதிரியாகவும்,மத வெறியராகவும் இன்றும் தொடர்ந்து பொய்யுரைத்து வருகிறார்கள்!


       உண்மையில் நடந்தது என்ன?  என்பதை அடுத்துப் பார்க்கலாம்!

Wednesday, 11 July 2012

ஊடகங்களின் சிறுபான்மையினர் வெறுப்பு!

           சிறுபான்மையினரில்  குறிப்பாக முஸ்லிம்களை இந்திய ஊடகங்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்  தீவிரவாதிகளாக,குற்றச் செயல்களை  செய்பவர்களாக,பழிபாவத்துக்கு அஞ்சாதவர்களாக, காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளன.


         திரைப்படங்களில்  வில்லன்கள்,நாட்டுக்கு எதிரான செயல்களை செய்பவர்கள், குண்டுவைப்பவர்கள், மக்களுக்கு எதிரான சதி செயல் செய்பவர்கள்  முஸ்லிம்கள் எனக் கட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளன .இந்துத்துவ தணிக்கையாளர்கள்  இத்தகைய செயல்கள் சமூகத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் எனபது குறித்து சிந்தனையின்றி அனுமதித்து வருவது இன்றும் தொடர்கிறது! 


     பத்திரிகை ஊடகங்கள்  என்ன செய்கின்றன? என்றுபார்த்தால் அவைகளும் முஸ்லிம்களிடம் தொடர்ந்து வெறுப்புணர்வை விதைக்கும் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன!


     சமூகத்தில் சிறுபான்மையினராக உள்ளவர்களின் சிறு குற்றச் செயல் -களையும் பூதாகரமாக்கி வருகின்றன. முஸ்லிம் ஒருவர் , ஒரு அடிதடி விவகாரத்திலோ,கொலை,திருட்டு போன்ற செயல்களிலோ ஈடுபட்டுவிட்டால்  அவரது பெயரை போட்டும், குடும்பத்தையும், சார்ந்துள்ள கட்சி அல்லது அமைப்பையும் விரிவாக குறிப்பிட்டு செய்தியை வெளியிடும் ஊடகங்கள்,   அதே தவறை செய்யும்  இந்துக்களிடம் மென்மையான  அணுகுமுறையுடன் நடந்துகொண்டு,  குற்றம் குறித்த செய்தியை  வெளியிடுவதை காணலாம்! 


       அதிலும்  குற்றவாளி உயர்சாதி இந்துவாக இருந்தால் அவரை பாதுக்காக்கும் வகையிலும் குற்றத்தில் இருந்து காப்பாற்றும் வகையிலும்   செய்தியை வெளியிட்டும்,   ஏதோ அவர் தெரியாமல் அக்குற்றத்தை செய்துவிட்டார் என்பதுபோல செய்தியை வெளியிடுகின்றன! 


        எங்கேனும் யாரேனும் ஒரு தீவிரவாத செயலையோ,குண்டுவெடிப்பு போன்ற  செயலையோ  செய்துவிட்டால்,   உடனடியாக ஊடகங்கள்  "புலனாய்வு புலியாக"  மாறி,        செய்தது  இந்தியன் முஜாஹிதினா? அல்குய்தாவா? அல் உம்மாவா? ஐ.எஸ்.ஐ  தொடர்பா? பாகிஸ்தானின் சதியா?என்று  பரபரப்பான செய்தியைப் போட்டு  முஸ்லிம்களே  செய்தார்கள் எனபது போன்ற  கருத்தை உருவாக்கி,    முஸ்லிம்கள் எல்லோரையும் குற்றவாளிகளாக  பார்க்கும் நிலையை  ஏற்படுத்த தவறுவதில்லை!


       குண்டுவெடிப்புக்கு, " சன் சனாதன் அமைப்போ" ," அபினவ் பாரத்தோ" (பிரக்யா சிங்  இந்த அமைப்புதான்) " விஷ்வ ஹிந்து பரிசத்தோ, "சிவசேனாவோ,"  "ஆர்.எஸ்.எஸ்.அமைப்போ",  பெண்களுக்கும் ஆயுதபயிற்சி தந்து, துப்பாக்கி பயிற்சி தந்துவரும் " முக்திவாகினி" போன்ற எந்த அமைப்பு வேண்டுமானாலும்  குண்டு வைத்திருக்கலாம்,   நாச வேலை செய்து இருக்கலாம்  என்று......  எந்த ஊடகமும் குறைந்த பட்ச சந்தேகத்தைக் கூட செய்தியாக  வெளியிடுவதில்லை! 


