Tuesday, 28 February 2012

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

        சிதம்பரம் என்ற பெயர் பிராமணீயம்  முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கோயில்களை கொண்டுவந்த பிறகு வைக்கப்பட்ட பெயராகும்! இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது! சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது! புலியானது  சோழர்களின் "இலச்சினை" என்பதை அறிந்திருப்பீர்கள்!
    
     274 -சிவ திருத்தலங்களில் முதன்மையானது என்று புகழ்ந்தும், அவரவர் காலத்தில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,என்று இத்தலத்தைப் போற்றி புகழ்ந்துள்ளனர்! காரணம்,   இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த  இடம் இது என்பதால்! இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல,  எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள்  கொடுத்திருப்பதாக தெரியவில்லை!   அந்தளவு இந்த கோயிலின்மீது கண்வைத்து மெனக்கெட்டு இருகிறார்கள் !

      உதாரணத்துக்கு   இந்த கோயில் தல வரலாற்றில்     ஒன்று கூறுவதைப் பாருங்கள்:"வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவர் பெரும் பற்று கொண்டு பூசித்து பேரு பெற்றாராம்  அதனால்,பெரும்பற்றப் புலியூர் வியாக்ரபுரம்   என்று பெயர் ஏற்பட்டதாம்!"  இந்த முனிவர் எப்போது வாழ்ந்தார்?, எந்த பதிகங்கள் பாடினார்? எந்த நூற்றாண்டு? எங்கே அடக்கமானார் ? என்று யாரும் கேட்டுவிடாதீர்கள்! அப்புறம்,தெய்வ குற்றம் ஆகிவிடும்! இந்துக்களின் நம்பிக்கையை கேவலப் படுத்திவிட்டதாக    கூறி வழக்கு போட்டாலும் போடுவார்கள்!

       இங்கே,சிவபெருமான் அரூபமாக,இருக்கிறார்,ஆகாய வடிவமாக இருக்கிறார் அதுதான், "சிதம்பர ரகசியம்" என்று சொல்லுகிறார்கள்! 

         பிராமணீயத்தின்  தந்திரங்களில் ஒன்று ." ஒரு பொய்யை திரும்பத்திரும்ப சொல்லிவந்தால் நாளடைவில்   அந்த பொய்யே உண்மையாகிவிடும்" என்பதுதான்! இதன்மூலம்  உண்மையை மறக்கவும்,மரிக்கவும் வைக்க முடியும் எனபது  பிராமணீயத்தின்  நம்பிக்கையாக  இருந்துவருகிறது!

      பிராமணீயம், வெகுஜன மக்களை ஏமாற்றவும் தொடர்ந்து அவர்களை தங்களது இன நலனுக்கு பயன்படுத்திக் கொள்ளவும், செய்துவரும் பல்வேறு தந்திரங்களில் மற்றொன்று  சடங்குகள், சம்பிரதாயம்,ஐதீகம், ஆசாரம், நம்பிக்கை என்ற பொதுவான பெயர்களைப் பயன்படுத்தி, அவைகளை செய்யவேண்டியதற்கான  காரணங்களை மக்களுக்கு சொல்லாமலே, எப்போதும் மக்களை குழப்பத்தில்( முட்டாள்களாக ) வைத்திருப்பதுதான்!

       அரூபமாக,ஆகாய ரூபத்தில் (கடவுள் காட்சி தருகிறார் ?) இருக்கிறார் என்றால்,  அதற்கு கோயில் எதற்கு? அதுவும் சிதம்பரத்தில்?   என்று  யாரும் கேட்க மாட்டார்கள்,  என்ற நம்பிக்கை  பிராமணீயத்துக்கு இருக்கிறது!

        தவிர முஸ்லிம்கள், "படைத்தவனை   வணங்குவோம்,படைப்புக்களை   வணங்க மாட்டோம், இறைவனுக்கு உருவம் இல்லை! "   என்று  கூறும் முஸ்லிம்களின் தத்துவத்தோடு  ஒப்பிட்டு பார்க்கமாட்டார்கள், பார்த்தாலும்  அதனை சரி என்று உணர மாட்டார்கள்  உணர்ந்தாலும் ,ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

      அவ்வளவு ஏன்? அவ்வாறு சொல்வதை  குறைந்த பட்சம் சந்தேகப்படவும்,   சிந்திக்கவும் மாட்டார்கள்என்ற அதீத நம்பிக்கை பிராமணீயத்தின் நம்பிக்கையாக உள்ளது! 

        அதற்ககு காரணம் நமது இந்துமத மக்களின் "அதீத  கடவுள் பக்தி"  என்பதை  பிராமணீயம்  அறிந்து வைத்துள்ளதுதான்! 

       போகட்டும் உண்மையில்  சிதம்பரம் கோயில் தானா? அல்லது வேறா? என்று ஆய்ந்தால் அது கோயில்இல்லை என்றும் அது   அரசர்களின் பண்டாரம்   (கருவூலம்,}என்றும்  அரசின் செல்வதைப் பாதுகாப்பாக வைக்க, வைத்துப் பராமரிக்கக்  கட்டப்பட்டது என்ற உண்மை விளங்கும்!  சிதம்பரம் கோயிலின்  அமைப்பையும்,  மற்ற   கோயிலில்களில் இருந்து அது வேறுபடும்  விதத்தையும்  பார்த்தே, நம்மால் இதனை   தெரிந்துகொள்ள முடியும்!

      மற்ற கோயில்களில் உள்ளதைப்போல  கோபுரங்கள் இக்கோயிலுக்கு ஆரம்பத்தில் இல்லை!  கோயில் என்றால் நிச்சயம் கோபுரம் அமைத்து, அதற்கு குடமுழுக்கு செய்து, அதன்பின்பே  வழபாட்டு தளமாக அதனை பயன்படுத்துவது வாடிக்கையாகும்!
 
        இந்த இடத்தின், கோயிலின் மொத்த நிலப்பரப்பு  52 - ஏக்கர். இப்போது கம்பீரமாக நான்கு திசைகளிலும்  காட்சி தரும் ராஜ கொபுரரங்கள் பின்னால் வந்த ஆட்சியாளர்களால் கட்டப்பட்டவைகள்!  கிழக்கு கோபுரத்தை  கி.பி.1050 -ஆட்சிக்கு வந்த குலோத்துங்க சோழன் கட்டினான்!  மேற்கு கோபுரம் விக்கிரம சோழனாலும், தெற்கு கோபுரம் கடவராயன்  கொப்பெருஞ்சிங்கனாலும், வடக்கு கோபுரம் கிருஷ்ண தேவராயர் ஆட்சியிலும் கட்டப்பட்டது!

       சிதம்பரம் கோயில் இல்லையா? அது சோழர்களின் கருவூலம்தனா ? என்று  புரிந்துகொள்ள   பக்தி,ஆன்மிகம், என்ற கண்ணாடிகளைப் போட்டுக் கொள்ளாமல்,  "அறிவு  என்ற கண்ணையும் வைத்துப் பார்க்கவேண்டும்!அவ்வளவுதான்! 
   
      இந்த கோயிலில்  உள்ளே நுழைந்து, சாமியை தரிசனம் செய்ய வேண்டும் என்றால் இன்றுவரை  மேலாடையை,சட்டையை கழற்றிவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று  ஒரு வழக்கம் இருந்து வருகிறதே? ஏன்தெரியுமா? மற்ற தமிழ் நாட்டு கோயில்களில் அந்த வழக்கம் இல்லையே ஏன்?

        ஒன்றும் பெரிய ரகசியம் இல்லை, இப்போது உள்ள பாதுகாப்பு முறைகளோ, ஷ்கேனர்களோ, அப்போது இல்லாததால், உள்ளே சென்று வருபவர்கள் யாரும் விலையுயர்ந்த  தங்கம்,ரத்தினங்கள், பொருள்களை எடுத்து சென்றுவிடக் கூடாது தடுக்க செய்த ஏற்பாடுதான் அது! இன்றும் முட்டாள் தனமாக,ஜனாதிபதி வெங்கட்ராமன் ஆனாலும்  சட்டையை கழட்டிவிட்டு தான் கோயிலுக்கு போக வேண்டும் என்ற அளவில்  சாத்திரமாகவும் சடங்காகவும்  கடைபிடிக்கப் பட்டு வருகிறது!

     இதுதான் நீங்கள் சொல்ல வந்த, சிதம்பர ரகசியமா? என்று கேட்காதீர்கள்! நான் சொல்ல வந்த, சிதம்பர ரகசியங்களில் இதுவும்  ஒன்று அவ்வளவே! "சிதம்பரம் என்றாலே எண்ணற்ற ரகசியங்கள்" என்று  நீங்கள் உறுதியாக நம்பலாம்! மற்ற ரகசியங்களை  தொடர்ந்து பார்ப்போம்!

.Monday, 27 February 2012

ராஜராஜேஸ்வரம் கோயிலும்,சிறப்புகளும்!

       தண்+செய்+ஊர்  என்பதே தஞ்சாவூர் ஆயிற்று ! காவிரியின் கருணையால் குளிர்ந்த நிலபரப்பு  உள்ள தஞ்சையை  முத்தரையர் மன்னனிடம் விஜயாலய சோழன் கி.பி.850 -யில்  கைப்பற்றி சோழநாட்டின் தலைநகராக்கினான் ! 

        விஜயாலன் தொடங்கி, ஆதித்யன்,பராந்தகன்,கண்டராதித்தன், அரிஞ்சயன்,   சுந்தரசோழன்,ஆதிய கரிகாலன்,உத்தமசோழன், ராஜராஜசோழன், இவனது மகன் ராஜேந்திர சோழனின் முதல் பத்தாண்டுகள் வரை 176-ஆண்டுகள் தஞ்சை சோழமன்னர்களின் தலைநகரமாக விளங்கியது! 

      ராஜராஜன் தனது காலத்தில் கட்டியதே,பிரகதீஸ்வரர்  கோயில் என்று பிராமணர்களால்  பெயர்மாற்றப் பட்டுள்ள,பெரு உடையார்கோயில் என்ற  ராஜராஜெச்வரம் கோயிலாகும்! கல்வெட்டுகள் இக்கோயிலை அவ்வாறுதான் குறிக்கின்றன. அதுமட்டுமின்றி இகோயிலை, "தட்சிண மேரு " என்று குறித்து வந்தது!  "தென் கயிலாயமலை"  என்று பொருள்! 

     இக்கோயிலின் முதல் கோபுரவாயிலுக்கு,  "கேரளாந்தகன் திருவாயில்" என்று பெயர்! காரணம்,தனது தூதுவனை சிறையிட்ட கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடன்,988 -யில்,காந்தளூர் என்ற இடத்தில போரிட்டு, வென்றதன் நினைவாக  வைக்கப்பட்டது!  இரண்டாவது கோபுரவாயிலுக்கு  ராஜராஜன் திருவாயில் என்று பெயர்!  இதனை சுற்றி திருசுற்று மாளிகை  என்ற அமைப்பு இருந்தது! அதனை ராஜராஜனின் ஆணையின்படி,அவனது படைத்தளபதி,  "கிருஷ்ணன் ராமன் "என்பவன் கட்டியதாக மூன்று இடங்களில் கல்வெட்டு உள்ளது.

       கருவறைக் கோபுரத்துக்கு பெயர்  "தட்சிணமேரு" என்னும் ஸ்ரீ விமானம் 216 -அடி உயரம் உள்ளது!   அண்மையில் வெளிப்பட்ட கல்வெட்டு ஒன்று இந்த ஸ்ரீ விமானத்தின் மேல் ராஜராஜன் செப்பு தகடுகளைப் போர்த்தி,பொன் சுருக்கினான் {பொன்னால் மூடியிருந்தான் } என்று விவரிக்கிறது! இன்னொரு கல்வெட்டு 12 - உயரமுடைய கலசத்துக்கு எவ்வளவு பொன் கொடுத்தான் என்று விவரிக்கிறது!

  "உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் ஸ்ரீ ராஜராஜெச்வரமுடையார் ஸ்ரீ விமனது செம்பின் ஷ்துபித் தறியில்  வைக்கக் குடுத்த செப்புக்குடம் ஒன்று மூவாயிரத்து எண்பத்து முப்பலத்தில் சுருக்கின   தகடு பல பொன் ஆடவல்லான் என்னும் கல்லால் நிறை இரண்டாயிரத்து   தொள்ளாயிரத்து ,இருபத்தாறு கழஞ்சு" என்று கல்வெட்டு கூறுகிறது! 

கோயிலில் உள்ள பொன்னும் நகைகளும் ஆடவல்லான்,தில்லையம்பதி என்ற அளவுக் கல்லால் நிறுத்தப்பட்டு   அளவு செய்யப்பட்டுள்ளது!


      ராஜராஜன் கொடுத்த பொன்னால் ஆன ஸ்ரீபலி எழுந்தருளும் பொன்னின் கொள்கைத்தேவர்,பொன்னால் செய்யப்பட்ட சேத்ரபாலர் வெள்ளியால் ஆன வாசுதேவேர்கள், உள்ளிட்ட பலவும்,  பொன் கலங்கள் மொத்த எடை 41559 -கழஞ்சு, வெள்ளிகலங்கள் மொத்த எடை  50650 -கழஞ்சு, அணிகலன்கள் மொத்த எடை 10200 -கழஞ்சு ஆகியவைகள் ராஜராஜன் கொடுத்துள்ளதாக  கல்வெட்டுக்கள் தெரிவிகின்றன! ( ஆதாரம் சிவபாத சேகரனின் தஞ்சைக் கல்வெட்டுக்கள்,ஆசிரியர் வித்துவான் வே.மகாதேவன்,பக்கம்-,7 , 11 ,) அதாவது ராஜராஜசோழன் தஞ்சை கோயிலுக்குக் கொடுத்த பொன் 90 கிலோ, 910 -கிராம், வெள்ளி 110 - கிலோ,795 - கிராம்,அணிகலன்கள் 22 -கிலோ, 312 -கிராம்   என்று வித்துவான் வே.மகாதேவன் தெரிவிக்கிறார்!

      குந்தவை நாச்சியார்,தம்மையாக எழுந்தருளுவித்த, திருமேனி,போன்மாளிகைத்துஞ்சிய தேவர் திருமேனி,ஆடவல்லான் நம்பிராட்டியார் திருமேனி,உமாபரமேச்வரி,தஞ்சை விடங்கர் திருமேனிஎன்றும்  7282 -கழஞ்சு, பொன்னும்(15 .929 -கிலோ  ) 3413  முத்து, நான்கு பவளம்,நான்கு ராஜவர்தம்,70767 -வயிரம்,1001 - மாணிக்கம் கூடிய நகைகள் கொடுத்துள்ளார்,தவிர ராஜராஜனின் மனைவியர்களும் தங்கள் பங்குக்கு,கிலோகணக்கில் தங்கமும்,அணிகலன்களும் கொடுத்து உள்ளானர்!  சொலக் குடிமக்களும் கொடுத்துள்ளனர்! அனைத்தையும் எல்லோரும் அறியும்படி, ராஜராஜன் கல்வெட்டில் வெட்டிவைக்கும்படி உத்தரவும் இட்டிருந்தான்!

    "பாண்டிய குலாசனி ஸ்ரீ வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுபிச்ச திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜெச்வரமுடையார்க்கு 
நாம் குடுத்தனவும்,  நம் அக்கன் குடுத்தனவும்(குந்தவை) நம்பெண்டுகள் (மனைவியர்)குடுத்தனவும் மற்றும் கொடுத்தார் குடுத்தனவும் ஸ்ரீ விமானத்திலே கல்லில் வெட்டுக"  (தெனிந்திய கல்வெட்டுத் தொகுதிபாகம் 2 ,கல்.ஒன்று)


     ஸ்ரீ விமானம்  முழுவதும்  பொன் பூசப்பட்ட  தகடுகளால் அணிசெய்து காட்சியளித்த  ராஜராஜேஸ்வர கோபுரத்தை  கற்பனை செய்து பாருங்கள்!  இவைகள் யாவும் இன்று  காணமல் போய்விட்டது!
காரணம் இவைகள் இருந்ததே, தெரியாமல் பிராமணீயம் மறைத்து வந்ததுடன்,இவைகள் காணாமல் போக காரணமாகவும் இருந்துள்ளது! 
  

     போகட்டும், இந்த கோயிலில்  ஐம்பது பிடார்கள் தேவாரம் ஊதவும்,நானூறு ஆடல்மகளிர்கள் என்று ஆயிரத்து ஐநூறு பணியாளர்களுக்கு   மேல் பணிபுரிந்தனர்!  கோயிலில் நிலையாக இரண்டு கருவூலங்கள் மன்னனிடம் இருந்தும் மக்களிடம் இருந்தும் முதலீடாகப் பெற்ற பொருளை,  வணிகர்களுக்கும் ஊர்சபைகளுக்கும், தனியார்களுக்கும் பணிரண்டரை சதம் வட்டி விகிதத்தில் கடன் அளித்து,பொது வங்கியாக திகழந்தது! 

       மன்னர்களாலும்,மக்களாலும் அளிக்கப் பட்ட பலகோடி  கணக்கான, மதிப்புள்ள  பொன்,ரத்தினங்கள்,நகைகள்,தங்க வெள்ளிப் பாத்திரங்கள் முதலிய அனைத்தும் முறையாக எடை,மதிப்பு,ஆகிய துல்லிய கணக்குகளோடு பதிவு செய்யப்பட்டு,காக்கப்பட்டது! 

       இந்த கோயிலுக்கு சொந்தமாகவும், நிரந்தர வருமானத்துக்கும்  தமிழகம் மட்டுமின்றி  இலங்கை,கேரளம்,கர்நாடகம்,ஆந்திரம் ஆகிய இடங்களில் உள்ள நிலங்களும்  இருந்தன!

          இந்த கோயிலைக் கட்டிய  தலைமை சிற்பி வீர சோழன் குஞ்சரமல்லனான,ராஜராஜ பெருந்தச்சன் . அவனது உதவியாளர்கள் நித்தவினோதப் பெருந்தச்சனும்,இலத்தி சடையன் பெருந்தச்சன்  என்பவர்கள்! 

    இக்கோயில்  மண்டபத்தில் ராஜரானது வாழ்க்கை வரலாறு நாடகமாக நடத்தப் பட்டு வந்தது! ராஜராஜனின் முன்னிலையில் எழுதப்பட்டு அரங்கேற்றப்பட்டு  நடத்தப்பட்டு வந்த  நாடக நூலும்,சமஷ்கிருததில் இருந்த காப்பிய நூலும்  கூட   இன்று காணாமல் போய்விட்டது!   இப்படி, பிராமணீயம்  காணாமல் செய்துவிட்ட காரியங்கள்... நமது செல்வங்கள் மட்டுமல்ல, வரலாறு மட்டுமல்ல, வாழ்க்கையும்,நமக்கு இருந்த வீரமும்,விவேகமும், புகழும் என்று எத்தனையோ உண்டு! 
   
