Monday, 23 January 2012

பார்பனீயமும் பெண்களின் நிலையும்!

           பார்பனீயம்  கீழ் சாதி மக்களை  அடக்கி,அடிமைப் படுத்தி வந்ததைப் போலவே பெண்களையும் அடிமைப் படுத்தி அவர்களது வாழ்க்கையை அமைத்து இருந்தது! இந்த நிலை, சமூகத்தின் எல்ல வர்ணப் பெண்களுக்கும்  இருந்தது. பிராமணர்களின்  பெண்களும்  அடிமைபடுத்தப்பட்டு, அவலமான வாழ்க்கையே வாழ்ந்தனர். காரணம்,பிராமணர்களின் மனைவிமார்கள் பெரும்பாலோர் திராவிடர்களாக இருந்ததுதான். மவள் சாதிப் பெண்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் சூத்திரர்களைப்  போலவே   விதிக்கப் பட்டு இருந்தது!

            பெண்களைக் குறித்து இவர்களின் மனு தர்ம சாஸ்திரம் மட்டுமின்றி  காப்பியங்கள்  ஆக கூறப்படும் ராமாயணம், மகாபாரதம் ஆகியவைகளும் இதர புராணங்களும் மிகவும் மோசமான சித்தரிப்புகளை செய்து இருந்தது!

          " மாதர்கள்  கற்பு நிலை இன்மையும்,நிலையா மனமும்,நன்மின்மையும் இயற்கையாக உடையவர்கள்"( மனுதர்மசச்திரம் 9 :15 ) என்று கூறியது.


            "கணவன் சுதாடுகிறவனாக இருந்தாலும்,குடியனாக இருந்தாலும், நோயாளியாக இருந்தாலும், அவனுக்கு மனைவி கர்வத்தினால் பணிவிடை செய்யாவிட்டால்,  அவளுக்கு அலங்காரம்,துணிமணிகள்,படுக்கை இவற்றைக் கொடாமல், மூன்று மாதம் நீக்கி வைக்கவேண்டியது"                                       ( மனுதர்மசச்திரம் 9 :78 ) 


          ஆனால் அவர்களுக்கு பிரச்னை என்னும்போது, மாதர்களை மிகவும் அருவெறுப்பு கொள்ளும் நிலைக்கு ஆளாக்கி, உபயோகப் படுத்திக் கொண்டு வரவும் தவறவில்லை.!


             " பிள்ளை இல்லாமல் அந்தக் குலம் நசிகிறதா இருந்தால், அப்போது அந்த ஸ்திரி,தன கணவன் மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக்கொண்டு  தன மைத்துனன் அல்லது தன கணவனுக்கு  ஏழு தலைமுறை உட்பட்ட  பங்காளி ஆகியோர்களுடன்  புணர்ந்து ஒரு பிள்ளையை  உண்டுபண்ண  வேண்டியது"
( மனுதர்மசச்திரம் 9 :59 )
      என்று விபசாரத்தை  செய்ய சொன்னது! பெண்களின் கற்பு குறித்த பிராமணீயத்தின் பார்வையில் ஏராளமான விசித்திரங்களும், விநோதங்களும் இருப்பதைப்  பாருங்கள்! 


               பிராமணர்கள் உயர்த்திக் கூறும் ராமனின் பிறப்பும் அவர்களின் சகோதர்கள் பிறப்பும் மேலே குறிப்பிட்டு உள்ள  மனுதர்ம சாஸ்திரத்தின் படி  கணவன் அல்லாத  பிற  ஆடவர்களின்  சேர்க்கையால்   நடந்த பிறப்புகளே!


         "அரசனின்  (தசதரனின் ) மனைவிகளை ஹோதா,அத்வர்யு, உத்சதா ஆகிய மூவரும் புணர்ந்தார்கள்"
(பால  காண்டம்  14 -வது சருக்கம்,மன்மதநாத் தத்தரின் ஆங்கில மொழிபெயர்ப்பு) 
      சூர்பநகை  மூக்கு தனம் அறுப்பு, தாடகை வதம், சீதையை நெருப்பில் புக சொல்லுவது, கர்ப்பிணியான அவளை  காட்டுக்கு அனுப்புவது  என்று  இதுபோல ராமாயணத்தில்  பெண்களை இழிவு படுத்தும் காட்சிகள் ஏராளம்!  மகாபாரதமும்  இதற்க்கு சளைத்தது அல்ல!

      மனுதர்மம் சொல்ல்வதையே  கர்ணன் வாயிலாக,  "உன் புருசர்கள் உனக்கு  உதவி செய்யவில்லை எனவே வேறு ஆடவர்களைத் தேடிக்கொள் " என்று கூறுவது!  
        விசித்திர வீரியனின்  மனைவிகளிடம்  புணர்ந்து  சந்ததியை உண்டாக்க சத்தியவதி பீஷ்மரிடம்  சொல்வது..  பீஷ்மர் மறுத்துவிடவே,  சத்தியவதியின் தீர்மானத்துக்கு முன்பே பிறந்ததாக  சொல்லப்படும் வியாசன்  அம்பிகை, அம்பாலிகை ஆகியோரை புணர்ந்து  பாண்டு, திருதராஷ்டிரன் ஆகியோர்கள் பிறப்பது,  போதாதற்கு  அரண்மனைப் பணிப்பெண் மூலமான  விதுரன் பிறப்பு!  பாண்டுவின் மனைவிக்கு அயிந்து  கணவர்கள், பாஞ்சாலியான திரோபதைககும்   அயிந்து கணவர்கள்  என்று  மகாபாரதம்  சொல்லும் பெண்களின் நிலையும், அடிமைதனமும்  பெண்களுக்கு ஏற்படுத்தப் பட்ட கொடுமைகளுக்கும்  அளவே இல்லை!   


         சாதாரண குடும்ப வாழ்கையில்,   பெண்கள் உணர்ச்சி யுள்ள  இதர மிருகங்களைப்  போலவே  நடத்தப் பட்டனர்.
   " பாலியமாக இருந்தாலும்,யவனமாக இருந்தாலும்  வார்திபகமாக இருந்தாலும்  ஸ்திரீகள் தத்தம்  வீடுகளில் மனம்  போனபடி  ஒரு காரியத்தையும் செய்யகூடாது"   ( மனுதர்மசச்திரம் 5 : 147 
          தனித்து பெண்கள் தங்கள் வீட்டுக்குள்ளே கூட இயங்க, தடை செய்த பிராமணீயம்  மேல் சாதி பெண்கள் இறந்தால் கணவனுடன்  உடன்கட்டை ஏறவேண்டும் என்று பெண்களை தீயில் போட்டு  கொன்றது! அப்படி உடன்கட்டை ஏறாவிட்டால், தலையை மொட்டை அடித்துக்கொண்டு  வெள்ளை உடை உடுத்த  நிர்பந்தம் செய்தது! அதுமட்டும் இன்றி, கணவனை இழந்த,    இதுபோன்ற பெண்கள்,  வயிறு நிறைய உண்ணக் கூடாது, சுவையான உணவு உண்ணக்கூடாது, மூன்று வேலையும் உண்ணக்கூடாது  என்றது! 

        இது மட்டுமின்றி கணவன் இருக்கும் பொது,வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது,வெளியில் வரவேண்டும் என்றால் கணவனுடந்தான் வர வேண்டும். கணவன் இல்லாதபோது  அவசியம் வெளியே வரவேண்டும் என்றால் தந்தையோ,சகோதரனோ உடன் வரவேண்டும்  

         என்ன பாதுகாப்பு பாருங்கள்,   பெண்களுக்கு  பிராமணீயத்தின் இத்தகைய கட்டுப்பாடுகளால்  வாழ்க்கை எனபது எந்த வித சுவையோ, மகிழ்ச்சியோ  இன்றி இருந்தது. அதுமட்டுமின்றி பெண்கள் தங்களுக்கு வாய்த்தது, விதிக்கப்பட்டது(? )இதுதான் என்று  ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு ஆளாக்கப் பட்டு   வெறுமையுடனும் விரக்தி உடனும் ஆடுமாடுகளைப்  போலவே  ஆண்களின்  ஆசைக்கும் தேவைக்கும் ஆளானார்கள்!

            பிராமணீயத்தின் பயங்கரவாதம்  மற்றும் அதன்  விளைவுகள்  தொடர்பாக   ஆய்வுகளை செய்து, இந்த பதிவுகள்  எழுதப் படுகிறது!

       இதன் தொடர் பதிவை  பிப்ரவரி மாதம்  வெளியிட உள்ளேன்!  
Sunday, 22 January 2012

பார்ப்பனீயத்தின் பயங்கர ஒடுக்குமுறைகள்!

          பார்பனீயத்தின் ஒடுக்குமுறைகளை  இப்போது படிப்பவர்கள், கேள்விப் படுபவர்கள்  அதிர்ச்சி அடையலாம்  அல்லது எப்போதோ நடந்ததுதானே?  என்று அலட்சியமாக நினைக்கலாம்.. பொதுவாக,  அடக்கி ஒடுக்கப் படும் ஆளும் வர்கங்களின் கொடுமைகள்  குறித்து  எல்லோராலும் சொல்லப் படும்   விமர்சனம் என்றும் நினைக்கலாம் . இவைகள் யாவும் ஓரளவு உண்மையாக இருந்தபோதிலும்  இவைகளுக்கு மேலே  பயங்கரமான ஒடுக்குமுறையாக  உள்ளது பார்பனிய ஒடுக்குமுறை என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும்!

          ஒரு குறிப்பிட்ட காலஎல்லை  அளவு கொண்டதோ, பாதிப்புகளை ஏற்படுத்துவதோ போன்ற  ஒடுக்குமுறை அல்ல பார்ப்பனீய ஒடுக்குமுறை.!        அது ,  பல  நூற்றாண்டுகளாக, பாரம்பரியமாக, வாழையடி வாழையாக, தலைமுறை  தலைமுறையாக  தொடர்ந்து உழைக்கும் மக்களை  ஒடுக்கி வரும்  பயங்கரமாகும்.    தண்டித்து வரும் ஒடுக்குமுறை  ஆகும். !  இன்றும் பல்வேறு வடிவங்களில்,  பல்வேறு பரிணாமங்களில்  நீடித்து வரும் பயங்கரமாகும்! 

              சாதிவாரியாக தெருக்களை அமைத்தனர் . ஒவ்வொரு தொழில் செய்வோரும் தனித்தனிப் பகுதிகளாக வாழ்ந்தனர்  என்று முன்பே நான்   குறிப்பிட்டு உள்ளதை  நினைவில் வைத்து, கீழே வருபவைகளை படிக்குமாறு வேண்டுகிறேன்!

           சாதிவாரியாக வசிப்பிடங்களும் அவர்கள் புழங்கும் தெருக்களும் இந்திய கிராமங்களில்  இருந்ததைப் போன்று  பூஜை, புனஸ்காரங்கள், வேள்வி, சடங்குகள்செய்ய,  பார்பனர்கள் வசிக்கும் தெருக்கள், அஹ்ரகாரங்கள்,  கிராமங்களில் இருந்துவந்தன.    இங்கு வசித்துவந்த பார்பனர்கள் மக்களை  அளவற்ற மூட நம்பிகையில் ஆழ்த்துவதையும், சாதிக்கு ஒரு தர்மத்தையும்,  சாதிக்கு ஒரு நீதியை    நிர்ணயித்தும், நிர்வகித்தும், சாதிக்கு ஒருநீதியை  தொடர்ந்து  பாதுகாத்தும்  வந்தார்கள்! 

           இவர்களது சமத்துவம் அற்ற,மனிதத்  தன்மையற்ற  செயல்களால், ஆட்சி அதிகாரத்தால், ஒடுக்குமுறையால்  பார்பனர்கள் தவிர  மற்ற எல்லாதரப்பு மக்களும் பாதிக்கப் பட்டார்கள்!  ஒவ்வொரு சாதிக்கும்  உணவு, உடை, பழக்கவழக்கங்கள்  வகைபடுத்தப் பட்டது,  அதாவது செருப்பு போடக்கூடாது, முழங்காலுக்கு கீழே உடை அணியக்கூடாது. பெண்கள் மேலாடை அணியக்கூடாது. என்று  எல்லாவற்றிலும் தடையும் கட்டுபாடுகளும்   விதிக்கப் பட்டது.     இந்த விதிகளை கட்டுபாடுகளை மீறுவோருக்கு தண்டனைகள் நிறைவேற்றப் பட்டன.   தண்டனைகளும்  சாதிக்கு தகுந்தபடி  வெவ்வேறு வகையாக   வழங்கப்பட்டது!

           அளவற்ற மூட நம்பிகையால்  மக்கள் ஆழ்த்தப் பட்டனர்.  மூட நம்பிகைக்கு ஆளான மக்கள்,  எல்லாவற்றிற்கும் சகுனம் பார்த்தார்கள். வீட்டில் இருந்து வெளியே வர,,,      ஏர் உளவு செய்ய,  கால்நடைகள்  வாங்க, விற்க,தங்களது எல்லா செய்கைகளுக்கும் சகுனம் பார்த்தே செயல்பட்டார்கள்.
          கொள்ளை நோய்கள் வந்து மக்கள் மந்தைமந்தையாக மாண்ட போதும்,கண்ணெதிரே மாபெரும் படுகொலைகள் நடந்தபோதும், கற்பழிப்பு,  களவு என்று எது நடந்தாலும், எந்தவித எதிர்ப்பும் இன்றி, உணர்வுகளும்  அற்ற    சவங்களைப் போல, வாழப்   பழகிப் போனார்கள்!

            பார்பனர்களின்  அதிகாரத்தால்   மிக பயங்கரமாக,அதிகமாக   பாதிக்கப் பட்டவர்கள்,      கீழ் சாதியாக.... பிராமணர்களால் வகைபடுத்தப் பட்ட ஆதிதிராவிடர்களே!   இவர்களுக்கு பிறகு,  எல்லாதரப்பு பெண்களும்  பாதிக்கப் பட்டார்கள்!

             கீழ்சாதி மக்கள், கல்வி, அறிவு பெற உரிமை மறுக்கப் பட்டது. இதனால் கடுகளவு உலகஅறிவு  இன்றியும், யார் எது சொன்னாலும்  எளிதில் நம்பும் தன்மை  கொண்டவர்களாக, எதார்த்தமான மக்களாக  கீழ்சாதியின மக்கள் இருந்தனர்!" பிராமணீயம் "  இவர்களை,  விவசாயிகள் வீட்டில் விவசாயத்திற்கு பயன்பட வளர்க்கும் கால்நடிகளைப் போல வாழும் நிலைக்கு ஆளாக்கியது!  ஆடுமாடுகளின் வாழ்கையை விட இவர்களது வாழ்க்கை எந்த விதத்திலும்  மேலானதாக இல்லை!

             பார்பனர்களை தீண்டக் கூடாது,ஊருக்குள் குடியிருக்கக் கூடாது. பிற சாதியினர் வசிக்கும் தெருக்களில்  செருப்புடன்  போககூடாது,  சமமாக  பழக கூடாது,  அனைவரும் பயன்படுத்தும் பொது குளங்கள், கிணறுகளில் நீர் எடுக்கக் கூடாது, பருக கூடாது, குளிக்க கூடாது.  பறை அடித்தல், செருப்பு தைத்தல்,கழிவுகளைச் சுத்தம் செய்தல்,துவைத்தல்,நாவிதம் செய்தல் ஆகிய தொழில்களைத் தான்  செய்ய வேண்டும். சமுதாயத்தில் கேவலமான  தொழில்களை மட்டுமே செய்யவேண்டும். 

