Friday, 30 March 2012

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

       .உத்தமசோழன்  காலத்தில் ராஜராஜனும் குந்தவையும்  தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்துள்ளனர் என்றும்  அவர்களுக்கு  இஸ்லாமிய பெரியவர் நத்தர்வலி என்பவரும் அவரோடு  சீடர்களாக  (இவர்களை பாரசீக மொழியில் கலந்தர்கள் என்று அழைக்கின்றனர்) தொள்ளாயிரம் பேர்கள்  தென்னிந்தியாவுக்கு  இஸ்லாம் மார்க்கத்தைப்  பரப்ப  வந்தனர் என்றும்  அவர்களது பாதுகாப்பில்  குந்தவையும் ராஜராஜனும்  தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்றும்  முன்பே பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்
.
      திருச்சியில் மதுரை ரோட்டில் ஹசரத்  தபலே ஆலம் பாதுஷா என்கிற நத்தர்வலியாரின் தர்கா  அமைந்துள்ளது என்பதையும்  இந்த நத்தர்வலி அவர்கள்  குந்தவை நாச்சியாரை தனது  மகள்போல பாவித்து வந்தார் அவருக்கு  தனது ஹாலிமா என்று இஸ்லாமிய முறையில் பெயர்வைத்து அழைத்து வந்தார் என்பதையும் கூட  பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்!


     குந்தவையின் இஸ்லாமிய தொடர்பு,மற்றும் ஈடுபாட்டினை  அறிந்திருந்த  இந்துமதவாதிகள்  குறிப்பாக பிராமணர்கள்  அவரது இஸ்லாம் மத  ஈடுபாட்டினை கேலிசெய்யும்  சித்திரமாகவே, தாதாபுரம் என்று இப்போது  அழைக்கப்பட்டு வரும்  ஊரில்  குந்தவை கட்டிய ரவிகுல மாணிக்க ஈஸ்வரம் கோயில் விமானத்திலேயே  உள்ளாய் அணிந்த போர்வீரன்  ஒருவன்  அழகிய பெண்ணொருத்தியின் கால்களுக்கு இடையில் உற்றுபர்ப்பதாகவும் சிவகணம் அதனைபார்த்து  சந்தோசத்துடன் சங்கு ஊதுவதாகவும்  சுதை உருவங்களாக செய்து இருந்ததையும்  குறிப்பிட்டு விளக்கம் அளித்திருந்தேன்!


     மேலும்  திருவாதவூர்  திருமறை நாதர் கோயிலுக்கு  உள்பட்ட தீர்த்தத்தில்  புருஷா மிருகம்  என்ற ஒன்றை  நிறுவி கோயில் வரலாறு  சொன்ன கதையையும் குறிப்பிட்டு இருக்கிறேன்!


   இவைகள் அனைத்துக்கும்  குந்தவை நாச்சியாரின்  இஸ்லாம்  மதமாற்றத்துக்கும்  தொடர்புகள் உள்ளது என்பது  எளிதில் விளங்கும் உண்மைகளே!
      தவிர  குந்தவைக்கு,  இந்துமதம் என்னும்  வைதீக மதத்தின் மீது  அளவுகடந்த வெறுப்பு  இருப்பதற்கு  காரணங்கள்  இருப்பதையும் யாரும்  மறுக்க முடியாது! 


        தனது உடன்பிறந்த சகோதரன் ஆதித்ய கரிகாலன் பிராமண அதிகாரிகளால்  படுகொலை செய்யப்பட்டது! அதனைத் தொடர்ந்து தனது கணவனும், வாணர் குலத் தொன்றலுமான,  "வல்லவரையன் வந்தியத்தேவன்" திருநெடுங்களம்  என்ற ஊரில்  உத்தம சோழன் படையினருக்கு  இடையில் நடந்த மோதலில் கொள்ளப்பட்டது,


      அரசகுலத்தில் பிறந்த குந்தவையும்,  தனது தம்பிராஜராஜனும்  உயிருக்கு பயந்து  நாடோடிகளாக  பல இடங்களுக்கு சென்று வாழ்ந்த இளமைக்கால தலைமறைவு  வாழ்க்கையும்   அதன் வேதனைகளும்...,

      தனது தந்தையும்  சோழ அரசனுமான  சுந்தர சோழன்  காஞ்சி அரண்மனையில்  சிறைகைதிபோல இருந்து, ஆதித்ய கரிகாலன் படுகொலைக்கு பிறகு சிறிது காலத்திலேயே  இறந்தது...,

        தந்தையுடன்  தனது தாயான  வானவன் மாதேவி  எறியும் நெருப்பில்  வீழ்ந்து  சாவைத் தழுவியது.  போன்ற  கொடுமைகள்,  சாதாரண கொடுமைகள் அல்ல! எளிதில் மறந்துவிடும்  நிகழ்சிகளும் இல்லை!

        குந்தவை இந்துமதத்தை  வெறுத்து ஒதுக்கவும், இஸ்லாம் மதத்தை  ஏற்றுக்கொள்ளவும் போதுமான காரணங்களாக   இருக்கின்றன!

        இன்னும் சொல்லபோனால், வைதீக இந்துமதம் பெண்கள் குறித்த பார்வையும், அதுவும் கணவனை இழந்த பெண்களைக் குறித்த பிராமணீயத்தின் பார்வையும், அதன் சட்டதிட்டங்களும்  கூட  இந்துமத்தின் மீது குந்தவைக்கு  அதீத வெறுப்புணர்வை  ஏற்படுத்தியிருக்கும்  என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை!

      தவிர,இளமையில் இருந்தே குந்தவை நாச்சியாருக்கு இஸ்லாமியர்களுடன் தொடர்ப்பு இருந்துவந்துள்ளது! இந்த தொடர்பின் காரணமாக  குந்தவைக்கு  இசுலாம்  மார்க்கம் குறித்து,மற்றவர்களைக் காட்டிலும் அதிக புரிதலும், அதன்வழியே ஆன ஈர்ப்பும்,ஈடுபாடும்  ஏற்பட்டு இருக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளதையும் நாம்  கவனிக்காமல்  இருக்க முடியாது!


       இவைகள் இன்றி, குந்தவை நாச்சியார்  இஸ்லாம் மார்க்கத்தை தழுவியதை உறுதிபடுத்தும் ஆதாரங்களாக  இன்னும்பல  உள்ளன....


       இவைகள் எல்லாம் எங்கோ கிடக்கும் அமேசான் காட்டில் இருபதாகவோ, ஆப்பிரிக்க காடுகளில் இருபதாகவோ, எளிதில் யாரும் போகமுடியாத இடங்களில்  இருபதாகவோ நான்  குறிப்பிடவில்லை!

     தமிழகத்தில் தான்,   அதுவும் அருகருகே...  உள்ள இடங்களில் உள்ளவைகளையே குறிப்பிட்டும்,  ஆதாரமாக காட்டியும் வருகிறேன்!


        எனது பதிவுகளில் நம்பிக்கை இல்லாதவர்கள், தாராளமாக  அந்த இடங்களுக்கு சென்றோ, அல்லது அங்கு வசிப்பவர்களிடம் கேட்டோ, அல்லது வரலாறு, கல்வெட்டுத் துறையினரை அணுகியோ, விபரம் தெரிந்து கொள்ளலாம் .   விசாரித்து, உண்மையை உணர்ந்துகொள்ளலாம் !

    அதைவிடுத்து, எங்கே ஆதாரம்? ! நீ கொடுக்கும் ஆதாரம் எல்லாம்  பொய், கல்வெட்டு எல்லாம் பொய்,
      இதுவரை  எங்காளுங்க..(அவாள்)  சொன்னதுதான் மெய்! அதுலதான் எங்களுக்கு நம்பிக்கை!  என்றால், அவாள்களின் ஆதிக்கத்தையும்  இன்னும் நீடித்துவரும்  தமிழர்களின்  இழி நிலையை எண்ணியும் , வேதனைபடுவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்?


        வரலாற்றில் இதுவரை நமக்கு வரலாறாக  சொன்னதற்கு எதிரான செய்திகள் உள்ள கல்வெட்டுக்கள்,  ஏராளமானவை இன்று  கண்டுபிடிக்கப்பட்டு  உள்ளன.  அவைகள் இன்னும் படிக்கபடாமல், சில கல்வெட்டுகள்  தொல்லியல் துறையினராலும், கல்வெட்டு ஆய்வாளர்களாலும்  படிஎடுக்கப் பட்டு, படித்து அறியப்பட்டும்  உள்ளன. ஆனால் அவைகளில்   உள்ள செய்திகளை,வரலாற்று நிகழ்வுகளை, உள்ளது  உள்ளவாறு...  நாட்டுக்கு அறிவிக்காமல், கல்வெட்டு ஆய்வாளர்கள், தொல்லியல் துறையினர்  உள்ளனர்.


     இன்னும்கூட  படிக்கபடாமல்,   படித்தும் அதனை நேர்மையுடன்  மக்களுக்கும் நாட்டுக்கும் அறிவிக்க, முன்வராமல்  இருந்து வருகிறார்கள்! (சுமார் முப்பது ஆயிரத்துக்கு மேலான கல்வெட்டுக்கள் உள்ளதாக அத்துறையினர் கூறுகிறார்கள்)


    அவைகள்  கூறும் உண்மைகள், நாட்டுமக்களுக்கு தெரிந்தால்,  இதுவரை வரலாறு என்று மக்களுக்கு சொன்னவைகளில் எத்தனை நிகழ்சிகள்  தவறானவை  எனபது  வெளிச்சமாகும்!


       அதாவது, உண்மைகள் என்று நீங்கள் நம்பிக்கொண்டு இருப்பவைகள் பொய்களாகவும், பொய்கள் என்று நீங்கள் நினைபவைகள், உண்மைகள் ஆகவும் மாறலாம்! (  கல்வெட்டுகளின் அழிவு பற்றிய பதிவு ஒன்றை இடும்போது சில உண்மைகளைச் சொல்லுவேன்!)