         சிதம்பர ரகசியம் தெரியுமா? அதனையும் பார்ப்போம்! தில்லையம்பதியில் பிராமணீயம் செய்த தில்லுமுல்லுகள்  பற்றி, அடுத்து பார்ப்போம்! ,பிராமணீயத்தின் அதிகார, முக்கியப் புள்ளி கோயில்கள்!


       கோயில்கள் சோழமன்னர்கள் கட்டிய நோக்கம்  இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்! கோயில்களில் இயங்கிவந்த பணிகளில், ஆதுலச் சாலைகள், என்ற மருத்துவ மனைகளும் அடங்கும்!

   அரசின் அன்றாட பணிகளை  செயல்படுத்தும் நிர்வாக அலுவலகமாக  கோயில்கள்   விளங்கிவந்துள்ளதுடன்,மன்னனுக்கும்  மக்களுக்கும் இடையில் தொடர்புகளை  கோயில்கள் மூலம் பலவேறு பணிகளில் ஈடுபட்ட  பணியாளர்கள்  ஏற்படுத்தி, ஆட்சிக்கு உதவிவந்துள்ளனர்  என்பதை அறியலாம்!

    கோயில்களுக்கு பொன்,பொருள் அளித்தார்கள், ஏராளமான  நிலத்தை  அரசர்கள்  எழுதிவைத்தார்கள்  என்று பல்வேறு கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. அவற்றை கோவில்கள் இன்றுள்ள சூழ்நிலையை வைத்து தவறாகப் புரிந்துகொள்கிறோம்! பரந்துபட்ட நிலத்தின் நேரடியாட்சிக்கு, நிர்வாக அலுவலகங்களாக  கோயில்களே அப்போது செயல்பட்டு வந்ததால்தான் கோயில்களுக்கு அரசர்கள் நிதியுதவியாக  செய்துள்ளார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்! தவிர நிலத்தின் வருவாயே  அரசின் முக்கிய வருவாயாக  இருந்ததால் அரசுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும்  அந்தந்த பகுதியில் இயங்கி வந்த கோயில்கள்களின் மேற்பார்வையில் இருந்துவருமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன!

    ஆட்சியின் முக்கிய கேந்திரங்களாக கோயில்கள் இயங்கிவந்ததால்  குறிப்பிட்ட சாதியினர்தான்  கோயிலுக்குள் போகவர முடியும், குறிப்பிட்ட சாதியினர் போகவர முடியாது!  என்ற நிலையில் அரசர்கள் காலத்தில் கோயில்கள் இருந்துவரவில்லை!  என்பதையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு உரிமையான,அதிகாரத்தை வழங்கும் இடமாக  கோயில்கள்  இருந்துவரவில்லை என்பதும்  இன்றைய தீண்டாமையை  அரசர்கள் காலத்தில்  யாரும் கடைபிடிக்கவில்லை என்பதையும் அறிந்துகொள்ளலாம்! 


     கோயில்கள் ஆட்சியதிகாரம் மிக்க இடங்கள், ஏராளமான பொக்கிஷம் இருந்த இடங்கள் என்பதாலேயே  பிராமணீயம் என்ற பாசிசம் கோயில்களைக் கைப்பற்றும், கோயில்களை தங்களது ஆதிக்கத்தில் கொண்டுவரும் செயல்களில் முனைந்து ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றது! இன்றுவரை கோயில்களை தங்களது ஏகபோக உரிமை பிரதேசமாகவும், தங்களது ஆதிக்க இடங்களாகவும், தங்களது எல்லாவித செயல்களுக்கும்  பயன்படுத்திவருகிறது!

     நாள்தோறும்  கடினமாக உழைக்கும்   மக்களால்  மாதத்தில் ஒருநாள் நெய்சோறு சாப்பிடமுடியுமா? ஆனால் பிராமணீயம் உழைக்காமல், மாதம் முழுவதும்  நெய்வேத்தியம் சாப்பிட வழிவகை ஏற்படுத்துவது, வாழ்வாதாரமாக இருப்பது  கோயில்கள்தான்!  அதனால்தான்  கோயில்களை பிராமணீயம் அதிகமாக கட்டவும், அவைகளை தொடர்ந்து தங்களது ஆதிக்கத்தில் வைத்து கொண்டுவரவும்  செய்கிறது!

       பிராமணீயம் என்ற பாசிசத்தின் சுரண்டல், ஊழல், ஏகபோகத்தின் முக்கிய மையப் புள்ளி எனபது கோயில்களே! 

     இந்துமதம் என்று சொல்லும் எவரும் பிராமணர்களைத் தவிர,கோயில்களில், பிராமணர்களின் இடத்தில இன்றுவரை நுழையமுடியாதபடி  உள்ளதற்கு காரணத்தை விளங்கிக் கொள்ளவேண்டும்! அனைத்து சாதியினரும் முயன்றால்  அம்பத்கர்  வடிவமைத்த சட்டப் படி, கலைக்டர்  ஆகலாம், டாக்டர்,ஆகலாம், ஏன் கவர்னர் ஆகலாம்! இந்தியாவையே கூட ஆளலாம்! திருப்தி போன்ற கோயிலில் மணியாட்ட முடியாது!  தினமும் நெய்சோறு, நிவேதனம் என்று வசதிகளை  உழைக்காமல் சாப்பிடமுடியாது! உழைத்தாலும் சாப்பிட முடியாது! காரணம்  பிராமணீயம் என்ற பாசிசத்தின் கட்டமைப்பு அப்படிப்பட்டது! 

     அனைவரும் கோயில் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டமும் நடைமுறையும்  பிராமணீயம் என்ற பாசிசத்தின் எதிரி என்பதாலேயே அவை  இன்றுவரை நிறைவேறாமல் இருந்துவருகிறது!

       இப்போதும் கிராமபுறங்களில் உள்ள கோயில்களை  பிராமணர் அல்லாதவர்களும்  பூசாரிகளாக இருக்கின்றனரே? என்று நினைக்கலாம்!  முக்கிய வருமானம் உள்ள, அனைத்து கோயில்களும்  பிராமணர்களுக்கு  ஆதாயம் அளிக்கும் கோயில்களாக உள்ளது. அவைகளில் இந்த பூசாரிகளை பணியில் அமர்த்துவார்களா?  அல்லது கிராம, வருமானம் இல்லாத கோயில்களுக்கு பிராமணர்கள்  பணிமாறுதல் செய்யபடுவார்களா? என்று யோசியுங்கள்!  பிராமணீயம் எனபது இந்துமதத்தில்எத்தகைய  தனி உரிமையும்   முக்கியத்துவமும் பெற்றுள்ளது எனபது விளங்கும்! 


   ராஜராஜேஸ்வரம் கோயில் குறித்தபதிவு நாளை  வரும்!


Friday, 24 February 2012

கோயில்கள் கட்டப்பட்டதன் நோக்கமும் பயன்களும்!

      கோயில்கள்  இறைவழிபாடு செய்ய மட்டுமே   என்று நினைத்து,நம்மை ஆண்ட அரசர்கள் கட்டியவை அல்ல !  அவர்களது ஆட்சியை சிறப்போடு நடத்திவரத் தேவையான   பலதுறை    அரச அலுவல்களை நடத்திவர உதவிடும்  ஒருங்கிணைப்பு  இடங்களாகவே  எண்ணி  கோயில்களைக் கட்டயுள்ளனர்! இந்நாளில்     கட்டப் பட்டு வரும் மாவட்ட ஆட்சியர்  அலுவலகங்களை போல,  அரசின் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் தேவைகளுக்கு,    பொதுபயன்பாட்டு  நோக்கத்திற்காகவே அரசர்கள் கோயிலைக்   கட்டி உள்ளதுடன்,அவ்வாறான பணிகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்!  

     பண்டை கால தமிழகத்தின்  சமயம்,சமுதாயம், வரலாறு,வாழ்க்கைத் திறன்,, அறச்செயல்கள்,ஆட்சிமுறை, பழக்கவழக்கங்கள் முதலியவற்றை   நாமறிய  உதவிடும்  வண்ணம். கோயில்கள் திகழ்கின்றன என்று தனது  தமிழ் நாட்டு சிவாலயங்கள் என்ற நூலில் குறிப்பிடும் மா.சந்திர மூர்த்தி,அவர்கள்,

     "பண்டைக் காலங்களில் கோயில்கள் பல்வேறு கலை நூல்களும் ஓலை ஏட்டில் எழுதிவைத்து, பாதுகாக்கும் நூலகங்களாகவும் ,விற்றல்,கொடுக்கல் வாங்கல் முதலிய பத்திரப்பதிவு நடத்தும்   இடங்களாகவும், ஆவணக் காப்பகங்களாகவும், விளங்கி வந்துள்ளன"  என்றும் 
 
           அரசின் முக்கிய வருவாயான   நிலத்தின் மூலம் வரும்  வருவாயை   கோயில் வழியே பெற்று ,  அதிலிருந்து பல்வேறு பயன்களுக்கு செலவிடப்படும் நிதி வைப்பு நிலையங்களாகவும், போர்கள் நிகழும் காலத்தில் மக்களைப் பாதுகாக்கும் புகழிமாகவும் ,பஞ்சம்,இயற்கை சீற்றங்கள் நிகழும் காலத்தில் உணவளித்து,பொருளாதார உதவி செய்யும் பணிமனைகளாகவும், பரம்பரையாக பணிபுரிவோருக்கு,வேலை  வாய்ப்பு அளிக்கும், மானியம்{ஊதியம்}நிறுவனமாகவும், விளங்கிவந்தன!"என்று தனது முன்னுரையில் குறிப்பிட்டு உள்ளார்!

     இவைகள் தவிர, கோவில்கள் அன்றைய நாளில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு விசாரித்து, தீர்ப்பு வழங்கும் நீதி மன்றங்களாகவும்,பணியாற்றி வந்தன! கோவில்களில் நூல்களின் அரங்கேற்றம், நூல்களின் விளக்கங்கள், நாடகம், நடனம், இதர கலைகள் என்று அனைத்துக்கும் தேவையான பணிகளை அரசு சார்பில்  செயல்படுத்தும் இடங்களாகவும்,  கோயில்கள் அமைக்கப் பட்டன!

   பல்லாயிரகணக்கான  பணியாளர்களுக்கு வேலை வழங்கி, அரசின் பணிகள்,மக்களின் பணிகளுக்கு  அரசால் ஏற்படுத்தப்படும்  ஊர் சபைகளை   நடத்தி, அரசு பணியாளர்கள்,இதர வகை  ஊழியம் செய்வோர்  ஆகியோருக்கு  ஊதியம் தந்து,தங்களது ஆட்சியை நடத்திட  கோயில்களைக் கட்டியிருந்தனர்!

      பிற்கால சோழர்களில்  கோச்செங்கணான் என்ற சோழன் காவிரியின் இரு கரைகளிலும் எழுபது கோயில்களைக் கட்டினான் என்று  கோயில் கல்வெட்டுகள் தெரிவிகின்றன! இவன் கட்டிய கோயில்கள் மட்டுமில்லை, விஜயாலய சோழன்,சுந்தர சோழன்  உள்ளிட்ட  சோழ மன்னர்கள் கட்டிய அனைத்துக் கோயில்களும்  அரசின் பணிகளை  செவ்வனே செய்ய உதவிடும் பணிமனைகளாகவும், பல்வேறு அலுவல்களை செய்திடும்  பொது இடங்களாகவும்  அக்காலத்தில் கோயில்கள்  திகழ்ந்துள்ளன! 

      செங்கற்களால் கட்டப்பட்ட  கோயில்கள் காலத்தில் சேத முற்றபோது, அவைகள் முன்னிலும் வலிவுடனும் வசதிகள் அதிகரித்தும், கற்றளிகளாக, கருங்கல்லால் ஆன கோயில்களாக  சோழர்கள்  மாறுதல் செய்து வந்தனர்!

       இவைகள் தவிர தங்களது செல்வதை பாதுகாத்து வரும் கருவூலங்களாகவும், போரில் எதிரி நாட்டில் இருந்து  கைபட்டபடும் ஏராளமான  செல்வங்களையும் கோயிலில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார்கள்!   மிகுந்த செல்வம் வைக்கப் பட்டுள்ள கோயில்களுக்கு  படைவீரர்களை வைத்து காவல் காத்துவரும் பணியும் சோழர் ஆட்சியில் செய்யப்பட்டு இருந்தது!

     ராஜராஜன்  தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுவதற்கு முன்பே,நெல்லை மாவட்டம் திருவாலீச்வரர் கோயிலைக் கட்டியிருந்தான்! இக்கோயில் கருவூலத்தை காக்க,"மூன்று கை  மாசேனை"என்னும் படையை காவல் காக்கும்படி   செய்திருந்தான், பல்வேறு இடங்களைச் சார்ந்த கிராம சபையினரை  கோயிலுக்கு காவலாளிகளை நியமிக்குமாறு பணித்திருந்தான், சபையினரும் அவ்வாறே கோயிலுக்கு காவலாளிகளை அமர்த்தியுள்ளனர்! என்று தென்னிந்திய கல்வெட்டு தொகுதி,வால்யூம் இரண்டு, கல்வெட்டு-70, தெரிவிக்கிறது!

       கோயில்களில் வழக்குகள் விசாரிக்கப் பட்டு, தீர்ப்புகள் சொல்லும் நிதிமன்றமாக செயல் பட்டதை,  நீலி என்பவளுக்கும், வணிகன் ஒருவனுக்கும் நேர்ந்த  வழக்கு , பழையனூர் திருவாலங்காட்டுக் கோயிலிலும்  வணிகப் பெண் ஒருத்திக்கு நடந்த திருமணம் பற்றிய வழக்கு,திருப்பனந்தாள் மற்றும் மதுரைக் கோயிலிலும், வரிஏய்ப்பு,ஊழல் வழக்கு திருமாற்பேறு கோயிலிலும் நடைபெற்றதை திருவெறும்பூர், கூகுர்  போன்ற கோயில் கல்வெட்டுகள் மூலம் அறிய வருகிறது!

     "அக்காலக் கோயில்கள் மேற்கொண்டிருந்த பணிகளில் கல்விப்பணியும் ஒஎன்றாகும். கோவில்களில் சரஸ்வதிப் பண்டாரம் என்ற பெயரில் நூல்நிலையங்கள் இருந்துள்ளன.கோயில்களின் சில பாகங்கள் கல்லூரிகளாகவும் பொது மண்டபங்களாகவும் இருந்துள்ளன!" என்று தமிழர் சமுதாயம் கி.பி.9 ,10 -ஆம் நூற்றாண்டுகள்  என்ற நூலில், {பக்கம் -73 ), அதன் ஆசிரியர்  க.முத்தையா விவரிக்கிறார்!

         தஞ்சை,பெரிய கோவிலில், இரண்டு வங்கிகள் நடந்து வந்தன, அவைகள்  பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும்  கடன் கொடுத்து, வட்டியுடன் வசூலித்து வந்தன என்று  'ராஜராஜேஸ்வரம் " என்னும் தனது நூலில் குடவாயில் பாலசுப்பிரமணியன்  தெரிவிக்கிறார். இவர் தஞ்சை சரஸ்வதி மகாலின்  பொறுப்பாளராக  இருந்தவர்!  

     கோயில்களின் பயன்கள் வேறு எவைஎவை என்பதுடன் தஞ்சை கோயில், தில்லையம்பதி என்னும் சிதம்பரம் கோயில்  அவைகளின் செல்வா வளம் ஆகியவைகளையும் அடுத்துப் பார்க்கலாம்! 
  
   

Thursday, 23 February 2012

உத்தம சோழனால் கட்டப்பட்ட அறபலி ஈஸ்வரர் கோயில்!

       இன்றைய  நாமக்கல் மாவட்டதில் உள்ள கொல்லிமலை குறித்து  தமிழ் இலக்கியங்கள் கூறுவதை   அறிந்து   இருப்பீர்கள்! வள்ளல் பாரி மன்னன்  இம்மலையை ஆண்டான் என்றும் அவரது   மகள்கள்  'அங்கவை,சங்கவை ' ஆகியோருக்கு.  தமிழ் மூதாட்டி  அவ்வை என்பவர் அடைக்கலம் தந்தார் என்றும் கதைகள் உள்ளன! சோழ பேரரசில் இப்பகுதி, "மலையனூர் "என்று அழைக்கப்பட்டு வந்தது! 

       உத்தம சோழனின் தாயாரான,செம்பியன் மாதேவியார்  இப்பகுதியை ஆண்டுவந்த, வேளிர் குறுநில மண்ணின் மகள்  என்றும் இவரையே உத்தம சோழனின் தந்தையான  கண்டராதித்தர் என்பவர் மனம் செய்திருந்தார் எனபது எல்லாம் சோழ வரலாற்றில் குறிப்புகளாக கிடைகின்றன!  

       ஆதித்ய கரிகாலனை படுகொலை செய்த பிராமணர்களில் ஒருவன்  இப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து  வந்தவன் என்பதாலேயே  அவனை மலையனூரான   ரேவதாச கிரமவித்தன்  என்று, "காட்டுமன்னார் கோயில் கருவறையில்  உள்ள,ஆதித்ய கரிகாலனைக் கொன்று துரோகிகளானவர்கள்" என்று  குறிக்கும் கல்வெட்டு குறித்து வருகிறது!
 
     இந்த மலையனூரில், கொல்லிமலையில்  உத்தம சோழன் தனது ஆட்சிக் காலத்தில் கட்டிய கோயில்தான்,  "அறபலி ஈஸ்வரர் கோயில்" ஆகும்!

       இக்கோவிலை ..எதற்கு கட்டினான் என்றால், பிராமணர்கள் தனது ஆட்சியின் பொருட்டு, இளவரசனான  ஆதித்ய கரிகாலனை கொன்றார்கள் அல்லவா? ஆதித்ய கரிகாலனைக் கொன்று விட்ட பிராமணர்களுக்கு  பிரம்மஹத்தி  தோஷம் ஏற்பட்டு இருக்கும் அல்லவா? அந்த பிரம்மஹத்தி தொசதிப் போக்கிக் கொள்ளவும், ஆதித்ய கரிகாலனை கொன்றதால்   ஏற்பட்ட  கொலை பாவத்திற்கு பரிகாரமாகவும்  இக்கோயிலை  பிராமணர்களது ஆலோசனை,அல்லது உத்திரவின் பேரில் கட்டிஉள்ளான் என்று விளங்குகிறது!

