Friday, 31 May 2013

தேசபக்தி, தீவிரவாதமான கதை..!

     இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர்கள், உயிர் நீத்தவர்கள்,, சிறையில்அடைக்கப்பட்டவர்கள்  சித்திரவதைப் பட்டவர்கள்,ஆங்கிலேயரால் மரண தண்டனை அடைந்தவர்கள்  ஆயிரக்கனக்கானோர்கள் .அவர்களில் வெகு சிலரே காங்கிரஸ்காரர்கள்!  

     இந்திய மக்களை சமாதானப் படுத்தவும், சில  சலுகைகளைக்  வழங்கவும் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சியில் கூட..
 இன்று  தேச  பக்தியை   தங்களது  ஏகபோக உரிமையாக என்னும்   இந்துத்துவவாதிகள் . அன்று.... ஆங்கிலேயருக்கு எதிராக  போராடினால் ஆபத்து என  நினைத்து, தங்களை இணைத்துக் கொண்டு போராட முன்வரவில்லை. !

   இந்துத்துவ  வாதிகளும், அதன்  தலைவர்களும்  இந்திய தேசத்தின் விடுதலையை விட, ஆங்கில அரசின் அடிவருடிகளாய் இருந்து,   அவர்களிடம்  ஊழியம் பார்த்து, ஊதியம் பெற்று, உண்டி வளர்ப்பதைதான் அன்று பெரிதாக நினைத்தார்கள்!

    வங்காளத்திலே பஞ்சம் ஏற்பட்டு, மக்கள் மடிந்தபோது... இவர்கள் ஆங்கில அரசாங்கத்துக்கு, ஆங்கிலேய ராணுவத்துக்கு உணவுப் பொருளை விநியோகிக்கும் ஒப்பந்தம் போட்டு, தங்கள் வருமானத்துக்கு வழி செய்து கொண்டவர்கள்!
     ஆங்கில அரசுக்கு எதிராக,      தீவிரமாக போராடியவர்களின்  தியாகத்தை,வீரத்தை  சுதந்திரப் போராட்ட  வரலாற்றை  மறைத்து விட்டு, இந்திய மககளுக்கு  தாங்கள் செய்த துரோகத்தை, ஆங்கிலேயருக்கு தாங்கள் காட்டிய விசுவாச வரலாற்றை  இன்று வசதியாக மறந்துவிட்டு மக்களின் பார்வையில்   இன்று தேசபக்தி  வேடம் போடுகிறார்கள்! இந்தியாவை காப்பாற்ற பிறந்த தேசபக்தர்களாக  தங்களை  இப்போது  அடையாள படுத்துகின்றனர்! மேலும் சுதந்திரத்துக்காக  சுகபோகங்களைத் துறந்து போராடியவர்கள்,   இந்த மண்ணின் மைந்தர்கள் .. இந்துமத  இழிவை ஏற்றுக் கொள்ளாமல்,  முஸ்லிம்களாக  ஆனதால்,  இந்த தேசத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து தீரமுடன் போராடியவர்களை   இன்று தேச விரோதிகளாக, தீவிரவாதிகளாக  காட்டுகிறார்கள்!

       காங்கிரசு,முஸ்லிம் லீக்  கட்சிகளில்  இருந்தும்   தனிநபர்களாகவும்      சுதந்திரத்துக்காக  போராடிய முஸ்லிம்களின்  எண்ணிக்கை  பல்லாயிர கணக்காகும்! முஸ்லிம்கள் நடத்திய  சுதந்திரப் போர், ஆங்கிலேயருக்கு  எதிராகபோர் மட்டும் இல்லை! அது   ஒட்டுமொத்த அந்நியர்களுக்கு எதிராகவும்,ஆதிக்கத்துக்கு எதிராகவும்,  நடந்த போராகும்!

      "நமது தாயக மண்ணில் அன்னியரை காலுன்ற அனுமதிக்க கூடாது"என்று இருபத்தி ஐந்து போர்கப்பலுடனும், கோலத்ரி மன்னனின் ஆதரவுடனும் வந்த போர்த்துகீசிய படைத்தளபதி  "மார்டின்  டி- சோஸா"-வை "    1523 -லில்  இருந்து 1538 - வரை போரிட்டு, குஞ்சாலி மரைக்காயர் பல போர்களில்  தோற்கடித்தார்!

    1921 - ஆகஸ்டில்  துவங்கிய  { ஒத்துழையாமை இயக்கப்} புரட்சியில் மலபார் பகுதியில் ஆங்கிலேயரின் மிருகத்தனமான தாக்குதலில் இறந்தவர்கள் 2266 -பேர்கள்.  காயமடைந்தவர்கள் 1615 -பேர்கள்.கைதுசெய்யப் பட்டவர்கள் 5688 -பேர்கள்!