               பழையது, கழிசல், செத்த மாடு ஆகியவைகளையே உணவாகக் கொள்ளவேண்டும். மிகக் கேவலமாகத்தான் உடையணிய வேண்டும். குடிசையிலும் கீழான குடிசைதான் வசிக்கவேண்டும். பிராமணர்களை மட்டுமல்ல எல்லா சாதியினரையும் மதிக்கவேண்டும். அனைவரின் சொல்லுக்கும் அவர்கள் இடும் கட்டளைக்கும் அடிபணிந்து நடக்க வேண்டும். ஆனால் இவர்களை யாரும்  மதிக்க வேண்டியது இல்லை! மனித சிந்தனையற்ற பார்பனீயத்தின் கட்டுபாடுகள் கீழ்சாதியினரை  ஒரு சிறிய கூட்டுக்குள் அடைத்து வைத்து,  சித்தரவதைப் படுத்தும்  மிருக வாழ்கையை  கீழ் சாதியினருக்கு வழங்கியது இந்த மரபான விதிகளில் அடிமைபடுத்திய இந்த மக்களுக்கு எல்லோரையும் போல ஆண்டவனை வழங்கக் கூட உரிமை மறுக்கப் பட்டது. கோவிலுக்குள் நுழையும்  உரிமையும் மறுக்கப் பட்டது. 

              இதுபோன்ற மரபான விதிகளை விதித்து ,அடிமைப் படுத்தி, மூட நம்பிக்கையில் ஆழ்த்தி,  கீழான மக்களுக்கு மாபெரும் கொடுமைகளைச் செய்த பார்பனீயம் இவர்களைப் போலவே பெண்களுக்கு இழைத்த கொடுமைகளும் மிக அதிகம்.!  

       எல்லாதரப்பு பெண்களும் பார்ப்பனீய  ஒடுக்கு முறையால், பாரபட்சமான  ஆட்சிமுறையால்  பாதிக்கப் பட்டார்கள்!

         அவைகளைப் பற்றி  அடுத்து வரும் பதிவுகளில் அலசுவோம்!


Saturday, 21 January 2012

இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் பிராமணீயம்!

        இந்தியாவானது  ஆங்கிலேயர்கள் ஆக்கிரமிப்பு ஆட்சிக்கு முன்புவரை எப்படி இருந்தது என்றுபார்த்தால், பல்வேறு சமூகங்களாக, பிரிந்து கிடந்தது. பல்வேறு மன்னர்கள்.குறுநில மன்னர்கள்,சமஸ்தானங்கள் என்று பிளவு பட்டு இருந்தது  என்பது  வரலாறு. இப்படி இந்தியா பல பிரிவுகளாக இருந்தபோதும்,இத்தகைய பிரிவுகள் அரசியல் ரீதியான  பிளவாக இருந்தது. மற்றபடி இந்திய சமூகங்களின் கலாச்சாரம்,பொருளாதாரம்,மதம் உள்ளிட்ட அனைத்தும் ஒன்றே போல இருந்துவந்தது!

         இந்தியாவின் பொருளாதாரம் விவசாயத்தை முன்னிறுத்தி செயல்பட்டு வந்ததால், விவசாய நிலங்களும் கிராமங்களும் மன்னரது உடமையாகும். விவசாயம் செய்யும் மக்கள் விளைச்சலில் மூன்றில்  ஒரு பங்கை  அரசுக்கு இறையாக செலுத்தி வந்தனர்.விலை நிலங்கள் தொடர்பான  கணக்குகள், விவசாயிகளின்  இறை செலுத்தும் கணக்குகள் அனைத்தையும் பரமரிப்பவர்களாக இருந்தவர்கள் பெரும்பாலோர்  பார்பனர்களே! 

          மன்னர்கள் சார்பாக நில உடைமைகளைப் பராமரிக்கும் கிராம அதிகாரிகளான  பார்பனர்களை " படேல், மணியகாரர்,கர்ணம்,"  என்று அழைத்து வந்தனர்.    இவர்களே...  அரசனுக்கும் விவசாயிகளுக்கும் இடையில்  இருந்து வந்ததுடன், ஒட்டு மொத்த கிராமங்களின் ஆட்சியதிகாரத்தை  செயல்படுத்தி வந்தனர்!  இவர்களது விருப்பம், உத்திரவு, தேவை ஆகியவைகளை கடின உழைப்பு எதுவும் இன்றி,  நிறைவேற்றிக் கொண்டு  சுகபோகமாக  வாழ்ந்து வந்தார்கள். மறுபுறம் உழைக்கும்  மக்களை  கட்டுபடுத்தி,அடிமைபடுத்தி  அதிகாரம் செய்தனர். கிராமங்களை சாதி வாரியாக  பிரித்து,  தனித்தனிப் பகுதிகளாக்கினர். 

        ஒரு சாதியினர்  மற்ற சாதியின மக்களோடு ஓட்டோ உறவோ இன்றி வாழும்படி செய்தனர். அதைப் போலவே  ஒரு கிராமத்துக்கும் மற்ற கிராமங்களுக்கும் தொடர்புகளின்றி,தனிதீவுகளைப் போல செய்தனர்.  கிராமங்களில்  இந்த அமைப்புமுறையில்  பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.! எந்த அரசன் மாறினாலும்  கிராமங்களின் " பார்ப்பனீய கட்டமைப்பில்"  மாறுதலின்றி இருந்துவரும் நிலையே நீடித்தது!

          அதாவது," ராமன் ஆண்டாலும்,ராவணன் ஆண்டாலும்"  பார்பனர்களுக்கோ, அவர்களது சுகபோக வாழ்வுக்கோ, அவர்களின் பார்ப்பனீய  தத்துவ கட்டமைப்புக்கோ  எந்தவித  பதிப்பும் இன்றி, மாற்றங்கள் செய்ய முடியாதபடி ,இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைக்  பார்பனர்கள்  கையில் வைத்துக் கொண்டிருந்தனர்!.

          பார்ப்பனர்களின் ஆட்சி அதிகாரத்தில் யாரும் கைவைக்க முடியாது, தடுக்க முடியாது. அப்படி தடுக்க முயலும் யாரும் மன்னனாக  தொடர்ந்து நீடிக்க முடியாது என்பதே நிலையாக இருந்தது! அதாவது இங்கு ஒன்றை நாம் கவனித்தோமானால் மன்னரது நேரடி ஆட்சி, பார்பனர்களது நிழல் ஆட்சி என்று  ரெட்டைமுறை ஆட்சி இருப்பதை புரிந்துகொள்ள முடியும்! 

          மன்னர்களின் ஆட்சி மாறினாலும் பார்பனர்களின் ஆட்சி என்றும் மாறாதது! நீடித்து வருவது என்பதை அறியலாம்! பார்பனீயத்தின் இதுபோன்ற ஆட்சியால்,   இந்தியாவில் மக்களின் நிலை என்னவானது? எப்படி இருந்தது ?

            -  அடுத்த பதிவில் பார்க்கலாம் !


Friday, 20 January 2012

பார்பனீயம் என்னும் பயங்கர பாசிசம்-ஒரு விளக்கம்!

        பார்ப்பனீய பயங்கரத்தைப் பற்றி தெரிந்துகொல்லுவதற்கு முன்  நாம் முதலில்  பயங்கரவாதம் என்ற  பாசிசத்தைப் பற்றித்  தெரிந்து கொள்ளுவதும்,அதுகுறித்த விழுப்புணர்வு கொள்வதும் அவசியம் என்று கருதுகிறேன். 

    " பாசிசம் "எனபது உழைக்கும் மக்களின் நியாயமான போராட்டங்களை, உரிமைப் புரட்சிகளை அடக்கவும்,ஒடுக்கவும் அதிகார வர்க்கம் என்ற ஆளும் வர்க்கங்கள்  அவிழ்த்து விடும் ஒரு வெள்ளை பயங்கரவாதம் எனலாம். பாசிசத்தை நிதி மூலதனத்தின் பயங்கரமான,பகிரங்கமான ஆட்சியியல் என்றும் கூறலாம்.


         இந்த பாசிசம் எனபது,உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டங்களை, அதாவது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக  எழும் புரட்சியை, புரட்சி இயக்கங்களை  எதிர்க்கும்  பல்வேறு நடைமுறைகளைக் கொண்ட "எதிர் புரட்சி" என்பதன் கட்டமைப்பு தத்துவமே " பாசிசம் "என்கிறார்கள்!

         இத்தகைய பாசிசத்தின் மூலமாகவும்,ஆணிவேராகவும் அழிக்கவும்,எவராலும் எதிர்கொள்ள முடியாததும் ஆன பயங்கரவாதமே,பயங்கரவாத தத்துவமே," பிராமணீயம்"  என்ற பார்ப்பனீய  பாசிசமாகும்!

        இப்படி சொல்லுவதற்கு என்ன காரணம் என்றால், பாசிசம் எனபது வரலாற்றில் மிகமிக  குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும் ஆட்சியதிகாரம் என்பதை பாசிசத்தின் துணைகொண்டு,  ஆட்சி நடத்திய பலருக்கு நேர்ந்த நிலைகளில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம் !  பாசிச ஆட்சி நடந்த பல்வேறு நாடுகளின்  வரலாற்றில் இருந்தும்  நாம் அறிந்துகொள்ள முடியும்!

        ஆனால் பாசிச ஆட்சியாக  இருக்கும் 'பார்ப்பன பயங்கர வாதமோ', 'பார்ப்பனீய ஆட்சி அதிகாரமோ'  வரலாற்றில் குறுகிய காலம் மட்டுமே ஆட்சி அதிகாரத்தை  கொண்டதல்ல!   குறுகிய காலத்தில் முடிந்து விடும் பாசிசமும் அல்ல.!  குறைந்த காலத்தில் அகற்றப் பட்டுவிடும்  பயங்கரமும்  அல்ல!!
 
          அது மிகக்  கொடூரமான,தடையே இல்லாத, இனவெறி பூதமாகும்.!  அன்பு,கருணை,ஈவு,இரக்கம் எதுவும் அற்றது! இரத்தத்தைக் குடிக்கும் ரத்தக் காடேறியைப் போன்று, காலம் தோறும் நீண்டு,நீடித்து, உழைக்கும்  மக்களின் உரிமைப் போராட்டங்களை  ஒடுக்கி,  அழித்து,   ஆட்சி அதிகாரத்தை சுவைக்கும்  பயங்கரவாத பாசிசமாகும்! இந்த பார்ப்பனீய பாசிசத்தை எக்காலத்தும் மாற்ற முடியாது! உலக மக்களின் கொடிய எதிரியான  பார்ப்பனீய ஆட்சி அதிகாரமே  இன்றைய நவீன காலத்து பாசிசத்தின் தாயாகும்!

         இதுபோல  நான் விவரிப்பது, நான் அதீதமாக பார்பனீயத்தை சாடுவதாக சிலர் நினைக்கக் கூடும்! அப்படி நினைக்கும் வகையில்  கட்டமைக்கப் பட்ட பார்ப்பனீய பயங்கரவாதத்தை  அவர்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை  அல்லது இதுவரை  புரியும் வகையில்  யாரும் அவர்களுக்கு சொல்லவில்லை என்றுதான் நான்  கருத வேண்டி உள்ளது! 


           காரணம், நமது இந்தியாவின் ஆட்சிமுறை, அதில் பார்பனீயத்தின் பங்கு, பார்பனர்களின்  ஆட்சி அதிகாரத்தின்  வீரியம்,இந்திய மக்களின் எதார்த்த வாழ்க்கை முறை,இந்திய புரட்சிகளின் வீழ்ச்சி, இந்திய புரட்சியாளர்களின் நிலையம்,கதியும் போன்ற எண்ணற்ற நிகழ்வுகளை,  பற்றி சரியாக அவர்கள் யாரும் புரிந்து  கொண்டிருக்க வில்லை  என்பதேயாகும்!

     அடுத்தப் பதிவுகளில்  அலசுவோம்!
Thursday, 19 January 2012

பிரம்ம ஞானமும் பார்பனிய சாகசங்களும்!

     "யக்ஜவல்கியரே  இந்த உலகம் நீரில் இரண்டற  கலந்திருக்கிறது. நீர் எதில் இரண்டற கலந்திருக்கிறது?"

 "காற்றில் கலந்திருக்கிறது -கார்க்கி"


"காற்று எதிலே இரண்டற கலந்திருக்கிறது?"


"அது வானவெளியில் இரண்டற கலந்திருக்கிறது. மேலும்,கேள் கார்க்கி..,கந்தர்வலோகம் ,சூரியலோகம்,சந்திரலோகம்,நட்சத்திர உலகம்,தேவலோகம்,இந்திரலோகம்,பிரஜாபதி உலகம்,பிரம்மலோகம்  இவைகளில் முன்னது பின்னதில்  இரண்டற கலந்திருக்கிறது"


"பிரம்மலோகம் எதிலே இரண்டற கலந்திருக்கிறது?"


"கேள்வியின் எல்லையைத் தாண்டி போகாதே. போனால்  உன் தலை கீழே விழுந்து விடும். கேள்வியின் எல்லையைக் கடக்க முடியாத தேவனைப் பற்றி  நீ அதிகம் பிரஸ்தாபித்து, ஜெயித்துக் கொண்டிருக்கிறாய்"


       ஜனகரின் சபையில்   (அதாங்க நம்ம.. ராமர் கடவுளோட மாமனார் ) பிரம்மஞானம் பற்றிய விவாதத்தில் நடந்த நிகழ்ச்சி மேலே கண்ட கேள்வியும் பதிலும்.


        புத்தரின் கொள்கைகளைக் கண்டு பயந்து  பார்பனீயம் பிரம்மஞானதுக்குள் புகுந்து கொண்டது. என்றாலும் நால்வருண கொள்கைகளை நியாயப் படுத்தவும், அதனை எல்லோரும் சரி என்று ஏற்றுக் கொள்ளவும்  வேண்டிய தேவைக்காக இதிகாச கதைகளுக்குள் போகவேண்டிய நிலைக்கு ஆளானது! 


   குருஷேத்திர யுத்தத்தில்  அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் நடந்த விவாதத்தில் பார்ப்பனீயம் புகுந்தது.

     "அர்ஜுனா,சத்திரியனாய்ப்  பிறந்துவிட்டு , உனது சுதர்மத்தை விட்டு,உன் கடமையை விட்டு,போகிறாயா?" என்று கேட்டு,                         உன் சாதிக்கு உரிய தர்மத்தைச் செய். அது பிறருடைய தர்மத்தை செய்து பெருவாழ்வு வாழ்வதை விட மேலானது என்றது! 

       " எப்போதெல்லாம் தர்மம் வீழ்ச்சி அடைகிறதோ... அப்போது, நான் அவதரித்து தர்மத்தைக் காப்பேன் "என்று   கண்ணன் வாயிலாக பிராமணீயம் பேசியது! (இங்கு தர்மம் என்று சொன்னது, சாதிய தர்மதைதான்! )

        எப்போதும் சாதிக்கு அழிவு ஏற்பட்டுவிடக் கூடாது.அப்படி அழிவு ஏற்படுமானால்  கடவுளே மீண்டும் அவதரித்து சாதிய தர்மத்தை காப்பாராம். 

  
       கீதை வலியுறுத்தும் இந்த பார்ப்பனக் கோட்பாட்டை எதிர்த்தும், சாதிமுறையை எதிர்த்தும் புத்தர்  கொள்கையாளர்களும் பகுத்தறிவு  கொண்ட பலரும் தொடர்ந்து போராடினர்!

        காலடியில் பிறந்த கேரளா பார்ப்பனர், சங்கரன் என்பவர்  சாதிய முறைகளைக் அப்படியே தொடர்ந்து நீடிக்கவும், காக்கவும் விரும்பினார்! 


         மனுஸ்மிருதியை பாதுகாக்கவும்,பிரம்மஞனதைப் புதிய வடிவில்  அதையும் மாயாவாத வடிவில் மிகவும் தெளிவாக விளக்கினார்! 
  
         புத்த மதம் வழங்கிய பலவிஷயங்களை தமதாக்கி கொண்டு, தன்னுடையது போல வழங்கினார். புத்த மதத்தினர் வழியிலேயே, இந்து தர்மமான  வருணாசிரம தருமத்தைக்  காப்பாற்ற  மடங்கள், மடாலயங்களை அமைத்தார்.  இந்த மடங்கள் முழு நீர ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் என்பதும், இவைகளின் பணிகளும் உங்களுக்கே தெரியும்! 

            சங்கரன்  (நான் சொல்லும் சங்கரன் ஆதி சங்கரன்.) மண்டோதிரி உபநிஷதிற்கு மிகவும்  தெளிவாக உரை  எழுதினார்.சாதி முறைக்கு பங்கம் வரும்போதெல்லாம்  அதனை சீர்செய்து கெட்டிப்படுதினார்.