        அதாவது பிராமணர்களின்  தருமமான,மனுதருமத்தை, பாசிச ஆட்சியை ஏற்படுத்த வேண்டி, செய்யப்பட்ட படுகொலை என்பதை குறிக்கும் வகையில் இக்கோவிலின்  இறைவனுக்கு  "அறபலி ஈஸ்வரன்" என்று  வைத்துள்ளார்கள்! "அறம்" எனபது தருமம் என்ற பொருளைத்தரும்!  பிராமண தருமத்தைக் காக்க செய்யப்பட்ட பலியாம்,  ஆதித்ய கரிகாலனின் படுகொலை!

        இந்த அறபலி ஈஸ்வரனின் பெண்தெய்வத்தின், இறைவியின் பெயர் என்ன தெரியுமா? "அறம் வளர்த்த நாயகி"   என்பதாகும்!   

      கோயில் இறைவன், இறைவி பெயர்களிலேயே,  பிராமண பாசிசம் கொண்டுள்ள வக்கிர, கொடூர குணம் வெளிப்படுகிறது தானே? 

        அந்தணருக்கு வாரி வழங்கி உலகைப் பெற்ற, உத்தம சோழனை  பெற்ற செம்பியன் மாதேவியை  சும்மா விடமுடியுமா? அவரை, பிராமண பாசிச ஆட்சியாளர்கள்  உத்தம சோழனை பெற்றதால்,  "திருவயிறு வாய்த்த பிராட்டியார்" போற்றிப் புகழ்ந்துள்ளனர்!   அவரும் தனது பங்குக்கு  தனது மகன் உத்தம சோழனின் பதினோராவது ஆட்சியாண்டில்  செங்கல்லால் கட்டப்பட்டு இருந்த கோயிலைக் கற்றளியாக்கி (கருங்கல்லில்}புண்ணியம் தேடிகொண்டுள்ளார்! 

        உத்தம சோழனின் தாயார்  செம்பியன் மாதேவியார் தஞ்சை மாவட்டம் திருகொடிகாவல் என்ற ஊரில் இருந்த கோயிலைத்தான் இவ்வாறு கட்டினார் என்று   கல்வெட்டுகள் தெரிவிகின்றன! 

      போகட்டும்!  செம்பியன்   மாதேவியோ, உத்தம சோழனோ, அல்லது சோழ மன்னர்கள், அரச குலத்தவர்கள் என்று பலருமே  தங்களது வாழ்நாளில்  பல்வேறு கோயில்களைக் கட்டி வந்துள்ளார்கள்! 

     ஆனால், பாசிச பிராமணர்கள் முன்னின்று, தங்களது பொன்,பொருளைச் செலவிட்டு,  கோயில் கட்டியதாக இதுவரை நான் கேள்விப் பட்டதில்லை!

     மக்களோ, மன்னரோ, கோயில்களை கட்டியது,  பாசிச பிராமணர்களது  இன நலதுக்காகவோ, அவர்களது சுகபோகதுக்காகவோ, ஆட்சி அதிகாரத்தை அவர்களுக்கு கொடுப்பதற்காகவோ இல்லை!  அந்த நோக்கத்தில் எந்த மன்னரும் அப்போது  கோயில்களைக் கட்டவில்லை!

       பின் எதற்காக,  கோயில்கள் பலவும் கட்டப்பட்டன? கோயில்களின் பயன்பாடு  சோழர்கள் காலத்தில் எப்படி இருந்தது? என்பதை அடுத்துப் பார்ப்போம்!

Wednesday, 22 February 2012

உத்தம சோழனின் பிராமணீய ஆட்சி!

     உத்தம சோழனின்ஆட்சியை  பிராமணீய ஆட்சி என்றே உறுதியாக கூறலாம்! பிராமணர்கள் தங்கள் சார்பாக  உத்தம சோழனை பேருக்கு மன்னனாக்கி விட்டு சோழ நாட்டை தங்களது ஆதிக்க,அதிகார பூமியாக்கும்  செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதை அறுதியிட ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன!

     உத்தம சோழனது ஆட்சியைப் பற்றி, "மதராஸ் மீயுசியத்தின்  சாசனம் "  விளக்குகிறது!

       "உத்தம சோழன் நாட்டை ஆளத் திறமை அற்றவனாகவும்,தகுதி அற்றவனாகவும் விளங்கினான்"  என்று தமிழக வரலாறு என்னும் நூலில் அ.தேவ நேசன் என்பவர் குறிப்பிட்டு உள்ளார்!

       திருவாலங்காடு செப்பேடு, "கலி"என்பதாக  ஆதித்ய கரிகாலனின் படுகொலைக்கு உரியவர்களைக் குறிப்பது உடன்,உத்தம சோழனை, ராஜராஜனின் சிற்றப்பன்,அருண்மொழி வர்மனுக்குரிய ஆட்சியினை ஆவலோடு முயன்று அடைந்தவன்,எனவும்  அந்தணர்களுக்கு செல்வதை வாரி வழங்கி,உலகத்தைப் {நாட்டைப் பெற்றவன}பெற்றவன் எனவும் குறிபிடுகிறது!

      "ஆதித்தன் என்ற சூரியன் மறைந்தான், பாவம் என்ற இருள் சூழ்ந்தது" என்று கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி  தனது சோழர்கள் நூலில் உத்தமசோழன் ஆட்சிக்கு வந்ததைப் பற்றி சுருக்கமாக கூறுகிறார்!

      தவிர பல்வேறு கல்வெட்டுகளும், செப்பேடுகளும் உத்தம சோழனைப் பற்றி "நிலைத்த குருட்டு இருட்டினைப் படைத்தவன்," "பேரு வலியுடையவன் ", "முயன்று ஆட்சிக்கு வந்தவன்", "இவன் நல்ல தந்தைக்குப் பிறந்த கேட்ட மகன்", என்று குறிப்பிடுகின்றன. வரலாற்று ஆய்வாளர்களும் தங்களது ஆய்வு நூல்களில் அவ்வாறே   குறிப்பிட்டு வருகின்றனர்!

       சோழப் பேரரசை தங்களது பாசிச ஆட்சிக்கு ஆதரவாக கொண்டுவரவும், பாசிசத்துக்கு எதிரான,வெகுஜன மக்களுக்கு ஆதரவாக இயங்கிவந்த  பிற சமயங்களை அழிக்கவும், வேரறுக்கவும் திறமையும் தகுதியும் அற்றவனும் பேராசைக் கொண்டவனுமான உத்தம சோழன் போன்ற ஒருவனை பிராமணர்கள்,மன்னனாக்கி உள்ளனர் என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்!

        மேலும் கிடைக்கும் ஆவணங்களை ஆராயும் பொது, உத்தம சோழனுக்கு பல மனைவிமார்கள் இருந்துள்ளதாக தெரிய வருகிறது! அவனது மனைவியரில் ஐந்து பேரைப் பற்றி ஒரே கல்வெட்டில் குறிப்புகள் உள்ளது. ஓரட்டணம் , சொரப்பையார்,{கன்னடப் பெயர்} அக்கரமாதேவியார்,மூத்த நம்பிராட்டியார்,திரிபுவன மாதேவியார் ஆகியோர்கள்  உத்தம சோழனின் பல மனைவியரில் சிலராக அக்கல்வெட்டில் குறிக்கப்பட்டு  உள்ளனர் ! இவர்களும் உத்தம சோழன் வழியில்  தஞ்சைப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்துக்கு பல தானங்களை வழங்கியதாக கல்வெட்டு தெரிவிக்கிறது!

       அதாவது உத்தம சோழன்  ஆட்சியை, பிராமணர்கள் பொறுப்பில் விட்டுவிட்டு,மது, மாது  மயக்கத்துடன், காமக் களியாட்டங்கள், கேளிக்கைகள் என்று  நாட்டை பற்றி கவலையின்றி,  உல்லாச வாழ்வு வாழ்ந்துள்ளான் என்று இதன் மூலம் விளங்குகிறது!
 
         தனது நாட்டில் உள்ள எல்லாதரப்பு மக்களுக்கும் நன்மைகளைச் செய்து வரும் அரசனை அந்த நாட்டு மக்கள் போற்றிப் புகழ்ந்து வருவதும், அப்படி இல்லாமல் துன்பத்தை தரும், மக்களை இன்னலுக்கு ஆளாக்கும் மன்னனை வெறுத்து துற்றுவதும்   மக்களின் இயல்பாக இருப்பதை அறிவோம்!

      உத்தம சோழனை, அவனது ஆட்சியை, மக்கள் பலரும் வெறுத்து, தூற்றி வந்துள்ளனர்! மேலும்  தலைமறைவாக  வாழ்ந்துவந்த ராஜராஜனை  எப்படியாவது மன்னனாக்கவும் சோழ நாட்டு மக்கள்  விரும்பி உள்ளார்கள்!  உத்தம சோழனை எதிர்த்து  கிளர்ச்சிகள்,போராட்டங்கள் செய்தும் வந்துள்ளனர்! ஆனாலும் ராஜராஜ சோழன்  அவசரப்பட்டு , உத்தம சோழனை  அகற்றிவிட்டு, மக்கள் விரும்பியும் கூட, தான் அரசனாகாமல், காலந்தாழ்த்தி வந்துள்ளான் எனபது விளங்குகிறது!
 
      இதனை "நிலைத்த குருட்டு இருட்டினைப் படைத்த  பெருவலியுடைய கலியினை அழித்து, அரசாட்சி ஏற்க வேண்டப்பட்ட போதும்,அரசியல் நடவைக்கைகளை நன்குணர்ந்தவன் ஆதலால், அருண்மொழி வர்மன்  அரசேர்ப்பதனை  மனதாலும் சிந்தியாதிருந்த பொது," என்று குறிக்கும் திருவாலன்காடுச் செப்பேடு மூலம் அறிகிறோம்!

      ராஜ ராஜனை அரசனனாக்க வேண்டி  மக்கள் நடத்திய போராட்டங்களில்  சோழகுடிகள்,  பாசிச ஆட்சியாளர்களால், பிராமண ஆதரவு, உத்தம சோழனது படையினரால் கொடூரமாக தண்டிக்கப் பட்டனர், கொல்லப் பட்டனர்!

      சோழப் பெரசில் இருந்த சோழக் குடிமக்களும், பாசிச பிராமணர்களின்  அடாத செயல்களைப் பொறுக்க இயலாத..  பிற இன,மதத்தைச் சேர்ந்தவர்களும் ,  ராஜராஜனுக்கு ஆதரவாகவும், உத்தம சோழனுக்கு எதிராக செயல் பட்டு வந்து உள்ளது   குறித்து,  தமிழக வரலாற்று  ஆய்வாளகள் யாரும் சரியான ஆய்வை மேற்கொள்ளாமல் இருந்து வந்துள்ளது  வியப்பளிகிறது!
    
        ஆனால்,  பிராமண பாசிச, ஆதிக்கத்தை எதிர்த்த, மக்களின் உரிமைப்போராக, வரலாறு நெடுகிலும் இப்போர்  வலங்கை, இடங்கைப் போர்  என்ற  பெயரில்  தொடர்ந்து நடந்து வந்தது!இப்போரினால்  தமிழகத்தில் ரத்த ஆறு ஓடியது!  பாசிச பிராமணீயத்தின் பக்கமே  ராஜராஜனுக்கு பின்வந்த  சோழ அரசர்களும் அடுத்துவந்த ஆட்சியாளர்களும்  இருந்ததால் பிராமணீயம் என்ற  பாசிசத்தின் கீழ் தமிழகம் சுமார் 900 -ஆண்டுகள் கட்டுண்டு கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது!  

     " வலங்கை இடங்கை போராட்டம் "என்று  வரலாற்றில் குறிப்பிடப்படும்  போராட்டம்  எனபது  ஆதித்த கரிகாலனின் படுகொலைக்கு பிறகே தொடங்கியுள்ளது! ஆனால் பலரும் இந்த போராட்டம் எப்போது தொடங்கியது எனபது தெரியவில்லை... என்று ,மேலோட்டமாக குறிக்கிறார்கள்! கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தனது சோழர்கள் என்ற நூலில், ஆதித்யன் காலத்தில் தொடங்கியதாக  ஒரு புராணம் உள்ளது என்று  குறிப்பிட்டு உள்ளார்! 

     வலங்கை இடங்கை போராட்டத்தை பற்றி விரிவாக பார்க்க வேண்டி உள்ளது! அதற்கு முன்  உத்தம சோழன் காலத்து,  "அறபலி ஈஸ்வரர்" கோயிலையும்,அது கட்டப் பட்டதன் நோக்கத்தையும் பார்த்து விடுவோம், இந்த கோயில்  நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ளது!
     
  


 

Tuesday, 21 February 2012

பிராமணர்களின் செயல்களும் ஆட்சியாளர்களின் அச்சமும்!

        பிராமணர்கள் தங்களது இனநலனுக்காக,பொருளாதார, அரசியல் மேன்மைக்காக,ஆட்சி அதிகாரத்துக்காக,  எந்தவித அடாத செயலையும், சிறிதும் குற்ற உணர்ச்சி இன்றி செய்பவர்கள், இயற்கையாகவே  செய்து வருபவர்கள்  எனபது குறித்து  அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, மேலும் சில நிகழ்சிகளை பார்க்கலாம்!

     இப்படிப்பட்ட சம்பவங்கள், கடந்த காலங்களில் நடந்திருக்கலாம், மனிதர்கள் நாகரீகம், கல்வி அறிவு பெறுவதற்கு முன்பு நடந்த செயல்களை, ஒரு இனத்தை அவமதிக்கும் செயலை வெளிச்சமிடலாமா? நியாயமா? என்றும்  தேவையற்ற ஒன்று,வீண் வேலை என்றும் கூட சிலர் நினைக்கக் கூடும்!

      "பார்ப்பனீயம்" என்பது  பாசிசவெறிகொண்ட சித்தாந்தம்,  பாசிசத்தை தவிர வேறு எந்த சித்தாந்தங்களையும்,தத்துவங்களையும்   அது எப்போதும் ஏற்றுக் கொள்ளுவதில்லை!   என்பதை அப்படி நினைப்பவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்! இப்போதும், நவீன காலத்திலும் "பிராமணீயம்" என்ற பாசிசம் இத்தகைய அணுகுமுறையைக் கைக்கொண்டு இயங்கிவருகிறது! இனிவரும் காலத்திலும் அது அவ்வாறே இயங்கி வரும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் !

       நவீன காலத்திலும்  பிராமணீயம் என்ற பாசிசம் நடத்திவரும்  கொடுமைகள் குறித்து பல்வேறு ஆதாரங்களுடன்  பிறகு  விளக்க எண்ணியுள்ளேன்!எனவே, வரலாற்று ரீதியாக அதன் செயலாக்கங்களை, அது அடைந்து வந்துள்ள பரிணாமங்களை, உழைக்கும் வெகுஜன மக்களுக்கு,  அது இழைத்து வந்த,  கொடுமைகளை அறிந்து கொள்ளுவது மிக அவசியமானதாகும்! 

    "பிராமணீயம்"  என்ற பாசிசத்தை  எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டியே இத்தகைய பதிவுகளை  சரித்திர ஆதாரங்களுடன் முடித்தவரை தொடர்ச்சியாக  விளக்கி வருகிறேன்!

        பவுத்த மன்னன்,  அசோகர் வம்சத்தை சேர்ந்த,அவரது வழியில் பவுத்த ஆட்சியை நடத்தி வந்தவன், "பிரஹத்தி ரத மவுரியர்"  என்ற அரசனின் ஆட்சியை அகற்றிவிட்டு, பாசிச ஆட்சியை ஏற்படுத்த முயன்ற  பிராமணர்கள், அரசனின் தளபதிகளில் ஒருவனான,புஷ்ய மித்திர சுங்கன் என்பவனுக்கு அரசு பதவியாசை ஏற்படுத்தி,காமினி என்ற பிராமணப் பெண்ணுடன் பழகவிட்டு வந்தனர்! மறுபுறம் உள்நாட்டு கலவரங்களை அந்நாட்டில் மறைமுகமாக ஏற்படுத்தி வந்தனர்!

       பிரஹத்தி ரத மவுரியர், தனது படைவீரர்கள் அணிவகுப்பைப் பார்வையிட்டு வரும்போது,துரோகத் தளபதி புஷ்ய மித்திர சுங்கன் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தான்!
{இலங்கையில்  இந்தியப் பிரதமர்,ராஜீவ் காந்திக்கு இத்தகைய நிலை ஏற்பட இருந்தது!} 
       பிராமண குருக்கள் அகம் மகிழ்ந்து அவனையே மன்னனாக்கி,  தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர்!
{உத்தம சோழனை  சோழ அரியணையில் அமர வைத்ததற்கு காரணமும் இதுவேதான்}

    புஷ்ய மித்திர சுங்கன்,அரசனாதும் பிராமணர்களைத் திருப்தி  படுத்த, சமணர்கள்,பவுத்தர்களைக் கைது செய்து, உயிரோடு அஸ்வமேக யாகத்தீயில் இட்டுக் கொன்று, அழித்தான்!

        கொடிய அரசனான இவனது சுங்க வம்சத்தின் பத்தாவது அரசன் தேவபூதி என்பவன்! அவன் சூத்திரப் பெண்ணுக்குப் பிறந்தவன் என்பதால், அரசனின் ராஜகுருவாக இருந்த பதஞ்சலி என்ற பிராமணரும்,மந்திரியாக இருந்த வாசுதேவன் என்ற பிராமணரும் அவன்மீது, வெறுப்பு கொண்டனர்! அவர்களை திருப்பதிப் படுத்த அவன் பங்குக்கு ஏராளமான  பவுத்த  துறவிகளைச்   சிறையிட்டு,சித்திரவதை செய்தான்! தனது படைவீரர்களை அனுப்பி, பவுத்த சங்கங்களையும்,பவுத்த தத்துவ நூல்களையும் தீயிட்டு அழித்தான்! 

      பிராமணர்களுக்கு ஏராளமான தானங்களை கொடுத்து தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள முயன்றான்! ஆயினும் அவன்மீது வெறுப்புற்ற பிராமண அமைச்சர்  வாசுதேவன், தனது மகளை அவனது அந்தப்புரத்துக்கு அனுப்பி,விஷம் கொடுத்ததும் கத்தியால் குதியும்கொளைசெய்ய வைத்து, பிறகு  அந்த நாட்டுக்கு, "தன்னையேஅரசன்" என்று  பிரகடனப் படுத்திக் கொண்டான்!

       பிராமணர்கள்,தங்களது மதமாக சொல்லும்  இந்துமதத்தின் மேன்மைக்காக, தங்களது மதத்தில் உள்ளதாக  கூறும்  பிராமணர் அல்லாதவர்களின் வாழ்க்கையைப்பற்றியோ,அவர்களது உயர்வுகள் குறித்தோ,அவர்களை நல்வழிப் படுத்துவது குறித்தோ எப்போதும் அக்கறையோ,கவலையோ கொண்டவர்கள் இல்லை!

