Tuesday, 6 March 2012

நாயன்மார்கள் ஆக செய்த நற்பணிகள்!

        நாயன்மார்கள் ஆக... சிலர் செய்த நற்பணிகளில் ஒருவர் செய்த நற்பணியை    இந்த பதிவில் பார்ப்போம்!

         அறுபத்து மூன்று நாயன்மார்களில்  இறைவனை அடைய, இறைவனின் அருளைப் பெற  செய்த  காரியங்கள்,செயல்கள்  பிராமணீயத்துக்கு ஏற்றதாக,ஆதரவாக,   இருந்துள்ளதால் தான் அவர்களை பெருமைப்படுத்தி, அவரகளது செயல்களை  ஏற்றுக்கொண்டு, நாயன்மார்களாக  ஆக்கி உள்ளது! அதுமட்டுமல்ல! அவர்களை  வழிகாட்டிகளாக,  வழிபாட்டுக்கு உரியவர்களாக முன்னிறுத்தி, கோயில்களில்   சிலைகளாக வைத்து போற்றி வருகிறது!

    இப்படி போற்றிவரும் நாயன்மார்கள்  செய்த    நற்பணிகள்  என்ன ?  என்பதை நியாய உணர்வும், மான உணர்வும், ஒழுக்க உணர்வும், நற்பண்பையும்   பேணிக்காக்க விரும்பும்  தமிழ் சமுதாயம்  தெரிந்து கொள்ள வேண்டும்! குறிப்பாக, இவர்களையும் சேர்த்து  வழிபட்டு வரும் ஆன்மீக பக்தர்களும், பெண்களும் தெரிந்து கொள்ளவேண்டும்!

                      இயற்பகையார்:
      காவிரிப் பூம் பட்டினத்தில்,வைசியர் குலத்தில்  பிறந்த இவர், சிவனடியார்கள்  அதாவது,சாமியார்கள்  எதைக்கேட்டாலும்  மறுக்காமல் கொடுத்து வருபவர். இவரது  ஏமாளித்தனத்தை, புரிந்து கொண்ட  சிவனடியார் ஒருவர்,  இயற்பகையாரிடம் வந்து  ஒருமுறை,  அவரது  மனைவியைக் கேட்கிறார்! சிவனடியாருக்கு  எதற்கு அவரது மனைவி? என்று என்னிடம் கேட்காதீர்கள்! அப்படி அவர் கேட்பது நியாயமா? நல்லொழுக்கமா? என்றுகூட கேட்காதீர்கள்! சிவனடியார் உருவில் வந்து சிவனே கேட்டார் என்று இவரைப்பற்றி பெருமையுடன்  கூறுகிறார்கள்!

    மானமும், ரோஷமும் உள்ள மனிதன் தனது மனைவியை  கேட்டவனை என்ன செய்து இருப்பான்? அப்படியெல்லாம்  இயற்பகையார்  மானம்,ரோசம்,போன்ற பண்புகளோ,ஒழுக்கமோ  பற்றி கவலைப்படவில்லை! 

    சந்தோசமாக," என்மனைவிதான்  உங்களுக்கு வேண்டுமா? இதோ,எடுத்துகொள்ளுங்கள்!   அவளை  உங்களுடனே..  கூட்டிக் கொண்டு போங்கள்!" என்று அனுப்பிவைக்கிறான்!

     அவனுக்குதான் புத்தி இல்லை, ஒழுக்கம் இல்லை, சிவனடியாரான உனக்குமா  அறிவில்லை? நீ எப்படி அவனது மனைவியைக் கேட்கலாம்? என்று அவனது உறவினர்கள், நல்லொழுக்கத்துடன் வாழ்ந்துவந்த  தமிழர்கள்  கோபப்படுகிறார்கள் !  இந்த அநீதியை,அக்கிரமத்தை தடுக்கிறார்கள்!

     இதைபார்த்த,  "இயற்பகையார்"என்ன செய்திருக்க வேண்டும்? தனது தவறை உணர்ந்து, திருந்தி இருக்கவேண்டும்! தனது முடிவை மாற்றிக்கொண்டு  மனைவியை  சிவனடியாரோடு  அனுப்பாமல் இருந்திருக்க வேண்டும்!