         வேதங்கள்,வேதாந்தம்,மனுஸ்மிருதி, பிரம்மஞானம் , மாயாவாதம், மறுஉலக வாதம் எல்லாவற்றிலும் சாதிய முறை மேலும் வலுவடையத் தேவையானதை செய்தார். சாதிய முறையைத் தகர்க்க நடந்த எல்லா முயற்சிகளையும் முறியடித்தார்.


           முற்ப்போக்கு கருத்துகளையும் புரட்சிகளையும் முறியடிப்பதில் பார்பனீயம்  போன்று, அதற்கு   நிகரான வேறு ஒரு தத்துவம், வேறு ஒரு வடிவம் உலகில்  இல்லை!  இருக்கவும் முடியாது! 


          அந்த அளவு மிகவும் கொடிய,   நுணுக்கமான,  தத்துவமே பார்பனீயம் என்கிற பயங்கர பாசிசமாகும்! 


     ( பார்பனிய பாசிசத்தின் சில நிகழ்வுகளை  அடுத்து பார்கலாம்)புத்தரின் கொல்லாமைத் தத்துவமும், இந்துமத எதிர்ப்பும்!

         இந்துமதம் எனபது உலகில் தோன்றி உள்ள எல்லா மதங்களுக்கும் எதிரானது மட்டுமல்ல  ஒரு இனத்தின் நலனை உத்தேசித்து மற்ற  இனங்களை அடிமைபடுத்தியும்,அடக்கி ஒடுக்கி  ஆளவும், உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் பயங்கரவாதம் எனலாம்! இந்து மதத்தை  வேறு மொழியில்  விளக்குவதானால், அது ஒரு பார்ப்பன பாசிசம், பார்ப்பன பயங்கரவாதம், பாசிசத்தின் ஆணிவேர்  எனலாம்!

            இந்த பார்பனிய பாசிசத்தை எதிர்த்த  அணித்து மக்களும், பகுத்தறிவாளர்களும், லோகாயுத வாதிகளும் பன்னெடுங்காலம் போராடி வந்துள்ளனர்! ஆயினும் பார்பனிய பயங்கரவதத்தை இன்றுவரை  வெற்றிகொள்ள முடியவில்லை எனபது கசப்பான உண்மையாகும்! பார்ப்பனிய பயங்கரகரத்தை எதிர்த்து போராடிய தத்துவங்களில் வைஷெசிகம், நியாயம்,சாங்கியம்,யோகம்,உத்திர மீமாம்சம்,பூர்வ மீமாம்சம்,ஆகியவை முக்கியமானவைகள்!     இவைகளையே .. இந்திய லோகாயுதவாதத் தத்துவங்கள் என்று அழைகிறார்கள்!   இந்த தத்துவங்களின் சாரத்தை  {சுருக்கமாக} கீழே பாருங்கள்.

        சொர்க்கம் என்பதும் மோட்சம் என்பதும் வெறும் பேச்சு,

       மறு உலகத்துக்கு போவதாக  கற்பனை செய்துகொள்ளும் ஆத்மா-உயிர் என்று எதுவும் இல்லை!  


     வர்ணாசிரம தர்மங்கள் என்று விதிக்கப்படும் கர்மங்கள்-யாகம் போன்றவை ஏதோ பயனளிப்பதாக  கூறுவது தவறு! அவைகள் எந்த பயனையும் இதுவரை கொடுக்கவில்லை!


வேதங்கள் மூன்றையும் (ரிக்,யஜூர்,சாம,) இயற்றியவர்கள்  நம்மை ஏமாற்றும் திருடர்கள்!


    -  என்று கூறிய  லோகாயுத வாதிகள் வேதங்கள்,உபநிஷம்,மனுஸ்மிருதி ஆகியவைகளுக்கு எதிராக  நேர்மையாகவும், மனித நேயத்துடனும் போரடி வந்துள்ளனர்!

         வேதம் பொய்,வேதாந்தம் மோசடி,ஸ்மிருதிகள் மனிதனுக்கு எதிரானவை என திடமாகவும் துணிவாகவும்  எதிர்த்தனர்.   இதனால் புத்த,ஜைன இயக்கங்கள் தோன்றின.இந்த இயக்கங்கள் இந்தியாவெங்கும் செல்வாக்கு பெற்றன. குறிப்பாக தமிழகத்தில் புத்த,ஜைன,மதங்களைப் பின பற்றுபவர்கள்  ஏராளமானவர்கள் இருந்தனர்!

        ( சங்க இலக்கியங்கள் என்பவை புத்த இலக்கியங்களே! தமிழ் சங்கம் என்பதும் ஒரு ப்பெரும் மோசடியாகும். முதன்முதலில் சங்கம் என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் புத்தர்தான்! )

         இளமையில் இல்லம் துறந்து, துறவியாகிய புத்தர்,நேர்மையாக சிந்தித்து, வேதங்களையும், பார்ப்பன மோசடிகளையும் எதிர்த்து போரிட்டார்! மாபெரும் இயக்கத்தை தந்தார்! 
      உலகில் வெகுஜன ஆதரவைப் பெற்ற முதல் புரட்சிகாரர் புத்தர்தான்! புத்தர் சொன்னதின் சாரம்சத்தை கீழே பாருங்கள்!

      கடவுளை ஏற்றுகொள்ளாமல் இருப்பது. (கடவுளை ஏற்றுகொண்டால், மனிதன் தனக்கு தானே எஜமானன் என்ற சித்தாந்தத்தை எதிற்பதாகி விடும்!)

    ஆன்மாவை நிரந்தரமானது  என்று ஒப்புக் கொள்ளாமல் இருப்பது! (ஆன்மாவை நிரந்தரமானது என்று ஒப்புக் கொண்டால் பிறகு புனிதத்துக்கும் முக்திக்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விடும்)

 
          எந்த ஒரு நூலையும் கடவுள் அருளியதாக ஏற்றுகொள்ள முடியாது!     ( ஏற்றுக் கொண்டால்,அறிவையும்,அனுபவத்தையும் எதற்குமே ஆதாரமாக கொள்ளமுடியாது)
 
       காரண காரியங்கள் இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் இல்லை.எந்த பொருளும் இல்லை.

   நால்வருணம் என்பதும் சாதிப் பாகுபாடும் மனித விரோதமானது. இவற்றைத் தூக்கி எறியவேண்டும்!        கொலை செய்தல்,திருடுதல்,விபச்சாரம் செய்தல்,பொய் சொல்லுதல்,புறங்கூறுதல் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும். 


        உயிர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும். பகைமைப் பாராட்டக் கூடாது.

 
           அதாவது,கெட்டவைகளை தவிர்த்தல்,நல்லவைகளை செய்தல்,புலனடக்கம் கொள்ளுதல், ஆகியவைகள்  புத்தரின் போதனைகளாகும். புத்த மத கொள்கைகளாகும்! 
 
            புத்தரின் கொள்கைகளை மக்கள் பின்பற்றுவது அதிகமானபோது, பார்ப்பனீயம்  என்ற பாசிச மதமான இந்துமதம்  புத்த மதத்தை ஒழிக்கவும்,சாதிப் பிரிவினையை என்றும் நிலைத்திருக்கவும் மூன்று தந்திரங்களை  பின்பற்ற தொடங்கியது!

1) புத்தர் சொன்னவற்றில் கொல்லாமை போன்ற கொள்கைகளைத் தமதாக்கி,இனி புலால் உண்ணாமை  கொள்கையை பார்பனர்கள் கொள்கைபோல் காட்டுவது.
 
2 ) புத்த மதத்திற்குள் புகுந்து புத்தமதக் கோட்பாடுகளை திரிப்பது,அதாவது கடவுளை ஏற்றுகொள்ளாத புத்தரையே கடவுள் ஆக்குவது!
 
3 ) புத்த மதக் கொள்கைகளை நேரடியாக எதிர்த்து பிரச்சாரம் செய்வது. இதனை தங்களது கோட்பாடாக  செய்தாலும்,புத்த பிக்குகளை கொலை செய்வது,கழுவில் ஏற்றுவது,கல்லைக் கட்டி கடலில் எரிவது என்ற அனைத்து வன்முறைகளையும் புத்த மதத்தை அளிக்க பார்ப்பனீயம்  என்ற பயங்கரவாத, இந்துமதம் பயன்படுத்தியது! 
 
         புத்தர் பார்பனியத்தின் மிகப்பெரிய எதிரி. எனவே புத்தருக்கு எதிராக, புத்தமதத்துக்கு எதிராக  பல புதிய படைப்புகளை, புதிய ஆயுதங்களை, புதிய ஆயதங்களை செய்யவேண்டிய அவசியம்  பார்ப்பனியத்துக்கு  ஏற்பட்டது! 

        ( அவைகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்!)
Tuesday, 17 January 2012

எது தேசபக்தி ? அவசரமாக அலசப்படும் விஷயம்!

          இந்த நாட்டில் சிலர்  நூறு சதவீத  தேச பக்தியுடன் இருப்பதை பார்த்து வியந்து போகிறேன்!   தேச பக்தி  என்பதற்கு   அவர்கள் கூறும் அடிப்படை தகுதி  என்னவென்று பார்த்த பொது,"தேசபக்தர்கள்" என்போரிடம்  சில குறிபிடத்தக்க   ஒற்றுமை குணங்கள்,இருப்பதைப்  பார்த்தேன்!

       தேச பக்தர்களாக இருப்போருக்கு முதல்தகுதி,  முதலில் அவர்  இந்துவாக  இருக்கவேண்டும் என்பதுதான்!  அப்படியே இந்துவாக இருந்தாலும்  அவர்,   இந்து மதத்தைப் பற்றி எந்தவித  விமர்சனமும்  அதுவும் எதிர்மறையான விமர்சனமும் செய்யாதவராக  இருக்கவேண்டியது  அவசியமாக இருக்கிறது,!


           இந்தியாவில் பிறந்த,வேற்று மததினரர்  யாரும், தங்களுக்கு  தேசபக்தி இருக்கிறது என்று சொன்னால்  அவர்கள் வேஷம் போடுகிறார்கள்,ஏமாற்றுகிறார்கள்  என்று எள்ளி நகையாடப் படுவர்!   அதேபோல  இந்துமதத்தை , அல்லது இந்து கடவுள்கள் குறித்து விமர்சனம் செய்யும்  இந்துகளுக்கு, நாத்திகர்களுக்கு  கொஞ்சமும் தேசபக்தி  இருபதாக  கருதுவது  முட்டாள் தனமாகும்! 

            அதேபோன்று,    தேசபக்தி உள்ளவர்கள்  தங்களது  மொழி குறித்தோ, மாநிலங்கள் குறித்தோ, மாநிலங்களுக்கு இடையில்  உள்ள பிரச்னை குறித்தோ, தங்களது உரிமைகள் பறிபோகிறது  என்றோ  கவலைப் படகூடாது!  எதிர்ப்பு  தெரிவிக்கக் கூடாது! கவலைபட்டால்,எதிர்த்து  குரல் கொடுத்தால்,  அவர்களுக்கு  இந்த நாட்டின் மீது அக்கறை இல்லை, தேசபக்தி இல்லை என்பதை அவர்களாக பறைசாற்றிக் கொள்கிறார்கள் என்று பொருளாகும்! 


             இவைகள் மட்டுமின்றி  நீங்கள் தேசபக்தர்களாக  இருந்தால், அல்லது தேசபக்தர்களாக  ஆக விரும்பினால்,  மத்தியில் ஆளுவது  காங்கிரசோ,பாரதிய ஜனதாவோ, அவர்களது எல்லா திட்டங்களையும், செயல்களையும் அப்படியே ஏற்றுக்கொண்டு  ஆதரிக்க வேண்டும். ஆமாம் சாமி போட வேண்டும்! 

 வள்ளுவர் சொன்னாரே, 

" எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும்,  அப்பொருள்
 மெய்ப்பொருள் காண்பது அறிவு! "


     -என்று யோசித்தால் கூட....  உங்களுக்கு தேசபக்தி இல்லை, நீங்கள் தேசத்துக்கு எதிராக சிந்திக்கும் பேர்வழி என்பதால் தேச துரோகியாகி விடுவீர்கள்!  அதே போல, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆகாதா? நீங்களும் கண்ணை மூடிக்கொண்டு என்ன எது என்று பார்க்காமல், கேள்வி கேட்காமல், பாகிஸ்தானை எதிரியாகவே பார்க்கவேண்டும்! 

         அமெரிக்கவும் இந்தியாவும் கொஞ்சி குலவுகிறதா? நீங்களும் நாயைப்போல வாழை ஆட்டி நன்றிவிசுவாசத்தைக் காட்டவேண்டும்! இங்கும் கேள்வி,சிந்தனை கூடாது!  அப்படியே உங்களுக்கு வந்தாலும் நீங்கள்  தேசபக்தி இல்லாதவர்கள் ஆகிவிடுவீர்கள்! 

          நீங்கள் தமிழனா? நீங்கள் என்ன 'குட்டி கரணம்' போட்டாலும்,  நீங்கள்இந்தியாவில் இருந்தாலும்,  நிச்சயம் இந்தியாவுக்கு நீங்கள் எதிரிகள்தான்!  இந்திய துரோகிகள்தான்!!  அப்படி  இல்லை என்றால், நாங்கள் இலங்கையை ஆதரிக்கிறோம், நட்பு பாராட்டுகிறோம், எனபது தெரிந்தும்  சிங்களர்களிடம் மண்டியிடாமல், சண்டை போடுவீர்களா? தனி நாடு கேட்பீர்களா?  இலங்கையுடன் போடும் சண்டை எனபது,   தேசபக்தர்களான, இந்தியர்களான  எங்களிடம் போடுவது எனபது கூடத்  தெரியாதா? 

         ஒன்னுமில்லேங்க ...   ஆஸ்திரேலியா  ஜெயிக்கும் என்று சொன்னால் கூட, சிலபேரு   நம்மை  இந்திய துரோகிகள்  ஆக்கிடுறாங்க!  விளையாட்டில் கூட  வேறு நாடு  வெற்றிபெறக் கூடாது என்று நினைப்பதுதான் தே பக்தியாம்! இல்லேன்னா,     அது,  தேசதுரோகமாம் !  அவனவன்  இந்தியாவையே ஏலம் போட்டு,  வித்துகிட்டு  இருக்கிறப்போ,   இப்படியெல்லாம் ஆளாளுக்கு தேசபக்திக்கும், தேச துரோகத்துக்கும்   இப்போ விளக்கம் சொல்லிட்டு வருகிறார்கள்! 

       நாமும் நமக்கு தெரிந்த தேசபக்தியை பற்றிய  விளக்கத்தை சொல்லி வைக்கலாமே  என்று  சொல்லிபுட்டேன்! 


 

Friday, 13 January 2012

விவேகானந்தரும் பசுபாதுகாப்பு சங்க பிரமுகரும்!

          ஸ்ரீ சரத் சந்திரர்  தன்னை போன்றே  ராமகிருஷ்ணரின் சீடரான விவேகானந்தர் அவர்களை சந்திக்க வந்திருந்தார். சந்திப்பு விவேகானந்தர் தங்கி இருந்த ஸ்ரீ பிரியநாத் முகர்ஜி என்பரின் வீட்டில் நிகழ்கிறது! 

     விவேகானந்தர் அவர்களை சந்திக்க கோ சம்ரஷ்ண சங்க பிரசாரகர்  வருகிறார்! இருவர்க்கும் உரையாடல் நடக்கிறது!


 விவேகானந்தர்: உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன?


பிரசாரகர் : நாங்கள் எங்கள் கோமாதா  க்களைக் கசாப்புக் காரர்கள் வாங்கிவதைபுரியா வண்ணம் பார்ப்பதும்,நோயுற்றும் கிழமாயும்   அங்க ஈனமாயும் உள்ள பசுக்களைக் காப்பாற்று கிறோம் .


விவேகானந்தர்: இது சிறந்த நோக்கந்தான்.உங்கள் வருமான வழிகள் எவை?

 
பிரசாரகர் : தேவரீரைப் போன்ற காருண்யா சீலர்கள் அளிக்கும் கொடைப் பொருளைக் கொண்டு மேற்படி வேலை நடைபெற்று வருகிறது!