     அதற்கு முன்பு குந்தவை குறித்த மேலும் பல   விவரங்களைப் பார்க்கலாம்,  குந்தவைக்கு மந்தாகினி என்று மற்றொரு பெயர் இருந்துவந்தது என்பதை முன்பே பதிவில் குறிப்பிட்டு உள்ளேன்! இந்த பெயரில்  அழைக்கப்பட்டு வந்த குந்தவையின் அடக்க இடமும்  திருச்சியில் உள்ள  ஒரு தர்காவில்  உள்ளது!

   குந்தவையைக் காப்பாற்ற செஞ்சி அருகில் போரிட்டவரும், பாபா பக்ருதீன் என்று அழைக்கப் பட்டும் வந்தவரின்  சமாதியில் கட்டப்பட்டுள்ள தர்கா படம்: ஆந்திரா,அனந்தபூர் மாவட்டம், பெனுகொண்டா  என்ற இடத்தில் உள்ளது!


Thursday, 29 March 2012

தாலாட்டுப் பாடல்களில் குந்தவைக் குறிப்புகள்!

   சமயபுரம் மாரியம்மன்  தாலாட்டுப் பாடல்கள் குந்தவை நாச்சியார் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டபோது, சோழக்குடிமக்களும் அவரிடம்  அன்பு கொண்டோரும் அவரை சமாதானபடுத்தவும்அவர் எடுத்த
 முடிவை மாற்றிக்கொள்ளவும்  அல்லதுபரிசீலனை  செய்யுமாறு கேட்டும்,  அவர் இல்லையென்றால் எங்களது  நிலை என்னவாகுமோ,என்ற ஏக்கம்,
பரிதவிப்பு, இயலாத நிலை ஆகியவைகளைஅவருக்குஎடுத்துரைக்கும்  
வகையில்,தங்களது  கவலை மற்றும் அச்ச உணர்வினைத்
தெரிவிக்கும் வகையில்,    சமயபுரம் மாரியம்மன்  தாலாட்டுப் பாடல்கள் உள்ளதையும்,  அப்பாடல்கள் குந்தவையின்   பெருமைகளையும், அவரது இருப்பையும்  கூறுவதாக உள்ளதைக் காணலாம்!


"நாடி வந்தாள், தஞ்சை நகர் புகுந்தாள்,
நல்லவற்குத் தாயாக,தீயவருக்கு தீயாக
மாரிவந்தாள், உருமாறி வந்தாள்!
சமயபுரம் அவளின் படைவீடாம்,
புன்னைவனம்  நம் புகழிடமாம்
கண்ணபுரம் அந்த அன்னையகம்"


"பத்தாத பத்தினியே, பாரளந்தோன் தங்கையரே
என்டேன்றோர் பங்கில் ஒளியமாய் நின்றவளே,
அண்டம் தொழில் நாயகியே யாரிவர் உன்புதுமை
அன்னையே உந்தனோட அற்புதத்தைக் கண்டு எழுதி, 
 என்னால் எடுத்துரைக்க இயலுமோ தாயாரே,
கண்ணனூர் வீற்றிருந்து   கம்பாதி ரரீரோ"


" திரிசூல நாயகி தெய்வ கபாலனி
என் தீவினைபோக்க வருவாய்
அருலோங்கும் அருள்திரு அரங்கனின் தங்கையே"


"ஆன்றதவ முனிவர்கள் மன்னர்கள் பக்தர்கள்
வழிபட்டு வந்த தாயே
தஞ்சை வளர் மாறியே தாரணி புகழ் சக்தியே,
தஞ்சமே தாள் பணிந்தேன்"
"குமரிக் குடிலை சங்கரி போற்றி
குங்குமம் அணிந்த குந்தவை போற்றி
திகம்பரி திருநிலை நாயகி போற்றி
கண்ணனூர் அமர்ந்த கௌமாரியே போற்றி"


"அருள்சித்தர் பாபாவு ஆகிய திருமன்னர்கள்
வழிபட்டு வந்த தேவி;
கருணையின் உருவம் நீ,
கண்கண்ட தெய்வம் நீ,
சமயபுரத்தாளே சாம்பிராணி வாசகியே,
சமயபுரத் தெல்லைவிட்டு, தாயரே வாருமம்மா!
கண்ணபுரத்தாலே ,காரண சௌந்தரியே;
கண்ணபுரத் தெல்லைவிட்டு  காரணியே வந்தமரும்!"


"சத்தியங்கள் பூச்சொரிய சமயபுரம் நின்றவளே,
சங்கடங்கள் போக்க;சடுதியில் வாருமம்மா!
ஜாதி,ஜனம் காக்க, சமயபுரம் கண்டவளே!
கைதொழுவார் கரம் காக்க  கண்ணனூர் நின்றவளே,
கண்ணீர் மலர்தொடுத்து,கனத்த பூசை செய்திடுவோம்!"


கரகம் கொண்டுவந்தோம், காலி..முகம் பார்க்கலையே!
திருநீறு பூசிக்கொண்டு தேடிவந்தோம்,பார்க்கலையே!"

   இப்படியே மாரியம்மன்  தாலாட்டு, காளியம்மன் பாடல்கள்  உள்ளன. இவைகள்  ஏதோ,நானே  வலிந்து எழுதியதோ, நம்ம பதிவர்கள் சொல்லுவதுபோல கற்பனையாகவோ,ஞான திருஷ்டி  மூலமோ சொல்லவில்லை! சமயபுரம் கோயில் நிர்வாகம் மூலம் வெளியிடப்பட்ட,சமயபுரம் கோயில் தலவரலாறு நூலில் உள்ளதையே தந்துள்ளேன்!

     இந்த பாடல்களில், பாரளந்தோன்  (ராஜராஜன்} திரிலோகம்  சேர,சோழ பாண்டிய மூன்று நாடுகளின் அரசன், தஞ்சை தரணி, அரங்கனின் சகோதரி, குந்தவையின்  பெருமை  முதலிய பலவும் இடம்பெற்றுள்ளதை காணலாம்! மேலும் பலமன்னர்கள் போற்ற வாழ்ந்தவர், வழிபாடும் நிலையில்  இருந்தவர் என்பதுடன், அருள் சித்தர்  பாபாவு ஆகிய திருமன்னர்கள்  வழிபட்டு பட்டுவந்ததாகவும்  குறிக்கபடுகிறது! இந்த பாபாவு என்பவர்,இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப, சுந்தர சோழன் காலத்தில் வந்தவர்.பாபா பக்ருதீன் என்பவர். சிஸ்தான் நாட்டின் (இன்றைய துருக்கி நாட்டின் ஒருபகுதி) மன்னராக இருந்தவர். இவரது இயற்பெயர் ஷாபக்ருதீன் என்பதாகும்! இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்பவந்த, இவர்  திருச்சியில்  இருபத்து நான்கு ஆண்டுகள் தங்கியிருந்தார். உத்தமசோழன் காலத்தில்,குந்தவை நாச்சியார், ராஜராஜனின் தலைமறைவு வாழ்க்கைக்கு உதவிய இஸ்லாமியர்களில் ஒருவர்! பிறகு, இஸ்லாம் மார்கத்தை  பரப்பவேண்டி,  உத்தம சோழன் படைகளுக்கும்  இவருக்கும் செஞ்சியில்  போர் நடந்ததாக  இவரது வாழ்க்கை வரலாறு கூறுகிறது! பிறகு, இஸ்லாம் மார்கத்தை  பரப்பவேண்டி,தமிழகத்தை விட்டு சென்ற  இவரது  அடக்க இடம், சமாதி,(தர்கா-பாபா பக்ருதீன் சுகர்வாதி தர்கா என்றபெயரில்) ஆந்திரமாநிலம், அனந்தப்பூர் மாவட்டம்,  பெனுகொண்டா என்ற நகரத்தில்  உள்ளது!திருச்சியில் உள்ள தர்காவில் நடைபெறும் கந்தூரி விழாவுக்கு  இங்கிருந்து இஸ்லாமிய பக்கீர்கள் ஆண்டுதோறும் வருவது இன்றுவரை நடந்துவருகிறது!


      உமையவள், "ஞானசம்பந்தருக்கு பாலுட்டினாள்"  என்றால் அது நடைமுறையில் சாத்தியமா? உமையவள் ஊட்டியது ஞானபாலா? அல்லது தாய்பாலா?  அதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? இல்லை ஆதாரம் காட்டமுடியுமா? என்று கேட்டகாத,    நம்ம " நம்பிக்கைத் திலகங்கள்"ஆன்மீக அற்புதங்களை  திறந்த வாயை மூடாமல்  கேட்டுக்கொள்ளும் ஆன்மீக ஜீவிகள்,   வரலாற்றில்  இருட்டடிக்கப் பட்டு, வெளிச்சமிடப்படாத  தகவல்களை..  உள்ள ஆதாரங்களுடன், காரண காரியங்களுடன், நான் விளக்க வருவதை,எனக்கு கொஞ்சமும் நேரம் கொடுக்காமல், தாங்களாகவே  ஒரு முடிவுக்கு வந்து ,தங்களுக்கு தோன்றியபடி  விமர்சனம் செய்வது எனக்கு வியப்பை அளிக்கிறது! 

போகட்டும்  உள்ள ஆதாரங்களை  வரிசையாக  பார்வைக்கு  வைப்போம்!


Wednesday, 28 March 2012

குந்தவையின் மதமாற்றமும் சமயபுரமும்!

      குந்தவை நாச்சியார்,  இஸ்லாம் மதத்துக்கு  மாறிய  இடம்," சமயபுரம்"  எனத் தெரிகிறது, ஸ்ரீ ரங்கத்து  கோயில்ஒழுகு நூலிலும் அதுபற்றிய  குறிப்புகள் காணப் படுகிறது!  சமயபுரம் "கோயில் தல வரலாறும்"  அதனை  உறுதிபடுத்துவதாகவே உள்ளது!