      போராட்டத்தில்  கைதுசெய்யப்பட்டவர்கள்  19 .11 . 1921 -லில்  ஷோரனூரில்    இருந்து கோவை சிறையில் அடைக்க  சரக்கு வாகனத்தில் அனுப்பப்பட்டனர்  மூச்சு திணறி 70 - பேர்கள் இறந்தனர்  இப்படி நமது சுதந்திரத்திற்காக, நமது நாட்டுக்காக போராடிய முஸ்லிம்கள்  இன்று அன்று ஆங்கிலேயருக்கு அன்று அடிமைச்  சேவகம் செய்த ஆதிக்க  இந்துத்துவா கும்பல்களால்   நமது சுதந்திரத்திற்காக, நமது நாட்டுக்காக போராடிய முஸ்லிம்கள்  இன்று தீவிரவாதிகளாக  ஆக்கப் பட்டுள்ளனர்.
  
இன்று   இந்துமதமுஸ்லிம்கள்  வேட்டையாடப் படுகின்றனர்.  இந்திய சுதந்திரத்துக்கு பின், மதக்கலவரங்களில் கொல்லப்பட்டவர்களில் முஸ்லிம்களே அதிகம்.

           1960 -முதல்  1970   வரை நடந்த 7974  கலவரங்களில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள்-833 பேர்கள்.      1971 - முதல் 1981 - வரை 5000 கலவரங்களில்  765 முஸ்லிம்கள் . 1981 ஆண்டு 319 கலவரங்களில் 150 முஸ்லிம்கள்.  1982   ஆண்டு 474 கலவரங்களில் 181 -  முஸ்லிம்கள் .  1983  ஆண்டு 500 கலவரங்களில் 210 முஸ்லிம்கள். 1984 ஆண்டு 476 கலவரங்களில் முஸ்லிம் எண்ணிக்கை தெரியவில்லை. 1985 ஆண்டு 525 கலவரங்களில் முஸ்லிம் எண்ணிக்கை தெரியவில்லை. 1986 ஆண்டு 145 கலவரங்களில் முஸ்லிம் எண்ணிக்கை தெரியவில்லை,காயமடைந்தவர்கள் 432. 1989 ஆண்டு மும்பை கலவரத்தில் 11 முஸ்லிம்கள். 1990 - பரோடாவில் நடந்த கலவரம் எண்ணிக்கை தெரியவில்லை. 1992 ஆண்டு இந்தியா முழுவதும் 1700 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 500 பேர்கள் காயம் அடைந்தனர். மும்பையில் மட்டும் 1100 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 1993 ஆண்டு  மும்பையில் 880 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.  1997 ,   1999 ,2000 ,   2002 ,  2003-யில் குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரங்கள்,படுகொலைகள் போதாது என போலிசு துப்பாக்கி சூடுகள்!

       நேர்மையான இந்தியா ஜனநாயக வாதிகள்...  இந்த படுகொலைகளுக்கு என்ன காரணம்? என  சிந்திப்பதில்லை!  தேசபக்தர்கள்  என்பது  மறைக்கப்பட்டு,  முஸ்லிம்களை  தீவிரவாதிகள் என    இன்று தேசபக்த வேஷம் போடும்   ஆங்கிலேய அடிவருடிகள் மக்களை ஏமாற்றுவதுதான்!

      பி.ஜே.பி-கட்சியும் இந்துத்துவ அமைப்புகளும் கலவர தடுப்பு மசோதாவை எதிர்ப்பதற்கான  காரணத்தை புரிந்து கொள்ள வேண்டும்!



கையும் தாமரையும் கலந்து செய்யும் சதிகள்!

        காங்கிரஸ் அரசுக்கு அவ்வபோது நெருக்கடி  கொடுப்பதும், பாராளுமன்றத்தை முடக்குவதும், ஊழலுக்கு எதிராக முழங்குவதும்  பி.ஜே.பி -வின் பரபரப்பான நடவடிக்கைகளாக  இருப்பதை அறிவோம்.!

      காங்கிரசுக்கு எதிராக  கலகக் குரல்  எழுப்பும் பி.ஜே.பி-யும்  காங்கிரசும் அடிப்படையில் வெகுஜன மக்களின் விரோதிகளாக இருந்து வருகின்றன!


      பி.ஜே.பி எதிர்க்கும்  கொள்கைகளை   உண்மையில் காங்கிரஸ் அரசு சட்டமாக  நிறைவேற்றுவதில்லை! 

   ஜனநாயக அமைப்பில்  பிரதான எதிர்கட்சிக்கு மதிப்பளிப்பதில் தவறில்லைதான். ஆனால், எதிர்க்கட்சி கண்மூடித்தனமாக (தங்களது மதவாத அடிப்படையில் 0 அரசின் நல்ல திட்டங்களை எதிர்க்கும்போதும், மக்களுக்கு ஆதரவான சட்டங்களை  நிறைவேற்ற தடையாகும் போதும்  ( பி.ஜே.பி எதிர்க்கிறதே என்பதற்காக )  பின்வாங்குவதும், நல்ல திட்டங்களையும், சட்டங்களையும் நிறைவேற்றாமல் இருப்பதும் தவறுதான்!

        பெண்களை அடிமைபடுத்தி ஆள  நினைக்கும் குணம் உள்ள இந்து மதவாதிகளின் கட்சியான பி.ஜே.பி-எதிர்க்கிறது என்பதற்காக பெண்களுக்கு  33% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றாமல் காங்கிரஸ் அரசு உள்ளது!