விவேகானந்தர்: உங்களிடம் இப்போதுள்ள மூலதனம் எவ்வளவு?


பிரசாரகர்: மார்வாரிகளின் வர்த்தக மரபினர்களே இச்சபையின் போஷகர்கள்.அவர்கள் ஏராளமாக பொருளுதவி புரிந்துள்ளார்கள்!


விவேகானந்தர்:  மத்திய இந்தியாவில் மிகக் கொடிய பஞ்சம் மக்களைக் கொள்ளை கொண்டு போகிறது. இந்திய அரசாங்கத்தார் பட்டினியால் இறந்தவர்களின் தொகை 900000  என்று வெளியிட்டு  இருக்கிறார்கள் . உணவின்றி, மரிக்கும் மாந்தர்களை எமன் வாயிலிருந்து ரஷிக்க உங்கள் சங்கம் ஏதாவது முயற்சிகள் எடுத்துகொண்டு இருக்கிறதா? பிரசாரகர்:  பஞ்சம் முதலியவற்றில் நாங்கள் உதவி புரிவதில்லை.எங்கள் நோக்கம் எல்லாம் பசு பரிபாலனம்தான்.

விவேகானந்தர்: லஷ்க்கணகான நமது சகோதரர்கள்,சமயத்தவர்கள் கொடிய வறுமையால்  மடியும்போது ஒரு ஆழாக்கு அரிசி கொடுத்து உதவுவது கடமை என்று உங்கள் சங்கத்தாருக்கு தோன்றாத விந்தைதான் என்ன?

பிரசாரகர்:  இல்லை. அவர்கள் கர்மவினைப்படி அவர்கள் செய்த பாபத்திற்காக இவ்விதப் பஞ்சம் சம்பவித்து இருக்கிறது.தம் வினைக்காக அவர்கள் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். 

       இந்த வார்த்தைகளைக் கேட்டதும் விவேகானந்தருடைய முகம் சிவந்தது.கண்கள் தீப்பொறி  கக்கின. பிரசாரகரை ஒருமுறை உற்று  பார்த்தார். தமது வேகத்தை அடக்கிக் கொண்டு பேசலுற்றார்.
 
                   " அன்பரே! கண்கூடாகப் பல்லாயிரம் சகோதரர்கள் வறுமையால் பட்டினி கிடந்தது பரிதவித்து உயிரை விடுகிறார்கள்.அவர்களுக்கு ஆழாக்கு அரிசியும் கொடாது,கேவலம் எள்ளளவு உதடு அனுதாபமும் கொள்ளாது,  லஷ்க்கணகான பொருளைப் பறவைகளையும், மிருகங்களையும் காப்பாற்றவே  செலவளிக்கிற கூட்டத்தாரிடம் எனக்கு அனுதாபமே கிடையாது. இவற்றால் எவ்விதப் பொது சேமமும் ஏற்படுமென்பதை நான் நம்பவில்லை.!    "மனிதர்கள் அவர்கள் கர்மவினைக்காக சாகின்றனர்! ஆகையால்,அவர்கள் இறக்கட்டும்!" ஆஹா ! இவித கொடிய வசனங்களைச் சொல்ல உமக்கு வெட்கமாய் இல்லையா? கர்மயோகத்தை ஆதாரமாகக் கொண்டு நீர் இந்த சாக்குச் சொல்லுவீரானால்,பிறருக்கு உதவி புரிவதைப் பற்றி சிந்திக்கவேண்டிய வேலையே இலை. நீர் சொல்லும் நியாயப்படிப் பார்த்தால்,உங்க சங்க வேலையும் கொமாதாகளும் தத்தம் முன் கர்மத்தின் பயனாய் கசாப்புகாரர்களின் வாளுக்கோ, பிணிக்கோ ஆளாகின்றன. ஆகையால் அவற்றிற்கு உதவி புரியவேண்டிய அவசியம் இல்லை என்பதும் பொருந்தும் அல்லவா? "என்றவுடன் அந்த  பிரசாரகர் பயந்து போய்,

  பிரசாரகர்:     "தாங்கள் கூறுவதும் சரியே,ஆனால் நமது சாஸ்திரங்கள் " கோ " நமது தாய் என்று விளம்புகின்றனவே? "என்றார்.

           இந்த வார்த்தைகளைக் கேட்டதும் விவேகானந்தர் ஆச்சரியமுற்று, " ஆம்! அப்பசு உங்கள் தாய் என்பதை நானும் அறிவேன்! அப்படி இல்லை என்றாள்,உங்களைப் போன்ற விசேஷப் புத்தி வைபவமுள்ள புத்திரர்களை யார்தான் பெறுவார்கள்?" என்றார்.

              இந்த அழுத்தமான சொல்லை பிரசாரகர் கவனிகவில்லை போலும்.ஏனெனில்,அவர் எந்த மறுமொழியும் புகலாது.... விவேகானந்தர் இடம் ஏதேனும் பொருளுதவி செய்யுமாறு வேண்டினார். 
  
            அப்பொழுது,விவேகானந்தர், "நான் ஒரு சன்னியாசி என்பதை நீங்கள் பிரத்யக்ஷமாய் பார்கிறீர்கள்.ஜனங்கள் எனக்குப் பொருள் அளித்தால்,அதை முதன்முதலாக நான் மனிதர்களுக்கு உதவி புரிவதில் செலவிடுவேன்! மனிதர்களுக்கு உண்டி அளித்து,சமய அறிவும் கல்வியும் ஊட்டி, அவர்களைக் காப்பாற்ற நான் முதலில் முற்சிகிறேன். இந்த விசயங்களில் செலவளிதப் என்னிடம் ஏதேனும் எஞ்சுமேல் அதிலிருந்து ஒரு சிறு பகுதியை உங்கள் ஸ்தாபனத்துக்கு  அளிக்கிறேன்" என்று கூறினார்.

               அந்த பிரசாரகர் அகன்ற பிறகு தம்மிடம் இருந்தவர்களிடம்,       "அந்த மனிதன் எவ்வளவு 'ஆ' பாசமாக பேசினான், பாருங்கள்.! அவரவர் கர்மதிற்காக  சாகின்றவர்களுக்கு உதவி புரிவதில் என்ன பயன்?  என்று அவன் மொழிந்ததை நினைக்க நினைக்க ,எனக்கு ஆத்திரம் அடங்கவில்லை. !  இப்படிப் பேசிப் பேசித்தான் இந்த தேசம் மதிகெட்டு, வதைபட்டு பாழாகி விட்டது!      எவ்வளவு அகோரமான சந்திக்கு கர்மத்தை இழுத்துக்கொண்டு வந்துவிட்டார்கள் என்பதை நீங்கள் கவனித்தீர்களா?  அந்தோ! மக்களின் கஷ்டங்களைக் கண்குளிரக் கண்டு, எள்ளளவும் இரக்கமின்றி, இருக்கும் ஜென்மமும் ஒரு ஜென்மமா?"  என்று கூறிய வண்ணம் பெருமூச்செறிந்து உடல் நடுங்கினார்.
(விவேகானந்தரின் சரித்திரம் சொல்லும் செய்திகள் நூல்,உறையூர் எஸ்.வி. வரதராஜையங்கார்.-1929 ) இதுவே ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், ஞானதீபம்,சுடர்- 5 ,பக்கம் 6 ,7 ,8  சம்பாஷனைகள் என்ற தலைப்பில் வெளியிட்டு உள்ளது.
      
             இந்த நாட்டில் புண்ணிய மதமான நமது இந்து மதம் மனிதர்களைப் பற்றி கவலைப் படுவதை விட மாடுகளைப் பற்றி படும் கவலை அதிகம்!  மாடுகள் கேள்வி கேட்பதில்லை!  உரிமைக்கு குரல் கொடுப்பதில்லை, ஊழலைச் சாடுவதில்லை, தனிநாடு, தனி மாநிலம் கோரிக்கை வைப்பதில்லை என்பதாலோ என்னவோ?   
          

Wednesday, 11 January 2012

வேத காலமும், மாமிச உணவும், மக்களும்! (பகுதி 4)

                 அர்த்த சாஸ்திரம் குறித்து ஒரு அறிமுகம்!

            அர்த்த சாஸ்திரத்தை எழுதியவராக சொல்லப்படும் சாணக்கியருக்கு வேறு கௌடில்யர்,விஷ்ணு குப்தர்  ஆகிய பெயர்களும் உண்டு!  அர்த்த சாஸ்திரம் பதினைந்து பகுதி உடைய உரைநடை நூலாகும்! ஒவ்வொரு சுலோகமும் முப்பத்தி இரண்டு ஆசைகளுடன் ஆறாயிரம் சுலோகங்களைக் கொண்டது!  அர்த்தா என்பதற்கு மனிதர்களின் தன்மை? என்று பொருள். சாஸ்திரம் என்பதற்கு ஒழுக்கத்தின் மேல் எல்லைச் சட்டம்  என்று பொருள்?  மனிதர்கள் வாழும் நிலப் பகுதியை சேர்த்துக் கொள்வதும் அதைக் காப்பதும் என்பவற்றை அருத்தசாஸ்திரம் எனபது குறிக்கும் என்பர்  கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி.
       இதில் பெண்களைப் பற்றியும் வஞ்சனையான  யாகங்களை செய்வது ஏன்  அவசியம் என்பது பற்றி  பலவித விமர்சனமான தகவல்கள் உள்ளது!

             மாமிசம் பற்றிய  செய்திகளைப் பார்க்கலாம்:

         அர்த்த சாஸ்திரம் இரண்டாம் அதிகாரம்,அத்தியாயம்  நாற்பத்து ஏழில் மாமிசம் தயாரிப்பது விற்பனை செய்வது குறித்து சட்டமாக குறிப்பிடுவதில் இருந்து  சிலவற்றைப் பார்ப்போம்!

  மிருகம் பசு இவற்றின் இறைசிகளை கொன்றவுடன் விற்பனை  செய்துவிட வேண்டும்!
      (எலும்பு உடையதாக இருப்பின் அதனுள் கலந்து இருக்கும் எலும்புக்கு தகுந்த படி இறைச்சியை   ஈடு கொடுக்க வேண்டும்!)
           இவற்றுள் கன்று,ஆனேறு,பசு இவைகளைக் கொல்ல தகாதன.                 ( கொல்ல  அனுமதிக் பட்ட    பசு இனத்தில், கன்றீனும் பசுவும்,பொலி எருதும் கொல்லக்  கூடாது!   ( காரணம் விருத்திக்கு பதிப்பு ஏற்படும் என்பதால்)

நோயுற்ற  விலங்குகள்,தானே இறந்த விலங்குகள், காட்டில் கொன்று உண்டது போக எஞ்சிய இறைச்சியை,தீ நாற்றமுடைய இறைச்சியை விற்பனை  செய்யக் கூடாது! அப்படி விற்பனை செய்தால் பன்னெண்டு பணம் தண்டமாக தரவேண்டியது இருக்கும்!
  
         எனபது போன்ற  சட்டங்களும் நடைமுறைகளும் இருந்து உள்ளத்தில் இருந்து  யாகத்தில் மட்டுமே பசுகளும், ஏனைய உயிகளும் பலியிட்டு கொள்ளப்படவில்லை, மாமிசம் புசிக்கப் படவில்லை  எப்போதும் எல்லா நேரத்திலும் மாமிசம் உணவாக பயன்படுத்த பட்டு வந்தது என்பதும், விற்பனை செய்யப்பட்டு வந்ததும்  அறியா முடியும்!

          ராமனும் லட்சுமணனும் உண்ட மாமிசங்கள்:

          "  ஸ்ரீராமர் சதா வேட்டையாடிக் கொண்டிருப்பார்.பெரும்பாலும் மான் வேட்டை அவருக்கு பிரியமானது! அவரின் ஆயுதம்  வில்லும் அம்புமாக இருந்தது!"
     ( ஆரிய முசாபிர் பக்கம் 116 .)

                  "ராமரும் லட்சுமணரும் பட்சியை அடித்து கொண்டு வந்தார்கள். மாலையில் அதன் இறைச்சியை புசித்து,ஒரு விருஷத்தின் (மரத்தின்)கீழ் தங்கியிருக்க சென்று விட்டார்கள்! "      ( அயோத்தியா காண்டம்,சருக்கம் 52 ,சுலோகம் 102 )

                    " ராமர் லட்சுமனரைப் பார்த்து விரைவாக ஒரு மானை வதைத்துக் கொண்டு வா! ஏனெனில்,சாஸ்திரத்தில் எழுதப் பட்டு இருக்கிறபடி  நாம் செய்ய வேண்டும் என்றார்! லட்சுமணர் இவ்வுத்தரவைப்  பெற்று மானை  வதைத்துக் கொண்டு வந்தார். அதைக் கொண்டு,   "ஹோண்"  செய்து புசித்தார்கள்!"                         ( அயோத்தியா காண்டம்,சருக்கம் 56 ,சுலோகம் 24 -26 )

                ராமர் பரத்வாஜர் ஆசிரமத்துக்கு சென்றபோது அவருக்கு மது பர்க்கம் வழங்கப் பட்டது!
 
            புதிய இறைச்சியையும் காய்ந்த இறைச்சியையும்  குகன் பரதனுக்கு வழங்கினான்! 

           " பாம்பைப் பொய்கையில் ரோஹிதம்,சக்ரதுண்டம்,நலமீன்கள் ஆகிய பெரிய முள் உள்ள மீன்கள் நிறையக் கிடைக்கும் அவை நல்ல ருசியானவை, அவைகளை வேகவைத்து சாப்பிடுங்கள்"  என்று ராமர்க்கு கபந்தன் சிபாரிசு செய்தார்!!            (செளரி,இந்தியாவின்களையும்,கலாச்சாரமும்,   பக்கம், 105 -107 )

               சீதை தனது குடிலுக்கு வந்த ராவணனிடம், "அந்தண சீலரே ! அதற்குள் எனது கணவர்  பலன்களையும்,   கிழங்குகளையும் , இறைச்சியையும்  எடுத்துக் கொண்டு    இங்கே திரும்பி விடுவார்! தாங்கள் அதுவரை இளைப்பாறுங்கள்   "      என்று உபசரித்தாள்!          (அ.லே. நடராஜன்,வால்மீகி ராமாயணம்,)

                இப்படி பல நிகழ்சிகள் ராமாயணத்தில் ராமனும் லட்சுமணனும் இதர கதாபாத்திரங்களும்  மாட்டு கறியும்,மற்ற இறைச்சியும் உண்டது குறித்து உள்ளான. இன்று  ராமர் மட்டு மல்ல, அவரை வழிபடுவதாக  கூறும்  விஷ்ணு தாசர்கள்  பசுதோல் போர்த்திய புலிகளாக மாறி, பசுவேசம் போடுகின்றனர்!  அதாவது, சாது வேடம் போடுகின்றனர்! 

              அதுமட்டும் இன்றி,  பசுவை கொல்லக் கூடாது,  பசுவதை தடை சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று ஆளுக்கு தகுந்த படியும், இடத்துக்கு தகுந்தபடியும் பேசியும் வருகின்றனர்!  இவர்களது உண்மையான நோக்கம், பசுக்கள் மேல் இவர்களுக்கு வந்த பசுபாசமோ, பிரியமோ  நிச்சயம் இல்லை என்பதை புரிந்து கொல்ல வேண்டும்,  தாங்கள்  ஆச்சார, பவித்திரமான,  ஒழுக்க சீலர்கள்,    எந்த உயிரையும் கொல்லக் கூடாது  என்ற அஷிம்ஷா வாதிகள்  என்று இப்போது காட்டிக் கொள்ளவும்,  இன்று  மாமிசம் சாப்பிடும், குறிப்பாக மாட்டுக் கறி சாப்பிடும்  ஆதி திராவிட மக்கள் மீதும்,  இந்து மதத்தை வெறுத்து ஒதுங்கி  இஸ்லாம் மார்க்கத்தை  புதிதாக  ஏற்றுக்கொண்டுள்ள இஸ்லாமியர், கிருஸ்தவர்கள் மீது கொண்டுள்ள வெறுப்பு உணர்வும் தான் காரணமாகும்!