        சமய பு(ர)றம் என்ற பெயர்,  காரணப் பெயராக  இருப்பதையும் காணலாம்!  குந்தவை இதுநாள் வரை  தான் சார்ந்து இருந்த..  மதத்தை  புறம் தள்ளி, புதிய மதத்தை  தழுவிக் கொண்டதால்  சமயபுற(ர)ம் என்று பின்னாளில் வழங்கப்பட்டு வருகிறது  எனத் தோன்றுகிறது! 

    இந்த ஊருக்கு   கண்ணபுரம், கண்ணனூர் ,விக்கிரமபுரம்,மாகாளிபுரம்  என்று பலபெயர்களில்  குறிக்கப் பட்டு வந்துள்ளது!

           இந்த இடம் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், 15 -வது கி,மீ.யில்  உள்ளது. மேலும் இந்த இடம்  ஸ்ரீரங்கம், அருகிலும் அமைந்துள்ளது.! 

          சமயபுரம் கோயில் நிர்வாகம்  ஆங்கிலேயர்  ஆட்சிகாலம் வரை ஸ்ரீ ரங்கம் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்துள்ளது! 
     ஆதியில்  ஸ்ரீ ரங்கத்தில்  எழுந்தருளியுள்ள  இந்த அம்மன்,உக்கிரமாக இருந்ததால், ஸ்ரீ ரங்கம் அய்யரின் உத்தரவுப்படி  சமயபுரம் பகுதியில் காட்டில்  வைத்துவிட்டு சென்றதாகவும்  பிறகு,  கண்டு எடுக்கப்பட்டு,   வழிபாட்டுக்கு  வந்ததாகவும்  கோயில்  வரலாறு அறிவிக்கிறது! 

         மேலும்  இங்கு  எழுந்தருளி இருக்கும்  அம்மன், சோழ அரசரின்  சகோதரி  எனவும், அவரை கங்க நாட்டின் மன்னனுக்கு  திருமணம் செய்தபோது, சீதனமாக  ஸ்ரீரங்கம் பகுதியை தானமாகக் கொடுத்து,சமயபுரம் பகுதியில் அவர்களுக்கு ஒரு அரண்மனையும்  கட்டிக் கொடுத்தார்கள் எனவும், அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்ட  இடம் அரண்மனை மேடு எனவும்,இனாம்   மேடு என்றும்  கோயில் வரலாறு  பலகுறிப்புகளைத் தருகிறது!

(கங்கபாடி(மைசூர்),நுளம்பப்பாடி,(பெங்களூர்) சூடவாடி,(ஹோசூர்) கோலார்,சித்தூர், வேலூர், வடுகவாளி  பன்னீராயிரம்  ஆகியவை வேங்கி நாட்டின்  பகுதிகளாக  சோழர்கள் ஆட்சியில் குறிப்பாக,  ராஜராஜன்,ராஜேந்திர சோழன் காலத்தில்  இருந்து வந்தன!)

         சமயபுரம் மாரியம்மன்  கோயில்,  மகா மண்டபத்தில்  இன்றுமுள்ள  இரண்டு தூண்களில்  குந்தவை நாச்சியார்  திருவுருவம் மிக நேர்த்தியாய்  செதுக்கப்பட்டு  உள்ளன. பதினோராம் நூற்றாண்டு  காலத்துச் சிற்பமாக உள்ள இந்த சிற்ப தூண் வேறு இடத்தில  இருந்து கொண்டுவரப்பட்டு, இக்கோயிலில் வைக்கப்பட்டு உள்ளது! 


         சமயபுரம் கோயிலுக்கு செல்லும் பெரும்பாலான  மக்கள், தூணின்மூன்றடி உயரமுள்ள   இந்த சிற்பச் சிலைக்கு  உப்பைக் காணிக்கையாக  செலுத்தி, தங்களது  வேண்டுதலை  இன்றும் நிறைவேற்றி  வருகிறார்கள்! 

      தமிழர்கள் வாழ்வில் 'உப்பு'மிகமுக்கிய இடத்தை பெற்றுள்ளது!  "உப்பிட்டவரை உள்ள அளவும் நினை" என்ற பழமொழியும்,  பண்பும்  தமிழர்களின் வாழ்வில் இன்றுவரை  நிலவி வருகிறது!  உப்பின் உயர்வு பற்றி தமிழர் இலக்கியங்களும் சுட்டிவருகின்றன.
  
         உப்பானது   செய்நன்றி மறவாமை, உண்டவீட்டுக்கு  துரோகம்  செய்யாமை,சத்தியம் தவறாமை,நீதி வழுவாமை போன்ற உயர்ந்த பண்புகளை வெளிபடுத்தும் காரணிகளாக , அடையாளமாக  தமிழர் வாழ்வில் தொன்றுதொட்டே  இருந்துவருகிறது! 

        இன்றும் உப்பினை முன்னிறுத்தி, தமிழ்மக்கள் பலரும் "சத்தியம் செய்யும்" உறுதிமொழி  ஏற்கும்   வழக்கம் நிலவி வருவதையும் பார்க்கும்போது, குந்தவை நாச்சியார்,இந்துமதத்தை  விட்டு, இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விலகிச் சென்றாலும் சோழ குடிமக்கள்,  அவரைத் தங்களது  அன்பிற்கும் போற்றுதலுக்கும் உரியவராக  கருதி வந்ததும், தங்களது நம்பிக்கையை காட்டும் செயலாகவும் உப்பை முன்னிட்டு, "சமயபுரம் கோயிலில் வேண்டுதல்களை நிறைவேற்றி  வருகிறார்கள்"  எனத் தோன்றுகிறது!

         ஏதோ  காரணத்தால்...  நாம் மதிக்கும் ஒருவர், நமது நலத்தை நாடும் ஒருவர்  கோபித்துக் கொண்டால்,  அவரை  சமாதானப் படுத்தவும், கோபத்தை  கைவிடச் செய்யவும்,  போற்றியும், அரற்றியும், புகழ்ந்தும்  கூறி, ஆற்றுப் படுத்துவது  இயல்பான  ஒன்று! உண்மையும் ஆகும்!

       சமயபுரம் மாரியம்மன்  கோயில் தாலாட்டுப் , பாடல்கள்  கூட  குந்தவையின் மதமாற்றத்தை  ஜீரணிக்க முடியாமல், தாங்க இயலாமல்,   அவர்மீது  மதிப்பு கொண்ட  சோழக் குடிமக்களின் புலம்பல்களாகவும், குந்தவையை, சமாதானப் படுத்தும் விதமாகவும்,  ஆற்றுதல் படுத்தும் பாடல்களாகவே  உள்ளதையும், அவரது பெருமைகளை கூறியும், புகழ்ந்துரைத்தும்  வருகிற பாடல்களாகவே.. உள்ளதையும் காணமுடிகிறது! அவைகளைக் குறித்து அடுத்துப் பார்க்கலாம்! 

       இன்னொரு  ரகசியம் என்னவென்றால், இன்றும் சமயபுரம் கோயிலுக்கு,  முஸ்லிம் இனப்பெண்கள் பலரும், "என்ன?  எதற்கு?"   என்று காரணம் தெரியாமலே வந்து, சமயபுரம்  மாரியம்மனை  வழிபட்டு  வருகிறார்கள்! கோயில் பொறுப்பாளர்களும்  அவர்கள் வழிபாட்டுக்கு  திரை அமைத்துக் கொடுத்து, உதவி செய்து வருகிறார்கள்.! 

       இந்த பெண்களின்  மூதாதையர்களும்  குந்தவை  இஸ்லாம்  மதம் தழுவியபோது,  இஸ்லாம் மதத்தை  தழுவியவர்களின்  வாரிசு,மற்றும்  மரபில்  வந்தவர்களாக  இருந்து, வழிவழியாக  தங்களது  மூதாதையர்களின்   வழக்கத்தை கடைபிடித்தும்,, தொடர்ந்தும்  வருவதாக  விளங்குகிறது!

      அப்புறம்... இன்னொரு விஷயம், ஸ்ரீ ரங்கம் கோயிலில்,  "லுங்கி அணிந்து செல்வதற்கு"  முன்பு தடை இருந்தது,    இப்போது இருக்கிறதா? என்று தெரியவில்லை! 
    (வாடகைக்கு  வேட்டியை  வங்கிச் சென்று..  அரங்கனை  சேவித்த நினைவு, இன்றும் இருக்கிறது! ஒரே ஒரு  லுங்கி மட்டுமே  உள்ள, அரங்கன் மீது பக்தி கொண்ட பரம ஏழை,    என்ன செய்வான்? அரங்கனை சேவிக்க முடியாமல் போனால்,அவன் மனம் என்ன பாடுபடும்? என்று  அப்போதே நினைத்து, இந்த தடையை  எதிர்த்து  வாதிட்டது கூட..  நினைவு இருக்கிறது!)

        போகட்டும்!   அப்போது  எனக்கு   இந்த தடை எதற்கு உள்ளது  என்று தெரியவில்லை. இப்போது  தெரிகிறது!   ஸ்ரீ ரங்கம் கோயிலில்  துலுக்க நாச்சியார்  இருப்பதால்,  முஸ்லிம்கள்  வந்து  பிரச்னை பண்ணுவார்களோ? அல்லது ஸ்ரீ ரங்கத்தை  தங்களது  வழிபாட்டு இடமாக  ஆக்கிக் கொள்வார்களோ? என்ற அச்சம் காரணமாக, பிராமணர்கள்  இந்த ஏற்பாட்டை  செய்து  இருக்கலாம்!
    
            சமய பு ர(ற)ம்   மாரியம்மன்  தாலாட்டுப்  பாடல்களில்  உள்ள குந்தவையைப் பார்க்கலாம்! அல்லது அவரது  மதமாற்றத்தை ஏற்க இயலாத  சோழக்குடி மக்களின்    ஆற்றாமை, புலம்பல்களை அடுத்து  பார்க்கலாம்!