        இந்தியாவை இந்து நாடாக மட்டுமே பார்க்கும் பி.ஜே.பி எதிர்க்கிறது என்பதற்காக  சச்சார் கமிட்டி அறிக்கையை வெளியிட தயங்கிய காங்கிரஸ் அரசு,   சச்சார் பரிந்துரைகளை நிறைவேற்ற இன்றுவரை முன்வரவில்லை.! 

          நரசிம்மராவ் காலத்தில் இருந்து  முஸ்லிம்களுக்கு அரசு வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றில் இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறியது. அந்த மசோதாவும் பி.ஜே.பி-யின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டு விட்டது!

       அப்துல் கலாம்  இந்திய குடியரசு தலைவர் ஆவதற்கு முன்பிருந்து  பரிசீலிக்கப்பட்டு,  நிறைவேற்ற கொண்டுவந்த லோக்பால் சட்ட மசோதா  இன்னும் நிறைவேறாமல்  கிடக்கிறது!

       ஆனால் , உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் அரசு துடிக்கிறது!  அதனை பி.ஜே.பி-யும்  கண்டுகொள்ளாது என்பதால்!

       அணு ஆயுத பரவல் தடை சட்டம், 123- ஐ  அமெரிக்கா நிர்பந்தித்ததால்  அவசரமாக எதிர்ப்புகளைக் கண்டுகொள்ளாமல்  நிறைவேற்றிய காங்கிரஸ் அரசு,  மக்களின் நலனுக்கான சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றுவதில் அக்கறை காட்ட வில்லை!

இத்தகைய விசயங்களில் பி.ஜே.பி-யின் எண்ணப்படியே, காங்கிரஸ் அரசு நடந்து கொண்டு வருகிறது! வெளியில் அடித்துக் கொள்வதைப்போல காட்டிக் கொண்டு திரைமறைவில்  இரண்டு கட்சிகளும்  மக்களுக்கு எதிரான செயல்களையே செய்து வருகின்றன!

    இப்படி  கையும்,தாமரையும் கலந்து செய்யும் மக்களுக்கு எதிரான சதிகளில் ஒன்று   தீவிரவாதத்தையும்   பேதப்படுத்திப்  பார்ப்பதாகும்! 

Thursday, 30 May 2013

அரசே,தீவிரவாதத்துக்கு காரணம்!

       சகிப்புத் தன்மை உள்ளவர்கள் கூட,பொறுமை மீறி தீவிரமாகி விடுவது உண்டு.  நியாயங்கள் மறுக்கப்படும்போது,அநியாயங்கள் அதிகரிக்கும்போது  கடவுள் அவதரித்து, தட்டிகேட்பார்  என்று எல்லோராலும் இருக்க முடிவதில்லை!

       எந்த ஒரு செயலுக்கும், அதற்கு சமமான எதிர் செயல் இருக்கும் என்பது நீயூட்டனின் விதி.  இதனை ஆட்சியாளர்கள்முதலில் புரிந்து கொள்ள வேண்டும்!

        ஜனநாயகத்தின்  போர்வையில்  பன்னாட்டு  கம்பனிகளையும்,பெரும் முதலாளிகளையும் ஆதரித்து, இயற்கை வளங்களை கொள்ளையிட அனுமதித்து,  சட்டீஸ்கர் மாநில பழங்குடியின மக்களின்   வாழ்வாதாரத்தை  கேள்விக்குறியாக்கியது மத்திய, மாநில அரசுகள்தான்.

      பழங்குடியின மக்களின்  நிலையை மேம்படுத்த முன்வராமல், சல்வாஜுடும் போன்ற அமைப்புகளை உருவாக்கி, மேலும் கொடுமைகளுக்கு ஆளாக்கியதும்,  அதனை அமைதியாக அனுமதித்து வருவதும் அரசுகள்தான். அரசின் இந்த பயங்கரவாதமே, ஆயுதம் ஏந்தி போராடும் நிலைக்கு சட்டிஸ்கர்  பழங்குடியின மக்களை தள்ளி உள்ளது!

      அடிப்படை உரிமைகளை பறித்து, எதேச்சாதிகாரமாக நடக்கும் அரசுகளின் செயலால்தான், மக்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கும், தீவிரவாதத்தில் ஈடுபடும் சூழ்நிலைக்கும்  தள்ளப்படுகின்றனர்!

      அரசுகள் தங்களது அணுகுமுறையில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். இல்லையெனில் தீவிர வாதமும், ஆயுதம் ஏந்தி போராடும் மக்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கவே செய்யும்!   இதனையே சட்டிஸ்கர் மாநிலத்தில் நடந்த மாவோயிஸ்டுகளின் தாக்குதல் சொல்லுகிறது ! 

      பசியுடன் இருக்கும் மக்கள்,வாழவே முடியாத நிலைக்கு தள்ளப்படும்போது, ஜனநாயகமோ,  தர்மங்களோ,நியாயங்களோ  அம்மக்களிடம்  எதிர்பார்க்க முடியாது!   ஏனென்றால்,

"பசியால்பொய் விலையும்,
      படுகொலைகள் மெத்தவரும்
அசையாத மாளிகையும்
      ஆடிப் பொடிப்படுமாம்! "

எனவே,

"மேட்டுக் குடி வாழ்க்கை மேன்மேலும் உயர்ந்துவர,
நாட்டுக் குடிவாழ்க்கை நடுத்தெருவில் நிற்பதை
மாற்றி அமைக்க ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும்."
                                                                                                                                                                       வருவார்கள் என்று நம்புவோமாக!