          உடனே,    தீவிரவாதி,குண்டு வைத்தவன்  எப்படி இருப்பான் என்று தனது கற்பனைக்கு தகுந்ததுபோல  தாடி,தொப்பி வைத்தும்  படம் போட்டு காட்டத் தவறுவதில்லை! இந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகள் இந்துத்துவ வெறியர்களாலும், பாசிச சக்திகளாலும் நடத்தப்பட்டவைகளே என்பதை  சரியாக  கண்டுபிடித்த " ஹேமந்த் கர்கரே"  மும்பையில் கொல்லப் பட்டார்!  அவரது கொலையில்  இந்துத்துவ சக்திகள் பாதுகாக்கப் பட்டனர்!  (அவர் அணிந்த குண்டுதுளைக்காத கவச உடைகூட  காணமல் செய்யப்பட்டது  உண்மை வெளியாகிவிடும் என்பதால்)


      இந்துத்துவ தீவிரவாதிகளும், பாசிச சக்திகளும் முஸ்லிம்கள் பெயரில் குண்டுவைத்து  முஸ்லிம்களை குற்றவாளிகளாக்கி, வெகுஜன மக்களிடம் வெறுப்புணர்வை தோற்றுவித்து,  முஸ்லிம்களை கொன்று குவிக்கவும் அவர்களது  சொத்துக்களை சூறையாடவும்,அவர்களது ஜீவாதார உரிமைகளை  பறிக்கவும்  செய்யப்பட்ட   இதுபோன்ற செயல்களால்  இந்தியாவில் ஏற்பட்ட மதக்கலவரங்கள்  ஏராளம்!    உயிரிழப்புகளும் ஏராளம், கொள்ளை  அடிக்கப்பட்ட   முஸ்லிம்களின்  உடமைகள்  ஏராளம்!! 


    மதக் கலவரங்களில் உயிரிழந்தவர்கள் பெரும்பான்மையினர்  முஸ்லிம்கள் எனபது மற்றொரு கசப்பான உண்மையாகும்! 

        இத்தகைய உண்மைகளை  நடுவு நிலையோடு சொல்லவேண்டிய ஊடகங்கள்,   சொல்ல முன்வருவதில்லை! அதுமட்டுமின்றி, பாசிச,இந்துத்துவ சக்திகளின்  இந்த கொடுமைகளுக்கு ஆதரவாக  செய்திகளை வெளியிட்டு, இந்தியாவின்  அமைத்துக்கும்,சமய பொரிக்கும்,ஜனநாயகத்துக்கும் , முன்னேற்றத்துக்கும், பொருளாதார சீர்கேட்டுக்கும்  துணைபோகும் அவலத்தை  செய்து வருகின்றன! 


    ஒரு மனிதனின் சட்டைப்பையில் இருந்து,  அவனுக்கு தெரியாமல்  பணத்தை எடுத்தாலே...  அது " பிக்பாகெட்" என்றும்  தண்டனைக்குரிய குற்றம் என்றும் சொல்லும்  இந்தியாவில்  மதக் கலவரங்கள் என்ற பெயரில்   முஸ்லிம்களின் சொத்துகளை, கொள்ளை அடித்த, சூறையாடிய   யாரையாவது  தண்டித்ததாக, குற்றவாளிகளை  பிடித்ததாக,  அவர்களிடம் இருந்து  கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை  பறிமுதல் செய்ததாக  கேள்விப்பட்டது உண்டா?  நான் இன்றுவரை கேள்விப்பட்டதே  இல்லை!


     கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகள் எங்கு போனது? யாரிடம் உள்ளது? என்று  ஊடகங்களோ, புலனாய்வு செய்யும் மத்திய,மாநில போலீசாரோ  விசாரித்து,உண்மையை மக்களிடம்   சொன்னது உண்டா? செய்தியாக வெளியிட்டது  உண்டா? சொல்லுங்கள்! நானறிந்த வரையில்  இல்லை என்பதுதான் உண்மைநிலையாகும்!!       மதக் கலவர தடுப்பு மசோதாவை, "இந்து தீவிரவாதிகள்"  எதிர்ப்பதன் காரணத்தை  இதிலிருந்து   நீங்களே  புரிந்துகொள்ள முடியும்!  


        சரி,  ஏன்  இந்துத்துவ வாதிகள்,பாசிச சாதிகள்  முஸ்லிம்களை  அழிக்கவும்,  வெகுஜன மக்களிடம் அவர்களை  எதிரியாக காட்டவும் தொடர்ந்து  முயன்று வருகிறார்கள்? என்ற கேள்வி எழுகிறதல்லவா? 

         அடுத்துப் பார்க்கலாம்! 


Tuesday, 3 July 2012

இந்திய பத்திரிக்கைகளின் சிறுபான்மையினர் வெறுப்பு!

      இந்தியாவில் இயங்கிவரும் பத்திரிக்கைகள்  இந்துத்துவா சிந்தனையை திட்டமிட்டே விதைத்து வருகின்றன.மறுபுறம் சிறுபான்மையினருக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றன!