Tuesday, 27 March 2012

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?

          ஸ்ரீ ரங்கம்  கோயிலில்உள்ள இரண்டாம்  பிரகாரம், ஈசானிய மூலையில்  துலுக்க நாச்சியார்  சன்னதி  உள்ளது.!

         இங்கு,இன்றுவரை   இஸ்லாமியர்கள் வழக்கப்படி,  கைலி(லுங்கி ) சாத்துவித்து,ரொட்டி,வெண்ணை போன்றவற்றைப் படைத்து,வழிபாடு நடத்தப் பட்டு வருகிறது!

         வைணவ  சன்னதியில்  துலுக்க  நாச்சியாருக்கு  ஏன் சன்னதி? துலுக்க நாச்சியார்  யார்? என்று கேட்டால் , வைணவர்கள்  சொல்லும் கதை  கேலிக்கு இடமளிக்கும்  கதையாகும்!

        இங்கே இருந்த  அரங்கன்மீது துலுக்கப் பெண்ணொருத்தி கொண்ட, பக்தி  நினைவாக,   அவருக்கு  சன்னதி ஏற்படுத்தி, இஸ்லாமிய முறையில்  வைணவர்கள்  வழிபாடு நடத்தி வந்தார்களாம். (அப்படியே உண்மை என்று  எடுத்துகொண்டாலும்  முஸ்லிம்கள்  அந்தகாலத்தில்  இருந்தார்கள் எனபது உறுதியாகிறது!)அந்த துலுக்க நாச்சியாரை  டெல்லி  சுல்தான் படையெடுத்து வந்து, அவரின் விக்கிரகத்தை  எடுத்துச் சென்றுவிட்டாராம்.

      ஆச்சாரியார்....  அதுதாங்க,   நம்ம  ராமானுஜ தாசர்  டெல்லிக்குப் போய் சுல்தானிடம் முறையிட்டு, விக்கிரகத்தைக்  திரும்ப கொண்டுவந்து  பிரதிஷ்ட்டை  செய்து வழிபட்டு வந்தனராம்!  "கோயில்  ஒழுகு"  கூறும்  நம்பமுடியாத  கற்பனைக் கதை என்று  நீங்கள்  நூறுசதம்  நம்பலாம்!

      ஏனெனில்,ராமானுஜர் காலத்தில், எந்த சுல்தானும்  டெல்லியில் ஆட்சி செய்யவில்லை!  தவிர, தென்னகத்துக்கு  டெல்லியில் இருந்து  அவர் காலத்தில்  யாரும்  படையெடுத்து வரவும் இல்லை!

       மாலிக்காபூர்  படையெடுத்து வந்தது கி.பி.1323  -யில் என்று கூறுகிறார்கள்! அதுவும்  அவர் ஸ்ரீ ரங்கம் கோயில் பக்கமே வரவில்லை  என்றும்  கூறுகிறார்கள் ! மேலும் ராமானுஜர் வாழ்ந்த காலம்  தென்னகத்தில்  முஸ்லிம்  படையெடுப்பு  நடைபெற்றதாக எந்த வரலாற்றுத் தகவலும்  இல்லை. இதில் இருந்தே,  ஸ்ரீ ரங்கம்  கோயிலில் உள்ள துலுக்கநாச்சியாருக்கும்  கோயில் ஒழுகு  கூறும் கதைக்கும்  எந்தவொரு  தொடர்பும் இல்லை என்பதை  தெளிவாக  உணரலாம்! 

   மேலும்  துலுக்க நாச்சியார், பற்றிய  செய்திகள்  ஸ்ரீ ரங்கம் கோயில்  ஒழுகு நூலில்  ஆச்சாரியார்களின்  வரலாறுக்கு  முன்பே இடம்பெற்று  உள்ளது. அதாவது  ஆச்சாரியார்களுக்கு  முன்பே, ஸ்ரீ ரங்கத்தில்  நடந்த நிகழ்ச்சி என்பதை  அறிவிக்கும்  வண்ணம் உள்ளது! இதில் இருந்து  துலுக்க நாச்சியார்   கதையும், வரலாறும்  முற்பட்டகாலத்தில் நடந்தவை என்பதை  விளங்கிக் கொள்ளலாம்.!

  ஸ்ரீ ரங்கம் கோயிலில் உள்ள  துலுக்க நாச்சியார்  யாராக  இருக்கும்?


    "சோழர்கள் காலத்தில்  மன்னர்கள் தெய்வ அம்சம் பொருந்தியவர்கள் என்னும் கருத்து  நிலவியது. சோழ  மன்னர்களை அவர்களது  ஆட்சிக்கு  உள்பட்ட சோழ ராஜ்ஜியத்தில் வாழ்ந்து கொண்டிருந்த  மக்கள் எல்லோரும் திருமாலின் அவதாரமாகவே  எண்ணிப் பேரன்பு  கொண்டு  ஒழுகி வந்தனர்"  
          ( தி.வை.சதாசிவ பண்டாரத்தார். பிற்கால சோழர் சரித்திரம் 3 -வது தொகுதி. பக்கம்-10)

          அதாவது  சோழ அரசன்  ராஜராஜனை  திருமாலாக  சோழப் பேரரசில்  உள்ள மக்கள்  வழிபட்டு வந்தனர்! அவர்கள் கட்டிய கோயிலில்  மன்னன், அரசமாதேவியின் சிலைகளை  வைத்தும் வழிபட்டு வந்தனர்!  அரசமகளிரும், சோழ அரசில்  செல்வாக்கு மிக்கவரும்  ஆன குந்தவை நாச்சியாரையும் அவ்வாறே  வழிபட்டு வந்தனர்! 

        தஞ்சையில்  ராஜராஜன் கட்டிய  பெரிய கோவிலிலும்  கூட மக்கள் தன்னை வணக்கும் விதமாக  குந்தவை நாச்சியார், தம்மையாக  ஒரு திருமேனி  செய்து  அளித்துள்ளார்!(வித்துவான் வே.மகாதேவன்  அவர்கள் எழுதிய சிவபாத சேகரனின் தஞ்சைக் கல்வெட்டுக்கள் நூல்)  

       ஸ்ரீ ரங்கமும் சோழர்கள்   ஆட்சிப் பகுதியில்  இருந்து வருவதுதான்! அங்குள்ள மக்களும்  குந்தவையை  வணங்கி இருப்பார்கள்  என்பதில்  சந்தேகமே இல்லை!   

    ஆனால்  ஸ்ரீ ரங்கத்தில்  இரண்டாம் பிரகாரத்தில், ஈசானிய மூலையில்   உள்ளதோ, துலுக்க நாச்சியார்  சன்னிதியாக உள்ளது! 

       குந்தவைதான்,    இந்த வைதீக  பிராமணர்களிடம்  உள்ள வெறுப்பு உணர்வால்,  பல்லவ மன்னன் மகேந்திர வர்மன்  முன்பு சமண மதத்தில் இருந்து,பிறகு சைவ மதத்துக்கு  மாறியதுபோல,(திருச்சிராப்பள்ளி மலையில்  மகேந்திர வர்மன்   சமணத்தில் இருந்து  சைவத்திற்கு மாறியது பற்றிய கல்வெட்டு காணக்கிடைகிறது)


      சைவ மதத்தை வெறுத்து, குந்தவையும்  இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டாரோ?  அப்படி அவர் மாறியதால்தான்...  குந்தவையை, இசுலாமியர்களுடன்  தொடர்பு  படுத்தி, கேலிசெய்து, தங்களது வக்கிரத்தை, ஆத்திரத்தை  பிராமணீயம்  வெளிப்படுத்தி  வருகிறதோ? 

       சரி, குந்தவை,  இசுலாம் மதம்  மாறியிருந்தால்...  அவர்மட்டுமா மாறியிருப்பார்?   அவருடைய ஆதரவாளர்களும்  கூட மாறியிருப்பார்கள் அல்லவா?! மேலும் , அவரது மனதை மாற்றவும், தடுக்கவும் கூட முயன்று இருப்பார்கள் அல்லவா? 

       அது மட்டுமின்றி, அவர் இசுலாம் மதத்துக்கு  மாறியது  எனபது,  எப்போது ? எங்கே நடந்திருக்கும்?  அதுகுறித்த ஆதாரங்கள்  உள்ளதா?  பிராமணீயம் அந்த ஆதாரங்களை  விட்டு வைத்திருக்குமா? இல்லை, எல்லாவற்றையும்  அழித்து இருக்குமா?  எல்லாவற்றையும்  எப்படி அழித்திருக்க முடியும் ?  

       எவ்வளவுதான்  திறமையாக  குற்றம் செய்பவர்களும்  கூட, எதாவது  சில தடயங்களை  தங்களை அறியாமல்  விட்டுவிடுவதில்லையா? அவைகளைக் கொண்டு, துப்பு துலக்கி,  குற்றவாளிகளை  கண்டுபிடிப்பதும், சமூகத்துக்கு  அடையாளம் காட்டி, தண்டனை பெற்றுத் தருவதும்  நடந்து வருகிறது!  

      பிராமணீயத்தின்  கண்ணில் பட்ட பிறசமய  இலக்கியங்கள், நூல்கள்  இன்றுவரை  கிடைகாமல்  போனது  தமிழர்களின் "துரதிஷ்டம் " என்று  இலக்கிய ஆய்வாளர்களும், வரலாற்று  ஆய்வாளர்களும்  சொல்லி வருகிறார்களே! 

       இதுபோன்ற,குந்தவையின் மதமாற்றத்தைப்  போன்ற வரலாற்றை  மறைக்கத்தான்  பிறசமய  நூல்கள் கிட்டாத நிலையை, " பிராமணீயம்"  ஏற்படுத்தி  இருக்கிறதா?