                   

Wednesday, 29 May 2013

குண்டு வெடிப்புகளால் ஏற்படும் பயன்கள்!

           காரண காரியங்கள் இன்றி உலகில் எதுவும் நடப்பதில்லை. உலகில் நடக்கும் தீமைகளில் சில நன்மைகளும், நன்மைகளில் சில தீமைகளும் இருப்பதும் உண்மையாகும்!
        இந்த நியதிப்படி, நமது நாட்டில் நடைபெறும் குண்டு வெடிப்புகள்  மூலம்  பொதுமக்கள் பலியாவதும், சொத்துகள் சேதம் அடைவதும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுவதும்,  மக்கள் அச்சபடுவதும்   தீமைகள்  ஆகும்.

     அதே நேரத்தில்  இத்தகைய குண்டுவெடிப்புகளால் நன்மைகளும் ஏற்படுகின்றன! எனக்கு நன்மையாக தெரியும் சிலவற்றை  கீழே தந்துள்ளேன்!

1)  குண்டுவெடிப்பு நடந்ததென்றால்.. பத்திரிக்கைகள்,ஒலி-ஒளி ஊடகங்கள்   பரபரப்பாக செயல்படுகின்றன. மக்களுக்கு பல்வேறு வகையான செய்திகளை தருகின்றன! அவைகள் இதுவரை நாம் அறிந்தே இருக்காத பல அமைப்புகள்   பற்றியும்,  அமைப்பின் தலைவர்களைப் பற்றியும் செய்தி தருகின்றன. அவைகள் நல்ல பொழுதுபோக்காகவும், நகைசுவை மிக்கதாகவும் இருக்கின்றன.

(       குண்டுவெடிப்புக்கு முன்பு அமைப்புகளைப் பற்றி செய்தி வெளியிடுவது இல்லை.) புலனாய்வு செய்யும் போலீசார் ,யார் குண்டு வைத்தது என்று அறிவிப்பதற்கு முன்பே பத்திரிக்கைகள் போட்டிபோட்டுக் கொண்டு, இவர்கள்தான் குண்டுவைத்தார்கள், இந்த அமைப்புதான் செய்திருக்கும்  என்று  சொல்லிவிடுகின்றன.! இதனால் புலனாய்வு செய்யும் போலீசார்கள்  யோசித்து மண்டை காயவேண்டிய பிரசனை தவிர்க்கப்படுகிறது!

2)     தங்களுக்கு பிடிக்காத, வேண்டாத, முஸ்லிம்களை அச்சுறுத்தவும்,  முடிந்தால் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யவும் உதவுகின்றன. இதனால்,இந்து மதவாதிகளை திருப்தி படுத்தவும், மகிழ்ச்சிஅடைய செய்யவும் முடிகிறது!

  3)   ஒட்டு மொத்த முஸ்லிம்கள் மீது தீவிரவாத முத்திரை குத்த முடிகிறது. முஸ்லிம்களைக் காட்டி இந்துக்களை ஒன்றாக அணிதிரட்டவும்,  எதிராகவும்  பயன்படுத்த முடிகிறது!

4)   காங்கிரசு போன்ற மதசார்பற்ற  கட்சிகளுக்கு, முஸ்லிம்கள்   போன்ற சிறுபான்மையினர்ஆதரவு தொடர்ந்து கிடைக்க உதவுகின்றன.

5)  முஸ்லிம்களின் சொத்துக்களை கேள்வியே இன்றி கொள்ளையிடவும், அபகரிக்கவும், அச்சுறுத்தி பறிக்கவும் குண்டு வெடிப்புகள் உதவுகின்றன.

6) ) கற்பழிப்பு,கொலை கொள்ளை என்று கண்ட வழக்குகளை கவனிக்கும் தொல்லைகளில் இருந்து விடுபடவும் , புலனாய்வு போலிசுக்கு குண்டுவெடிப்புகள்  உதவுகின்றன.

7) அரசியலில் பரபரப்பாக பேசப்படும் ஊழல்கள், முறைகேடுகளை மக்கள் கவனத்தில் இருந்து திசைதிருப்பவும், முக்கிய சட்ட திருத்தங்கள், மசோதாக்கள், நிறைவேறுவதை தடுக்கவும், தவிர்க்கவும் கூட குண்டுவெடிப்புகள் உதவுகின்றன!
      இதுபோல இன்னும் பல நன்மைகள் இந்தியாவில் குண்டு வெடிப்பால்  நடைபெற்று வருகின்றன.


Sunday, 26 May 2013

முடிந்ததும் தொடர்வதும்..

          பாலச்சந்தர் திரைபடத்தில் ஒரு கோட்டை அழிக்காமல்,சிறியதாக்க  முடியுமா? என்று ஒரு புதிருக்கு   வரைந்த  கோட்டை விட,  நீளமான  கோட்டை அருகில் வரைந்தால்   முதல் கோடு சிறியதாகி விடும்   என  காட்சி இருக்கும்.!