   அவர்தான் இயற்பகையார் ஆயிற்றே,!{தமிழர் இயல்புக்கு, பழக்கத்துக்கு, நல்ல குணங்களுக்கு,பகைவர் என்றும் பொருள் கொள்வது தவறில்லை எனபது ஏன் கருத்து. } 

     போகட்டும்! அடுத்தவன் மனைவியைக்   கேட்ட சிவனடியாராவது  என்ன செய்திருக்க   வேண்டும்?

     முறைகேடாக, ஏதோ சபலத்தில் உன் மனைவியை  கேட்டுவிட்டேன்! எனக்கு உனது மனைவி வேண்டாம் என்று சொல்லி, இயற்பகையாரின் மனைவியை அழைத்து செல்லாமல் விட்டுவிட்டு  போயிருக்க வேண்டும்!  
    மேலே நான் சொன்னதுபோல  நடந்திருந்தால், அப்படிப்பட்டவர்களை  திருத்தி, நல்வழிப்படுத்தி இருந்தால், அதுபற்றிய  ஒழுக்கக் கதையைக் கூறினால்   பரவாயில்லை!    ஆனால் அப்படி எல்லாம் இயற்பகையாரும் நடந்து கொள்ளவில்லை, சிவனடியாரும்  செய்யவில்லை. நாம் எதிர்பார்ப்பது  போலவும்  கதை   நடக்கவில்லை!

      இயற்பகையார்,  தனது மனைவியை  சிவனடியார்  அழைத்து போவதை  தடுத்த,  தனது உறவினர்கள் அனைவருடனும் எதிர்த்து  போரிட்டு,  சிவனடியாருடன் தனது மனைவியை அனுப்புகிறார்! அதுமட்டுமல்ல திருச்சாய்க்காடு  என்ற இடம் வரை அவர்களுக்குப் பாதுகாப்பாக  பின்தொடர்ந்து செல்கிறார்!

   அப்படிப்பட்டவரை, இத்தகைய நற்பண்பு, நல்லொழுக்கம் உள்ளவரை, சும்மா விட்டுவிட முடியுமா? நாம்  போனால் போகட்டும் என்று விட்டுவிடுவோம்! தமிழர்கள்தான்,   "மறக்கும்,மன்னிக்கும் குணம் கொண்டவர்கள்" ஆயிற்றே !  "பகைவனுக்கும்  அருளும் நன்னெஞ்சு?" கொண்டவர்கள் ஆயிற்றே!"வந்தாரை வாழவைப்பவர்கள் "ஆயிற்றே, நாம்!

       அரிய இந்த செயலைச் செய்த  அவரது  நற்பணியை  நினைவு கூற  வேண்டும், அவரது வழியில் நாம் நடக்க வேண்டும் என்று, அறுபத்து  மூன்று நாயன்மார்களில் ஒருவராக ஆக்கி வைத்து, போற்றி புகழ்ந்து வருகிறது! நம்மை வழிபடவும் வைத்துள்ளது! "செய்நன்றி மறவாத  பிராமணீயம்"!

       பொண்டாட்டியைக் கூட்டிகொடுத்தவனும், கூட்டிப்போன சிவனடியார்,{சிவனும்} பிராமணீயத்தின்  பிரதிபலிப்பா?  இல்லை தமிழர்களின்  உன்னத நாகரீகமா?  என்பதையும்,
       ஊராருக்கு  நல்லுபதேசம்  சொல்லுவதாக  கூறும், இந்துமதப் பற்றாளர்களும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயரிய தத்துவத்தை ராமன்  சொன்னான், ராமாயணம் அதையே வலியுறுத்துகிறது, அடுத்தவன் மனைவிமீது ஆசைப்பட்டு,   எடுத்து போனதால்தான்  ராவணனை  கொல்லவேண்டியது ஆயிற்று !
 என்று வியாக்கியானம் செய்யும்  இந்துமத   "அவதார்" களும்  சிந்திக்க வேண்டும்!