       பிறசமய நூல்களை  தேடிக் கண்டுபிடிக்க , ராஜராஜன்  செய்த முயற்சியை  தான், அவன்,  திருமுறைகளை  தேடிக் கண்டுபிடித்தான்,  அதனால் அவனை  "திருமுறைகண்ட  சோழன்" என்று  வரலாற்றில்  திசைமாற்றி  தவறாகசொல்லி வருகிறார்களோ ?என்றும்  கருத தோன்றுகிறது !


        இவ்வளவையும்  மீறி, குந்தவை  மதம் மாறியிருந்தால்,  அவர் மதம் மாறியது குறித்து  அறிந்துகொள்ள உதவும், பிராமணீயத்தின்  பார்வையில் இருந்து  தப்பிப் பிழைத்தும்  பிராமணீயம் அழிக்காமல்  விடப்பட்டும் உள்ள ஆதாரங்கள்  இருக்கலாம் அல்லவா? 

     அப்படி ஏதேனும் இருக்கிறதா?  இருக்கிறது!   இருப்பதாக  நான் கருதும்  ஆதாரங்களையும்  அவற்றுக்கான  காரண  காரியங்களையும்  அடுத்துப் பார்க்கலாம் !
                                                                                                                                                                                                                                                                                                                                                                                     

Sunday, 25 March 2012

குந்தவை குறித்த, பிராமணீயத்தின் வக்கிரம்!

         குந்தவைநாச்சியார், சோழப் பேரரசில்  மிகுந்த  செல்வாக்கோடு  விளங்கிவந்தார்! சோழ பேரரசில்  உள்ள மக்கள்  அவரை  தெய்வமாகவே  எண்ணி வழிபட்டு வந்துள்ளனர்! அவரை மட்டுமின்றி, பொதுவாக  அரச குலத்தைச் சேர்ந்தவர்களை,  "தெய்வாம்சம் பொருந்தியவர்கள்"  என்று கருதியும்,"இறைவனாக" பாவித்து, வணங்கிவந்துள்ளனர்.


             ராஜராஜன்  உடம்பில்  சங்கு,சக்கர குறிகள் இருந்ததாகவும்,  'இரண்டாம் மனுவே'  பிறந்து வந்ததாகவும்  கூறி, உடையார்,திருமால், பெருமாள்,தேவர்  என்று பலபெயர்களில்  போற்றி வந்துள்ளதை வரலாறு அறிவிக்கிறது! 

      குந்தவை நாச்சியார், சமயபொறையுடன்,எல்ல சமயத்தவர்களுடனும்  பேதம் பாராட்டாமல்,  நடந்துகொண்டும், அவர்களுக்கு உதவிகள் செய்தும் வந்துள்ளார்!  அப்படி அவரிடம் உதவி பெற்றவர்களில்  இஸ்லாமியரும்  இருந்தனர்!

      இஸ்லாம் ஞானியார்  தபலே ஆலம் பாதுஷா  என்கிற,  "நத்தர் வலியாரை" தனது  ஆன்மீக குருவாகவும், அரசியல்  வழிகாட்டியாகவும்  குந்தவை  ஏற்று கொண்டிருந்தார் !  அவரது  சீடர்களுடனும்  அவருக்கு தொடர்பு  இருந்துவந்தது.இவர்களில் அனந்தபூர் மாவட்டம்   
 
         ராஜராஜனின் இளமைக்காலத்தில்  உத்தம சோழனால் தனக்கும்  தம்பி ராஜராஜனுக்கும்  ஆபத்து ஏற்படாமல்  காப்பாற்றியவர்கள், பாதுகாத்தவர்கள்   இசலாமியர்கள்  என்ற நன்றிப் பெருக்கில்  குந்தவை, இசலாமியர்களுடன் பழகி வந்தாலும் , சோழப் பேரரசில்  உள்ள மக்களும் ஏனைய  பிற சமயதினர்கள்  அதனை  பெரிதாக, ஒரு பொருட்டாக  கருதமால்,   அவரிடம் அனுப்பு கொண்டு  இருந்துவந்த  நிலையில்,  பிராமணர்கள்களால,அவ்வாறு  இருக்கமுடியவில்லை. காரணம் பிராமணீயம்  பெண்களை குறித்து கொண்டிருந்த  மோசமான மதிப்பீடு, மற்றும்  கணவனை இழந்த  பெண்களைக் குறித்த அதனது  பார்வையும்தான்!
 
        பேரரசின் செல்வாக்கு உள்ள  பெண்ணாக இருந்தாலும், அவர் எத்துனைதான்   மக்களுக்கு  சேவை செய்பவராக இருந்தாலும் கூட, பெண்,அதுவும் ஒரு விதவைப் பெண் என்ற கருத்தோட்டதுடனேயே , இந்துமதம்  என்கிற பிராமணீய  மதம் அவரைப் பார்த்து வந்துள்ளது  எனபது, குந்தவை தாதாபுரத்தில்  கட்டிய  கோயிலில்  இடம் பெற்றுள்ள  சுதை உருவங்கள், நமக்கு சொல்லாமல் சொல்லுகின்றன.!


          குந்தவை கட்டிய ரவிகுல மாணிக்க ஈஸ்வரம் கோயில் விமானத்தின் நடுவில்  சாலைகளும், கர்ணக்கூடுகளும்   உள்ளவாறு அமைக்கப்பட்டு உள்ளது.!  இவைகளில் பல்வேறு சுதை உருவங்கள் வடிவமைக்கப்பட்டு  உள்ளன.

        இந்த சுதை உருவங்களில்  ஒரு பெண் உருவம்,இரண்டு கால்களை அகற்றியவாறு,ஆடைகளின்றி நிற்பதாக ,  ஒரு சுதைஉருவம் உள்ளது!          
      இவ்வாறு உள்ள அந்த பெண்ணுருவத்தை, குல்லாய் அணிந்த ஒரு போர்வீரன்  அமர்ந்தநிலையில்  உற்றுப் பார்த்தபடி ஒரு உருவம் செய்யப்பட்டு உள்ளது . இந்த உருவங்களுக்கு     அடுத்து, இந்த காட்சியை  சந்தோசப்பட்டு பார்த்து, ஒரு சிவகணம் சங்கு ஊதுவது போல ஒரு சுதை உருவம்  உள்ளது. அடுத்து  ஒயிலாக  நிற்கும் ஒரு மங்கையின் உருவமும்,தாடியுடன் உள்ள முனிவரும், அந்த முனிவரை வணங்கி நிற்கும் இரண்டு  பெண்ணுருவமும், ரவிகுலமானிக்க ஈஸ்வரத்து, விமானப் பகுதியில் இடம்பெற்று உள்ளன.   (  ஆதாரம்.குந்தவைக் கலைகொயில்கள்.நூல் ஆசிரியர், புலவர். முத்து.எதிராசன்.M.A,பக்கம் -114 ,சென்னை,செகர்பதிப்பகம் வெளியீடு.) 

         குந்தவை கட்டிய கோயிலில், குல்லாய் அணிந்த போர்வீரன், ஆடை யற்ற அணங்கு,  ஒருத்தியை உற்று நோக்குவது, இந்துமத பாசிச வாதிகளின் இஸ்லாமிய  வெறுப்புணர்வை  காட்டுகிறது! 


     மேலும் குந்தவையின் இஸ்லாம் மதத் தொடர்பை  சுட்டி, அதனை மறைமுகமாக, அவரது ஒழுக்கக் கேடாகவும்,அவரது நடத்தையை, கேலிசெய்யும்  பிராமணீய வக்கிரமாகவும்  எண்ணத் தோன்றுகிறது! 

     தமிழகத்தில், ராஜராஜனது  ஆட்சியில்  குந்தவை  கட்டிய கோயில்கள், மடங்கள், அறச் சாலைகள்,  ஆதூலச் சாலைகள்  யாவும்  இன்றும்  இருக்கின்றன. 

         ஆனால்,  அவைகள்  குந்தியம்மன் பெயரிலும், திரவுபதை, கோயில்களாக  பிராமணீயம்  மாற்றியும்  வரலாற்றை மறைத்தும்  காட்டி வருகிறது., 

       ஐந்து ஆண்களுக்கும்  பத்தினிகளான( ?}இவர்களுக்கும்  தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம்? பஞ்சபாண்டவர்களில்  தருமவழியில் நின்றவன்  என்று கூறப்படும் யுதிஷ்டிரனுக்கு  தமிழகத்தில் கோயில் இல்லை.!


       ஆனால் அவனது, தாயுக்கும், மனைவிக்கும்  கோயில் கட்டியது யார்? அப்படி என்ன பெருமை அவர்களுக்கு?  எதுவும் இல்லை. அவர்களுக்கும் தமிழகத்துக்கும்  எந்த வித தொடர்பும் இல்லை! 

      உண்மையைச் சொன்னால், ஸ்ரீ வில்லிபுத்தூரார்  பாரதம் எழுதுவதற்கு முன்பு, இவர்களைப் பற்றிதமிழர்களுக்கு தெரியவே வாய்ப்பில்லை! ஆனால், வில்லிபுத்தூரார் பாரதம் எழுதுவதற்கு  முன்பே, நூற்றாண்டுகள்  இடைவெளிக்கு முன்பே,  வாழ்ந்த  குந்தவை நாச்சியாரின்  வரலாற்றை  மறைக்க வேண்டிய தேவையும் அவசியம்   பிராமணீயர்களுக்கு  இருந்துள்ளது எனபது விளங்குகிறது! 

 
       குந்தவை குறித்த வரலாற்றை, மறைக்க,"பிராமணீயம்" ஏன்  அக்கறை  காட்டுகிறது ? ஏன், ராஜராஜன்  தனது அந்திம காலத்தில்,"இரணிய கர்ப்பம்" என்ற சாதிமாற்ற  சடங்கினைச்  செய்யும் சூழல் ஏற்பட்டது?  என்பதெல்லாம்  பார்க்கவேண்டி இருக்கிறது!

 

Friday, 23 March 2012

தாதாபுரம், ராஜராஜபுரமாக இருந்தபொழுது !