       இருகோடுகள் தத்துவம் இந்திய ஆட்சியாளர்களால் இப்போது பயன் படுத்தப்பட்டு  வருகிறது!  ஒரு ஊழல் குற்றசாட்டில் இருந்து, ஒரு முறைகேட்டில் இருந்து, மக்களது கவனத்தை திசைதிருப்பவும்  அந்த குற்றச்சாட்டின் வீரியத்தைக் குறைக்கவும்  இத்தகைய யுக்தியை ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்!

         2ஜி-முறைகேடு, ஆதர்ஷ் அடுக்குமாடி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஹெலிகாப்டர் பேர ஊழல், நிலகரி சுரங்க பேர ஊழல், போன்ற அத்தனை ஊழல்களும் சமீபத்தில்  வெளிவந்த   கிரிக்கெட்  ஊழலால் மறக்கப்பட்டு விட்டது.மறைக்கப்பட்டு விட்டது.!

        சுசில் குமார் ஷிண்டே  பேர்பாக்ஸ் ஊழல் குறித்து ' இந்த ஊழலை மக்கள் காலப்போக்கில் மறந்துவிடுவார்கள் ' என்று  குறிப்பிட்டு இருந்தார்.  மக்களின் மறதியையும்,  மன நிலையையும்  ஆட்சியாளர்கள்  புரிந்து வைத்துள்ளனர்.! அதனால்தான், மக்களைப்பற்றி கவலைபடுவதில்லை! நாட்டை சுரண்டுவதை பற்றி  இவர்கள் கவலைபடுவதில்லை!    ஊழல், முறைகேடுகளை    தொடர்ந்து  வருகின்றனர். நாம்தான் ஆட்சியாளர்களை புரிந்துகொள்ளாமல் ஏமாந்து வருகிறோம்!

          சுஷில் குமார் சிண்டே இப்போது,C B I-க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது குறித்த  ஐந்து  பேர் குழுவில்  ஒருவர்.  C B I-க்கு தன்னாட்சி வழங்கும் லட்சணத்தை பிறகு பார்க்கலாம்!

       சுஷில் குமார் ஷிண்டே குறிப்பிட்டதைப்போல,  இப்போது பரபரப்பாக பேசப்படும்   கிரிக்கெட்  மேட்ச்  பிக்சிங் ஊழலும்  மற்றொரு ஊழல் குற்றசாட்டு எழும்போது, மக்களால் மறக்கப்பட்டு விடும்.!  இதுதான் ஊழல்கள் குறித்த இந்திய அரசியலின்  அணுகுமுறையாகவும், மக்களின் பார்வையாகவும் இருந்து வருகிறது!

     I P L-கிரிக்கெட்  போட்டிகள் முடிந்துவிட்டது.ஆட்சியாளர்களின் ஊழல்கள் முடியவில்லை அது தொடர்கிறது!



Friday, 24 May 2013

இந்து வெறியர்கள் வைத்த குண்டு..

          மகராஷ்டிர மாநிலம் மாலேகானில் 2006-ஆம் ஆண்டு  மசுதிக்கு அருகில் குண்டு வெடிப்பு நடந்தது. 37 பேர்கள் பலியானார்கள். வழக்கமாக மசூதிக்கு குண்டுவைத்தாலும்   வைத்தது  முஸ்லிம்கள்தான் என்ற இந்துத்துவ சிந்தனை கொண்ட போலீசார்,மாலேகான் குண்டுவெடிப்புக்கும் அவர்களே குற்றவாளிகள் என்று முடிவுகட்டி  ஒன்பது அப்பாவி முஸ்லிம்களை பயங்கரவாத  தடுப்பு சட்டத்தில் கைது செய்து  சிறையில் அடைத்தது.

       மாலேகான் குண்டுவெடிப்பை அபினவ் பாரத் என்ற ஹிந்து அமைப்பினரே நடத்தியதாக சுவாமி அசிமானாந்தா என்பவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிறகே  தேசிய புலனாய்வு ஏஜென்சி (N I A) குண்டு வைத்த இந்து மதவெறியர்களை தேடத் துவங்கியது. அப்பாவி முஸ்லிம்கள் ஒன்பதுபேரும் 5-வருடங்கள் சிறைக்கு பிறகு விடுதலை  செய்யப்பட்டு உள்ளனர் !

        2006-யில் நடந்த  மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில்  ஏழு ஆண்டுகள் கழிந்த நிலையில், " லோகேஷ் சர்மா, தனசிங்,ராஜேந்திர சவுத்ரி,மனோகர் ஆகிய நான்கு பேர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது!   இவர்கள் நால்வரும் வெறும் அம்புகள்தான் என்று தெரிகிறது.
         இந்த வழக்கில் தொடர்புடைய டாங்கே என்பவர்  தலைமறைவாக இருக்கிறார். கல்ஷங்கரா என்பவர் தேடப்படும் குற்றவாளியாக  அறிவிக்கப்பட்டு இன்னும் தேசிய புலனாய்வு ஏஜென்சி  தேடிகொண்டே இருக்கிறது.