     "இந்துத்துவா"வை அதாவது பாசிச சக்திக்கு உதவும் வகையில் வெகுஜனமக்களின் பொருளாதாரத்தை சுரண்டும் காரணிகளாக உள்ள  ஜோதிடம் குறித்து வெளியிடாத பத்திரிக்கைகளை பார்க்க முடியாது! இந்த ஜோதிடப் பித்தலாட்டத்திலும் ரகரகமாக  தினசரி,வார,மாத ராசிபலன்கள் என்றும்  அப்புறம் குருபெயர்ச்சி,ராகு-கேது பெயர்ச்சி,சனிபெயர்ச்சி பலன்கள் என்றும்,இந்த இந்த ராசிக்கு தோஷம்,அதற்கு பரிகாரம் இதுவென்றும், இந்த கோயிலுக்கு போனால் புள்ளை பிறக்கும்,இந்த கோயிலுக்கு போனால் கல்யாணம் நடக்கும்,இந்த கோயிலுக்கு போனால் கண்டிப்பாக கர்ப்பம் அடைவாய் என்றும் தோஷம் போகும் என்றும் சொல்லாத பத்திரிக்கைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் ! ஜோதிடத்திலும்  பெயரை மாற்றிகொண்டால் சொர்க்கவாழ்வு கிடைக்கும், எண ஜோதிடம், வாஸ்து ஜோதிடம்,என்று      " பீலா " விடாத பத்திரிக்கைகளை காண்பது அரிதாகும்! 


     இப்படி தொடர்ந்து உண்மைகள் இல்லாத  கற்பனைகளை ஊடக உலக மேதாவிகள்  வெளியிட்டு, உழைக்கும் மக்களிடம் நம்பிக்கையை விதைத்து வருகின்ற பத்திரிக்கைகள்,  மறுபுறம்  பாசிச சுரண்டலுக்கு உடந்தையாக செயல்பட்டு வருவதை காணலாம். 


      இதுமட்டுமின்றி, புளிய மரத்தில் புள்ளையார் உருவம் தெரிந்தது,  மாங்காய்  மரத்தில் மாரியம்மாள் தெரிகிறார் என்றும்  முருங்க மரத்தில் பால் வடியும் அதிசயம், மக்கள் பக்திப் பரவசத்துடன் பூசை செய்தனர் . என்றோ,  பாம்பு வந்து  சாமிக்கு பூஜை செய்தது. {பாவம் பிராமணர்கள் பாம்பு  பூஜை செய்ய வந்துவிட்டால், அப்புறம் கோயிலில் அவர்களுக்கு என்ன வேலை ?} என்றோ  வெளியிட்டு வேடிக்கை காட்டவும் தவறுவதில்லை!


         வித்தைகள் காட்டும் மோசடி,மோடி மஸ்தான் பேர்வழிகளை  அவதார புருஷனாகவும், ஆன்மீகக் குருக்களாகவும் காட்டி மக்களை மடையர்களாக்கவும்  தவறுவதில்லை.!  அப்புறம், அலகு குத்துவது, பல்லக்கு தூக்குவது,சாமி அப்படியே தெருவுக்கு தெரு ஊர்வலமாய் (வீதிஉலா))வந்து,  அருள் பாலித்து....  இந்திய உழைக்கும் மக்களை  காத்து ரட்சிப்பது!  
      இந்தியாவை  சொர்க்கபுரியாகி, சுகபோகத்தில்  திளைக்க வைத்தது போலவே,   நம்ப வைக்கும்  செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்தி வெளியிடவும் தவறுவதில்லை!   


     எந்தவித பொறுப்பும் இல்லாத  ஊர்சுத்தி ஆசாமிகளை,   ஆன்மீக குரு வருகிறார்!! அருளுரை தருகிறார்!  உபதேசம்,சொற்பொழிவு  கேட்க வாருங்கள்  என்றும், பாதபூஜை செய்ய வாருங்கள்!   வேள்வி செய்ய வாருங்கள்!   பஜனைபாட வாருங்கள்!  என்று  சலுகை  விளம்பரம் கொடுத்து ,செய்திகளை வெளியிட்டும் " இந்துத்துவா சிந்தனையை " பரப்பவும், பாசிசச் சக்திகளுக்கு உதவவும், உழைக்கும் மக்களின்  செல்வத்தை , நேரத்தை, உழைப்பை சுரண்டவும்  பாடுபட்டு வருகின்ற இந்திய  பத்திரிக்கைகளும்  ஊடகங்களும்  ஜனநாயகத்தின் கேடுகளை வளர்க்கும்,பாசிச  சக்திகள் என்பதை  புரிந்துகொள்ளவேண்டும்!