                                                                                                                                                                                                                                                                                    திண்டிவனதிலிருந்து புத்தனேந்தல்...அங்கிருந்து சிங்கேனிகுப்பம்( செங்கழுநீர் குப்பம்} செல்லும் வழியில்,கீழ்மலையனுருக்கு அருகில்ஒரு மைல் தூரத்தில்   உள்ளது  தாதாபுரம் என்ற ஊர் .

      இது  ராஜராஜன் ஆட்சிக்காலத்தில்  பேரூராக,நகரமாக  விளங்கிவந்த ஊர். ராஜராஜனின்  சகோதரி  குந்தவை நாச்சியார்  இந்த ஊரில்  கோயில்கள் கட்டி உள்ளார். அதுவும் தஞ்சைக் கோயிலை  ராஜராஜன் கட்டுவதற்கு முன்பே கட்டியுள்ளார். இந்த ஊருக்கு   தனது  தம்பியின் பெயரை," ராஜராஜபுரம்" என்று பெயரை வைத்து,அவனது புகழைப் பரப்பி உள்ளார்!
                          
     இன்றைக்கு 1008  - ஆண்டுகளுக்கு முன்பு,கி.பி.1004 -இல்  தான் கட்டிய கோயில்களில்  குடமுழுக்கு வைபவங்கள் செய்து,மக்களின் வழிபாட்டுக்கும்,நாட்டிற்கும் அர்பணித்து  உள்ளார்!  ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரிய கோயில்  கி.பி.1010  -இல் வழிபாட்டுக்கு வரும் முன்பே  குந்தவை கட்டிய கோயில்களில்  வழிபாடுகள் நடந்துள்ளன.


   குந்தவைக் கட்டிய,  'ஸ்ரீ ரவிகுல மாணிக்க ஈஸ்வரம்'  என்ற  கோயிலும்,  இப்போது,சிவன் கோயிலாக கூறபடுகிறது. 'ஸ்ரீ விண்ணகர் ஆழ்வார்  திருகோயிலும் , இன்று  கரிவரதராஜர்  என்ற பெயரில் விஸ்ணு கோயிலாக கூறபடுகிறது.   ஸ்ரீ  குந்தவை ஜீனாலயமும்  கட்டி  தனது தம்பியின் பெயரை விளங்கச் செய்துள்ளார்.

       குந்தவை ஜீனாலயம்  சமணர்களின் கட்டுபாட்டில் விளங்கி வந்தது. இன்று ஜீனாலயம் அழிந்துவிட்டது. அது இருந்த இடத்தில கட்டிடத்தின் செங்கல்களும்  ஓடுகளும்  காணக் கிடைகின்றன,   இந்த ஊருக்கு பக்கத்தில் உள்ள பழைய கிணறு ஒன்றில் இரண்டு ஜைனத் திருமேனிகள் கிடைத்தன. அவைகள்  சென்னை அருங்காட்சியில் படிமக்கூடத்தில்  வைக்கப்பட்டு உள்ளன.

        இந்த ஊருக்கு அருகில்  இரண்டு கல் தொலைவில்  கிழக்கே உள்ள சமணர்கள் குன்றில்,  சமணர்கள் சிலர் இன்றும் வந்து,ஆண்டுக்கு ஒருமுறை  வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்!  சமணர்கள் குன்று, இன்று சாமான் குன்றாக  பெயர்மாறி விட்டது!   குந்தவை கட்டிய ஜீனாலயம்  கற்கள்  இந்த ஊர்  ஏரியின் களிங்குகளுக்கும், மதகு போன்ற பகுதியின் பயன்பாட்டுக்கும்,  சிலரின் தனிப்பட்ட சொந்த உபயோகத்துக்கும்  பயன்படுத்தப் பட்டு உள்ளது!  

       ஸ்ரீ குந்தவை ஆழ்வார்  விண்ணகரம்  என்ற கரிவரதராஜர் கோயிலில்   பத்து கல்வெட்டுகள்  வெட்டப்பட்டு காட்சி அளிக்கிறது,இதில் உள்ள படிமங்கள், சிலைகள் எல்லாம் பதினாறாம் நூற்றாண்டில் திருத்தப்பட்டு உள்ளன.

     ரவிகுல மாணிக்க ஈஸ்வரம்  என்பதை,குந்தவை தனது சகோதரன் ஆதித்ய கரிகாலன் நினைவாக  எடுபித்த கோயிலாக தெரிகிறது. மேலும் சோழர்கள் குலம், "சூரியக் குலம்" என்றும் சொல்லபடுகிறது. இதில் இருந்த, சூரியன் சிலை அல்லது  ஆதித்த  கரிகாலனின்  சிலை,   கைகால் சிதைக்கப்பட்டு, தனியார் ஒருவரின் தென்னந்தோப்பில் இருந்துள்ளதை கண்டறியப்பட்டது! 

       கோயில்களை  உள்ள செப்பு பிரதிமம்,சிலைகள், முதலியவற்றை திருத்தி உள்ளனர். காரணம்  குந்தவையின் அறிய செயல்களையும்,அவளது வரலாற்றில் நடந்த பல அதிர்ச்சி,மற்றும் ஆச்சிரியமான  செய்திகளை   மறைக்கவும், பிராமணர்கள்   வரலாற்றை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளவும், கோயில்களை பிராமணர்கள் தங்களது ஆதிக்கத்தில்  தொடர்ந்து  வைத்து வரவும்தான்!

  பெருமாள் கோயிலாக  இப்போது  அழைக்கப்படும் கோயிலை   இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள்  ஸ்ரீ குந்தவை விண்ணகர தேவர் என்றும்,ஸ்ரீ குந்தவை  விண்ணகர ஆழ்வார் என்று மட்டுமே குறிப்பிடுகின்றன . 

    இக்கோயிலில் உள்ள ராஜராஜனின் இருபத்தி ஐந்தாண்டு  ஆட்சிக் கல்வெட்டு, "கோவி ராஜராஜ  கேசரி பன்மரான ஸ்ரீ ராஜராஜ தேவருக்கு யாண்டு இருபத்தஞ்சாவது வேன்குன்றக் கொட்டது  நல்லூர் நாட்டு நகரம் ராஜராஜ புரத்து உடையார் பொன்மாளிகையில் துஞ்சின  தேவர் திருமகளார் ஸ்ரீ பராந்தகக் குந்தவைப் பிராட்டியார் இன்னகறது எடுப்பித் தருளினஸ்ரீ குந்தவை விண்ணகர் ஆழ்வார்க்கு"  என்று கூறுகிறது! 

    தஞ்சையிலும்  குந்தவை,தனது தந்தை  சுந்தரச் சோழன் பெயரில் ஒரு விண்ணகரம் எடுப்பித்து இருந்தார் எனத் தெரிகிறது! திருச்சிராப்பள்ளி- தஞ்சாவூர்  சாலையில்,திருவெறும்பூர் தெற்கே சூரியூர் செல்லும் சாலையில் உய்யகொண்டான் ஆற்றின் கரையில் அமைந்துள்ள  ஊர்  சோழமாதேவி என்ற ஊராகும். இந்த ஊரிலும் ஸ்ரீ வீரசோழ விண்ணகரம் என்ற பெயரில் ஒரு ஆதூலச் சாலை(மருத்துவமனை)  நடந்துவந்ததாக  ஒரு கல்வெட்டு அறிவிக்கிறது. எனவே, விண்ணகரங்கள், மருத்துவ மனைகளாக  இயங்கும் நோக்கத்தில்  கட்டப்பட்டு வந்துள்ளன. பிறகு, பெருமாள்,விஸ்ணு, திருமால்  கோயில்களாக  ஆக்கப்பட்டுள்ளன என்பதும், திருத்தப்பட முடியாத  சிலைகள், சிற்பங்கள்  பிராமணர்களாலும்  அவர்களது ஆதரவாளர்கள்  மூலமும்  அகற்றப்பட்டும், சிதைக்கப்பட்டும் உள்ளன எனபது விளங்குகிறது!    
       
     இந்த தாதாபுரத்துக்கு வடமேற்கில்  உள்ள ஊர்  தெள்ளாறு. இறைவன் பெயர்  மூலடநேச்வரர்.இங்கேதான்   வரலாற்று சிறப்பு மிக்க, " தெள்ளாற்றுப் போர் " சோழர்கள்  காலத்தில்  நடந்தது!  தாதாபுரத்தை  சுற்றி உள்ள  பல்வேறு ஊர்களில்  பல்வேறு சமயக் கோயில்கள் இருந்துள்ளன. 

   குந்தவை கட்டிய  கோயிலின்  கோபுரத்தில்,  அவரது  நடத்தையை  கேலிசெய்யும்,  பிராமணீயத்தின்  வக்கிரத்தை  வெளிபடுத்தும்  விதமாக  உள்ள சுதை உருவங்கள்  சொல்லும்  உண்மைகளை  அடுத்துப் பார்க்கலாம்! 
                                                                                                      .                                    

Tuesday, 20 March 2012

உலகமே போற்றவேண்டிய, " தமிழச்சி" குந்தவை! ,

     இன்றைக்கு நாம் உதாரணமாக  காட்டும் எந்தவொரு  பெண்ணையும் விட  சிறப்பும்,செயலாற்றலும், அன்பும், கருணையும், சமயபொறையும்,  அறிவும், ஆட்சித் திறனும்  கொண்டிருந்தவர்,  ராஜராஜனின்  சகோதரி  "குந்தவை நாச்சியார்"  என்று  உறுதியாக    சொல்லமுடியும்! 

     ராஜராஜன்  தனது ஆட்சிக்காலத்தில்  போற்றிய இரண்டு  பெண்மணிகள்  செம்பியன் மாதேவியாரும்  அவனது சகோதிரி குந்தவை நாச்சியாரும் என்று வரலாற்று ஆசிரியர்கள் பலரும்  உறுதிபடுத்தி உள்ளனர்!