      இவர்கள் உயிருடன் இருகிறார்களா? என்பதே  சந்தேகம்தான். ஏனெனில்  குண்டுவெடிப்பில் தொடர்புடைய, இந்துத்துவ தலைவர்களைப் பற்றிய   உண்மையை சொல்லிவிடுவார்கள் என்று  கொலை செய்யப்பட்டு விட்டனரா? என்று தெரியவில்லை.!
        நான்கு பேர்களின் மீது மட்டும் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்து உள்ளதை பார்க்கும்போது, இவர்களைக் கண்டுபிடிக்கவும்,இவர்கள் என்ன ஆனார்கள் என்பதை கண்டறியவும் தேசிய புலனாய்வு ஏஜென்சி தீவிர கவனம் செலுத்த வில்லை  என்ற சந்தேகம் வருகிறது!

       மும்பையில் கொல்லப்பட்ட   தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரி  ஹெமேந்த கர்கரே,மாலேகான் குண்டுவெடிப்பை புலனாய்வு செய்து, கர்னல் புரோஹித், அபினவ் பாரத் அமைப்பின் பெண்சாமியார் பிரக்யா சிங் போன்றவர்களை கைது செய்தார். அவர்களை  நீக்கிவிட்டு,குற்றபத்திக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

         டாங்கே, கல்ஷங்கரா ஆகியோர்கள் மூலமாக கர்னலும் பெண்சாமியார் பிரக்யா சிங்கும், குற்றவாளிகள் ஆவார்கள் என்பதால் அவர்களைக் காப்பாற்ற,  தலைமறைவு  குற்றவாளிகளை விடுத்து  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதா ?

      உண்மையில்   மாலேகான் குண்டு வெடிப்பை  முஸ்லிம்கள் செய்திருந்தால், இந்நேரம் எல்லா முஸ்லிம்களையும் சிறையில் போட்டு சித்திரவதை செய்து,  குற்றப்பத்திரிக்கை தாக்கல் ஆகி இருக்கும். ( கோவையில்  அப்படிதான் நடந்தது.  இறந்த முஸ்லிம்கள் குறித்து  கேள்வி கேட்க யாரும் முன் வரவில்லை).!

      மலேகான் குண்டுவடிப்பில் பலியான 37 பேர்களின் உயிருக்கும், ஹெமேந்த் கர்கரே மரணத்திற்கும் வழங்கப்படும் நீதி எப்படியிருகிறது என்று பார்க்கலாம்! 


 

Tuesday, 21 May 2013

ராஜீவ் கொலையாளிகளின் உயிர்..!

       இன்று ராஜீவ் காந்தி படுகொலையான நாள்! அவர் படுகொலை நடந்து           22- ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால், இன்றும் அவரது படுகொலைக்கான உண்மையான காரணம் தெரியவில்லை!

    ராஜிவைக்  கொன்றது விடுதலைப்புலிகள் என்று  குற்றம் சொல்பவர்கள், அவரை கொன்றதற்கு சொல்லும் காரணம்  பலவீனமானது.!
         சிங்களர்களுக்கு ராஜீவ்  மீது  கோபம் இருந்தது. இலங்கை அணிவகுப்பில் சிங்கள வீரன்  துப்பாக்கி கட்டையால் ராஜீவை தாக்க முற்பட்டதில் இருந்து அது தெரிந்தது .

        இரான் -இராக் போரின்போது,  பன்னாட்டு படைகளின் விமானங்களுக்கு (குறிப்பாக அமெரிக்க விமானங்களுக்கு)  இந்தியாவில் பெட்ரோல் போடுவதற்கு அனுமதிக்காமல்,ராஜீவ் கண்டித்த செயலால் அமெரிக்காவுக்கும் , அதன் அடியாளாக செயல்படும் இஸ்ரேலுக்கும் கூட.. ராஜீவ் மீது  வெறுப்பு இருந்தது!

         அடுத்த பிரதமராக  ராஜீவ் வருவதை தடுக்க நினைத்து, அந்த நாடுகள்  கூட ராஜீவைக் கொன்று, விடுதலைபுலிகள் மீது பழிசுமத்தி   இருக்க வாய்ப்பு உள்ளது !

           அமெரிகாவின் கையாளாக  செயல்படுவதாக சந்தேகிக்கப்படும் சுப்பிரமணிய சுவாமியிடம்   ராஜீவ் கொலை தொடர்பாக  முறையாக  விசாரணை நடத்தப்படவில்லை.!

          அரசியல் சாமியார் சந்திராசாமி மீது கூட சந்தேகம் இருக்கும் நிலையில், வரதராஜ பெருமாள் இலங்கையில் இருந்துவந்து  இந்தியாவில் அடைகலம் இருந்த நிலையில், ராஜீவைக் கொல்ல பயன்படுத்திய பெல்ட் பாம் குறித்தும் சரியான தகவல்,விசாரணை  இல்லாத நிலையில்,  பேட்டரி வங்கிக் கொடுத்ததாக  பேரறிவாளன் முதலானோர்  ராஜீவ் கொலை குற்றதைத்  தாங்கி, சிறையில் இருந்து வருகின்றனர். !

          ஒன்றரை லட்சம் தமிழர்கள் இலங்கையில் அழிக்கப்பட்ட பிறகும் சாந்தன்,முருகன்,பேரறிவாளனை  தூக்கில் ஏற்றத்  துடிக்கும் கொடூர பாசிச மனம் கொண்டவர்கள், இந்திய ஆட்சியாளர்களாக இருகிறார்கள்.!