       மாறாக, பிற மததினைப் போலவே, தங்களை ஏற்றுக் கொண்டு ஆதரித்து வந்தவர்களையும் கூட, அவர்களது உயர்வுக்காக, சுக, போகத்துக்காகவே,  மக்களையும், மதத்தையும்  "கருவியாக" எப்போதும் பயன்படுத்தி வந்துள்ளனர்! பயன்படுத்தி வருகின்றனர்!

      பிராமணர்களுக்கு ஆதரவாக ஆட்சி நடத்தி வந்த சாதவாகனர் வழிவந்த வாகாடர்களும்,   சாதவாகனர்களைப் போலவே பிராமணர்களுக்கு ஆதரவு அளித்து ஆட்சி செய்து வந்தார்கள்! இவர்கள் பிராமணர்களுக்கு பிரமதேயம் வழங்கும்போது நிபந்தனைகள் விதித்து, பிரம்மதேய நிலங்களை அளித்துள்ளதை வாகாட மன்னன் வெளியிட்ட செப்பேடு கூறுகிறது! 

      அதில் பிராமணர்களுக்கு வயதுள்ள நிபந்தனைகள் இதுதான் :
    பிராமணர்கள்,"அரசனுக்கும் நாட்டிற்க்கும் எதிராய் சதிசெய்தல், திருடுதல், பிறன்மனை விழைதல்  ,கொலைசெய்தல்,அரசனுக்கு நஞ்சுட்டுதல் போன்ற செயல்களிலும்,போரிடுதல், பிற கிராமங்களுக்கு துன்பம் விளைவித்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடக் கூடாது!"{ஆதாரம் டாக்டர்.ராம் கரண் சர்மா எழுதிய இந்திய நிலமானிய முறை நூல்,பக்கம்-10 )

         பிராமணர்களுக்கு ஆதரவாக ஆட்சி செய்துவந்த அரசர்களுக்கே, பிராமணர்கள் மீது எவ்வளவு நம்பிக்கை பாருங்கள்! பிராமணர்கள் மீது அரசருக்கு இருந்து வந்த அவநம்பிக்கைகளை..  மேற்கூறிய செப்பெடுமூலம் நாம் தெரிந்து கொள்ளவதுடன், பிராமணர்கள்மீது அரசர்களுக்கு இருந்த அச்சமும் தெரிகிறதல்லவா? தவிர, பிராமணர்களுக்கு ஆதரவான அரசர்களே, இதுபோன்ற நிபந்தனைகள் விதித்து உள்ளதைப் பார்க்கும்போது, மேற்கண்ட செயல்களை பிராமணர்கள்,அரசர்களும் அச்சப்படும் வகையில்  செய்து வந்துள்ளார்கள் என்பதும் விளங்குகிறது அல்லவா?
  எனவே தான்,  எமனைப் போல உயிரை வதைப்பவர்கள் என்று  பொருள்தரும், "பிராஹ்மனா  யமகாதக "என்ற பழமொழி விளங்கிவந்தது!  

      பிராமணர்களுக்கு ஆதரவாக  ஆட்சி செய்யாமல்  வேறு மதத்தை சேர்ந்த, பிராமணர்களுக்கு எதிரான ஆட்சியை நடத்தி வந்த, அரசர்களுக்கு என்னென்ன, கொடுமைகள், தீமைகளை செய்து இருப்பார்கள் ?! இந்த பிராமணர்கள் என்ற பாசிசவாதிகள்  என்பதை எண்ணிப் பார்க்கவே, இதயம் கனக்கிறது!

      பாசிச பிராமணர்களால்  அரசனாக்கப்பட்ட,  "உத்தமசோழன் ஆட்சியைப் பற்றி" வரலாறு சொல்வதையும், அது சொல்லாமல் விடுவதையும் அடுத்து பார்ப்போம்!


 

    

Monday, 20 February 2012

ஹர்ஷா வர்த்தனரின் பவுத்த நெறி ஆட்சியும்,படுகொலையும்!


      பிராமணர்களின் மனுதருமம்,  சத்திரியர்களாக பிறந்தவர்கள்தான்  ஆட்சி செய்ய வேண்டும் என்று கூறுவதை,பிராமணர்களுக்கு ஆதரவாக உள்ளவர்கள்கூட  அரசனாக  வேண்டும் என்றால்  சத்திரியராகும் சாதி மாற்ற சடங்கினை பிராமணர்களுக்கு அவர்கள் விரும்பும் பொன்,பொருள் முதலியவற்றைக் கொடுத்து, அவர்கள் அனுமதியுடன் யாகம் செய்து பிறகுதான் அரசனாக முடியும்,நாட்டை அவர்கள் வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்ய முடியும்  என்பதை முந்தைய எனது பதிவுகளில் இருந்து விளங்கிக் கொண்டு இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்!

     அப்படி செய்யாமல், பிராமணர்களின் வழிகாட்டுதல்படி நடந்து கொள்ளாமல், வேறு சாதியைச் சேர்ந்தவர்களை,வேறு மதநெறிப்படி ஆட்சி செய்ய முயன்றவர்களை,"  பிராமணீயம்" என்ற பாசிச, ஆதிக்க வெறிகொண்ட  வேத பிராமணர்கள் ஆட்சியில் இருந்து அகற்ற,  பல்வேறு தந்திரங்கள், சூழ்ச்சிகளைச் செய்தும்,சமயங்களில் அரசர்களை சதி செய்து கொன்றும் வந்துள்ளதற்கு முக்கிய உதாரணமாக   ஹர்ஷ வர்தனருக்கு நேர்ந்த கதியில் இருந்து அறிந்து கொள்ளமுடியும்!

     மனுதரும விதிப்படி, சத்திரிய சாதியில் பிறவாமல்,{ வியாபாரம் செய்யும்} வைசிய சாதியில் பிறந்தவர், பிரபாகர வர்த்தனன்!  மிகப் பெரிய வீரரான அவர், போர்புரிந்து,மகத நாட்டைக் கைப்பற்றி, அரசனாகி ஆட்சி செய்து வந்தார்! அவருக்கு ராஜியவர்த்தனன், ஹர்ஷ வர்த்தனன், ராஜீயஸ்திரி என்று மூன்று குழந்தைகள்! பிரபாகர வர்த்தனன், பவுத்த நெறிப்படி ஆட்சி செய்து வந்ததை பொறுக்காத,  பிராமணர்கள்,தங்களது  ஆதி பூர்விகமான ஈரானிய பகுதியில் இருந்து இந்தியாவுக்கு படையெடுத்து வந்த, ஹூனர்களை தூண்டிவிட்டு,  மகத நாட்டின்மீது படையெடுக்க செய்தனர்! 

        ஹூனர்களை எதிர்த்து, பிரபாகர வர்த்தனின் மகனும் ஹர்ஷ வர்த்தனின் சகோதரனுமான, ராஜீய வர்த்தனன் வீரப் போர் புரிந்து,ஹூனர்களை விரட்டி அடித்தான்! மாவீரனான ராஜீய வர்த்தனன்  தனது தந்தைக்குப் பிறகு,மகத நாட்டின் மன்னனாக ஆட்சி செய்து வரும் நிலையில், தனது சகோதரி ராஜஸ்ரீயின் கணவனான, கிருஹ   வர்மனைக் கொலைசெய்த,மாளவ நாட்டின் மன்னன்மீது படையெடுத்துச் சென்று, அவனை வென்றுவிட்டு, திரும்பும்போது, மேற்கு வங்க,பார்ப்பன மன்னனாகிய, "சசாங்கன்"  என்ற சதிகாரனால் சதிசெயயப்பட்டு, கொலையானான்! 

       இந்த கொடிய அரசன், சசாங்கனால் ஆயிரக்கணக்கான  புத்த பிட்சுகள் கொலை செய்யப்பட்டும், யாகங்களுக்கு நரபலியாக்கப் பட்டும் அழித்து ஒழிக்கப் பட்டனர்!  தவிர, "புத்தர் தவமிருந்த போதிமரத்தை வேரோடு வெட்டி வீழ்த்தியவன் இவனே" என்றும் சரித்திரம்   கூறுகிறது!

      தனது அண்ணன்,ராஜீய வர்த்தனன், சசாங்கனால் கொலை செய்யப்பட்ட செய்தியறிந்த ஹர்ஷ வர்த்தனன்,  பவுத்த நெறிப்படி மகத நாட்டின் அரசனாகி, தனது அண்ணனைக் கொலை செய்த, சசாங்கன் மீது படையெடுத்துச் சென்றான்! போரில் புறமுதுகு காட்டி, அவனை ஓடச் செய்து, வங்காளம் முழுவதையும் கைப்பற்றி, தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான்! அதுமட்டுமின்றி, பிராமணர்களின் ஆதிக்கத்தை ஏற்று அரசாண்ட... கன்னோசி,மாளவம்,நேபாளம் ஆகிய நாடுகளையும் வென்று, தனது ராஜ்ஜியத்தை பேரரசாக விரிவு செய்து, பவுத்த நெறிப்படி சமதர்மம ஆட்சி செய்து வந்தான்! 

     ஹர்ஷ வர்த்தனன்,எல்லோருக்கும் சம உரிமை அளித்து, கல்வி கறபித்து வர ஏற்பாடுகள் செய்தான்! இவனது ஆட்சியில்தான், இப்போதைய,  பீகார் மாநிலத்தின்  " ராஜகிரி"  என்ற இடத்தில் " நாளந்தா பல்கலைக் கழகம்"  இயங்கி வந்தது!  இந்தியா மட்டுமின்றி, வெளிநாட்டினரும்  வந்து  தங்கியிருந்து ,பயின்றனர்! ஆசியா கண்டம் முழுவதும் நாளந்தாப் பல்கலை கழகத்தின் புகழ் பரவி இருந்தது! இவரது ஆட்சி காலத்தில் இந்தியா வந்த சீன பயணி, யுவான் சுவாங் என்பவர் வந்து,இந்துஆ முழுவதும் சுற்றித் திரிந்து  பயணக் குறிப்புகளாக இந்திய வரலாற்றில் பலவற்றை பதிவு செய்தார்! காஞ்சியில்  பிறந்த பொதி தர்மரும், தின்னாகரும்,தருமபாலரும் இந்த பல்கலைக் கழகத்தில், பேராசிரியர்களாக பணியாற்றி வந்தனர்!

     அனைவருக்கும் ஹர்ஷ வர்த்தனர் கல்விபெறச் செய்ததை, சூத்திரர்கள்  படிப்பதை கேட்டால் காதில் ஈயத்தைக் காச்சிஊற்றவும், படித்தால் நாக்கை அறுக்கவும் சொல்லும்  மனுதரும வாதிகள் ஆன,   பிராமணீயம் எப்படி ஏற்றுகொள்ள முடியும்? அதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கும்? தவிர, தங்களது  ஆலோசனை, உதவி எதுவும் வேண்டாமல், தன்னிச்சையாக பவுத்த நெறிப்படி அரசாலும்  சத்திரியனும் இல்லாத வைசிய சாதியைச் சேர்ந்த, ஹர்ஷ வர்தனனை, விட்டு வைக்க முடியுமா? கொன்றுவிட முடிவு செய்தார்கள்!  
  
    ஹர்ஷ   வர்த்தனர், உலகமெங்கும்  உள்ள அறிஞர்களை, பேராசிரியர்களை  தனது நாட்டிற்கு  ஐந்து  ஆண்டிற்கு  ஒருமுறை அழைத்து,  மாபெரும் மாநாட்டைக் கூட்டி, உலகிலுள்ள  அனைத்து மதத்தின் தத்துவங்களை  பற்றி   விவாதிக்க,அவைகளில் உள்ள நன்மைகள்,தீமைகள் குறித்து யாவரும் அறிந்து கொள்ள   ஏற்பாடு  செய்து வந்தார்!  {விவேகானந்தர்  இதுபோன்ற  நிகழ்ச்சியில்,  "சிகாகோவில்" கலந்து கொண்டுதான் இந்துமதத்தின் பெருமைகள் குறித்து  பேசினார்!} 

       அப்படியான  மாநாடு,ஹர்ஷ வர்தனரால், கன்னோசியில் கூட்டப் பட்டது! அந்த மாநாட்டுக்கு வரும்போது ஹர்ஷவர்த்தனரைக் கொலை செய்துவிட வேண்டும்  என்று பிராமணர்கள் சதித் திட்டம் தீட்டிக் கொண்டு, மக்களோடு மக்களாக மாநாட்டிற்கு வந்தனர்!  மாநாட்டின் மிகப் பெரிய, பவுத்த கோபுரத்துடன் அமைக்கப் பட்டு இருந்த பந்தலுக்கு தீவைத்தனர்!  பதறி,துடித்து தீயை அணைக்க  ஹர்ஷ வர்த்தனர்  செய்த ஏற்பாடுகள்   வீணாகி,பந்தல் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது! 

         மறுநாள், அங்குவந்து சேதத்தை,   ஒரு பழைய பவுத்த 
 ஸ்துபியின் மீது  ஏறி, பார்வையிட்டு விட்டு,கீழே இறங்கிய  ஹர்ஷ வர்தனரை,  "பைராஹி" என்ற பிராமணன்,மறைவிலிருந்து   திடீர் என்று  கத்தியுடன் பாய்ந்து, கொலை செய்ய முயன்றான்!  மாவீரரான  ஹர்ஷ வர்த்தனர், அந்த கொலைகாரனிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டதுடன், அவனைப் பிடித்து தனது பாதுகாவலர்களிடமும்  ஒப்படைத்தார்!அவனிடம் நடத்திய விசாரணையில்,  அவனோடு,சேர்ந்து ஐநூறு பிராமணர்களும்  ஹர்ஷ   வர்த்தனரைக் கொல்ல வந்தது,தெரிந்தது!  

     ஹர்ஷ வர்த்தனரின் படைவீரர்கள்  ஐநூறு பிராமணர்களையும் கண்டுபிடித்து கைது செய்து, ஹர்ஷ வர்தனரிடம் கொண்டுபோய் நிறுத்தினர்!  அவர்களை  கடுமையாக விசாரணை செய்தபோது,மாநாட்டு பந்தலின் மாபெரும் கோபுரத்தின் மீது, எறியும் தீப்பந்தங்களை  அம்புகள் மூலம் பல இடங்களில் தாங்கள் மறைந்து இருந்து எரித்ததையும், தங்களது குற்றங்களையும் ஒப்புக்கொண்டு  தங்களை மன்னிக்கும்படி கோரினர்! 

       கொடிய குற்றம் செய்த சிலரை கடுமையான  தண்டனை தந்து,பிராமணர்கள் பலரையும் ஹர்ஷ வர்த்தனர்  மன்னித்து, தனது நாட்டை விட்டு வெளியேறி செல்லுமாறு  உத்தரவிட்டார்!  ஹர்ஷ வர்தனரால்  அப்போது மன்னிக்கப்பட்ட   சில பிராமணர்களால், ஹர்ஷ வர்த்தனர் பிறகு வஞ்சகமாக,  கொலை செய்யப்பட்டார்!   இதனை நான்..  பிராமணர்கள் புனைத்து கூறும் புராண கற்பனையாகவோ, ஆதாரம் இல்லாமலோ  கூறவில்லை!   "ஹிந்து ஏகாதிபத்தியத்தின் பயங்கரம்"- The Menace of Hindu Imperialisam} என்ற நூல் கூறுகிறது! "வேதமும் விஞ்ஞானமும் " என்ற நூலில் அதன் ஆசிரியர் எஸ். டி. விவேகி என்பவரும் இந்நிகழ்ச்சி பற்றி  விவரித்துள்ளார்!

        இப்போது மேலும் ஒரு உண்மையை சொல்லுகிறேன்! ஹர்ஷ வர்தனரால்,  நாடு கடத்தப்பட்டு, விந்திய மலையைக் கடந்து தென்னிந்தியாவிற்குள்  வந்து பரவிய...  இந்த  பிராமணர்களை,  பாசிச வாதிகளை,  தமிழகத்திற்கு    அழைத்து வந்து, தஞ்சை,சிதம்பரம்,ஸ்ரீரங்கம், எண்ணாயிரம், பிரம்மபுரம், என்று குடியாற்றியவர்,வாழ்வளித்தவர்  யார் தெரியுமா? 

     "அரிந்தமன்" என்ற "அரிஞ்சய சோழ "அரசன்!   பிராமணர்கள் படுகொலை செய்த, ஆதித்ய கரிகால சோழனின் பாட்டனார்தான்  !  பாட்டனாரால் அழைத்துவரப் பெற்ற...    பிராமணர்களின்  பாசிச,ஆதிக்க, வெறியால், அவனது பேரன் ஆதித்ய கரிகாலன் கொலை செய்யப் பட்டதுடன்,  அவனது பேரனும், பேத்தியும் ஆன குந்தவையும், ராஜராஜனும்  உயிருக்கு பயந்து,  எங்கெல்லாமோ   ஓடி, தப்பித்து மறைந்து, ,தலைமறைவு வாழ்கையை மேற்கொள்ளும்  அவலமும், பெரும் சோகமும் நேர்ந்திருக்கிறது! 

        பிராமணர்களின் பாசிச வெறிக்கு,  அதிகார ஆசைக்கு,தங்களது இன நலனுக்கு எதிராகவும்,  தடையாகவும்  வருகின்ற  எதற்கும்,  எந்தவித  மனிதப் பண்புகளுக்கும்  வேலை இல்லை! "உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யக் கூடாது", "செய்நன்றி மறத்தல் பாவம்," என்று கூறும் இவர்களின் உபதேசங்கள்,   இவர்களால் பின்பற்றப் படுவதற்கு சொல்லப் பட்டவைகள் இல்லை!, பிராமணர்களுக்கு, பிற சாதியினர் யாரும் அதுபோன்ற தீங்குகளை செய்துவிடக் கூடாது என்பதற்காகத் தான்! 

  பிராமணர்கள்  பஞ்சமா பாதகங்களுக்கு அஞ்சாதவர்கள், செய்ய தயங்காதவர்கள்  என்பதற்கு இன்னும் பல்வேறு சான்றுகள் உள்ளன! அவற்றில் சிலவற்றை அடுத்து பார்ப்போம்!
Sunday, 19 February 2012

வந்தியத் தேவனுக்கு இறைவன் அருள் பாலித்த இடம்!