     ராஜராஜன்  தனது அக்காள் குந்தவை நாச்சியார் மீது  அளவற்ற அன்பு கொண்டிருந்தான் என்பதை எடுத்துக் காட்டும் வகையில்   குந்தவை தஞ்சை கோயிலுக்கு கொடுத்த கொடைகளை, ராஜராஜெச்வரம்  கோயில் கல்வெட்டில்  "நான் குடுதனவும்,நம் அக்கன் கொடுத்தனவும்,நம் பெண்டுகள் கொடுத்தனவும்,கொடுத்தார் கொடுத்தனவும் கல்லிலே வெட்டுக" என்று  உத்தரவிட்டு இருந்தான் என்பதையும்  குந்தவை நாச்சியார்,  "சிதம்பரம் கோயிலுக்கு  பொன் வேய்ந்தால்" என்பதையும்  முன்பே பதிவுகளில் குறித்து இருக்கிறேன் !

    ராஜராஜன்  ஆட்சிக்கு வரும்வரை  அவனைப் பேணிப்பாதுகாத்து  மட்டுமின்றி  அவன் அறிவில் சிறந்த  அரசனாக  திகழ்வதற்கும்,சோழர்களின் பொற்காலம் அவனது ஆட்சிகாலம்  என்று  வரலாறு  குறிப்பதற்கும்,வீரத்தின் விலை நிலமாய் அவனை  போற்றுவதற்கும்     காரணமானவர்,  அவனது சகோதரி  குந்தவை நாச்சியார் தான்! 

    தனது தம்பி  ராஜராஜன் மீது அளவற்ற அன்பும்,நமிக்கையும் கொண்டிருந்த குந்தவை நாச்சியார், ராஜராஜனது  ஆட்சியில் அவனுடன்  சேர்ந்து பங்கேற்றும் வந்துள்ளார்.! முடியாட்சியில் ஒரு குடியாட்சியை  நிறுவும் உயரிய நோக்கத்தில்,  குடவோலைத் தேர்தலை  கண்காணிக்கும் பொறுப்பில்  ஈடுபட்டு வந்துள்ளார் என்பதை திருமழபாடி கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

      அதுமட்டுமின்றி  குந்தவை நாச்சியார், தனது தந்தை, சகோதரர்கள் போலவே  சமயப் பொறையுடன் நடந்துகொண்டு வந்ததுடன்  எண்ணற்ற ஜீனாலயங்கள்,(சமணர்கோயில்) விண்ணகர்கள், அறச்சாலைகள், ஆதூலசாலைகள் (மருத்துவமனைகள்) ,கல்விபணிகள்,போன்றவற்றிக்காக  மடங்களை  நிறுவி உள்ளார்!

     அவரது  அரசியல், சமூகப் பணிகள்  யாவும் பிராமணீயத்தின் பெண்கள் குறித்த   பாசிச,கொடூர குண இயல்பினால் ,வரலாற்றில்  இருந்து மறைக்கப்பட்டும்  திரிக்கப்பட்டும் உள்ளதை அறிய முடிகிறது!(அவ்வாறு  பிராமணீயம் செய்ததற்கு  கரணம்   என்னவென்பதை  பிறகு பார்ப்போம்). 


குந்தவை செய்த பணிகளில் சிலவற்றை  இப்போது போர்ப்போம்: 

உத்திர மேரூரில் குந்தவையின் பெயரில் மேடம் ஒன்று வெகு சிறப்பொடு இயங்கிவந்ததை  (தென்னிந்திய கல்வெட்டுகள் 184 / 1923 ) விளக்குகிறது. 

                திருவாஞ்சியம்,வாஞ்சிநாதர் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு,   " திருகாமமுடைய நாச்சியாருக்கு கோயில் ஏற்படுத்தப் பட்டதையும்,இக்கோயிலில் நாச்சியார்  திருமேனி "  செய்து அளிக்கப்பட்டதையும்  தெரிவிப்பதுடன், வடக்கு வீதியில், நாச்சியார் பெயரில் மேடம் ஒன்று ஏற்படுத்தப் பட்டதையும்   அறிவிக்கிறது! 

        தஞ்சை மாவட்டம்,கீழையூரில்  கோயிலிலும் மடத்திலும் பணி மேற்கொண்டவர்களின்  பட்டியலை  கல்வெட்டு  (தென்னிந்திய கல்வெட்டுகள்,74 ,76 /1925  ) தருவதால், கீளைய்ரில் மேடம் ஒன்று இயங்கிவந்ததை அறியமுடிகிறது!  இந்த மடத்தில் இருந்த சிலரை   திருவலான்காட்டில் உய்ள்ள மடத்துப் பணிக்கு அனுப்பியுள்ளதை (தென்னிந்திய கல்வெட்டுகள் 91 ,90 / 1926 ) தெரிவிக்கிறது! 


இதில் இருந்து  சோழன் ஆட்சியில் மடங்களின் நிர்வாகம் ஒருங்கிணைக்கப்பட்டு, அலுவலர்களால்  நடத்தப்பட்டு வந்தது விளங்குகிறது! ராஜராஜன்  தான் வென்ற பெரும் நிலப்பரப்பை  நேரடியாக  ஆட்சி செய்தான், நிலங்களை அளந்து முறைபடுதினான், அரசின் வருவாய்க்கு  அத்தகைய சீர்திருத்தம் தேவையாக இருந்துள்ளது. மேலும் தனது ஆட்சியில் பல்வேறு மடங்களைக் கட்டி, அவற்றையும் நிர்வாக வசதிக்குப் பயன்படுத்திவந்தான் என்பதெல்லாம்  விளங்குகிறதல்லவா?  

" சுத்தமல்லி வளநாட்டு ராஜாதிராஜ சதுர்வேதி மங்கலத்து  ஸ்ரீ மற்றுவரார்பதி மண்டலத்தார் மடத்து விருத்திக்கும் ,வண்டுவராபதி மகாமுனிகளும், இவர் சிஷ்யை பெரியபிராட்டியும்  தங்கள் அர்த்தமிட்டுக் கொண்டு இவர்க்கு மடப்புற இறையிலியை அனுபவித்துப் போதுகிற இவ்வூர்ப் பிடாகை சோழ நல்லூர் " (தென்னிந்திய கல்வெட்டுகள்  தொகுதி,6 ,கல்.56 ) 

  ஸ்ரீ மற்றுவராபதி  பொறுப்பில் இயங்கிவந்த மடத்துக்கு குந்தவை நாச்சியாரும்  அவரது குருவும் சோழ நல்லூர் கிராமத்தின் நிலங்களை வரியில்லாமல் செய்து கொடுத்துள்ளதும், அரசுக்கு செலுத்தும் வரி வருமானத்தை  மேற்கண்ட மடத்தின் நிர்வாக செலவுகளுக்கு  பயன்படுத்திக் கொள்ள   செய்துள்ளதும் விளங்கும்!  

 மேடம்,பள்ளி, விகாரம் , விண்ணகர்  கோயில்கள்  ஆகியவைகள் முக்கிய நகரங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவைகள் இயங்கிவந்தன. மேற்கண்ட மடங்களில் மட்டும் இன்றி  கோயில் தாழ்வாரப் பகுதிகளில் கிராமப் பள்ளிக்கூடங்கள் இயங்கிவந்ததை  கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. படம் சொல்லித் தரும் வாத்திகளுக்கு,கிராம போதுநிலத்தில் கிடைக்கும் வருவாயில் இருந்து ஊதியம் கொடுக்கப்பட்டு வந்தது!

     இதனை தென்னாற்காடு  மாவட்டம் பனையவரம்  என்ற கிராமத்தில் இலவச பள்ளிக்கூடம் இயங்கிவந்த ஆதாரத்தில் இருந்து அறியவருகிறது!  

        குந்தவை நாச்சியார், போளூர் வட்டம்  திருமலையில் உள்ள சமண சமயக்கொயிளையும், திருச்சி, மேற்பாடியில் உள்ள சமணக் கோயிலையும் எடுப்பித்தார் எனக் கல்வெட்டுச் செய்திகள் எடுத்துரைகின்றன . 

     வேலூர் மாவட்டம் வேடலில் சமணமடம்  இருந்ததை தென்னிந்திய கல்வெட்டுகள் (85 /1980 ) அறிவிக்கிறது! இந்த மடத்தில் 500 -மாணவர்கள்  ஒருபுறமும், 400 - மாணவர்கள் மறுபுறமும் இரண்டு பெண் துறவிகள் மேற்பார்வையில் கல்வி கற்றனர்! என்பதை அறிவிக்கிறது! 

  காஞ்சீபுரம் அருகில் உள்ள திருபருத்திக் குன்றம்  சிற்றூரில் இன்றளவும் புகழ்பெற்ற சமணக் கோயில் இருந்து வருகிறது.இங்கும் மேடம் ஒன்று அந்நாளில் இயங்கிவந்தது. இவைகள் எல்லாம் சில உதாரணங்களே!   


குந்தவையின்  அரசியல் சமுதாய நலப்பணிகளுக்கு  சில எடுதுக்காட்டுகளாகவே இவை தரப்பட்டு உள்ளது!

    இவையன்றி, இன்றைக்கு  தாதாபுரம் என்று அழைக்கப்பட்டு வரும்  ஊரில்  தஞ்சையில் ராஜராஜன் கோயில் கட்டுவதற்கு முன்பே, ரவிகுல மாணிக்க ஈஸ்வரம், கரிவரதராஜா பெருமாள் கோயில் என்று  அழைக்கப்படும்     விண்ணகரம், ஜீனாலயம்   என்னும் சமணர்களின் மடம் ஆகியவைகளை குந்தவை கட்டினார்! 