     இதைமட்டுமா   செய்கின்றன ? இந்துத்துவ சிந்தனைக்கு எதிரானவர்களை நிந்திப்பது, சிறுபான்மையினரை " தீவிரவாதிகளாக தேச விரோதிகளாக" சித்தரிப்பது, இந்துத்துவ வாதிகளை  அவர்கள் எத்தனை கொலைகள்,கொடுமைகள் செய்தாலும்  கண்டுகொள்ளாமல்  அவர்களை தேச பக்தர்களாக காட்டுவது, போன்ற எண்ணற்ற  காரியங்களை  இந்திய பத்திரிக்கைகள்  செய்துவரவும்  தவறுவதில்லை! 


தீவிர வாத செயல்கள்  நடைபெறும்போது  பத்திரிக்கைகளின்  பார்வையை  அடுத்து  பார்க்கலாம்..

Thursday, 28 June 2012

இந்திய பத்திரிக்கைகளின் மோசமான பரப்புரைகள்!


       இந்திய பத்திரிக்கைகள்  பெரும்பாலும் ஊழலுக்கும்,முறை கேட்டுக்கும்  ஆதரவளித்தும்,ஜனநாயகத்திற்கு எதிராகவும்,உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், இந்தியாவில்  செயல்பட்டு வருவதாக தெரிகிறது!


          ஜனநாயகத்தின் நான்கு முக்கிய உறுப்புகளில் ஒன்றான, பத்திரிக்கைகள் ஜனநாயக உரிமைப்போரில் பங்கேற்கும் தார்மீக  கடமையைக் கைவிட்டு,வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்து வருகின்றன!உரிமை கேட்டு போராடும் மக்களுக்குஊடகங்கள்  ஆதரவாக செயல்படுவது இல்லை.!


     தனக்கும் வெகுஜன போராட்டங்களுக்கும் ,எந்தவித சம்பந்தமும்  இல்லாதது போல நடந்து கொள்கின்றன. சில பத்திரிக்கைகள் இத்தகைய உரிமைப் போராட்டங்களின் நோக்கத்தை திசை திருப்பும் பணியிலும் ஈடுபட்டு, போராட்டத்துக்கு எதிரான நிலைபாட்டிலும் நடந்துகொண்டு வருகின்றன!

        காரணம், ஊடகங்களின் உரிமையாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடனும்,ஜனநாயக உரிமைகளை மதித்து வருபவர்களும் இல்லை.அவர்கள் பெரிய தொழிலதிபர்களாகவும்,தரகு முதலாளிகளாகவும் அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவும், பாசிசவாதிகளாகவும்  இருந்துவருவதுதான் !

        பத்திரிக்கைகளின் இதுபோன்ற மோசமான செயல்பாட்டினால், உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டங்கள்,ஜனநாயகப் போராட்டங்கள்  தோல்விஅடையும் நிலை ஏற்படுகிறது! ஜனநாயக எதிர் சக்திகள்,சுரண்டும் பாசிச சக்திகள்  வெற்றி அடையும் சூழல் உருவாக்கப் படுகிறது! உரிமைகோரும் மக்களின்  வாழ்க்கையும் உரிமையும் பாசிச,எதேச்சாதிகார சக்திகளால் பறிக்கப்படும் நிலை ஏற்படுகிறது!


          வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜனநாயகமும் ,மக்களின் உரிமையும்,மக்கள் நலனும், காக்க வேண்டிய,  ஜனநாயகத்தின் அடிப்படை தளத்தில் இயங்க வேண்டிய பத்திரிகைகளின் துணையுடனே இந்தியாவில் ஜனநாயகமும்,மக்களின் நலனும் பறிக்க படுகிறது! பறிபோக காரணமாகஇந்தியாவில்  பத்திரிக்கைகள் இயங்கிவருகின்றன!


   இதுமட்டுமின்றி, பல சமயங்களில்  பாசிச சக்திகளுடன் "கள்ள கூட்டுவைத்துக் கொண்டு,"  பாசிச சக்திகளின் செயல்களை  நியாய படுத்தியும், அவர்களது  ஜனநாயக விரோத,மக்கள் விரோத செயல்களுக்கு,  ஆதரவாகவும்  பரப்புரை செய்யவும் ஊடகங்கள்  தவறுவதில்லை!  இதுமட்டுமின்றி, உரிமைப் போராட்டங்களை ஒடுக்கவும், ஒற்றுமையைக் குலைக்கவும்  "ஐந்தாம்படை வேலைகளை "செய்யவும் அவைகள் தவறுவதில்லை!


     வெகுஜன மக்களின் முக்கிய  பிரச்சனைகளில் இருந்து  அவர்களை திசைதிருப்பும் நோக்கத்தில், முக்கியமற்ற, பரபரப்பு செய்திகளை வெளியிடுவது, இதன் மூலம் முக்கியதத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் தீர்வு  ஏற்படாதவாறு,   நீர்த்து போகச் செய்வது,  போன்ற பாசிச செயல்களை செய்வதும் இந்திய ஊடகங்களின்  பணியாக இருந்து வருகிறது!