      அரசியல் காரணங்களுக்காக குற்றவாளிகளாக ஆக்கப்பட்டு உள்ள இவர்களை அரசியல் ஆதாயத்துக்காக  நாடாளுமன்ற தேர்தல்வரை காங்கிரஸ் அரசு   தூக்கில் ஏற்றாது  என்பது மட்டுமே இப்போது உள்ள ஆறுதலாகும்!


Monday, 20 May 2013

எம்.பி.கள் செய்யும் மோசடி!


           நமது நாடாளுமன்ற  மக்களவை,மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு தங்குவதற்கு சொகுசான வீடுகள், லட்சத்திற்கு மேல்  மாதச் சம்பளம், இலவச தொலைபேசி,இலவச மின்சாரம்,இலவச குடிதண்ணீர்.என்று நிறைய சலுகைகளை வழங்கி உள்ளதை அறிவீர்கள்.எம்.பி.களுக்கு அரசு வாரிவழங்கி வழங்கியிருக்கும் சலுகைகள் போதாது என்று

           விமானத்திலே இலவமாக எக்ஸ்சிகுடிவ் வகுப்பில் ஆண்டுதோறும் பயணம் செய்ய வழங்கப்பட்டு உள்ள,இலவச பாஸிலும்  ஊழல் செய்து,தனியார் விமானங்களில் எகானமிக் வகுப்பில் பயணம் செய்து எக்ஸ்சிகுடிவ் வகுப்பில்பயணம் செய்ததாக கணக்கு காட்டி அரசை ஏமாற்றி பணம் பெற்று வருகிறார்கள்.

          இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல,    கட்சி வித்தியாசம் இன்றி,தொகுதியில் பணியாற்ற  உதவியாளர்களை நியமித்துக் கொள்ளவும்,அவர்களுக்கு சம்பளமாக தர மாதந்தோறும்  ஒரு எம்.பி.-க்கு  ரூபாய் 30,000/வீதம் பணமும் இந்திய அரசு தருகிறது. இந்த பணத்தையும்  தாங்களே அனுபவிக்கவேண்டும் என்று  நினைத்து  செயல்பட்டு வருகிறார்கள்!

         தங்களது உதவியாளர்களாக  பி.ஏ -க்களாக  பெரும்பாலான எம்.பி=க்கள்  தங்களது மனைவிகளை,மகன்களை,கணவர்களை, மருமகன்களை, காட்டி உதவியாளர்களுக்கு அரசு வழங்கும் 30,000/ பணத்தையும் தாங்களே  எடுத்துகொள்கிறார்கள்!

         நாட்டு மக்களை எப்படி எல்லாம் ஏமாற்ற முடியுமோ,அப்படி ஏமாற்றி வருவதுடன், நமது வரிப்பணத்தில்  உல்லாசவாழ்க்கை வாழ்ந்துவரும் இவர்கள்தான் நமது ஜனநாயக காவலர்கள்,  நமது மக்களின் சேவகர்கள்!

         "ஜனங்க என்ன ஆனால் என்ன, அண்ணாச்சி, நம்ம பணநாயகம் வாழ்ந்தால் போதும்" என்று எண்ணுகிறார்கள், நம்ம எம்.பி.க்கள்!




Saturday, 18 May 2013

வாங்க, சேர்ந்து மகிழலாம்..!



                  "ஏதடா கவிஞன் நெஞ்சில் 
                          என்னதான் துயரம் என்று 
                   வாதிட வேண்டாம். நானே,
                            வாங்கிய வரத்தின் வேகம்!
                   மோதுவதாலே இன்று 
                            முழுவதும் அழுகைப்  பாட்டு
                    தூதுபோய் தீருமென்றால் 
                            துயரத்தை சொல்ல மாட்டேனா? " - கண்ணதாசன்

..............................................................................................................................

"அன்புக்கு இருவர் வேண்டும், 
          அழுகைக்கு ஒருவர் போதும்!
இன்பத்துக் இருவர் வேண்டும்,
        ஏக்கத்துக்கு ஒருவர் போதும்! 
துன்பத்தை தனிமையாக 
        சுவைப்பது போல வாழ்வில் 
இன்பத்தைச் சுவைப்பது இல்லை!
         இயற்கையின் சட்டம் ஈது!"- கண்ணதாசன்.

Thursday, 16 May 2013

மக்களிடம் வாக்கு கேட்காத மன்மோகன் சிங் .

         
           ஜனநாயகத்தின் உன்னதமே தேர்தலில் போட்டியிட்டு,மக்களைச் சந்தித்து  வாக்குறுதிகள் கொடுத்து  வாக்காளர்களின்  அபரிமிதமான வாக்குகளைப் பெற்று, சட்டமன்றத்திலோ,நாடாளுமன்றத்திலோ இடம்பெறுவதும் கடமையாற்றுவதும் தான்!

          அவ்வாறு மகளைச் சந்தித்து வாக்கு கேட்டோ,அமோக வெற்றி அடைந்தோ, நாடாளுமன்றத்திற்கு செல்லாமல்,குறுக்கு வழியில் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் வருபவர்கள் சிலர் இந்திய அரசியலில் இருக்கிறார்கள்!