               இந்து மதத்தை இந்தியாவின் மதமாகவும், இந்திய நாட்டை இந்துகள் என்று சொல்லும்  இவர்களின் தனி உரிமை சொத்தாகவும் எண்ணிக்கொண்டு  ஆட்டம் போடும் இந்த ஆரியர்களின் வழித் தோன்றல்களுக்கு  தலைவராக  இருந்த டாக்டர் மூஞ்சே 1927 ஆண்டு, அம்பாலாவில் நடைபெற்ற  இந்து மகாசபையிலும், பம்பாயில் நடைபெற்ற சபைக் கூட்டத்திலும் சொல்லி இருப்பதைப் பாருங்கள்!

             "தர்ம சாஸ்திரத்தின் மூலமாக புலால் உண்ணல குற்றம் அல்லது அதர்மம் என்று கூற முடியாது! மேலும்  மாமிசம் புசித்து வருவதால், அவர்களின் அனேக சமூகக் கஷ்டங்கள் நிவர்தியாகக் கூடியதாக இருக்கிறது!"       என்று குறிப்பிட்டு உள்ளார்! 

                 இன்று விவேகானந்தரின் பிறந்த தினம். 

        "வீரத் துறவி" என்று அழைக்கப்படும் விவேகானந்தரை  இந்துமத சனாதானிகள் எப்படி எல்லாம் துன்புறுத்தி,  துரத்தி அடித்தார்கள் எனபது மறைக்கப் பட்டு வருகிறது!  இன்று கன்னியாகுமரி  விவேகானதா பாறை  அவர் தவம் செய்த இடமாக காட்டப் படுகிறது!   புரட்சிகரமாக பேசிய வங்காளத்திலே பிறந்த  நரேந்திரரை, கடலில் கல்லைக் கட்டி  தூக்கிப் போட்டு  கொல்லமுயன்ற  கொடூரங்கள்  மறைக்கப் பட்டுவிட்டது!

                 நமது கவலை அவர் பற்றியது அல்ல..!  பசு பாதுகாப்பு சங்கம் என்ற ஒன்றை வைத்துக் கொண்டு  அவரிடம் உதவி கேட்டு வந்தவருக்கு  அவர் சொன்ன பதில்  குறித்த பகிர்வு இந்த  தொடர் பதிவுக்கு தேவையானது!  எனவே விவேகானந்தரின்,   பசுபாதுகாப்பு சங்கப் பிரதிநிதி  உடனான   புரட்சிகர  உரையாடலை  அடுத்தப் பதிவில் பார்க்கலாம்!

 

Tuesday, 10 January 2012

வேத காலமும், மாமிச உணவும், மக்களும்! (பகுதி 3)

                     மது பார்க்கம் விருந்து!  

          ஆரியர்கள் வருகையும்,முஸ்லிம்களின் படையெடுப்பும், என்றோ,ஆரியர்கள் நாகரீகம் என்றோ, ஆரியவர்த்தம் குறித்தோ படித்திருப்பீர்கள்!  ஆரியர்கள்  'சோம பானம்', 'சுறா பானம்', ஆகியவற்றைப் பருகினார்கள்(?) என்றும் கூடநீங்கள்  படித்து இருக்கலாம்!  ஆரியர்கள் பருகியதாக கூறப்படும் சோம பானமும் சுராபானமும் தான்  இன்றைய  உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்  வெளிநாட்டு மது வகைகளுக்கும், கிராமங்களில் தயாராகும்  உள்ளூர் கைத்தொழில் உற்பத்தியான  சாராயம் ஆகியவைகளுக்கு எல்லாம் முன்னோடியும் மூத்ததும் ஆகும்!

            இந்த சோம பானம்,சுராபானம்  ஆரியர்களான  பிராமணர்கள்  ஆண், பெண் பேதமின்றியும், வயது,உறவு வித்தியாசம் இன்றியும் பருகி வந்தார்கள்! ( அது என்ன நம்ம அரசாங்கம் விற்பனை செய்யும் டாஸ்மாக்  மதுவா? குடித்தார்கள் என்று சொல்ல?)     அதுவும்  ஆடு, மாடு  என்று கண்டதையும்  கொன்று...  கறியாக்கி,விதவிதமாக  சமைத்து அவற்றை  சாப்பிட்டும்  அதீத,  "ஆரிய தயாரிப்பான"   சோமபானம்,சுராபானத்தை  பருகினார்கள்! 

        மதுபர்க்கம்  விருந்தைப் பாப்போம்

               பதினெட்டு சூத்திரங்களில் ஒன்றான ஆஸ்வலாயண சூத்திரத்தின் பிரிவான   கிருஹஜ்ய  சூத்திரம் முதல் அத்தியாயம், 24 -வது கண்டிகையில் மது பார்க்கம் கொடுக்கும் முறைகள் சொல்லப்பட்டு இருக்கிறது.

     " யாகம் செய்வதற்கு ரித்விக் வீட்டிற்கு வந்தால் அவனுக்கு மது பார்க்கம் கொடுக்க வேண்டும்! "( 1 - 24 - 1 ) 


    " மணமகன் வீட்டிற்கு வந்தபோதும்  மது பார்க்கம் கொடுக்க வேண்டும்! "  ( மணமகனுக்கு மதுபர்க்கம் கொடுத்தால் பொண்ணு நிலைமை என்னாவது? என்று கேட்க கூடாது)

 "அரசனுக்கும் மது பார்க்கம் கொடுக்க வேண்டும்! "(1 - 3 )

" குரு, பெண்கொடுத்த மாமனார், சிற்றபபன் வீட்டிற்கு வந்த காலத்துக்கும் பத்து பார்க்கம் கொடுக்க வேண்டும்! "

                        சரி உறவு முறையில் உள்ளவர்களுக்கு சாராயம் வாங்கி கொடுப்பதில் என்ன தப்பு ? என்று கேட்கலாம்!  தமிழர்களின் நாகரீகம் கலாச்சாரம், உறவைப் பேணுதல், மதிப்பு தருதல்  ஆகிய அனைத்துக்கும்  எதிரானது, கட்டுப்பாடு அற்ற,  காட்டு மிராண்டித்தனம் கோடானது,  ஆரியர்களான  பிராமணர்களின் வாழ்க்கையும், உறவு முறைகளும் என்பதை  குறிப்பிடவே இதனை கூறுகிறேன்!

 போகட்டும்  மதுபர்க்கம்  எப்படி கொடுக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

           குரு முதலானவர்கள் முதலில் நீரை கொடுத்து முகம் கழுவ செய்து விட்டு, பிறகு மது பார்க்கம் கொடுக்கப் பட இருக்கும் பசுமாட்டை அவர்களுக்கு நிவேதனமாக( ஒப்புவித்தல்,கொடுத்தல்) பண்ணவேண்டும்!  அவர்களுக்கு முன்னால் நிறுத்த வேண்டும்   (23 )  பிறகு, "ஹதோம பாப்மா மேஹத"  என்ற மந்திரத்தை சொல்லி அந்த பசுவை வீட்டிற்கு உரியவன் கொல்ல வேண்டும்! 
 
           இப்படி மாமிசமாக்கிய பசுவை கொண்டு,  மது பார்க்கம் கொடுக்கப் படுகிறது!  காரணம்,  "மாமிசம் இல்லாமல் மது பார்க்கம் முடியாது"  என்று கிருஹஜ்ய  சூத்திரம் இருபத்தியாறு சொல்லுகிறது!    இப்படி கொல்லப்பட்ட பசுமாடு, அல்லது  எருது இவைகளின் இறைச்சியை நெய்யில் வருது, தேன் விட்டு பிசைந்து, உருண்டை  செய்து விருந்தினருக்கு  படைப்பதே  மது பர்க்கமாகும்!
            மதுபர்க்கம்  விருந்தை  பற்றி  தெரிந்து கொண்ட  உங்களுக்கு....  அதன் சுவைஎப்படி இருக்கும்? என்று  கற்பனை வருவதும்,சாப்பிடும் ஆசை வருவதும்  இயற்கைதான்!  ஆனால்  அந்த கொடுப்பினை எல்லாம்  நமக்கு வாய்க்குமா என்று தெரியவில்லை! 

            ராமனும், லட்சுமணனும் மது பார்க்கம் கொடுத்து இருகிறார்கள்!  முனிவர்களைக் கண்டதும் விரைந்து எழுந்து வணங்கி,பாத்யம்,அர்க்கியம் முதலியவைகளால் பூஜித்து, விதிப்படி  பசுமாட்டை நிவேதித்து, கொடுத்ததை  அத்யாத்ம ராமாயணம்,உத்தர காண்டம் சொல்கிறது!

           " எந்த பசு கொல்லப்  பட்டதோ  அதன் இறைச்சியை சமைத்து பிராமணர்களுக்கு படைக்க வேண்டும் "(2 .5 . 2 )என்று  "அஷ்டகா விதானம்"  சொல்லுகிறது!    இந்த அஷ்டகா விதானம்  குறித்து, அதாங்க ...பசுவை எப்படி கொல்ல வேண்டும் ?எந்த மந்திரத்தைச் சொல்லி கொள்ளவேண்டும்? என்கிற வழிமுறையை,   கிருஹஜ்ய  சூத்திரம் இரண்டாவது அத்தியாயம் நான்காவது  கண்டிகையில் சொல்லப் பட்டு உள்ளது! 

மது பார்க்கம் இருக்கட்டும், மற்ற வேதங்கள், அர்த்த சாஸ்திரம், மனுதர்ம நூல்கள் சொல்லவதை  அடுத்து பார்க்கலாம்!Monday, 9 January 2012

வேத காலமும், மாமிச உணவும், மக்களும்!

              சென்ற  பதிவின்  தொடர்ச்சி....


       வேதங்கள் நான்கில் இரண்டாவதாக சொல்லப்படும் யஜுர் வேதம்  தத்வமஸி என்னும் தத்துவங்களை அறிந்து கொள்ள உதவுவது என்று வேதாந்திகள் கூறுவர்.   கிருஷ்ண யஜுர்,சுக்ல யஜுர் என்று இரண்டு யஜுர் வேதங்கள் உள்ளன. இதில் கிருஷ்ண யஜுர் வேதம் ஆறாவது காண்டத்தில் பலிவிசயம்,தட்சணை சோம யாக  விளக்கம் ஆகியவைகள் கூறப்பட்டுள்ளது!

            யஜுர் வேதத்துக்கு முக்கியமாக,ஆதாரமாகவும் திகழ்வது சதபத பிரமாணம். உபநிஷமாக விளங்குவது பிரஹதாரணம் (Brihadaranya Kopanised )  இதனையே பிரம்ம ஞானம்,தத்துவ ஞானம் என்று என்று சங்கரர் கூறுகிறார்.   உபநிஷங்களுக்கு அந்தரங்கம், ரகசியம்,ஞானம்,பிராத்தனை என்று பலபொருள் உள்ளது!

           இவைகளின் எண்ணிக்கையில் வேறுபாடுகள் உள்ளது                                   .இ.  சம்பந்தாசாரியார் 108 என்று ஜே.பி.ரோட்டலர் மேலும் 17 -சேர்த்தும்  எ.வேபர் என்கிற சம்ஸ்கிருத அறிஞர் 235 - என்றும்,சுவாமி சின்மயானந்தர் 238 - உபநிஷங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர்!

      இவைகளில்  பிரஹதாரண  உபநிஷம் சிறந்த பொருள்களை கூறுவதாகவும்,அளவில் பெரியதாகவும் அதனாலேயே
  "பிரஹதாரன்யகம்"    எனபடுகிறது . (வீர ராகவாச்சாரியார்,உபநிஷத்சாரம்,சென்னை,1965 , பக்கம்-131 ) கூறுகிறார்!
       இந்த உபநிஷத்தில், ஆறாம் அத்தியாயத்தில் (நான்காம் பிராமணம்,பதினெட்டாவது வசனம்)  யாக்ஞ்வல்கியாரின் குருவான ஆருணி குறு பிரவாஹன்   ஆரோக்கியமான  குழந்தையைப் பெறவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்  என்று கர்பிணிப் பெண்களுக்கு யோசனை கூறுவதாக வருவதே கீழே  தரப்பட்டு உள்ளது !
         தன் மகன் புலவனாகவும்,புகழ் பெற்றவனாகவும்,நல்ல பெசாலனகவும்,சபைகளிலே திறமை உள்ளவனாகவும் எல்லா வேதங்களையும் படித்தவனாகவும்,  முழு ஆயுளைக் கொண்டவனாகவும் இருக்க வேண்டுமென  விரும்பினால், தாயானவள்,நெய்யுடன் கலந்த பொலி எருது அல்லது எருதுவின் மாமிசம் சேர்ந்த சாதம் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறது!
   He who desires a son reputed,eloquent and speaking words pleasant to hear, to be born to him, to be versed in aal the vedas and to live to a full age of hundred years, should have rice boiled with the meat of a bull able to breed and with his wife should eat the same mixed with ghee. Then they would be able to give birth to a son as desired. ( BRIHADARANYAKOPANISAD, Upanisad series 10, sri Ramakirushna math,mylapore,1945,p. 573.)
     பசுவை வைத்து(வதைத்து கொல்லும்)    யாகத்தின் பெயர்களும்  நோக்கங்களும்:

   கோசவம் -     பசுமாடு,காளை மாடுகளை கொல்லும் யாகத்தின் பெயர்!
  வாயவீயஸ் வேதபசு - வாயு தேவதைக்காக வெள்ளைப் பசுவைக் கொல்வது.
 காம்யபசு  - தனது எண்ணங்களை ஈடேற்றிக் கொள்வதற்கு உரிய பசு யாகம்.
 வத்சொபகரணம்-  கன்றுக் குட்டியைக் கொலை செய்து நடத்தும் யாகம்.
 அஷ்டதச பசுவிதானம் - பதினெட்டு பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்.
 ஏகாதசீன பசுவிதானம் - பதினோரு பசுக்களைக் கொல்லும் யாகம்.
  கிறாமாரண்யா பசு பிரசம்ஷா  - நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுகளைக் கொன்று யாகம் செய்வது!
 ஆதித்ய வேதாகபசு- சூரிய தேவதைக்கு பசு யாகம்.
 காம்யபசு விதானம்-பசுமாட்டைக் கொன்று நடத்தும் யாகம்.
 ரிஷபாலம்பன விதானம்- எருதைக் கொன்று நடத்தும் யாகத்தின் விதி.


          இவைகளை அதாவது யாகம்  பற்றி எம்.கே.கேலுண்ணி நாயர் என்னும் சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் (கோலோளன்பு அம்சம்,பொன்னானி,மதவிசாரணை, பக்கம்-78 ,79 , 80 )விரிவாக தெரிவித்து உள்ளார்!

     தெய்வங்களின் பெயரைச் சொல்லியும், பல்வேறு காரியங்களைச் சொல்லியும், பசுகளும் எருதுகளும்  தேவைக்கு தகுந்தபடி, பலியிடப் பட்டு, உணவாக உண்ணப்பட்டு வந்தது,     இவைகளை மட்டுமே தனியாக  சாப்பிட்டால் என்ன " கிக்கு" இருக்கும்?    அதனால் " கிக்கு" மற்றும்  "கில்மா " வேலைகளுக்கு  மதுவும் கட்டாயமாக  சேர்த்துக் கொள்ளப்பட்டது! 
           ஆணும் பெண்ணும் எல்லோரும் ஒன்று கூடி உண்டும்,கூடியும், ஆடியும்,பாடியும்,சேர்ந்தும் களித்தும்,  கலந்தும் உறங்கினார்கள்!

         மது பார்க்கம்  என்பது  மதுவுடன் கூடிய மாமிச உணவை  விருந்தாக  உண்பதும் வழங்குவதுமாகும்!  அதுகுறித்து அடுத்து பார்ப்போம்! 

 

வேத காலமும், மாமிச உணவும், மக்களும்!