    மேலும்  அவைகள், உண்மையில்லை என்பதை தெரிந்தே, பொய்யான, கற்பனையான செய்திகளை  மக்களிடம் கொண்டுசென்று அவர்களை மூடர்களாக்கும்,மூளையை  சலவை செய்யும் செய்திகளை தொடர்ந்து செய்துவருகின்றன! தேவையற்ற வதந்திகளை வெளியிட்டு, சமூகத்தில்  பீதியையையும்,பதற்றத்தையும் ஏற்படுத்துவது, வேற்றுமை உணர்வை தோற்றுவிப்பது போன்ற  பணிகளை  திட்டமிட்டே  செய்துவருகின்றன!

    இந்திய ஊடகங்கள்  செய்துவரும் இத்தகைய செயல்களில் சிறுபான்மையினர்  மீது கொண்டுள்ள வெறுப்புணர்வும், இந்துத்துவா நேசமும்  வெளிபடுவதைக் பல்வேறு உதாரணங்கள் மூலம் அறியலாம்! 

அவைகள் குறித்து அடுத்து பார்க்கலாம்! 


Monday, 25 June 2012

ஆட்சித்துறையின் அவலட்சணமும்,இந்துத்துவாவும்!


          ஆட்சிசெய்யும் அதிகாரம் கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகள் குறித்தும்  அவர்களது இந்துத்துவ சிந்தனையால் இந்திய திருநாட்டில் நிகழ்ந்துவரும் ஜனநாயகச் சீரழிவு குறித்து சென்ற பதிவில் பார்த்தோம்.,


     ஆட்சித் துறை என்னும் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் அரசு அதிகாரிகளின் மனித நேயமற்ற,கொடூரமான, உழைக்கும் மக்களுக்கு குறிப்பாக ஒடுக்கப்பட்டு,தாழ்த்தப் படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு செயல்களையும் அநீதிகளையும் பார்க்க வேண்டியுள்ளது! ஏனெனில், இத்தகைய கொடுமைகளும் அநீதிகளும் இந்துத்துவா என்ற பிராமணீய பாசிசத்தின் காரணமாகவே இன்றுவரையிலும் தொடர்ந்து வருகிறது!


    இந்தியா சுதரந்திரம் அடைந்து  ஆண்டுகள் பல கடந்தும் கூட, ஜனநாயக ஆட்சி நடப்பதாக கூறும் நாட்டில், சர்வாதிகாரப் போக்கு கொண்ட மேல் சாதியினரின் கொடுமைக்கு தலித்து மக்கள் ஆளாகிவருகின்றனர். அவர்களுக்கு கொடுமைகளை செய்பவர்கள்  கல்வியறிவு இல்லாதவர்களோ, இந்தியாவின் சட்டங்கள்,நீதி,நிர்வாகம் குறித்து எதுவும் அறியாத பாமர மக்களோ இல்லை.!    உயர் கல்வி அமைப்புகளான ஐ.ஐ.டி ,எ ஐஐ எம் எஸ், ஐ.டி.எஸ்,என் ஐ.எல்( IIT, AIIMS, ITS, NIL )  போன்ற மத்திய கல்வி அமைப்பின் கீழ் இருந்துவரும் மெத்தப் படித்த மேதாவிகளான உயர்சாதியினர்தான்!


     கடந்த நான்கு ஆண்டுகளில் பதினெட்டு தலித் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உள்ளார்கள்! காரணம் உயர்சாதி என்ற பிராமணீய மனுதர்ம மேலாண்மைத் திமிர்தனத்தால்,அவர்களுக்கு மனஉளச்சலை தந்ததுதான்! இதற்கு அந்த நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்களும் உடந்தையாக இருந்துவருகின்றனர் என்பது எவ்வளவு கொடுமையான செயல் என்பதை எண்ணிப்பாருங்கள்! பிராமணீய பாசிசத்தைப் புரிந்துகொள்ள முடியும்!


     உயர் கல்விநிறுவனத்தில் சேர்ந்து டாக்டர் படிப்புக்கு AIIMS-யில்  சேர்ந்த,"பால முகுந்த பாரதி" என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்!  ( சாதிகள் இல்லையடிப் பாப்பா என்று பாடிய பாரதிக்கு இன்றைய கல்வியாளர்களைபற்றி தெரிய வாய்ப்பு இல்லை! ) தெரியாமல் பாடிவிட்டார்)   " ஏண்டாஇங்கே  வந்து,எங்க உயிரைவாங்குறே,  உங்க ஊரில் மருத்துவ கல்லூரி இல்லையா?"  என்று கேட்டும், பல்வேறு வகையில் அவமானப்படுத்தியும், மன உளைச்சலைத் தந்தும், அவனது உயிரை போக்கிக்கொள்ள செய்திருகிறார்கள்! 