       சோழ நாட்டின் முக்கிய பகுதி எனபது  தஞ்சையும் திருச்சியும் ஆகும்! தஞ்சை பிற்கால சோழர்களின் தலைநகரமாக இருந்து வந்ததை அறிந்து இருப்பீர்கள் ! தஞ்சையைப் போலவே  திரட்சி உறையூரும்  ஒருகாலத்தில் சோழர்களின் தலைநகரமாக விளங்கி வந்தது. உறையூர் சோழர்கள்  என்று வரலாறு சில சோழ மன்னர்களைக் குறிப்பிடுகிறது!


        இப்படி சோழர்களுக்கு   முக்கியத்துவம் வாய்ந்த இரு நகரங்களான  திருச்சியில்  இருந்து  தஞ்சை செல்லும்  வழியில் துவாக்குடி   என்ற ஊருக்கு வடக்கே சுமார் மூன்று கி.மி.தொலைவில் உள்ள கோயிலின் பெயர், "திருநெடுங்களநாதர் கோயில்" என்பதாகும்.

       திருநெடுங்களம் என்ற இந்த ஊரில் உள்ள இக்கோயிலின் தல வரலாறு,   "அன்னை பார்வதி தேவி இங்கேயே தவமிருந்து இறைவனின் கைத்தலம் பற்றியதாக புராண வரலாறு கூறுகிறது. அகத்தியர் இத்தலத்தில் தவமிருந்து இறைவன் அருள் பெற்றதாகவும் வந்திய சோழன் என்ற மன்னனுக்கு இறைவன் அருள் பாலிததாகவும்   புராண வரலாறுகள் கூறுகின்றன" என்கிறது! 
(ஆதாரம்:தமிழ்நாட்டு சிவாலயங்கள் ,தொகுதி-2 ,பக்கம் 390, ஆசிரியர் மா.சந்திர மூர்த்தி.மணிவாசகர் பதிப்பக வெளியீடு-2004 }

       பிராமணீயத்தின் தந்திர யுக்திகளில் மற்றொன்று என்னவென்றால், உண்மையான வரலாறை திரிக்க  அதனை புராணம் என்று சொல்வதும், உண்மையற்ற, கற்பனையான புராண கதைகளை  உண்மையாக நடந்த வரலாறு போல காட்டுவதும் ஆகும்!

        ஒரு கோவிலை, அல்லது வேறு ஒரு கட்டிடத்தை எடுத்துகொண்டால், அந்த கோயில் எப்போது கட்டப்பட்டது ?, யாரால் கட்டப்பட்டது? எந்த நோக்கத்துக்காக கட்டப்பட்டது?, பயன்படுத்தப் பட்டது , போன்ற அடிப்படையான தகவல்களும் , எவ்வளவு மதிப்பில் ,எவ்வளவு கால இடைவெளியில் அது கட்டி முடிக்கப்பட்டது , எவ்வளவு பேர்கள் பணியாற்றினார்? கட்டுமானத்தில் பயன்படுத்தப் பட்ட  பொருட்கள் என்னென்ன? கோயிலாக இருந்தால் அங்கு பிரதிஸ்டை செய்யப்பட்ட கடவுள் யார்? கடவுளுக்கு அந்த பெயரை வைக்க காரணம் என்ன? போன்ற கூடுதல் தகவல்களையும்  கோயில் தல வரலாறு சொல்லவேண்டும்! அப்படி சொன்னால் தான்  அது உண்மையான வரலாறு என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உறுதிப்படும்!

     ஆனால், பிராமணீயத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்த கோயில்களில் சொல்லப்படும்  தலவரலாறு எனபது,  மேலே சொன்ன  எந்தவித  விவரங்களையும் நமக்கு சொல்லுவதில்லை! காரணம் என்னவன்றால்,நமக்கு  சரியான விவரங்களை சொன்னால், அந்த கோயில்கள் கட்டப்பட்டதன் நோக்கமும்  அங்கு நடைபெற்று வந்த அரசு அலுவல் பணிகளும், இதர காரியங்களும்  பிராமணர்கள் அல்லாதவர்களுக்கு தெரிந்துவிடும்  வாய்ப்பு இருப்பதாலும்  அப்படி நமக்கு தெரிய வந்துவிடுமாயின்   அது  தங்களது ஆதிக்கத்துக்குஆபத்தை எங்கே ஏற்படுத்திவிடுமோ? என்றஎச்சரிக்கை உணர்வும் காரணமாகும்!

       எனவே, ஒரு கோயிலின் உண்மையான வரலாற்றை பிறர் அறிந்து கொள்ளாமல் மறைக்க வேண்டுமானால்  உண்மை வரலாற்றோடு சேர்த்து கற்பனையான புராண வரலாறுகளையும் ஒன்றுக்கு இரண்டாக  சொல்லி வைப்பது!  மக்கள் எதனை  நம்புகிறார்களோ,  அதுவே உண்மை என்று நினைத்துக் கொள்ளட்டும்  என்பதும், கூடவே  உண்மையான வரலாற்றை  கற்பனையா? நிஜமா? என்று குழம்பிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகதான்!

     பிராமணீயம் இத்தகைய தந்திர, உபாயங்களை, சூழ்ச்சியை  தமிழகத்தில் உள்ள,முக்கியமான, பெரும்பாலான கோயில்களில் செய்துள்ளதை...  ஒவ்வொரு கோயிலின்,  தல வரலாறாக  இப்போது அது சொல்லிவருவதைப் பார்த்து, நம்மால் எளிதில் அறிந்து கொள்ள முடியும்!

      எனக்கு தெரிந்து கோயில் தலவரலாறு என்று  புராணக் கற்பனைக் கதைகளை சொல்லாத, இதுவரை சொல்ல முடியாத கோயில் ஒன்று இருக்கிறதென்றால் , அது தஞ்சையில் ராஜராஜ சோழனால்   கட்டப்பட்டு ,"ராஜராஜெச்வரம் என்று பெயரிடப்பட்டு, இப்போது "பெரிய உடையார் கோயில்" என்ற "பிரகதீஸ்வரர் கோயில்"  என்றும் அழைக்கப்பட்டு வரும் கோயில்தான்!

     இக்கோயிலில் பல  கல்வெட்டுகள், பல்வேறு வரலாற்று சான்றுகள், உள்ளதால் அவைகளை அழிப்பதும், திரிப்பதும்  கடினம் என்பதால், புதிதாக," புராண வரலாறு" என்று  கற்பனைக் கதைகளை இன்றுவரை  செய்யாமல்  இருந்து வரும் சூழ்நிலை நிலவி வருகிறது!

     ஆயினும் தஞ்சைக் கோயிலை, பிராமணர்கள்   கைப்பற்றி, தங்களது ஆதிக்கத்திற்கு கொண்டுவரும் முன்பு இருந்த நிலையையும், கொண்டுவந்த பின்பு  இப்போது உள்ள நிலையையும்  குறித்து தனியாக  பதிவு  செய்யவேண்டியுள்ளது! அப்போது அதுகுறித்து பார்ப்போம்!

      வந்தியதேவனுக்கு இறைவன் அருள் பாலித்த விசயத்தை பார்க்கலாம்!

    இந்துமதத்தில் சைவ பிரிவினராக இருந்து இறந்தவர்களை, சிவலோகப் பதவி அடைந்தார், இறைவனடி சேர்ந்தார் என்றும்  வைணவப் பிரிவினரர் இறந்துவிட்டால்,வைகுண்டப் பதவி அடைந்தார் என்றும் சொல்வது வழக்கமாக உள்ளது!  யிரை நம்பிக்கை இல்லாதவர்கள் இறந்தால்கூட    இயற்கை எய்தினார்! என்று சொல்லுவது வழக்கத்தில் இருந்து வருகிறது.!

   பிராமணர்களின் பாசிச ஆதிக்கத்துக்கு எதிராக செயபடுபவர்கள், தடையாக இருப்பவர்கள், பிராமணர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஆட்சி செய்கிறவர்கள்  என்று  யாராக இருந்தாலும் அவர்களை சூழ்ச்சி செய்து  கொன்றுவருவதை  பிராமணீயம் என்ற பாசிசம் தொடர்ந்து செய்து வருவதை வரலாறு குறித்து வைத்துள்ளது! அப்படி கொலை செய்தவர்களை கூட  இறைவனடி சேர்ந்தார், இறைவனோடு கலந்தார், இறைவன் அவருக்கு அருள் பாலித்தார் என்று கூறி வருகிறது!

        இவ்வாறு கூறும்போது,இறந்தவரை நாங்கள் எங்களது ஆதிக்கம்,மற்றும் இன மேன்மைக்காக கொள்ளவில்லை!  என்று தங்களை  கொலை பழியில் இருந்து விடுவித்து கொள்வதுடன், மேற்கண்ட  செயலுக்கு காரணம் நாங்கள் இல்லை,   இறைவனேதான்! என்று கூறி, தங்களது செயலுக்கு  இறவனை  காரணமாக்கி, திசை திருப்பி விடுவதையும்  தந்திரமாக செய்து வருகிறது! 

    இதற்கு, பல்வேறு உதாரணங்கள் உள்ளன! நந்தனாரை நெருப்பிலிட்டு கொன்றுவிட்டு, அறுபது மூன்று நாயன்மார்களில்  ஒருவராக  காட்டுவதை போல, சுந்தர சோழனை  சித்திரவதை செய்து  கொன்றுவிட்டு, பொன்மாளிகை துஞ்சிய தேவராக  சொல்லுவதைப் போல,பவுத்த நெறிப்படி  அரசாண்ட ஹர்ஷ  வர்தனரைக் கொன்றதைப் போல,    குந்தவையின் கணவனான,வந்திய தேவனை, "திருநெடுங்களம்"  என்ற  இடத்தில  கொன்றுவிட்டு , அவருக்கு  அந்த ஊர் இறைவன்  அருள் பாலித்ததாக  புராணவரலாறு  எழுதி வைத்துள்ளனர்!  
   
       புராணத்தில்  இறைவன் என்று சொன்னால், அது பிராமணீயத்தில்,  அதாவது பாசிச கண்ணோட்டத்தில், "பிராமணர்கள்"  என்றுதான் பொருளாகும்! வேறு பொருளில்லை! 

        மேலே நான் சொன்னதைப் பார்த்து,நான் சொல்லியுள்ளதை  இட்டுக் கட்டியோ, கற்பனையாகவோ கூறியதாக  நினைத்து,சிலர் வருந்தக் கூடும், ஏன்? கோபப்படக் கூடும். அப்படி எண்ணுபவர்கள்,  கீழே உள்ளதைப் படித்துவிட்டு,  வருந்துவதே  நியாயமாகும்!

   வசிஷ்டர்,ராமனுக்கு கூறும் அறிவுரையைப் பாருங்கள்:

      "திருமால்,சிவன்,நான்முகன்,ஐம்பூதம்,வாய்மை ஆகியவர்களைக் காட்டிலும்,பிராமணர்கள் பெருமையுடையவர்கள்! ஆதலால்,அவர்களை வழிபடுவாயாக!"  என்று ராமனுக்கு வசிஷ்டர் கூறுகிறார்!  இவ்வாறு ஏன்? வசிஷ்டர் கூறுகிறார் என்றால்'  "வாய்மை,பஞ்ச  பூதங்கள் தெய்வத்துக்கு கட்டுபட்டவைகள்!தெய்வங்கள் வேத மந்திரத்துக்கு கட்டுபட்டவைகள்! வேத மந்திரங்கள்  பிராமணனுக்கு கட்டுப் பட்டவை! ஆகவே பிராமணனே தெய்வத்தைக் காட்டிலும் உயர்ந்தவன் ! " என்று  மனுதர்ம சாஸ்திரம் சொல்லுவதை உணர்ந்து, பிராமணர்களை வழிபடுமாறு வசிஷ்டர் கூறியுள்ளார்!

     "  தெய்வம் மனுஷ ரூபனாம்"என்று பிராமணர்கள் கூறுவது, மனிதர்களாகிய எங்கள் ரூபத்தில்தான், கடவுளை நீங்கள் தரிசிக்க முடியும், என்ற ஆதிக்க, மேலாண்மை உணர்வுதான்!

    பிராமணர்கள் கொலை போன்ற கொடும்  செயலைச் செய்வார்களா? 
வீண் பழி சுமத்துகிறீர்கள் என்று கருதுவதாக தெரிகிறது, பாசிசம் கொலை மட்டுமுள்ள, களவு, சூது, விபச்சாரம்,பிறன் மனை விளைதல் போன்ற பஞ்சமா பாதகங்களையும் செய்யும்! செய்து வந்தது! செய்து வருகிறது! இனியும் செய்துவரும்! என்பதை புரிந்து கொள்ளவேண்டும்!  


       "அரசனுடைய ஒற்றர்கள் எதிரியுடன் பழகி,யாகம் செய்யும்படி அவனைத் தூண்ட வேண்டும்! யாகம் செய்வதில் அவனுக்கு நம்பிக்கை பிறக்கச் செய்யவேண்டும்!அவன் யாகம் செய்துகொண்டு இருக்கையில் அவனைக் கொன்றுவிட வேண்டும்" - அர்த்த சாஸ்திரம் ,அத்தியாயம் 13 : சுலோகம் 2 .

        அர்த்த சாஸ்திரம் பிராமணர்கள் தங்கள் இன மேன்மைக்காக என்னென்ன செய்யவேண்டும், எவைஎவைகளைச் செய்யக்கூடாது என்று 
கூறும் நூல் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்!

     வந்தியத் தேவன், தஞ்சைக்கு போகும்போதோ,தஞ்சையில் இருந்து தப்பி திருச்சிக்கு வரும் வழியிலோ, ஆதித்ய கரிகாலனது படுகொலைக்கு பின் ,உத்தம சோழன் ஆதரவு படைகளோடு  நடந்த போரில், அல்லது தாக்குதலில்    திரு நெடுங்களத்தில் கொல்லப்பட்டு,  இறந்துள்ளான்! எனபது விளங்குகிறது!  

       நெடுங்களத்தில்தான் இறந்துள்ளான் என்பதை  அந்த கோயிலில் உள்ள பிற சான்றுகளும்,கல்வெட்டுகளும் உறுதிப் படுத்துகின்றன.!

       பிராமணர்களால் கொல்லப்பட்ட  ஹர்ஷ வர்தனரைப் பற்றியும், பிராமணர்கள் மீது அரசர்களுக்கு இருந்த  அச்ச உணர்வையும் பார்த்துவிட்டு, பிறகு குந்தவை,ராஜராஜனின் நிலை என்ன என்பதை பற்றி பார்ப்போம்!Friday, 17 February 2012

வந்தியத் தேவனின் மறைக்கப் பட்ட வரலாறு!

        அதிகார ஆசை எனபது  அதீத வெறியாகும்போது, நியாயங்கள், தர்மங்கள், ஒழுங்குமுறைகள்,கட்டுப்பாடு போன்ற மனித தர்மங்களும், நல்ல குணங்களும் மிதிக்கப்படுவது,மீறப்படுவது எனபது எப்போதும் நடந்துவரும் செயலாக இருக்கிறது! பாசிசம் என்ற சர்வாதிகாரத்தை விரும்பும் அரக்கமனம் கொண்ட  பார்ப்பனீயம், இத்தகைய செயல்களை இயல்பாக தொடர்ந்து செய்து வந்துள்ளதை வரலாறு நெடுகிலும் காணக் கிடைகிறது!

      எனது முந்தையப் பதிவுகளில், ஆதித்ய கரிகாலன் படுகொலை பற்றியும்,அவனைப் படுகொலை செய்தவர்கள்,சோழ அரசில் மிக உயர்ந்த பதவிகளை வகித்த, பார்ப்பன அதிகாரிகள். அவர்கள்  தங்களது இன நலனுக்காக,ஆட்சி அதிகாரத்துக்காக   எத்தகைய கொடும் செயலையும் செய்பவர்கள்!, செய்யத் தயங்காதவர்கள் !!

      தங்கள் மேன்மைக்கு,ஆட்சி அதிகாரத்துக்கு தடையாக இருப்பதாக கருதியே,  ஆதித்ய கரிகாலனைக் கொன்றதோடு அல்லாமல்  அவனது பெற்றோர்களான  சுந்தரசோழன், வானவன் மாதேவி ஆகியோர் சிறைபட்டு,   சித்திரவதை பட்டு இறக்க நேரிட்டது! உத்தம சோழன் அரசனாக நேரிட்டது!  ஆதித்ய கரிகால சோழன்,படுகொலை செய்தவர்கள், அவனது பெற்றோர்களை கொடுமை செய்தவர்கள்,  குந்தவை நாட்சியாரையும், அவன் தம்பி ராஜராஜனையும் கொல்லாமல் விட்டு இருப்பார்களா? அவர்களையும் கொலை செய்ய முயற்சித்தார்களா? என்று கேட்டு, அவர்கள் தப்பித்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து உள்ளனர் என்பதையும்  அவர்கள் தப்பிப் பிழைத்து தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்கு ,சோழ நாட்டு குடிமக்கள், ஆதரவு படையினர், மாற்று சமூகத்தினர்  ஆகியோர்கள்  பல்வேறு தருணங்களில் பலவிதமான உதவிகளைச் செய்து, உத்தம சோழன்  ஆட்சியில் காப்பாற்றி வந்துள்ளனர்!

      ராஜராஜன் தப்பிப் போக,அல்லது தப்பி வாழ்  உத்தம சோழனின் தாயாரும் கண்டராதித்தரின்  மனைவியுமான  செம்பியன் மாதேவியார்  காரணமாக இருந்துள்ளார் என்றும் அதனாலேயே தனது ஆட்சிக் காலத்தில்  ராஜராஜன்  உத்தமனின் தாயாரை  விரோதமாக எண்ணாமல், அவர்மீது அன்பும், மதிப்பும் வைத்து  பாதுகாத்து வந்துள்ளான் என்றும் பலரும் புரிந்துகொள்ளும் வகையில் எனது முந்தைய பதிவுகள் மூலம் விளக்கி உள்ளேன்!

      குந்தவைக்குத்தான் திருமணம் ஆனதாக சொல்லுகிறார்களே!, அவள் வாழ்க்கைப்பட்ட, வேங்கி  நாட்டில்  அவளது கணவனான வல்லவரையன் வந்தியத் தேவன் பாதுகாப்பில்  அவளும் அவளது தம்பியான ராஜராஜனும் பாதுகாப்பாக வசித்து இருக்கலாம் ! என்று நினைக்கவும், சந்தேகம் கொள்ளவும் எல்லோருக்கும் தோன்றும் !  அந்த சந்தேகத்தை   முந்தைய பதிவு போக்கியிருக்கும் என்று நம்புகிறேன்!