      "நான் அரசியலுக்கு நுழைஞ்ச நேரம் அது. எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டு, இனி தன்னால ஊர்,  ஊரா சுற்ற முடியாதுன்னும், கருணாநிதிக்குப் போட்டியா ஜானகியை கொண்டு வர முடியாதுன்னும் சொல்லி, அம்முதான் சரியான ஆள்னு என்னைக் காட்டி, கட்சி நிர்வாகிகள்கிட்டே சொன்னார். அதோடு, கொள்கை பரப்புச் செயலாளர் பதவியையும் கொடுத்தார். கே.ஏ.கே., எஸ்.டி.எஸ் போன்றவங்க கடுமையா எதிர்த்தாங்க. அப்ப பொன்னையன் இருந்தாரு. அவரு, "நம்ம கட்சியும் திராவிட இயக்கம்ங்கிற அடையாளத்தோடு இருக்கு. இதனோட கொள்கையை பரப்ப ஒரு பிராமினை நியமிக்கிறது சரியா இருக்காது'ன்னு சொன்னார்.
         அப்ப எம்.ஜி.ஆர். "நீங்க அம்முவை பிராமின்னு நினைக்கிறீங்களா? பிராமின்னா குழைஞ்சு, குழைஞ்சு பேசி காரியம் சாதிப்பாங்க. அம்மு எதையும் பட்பட்டுன்னு நேரில் பேசிடும். அப்புறம், இங்கே இருக்கிற நீங்க யாரும் மாட்டுக் கறி சாப்பிட்டிருக்க மாட்டீங்க. ஆனா, அம்மு ஸ்பென்சரிலிருந்து ஸ்பெஷல் பீஃப் வாங்கி எனக்கு சமைச்சிக் கொடுத்திருக்கு. நான்தான் பழக்கமில்லாததால அதை சாப்பிடலை. மாட்டுக் கறி சாப்பிடுற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க'ன்னு சொன்னார்.

இன்றைக்கு  கருணாநிதியும் வீரமணியும் நான் பிராமின்னும் என் கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னும் சொல்றாங்க''


      --  என்பதாக ஜெயலிதா சொன்னதை, "மாட்டுக்கறி தின்னும் மாமி நான்"   என்று தலைப்பு வைத்து  போஸ்டர் போட்டு, நக்கீரன் செய்த கட்டுரையானது,தனிநபரின் விமர்சனமாகும்! 


      'விட்டேனா  பார்' என்று அ.தி.மு.க.வினர்,  தமிழகம் முழுக்க  நக்கீரனை எரிக்க, நக்கீரன் அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளாக.   பதிவு உலகமும் தன் பங்குக்கு, "நக்கீரன் செய்தது சரியா? அ.தி.மு.க.வினர் செய்தது சரியா? " என்று  ஆளாளுக்கு பதிவு எழுத ஆரம்பித்தனர்!   விளைவு?  இது ஒன்றே சூடான விவாதம், பிரச்னை!   இதைதவிர  வேறு ஒன்றுமே பிரச்னை இல்லை!   எனபது போல இணையத்தளத்தில் இடுகைகள் இருந்ததைப் பார்க்க முடிந்தது!
       மாட்டு கறிப்  பிரச்னையில் எதிரும் புதிருமாக  ஏராளமான  கமெண்டுகள் இடம் பெற்றன . நக்கீரனின்  விற்பனை சரிவை சரிசெய்ய, நக்கீரன் இந்த பதிவை போட்டது,  விற்பனை சரிவை இந்த பதிவின் மூலம் சரிபடுத்திக் கொண்டது என்று,'பண்ணி குட்டி ராமசாமி' கருத்து கூறி இருந்தார்!   அது உண்மைதான்! என்றாலும்  தரம் தாழ்ந்து இதுபோன்ற செய்தியை,தலைப்பிட்டு வெளியிடுவது பத்திரிக்கை தருமம் அல்ல என்பது எனது கருத்து!   காரணம் உணவு எனபது அவரவரின் வசதி,விருப்பம் சார்ந்தது. !   ஒருவனுக்கு முடிகிறது, பிடிகிறது என்பதற்காக,  " கூழு,கஞ்சி"  குடிப்பதை கேவலமாக சொல்லாலாமா? அப்படித்தானே மாட்டுக்  கறியும்!  


       ஆனால் நக்கீரனின் செய்தி மாட்டுக்கறி உணவை சாப்பிடுவது கேவலமானது என்ற பொருளைத் தந்துள்ளது!    இது மாட்டுக்கறி உணவைச் சாப்பிடும் முஸ்லிம்கள், தாழ்த்தப் பட்டவர்களை நக்கீரனும் கேவலமாக  பார்க்கும் நிலையை காட்டுகிறது! மேலும்,  தீண்டாமை குற்றம் எனும்
இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது!   நக்கீரனின் "தீண்டாமை ஆதரவு"  மனோபாவத்தை காட்டுகிறது!    தவிர,' மாமிகள்', 'மாமாக்கள்', மன்னிக்கவும், பிராமணர்கள் என்பவர்கள் அதனை சாப்பிடவே கூடாதது, அவர்களுக்கு ஆகாதது என்றும் பொருள்படும் வகையில் செய்தி வெளியிடப் பட்டு இருந்தது!   இதுவும் தவறு! 

         காரணம் ,மாட்டு கறியை முதன்முதலில் சாப்பிட்டவர்கள், இந்தியாவுக்கு அறிமுகப் படுத்தியவர்கள்,  பிராமணர்கள் தான்!  பிராமணர்கள் என்று  இப்போது சொல்லப் படுகின்ற  இவர்களின்  மூதாதையர்கள்,  ஆன ஆரியர்களே!   இது  முக்காலும் நானறிந்த  உண்மையாகும்!  நான் மட்டும் என்றில்லை, வரலாற்று  ஆய்வாளர்கள், நூலாசிரியர்கள், இந்துமத  ஆசாரியர்கள், வேத விற்பனர்கள் பலரும் அறிந்த உண்மையாகும்!  இந்த உண்மையை  மறந்து விட்டதும் கூட... மாட்டுக்கறி செய்தியை நக்கீரன் வெளியிடுவதற்கும், அதை தொடர்ந்து  நிகழ்ந்த சர்ச்சைகளுக்கும்  காரணம் என்பேன்!! 

         பிராமணர்கள்  மாட்டு கறியை  எப்போது வரை  உணவாக  சாப்பிட்டார்கள்,? எந்தெந்த பிராணிகளை எந்தெந்த கடவுளின் பெயரை சொல்லி பலியிட்டு உண்டார்கள்?  அவர்களது வேத நூல்களில் மாமிச உணவு பற்றி  சொல்லாப் பட்டுள்ளவைகள் என்னென்ன? இராமாயணத்தில் பதினான்கு வருடங்கள்  காட்டுக்கு சென்ற, ராமனும் லட்சுமணனும்  வில் அம்பை வைத்து வேட்டையாடிய மிருகங்கள் என்ன?  சாப்பிட்ட மாமிச வகைகள் என்ன? மகாபாரதத்தில் கிருஷ்ணனும், பாண்டவர்கள், கவுரவர்கள் முதலானோர்  பசு இறைச்சியை புசித்தும்,ருசித்தும் செய்த வேலைகள் என்ன? வேதங்களில் மாமிசம் பற்றிய மகத்துவத்தை சொல்லுபவை எவை?  அர்த்த சாஸ்திரம், மனு தர்மம் ஆகியவைகள் மாட்டு கரியைப் பற்றி சொல்வது என்ன? போன்ற ஏராளமான தகவல்களை  இதுபோன்ற சர்சைகள் எதிர் காலத்தில் தொடரக் கூடாது என்பதற்காக  தொடர்ந்து  இரண்டு,மூன்று பதிவுகளாக  எழுத உள்ளேன்!
          நான் எழுதும் பதிவுகளுக்கு  முன்னுரை இது
!

     பசுவைக் கொல்லும் பொது, 'ஹோதா'  என்ற புரோகிதன் 'அத்ரிகோ சமீத்வம் ஹுசமீ 
சமீத்வம்;சமீத்வமத்ரிகா  அத்ரிகா உர் இதித்ரிப் ரூயாத்' (ஐதரேய பிராமணம் பஞ்சிகா 2 ,கண்டம் 7 } என்று சொல்லவேண்டும்> அதாவது, நன்றாக அடித்துக் கொல்,      கொல், கொல்.   அடிப்பதை நிறுத்தாதே என்று கூறியவாறு பசுவைக் கொலை செய்து  அடுத்து அதன் சதையை  முப்பத்தி ஆறு பங்குகளாக  பிரித்து வழங்க வேண்டும் என்றும்  இதனை முறைப்படி  உணர்ந்தவன் சுவர்க்கத்தை அடைகிறான் என்றும், இந்த யாகம்  ரிஷிகளால் கண்டுபிடிக்கப் பட்டது என்றும் நம்பியவர்கள் வேதகால ஆரியர்கள்!  யாகத்தில்  பசு கொள்ளப் பட்ட பின்  அதன் சதையை அறுதெடுக்க வேண்டிய முறைப் பற்றி (ஐதரேய பிராமணம் பஞ்சிகா 2 ,கண்டம் 6 }கூறுவதாவது:

     "மார்பில் இருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுதெடுக்க வேண்டும். பின் கால்களில் இருந்து இரண்டு துண்டுகளை அறுதெடுக்க வேண்டும், முன் கால்களில் இருந்து நம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுதெடுக்க வேண்டும்,தோளில் இருந்து ஆமையின் வடிவாக இரண்டு துண்டுகளை அறுதெடுக்க வேண்டும் . இவ்வாறு  அந்த அந்த  அவயங்களில் இருந்து இருபத்தி ஆறு துண்டுகளை  அறுத்தெடுத்த  பின் எல்லாவற்றையும் அறுத்து எடுக்க வேண்டும்! " இப்படி பசுவைக் கொன்று யாகம் நடத்தி, அதனைப் பக்குவமாக  சமைத்து ஆரியர்கள்  அந்த நாட்களில்  உண்டார்கள்! 
   
        ஆடு,மாடுகளுடன் வந்த ஆரியர்களின் பிரமாதமான,பிடித்த,முக்கிய உணவே மாட்டு கறி உணவுதான்!   புத்தரின் கொல்லாமைத் தத்துவத்தை ஜீரணிக்க, புத்த மத வீழ்ச்சிக்கு  பிறகு   ஆரியர்களான  பிராமணர்கள்,  மாட்டு கறியை சாப்பிடுவதை விட்டு ,பால்,நெய்,வெண்ணை,என பின்னாளில்  உருமாறினார்கள்!    
     வேள்விகளில் இன்றும் பலியிடப்படும் உயிர்களில் மாடு முக்கியமானது!  மாட்டை எப்படி பலியிட வேண்டும்,எப்படி அறுக்க வேண்டும், எப்படி எதனுடன் சேர்த்துச் சமைகவேண்டும்என்பதை  இன்றுள்ள திராவிடர்களுக்கு சொன்னவர்களே  ஆரியர்கள்தான்! 

       இதன் தொடர்ச்சியான  பதிவுகள்  வரும்!  

Friday, 6 January 2012

ஐ.நா -சபையும் வீட்டோ அதிகாரமும் !

            ஐ.நா -சபைக்கு  என்று தனி கட்டிடம் கட்டும் தீர்மானம்  1946 -லில் லண்டனில் நடந்த பொதுகூட்டத்தில் முடிவானது! ஐ.நா -சபை கட்டுவதற்கு அமெரிகாவின் பிலடெல்பியா,பாஸ்டன்,சான்பிரான்சிஸ்கோ  போன்ற நகரங்கள் பரிசிளிக்கப் பட்டது! இறுதியில் நியுயார்க்கில் கட்டுவது என்று முடிவு எடுக்கப் பட்டது!   நியுயார்க்கில் உள்ள மன்ஹாட்டன்  தீவில்  அமெரிக்காவின்  பெரிய கோடீஸ்வரரான  ஜனதாக் பெல்லர் என்பவரின் பிரமாண்டமான பங்களாவை அவர்  65 லட்சம் டாலருக்கு கொடுபதாக கூறவே, அந்த இடத்தை ஐ.நா.வாங்கியது!             ரஷியா,கனடா,பெல்ஜியம்,பிரான்ஸ்,சீனா,சுவீடன்,பிரேசில்,இங்கிலாந்து,ஆஸ்திரேலியா,உருகுவே,போன்ற நாட்டின் பிரபல கட்டிட வல்லுனர்கள் கோடா ஆலோசனைக் குழு  அமைக்கப் பட்டு, 650 -லட்சம் டாலரில் கட்டுவதற்கு திட்டம் தயாரானது! அமேரிக்கா இந்த பணத்தை வட்டி இல்லாத கடனாக  ஐ.நா -சபைக்கு கொடுத்தது! பதினெட்டு ஏக்கர் அமைந்துள்ள,உயரமான கட்டிடமான ஐ.நா -சபை 24 . 10 .1949 -கட்டி முடிகப்பட்டு திறக்கப் பட்டது!  அமெரிக்காவின் கடனை 1962 யில்   ஐ.நா செலுத்தி விட்டது!


              அமரிக்க நாட்டில் இருந்தாலும் ஐ.நா -சபைக்கு அமேரிக்கா சொந்தம் கொண்டாட முடியாது என்று சொல்லப் படுகிறது!!   இந்த இடம் சர்வதேச எல்லையாக கருதப் படுவதாகவும் சொல்லுகிறார்கள்! அமெரிக்காவில் கைது நடவடிக்கைகளில் தப்பிக்க யாரும் ஐ.நா -சபையில் தஞ்சம் அடைய முடியாது! அத்துமீறி  ஐ.நா -சபைகுள் நுழைந்தால், அவர்களைப் பிடித்து அமெரிக்காவிடம் உப்படைக்க வேண்டும் என்று ஐ.நா -சபைக்கும், அமெரிக்காவுக்கும்  ஒப்பந்தம் உள்ளது!
       ஐ.நா -சபை நூலகத்தில் நான்கு லட்சம் புத்தகங்கள் உள்ளன. ஐ.நா -சபைக்கு என்று தனியாக தீயணைப்பு நிலையம்,தனி பாதுகாப்பு படையினர், அஞ்சல் நிலையம் ஆகியவைகள் உள்ளன!  இரு ஆலிவ் இலைகளுக்கு இடையே உலக வரைபடம் வரிந்து இருப்பது ஐ.நா -சபையின் சின்னமாகும்! ஐ.நா -சபை தலைமை செயலகத்தின் மீது எப்போதும் இது பறந்து கொண்டிருக்கும்!  இந்த கட்டிடம் முப்பத்தொன்பது  மாடிகளைக் கொண்டுள்ளது!      ஐ.நா -சபையின் வீட்டோ அதிகாரம் - சில தகவல்கள்: 

              ஐ.நா -சபையில் உள்ள வலுவான அமைப்பு எனபது அதன்  பாதுகாப்பு சபையாகும்!  இந்த சபையில் அமேரிக்கா,இங்கிலாந்து,பிரான்ஸ்,சீனா,ரஷியா ஆகிய அயிந்த் நாடுகள் நிரந்தர  உறுப்பு நாடுகளும்,பத்து தற்காலிக உறுப்பு நாடுகளும் உள்ளன.   நிரந்தர உறுப்பு நாடுகளான அயிந்து நாடுகளுக்கும் வழங்கப் பட்டுள்ள சிறப்பு அதிகாரம் என்பதே  வீட்டோ அதிகாரம் எனபது!  இந்த நாடுகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள  வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஐ.நா -சபையில் கொண்டுவரும் எந்த ஒரு தீர்மானத்தையும்  ரத்து செய்துவிட முடியும்!

            ஐ.நா.பாதுகாப்பு சபையில் மாற்றத்தை செய்து, மேலும் ஆறு நாடுகளை நிரந்தர உறுப்பு நாடுகளாக அதிகரிக்கவும்  தற்போது இருக்கும் தற்காலிக உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்து  இருபத்தி நான்காக  ஆக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது!  புதிதாக ஐ.நா.பாதுகாப்பு சபையில் சேர்க்கப்படும் நிரந்தர உரப்பு நாடுகளுக்கு  வீட்டோ அதிகாரம் வழங்க இயலாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது . பாதுகாப்பு சபையில் இடம் பிடிக்கப் பல்வேறு முயற்சிகளைச்  செய்துவரும் இந்தியா,ஜப்பான்,ஜெர்மனி,பிரேசில் போன்ற நாடுகளுக்கு இது அதிர்ச்சியை அளித்துள்ளது!  ரத்து அதிகாரம் இன்றி, பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு  இடம் தந்தால், அதனை இந்தியா  ஏற்றுகொள்ளாது என்று பிரதமர் மன்மோகன் சிங்  தெரிவித்துள்ளார்! இந்தியாவின் முடிவையே பிற நாடுகளும் எடுக்கும் நிலை இறந்து வருகிறது!


