Tuesday, 20 March 2012

உலகமே போற்றவேண்டிய, " தமிழச்சி" குந்தவை! ,

     இன்றைக்கு நாம் உதாரணமாக  காட்டும் எந்தவொரு  பெண்ணையும் விட  சிறப்பும்,செயலாற்றலும், அன்பும், கருணையும், சமயபொறையும்,  அறிவும், ஆட்சித் திறனும்  கொண்டிருந்தவர்,  ராஜராஜனின்  சகோதரி  "குந்தவை நாச்சியார்"  என்று  உறுதியாக    சொல்லமுடியும்! 

     ராஜராஜன்  தனது ஆட்சிக்காலத்தில்  போற்றிய இரண்டு  பெண்மணிகள்  செம்பியன் மாதேவியாரும்  அவனது சகோதிரி குந்தவை நாச்சியாரும் என்று வரலாற்று ஆசிரியர்கள் பலரும்  உறுதிபடுத்தி உள்ளனர்!

     ராஜராஜன்  தனது அக்காள் குந்தவை நாச்சியார் மீது  அளவற்ற அன்பு கொண்டிருந்தான் என்பதை எடுத்துக் காட்டும் வகையில்   குந்தவை தஞ்சை கோயிலுக்கு கொடுத்த கொடைகளை, ராஜராஜெச்வரம்  கோயில் கல்வெட்டில்  "நான் குடுதனவும்,நம் அக்கன் கொடுத்தனவும்,நம் பெண்டுகள் கொடுத்தனவும்,கொடுத்தார் கொடுத்தனவும் கல்லிலே வெட்டுக" என்று  உத்தரவிட்டு இருந்தான் என்பதையும்  குந்தவை நாச்சியார்,  "சிதம்பரம் கோயிலுக்கு  பொன் வேய்ந்தால்" என்பதையும்  முன்பே பதிவுகளில் குறித்து இருக்கிறேன் !

    ராஜராஜன்  ஆட்சிக்கு வரும்வரை  அவனைப் பேணிப்பாதுகாத்து  மட்டுமின்றி  அவன் அறிவில் சிறந்த  அரசனாக  திகழ்வதற்கும்,சோழர்களின் பொற்காலம் அவனது ஆட்சிகாலம்  என்று  வரலாறு  குறிப்பதற்கும்,வீரத்தின் விலை நிலமாய் அவனை  போற்றுவதற்கும்     காரணமானவர்,  அவனது சகோதரி  குந்தவை நாச்சியார் தான்! 

    தனது தம்பி  ராஜராஜன் மீது அளவற்ற அன்பும்,நமிக்கையும் கொண்டிருந்த குந்தவை நாச்சியார், ராஜராஜனது  ஆட்சியில் அவனுடன்  சேர்ந்து பங்கேற்றும் வந்துள்ளார்.! முடியாட்சியில் ஒரு குடியாட்சியை  நிறுவும் உயரிய நோக்கத்தில்,  குடவோலைத் தேர்தலை  கண்காணிக்கும் பொறுப்பில்  ஈடுபட்டு வந்துள்ளார் என்பதை திருமழபாடி கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

      அதுமட்டுமின்றி  குந்தவை நாச்சியார், தனது தந்தை, சகோதரர்கள் போலவே  சமயப் பொறையுடன் நடந்துகொண்டு வந்ததுடன்  எண்ணற்ற ஜீனாலயங்கள்,(சமணர்கோயில்) விண்ணகர்கள், அறச்சாலைகள், ஆதூலசாலைகள் (மருத்துவமனைகள்) ,கல்விபணிகள்,போன்றவற்றிக்காக  மடங்களை  நிறுவி உள்ளார்!

     அவரது  அரசியல், சமூகப் பணிகள்  யாவும் பிராமணீயத்தின் பெண்கள் குறித்த   பாசிச,கொடூர குண இயல்பினால் ,வரலாற்றில்  இருந்து மறைக்கப்பட்டும்  திரிக்கப்பட்டும் உள்ளதை அறிய முடிகிறது!(அவ்வாறு  பிராமணீயம் செய்ததற்கு  கரணம்   என்னவென்பதை  பிறகு பார்ப்போம்). 


குந்தவை செய்த பணிகளில் சிலவற்றை  இப்போது போர்ப்போம்: 

உத்திர மேரூரில் குந்தவையின் பெயரில் மேடம் ஒன்று வெகு சிறப்பொடு இயங்கிவந்ததை  (தென்னிந்திய கல்வெட்டுகள் 184 / 1923 ) விளக்குகிறது. 