   ஆதித்ய கரிகால சோழன்,தனது தந்தையும் அரசனுமான சுந்தரச் சோழன் காலத்தில்,    காஞ்சீபுரம் உள்ளடங்கிய தொண்டை மண்டலத்தை  உள்ளடங்கிய  சோழ அரசை நிர்வகித்து வந்தது போலவே , சுந்தர சோழனின் மகள் குந்தவையை  மனமுடிதிருந்த வல்லவரையன் வந்தியத் தேவன்   சித்தூர்,வேலூர்,கோலார்,ஹோசூர்,பெங்களூர்,ஆகிய பகுதிகளை  சோழப் பேரரசு சார்பில் நிர்வகித்து வந்தான்!ஆதித்ய கரிகாலன்  கலந்துகொண்ட சேவூர் போரில்  இவனும் தனது மைத்துனனுக்கு உதவியாக  கலந்து கொண்டு போரிட்டு உள்ளான்!

        மைத்துனன் ஆதிய கரிகாலன் படுகொலை செய்யப் பட்டதை கேள்விப் பட்டு, அல்லது நடந்த சம்பவங்களை தெரிந்து கொண்டு, ஒன்றும் செய்யாமல் சும்மாவா இருந்திருப்பான்!?  தனது மனைவிகுந்தவைக்கு, மற்றொரு மைத்துனன் ராஜராஜனுக்கு என்னவானதோ? தனது மாமனார் சுந்தர சோழன்,மாமியார் வானவன் மாதேவி  ஆகியோரின் நிலை என்னவோ? அவர்களுக்கு  ஆறுதல் சொல்லவேண்டும், அரசியலில் அடுத்து நடப்பதை கவனிக்க வேண்டும்! ஆதியனின் படுகொலைக்கு என்ன காரணம்? யார் காரணம்? என்று தெரிந்து கொள்ள வேண்டும்   என்று நினைத்து இருப்பானா, இல்லையா?  அதனால் பதறி,துடித்து  தஞ்சைக்கு வந்திருப்பானா,இல்லையா? நிச்சயம் வந்திருப்பான் !

   ஆனால் பாருங்கள், அதித்ய கரிகாலனின் படுகொலைக்கு  அப்புறம் வல்லவரையன் வந்தியத் தேவனைப் பற்றிய எந்த வித குறிப்புகளும், ஆதாரங்களும், செய்தியும்  வரலாற்றில் இல்லவே இல்லை! அவைகள் பற்றி எந்த வித ஆய்வும் யாரும் செய்ததாகவும் தெரியவில்லை! அதுமட்டுமின்றி, வல்லவரையன் வந்தியத்தேவனைப் பற்றி, எந்த ஆதாரங்களும் வரலாற்றில்   நேரடியாக குறிப்பதே இல்லை! வந்திய தேவனின் வரலாறு, குறிப்பாக ஆதித்ய கரிகாலன் படுகொலைக்குப் பின்புள்ள வரலாறு  சோழ வரலாற்றில் மறைக்கப் பட்ட வரலாறாகவே  உள்ளது! வந்தியத் தேவன்  வரலாம் அவன் குறித்த விவரங்களும் இன்றுவரை கிடைகாமல் உள்ளதற்கு காரணம், அல்லது கிடைத்து இருந்தும் வெளிவராமல்  மறைக்கப் பட்டு உள்ளதற்கு காரணமாக, பின்புலத்தில் உள்ளது 'பிராமணீயம்' என்ற  பாசிச கண்ணோட்டமே என்பதை அறிய முடிகிறது! 

    வந்திய தேவனை  பற்றி  நாம் எப்படி தெரிந்துகொள்கிறோம், அல்லது எப்படிவரலாறு  குறிக்கிறது என்று பார்த்தால், குந்தவை நாச்சியாரை குறிக்கும் போது மட்டுமே,"வல்லவரையன் வந்தியத் தேவர்  மகாதேவர்  மாதேவியார்  குந்தவை நாச்சியார் " என்று குறிப்பதில் இருந்துதான்  அப்படி ஒருவன் இருந்தான் என்பதையே நாம்  அறிந்து கொள்ள முடிகிறது!

   {அமரர் கல்கி அவர்கள், தனது பொன்னியின் செல்வன் நாவலை  வந்தியத் தேவனில் ஆரம்பித்து, முடியும் வரை  அவனை ஒரு காதல் கதாநாயகனாக்கி இருப்பார்!}

       பாசிசம் என்ற பிராமணீயம், காலம்காலமாக  கடைப்பிடித்துவரும் பல்வேறு யுக்திகள்,தந்திரங்களில்  ஒன்று..., "இருப்பதை இல்லை என்று சொல்வதும் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவதும் ஆகும்!"  இந்த பார்ப்பனீய தந்திரத்துக்கு பெயர்தான், "மாயாவாதம்" என்பதாகும்!

     கல்கியும் வந்திய தேவன் விவகாரத்தில் இந்த பிராமணீய தருமத்தையே கடைபிடித்து உள்ளார் எனபது தெரிகிறது!

      போகட்டும்! வந்தியத் தேவனின் கதி என்ன ஆனது? அவன் எங்கே போனான்? ஆதித்ய கரிகாலன் படுகொலைக்குப் பின்பு , இறுதி சடங்கில் கலந்து கொண்டானா? மாமனார் மாமியாரை  சந்தித்தானா?  ஆறுதல் சொன்னானா? குந்தவையை சந்தித்தானா ?  சோழ அரசில் படுகொலைக்குப் பின்பு,  அவன் நடவடிக்கைகள் என்ன? எனபது குறித்து எந்த ஒரு விவரமும் இல்லை! 

      அவனைப் பற்றி  சோழநாட்டு கோயில் ஒன்றின்  "கோயில் தல வரலாறு"  ஒரே ஒரு குறிப்பை மட்டும் தருகிறது!  அந்த கோயில்  திருச்சி-  தஞ்சை  இடையில் உள்ளது!   வந்திய சோழன் என்ற அரசனுக்கு,"இறைவன் அருள் பாலித்த  கோயில் இது"  என்று கூறுகிறது!

      வந்தியத் தேவ சோழனுக்கு  இறைவன் எப்படி அருள் பாலித்து இருப்பார் என்றும், அந்த கோவிலைப் பற்றியும்  அடுத்த பதிவில் பார்க்கலாம்!
Thursday, 16 February 2012

குந்தவைக்கும் வந்திய தேவனுக்கும் நடந்தது காதல் திருமணமா?

     குந்தவை நாச்சியாருக்கு திருமணம்  ஆனதாக கல்வெட்டுகள் குறிப்பதில் இருந்து அறிய வருகிறது!

         குந்தவையைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் அவரை,  "உடையார் பொன்மாளிகைத் துஞ்சிய தேவர் திருமகளார் ஸ்ரீபராந்தகன் குந்தவை பிராட்டியார் "  என்றும் "ஆழ்வார் பராந்தகன் குந்தவை பிராட்டியார் " என்றும் வல்லவரையர் வந்திய தேவர் மாதேவர் மாதேவியார் என்றும் குறிப்பிடுகின்றன. அக்காலத்தில்  பெண்களுக்கு திருமணம் செய்வதற்கு இப்போது போல வயதோ,சட்டமோ ஏற்படுத்த வில்லை! ஆதலால், பெண்களுக்கு அவர்கள் வயதுக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே,அல்லது வயதுக்கு வரும் பருவத்திலே கூட திருமணம் நடந்து வந்தது! உயர்ந்த குடும்பத்து  பெண்களுக்கும் இது பொருந்தும்! அதுவும் குந்தவை போன்ற அரச குடும்பத்து பெண்களுக்கு திருமணம் எனபது, அவர்கள் விருப்பத்தின் பேரில் நடப்பது அரிதாகும்!

       குந்தவை வந்தியத் தேவனை காதலித்ததாக எண்ணும்படி,  அமரர் கல்கி அவர்கள் தனது" பொன்னியின் செல்வன்" நாவலில் சித்தரித்து உள்ளது தவறாகும்!

        குந்தவை   காதல் திருமணம் செய்து கொண்டிருப்பின் அல்லது தனது கணவனை  சுயமாக தேர்ந்தெடுத்ததாக இருப்பின் நிச்சயம் அது குறித்து  கல்வெட்டுகளில், செப்பேடுகளில், அல்லது வரலாற்றில் வேறு குறிப்புகள் தெரிவித்து இருக்கும்!

         சுயவரம் போன்ற நிகழ்ச்சி நடந்திருந்தால் பல நாட்டு அரசர்கள் கலந்து கொண்டது, அவர்களுக்கு இடையே நடந்த வீர விளையாட்டு போட்டிகள் குறித்து, சுயவரம் எங்கு நடந்தது, அந்தணர்கள், சோழ குடிகளுக்கு வழங்கப்பட்ட தானங்கள், கோயில்கள், பவுத்த விகாரங்கள், சமணபள்ளிகள், மடங்கள் ஆகியவற்றிற்கு  வழங்கப் பட்ட  அறக்கொடைகள்  என்றோ, பல குறிப்புகள் மூலம்  அவைகள் வெளிப்பட்டு  இருக்கும்! அப்படி இதுவரை  எந்த குறிப்புகளும் கிடைகாமல் உள்ளதைப் பார்க்கும் போது,குந்தவையின் திருமணம்  காதல் திருமணமோ, சுயவர திருமணமோ இல்லை என்பதை அறிய முடியும் !

         குந்தவை திருமணம் செய்து கொண்டதாக அறியப் படும்  வந்திய தேவன்  என்பவனை, வல்லவரையன்  வந்திய தேவன் என்றும் வேங்கி நாட்டை சேர்ந்தவன்  என்றும் வரலாறு குறிப்பிடுகிறது . ஆகவே, அவன் இன்றைய வேலூர் மாவட்டத்தில்  உள்ள திருவலம் என்ற பகுதியை சேர்ந்தவனாகவும்,அன்றைய வேங்கி நாட்டை ஆண்ட  அரசகுமாரன் என்றும் அறிய வருகிறது!

      இந்த பகுதியிலேயே,  ராஜரானின்  பாட்டனாரான  அரிஞ்சய சோழன்  இறந்த இடமான மேல்பாடியும், அவரது நினைவாக ராஜராஜ சோழன் கட்டிய, "அரிஞ்சையேசுவரம்" என்ற "பள்ளிப்படை கோயில்" என்று அழைக்கப்படும் நினைவு சமாதி கோயில் உள்ளது! 

   பேரரசு விஸ்தரிப்பு முயற்சியில்  சோழர்கள், இப்பகுதியில் படைகளுடன் தங்கி போரிட்டு வந்தார்கள்! மேலும் தமிழகத்தின் மீது படையெடுத்து வரும் கீழை சாளுக்கியர்கள் உள்ளிட்ட வடநாட்டினரை தடுத்தும், தாக்கியும் வந்தார்கள்! 
 
        இத்தகைய சூழ்நிலையில் இருந்த சோழர்கள்,தங்களது திருமண உறவு மூலமும்  அரசு அதிகாரத்தையும் ஆளுமையையும் அதிகரித்து கொண்டு வந்தனர்! அப்படி தங்களது அரசு அதிகாரத்தை  தொடர்ந்து நீடித்து, படைபலம், ஆகியவைகளை அதிகரிக்க செய்த முயற்சியாகவே  குந்தவை நாட்சியாருக்கும் வேங்கி நாட்டு இளவரசனான, வந்திய தேவனுக்கும் திருமணம் நடந்துள்ளது விளங்குகிறது! 

       ராஜதந்திர முறையான,   இது போன்ற திருமண உறவை  சுந்தரச் சோழன் விரும்பியே குந்தவையை வல்லவரையன் வந்திய தேவனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளான்!  மேலும் அவனது ஆட்சிப் பகுதியுடன் சோழர் ஆட்சிப் பகுதியையும் சேர்த்து அவனது பாதுகாப்பில் இருந்துவருமாறு  செய்துள்ளான்!
  
       இன்றைய காலத்தில் வசதியாகனவர்களும் செல்லமாக தங்களது  மகளை வளர்த்து வரும் சிலர்  வீட்டோடு மாப்பிள்ளை பார்ப்பது போல, குந்தவையை  திருமணம் செய்து கொடுத்து உள்ளார்கள்!{ குந்தவை என்பதற்கு பொருளே, திருமணம் ஆகியும் புகுந்த வீட்டுக்கு போகாமல்  பிறந்த வேட்டிலேயே இருந்த பெண் என்பதுதான்!} குந்தவையின்  உண்மையான பெயர், "மந்தாகினி" என்பதாகும்!

       ராஜராஜ சோழனும்  தனது மூத்த சகோதிரியான குந்தவையின் மீது உள்ள மரியாதை காரணமாக,  தனது மகளுக்கு, "குந்தவை" என்று பெயரிட்டுஇருந்தான்! தனது மகளை  வேங்கிநாட்டு  இளவல், விமலாத்திதனுக்கு  தனது ஆட்சி காலத்தில் திருமணம் செய்து, கொடுத்திருந்தான்!  {ராஜராஜ சோழன் திரைபடத்தில் காட்டபடுபவர் இந்த குந்தவையே!}

       திருமணம் நடந்தாலும் அவருக்கு குழந்தைகள் ஏதும் இருப்பதாக எந்த சான்றுகளும் குறிப்புகளும் கல்வெட்டுகளும் குறிப்பிடுவதில்லை! எனவே, குந்தவையின் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக அதிககாலத்துக்கு  நீடிக்கவில்லை, எனபது தெரிகிறது! அதற்கு காரணம்  குந்தவையின் கணவன்  வல்லவரையன் வந்தியத்தேவன்  இளமையிலேயே  இறந்துவிட்டான் என்பதே ஆகும்!
   
     வல்லவரையன் எப்போது? எங்கே? எப்படி இறந்தான்? அவனது இறப்புக்கு காரணம் என்ன? அல்லது யார் காரணம்? என்பதை அடுத்து பார்க்கலாம் !
 
      வரலாறை ஓரளவாது புரிந்துகொள்ளாமல், நான் சொல்லவரும் பாசிசத்தைப் புரிந்துகொள்ள முடியாது!  என்பதற்காவே,  இத்தகைய பதிவுகளை செய்யவேண்டி உள்ளது!
      

Monday, 13 February 2012

காதலர் தினமும், பார்ப்பனீய கலாசார எதிர்ப்பும்!

           காதலர் தினமாக உலமெங்கும் ஏற்றுக்   கொள்ளப்பட்டு  பிப்ரவரி 14 -ஆம் நாள் இளசுகளால் கொண்டாடப் பட்டு வருகிறது! இந்த கொண்டாட்டங்களில் நடக்கும் அத்துமீறல்கள் நமக்கும் உடன்பாடான ஒன்று இல்லை!

     ஆனால், காதலை நாகரீகமாக, தங்களது எதிர்கால வாழ்வின் அடித்தளமாக என்னும் காதலர்கள், காதலை சொல்லி, பரிசுகள் வழங்கி,வாழ்த்துகள் சொல்லி, நீடித்த அன்பு கொள்ள விரும்பும் இளசுகளுக்கு  காதலர் தினம் ஒரு வாய்ப்பும், வசதியும் தருகிறது! என்பதால் அதனை வரவேற்கிறேன்!
      
        நானும் காதலித்து,கலப்பு மனம்புரிந்து, மனமொத்து வாழ்ந்துவருவதை இந்த தருணத்தில் குறிப்பிடுவது, மகிழ்ச்சி அளிக்கிறது!

         இந்தியாவில் காதலர் தினத்துக்கு ஆதரவு இருப்பதைப் போலவே எதிர்ப்பு இருப்பதையும்,  எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்தான் என்பதை நாம்,  நன்கு தெரிந்து கொள்ள முடியும்! 
        இந்துத்துவ தருமத்தை கடைபிடித்து வரும் அமைப்புகளும் கட்சிகளும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்  முன்னணியில் இருகின்றன! அவைகள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு என்ன காரணங்களை கூறுகின்றன? என்று பார்த்தால், காதலர் தினம் நமது கலாசாரத்திற்கு எதிரானது, நமது இளைய தலைமுறையினரை  அது சீரழித்து விடும்  என்று கூறுகிறார்கள்!

        உண்மையில் காதலர் தினம் நமது கலாசாரத்தை சீரழிக்கிறதா?  இவர்கள் சொல்லுவது உண்மையா? என்று பார்த்தால் இல்லை என்பதே உண்மையாகும்!   பிறகு ஏன் இவர்கள் காதலர் தினத்தை எதிர்கிறார்கள்? ஏனென்றால், காதலிப்பது இவர்களைப் பொறுத்தவரை மிகப் பெரிய குற்றம் என்பதான பார்வை  கொண்டிருப்பது தான்! அதற்கு காரணம், மனு தர்மம்  என்ற இவர்கள் விரும்புகிற , இவர்கள் இதுவரைக்  கட்டமைத்து வைத்துள்ள சாதிய கட்டமைப்பு  என்பதை அது சிதைத்து விடும் என்று  அஞ்சுகிறார்கள்! எனவேதான்  சாதிய கட்டமைப்பை  சிதைக்கும் காரணியாக  உள்ள காதலை எதிப்பவர்கள் காதலர் தினம் என்று  கொண்டாடுவதை  ஏற்றுகொள்ள முடியாமல், அதனை பொறுக்க முடியாமலும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்!

      இல்லை ! அப்படி எல்லாம் எந்த வித உள்நூள்ளமும் இவர்களுக்கு இல்லை! உண்மையிலேயே நமது கலாசாரம் சீரழிந்து போவதை  தடுக்கவே, நமது இளைய சமுதாயத்தின் மீது உள்ள அக்கறையினாலேயே, எதிர்கிறார்கள் என்று  சிலர் எண்ணக்கூடும்!   அப்படி உண்மையிலேயே இவர்கள் உண்மையிலேயே கலாச்சாரம் சீரழிந்து வருவதற்காகதான் எதிர்கிறார்கள் என்றே வைத்துகொள்வோம். 
  
       இந்த கலாசார காவலர்கள் கூறும்,    நமது "இந்து தரும கலாசாரம்" என்ன? என்பதும், இவர்கள்  புனித நூலாக, இப்படிதான் நடந்தது  என்று கூறுவதே இதிகாசம் என்பதற்கு பொருள் என்று கூறி, இந்துமதப் பெருமைகளை, மேன்மைகளை   டிவி., பக்திநூலக, ஆன்மீக நூல்கள், என்று தினம் தினம் மாற்றப்பட்டு,.மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகாபாரதம்  சொல்லும் கலாச்சாரமா? என்று கேட்கத் தோன்றுகிறது! 