     இதுபோன்ற  அநாகரீகங்களை கூறும் புராண நூல்களை  ஒதுக்கவும்  அல்லது, அவைகளை பற்றி  உயர்த்திப்  பேசுவதையும்  தவிர்க்க முன்வர வேண்டும்! 

        ஆனால், அப்படிசெய்ய  யாரும் முன்வரமாட்டார்கள்! அப்படியே சிலர் முன்வந்தாலும்,  "பிராமணீயம்"  அதனை அனுமதிக்காது!   

    ஏனெனில் சமூகத்தில்  உள்ள முரண்பாடுகளும், பிரிவினையும், ஒழுக்கக் கேடுகளையும்  உருவாக்கி, வளர்த்து வரும் "பிராமணீயம்" அத்தகைய செயல்களால்தான்,  தன்னை தொடர்ந்து அதிகார, ஆதிக்க சக்தியாக,நிலைநிறுத்தி வருகிறது! 
   
         ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல , இதுவே  போதும் என்று எண்ணுகிறேன்!

      போதாது, இன்னும் வேண்டும் என்றாலும், அறியாமல்  பூவை  முகர்ந்த  பெண்ணின்  மூக்கை அரிந்த  நாயனாரையும், இந்த அடாத  செயலைச் செய்த  கொடியவனை, தனது  மனைவியின் மூக்கை  அறுத்தவனை  தண்டிக்காமல், குறைந்தபட்சம் கண்டிக்காமல் , அவனே  செய்ய மறந்த செயலாக, அய்யா! பூவை முகர்ந்ததால்  மூக்கை  அறுததீர்கள்,  அனால்  அந்த பூவை  எடுத்த கையை  முதலில்  வெட்டாமல் விட்டுவிட்டீர்களே!   என்று கூறி, நான்  பூவை எடுத்த  அவளது கையை  வெட்டுகிறேன் என்றுகூறி, தனது மனைவியின்  கையை  வெட்டியதால்,  நாயனார் ஆன நாயனாரைப் பற்றியும் கூட  விபரம்     தருவேன் ! 

      மனித ஒழுக்கக் கேடுகளை, ஒழுக்கமாகவும்,  பெருமைகளாகவும், அவைகளை செய்கிறவர்களை,  உன்னத,மேன்மையான,போற்றத் தகுந்த, "புண்ணிய புருஷர்கள்"ஆகவும் காட்டும், "பிராமணீயம்"  எனபது, வெகுஜன மக்களின் எதிரி   என்பதை  புரிந்து கொள்ளலாம்! 
 

9 comments:

 1. நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete
  Replies
  1. thank you manju! still I don't know about that fesilities!

   Delete
 2. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 3. மாசிலாவுக்கு நன்றி.

  ReplyDelete
 4. MY DEAR ஓசூர் ராஜன்

  KEEP WRITING. YOU ARE EXPOSING ALL HIDDEN EVILS UNDER THE VEIL .

  THANK YOU.

  ReplyDelete
 5. கடவுள் மனைவியைப் புணர்வதும்; அதனால் கடவுள் மனைவி பிள்ளைகளைப் பெறுவதும்; கடவுள் மனைவிகளைக் கண்டவன் புணர ஆசைப்படுவதும் கடவுள் மனைவிகள் மிருகங்களோடு புணர்வதும்

  கடவுள்கள் கண்டவன் மனைவிகளைப் புணர்வதும் முதலாகிய காரியங்கள் நீண்ட காலமாகவே ஏராளமாக நடந்திருக்கின்றன.

  மற்றும் நம் கடவுள்கள் மக்களைக் கொன்றதாகவும்; திருடினதாகவும்; பலப்பல ஆயிரம் பெண்களைப் புணர்ந்ததாகவும், பெண்களை நிர்வாணமாக்கி வேடிக்கைப் பார்த்ததாகவும்;

  மக்களை வஞ்சித்துக் கொன்றதாகவும்; ஏமாற்றிக் கொன்றதாகவும்; இந்தப்படியான கீழ்த்தரமான அயோக்கியத்தனமான மோசமான காரியங்கள் செய்ததாகவும்; ஏராளமான செய்திகள் கடவுள் நடவடிக்கைகள் கடவுள் சம்பந்தமான ஆதாரங்களில் காணப்படுகின்றன.