                திருவாஞ்சியம்,வாஞ்சிநாதர் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு,   " திருகாமமுடைய நாச்சியாருக்கு கோயில் ஏற்படுத்தப் பட்டதையும்,இக்கோயிலில் நாச்சியார்  திருமேனி "  செய்து அளிக்கப்பட்டதையும்  தெரிவிப்பதுடன், வடக்கு வீதியில், நாச்சியார் பெயரில் மேடம் ஒன்று ஏற்படுத்தப் பட்டதையும்   அறிவிக்கிறது! 

        தஞ்சை மாவட்டம்,கீழையூரில்  கோயிலிலும் மடத்திலும் பணி மேற்கொண்டவர்களின்  பட்டியலை  கல்வெட்டு  (தென்னிந்திய கல்வெட்டுகள்,74 ,76 /1925  ) தருவதால், கீளைய்ரில் மேடம் ஒன்று இயங்கிவந்ததை அறியமுடிகிறது!  இந்த மடத்தில் இருந்த சிலரை   திருவலான்காட்டில் உய்ள்ள மடத்துப் பணிக்கு அனுப்பியுள்ளதை (தென்னிந்திய கல்வெட்டுகள் 91 ,90 / 1926 ) தெரிவிக்கிறது! 


இதில் இருந்து  சோழன் ஆட்சியில் மடங்களின் நிர்வாகம் ஒருங்கிணைக்கப்பட்டு, அலுவலர்களால்  நடத்தப்பட்டு வந்தது விளங்குகிறது! ராஜராஜன்  தான் வென்ற பெரும் நிலப்பரப்பை  நேரடியாக  ஆட்சி செய்தான், நிலங்களை அளந்து முறைபடுதினான், அரசின் வருவாய்க்கு  அத்தகைய சீர்திருத்தம் தேவையாக இருந்துள்ளது. மேலும் தனது ஆட்சியில் பல்வேறு மடங்களைக் கட்டி, அவற்றையும் நிர்வாக வசதிக்குப் பயன்படுத்திவந்தான் என்பதெல்லாம்  விளங்குகிறதல்லவா?  

" சுத்தமல்லி வளநாட்டு ராஜாதிராஜ சதுர்வேதி மங்கலத்து  ஸ்ரீ மற்றுவரார்பதி மண்டலத்தார் மடத்து விருத்திக்கும் ,வண்டுவராபதி மகாமுனிகளும், இவர் சிஷ்யை பெரியபிராட்டியும்  தங்கள் அர்த்தமிட்டுக் கொண்டு இவர்க்கு மடப்புற இறையிலியை அனுபவித்துப் போதுகிற இவ்வூர்ப் பிடாகை சோழ நல்லூர் " (தென்னிந்திய கல்வெட்டுகள்  தொகுதி,6 ,கல்.56 ) 

  ஸ்ரீ மற்றுவராபதி  பொறுப்பில் இயங்கிவந்த மடத்துக்கு குந்தவை நாச்சியாரும்  அவரது குருவும் சோழ நல்லூர் கிராமத்தின் நிலங்களை வரியில்லாமல் செய்து கொடுத்துள்ளதும், அரசுக்கு செலுத்தும் வரி வருமானத்தை  மேற்கண்ட மடத்தின் நிர்வாக செலவுகளுக்கு  பயன்படுத்திக் கொள்ள   செய்துள்ளதும் விளங்கும்!  

 மேடம்,பள்ளி, விகாரம் , விண்ணகர்  கோயில்கள்  ஆகியவைகள் முக்கிய நகரங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவைகள் இயங்கிவந்தன. மேற்கண்ட மடங்களில் மட்டும் இன்றி  கோயில் தாழ்வாரப் பகுதிகளில் கிராமப் பள்ளிக்கூடங்கள் இயங்கிவந்ததை  கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. படம் சொல்லித் தரும் வாத்திகளுக்கு,கிராம போதுநிலத்தில் கிடைக்கும் வருவாயில் இருந்து ஊதியம் கொடுக்கப்பட்டு வந்தது!

     இதனை தென்னாற்காடு  மாவட்டம் பனையவரம்  என்ற கிராமத்தில் இலவச பள்ளிக்கூடம் இயங்கிவந்த ஆதாரத்தில் இருந்து அறியவருகிறது!  