              ரத்து அதிகாரம் இன்றி பாதுகாப்பு சபையில் இந்தியா இடம் பிடிப்பதால்  இந்தியாவின் மதிப்பு ஒன்றும் அதிகரித்து விடாது! தற்போது வீட்டோ அதிகாரம் உள்ள நாடுகள், தங்களுக்கு இருக்கும் அதிகாரம் மற்ற நாடுகளுக்கும் கிடைக்கக் கூடாது என்ற முனைப்பில் இருந்து வருகின்றன.

                 வீட்டோ (ரத்து)அதிகாரத்தை நீக்கிவிட்டு, எல்லா நாடுகளையும் சமமாக பாவிக்கும் நெறியை  ஐ.நா. ஏற்படுத்த வேண்டும் என்று நமது முன்னாள் குடியரசு தலைவர்  டாக்டர்.அப்துல் கலாம்  ஆலோசனை தெரிவித்துள்ளார்!  அப்துல் கலாம் ஆலோசனை ஏற்கப்பட்டு  செயல்பாட்டுக்கு வந்தால்  உலக சமாதானத்துக்கு  இதுவரை  ஐ.நா. ஆற்றியுள்ள பணிகளை விட இன்னும் சிறப்பான பணிகளை செய்ய முடியும்! உலக அமைதிக்கு முக்கியத்துவம்  கொடுக்க வேண்டும் என்று ஐ.நா.சபை தீர்மானித்து, முடிவெடுத்தால், வீட்டு (ரத்து)உரிமை எந்த நாட்டுக்கும் தேவையில்லை என்ற முடிவுக்கு எல்லா நாடுகளும்  ஆதரித்து வரவேற்கும்! அப்படி எல்லா நாடுகளும் வீட்டோ அதிகாரத்தை நீக்குவதற்கு முன்வரவில்லை, முயற்சிகள் எடுக்க வில்லை  என்ற நிலை உள்ளவரை உலக அமைதி என்பதும், உலக அமைதிக்காக பாடுபடுவதாக கூறும் ஐ.நா.வின் பணிகளும்  பாரபட்சமானதாக  பலநாடுகளுக்கும் தோன்றுவதை தவிர்க்க முடியாது!


          தனது ஆதவு நாடும், அடாவடியாக  பாலஸ்தீனம் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளுக்கு நெருக்கடிகளையும், தொல்லைகளையும்  கொடுத்துவரும்  இஸ்ரேலின் மீது  முப்பதுக்கு மேற்பட்ட கண்டன தீர்மானங்களும், நடவடிக்கை எடுக்கும் ஐ.நா.வின் செயல்களையும் அமெரிக்கா, தனது சிறப்பு அதிகாரமான வீட்டோ(ரத்து) அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கையை தடுத்து உள்ளது. இஸ்ரேலை காப்பாற்றி வருகிறது!  இது உலக சமாதானத்தை நிலைநாட்டும்  ஐ.நா.வின் நோக்கத்திற்கு  எதிரானது மட்டுமல்ல, பாரபட்சமான செயலாகவும் பார்க்கப் பட்டு வருகிறது!
Thursday, 5 January 2012

ஊழலைப் போன்றே, வாரிசுகளையும் வளர்க்கும் இந்திய அரசியல்!

           இந்திய அரசியலில் இருந்து அகற்ற முடியாத  இரண்டு விஷயங்கள்  உள்ளன! ஒன்று ஊழல். இன்னொன்று  வாரிசு அரசியல்.  ஊழலை ஒழிக்கும் எண்ணம் இந்திய ஆட்சியாளர்களுக்கு எந்த அளவு  இருக்கிறது என்பது  லோக்பால் மசோதாவை காங்கிரஸ் அரசு சென்ற பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த  மசோதாவில் இருந்தும்  அதற்கு எதிர் கட்சிகள்  புரிந்த எதிர்வினைகளில் இருந்தும் நமக்கு தெரிந்தது. தெரியாதது  அல்லது நாம் தெரிந்தும் அசட்டையாக கண்டுகொள்ளாமல்  விட்டுவிடும் மற்றொன்று  வாரிசு  அரசியலாகும்.  வாரிசு அரசியல் குறித்து  எந்த கட்சிகளும் பெரிதாக அலட்டிக் கொள்ளவதில்லை  எனபது  இந்திய அரசியலில் கசப்பான நிஜமாகும்!


                 செல்வாக்கு மிக்கத் தலைவர்கள் பலரும்  தங்களது வாரிசுகளை அரசியலில் திணிப்பது, கட்சி வித்தியாசம் இன்றி,  நடந்து வருகிறது. !   இது இந்திய அரசியலின் எதிர்காலத்தை,இந்தியாவின் முன்னேற்றத்தை கேள்விகுறி ஆக்கும்   செயலாகும்! ஜனநாயகத்திற்கு ஆபத்தான செயலாகும்!  ஆரோக்கியமற்ற இதுபோன்ற  செயல்களை அனுமதிப்பது, ஜனநாயகத்தின்  மீது  பற்றுள்ளவர்கள்  செய்யும் மிகப் பெரிய  தவறு!   ஒரு கார்பரேட் கம்பனி முதலாளி, தனது சொத்துக்களை, நிறுவனத்தை,  தனக்குப் பிறகு  பாதுகாக்கவும், பராமரிக்கவும்  தனது வாரிசை கொண்டுவருவதற்கும்,  ஒரு நாட்டின்  ஆட்சியை,அதிகாரத்தை  தனக்குப் பிறகு தனது வாரிசுக்கு  உரிமை ஆக்குவதற்கும் அடிப்படியில் உள்ள  வேறுபாடு ஆகும்!  தனி நபரின் சொத்தை வேறு ஒருவருக்கு உரிமை ஆகுவதர்க்கும் ,   பொது சொத்தை  தனி நபர்  ஒருவருவருக்கு தரை வார்பதற்கும்    உள்ள முரண்பாடு  போன்றது!


                                                                                                                                                                      ஆசிரியரின் மகன் என்பதாலேயே  ஒருவரை   ஆசிரியர் ஆக்குவது எப்படி தவறோ, ஏற்றுகொள்ள முடியாத செயலோ, அதைப்போலத்தான்  அரசியல்வாதியின் வாரிசு என்பதற்காக  அவரை ஏற்று கொள்வதும் தவறாகும்!  ஜனநாயக நாட்டில் யாரும் மக்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டால்,  ஆட்சி அதிகாரத்தில்  அமர்வதில்  தவறென்ன இருக்க முடியும்?  என்று சிலர் வாதிடக்கூடும்!   அரசியல் வாதியின் வாரிசு என்பதால், ஆட்சி அதிகாரத்தில்  உள்ளவரின்  வாரிசு  என்பதால்  அவர்களுக்கு  கிடைக்கும்  வசதிகளும் வாய்ப்புகளும் அதிகம்!   இது  நியாயமாக அரசியல் செய்யவரும்   மற்றவர்களுக்கு கிடைகிறதா? மற்றவர்களின் வாய்ப்புகளை  தட்டிப் பறித்து, மற்றவர்களுக்கு  கிடைக்கும் வாய்ப்புகளை  கிடைக்க விடாமல் தடுத்து  பெறப்படும்  வெற்றியைப் போன்றது!   ஓட்டபந்தயத்தில்  கலந்து கொள்ளும்  போட்டியாளர்களில்  சிலரை மட்டும், " பாதி தூரம்  நீ ஓடினால் பரிசு உனக்குத்தான் " என்று சொல்வதை போன்றது!   வாரிசுகளை  அரசியலில்  வளர்ப்பது  எனபது,  முழு தகுதி உள்ள மற்றவர்களை  புறக்கணிக்கும்  செயல்!  தகுதி உடைய நபர்களை  போட்டியில் இருந்து நீக்கும் கயமை  தனமாகும்!


             பெரும்பாலான  அரசியல் வாரிசுகள்  தகுதி அற்றவர்களாகவும், நேர்மை அற்றவர்களாகவும், ஊழல் பேர்வழிகளாகவும், ஒழுங்கீனம் உள்ளவர்களாகவும்,தேச நலனில் அக்கறை அற்றவர்களாகவும், ஏன்? நமது தேசத்தைப் பற்றியே...  தெரியாதவர்கள்!  ஆகவும்   இருப்பதை  இந்திய அரசியலில் பார்க்க முடியும்!  தமிழகத்தில்  முன்பு ஆண்ட  கட்சியின் வாரிசுகளால் ஏற்பட்ட  இழப்புகள், பறிபோன உரிமைகள், ஒட்டு மொத தேசத்திற்கு ஏற்பட்ட அவமானம் ஆகியவைகள்   சொல்லத் தரமற்றது!   படிக்காத  ராப்ரி தேவியை  நல்லு பிரசாத்  பிகாரில் முதல்வர்  ஆக்கியதும் வாரிசு அரசியலே!  நேரு குடும்பத்தின் வாரிசு அரசியல் உலகப் பிரபலம்! சரத்பவார், ப.சிதம்பரத்தின் வாரிசுகளும் இந்தியா அரசியலில் ஏகபோகமாக  இருந்து வருகின்றனர்!  சமீபத்தில் விமான போக்குவரத்து துறைக்கு  அமைச்சராகிய அஜித் சிங்  கூட   வாரிசு முறையால் அரசியலுக்கு வந்தவர்தான்!  மேலும் விவரிக்க முபட்டால்,கஷ்மீர் ஷேக் அப்துல்லாவின் மகன், ஜகஜீவன் ராமின் மகள்,லால்பகதூர் சாஸ்திரி மகன்,  என்றுஇந்தியா அரசியலில் உள்ள வாரிசுகளின்  பட்டியல் நீண்டுகொண்டே போகும்!


          இத்தகைய  அரசியல் வாரிசுகளால் நமது  தேசத்திற்கு மட்டும் இன்றி, சிறந்த  அரசியல் தலைவர்களுக்கும்  கெட்டபெயரே ஏற்பட்டு வருகிறது!    நமது நாடு,  இந்த வாரிசுகளிடம்   படும் பாட்டைப் பார்த்த பிறகும்,  வாரிசுகளை  ஆதரிப்பது,அரசியலில் வளர்ப்பது   எனபது  நமக்கு நாமே  தோண்டிக் கொள்ளும் புதைகுழி  என்பதே  உண்மையாகும்!   ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அனைவரும் வாரிசு அரசியலுக்கு எதிராகவும் கிளர்ந்து எழவேண்டியது  களத்தின் தேவையாக உள்ளது! ஏனெனில் பெரும்பாலான ஊழல்கள் வாரிசுகளுக்காகவே நடைபெறுகிறது  எனபது நிதர்சனமாகும்!Wednesday, 4 January 2012

கண்ணதாசனின் சிந்தனைக் குழப்பத்தில் செழித்த கவிதைகள்!

               இருபதாம் நூற்றாண்டில் சினிமா,இலக்கியம்,அரசியல்,ஆன்மீகம்  போன்ற பலதுறைகளில்  தாக்கத்தை ஏற்படுத்திய  தமிழ் படைப்பாளிகளில் குறிப்பிடத் தக்கவர்களில்  முதன்மையானவர்,கவியரசு கண்ணதாசன் என்பது எனது கருத்தாகும்! நான் அதிகம் படித்த கதைகள்,கவிதைகள்  கண்ணதாசனும் எழுத்தாளர் சுஜாதாவும் எழுதியவைகள்தான்! இவர்களது எழுத்துக்களை எனது பள்ளி,கல்லூரி காலங்களில்,  வாசித்தேன் என்பதைவிட சுவாசித்தேன் !என்று கூறுவது  பொருத்தமாக இருக்கும்! அப்படி ஒரு ஈர்ப்பும்,லயிப்பும்  இவர்களது எழுத்துகளின் மீது எனக்கு இருந்தது!


             ஒருவர் மீது அதிக ஈடுபாடும்,பிரியமும் நமக்கு இருந்தால்,அவர்களது குறைகள்,தவறுகள் கூட நமக்கு தெரியாது என்று சொல்லுவார்கள்! சுஜாதாவைப் பற்றி,கண்ணதாசனைப் பற்றி யாரவது தவறாக விமர்சித்தால்,பேசினால் எனக்கு   கோபம்வரும்! என்னைக் கோபபட வைக்கவும்,ஆத்திரமூட்டி,கிண்டல் செய்யவும் நினைக்கும் எனது நண்பர்கள்,தேவையே இன்றி பேச்சினூடே   கண்ணதாசனை பற்றி  விமர்சிப்பார்கள்! அவர்களுக்கு பதில் சொல்லுவதற்கு என்று  இன்னும் ஆழமாகவும், சிந்தனையுடனும்  அவர்களது படைப்புகளை படிக்க ஆரம்பித்து விடுவேன்!          இந்துமதத்தை வெறுத்து நாத்திகம் பேசிய  கண்ணதாசன்,  அர்த்தமுள்ள இந்து மதம் எழுதியது  ஒரு அழகிய முரண்பாடு! அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதிய அவரே  இயேசு காவியம் என்றொரு கவிதை நூலை பிறகு எழுதியது,மற்றொரு சிறந்த முரண்பாடு!!  இந்த முரண்பாடுகள் ஏன் என்று கேட்டால் என்னால் எப்படி பதில் சொல்லமுடியும்?
      " நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
      எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை! "
என்று பாடிய அவரே, தான் இறந்து விட்டபின்பு...  தன்னைப் பற்றி எப்படியெல்லாம் நினைவு கூறுவார்கள்,அஞ்சலி செலுத்துவார்கள் என்று  "இருந்து பாடிய இரங்கற்பா" கவிதை எழுதி உள்ளாரே? என்று கேட்டால் என்னால் அப்போது பதில் சொல்ல தெரியாது!


         மரணம் எனபது  எல்லோருக்கும் பொதுவானது, உயிர்களுக்கு பிறப்பு என்று ஒன்று இருக்கும் வரை  இறப்பு என்பதும் இருக்கும்   இது இயற்கையின் நியதி! 

   "முதலைத்  தொடர்ந்து,
    முடிவொன்று தோன்றும்!
   முடிவைத் தொடர்ந்து,
   முதலொன்று தோன்றும்!! "
-என்றும்,

   "காமுகனும் மாண்டான்,
     கடவுள் நெறி பேசும்;
     மாமுனியும் மாண்டான்! "
  -என்றும்

   "இன்னதுதான் இப்படிதான்,
     என்பதெல்லாம் பொய் கணக்கு;
     இறைவனிடம் உள்ளதடா,
     எப்போதும் உன் வழக்கு!"
  -என்றும் கண்ணதாசன் கவிதை எழுதி உள்ளதுடன்,

   "தோன்றி வரும் அத்தனைக்கும்'
              ஊன்றும் இடம் உண்டுஎனினும்;
      சான்று சொல்லும் காலம் அதன் முடிவை!இதில்
              தப்பியவர் யாரும் இல்லை,அழிவை!" 
என்றும் எழுதி உள்ளார்!

              எனவே அவர்க்கு  இறப்பு குறித்து தெளிவான பார்வையும், உண்மையும் தெரிந்து இருகிறது!   என்று சொல்லி இருப்பேன்!   அவரது சிந்தனைக் குழப்பத்தைக் காட்டுவதாக  இல்லை!  என்று தெளிவு படுத்தியும் இருப்பேன். இப்போது கண்ணதாசன் பற்றி விவாதிக்கும் நண்பர்களும் அருகில்  இல்லை! கண்ணதாசனும் நம்மோடு(என்னோடு) இல்லை! அவரது கவிதைகளில், கதைகளில்,எழுத்து நடையில், தத்துவத்தில்,பாடல்களில்  மனதைப் பறி கொடுத்த நானின்று,  அவரது  கருத்துகள் பலவற்றிலும் முரண்படுகிறேன்!  காலமாற்றமும், எனது அனுபவமும்  கண்ணதாசனை மட்டுமல்ல, கடவுளைக் கூட  ஆய்ந்து அறியாமல் ஏற்றுகொள்ள மாறுகிறது!