     மக்களின் வரிப்பணத்தில் இருந்து, கோடிகணக்கான பணத்தை கொட்டி மைய  அரசால் நிருவகிக்கப் படும் (IIT,AIIMS,ITS,NIL)போன்ற நிறுவனங்கள் உயர்சாதி இந்துக்களுக்கு மட்டுமே உரிமையான இடங்களாக இருப்பதையும், அவைகள் பிராமணர்களின் பரம்பரை  உரிமையாக கருதியும் கொண்டாடியும் வருவதை ஆட்சித்துறை அறிந்துள்ளது! ஆயினும், உருப்படியான நடவடிக்கைகள் எடுப்பதில்லை.! காரணம், இந்துத்துவ சார்பு ஆட்சித்துரையின் அவலட்சணம் தான்! 

     தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைப்பதை கண்டுகொள்ளாமல் இருப்பது எனபது ஒரு குற்ற செயலாகவோ, குற்றத்திற்கு ஆதரவளிக்கும் செயலாகவோ, அவைகளை தடுக்கும் தார்மீக கடமை தங்களுக்கு இருப்பதாகவோ, அத்தகைய கடமையை நாம் மீறி வருவது பற்றியோ ஆட்சித் துறையில் உள்ளவர்களுக்கும் அக்கறை இல்லை.  வேறு துறைகளான நீதித் துறை,அரசியலார், ஊடகங்கள்  போன்ற யாருக்கும் இங்கே கவலை இல்லை! வெட்கமும் வேதனையும் இல்லை!!


     சமூகக் கொடுமைகளை,சட்டமீறல்களை,பார்ப்பனிய பாசிசச் செயல்களை   இந்திய ஊடகங்களும் அம்பலப்படுத்துவதில்லை! நியாயம் கேட்டு போராடுவதில்லை! ஆனால், உயர் கல்வி கற்க சென்ற உயர்சாதி மாணவனுக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் ,இவைகள் வைக்கும் ஒப்பாரிக்கு மட்டும் அளவே  இருப்பதில்லை!


     கனடாவிலும்,இங்கிலாந்திலும் சுட்டுக் கொல்லப்பட்ட உயர்சாதி மாணவர்கள் குறித்து, சமீபத்தில் கூக்குரல் இட்ட  இந்திய ஊடகங்கள், ஏன்... இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் நடக்கும் கொடுமைகள், குறித்து வாயை மூடிகொள்ளுகின்றன? குறைந்த பட்சம் செய்தியாக கூட அவைகளை வெளியிடுவதில்லை?!  ஏனெனில், இந்திய ஊடகங்களின் இந்துத்துவ பாசமும், அவைகளின் மனுதர்ம ஆசையும்தான்! 


      இந்துகளில், உயர்சாதி சாமியார்கள் செய்யும் காம களியாட்டங்கள், ஊழல்கள், முறைகேடுகள்,அனாசாரங்கள்,அக்கிரமங்கள் பலவற்றையும் இருட்டடிப்பு செய்தும்,நியாயப்படுத்தியும் வருகிற செயல்களை ஒருபுறம் செய்துவருகிற இந்திய ஊடகங்கள், மற்றொருபுறம், சிறுபான்மையினர்,தலித்துக்கள் செய்யும் சிறிய தவறுகளையும் ,குற்றசெயல்களையும் மிகைப்படுத்தியும், ஊதிப் பெருக்கியும் வருவதையும் காணலாம்!


         இவைகளை இந்திய ஊடகங்கள், "  தங்களது இந்துமத தொண்டாக"  செய்துவருகின்றன! பிராமணீயத்தின்  தாக்கத்தில், ஊடகங்கள் உள்ளதால்..., அவைகள்  பிராமணீய நலத்தைக் காக்க, ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும்,சமூகநீதியையும் கேள்விக்கு உள்ளாக்க  செய்துவரும், மிச்ச மீதி செயல்களை அடுத்தும் பார்க்கலாம்! 

 

Tuesday, 19 June 2012

இந்திய ஊடகங்களின் இந்துத்துவ பாசம்!

    ஒரு ஜனநாயக நாட்டின்  காவலாக,அரணாக இருப்பவை எவை என்பதற்கு, 1)ஆட்சியதிகாரம்,(ஆட்சியாளர்கள்) 2)அரசு நிர்வாகம்,(அரசு அலுவலர்கள்) 3)நீதிபரிபாலனம்,(நீதிபதிகள்)  4)பத்திரிக்கைகள்    என்பார்கள்!