    ராஜராஜபுரம் என்ற பெயருடன் நகரமாக அன்றைய நாளில் இருந்த தாதபுரம்  அருகில் பிரமபுரம்,எசாலம், எண்ணாயிரம்  ஆகிய வரலாற்று சிறப்புமிக்க  ஊர்கள் உள்ளன. தொண்டை மண்டலமாகவும்,  ஆதிய கரிகாலன், வல்லவரையன் வந்தியத் தேவன் ஆகியோர்களின் ஆளுமைப் பிரதேசமாகவும்  விளங்கிய இந்த பகுதியில்  குந்தவைக் கட்டிய  கோயில்களில்  ஜீனாலயம் தவிர இரண்டும் இன்றும் உள்ளன. அவைகளைப் பற்றி அடுத்து பார்ப்போம்! Monday, 19 March 2012

புருஷா மிருகமும், இந்துமத ஆன்மீக பொய்யுரைகளும்!

      எமது தமிழினத்தின் இணையற்ற  சிந்தனையாளர்களில், சிறந்த ஒருவன் திருவள்ளுவன்.! அவன் சொல்லுகிறான்.   அவனது குரலாக  அவனது திருக்குறள்  சொல்லுகிறது,...

" எப்பொருள் யார்யார்  வாய்க்கேட்பினும் அப்பொருள் 
 மெய்ப்பொருள் காண்பது அறிவு." என்கிறான்!

       நம்மவர்கள்,  மெய்பொருள் காண்பதை பல்வேறு அளவீடுகளில்  காண்கிறார்கள் என்று தோன்றுகிறது! 
      தாங்கள் இதுவரை கண்டது, கேட்டது, உண்மை என்று நம்புவது... ஆகியவற்றிற்கு எதிராகவோ,மாற்றுக் கருத்துக்களோ,சிந்தனையோ  வெளிப்படும்போது,  அதுகுறித்து  எவ்வித சிந்தனை இன்றி,உடனடியாக  நிராகரிக்கும் போக்கையே,  பெரும்பாலோர் கையாள்கின்றனர்!

        ராமானுஜர் குறித்த எனது பதிவு,    இதுவரை ராமானுஜர் குறித்து  அவரவர் கற்பனை செய்து கொண்டிருந்த,நம்பிக்கைக்கு மாறாக  இருந்துள்ளது என்பதை அறிகிறேன்! 

    எனவே,ராமானுஜர் குறித்து,  எனக்குத் தெரிந்த எல்லா விவரதையும்  தரலாம் என்றுதான்  முதலில் நினைத்தேன்! ஆயினும் நான் சொல்லுவதை  நம்பக்கூடிய  சாத்தியங்கள் குறைவு என்பதால், சில தகவல்களை மட்டும்  சொல்லுகிறேன்! 

    ஸ்ரீ பெரும்புதூர் ஊரில்  சொமையாஜீயர்  -பூமி பிராட்டியார் தம்பதிகளுக்கு பிறந்த ராமானுஜர்,கி.பி.1017 - யில்  பிறந்து கி.பி.1137 -வரை  120 -ஆண்டுகள் வாழ்ந்தார் என்று கூறப்படுகிறது! ஸ்ரீ ரங்கத்துக்கு கி.பி.1042 -யில் முதன்முறையாக வருகை தந்தார் எனவும் அவரது வாழ்க்கை வரலாற்றில் கூறப்படுகிறது! 

    சோழ மன்னன் செயலால், (குலோத்துங்க சோழன்)மைசூர் நோக்கிப் பயணம் செய்து ,அங்கேயே பன்னிரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். மைசூரில் தங்கியிருந்த போது, ஹோய்சால மன்னன்,' பிட்டி தேவா'  என்ற மன்னனை  விஷ்ணுவை வழிபடும் மன்னனாக மாற்றி,அவனுக்கு,' விஷ்ணுவர்த்தன்' என்று கி.பி.1098 -யில்  பெயரிட்டு உள்ளார்! 

      பிறகு  அங்கிருந்து தனது சீடர்களுடன் திருநாராயண புரத்துக்கு சென்றதாகவும்  சொல்லபடுகிறது! "யதுகிரி","யாதவகிரி" என்றும் அழைக்கப்பட்டு வந்த திருநாராயணபுரத்தின் இன்றைய பெயர்தான்,
"மேலக்கோட்டை" என்பதாகும்!  
  ( இவைகள் குறித்த ஆதாரநூல்கள் உள்ளன.), 

        ராமானுஜர் பற்றிய சர்ச்சையை, ஸ்ரீ ரங்கம் பற்றி பதிவிடும்போது  பார்ப்போம்.    ஸ்ரீ ரங்கம் கோயில் ஒழுகு பற்றியும் கூட பிரஸ்தாபிக்கலாம்!

      இப்போது இந்துமத்தின், ஆன்மீகத்தின் பெருமைகளில் ஒன்றைப் பார்ப்போம்! அருமையான வாழ்க்கைக்கு(பிராமணர்களுக்கு ) அது உதவிடும் வழியைப் பார்ப்போம்!

    திருவாதவூர்,திருமறைநாதர்க் கோயில் சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட கோயிலாகும்! இந்த கோயிலுக்கும் எப்போதோ பிறந்த, எப்போதோ நடந்ததாக சொல்லப்படும்,   மகாபாரதத்து  கதாபாத்திரங்களில்  ஒருவனான, "பீமனுக்கும்" என்ன சம்பந்தம் இருக்க முடியும்? 
     அனால் இருக்கிறது என்று கோயில் வரலாறு  சொல்கிறது! அப்படி கோயில் வரலாறே சொல்லிவிட்டதென்றால்,  கண்ணைமூடிக் கொண்டு, காதைப் பொத்திக்கொண்டு, கேட்டுக்கொண்டு நாம்  வரவேண்டும்! 

      இல்லை என்றால் நமக்கு ஆன்மிகம் பற்றி என்ன தெரியும்?, இந்து மதம் பற்றி என்ன தெரியும்?, வரலாறு அதுவும் உலக வரலாறு பற்றி என்ன தெரியும்? நமது புராண,இதிகாசப் பெருமைகள் பற்றி எதுவும் தெரியாத, " ஞானசூனியம்" நாமென்றும், நமது மனநிலையில் கோளாறு என்றும்  ஞான திருஷ்டியால் கண்டுணர்ந்து, உடனே கண்டுபிடித்து  சொல்லிவிடுவார்கள்!

     கோயில்கள்  கற்றளிகளாக,கற்களால் நேர்த்தியாகவும், உறுதியாகவும்  கட்டப்பட்ட காலம்  பல்லவர்கள் காலத்தில் இருந்துதான்! இந்த பல்லவர்கள்காலத்துக்குப் பிறகு வந்த சோழர்கள் கட்டிய கற்கோயில் ஆன திருவாதவூர் திருமறைநாதர் கோயிலுக்கு பீமன் எப்போது வந்தான்? எதற்காக வந்தான்? என்று பார்ப்போம்! அதாவது  கோயில் தல வரலாறு கூறுவதைப் பார்ப்போம்! 

      திருவாதவூர் திருமறைநாதர் கோயிலுக்குஇடது புறம் மிகபெரிய தீர்த்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு,பொதுமக்களின் தேவைக்கு பயன்படுத்தப்பட்டு  வந்தது! இந்த தீர்த்தத்தில் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  ! நீரின் அளவைக்காட்ட  இரண்டு கல்தூண்களில் குறியீடுகள்  செய்யப்பட்டு, அவைகள்  குறுக்காக  இரண்டு கல்தூண்களின்   உதவியுடன் இணைக்கப்பட்டு உள்ளன! 

    நீரளவைக் காட்டிட அமைக்கப்பட்ட இந்த கல்தூணின் மேல்புறம்  விசித்திரமான, சிற்ப உருவம் கல்லால் செய்யப்பட்டு, கல்தூண்களின் மேலே காட்சி தருகிறது. இந்த உருவத்துக்கு   பெயர் என்ன தெரியுமா? 

      புருஷா மிருகமாம்!  மிருகத்தின் உடலையும், மனித தலையையும் கொண்டிருக்கும் இவ்வுருவத்தின் தலையானது, தலையில் தொப்பியுடனும்,சரியாக ஒழுங்குபடுத்தப்பட்ட  தடி,மீசையுடனும் காட்சிதருவதை காணலாம்.

        புருஷாமிருகம் பற்றி  கோயில் வரலாறு என்ன சொல்கிறது  என்றால், பஞ்சபாண்டவர்கள்  ராஜசூய  வேள்வி நடத்தியபோது, வேள்வி இடையூறின்றி  நடப்பதற்காக  பாண்டவர்களில் ஒருவனான, பீமன் இந்திரலோகத்துக்கு போய்,அங்கிருந்து இந்த புருஷாமிருகத்தை அலைத்துவந்ததாக கூறுகிறது! 
  இந்த புருஷா மிருகத்தின் பாதுகாப்பில் ராஜசூய வேள்வி வெற்றிகரமாக முடிந்ததாகவும் அதனைத்து தொடர்ந்து, திருமாலால் இந்தவூரிலே ஸ்தாபிக்கப் பட்டதாகவும்  பொதுமக்கள்  இதனைக் காவல் தெய்வமாக கருதி வழிபட்டு வருகின்றனர்  என்கிறது கோயில் வரலாறு. 


திருவாதவூர் கோயில் தீர்த்தத்தில் உள்ள புருஷாமிருகம்:


  இந்திரலோகத்தில் இருந்து பீமன் அழைத்து வந்ததாகவும்  திருமாலே நிறுவியதாகவும் கூறும் புருஷாமிருகம்  முஸ்லிம்களை வெறுக்கும் பிராமணீயம்  என்ற பாசிசத்தின்  வேலை ஆகும்! 

      பீமன் தமிழகத்துக்கு,அதுவும் திருவாதவூருக்கு  வந்தான் என்பதை எப்படி நம்ப முடியும்? மகாபாரத காலம் எங்கே? கற்றளியாக்கிய சோழர்கள் காலம் எங்கே? இரண்டும் ஒரே காலமா ? திருமால் நிறுவியதாக சொல்வது சரியா? 

     திருமால் என்று யாரைச் சொல்லுகிறார்கள்? எனபது குறித்து அடுத்து பார்க்கலாம்!