        இருந்தும்,கண்ணதாசனின் கவிதைகள் பலவும்  ஏன் நெஞ்சில் நிழலாடும் கவிதைகளாக இருகின்றன! காரணம், தமிழின் இனிமையும், மொழி அழகும்! என்னை  இன்றும் ஆசுவாசப் படுத்தும் அவரது  எளிய தத்துவங்களும் தான்! இறந்துவிடுவோம் என்று தெரிந்து இருந்த  கண்ணதாசன்,   அவர்  உயரோடு இருக்கும் போதே பாடிய......

அவரது,  'இரங்கற்பா'  கவிதையில்  சிலவரிகள்:

    வாக்குரிமை கொண்டானை, வழக்குரிமை
            கொண்டானை; வாத மன்றில்'
    தாக்குரிமை கொண்டானை, தமிழுரிமை
            கொண்டானை; தமிழ் விளைந்த,
    நாக்குரிமை கொண்டானை; நமதுரிமை!
             என்றந்த  நமனும் வாங்கி,
    போக்குரிமை கொண்டானே! போயுரிமை நாம்,
           கேட்டால் பொருள் செய்வானோ?


            கண்ணதாசனின்  சிந்தனைக் குழப்பமோ, தெளிவோ ஏது எப்படி இருபினும் தமிழுக்கு கிடைத்த கவிதைகளுக்காக அவரை நினைக்காமல் இருக்க முடியாது!


Tuesday, 3 January 2012

கல்விக் கொள்ளையர்களுக்கு கடிவாளம் போடுவது எப்படி?

             இன்று கல்வி எனபது வியாபாரம் ஆக்கப் பட்டுவிட்டது! கல்விஎன்பதுகற்றுத் தரும்  கூடம்கள் எல்லாம்  குறுகிய காலத்தில்அதிக லாபத்தை தரும் தொழில் என்ற அளவில் நடத்தப் பட்டு வருகின்றனன்!  உயர் கல்வியானது  இனிமேல் பாமரர்களுக்கும்,அடித்தட்டு மக்களுக்கும்  கிடைக்குமா?எனபது  சந்தகமாக உள்ளது. இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்த  அண்ணல் அம்பேத்கரோ, இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த அபுல் கலாம்  ஆசாதோ,  எதிர்காலத்தில்இதுபோல நடக்கும் என்று நிச்சயம் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள்! தனியார் நிறுவனங்களின்   தனி உரிமைப் பிரதேசமாக   கல்வித்துறை மாறிவருவது,  இந்திய தேசத்தை  இருளில் தள்ளும் கொடுமையான செயலாகும்.! மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக  கல்வி வழங்குவதையும் அரசு செய்யவேண்டும். தேவையென்றால் அரசியல் சட்டத்தை அனைவர்க்கும் கல்வி வழங்கும் கட்டாய கடமையாக  அரசியல் சட்டத்தில்  தேவையானதிருத்தும்  செய்வது  தவறில்லை!           இப்போதும் அனைவருக்கும் தடையில்லையே, மத்திய,மாநில அரசுகளும் கல்வியை வழங்குகிறதே என்று சிலர்  கேட்கலாம்.! மேலோட்டமாக  பார்த்தால் அவர்கள் சொல்வது சரியாக தோன்றினாலும், உண்மை அதுவல்ல.  மாநிலத்துக்கு ஒரு மாதிரி கல்விஎன்பது  இந்தியர்களை பிரிவுபடுதிப் பார்க்கும்  இன்னொரு செயல் என்பது எனது கருத்து! தவிர  ராஜஸ்தானில் இப்போது இந்து மதத்தைச் சேர்ந்தவர் ஆட்சியில் இருக்கிறார், இந்துகளின் ஓட்டை பெறவேண்டும்,ஆகவே பகவத் கீதையை  பள்ளிப்பாடமாக போதிக்கிறோம்  என்பது போல,நாளை பிகாரிலே  முஸ்லிம் ஒருவர்  முதல்வரானால்  குரானை  கல்வி திட்டத்தில் சேர்ப்பேன்  என்பார்!  பஞ்சாபிலே  சீக்கியர்களைக் கவர அவர்களது புனித நூலை பாடமாக வைக்கவேண்டும், இப்படியே போனால் என்ன நடக்கும்? இந்தியா ஒரு தேசமாக இருக்குமா? என்று எண்ணிப் பார்க்கவேண்டும்! 


           இப்போது  மாநிலங்களுக்கு இடையில்  எண்ணற்ற பிரச்சனைகள்  நீடித்து வருகிறது. காரணம் ஒரு மாநிலத்தவரின் பிரச்சனையை மற்றொரு மாநில மக்கள்  சரியாக புரிந்து கொள்ளாததுதான்.  புரிந்து கொள்ள  முடியாமல் இருப்பதற்கும், தீர்வுகள் கிட்டாமல் போவதற்கும் கூட அந்தந்த மாநில மக்களின் அறியாமையும்,கல்வியற்ற நிலையம் தான்!


             கல்வியின்மையே  தீமைகளை அதிகம் தேடித் தருகிறது!  சமூகத்தில் குற்றங்களை, அதிகரிக்க செய்கிறது,வறுமைக்கு காரணமாகிறது! தீவிர வாதத்தை வளர்கிறது! பாதுகாப்பற்ற தன்மையை தந்து, பயத்தையும், வெறுப்புணர்வுகளை  மக்களிடம் தோற்றுவிக்கிறது! அரசின் திட்டங்கள்  முறையாக  செயல்படாமல் போவதற்கும்  ஊழல்,கருப்புப்பணம்  ஆகியவைகள் அதிகர்க்க காரணமும்  மக்களின் அறியாமையால் எற்படுபவைகளே!  அறியாமைக்கு காரணம்  கல்விக் குறைபாடும், கல்வி யாழ் அறிவும் விழிப்புணர்ச்சி பெறாமல் இருப்பதுமாகும்!


        இந்தியாவை  உண்மையிலேயே முன்னேற்றம் அடைய வேண்டுமானால், இந்தியர் ஒவ்வொருவரும் கல்வியும் அறிவும் பெற்றாக வேண்டியது அவசியமாகிறது.  கல்வியும் அறிவும் பெற வேண்டுமானால், கல்வியை  அடிப்படை,ஜீவாதார உரிமை ஆக்கி,அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்! தனியார்களை கல்வித்துறையில் அனுமதிக்க கூடாது! தனியார் கல்வி நிறுவனங்களை  அரசே ஏற்க வேண்டும்!  மககளுக்கு தேவையில்லாத  மதுபானக் கடைகளை  நடத்தும்  திறமை உள்ள ஆட்சியாளர்களுக்கு,  கல்விக்கூடங்களை  நடத்துவது ஒன்றும் செய்ய இயலாத  சிரமமான பணியாக  நிச்சயம்  இருக்காது!

Monday, 2 January 2012

இஸ்லாமிய பக்கீர்களின் இந்திய சுதந்திரப் போர்!

              இன்று சுதந்திரத்தின் பொருள்  திரிந்துள்ளது போல, சுதந்திரப் போராட்ட வரலாறும் திரித்து  எழுதப் பட்டு வருகிறது!  சுதந்திரம் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாவும் பாடுபட்டது போல  ஒரு மாயத்தோற்றம் ஏற்படுத்தப் படுகிறது! தவிர சுதந்திரம் பெறுவதற்கு போராடியவர்களும் கூட இந்துகள் என்பதுபோலவும், இந்துகளுக்கு மட்டுமே வாங்கப்பட்ட சுதந்திரம் போலவும் சித்தரிப்புகள் நடந்து வருவதை பார்க்க முடிகிறது! இன்று  இவர்கள் மட்டுமே இந்திய தேச பக்தர்களாக மிகைபடுத்தப் பட்டு வருகிறார்கள்! இந்திய தேசம் இவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதுபோலவும், இந்த நாடு இவர்களுக்கு பட்டா போட்டு கொடுக்கப் பட்டுள்ளது போலவும் இவர்கள் பேசியும் எழுதியும்,ஊடகங்களில் விளம்பரம் செய்து வருவதையும்   பார்க்கும்போது  அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை!        இன்று சுதந்திரம் பெறுவதற்கு, "காரண கர்த்தாவாக"  காட்டப்படும்  எவரையும் விட, சுதந்திரத்திற்காக போராடியவர்கள்  முஸ்லிம்களும், தாழ்த்தப் பட்டவர்களும்  ஆவர்! இவர்களிலும் பக்கீர்கள் என்று இன்றும் அழைக்கப் படும்  முஸ்லிம்களில் நாடோடியாகவும் , வறுமை நிலையிலும் வாழும் பல்லாயிரம்  இந்திய  முஸ்லிம்கள்,அன்று   சுதந்திரத்திற்காக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி போராட்டம் நடத்தி உள்ளனர்!     முஸ்லிம்களுக்கு  ஆங்கிலேயர் மீது  சொல்லொண்ணா கோபமும் வெறுப்பும் இருந்தது!  ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட அந்நியர்களின் படையெடுப்புக்கு முன்பு,  இந்தியாவை பரவலாக  ஆட்சி செய்தவர்கள் முஸ்லிம்கள்தான்!


        டெல்லியை தலைநகரமாக கொண்டு,592 ஆண்டுகள் 46 அரசர்களும்,பாமினி ராஜ்யத்தை 170 ஆண்டுகள் ௧௭ மன்னர்களும் ,மால்வா ராஜ்யத்தை 130 ஆண்டுகள் 7 மன்னர்களும்,குஜராத்தில் 136 ஆண்டுகள் 9 மன்னர்களும்,பீஜப்பூரை  127 ஆண்டுகள் 9 மன்னர்களும்,கோல்கொண்டாவில் 196 ஆண்டுகாலம் 14 சுல்தான்களும்,பெராரில் 8  ஆண்டுகாலம் 4 மன்னர்களும் பீதரில்,135  ஆண்டுகள் 12  மன்னர்களும்,அவுரத்தை 35 ஆண்டுகள் 12 நவாபுகளும்,ஆந்திராவை,230 ஆண்டுகள் 12 நிசாம்களும் வங்காளத்தை 67 ஆண்டுகள் 10 அரசர்களும் தென்னகத்தை 22 ஆண்டுகள் 2  சுல்தான்களும்,(ஹைதர்,திப்பு) ஆற்காட்டை 135 ஆண்டுகள் 12  நவாபுகளும் ஆண்டனர்!


    ஆங்கிலேயர்கள் ஆட்சியை கைப்பற்றி, நம்மை அடிமைப் படுத்தும் வரை ஆண்டுவந்த முஸ்லிம்கள்,  தங்களது ஆட்சியும் அதிகாரமும் பறிக்கப் பட்டதால், சுதந்திரப் போரில்  ஆங்கிலேயர்களை அகற்றும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்!. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக  இருந்த முஸ்லிம்கள்,  கிருத்துவ மதத்தைப் பின்பற்றிய ஆங்கிலேயர்களிடம் ஆட்சியை இழந்து, அடிமைப்பட்டு வாழ்வதை வெறுத்தனர். !  எனவே, ஆங்கிலேயர்களை  தீரமுடன், வீரமுடன், விவேகத்துடனும் எதிர்த்தனர்,போரிட்டனர் என்பது  வரலாற்றில் வெளிச்சமிடாத பக்கங்களாகும்.!

                   ஆங்கிலேயர்களிடம் இந்திய அடிமைப்படும் முன்பு இந்திய  ஆட்சியாளர்களாக  இருந்தவர்கள்  முஸ்லிம்கள்  என்பதால், முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக  இருந்துவந்த  முஸ்லிம் படை வீரர்களும் அவரது குடும்பத்தாரும் ஆங்கிலேய ஆட்சியாளர்களால்  புறக்கணிக்கப் பட்டனர்,   ஆங்கிலேயர்களின் படைகளில் முஸ்லிம்களைச் சேர்ப்பதை தவிர்த்து வந்தனர்! இதனாலும்   வறுமையில் வாடிய  முஸ்லிம் போர்வீரர்கள், நாடோடிகளாக ஆக்கப்பட்டனர்!    ஆங்கிலேயருக்கு எதிராக தீவிர போராட்டத்தை மேற்கொள்ளும்   நிலைக்கு ஆளாயினர்!  இப்படி ஆங்கிலேயருக்கு எதிராக, நாடு முழுவதும், பக்கீர்களாக சுற்றி திரிந்த  முஸ்லிம்களின் போராட்டம்  பல்வேறு  யுத்திகளையும் தந்திரங்களையும் கொண்டிருந்தது,!


          " தப்ஸ்" என்ற "சிறிய பறை"  போன்ற இசைக் கருவியை வைத்திருக்கும் பக்கீர்கள்  அதனை இசைத்தும், ஒலி எழுப்பியும் பொதுமக்களின் கவனத்தை தங்கள் பக்கம்  ஈர்த்துவிடும்  ஆற்றல் படைத்து இருந்தனர். இரண்டு பொருள்பட பாடவும், மறைமுகமாக தாங்கள் சொல்லவந்த கருத்தை  உரியவர்களுக்கு சொல்லும் திறனுடையவர்களாக  இருந்தனர்!. எளிய,கவிதைகளை,பாடல்களை இயற்றும் திறமையும் அவர்களுக்கு இருந்தது! திருவிழா, சந்தை,கடைவீதி,முதலிய  பொதுமக்கள் மிகுதியாக கூடும் இடங்களில் இவர்கள், ஆங்கிலேயருக்கு எதிராகவும், அவர்களது ஆட்சியை அகற்ற வேண்டிய அவசியத்தையும்,சுதந்திரம் குறித்த உணர்வையும் எளிதில் விளக்கி புரியவைத்தனர்! ஆங்கிலேயருக்கு எதிராக பொதுமக்களை ஒன்று திரட்டும் பணியை செய்தனர்!  போதுபக்களின் ஒத்துழைப்பு இன்றி,சுதந்திரம் பெறுவது  சாத்தியம் அற்றது இன்பது இவர்களுக்கு தெரிந்து இருந்தது.           ' பொம்மலாட்டம்' என்ற பெயரில்,ஆங்கில பொம்மை ஒன்றை,  பிரான்சு பொம்மை அடித்து வீழ்த்துவதுபோல காட்டுவார்கள். இதன்மூலம் பிரான்சு உதவியுடன் ஆங்கிலேயர்கள் வீழ்த்தப் படுவார்கள் என்றும்,உலகம் முழுவதும் பிரன்சினரிடம் ஆங்கிலேயர்கள் தோல்வி அடைந்து வருகின்றனர் என்று கூறி,ஆங்கிலேயர் வெல்லமுடியாதவர்கள் அல்ல என்று சொல்லி, பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினர். ஆங்கிலேய படைகள் உள்ள இடங்களுக்கு   விதை காட்டுவதுபோல சென்று ஒற்றுவேலை பார்த்தார்கள்!  ஆங்கில படையில் இருக்கும் இந்திய சிப்பாய்களிடம்  குழப்பத்தை விளைவித்து,ஆங்கிலேய சிப்பாய்களும்,இந்திய சிப்பாய்களும் ஒன்றுபட முடியாதபடி பார்த்துக் கொண்டார்கள்! இதனால்,  ஆங்கிலேயர்கள் அவர்களது படையைப் பார்த்து பயப்படும் நிலையை பக்கீர்கள் ஏற்படுத்தினார்கள். ஆங்கிலேய படையில் இருந்து வெளியேற விரும்பும் இந்திய சிப்பாய்களை தங்களது  தோற்றத்தில், மாறுவேடம் போட்டு  வெளியேற்றியும்,இந்திய சிப்பாய்களின்  குடும்பத்தை ஆங்கிலேயருக்கு தெரியாத இடங்களுக்கு முன்பே இடம்பெயரச் செய்து,மாற்றியும் உதவினர்.

                  தங்களது நலனை கருதாது,காடு,மேடு  எல்லாம் சுற்றி  வந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய  இஸ்லாமிய பக்கீர்கள், இந்திய வரலாற்றில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று வேலூர்  புரட்சியாகும்!  இந்த புரட்சிக்கு வித்திட்டவர்களும்,நம்பிக்கை அளித்து நடத்தியவர்களும் இஸ்லாமிய பக்கீர்களே  ஆகும்!