  உண்மையிலேயே இப்படிப்பட்ட கடவுள்களை ஏற்படுத்தியவன் "மக்களை மடையர்களாக ஆக்க வேண்டும்; அதன் பயனாகத் தாங்கள் உயர் வகுப்பாய் இருந்து வாழ வேண்டும்" என்பதல்லாமல் வேறு எந்தக் கருத்தைக் கொண்டும் உண்டாக்கி இருக்கமாட்டான் என்பதை அறிவுள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.

  மேலும் இந்தப்படியான கடவுள்களை இருக்க அனுமதித்தால் மக்கள் நிலை என்ன ஆகும். இதுவரை என்ன ஆகி வந்திருக்கிறது என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.

  சிந்திப்பது மாத்திரமில்லாமல் மனிதாபிமானமும், அறிவும் உள்ள ஒவ்வாருவரும் தன்னை மனிதன் என்று கருதுவாரானால் தன் கடமை என்ன என்பதையும் சிந்திக்க வேண்டும்.

  மூட மக்களிடையில் - மானமற்ற மடஜன்மங்களிடையில் இருந்து மனிதத் தொண்டு செய்ய ஒருவன் கருதுவானானால் அதற்குத் தகுந்த விலை கொடுக்கத் தயாராக இருந்தால் தான் அவன் உண்மைத் தொண்டனாக இருக்க முடியும்.

  கடவுளுடைய அயோக்கியத்தனமான இழிவான நடத்தைகளுக்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் அப்போதிருந்த மக்கள் "கடவுளால்" கொல்லப்பட்டனர் என்று காணப்படுகின்றது. இப்போதுள்ள மக்கள் கடவுளை இழிவுப்படுத்தி ஒழிக்கப்பாடுபடுகின்றனர். கடவுளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

  மனிதன் - பார்ப்பான்தான் கடவுளைக் காப்பாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டவிட்டது. காரணம் என்னவென்றால் பார்ப்பான் "பிராமண"னாக வாழ வேண்டுமானால் அவன் (பார்ப்பான்) கடவுளைக் காப்பாற்ற வேண்டியதாகி விட்டது.

  அதாவது பார்ப்பான் இல்லாவிட்டால் கடவுளுக்கு இடமில்லை; கடவுள் இல்லாவிட்டால் பார்ப்பானுக்கு இடமில்லை.

  இவற்றில் எது ஒழிக்கப்பட்டாலும் இருவரும் ஒழிந்தே போவார்கள்.


  ----------------14-10-1971 உண்மை இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம். பெரியார் களஞ்சியம் - தொகுதி:2 … பக்கம்:62 -66

  ReplyDelete
  Replies
  1. " இந்தப்படியான கடவுள்களை இருக்க அனுமதித்தால் மக்கள் நிலை என்ன ஆகும். இதுவரை என்ன ஆகி வந்திருக்கிறது என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.

   சிந்திப்பது மாத்திரமில்லாமல் மனிதாபிமானமும், அறிவும் உள்ள ஒவ்வாருவரும் தன்னை மனிதன் என்று கருதுவாரானால் தன் கடமை என்ன என்பதையும் சிந்திக்க வேண்டும்."

   பகிர்வுக்கு காரணம்,அதுதான்.! நன்றி!

   Delete
  2. சும்மா கம்ப்யூட்டர் இருக்கு படிசிருகோம் என்று எதை வேண்டும் என்றாலும் எழுதி தொலைகாதிர் ...!

   மற்ற நாடு மற்றும் மதத்தினர் யாரும் தாங்கள் சார்த்த மதம் & இறைமையை குறைவாக பேசமாட்டார்கள் ...!

   இந்தியர்கள் குறிப்பா தமிழர்கள் அதை செய்வதை பெருமையாக நினைகிறார்கள் !

   நீங்களும் அவ்வரையே செய்துள்ளீர் ....!

   நன்றி ...!

   Delete