        குந்தவை நாச்சியார், போளூர் வட்டம்  திருமலையில் உள்ள சமண சமயக்கொயிளையும், திருச்சி, மேற்பாடியில் உள்ள சமணக் கோயிலையும் எடுப்பித்தார் எனக் கல்வெட்டுச் செய்திகள் எடுத்துரைகின்றன . 

     வேலூர் மாவட்டம் வேடலில் சமணமடம்  இருந்ததை தென்னிந்திய கல்வெட்டுகள் (85 /1980 ) அறிவிக்கிறது! இந்த மடத்தில் 500 -மாணவர்கள்  ஒருபுறமும், 400 - மாணவர்கள் மறுபுறமும் இரண்டு பெண் துறவிகள் மேற்பார்வையில் கல்வி கற்றனர்! என்பதை அறிவிக்கிறது! 

  காஞ்சீபுரம் அருகில் உள்ள திருபருத்திக் குன்றம்  சிற்றூரில் இன்றளவும் புகழ்பெற்ற சமணக் கோயில் இருந்து வருகிறது.இங்கும் மேடம் ஒன்று அந்நாளில் இயங்கிவந்தது. இவைகள் எல்லாம் சில உதாரணங்களே!   


குந்தவையின்  அரசியல் சமுதாய நலப்பணிகளுக்கு  சில எடுதுக்காட்டுகளாகவே இவை தரப்பட்டு உள்ளது!

    இவையன்றி, இன்றைக்கு  தாதாபுரம் என்று அழைக்கப்பட்டு வரும்  ஊரில்  தஞ்சையில் ராஜராஜன் கோயில் கட்டுவதற்கு முன்பே, ரவிகுல மாணிக்க ஈஸ்வரம், கரிவரதராஜா பெருமாள் கோயில் என்று  அழைக்கப்படும்     விண்ணகரம், ஜீனாலயம்   என்னும் சமணர்களின் மடம் ஆகியவைகளை குந்தவை கட்டினார்! 

    ராஜராஜபுரம் என்ற பெயருடன் நகரமாக அன்றைய நாளில் இருந்த தாதபுரம்  அருகில் பிரமபுரம்,எசாலம், எண்ணாயிரம்  ஆகிய வரலாற்று சிறப்புமிக்க  ஊர்கள் உள்ளன. தொண்டை மண்டலமாகவும்,  ஆதிய கரிகாலன், வல்லவரையன் வந்தியத் தேவன் ஆகியோர்களின் ஆளுமைப் பிரதேசமாகவும்  விளங்கிய இந்த பகுதியில்  குந்தவைக் கட்டிய  கோயில்களில்  ஜீனாலயம் தவிர இரண்டும் இன்றும் உள்ளன. அவைகளைப் பற்றி அடுத்து பார்ப்போம்! 3 comments:

 1. இன்று உலகத்தை அலைகழித்து வரும் முக்கிய இரண்டு மாயாஜால டுபுக்கு மதங்களை போலவே நம்ம காமடி கசமால இந்து பாசிச பார்ப்பான்களும் பெண்களை சாதாரண ஒரு ஜடமாகவும், நுகர்வுப் பண்டமாகவும், குழந்தைகள் உற்பத்தி செய்யும் இயந்திரமாகவும்தான் பாவித்து வருகிரார்கள். அன்மை காலங்களாத்தான் டுபாக்கூர் கறிஸ்து மதம் இதிலிருந்து சற்று விடுபட்டுள்ளது.
  இந்த அனைத்து வித டுபாக்கூர் மதங்களும் தமிழர் மூளைகளை மழுங்கடிப்பதற்கு முன்னமே நம்மவர்கள் பெண்ணை தெய்மாக்கி வழிபட்டு வந்தும் வருகின்றனர்.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. தமிழகத்தில் சமண மதம் ஒரு காலத்தில் ஓங்கி இருந்தது எனபதை பல இடங்களில் படித்துள்ளேன். நீங்கள் கூறும் செய்திகளும் அதை உறுதிபடுத்துகின்றன.
  இசுலாம்,இந்து, சமணம் ஆகிய மதங்களை மதித்த குந்தவை உண்மையில் போற்றுதலுக்கு உரியவரே. தங்கள் பகிர்தலுக்கு மிக்க நன்றி

  ReplyDelete