       ஆயர்பாடி கண்ணன், கோபியர்களிடம் செய்த லீலாவிநோதங்களா? பாமா இருக்க...  ருக்குமணியை கண்ணபிரான் " சின்ன வீடாக"  வைத்துகொண்டது போல,   அறிவுரைகளா?  குந்தி முறையே...  சூரியன் மூலம்  கர்ணனையும், எமதருமன் மூலம் யுதிஷ்ட்ரனையும், இந்திரன் மூலம் அர்சுனனையும், வாசுபகவான் மூலம் பீமனையும் மகனைப் பெற்றாளே.!  அதுபோன்ற  கலாச்சாரமா? அல்லது பாஞ்சாலி என்னும் திரோவ்பதிக்கு   நகுலன் சகாதேவன்  ஆகியோரையும் சேர்த்து  அயிந்து கணவர்கள்  என்று சொல்லும் கலாச்சாரமா?  
        பீஷ்மருடன் சேர்ந்து பிறந்த,,, எட்டு பேரில்,   பீஷ்மரைத் தவிர்த்து, ஏழுபேரை அவர்களைப் பெற்ற அன்னையே, (கங்காதேவி)ஆற்றில் விட்டுவிட்டாளே! அந்த கலாச்சாரமா? இல்லை,  வியாச முனிவனுக்கு.. விசித்திர வீரியனின் மனைவிகளை (அம்பிகை,அம்பாலிகை) அனுப்பி,பிள்ளைப் பெற்றுகொள்ள  சொன்ன கலாச்சாரமா? எதனை கலாச்சாரம் என்று,  இவர்கள் கூறுகிறார்கள்?  எது இவர்கள் வலியுறுத்தும் கலாச்சாரம்  என்று தெரிய வில்லை!

        இந்தியாவின் ஒட்டுமொத கலாசார சீரழிவுக்கும் காரணமானவர்கள், "இந்து தருமம் "என்ற பெயரில்,  இந்தியாவின் பூர்வகுடிகளின்  நாகரீகம், பண்பாட்டைக் கெடுத்தவர்கள்  இவர்களே! 

      ஆனால், இன்று ஏதோ....,     இந்து மதத்துக்கு உயர்ந்த நாகரீகம், கலாசாரம் இருந்தது போலவும்,    அதனை, "காதலர் தினம்"என்ற கொண்டாட்டம்  சீரழித்து வருவது போலவும்,     அத்தகைய சீரழிவில் இருந்து காப்பாற்ற போவது போலவும் தங்களைச்  சித்தரித்துக்  கொடு, இவர்கள்   குரல் கொடுப்பது, எதிர்ப்பு தெரிவிப்பது  ஆர்பாட்டம் பண்ணுவதும் எதற்கு?  என்று யோசிக்கவேண்டும்!   
 
    நான் மேலே குறிப்பிட்டு உள்ளது  போல... ,  இவர்களது   சாதிய கட்டமைப்பை,     காதல் என்ற ஒற்றை சொல்,  அழகிய சொல், மென்மையான சொல், அனைவரையும் வசீகரிக்கும் சொல், உள்ளத்துள் எண்ணற்ற கனவுகளை ஏற்படுத்தும் சொல், எழுச்சியை தரும் சொல், மகிழ்ச்சியை அதிகரிக்கும் சொல், உலகை முப்பரிணாமத்தில்  காட்டும் சொல், துன்பத்தை துடைக்கும் சொல், இன்பத்தைப் பேருக்கும் சொல், எண்ணற்ற சாதனைகளுக்கும்,   ஏன்? வேதனைக்கும் காரணமாகும்  சொல்லான,   காதல் என்ற சொல்லானது,,

     பார்ப்பனீய, பாசிச, அடக்குமுறையை விரும்புகிற அனைவருக்கும்  வேம்பைபோல கசக்கிறது!  அந்த கசப்பை மறைத்து,  கலாசாரம் சீரழிக்க படுவதாக  திசை திருப்பி நாடகம் ஆட வைக்கிறது!  உண்மையிலேயே இவர்களுக்கு   இந்திய,  இளம் தலைமுறையினரின் எதிர்காலம், வாழ்க்கைமீது அக்கறை இருக்குமானால்,   நம்பிக்கை இருந்தால்  காதலர் தினத்தை இவர்கள்ஆதரிக்க முன்வரவேண்டும்!    எதிர்க்கக் கூடாது! மேலும் காதலர்  தினத்தை,   அரசு விடுமுறையாக அறிவிக்க குரல் எழுப்ப  வேண்டும்! அதுவும், கிருஷ்ணர் ஜெயந்தி, கோகுலாஷ்டமி, போன்ற பண்டிகை தின விடுமுறைகளை நீக்கிவிட்டு, இதனை  செய்ய முன்வர வேண்டும்!வருவார்களா?

       அது மட்டுமல்ல..,நமது கலாசாரத்தை உண்மையிலே கேவலப்படுத்தி வரும்  மகாபாரதம்உள்ளிட்ட  ஆபாச புராண நூல்களை  தடை செய்யவும் முன்வரவேண்டும்!   செய்வார்களா?   நிச்சயம் செய்ய மாட்டார்கள்! குறைந்த பட்சம்,  அவைகள் நமது கலாசாரம் அல்ல! என்று கூறி, அத்தகைய நூல்களை   கண்டித்து ஒரு அறிக்கை விடுவார்களா?     காதலர் தினம்  கலாசார சீரழிவு என்று கூறி  எதிர்த்து வருபவர்கள் இதனை செய்ய முன்வந்தால் தான்  அவர்கள் கூறுவதை ஏற்றுகொள்ள முடியும்! 

     அந்த முடிவை அவர்கள் எடுக்கும் வரை..    காதலர்களே!   காதலைக் கொண்டாடுங்கள்!  காதலாய்க் கசிந்து உருகி, அன்புடன் வாழுவோம்! 

 " நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால்,
         நாட்டினர்தாம் வியப்பெய்தி, நன்றாம் என்பர்!
   ஊடகத்தே ,கிணற்றோரத்தே , ஊரினிலே
      காதல் என்றால் உறுமுகின்றார்! 
  பாடைகட்டி அதனைக் கொல்ல,
      வழிகள் செய்வார்! பாரினிலே பொறாமையினால்     
மூடரெல்லாம்  விதிகள் செய்து,
      முறைதவறி,இடர்யெய்து கெடுகின்றாரே! " 

  -புரட்சிக்கவி  பாரதியின் ஆதங்கம் எத்தனை அர்த்தமுடையது! 
  
 காதலர் தினத்தை முன்னிட்டு.. இதனைப் பதிவு செய்தாலும் இதுவும் எனது தொடர்பதிவாக கருதலாம்!

      அப்புறம் , நாலு நாளைக்கு உங்கப் (இந்தப்)  பக்கமே வரமாட்டேன்! காரணம் காதலர்கள் தினத்தை  உங்களைப் போல..,  நானும் கொண்டாடணும்
இல்லையா? அதுக்குதான்!

கவிதை ,காதல், புரட்சி கவி,பண்பாடு,மகாபாரதம்!  விடுமுறை

Sunday, 12 February 2012

ராஜ ராஜ சோழனது இளமைக்கால மர்மங்கள்!


      ஆதித்ய கரிகாலன் படுகொலைக்கு அடுத்து நடந்த நிகழ்சிகளில் ஒன்றாக வரலாறு குறிக்கும் சோகத்தை, சுந்தர சோழன் அவன் மனைவி  வானவன் மாதேவி ஆகியோருக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லி இருந்தேன்!

        வரலாற்றில் சுந்தர சோழன் இறந்ததை,  " பொன்மாளிகையில் துஞ்சிய தேவர்" என்று மிகவும் நயமாக, உயர்த்தி சொல்லி உள்ளார்கள்! 

   "பொன்மாளிகை"   என்று  குறிக்கப்படுவது  காஞ்சியில்  இருந்த, சோழர்கள் அரண்மனையைதான் !  என்று கல்வெட்டு கலைச்சொல் அகர முதலி {மதுரை காமராஜர் பல்கலை கழகம்   வெளியீடு}  குறிப்பிடுகிறது!

        சோழர்களுக்கு கடம்பூர்,கும்ப கோணம்  அருகில் உள்ள பழையாறை,கங்கை கொண்ட சோழபுரம்,தஞ்சை, திருச்சியின் சமயபுரம் என்று பலஇடங்களில் அரண்மனைகள்  இருந்துள்ளது! 

      ராஜராஜனை  பால்குடி மாறாத குழந்தை என்று நான் வேண்டும் என்று குறிப்பிடவில்லை!   வானவன் மாதேவி உயிர் துறந்தது  குறித்து,  ( ARE 230 OF 1902) கல்வெட்டுகள் உள்ளது!
 அதில், 
                 " முலைமகப் பிரிந்து முழங்கு எரிநடுவனும்
                    தலைமகன் பிரியாத் தையல்" 

      -இவ்வாறு குறித்து ,புகழ்ந்துள்ளதாக "தென்னாட்டு போர்களங்கள்" என்ற நூலில், கா.அப்பாதுரையார் பக்கம் ௦௦-220 -யில்  குறிப்பிடுவதையே  எடுத்து காட்டி உள்ளேன!

       மேலும் அவர், "சுந்தர சோழனின் இறுதிகாலம் அவலம் மிகுந்ததாக, இருந்துள்ளதாக " குறிபிடுகிறார்!  அவர் குறிப்பிட்ட அவலம் எனபது நான் குறிப்பிட்டுள்ளது  போல்,சுந்தரசோழன் அரண்மனை சிறையில் அடைத்துவைக்கப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டு ,  இருக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று,  எனது ஆய்வின் ஆய்வின் அடிப்படையில் முந்தைய பதிவில் தெரிவித்து உள்ளேன்! 

      சோழர்கள் நூல் எழுதிய கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிகள்  காஞ்சி அரண்மனையில்  தங்கி,  சுந்தர சோழன்,தனது நாட்டின்  அலுவல்களை அயராது கவனித்தான் எனபது உண்மை இல்லை!  என்பதை தெளிவுபடுத்த வேண்டியே, உத்தமசோழன்,  காஞ்சி அரண்மனையில் தங்கி இருந்து.. " அந்தணர்களுக்கு தானம் "வழங்கியுள்ளான் என்றும்  குறிப்புகள் உள்ளன என்றும் சொல்லி இருந்தேன்!   இப்படி நான் கூறுவதில்  கூட,    சிலருக்கு சந்தேகம் வரலாம்.!  அவர்களுக்கு....

     சுந்தர சோழன் காஞ்சி சிறையில் இல்லை, அரசனாக அலுவல்களை கவனித்தான் என்று நீலகண்ட சாஸ்திரி சொல்வது  உண்மையாக இருந்தால், உத்தம சோழன்  காஞ்சி அரண்மனைக்கு போய் அந்தணர்களுக்கு தானம் செய்ய வேண்டிய அவசியமே நேராது போயிருக்கும்!  அங்கே, அவனுக்கு மூத்தவனும், முன்பிருந்தே அரசனாக இருந்து வருபவனும் ஆன,  சுந்தர சோழன் அல்லவா தானம் செய்திருப்பான்?  அவன் தானம் செய்ததாக அல்லவா கல்வெட்டுகள் பொறித்து இருப்பார்கள்! ?

        தவிர,  சுந்தர சோழனை வைத்துகொண்டு,  உத்தம சோழன் தானம் செய்தான் என்று வாதிட்டாலும், உத்தமனுடைய பெயருடன்  சுந்தர சோழன் பெயரையும்  அல்லவா சேர்த்து பொறித்து இருப்பார்கள்?  எனவே ,  சுந்தர சோழன் காஞ்சியில் அரசனாக இல்லை, கைதியாக இருந்தான்! , அவனைப் பற்றியோ, அவனது இதர வாரிசுகள் எங்கே?  என்று அறிந்து கொள்ளவோ, உத்தமன்  காஞ்சிக்கு சென்றபோது,அரண்மனை உண்ணாழி மண்டபத்தில் இருந்து தானம் செய்திருக்கிறான்!   அல்லது, சுந்தர சோழன் இறப்புக்கு பிறகு,   காஞ்சிக்கு சென்ற உத்தம சோழன்,   தான் அரசனாக காரணமான  அந்தணர்களுக்கு...,அல்லது   அவர்கள் சொல்லும்  அறக்கொடைகளுக்கு,  தானம் செய்தான்!   என்று கருதுவதே ஏற்புடையதாகும்! 

       இவ்வளவு கொடுமைகளைச் செய்த உத்தமச்க் சோழனும் அவனை முன்னிறுத்தி ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்ற, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்பிய பார்ப்பனர்களும்  சுந்தர சோழனின் இதர வாரிசுகளான குந்தவையையும்,ராஜராஜனையும் போனால் போகட்டும் என்று  சும்மா விட்டு இருப்பார்களா?  அவர்கள் சோழர்களின் அரண்மனையில் சுகபோகத்துடன் , ஆடம்பர வாழ்வு வாழ்ந்தார்களா ? அப்படி வாழ்ந்திருந்தால், ஏன் ? ராஜரானின் இளைமைகாலம் பற்றி யாரும் அறிந்தவர்கள் இல்லை! அறிந்து சொன்னவர்கள் இல்லை என்று கூறுகிறார்கள் ?

   உண்மையில் ராஜராஜனையும் , குந்தவையையும் கொல்லவும்,அழித்துவிடவும் உத்தம சோழனின் படைகள்  சோழநாடு முழுவது சுற்றி சுற்றி வந்தன. ஆனால் அவர்கள், சுந்தர சோழனின் ஆதரவுப் படைகளாலும்,சோழக் குடிகளாலும், சோழநாட்டில் இருந்துவந்த சமணர்கள், பவுத்தர்கள், இஸ்லாமியர்கள்  ஆகியோரின் உதவியாலும்  உத்தம சோழனின் படைகளிடம் சிக்காமல் தப்பித்து, தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்கள்! அவர்கள் தலைமறைவு வாழ்க்கையும், அதாவது ராஜராஜ சோழனது இளமைப் பருவம் குறித்து சரியாக சொல்லாமல் உள்ளதற்கும், அவனது இளமை காலம் பற்றி யாரும் கண்டது இல்லை என்று வரலாறு மேலோட்டமாக குறிப்பதற்கும் அதுவே காரணமாகும்!

    ராஜராஜன் இளமையில்  தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது! அவனது இளமைக் கால தலைமறைவு வாழ்கையில் அவனுக்கு அனைத்து கலைகளையும் கற்க வைத்து, ராஜராஜனை அரசனாக்க , அரசு நிர்வாக பயிற்சி வழங்கி , ஆட்ற்றலுள்ளவனாக, எதிர்காலத்தில் பேரரசனாக ஆக்கியதில் அவனது அக்காள் குந்தவைக்கும் இஸ்லாமிய பெரியவர் நத்தர்வலியார், மற்றும் அவரது சீடர்களுக்கும் பெரும் பங்கு இருந்துள்ளது! இவைகளும் வரலாற்றில் மறைக்கப் பட்ட வெளிச்சம்படாத பகுதிகளாக சோழ வரலாற்றில் இருந்து வருகிறது! 

      ராஜராஜ சோழனது இளமைகாலம் பற்றிய  விவரங்களை பார்க்கும் முன்பு குந்தவைக்கு திருமணம் ஆனதாக சொல்லுகிறார்களே, அவளது கணவனாக வல்லவரையன் வந்திய தேவன் சொல்லப்படுகிறதே? அவன் எங்கு போனான்? என்னவானான்? அவனது நிலைமை ஆதித்ய கரிகாலன் படுகொலை சம்பவத்துக்கு பிறகு என்ன? எனபது குறித்து பார்க்கலாம்!

     


Friday, 10 February 2012

அன்புள்ளமும் ஆர்வமும், அறிவும் கொண்ட பதிவர்களே!

        நமது தமிழகத்தின் வரலாறை...  அதுவும் சோழர்களது வரலாறை  அறிந்து கொள்ள விழையும் உங்களது ஆர்வமும், நீங்கள்  கேட்கும் சந்தேகங்கள், விளக்கங்கள் மூலம் தெரிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!

         உள்ளபடியே,  அவ்வப்போது..  நமக்கு தோன்றும் சந்தேகங்களை  கேட்டு தெளிவு பெறுவது  எல்லோருக்கும் உள்ள இயற்கை குணமாகும்! சிலர், "நாமும் கேட்போமே "என்று கேட்பதும் உண்டு,!   தெளிவுபெற கேட்பது போல, நம்மை  திசை திருப்ப , அதாவது இந்த பதிவை படிப்பவர்களிடம்  தேவை அற்ற குழப்பத்தையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தி விட.. எண்ணி கேட்பவர்களும் உண்டு!  அப்படிப் பட்டவர்களால் நான்,  பதிவு எழுத வந்த நோக்கம் திசை மாறி, வேறு தளங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, பதிவுகள்  விவாத மேடையாகி விடும் அபாயம் ஏற்படும் நிலை உள்ளதால், அனைவருக்கும்    விளக்கங்களை  தருவதை, அதுவும் உடனுக்குடன்  தருவதையும்  நான் தவிர்க்க விரும்புகிறேன்!

          மேலும் நான்வரலாற்றில் உள்ள தவறுகளை  திருத்தும் நோக்கத்திலோ, {ஏனெனில் அது தேவையற்ற சர்ச்சைகளையே ஏற்படுத்தும்} வரலாறு முழுவதும் தவறு என்று வாதிடவோ,  அல்லது நான் எழுதுவதே  உண்மைவரலாறு  என்று நீங்கள் நம்பவேண்டும்  என்பதற்காகவோ, உங்களை நம்ப சொல்லியோ, இந்த பதிவுகளை எழுதவில்லை! அது  எனது நோக்கம் இல்லை என்பதையும் முதலிலேயே குறிப்பிட்டு உள்ளேன்!

     அதே போல ஒரு மதத்தை தாக்கியும் ,ஒரு மதத்தை தூக்கிபிடிக்கவும் இந்த பதிவுகள் இல்லை! 

       உழைக்கும் வெகுஜன மக்களுக்கு,  உதவி செய்ய முன்வருவது , அது எந்த அரசானாலும் ஆளானாலும் பாசிசம் அனுமதிக்காது, முடியாட்சி என்றாலும், குடியாட்சி என்றாலும்  பாசிசம் என்ற பயங்கரவாதம அழித்து விடும்! என்ற உண்மையை, நான் நம்புவதை.. காரண காரியங்கள், ஆதாரங்கள் மூலம் விளக்கி  சொல்லவும்,

     பாசிசம்  எப்படிமக்களுக்கு எதிராக செயல் படுகிறது, தனக்கு எதிரான  எல்லாவற்றையும் அழித்துவருகிறது! அப்படி பாசிசம் அழித்து,  ஒழிப்பதால் வெகுஜன மக்கள் படும்  தொல்லைகள் எப்படிப் பட்டது! என்றும்  அவர்களது போராட்டங்கள் எப்படி  சித்தரிக்கப் படுகின்றன,  பாசிச பயங்கரவாதிகள் தங்களது தவறுகளை,தங்கள் செய்த கொடுமைகளை  வரலாற்றில் இருந்து எப்படி மறைக்கிறார்கள், திசை திருப்புகிறார்கள்,   தங்களது தவறுகளை,  நியாயப்படுத்தி, விளக்கம் அளிக்கிறார்கள் எனபது பற்றி பதிவு செய்வது முக்கிய நோக்கமாகும்.!