       ஜனநாயகத்தை காக்கும்   தூண்கள் ஆக  கருதப்படும்  இவைகளில் ஏதாவது   ஒன்றில் தவறு  நடந்தால்கூட அது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல,கேடானதாகும். அப்படி ஏதாவது  தீங்கு நேரிடுமானால்,ஜனநாயக மாண்புகளைக் காக்கும்,   மற்ற உறுப்புகளைக் கொண்டு அவற்றை சீர்படுத்தி,ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் (காக்கலாம்) எனபது எதிர்பார்ப்பும் எதார்த்த உண்மையாகவும் இருந்து வருகிறது!


   இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில்(?) ஜனநாயகத்தைக் காக்கும்  நான்கு தூண்களும், ஜனநாயகத்தைக் காக்கும் உயரிய,தார்மீக நெறியில் இருந்து  எப்போதோ விலகிப் போய்விட்டன. ஜனநாயத்தை போர்வையாகக் கொண்டு, இந்தியாவில்  இப்போது நடந்துவருவதும்  இருப்பதும் "எதேச்சதிகாரம் என்ற பாசிசமே" ஆகும் !


   இந்திய ஜனநாயகம் எனபது ,' இந்து' என்கிற முகமூடியணிந்த " பிராமணப் பாசிசமே" எனபது எனது உறுதியான கருத்தாகும்!


    நான் இப்படிகூறுவது, இன்னும் இந்தியாவில் உண்மையான ஜனநாயகம் உள்ளதாக எண்ணி மாயையில்  வாழ்ந்துவரும்  அறிவு ஜீவிகளுக்கும், அரசியலாருக்கும் மனக்கசப்பை ஏற்படுத்தலாம் எனினும்,அது கசப்பான உண்மைதான்!


இந்தியாவில்  ஜனநாயகத்தை  காக்கும் நான்கு தூண்களும் சிதைவுக்கு ஆளாக்கப்பட்டு எப்படி இன்று காட்சியளிகின்றன என்பதை  தொடர்ந்து பார்கலாம்:


ஆட்சி அதிகாரம் என்னும் ஆட்சியாளர்கள்:


     ஆட்சி அதிகாரம் எனபது,  மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் மக்களின் பிரதிநிதிகளால் மக்களின் நல்வாழ்வுக்கும்,முன்னேற்றத்திற்கும்  மேற்கொள்ளப்படும், செயல்படுத்தப் படும்  நலப் பணிகளாகும்!


       மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மந்திரிகள், பிரதமர், போன்ற  மத்திய அரசின்  அதிகார வர்கத்தில் இருந்து,மாநில அரசுகளின்  முதல்வர்கள்,மந்திரிகள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,தொடக்கி  உள்ளூர் பஞ்சாயத்துதலைவர்,உறுப்பினர் வரையில் உள்ளவர்களும்,  ஆட்சி அதிகாரத்தில்  அங்கம் வகிப்பவர்களுமான  மக்கள் பிரதிநிதிகளின்   யோக்கியதை என்ன? அவர்கள் மக்களுக்காக செய்யும் நலப்பணிகள் என்ன? ஜனநாயகத்தை காப்பாற்ற   அவர்கள் மேற்கொள்ளும்  பணிகள்  என்ன? என்பதை குறித்து ஆராய்ந்தோமானால்  நமக்கு ஏமாற்றமே கிடைக்கும்! 


   எவையெல்லாம்  மக்கள் நலனுக்கும் ஜனநாய மேன்மைக்கும் எதிரான செயல்களோ,அவைகளையே  மக்களின் பிரதிநிதிகள் பலரும் கூட்டாகவும்,தனியாவகவும் செய்துவருவதை காணலாம்!


    ஆட்சி அதிகாரத்தை பயன் படுத்தும்   மக்கள் பிரதிநிதிகள்   பலரும் கிரிமினல் குற்றசெயல்கள் செய்பவர்களாக  ஊழல்,முறைகேடுகள், கருப்புப்பணம், போன்ற  முறைகேடுகளில் ஈடுபடுபவர்களாக, இருப்பதை காணலாம்! இவைகள் குறித்து  பல்வேறு  உதாரணங்களை  ஆதாரமாக முன்வைக்க வேண்டிய  அவசியம்  இல்லாதபடி   எல்லோரும் அறியும் வகையில் இருப்பதை அறிவோம்!  கொஞ்சமும்  வெட்கமின்றி, வெளிச்சம் போட்டு,மிகக்   கேவலமாக,ஆட்சியில் உள்ளவர்கள்   நாட்டின்  செல்வதை  களவாடுகிறார்கள்! ஜனநாயகத்தை கெடுத்து வருகிறார்கள்!