      மேலும், உழைக்கும் மக்களின் போராட்டம், அவலம் குறித்து எழுதப்படும்,எழதப்பட்ட,    கலை, இலக்கிய ஆவணங்கள்  அழிக்கபடுவது, அதனுடன் தொடர்புள்ள மக்களைஒடுக்குவது,  ஒட்டு மொத்த மக்களின் வாழ்வை குலைத்து, பொருளாதாரத்தை அழித்து, அனைவருக்குமான  செல்வத்தை, பொது சொத்தை, கைப்பற்றி...  பாசிசவாதிகள்  சிலர் மட்டும்  சுகபோகங்களில் திளைக்க செய்யும் விதங்கள், பாசிசத்தின்  கொடூரமான, மனித நீதி, மனித உணவுகளை மதிக்காத  பயங்கர வாதம்  குறித்தும்,   அந்த பாசிசத்தையே,  நியாயம்,  தருமம்  என்று தொடர்ந்து கூறியும், தொடர்ந்து  செய்தும், தொடர்ந்து வர  ஊக்கபடுத்தியும்  வருகின்ற "பிராமணீயம்" பற்றிய ஆய்வாக.., பதிவுகளை  செய்ய   விரும்புகிறேன்!
     
   இந்த இடத்தில எனது விளக்கம் தேவைபடுகிறது. 

      சாதாரண மக்களாகிய  நம்மில் பலரும் சொல்லும்  "இந்து மதம் "என்று   சொல்வதும், நம்பிக்கொண்டு இருப்பதும்  வேறு!  நான் பார்பனீயம் என்று குறிப்பது வேறு. ! பார்பனீயம் என்று குறிப்பது , நிச்சயம் இந்துமதத்தை அல்ல.! 

    இந்து மதத்தைதான் நான், "பார்ப்பனீயம் "என்று குறிப்பதாக நினைப்பவர்கள்,  "பார்ப்பனீயம்" தான்   "இந்துமதம்" என்று  அவர்களே ஏற்றுகொண்டதாகவும், ஒப்பு கொண்டதாகவும்   ஆகிவிடும்!   { பார்ப்பனியம் என்ற சொல்லுக்கு,  பாசிசம் என்று  பொருள் கொள்ளவேண்டுமே தவிர ,இந்து மதம் என்று பொருளில் நான்  குறிக்கவில்லை என்பதை தெரிந்து கொள்ளவும்}   பார்பனீயம் எனபது  பாசிசம் என்பதின் வேறு சொல்லாகும்.!

        பார்பனீயத்தை விமர்சிக்கும் போது, இந்துமதத்தை சாடுவதாகவும், விமர்சிப்பதாகவும்  பலரும் தவறாக புரிந்து கொள்ளும் நிலை உள்ளதை எண்ணியே, இந்தவிளக்கத்தை  தருகிறேன்!  இதற்கு மேலும் சிலர்  வலிந்து புரிந்து கொள்வார்களானால்  நான் பொறுப்பில்லை!!

            தயவு செய்து , நல்ல நோக்கத்துக்காக, மக்களின் அன்பு, அமைதி இனிய வாழ்வுக்காக, அவைகளுக்கு எதிராக  உள்ள பார்பனீயத்தை முதலில் புரிந்து கொண்டால்தான்.. அதனை நீங்கள் புரிந்து  கொண்டு  இந்து மதத்தில் இருந்து பார்பனிய சிந்தனையை  அகற்றினால்தான், நீக்கினால்தான்  நமது நாடு வல்லரசு ஆகும்!   ஊழல், கருப்பு பணம், லஞ்சம், சமூக கொடுமைகள், போன்ற நிரந்தர தீமைகள் போன்ற சமூக அவலங்களும், வறுமை வேலை இல்லாத் திண்டாட்டம், சாதி, மத மோதல்கள் போன்ற சமூக கொடுமைகளுக்கு தீர்வு கிடைக்கும் எனபது எனது  உறுதியான கருத்தாகும்! 

     எனது கருத்தை ஒட்டி பல்வேறு இன்னல்கள், பொருளாதார பிரச்சனைகள், அனைத்தையும் ஏற்றுக்கொண்டே இந்த பதிவுகளை செய்ய முன்வந்துள்ளேன்!  
   
       ஆகவே, ஒவ்வொன்றுக்கும் உடனடி ரியாக்சன்  காட்டாமல் தொடர்ந்து வாருங்கள். ""  இனம், சாதி, மதம், ஆண் ,பெண் , நாடு, நிறம்""  என்ற,  நம்முள் பொதிந்து போயுள்ள,  அனைத்து அடையாளங்களையும் துறந்துவிட்டு, உங்கள் நெஞ்சமெனும் நியாய தராசில், நீதியை மட்டுமே  நிலைநிறுத்தி... தீர்ப்பு கூற வாருங்கள்! 

     தீர்ப்பை அனைத்து விசயங்களையும் பார்த்து, பரிசீலனை செய்து,  அப்புறம் தாருங்கள்!

       அடுத்து வரும் பதிவுகளே.., தமிழகத்தை, தென்னகத்தை, ஏன்? இந்தியாவையே....  ஆங்கிலேயர்கள் வரும்வரை,  பாசிச வழியில், "தனது  இனது மேன்மைக்காக"   நன்மைக்காக,  ஒட்டுமொத்த இந்திய மக்களின் வாழ்வில் ஊடுருவி,  பார்ப்பனீயம்   எப்படியெல்லாம் நடந்து கொண்டது,  என்பதை பல்வேறு ஆதாரங்களுடன்  விளக்கும் பதிவுகளாகும்!Thursday, 9 February 2012

அரண்மனைச் சிறையும்,ராஜராஜனின் பெற்றோர் நிலையும்!

        குந்தவை நாச்சியாரும் ஆதித்த கரிகாலனும் இரட்டை குழந்தைகளாக பிறந்தவர்கள்  என்றும், நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு  இல்லாத  சுந்தரசோழன்  அப்போது இஸ்லாம் மார்க்கத்தைப்  பரப்ப  வந்து,  சோழநாட்டின்  திருச்சி பகுதியில்  சீடர்களுடன் தங்கி இருந்த இஸ்லாமிய  ஞானி, தப்லே ஆலம் பாதுஷா, நத்தார் வலியார்  என்பவரது  அருளாசியால் பிறந்தவர்கள் என்றும்  பெர்சிய, பாரசீக  மொழிகளில் ஏராளமான குறிப்புகள் உள்ளன.

        நத்தார்  வலியார், ( செஸ்தான் ) இன்றைய சிரியா,  பகுதி ஒன்றின் அரசர் என்றும், அவரது இயற்பெயர்,  "சையத் முத்தத்ருதீன்"  என்றும்  குறிப்பிடுகிறது.  அவர் அடக்கமான  தர்காவின் ஆயிரமாவது ஆண்டுமலர்,  { திருச்சி, மதுரைரோடில் அவரது  தர்கா  உள்ளது } குறிப்பிடுகிறது! . ஆந்திராவில்  அனந்தபூர் மாவட்டம்,பெனுகொண்டா  என்ற இடத்தில அடக்கம் ஆகியுள்ள அவரது சீடர், பாபா பக்ருதீனுடைய வாழ்க்கை வரலாறு நூலும்  இவைகளை உறுதிப் படுத்துகின்றன! (தாரீக் அவுலியா என்ற பாரசீக நூல்  அவரது பயணங்கள், அவருக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை  சொல்லுகிறது!)

       இவைகள் தவிர, இரட்டையராக பிறந்த ஆதித்த கரிகாலன் அவரது தந்தையான சுந்தர சோழனிடம் அரண்மனையில்   வளர்ந்து வந்தார். குந்தவை நாச்சியாரை,  நத்தர்வலி  அவர்கள் தனது பாதுகாப்பில் வைத்து,  வளர்த்து வந்ததுடன்   குந்தவைக்கு" ஹாலிமா"  என்று  பெயரிட்டும் அழைத்து  வந்தார்! என்றும் பல்வேறு  தகவல்கள்  கிடைக்கிறது.

        குந்தவையை  நத்தர் வளர்த்து  வந்ததற்கு காரணம்,  குந்தவை பிறந்தபோது, போதிய வளர்ச்சி இன்றி, சிறு ஊனத்துடன்இருந்ததும், நத்தர் வலி போன்ற ஞானிகள்,   ஆயுர்வேதம் முதலிய  வைத்திய முறைகள்  அறிந்து இருந்ததால் தான்  சுந்தர சோழன்  குந்தவைக்கு    விவரம்  தெரியும்வரை  நத்தரது வளர்ப்பில்  விட்டிருந்தான் என்றும் தெரிகிறது!

          இஸ்லாமிய  பெரியவர் ஒருவரது அருளாசி, வைத்திய முறைகளால் கவரப்பட்டு, பயனடைத்த  அரசன் சுந்தர சோழனும், அவன் மைந்தன்    ஆதித்ய  கரிகால சோழனும்   எப்படி  மனுதருமத்தை  ஏற்று  ஆட்சி நடத்துவார்கள் என்று  பார்ப்பனர்கள்   எதிர்பார்க்க முடியும்? பார்ப்பன அதிகாரிகள், பிரஹ்மாதிராயர்கள்  எப்படிஅவர்களை  நம்புவார்கள்?  ஆகவே, இளவரசு பட்டம் கட்டப் பட்டிருந்த, தொண்டை மண்டலத்து  பகுதிக்கு பொறுப்பு வகித்து, காஞ்சியை மையமாக கொண்டு  ஆட்சி செய்த, ஆதித்ய கரிகாலன்  பார்ப்பன அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டான்! 

       தொண்டை மண்டலப் பகுதியில்  "கடம்பூர்  "என்ற இடத்தில இப்படுகொலை நடந்ததாக  அறிகிறோம்!  பிறகு அரசனுக்கு  செய்தி தெரியாமல் போகுமா?   தெரிந்தவுடன் பதறி துடித்து, பட்டத்து இளவரசன்  படுகொலையானது கேட்டு, அவனது உடலைப் பார்க்க காஞ்சிக்கு போவாமல் அவனால்  இருந்துவிட முடியுமா?  அப்படியே போகாமல் தவிர்த்தாலும் கூட..  அவனை காஞ்சிக்கு அழைத்துவர   உத்தமனுக்கு ஆதரவு அளித்த  பார்ப்பனர்கள், படையாளிகள் ஆகியோரால் முடியாது போயிருக்குமா? யோசித்து உண்மையைச் சொல்லுங்கள்!  

          ஆதித்தனைக்  கொன்றவர்களுக்கு  அடுத்து என்ன செய்ய வேண்டும்?எப்படி செய்ய வேண்டும்? எனபது குறித்து,  "சதியாலோசனை "செய்யாமல் இருப்பார்களா?  செய்ததால் உத்தமசோழன்  தஞ்சையில்  அரசனாகி விட்டான்!
            தஞ்சையை ஆண்ட   தலைநகராகக் கொண்டு அரசாண்ட   ஆதித்தனின் தந்தையும்  அவன்  இறக்கும்வரை அரசனாக  இருந்தவனுமான   சுந்தர சோழன் காஞ்சிக்கு வந்து,அல்லது அழைத்துவரப்பட்டு   காஞ்சி அரண்மனையில்  முடங்கிவிட்டார்! ( திருத்தணிக்கு அருகில் உள்ள வேலஞ்சேரி என்னும் ஊரில் கண்டு எடுக்கப்பட்ட  செப்பேடு, காஞ்சியில் சோழர்களின் அரண்மனை இருந்ததை உறுதிப் படுத்துகிறது!) பிறகு சில காலத்திலேயே,    காஞ்சி அரண்மனையிலேயே   இருந்து, அவர்  உயிர் துறந்தார்!

     கணவனின் இறப்பை தாங்க முடியாத அவரது மனைவியும்  ஆதித்ய கரிகாலனுடைய  தாயும் ஆகிய  வானவன் மாதேவி என்பவர்  எரியும் நெருப்பில்  விழுந்து, "உடன்கட்டை" என்கிற "சதி செயலை"  ஏற்றுக்கொண்டு  உயிர் துறந்தார்!  அதுவும் எப்படிஎன்றால், பால்குடிமாறாத,குழந்தையாகிய  ராஜராஜனை  வளர்க்க விரும்பாமல், அவனது கதி, குந்தவையின் கதி, எதிர்காலம், வாழ்க்கை  எதைபற்றியும் கவலைப் படாமல்  கணவன் இறந்த பிரிவைத்  தாங்க முடியாமல்,  எரி மூழ்கினாள் என்கிறார்கள்!

       சுந்தர சோழன் இறந்ததற்கு,  கே. எ. நீலகண்ட சாஸ்திரி அவர்கள்  என்ன காரணம் கூறுகிறார் தெரியுமா?  (சோழர்கள் நூல் பகுதி ஒன்று, பக்கம்-211 ).
         " குடும்ப வாழ்க்கையில் ஏற்ப்பட்ட பேரிழப்பால் சுந்தர சோழன்  தனது இறுதிநாட்களில் மிகவும்  பாதிக்கப்பட்டான் என்று கூறுவதுடன், சுந்தர சோழன் தானே விரும்பி (காஞ்சிக்கு வந்து தங்கி ) வடபகுதியில் தங்கி,தனது நாட்டின் விவகாரங்களை அயராது கவனித்ததாக அனுமானிக்கலாம்" என்று கூறுகிறார்!

       ஏன் அப்படி அனுமானிக்க வேண்டும்? அரசனான  அவன் தஞ்சையிலேயே தங்கி  ஆட்சி செய்திருக்க முடியும்தானே? ஏன்  அப்படி செய்ய வில்லை? உத்தம சோழன் அரசனாகி   இருக்க முடியாதே?   காஞ்சிக்கு வந்து  அயராது நாட்டின் விவகாரங்களை கவனித்தான் எனபது நம்ப முடிகிறதா?

   போகட்டும்.!  சுந்தர சோழனுக்கு ஏற்பட்டது குடும்ப வாழ்க்கையின் பேரிழப்பா? அல்லது அரசியல் அதிகார இழப்பா?  ஆட்சி, அதிகாரம் எல்லாம்  போனபின்புதானே.. அதனை குலைத்துவிட்ட பின்புதானே?  குடும்ப வாழ்க்கை பேரிழப்பு எனபது உண்மையாகும்! மேலும் அதற்கு காரணமானவர்கள்  யார் என்று  சொல்லுகிறார்களா? அவர்களது நோக்கம் என்ன? எதற்காக சுந்தர சோழனுக்கு பேரிழப்பு ஏற்பட்டது? என்பதை எல்லாம் யாரும் சொல்ல முன்வரவில்லை! 

    எனவேதான் நான் சொல்லவேண்டிய  அவசியம் ஏற்பட்டு உள்ளது!             " சுந்தரச் சோழன் சிறைபிடிக்கப் பட்டு, காஞ்சி அரண்மனையின் ஒருபகுதியில் சிறைவைக்கப் பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு  கொல்லப்பட்டான்!  அவன் கொல்லப்பட்ட  உடன்,   அவனது மனைவி வானவன் மாதேவி  எரியும் நெருப்பில் தள்ளப்பட்டு, கொலையானார்! " என்பதே உண்மையாகும்!  ஏனெனில்,ஆட்சி, அதிகாரத்தை அடையத்துடித்த உத்தம சோழனும், உடந்தையாக இருந்த, பார்ப்பன பாசிசவாதிகளும்  அவ்வாறு செய்வதற்குதான் வாய்ப்புகள் அதிகம் இருந்துள்ளது!

       இதனை உறுதிப் படுத்தும்  சான்றாக, காஞ்சி அரண்மனைக்கு  உத்தமச் சோழன் வந்து, அவனது ஆட்சியில்  பார்ப்பனர்களுக்கு " பிரம்மதேய நிலதானம் " வழங்கிய வரலாற்று  சான்றுகள் உள்ளன!

     அது எல்லாம்  இருக்கட்டும்  எல்லா மதங்களையும்  சமமாக பாவித்து , சமயப் பொறையுடன் அரசாண்டவன்,  சுந்தரசோழன் என்று அறியவருகிறதே! வரலாறு ஆய்வாளர்களும் சொல்லுகிறார்களே, அவர்களுக்கு இந்தபார்ப்பனர்களின்  சதிச் செயலும், மன்னனுக்கும்,இளவரசனுக்கும்  ஏன் ஒட்டுமொத அவனது வாரிசுகளுக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளதே!  அதனை தெரிந்து கொண்டு  அமைதியாகவா இருந்தார்கள்?

       சாதாரணமாக அரசியலில் இருக்கும்  ஒரு வட்ட செயலாளரோ, மாவட்டமோ, ஏன்அரசியல்பின்புலம் உள்ள  ஒரு ரவுடி  கொல்லப்பட்டுவிட்டால் கூட  கடை அடைப்பு, ஆர்ப்பாட்டம், என்று நாட்டை  அமர்களப் படுத்தும் மக்களாயிற்றே! சர்வ  அதிகாரம் உள்ள சோழ அரச குடும்பத்திற்கு  ஏற்படுத்தப் பட்டுள்ள  கொடுமைகளைப் பார்த்துகொண்டு, சும்மாவா இருந்திருப்பார்கள்?

     அரச குடும்பத்து ஆதரவாளர்கள், பிற சமய மக்கள், அரச படையினர், நாட்டு குடிமக்கள் எல்லோரும்  எதுவும் நடக்காதது போல  அமைதியாகவா இருந்திருப்பார்கள்? மிகப் பெரிய போராட்டம்,கலவரம், புரட்சி ஏற்பட்டு இருக்காதா?நிச்சயம் ஏற்பட்டு இருக்கும்! ஏற்பட்டு இருந்தது! 

    அப்போது சோழ நாடே  இரண்டுபட்டு  நின்றது! தெருவெங்கும்  ரத்த களரியானது! அன்று தொடங்கிய போராட்டம்  வரலாற்றில்  900 - ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது!  ஏன் இன்றும் கூட அவற்றின் எச்சங்களாக  அங்கொன்றும்  இங்கொன்றுமாய்  தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது!  
 
      ஆனால் வரலாற்றில்  அதைப் பற்றி வரலாறு தெரிந்தவர்கள் வாய் திறக்கவில்லை! வரலாற்றில் அப்போது நடந்ததாக பதிவு செய்யவில்லை! 

  அதனை அடுத்து பார்ப்போம்!