     இப்படி செய்பவர்களை,சமூக குற்றங்களை செய்பவர்களை  எப்படி ஜனநாயகத்தை காப்பதாக சொல்லமுடியும்? சரி. இவர்களை  தண்டிக்கும் அதிகாரம் உள்ள நீதித் துறை எப்படி  உள்ளது? நியாகமாக நடந்துகொண்டு, தண்டிகிறதா?  ஆட்சியாளர்களை  நல்வழிப்படுத்தி,ஆலோசனை  கூறி,நல்ல ஆட்சியை  நடத்த வேண்டிய  பொறுப்புள்ள  அரசு நிர்வாகம்  இன்று எப்படி  உள்ளது? தனது கடமையை  உணர்ந்து காரியம் ஆற்றுகிறதா? எல்லாவற்றுக்கும் பதிலாக இல்லையென்றுதான் சொல்லமுடியும்!


     இவைகள் எல்லாமே, ஊழலுக்கும் முறைகேட்டுக்கும் துணைபோகும் நிலையில்  உள்ளது!  இவைகள்  முறையே கூட்டாகவும், தனித்தனியாகவும்  குற்றங்களில்  ஈடுபட்டும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பாதுகாக்கும் நிலையை  அடைந்து உள்ளது! அதாவது பாசிசமாகப் பட்டுவிட்டது! 


    இவைகளுக்கு காரணம்  என்ன? ஜனநாயகத்தின் பேரில், உழைக்கும் மக்களின்  உடமைகளை, உரிமைகளைப் பறிக்கும் செயல்களில் ஈடுபடும் இத்தகைய செயல்களை  எப்படி ஜனநாயகம் என்று ஏற்க முடியும்?

    பாசிசம் என்றுதானே கூறமுடிகிறது!  உடனே சரி,நீங்கள் கூறுவதுபோல இந்தியாவில்  ஜனநாயகம் இல்லை, பாசிசம் தான் ஆட்சி செய்கிறது என்றே ஒப்புகொண்டாலும்  அதனை  எப்படி இந்துமத பாசிசம், பிராமணீயம் என்று சொல்லலாம்  எனக்   குதர்க்கமாக கேட்கும் அறிவு ஜீவிகளுக்கு...


    தீண்டாமைக் குற்றம்  எனபது ஆட்சியின் சட்டம்  ஆனால் இந்தியாவில் நிகழும் தீண்டாமைக் கொடுமைகள் எத்தனை? அத்தகைய குற்ற செயல்களை யார் செய்கிறார்கள்? செய்பவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கிறது? குற்ற வாளிகளை  யார் பாதுகாக்கிறார்கள்? அவைகள் ஏன் தடுக்கபடுவதில்லை?   என்பதுபோன்ற  விஷயங்களை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.  கவனத்தில்  கொண்டால், அதன் பின்னணியில்  இந்துமதமும், அதன் பின்னணியில் மனுதர்ம மகானுபாவர்களும்,சாதிய கட்டமைப்பும்,அதனைக் கட்டியமைத்து காப்பாற்றிவரும்  பிராமணீயமும் இருப்பது  புலப்படும்!


    இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு எனபது,  அரசியல் சட்ட நிலைப்பாடு!  அரசு அலுவலகங்கள்  தொடக்கி, சட்டத்தை காக்கும் காவல் நிலையம், நீதிமன்றங்கள் அனைத்தயும்  கட்டும்போதே...  இந்து முறைப்படி பூமிபூசை  போட்டு,  பிராமணர்களைக் கொண்டு வேதம் ஓதச்  செய்து,  கட்ட ஆரம்பிப்பது முதல்,       ஆயுத பூசை,சரசுவதி பூசை என்று  இந்துமதப் பண்டிகைகளை  மட்டுமே கொண்டாடுவது போன்ற  மத சார்பற்ற, சமத்துவமான(?) கடமைகளை,   எல்லோருக்கும் பொதுவான, சமயசார்பற்ற  அரசு அலுவலகங்களிலே செய்வது, அப்புறம் கோயில்களை  அரசு வளாகங்களிலேயே கட்டி இருப்பது வரையில்...  ஏன்? அதன் பின்னணியில் இருப்பது எது?   என்று  சிந்தித்துவிட்டு,  விவாதிக்க வருமாறு வேண்டுகிறேன்!


       ஆட்சி அதிகாரத்தை  தவறாக  பயன்படுத்தி வரும்   மக்கள் பிரதிநிதிகளின்  ஊழல்,அதிகார துஷ்பிரயோகம்  குறித்து  செய்திகளை வெளியிடும்  ஊடகங்கள்   வெளியிடும் செய்திகளில்தான்  எத்தனை  பாரபட்சங்கள்? 

      ஊடகங்கள்  பாசிச ஆட்சியாளர்களுக்கு பரிந்து  செய்தி வெளியிடுவதையும் , அரசின்  உயர் கல்வி அமைப்பான  ஐ.ஐ.டி யில்  நடந்துவரும் சமூகக் கொடுமை,உடகங்களின் இந்துத்துவ பாசம், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள் மீது  கொண்டுள்ள வெறுப்புணர்வு, போன்ற   செய்திகளை  அடுத்தடுத்து  பார்க்கலாம்!