       அவர்களில் முதன்மையானவர் நமது பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள்! இதுவரை நமது பிரதமர் மன்மோஹன்சிங் மக்களவை எனப்படும் லோக் சபா தேர்தலில் நின்றவர் இல்லை. ஒவ்வொருமுறையும் ராஜ்ய சபை  எம்.பி.ஆக  பாராளுமன்றத்திற்குள் நுழைவதை வழக்கமாக கொண்டுள்ளார்!

       பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மன்மோகன் சிங்  1991-யில் முதல்முறையாக ராஜ்ய சபை  எம்.பி-ஆக அஸ்ஸாமில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் 1996-யில் அஸ்ஸாமிலிருந்து 2-வது முறை தேர்வு செய்யப்பட்டு, நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராக ஆனார், இவ்வாறு நான்குமுறை 20 ஆண்டுகளுக்கு மேலாக  ராஜ்யசபை எம்.பி-யாக இருந்தவர்,தனது பதவிக் காலம் ஜூன் 15-ஆம் தேதியுடன் முடிவடைவதால்,மீண்டும்  5-வது முறையாக  ராஜ்யசபைக்கு தேர்வு செய்ய  அஸ்ஸாமில்  (15.05 2013) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.! 

          மக்களை சந்திக்காமல்  பதவிக்கு வரும் ஜனநாயகம் என்ன ஜனநாயகம்?  இவரைபோன்றவர்கள்   மக்களின் நலனுக்காக செயல்படுவார்கள்  என்பதை எப்படி நம்ப முடியும்? மன்மோகன் சிங் போன்றவர்கள்  மக்களாட்சித் தத்துவத்தை கேலிக் ஆளாக்குகிறார்கள் !

           80-வயது ஆகும்  நமது பிரதமர்   அனேக தேர்தல்களில் வாக்களிக்காமல் இருந்தவர் என்பது இவர்மீது கூறப்படும் மற்றொரு விமர்சனமாகும்!




Tuesday, 14 May 2013

மோடியின் மறுபக்கம்..

           இந்தியாவை வாழ்விக்க வந்த அவதார புருஷராக நரேந்திர  மோடியை சிலர் சித்தரித்து வருகின்றனர்.

     மோடி இந்துக்களின்  குடும்ப உறவை  கொச்சைபடுத்திய, பெண்ணின துரோகி.!  இவர்  யசோதா பாய் என்ற பெண்ணை இளைய வயதில்   திருமணம் செய்து, கைவிட்டவர் என்பது சமீபத்தில் தெரிய வந்திருகிறது! சிறிய அறையில் இன்றும் வசித்துவரும் அந்த பெண் மோடிக்கு பயந்து,மோடி  தன்னை   திருமணம் செய்ததை வெளிபடுத்தாமல் வாழ்ந்து வருவதாக தெரிவித்து உள்ளார்! மோடி இதுவரை அதனை மறுக்கவில்லை, பத்திரிக்கைகளும் அவரிடம் கேட்காமல் இருந்துவருகின்றனர்!


        மனசாட்சியில்லாத,ஒரு பெண்ணை நிராதரவாக விட்ட அரக்க மனம் கொண்ட மோடி  2002-யில்   கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவரத்தின் சூத்திரதாரியாக செயல்பட்டவர்.இவரது தலைமையில் அமைச்சராக இருந்த மாயா கோட்னானி என்பவர்  குஜராத் கலவரத்தில் நரோடா  பாட்டியா என்ற இடத்தில நடந்த கலவரத்தில் 98 பேர்கள் கொல்லப்பட்டதற்கு  காரணமான    குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டு  28-ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளார்.தூக்கு தண்டனை விதிக்கவேண்டும் என்ற மேல்முறையீட்டு மனு செய்யப்போவதாக அறிவித்து,தனக்கும் கலவரத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று அப்போது காட்டிக்கொண்ட  நரேந்திர மோடி அந்த முடிவை மறுபரிசிலனை செய்வதாக இப்போது அறிவித்து உள்ளார்.

        இதன்மூலம் குஜராத் கலவரத்தை முன்னின்று நடத்தி,அப்பாவி முஸ்லிம்களை கொன்று,இளம்பெண்களைக் கற்பழித்து,கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக் கிழித்து, எரியும் நெருப்பில் உயிருடன் போட்டு எரித்து, முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடிய அனைத்து குற்றங்களையும் செய்த குற்றவாளிகளை காப்பாற்றவும் அவர்களுக்கு ஆதரவாகவும் மோடி இருந்துவருகிறார் என்பது உண்மையாகிறது!

      
         அமெரிக்கா தனது மண்ணில் காலடிஎடுத்து வைப்பதை விரும்பாமல் மோடிக்கு அனுமதி மறுத்து வந்தது.  மோடியின் முகத்தில் அமெரிக்க வாழ் இந்தியபெண் சமீபத்தில்  காறிதுப்பி உள்ளார்!,

         மோடியின் மனிதவேட்டை, முஸ்லிம்களின் படுகொலைகள், 2002-யில்  நடந்தேறிய கொடூரம் ஆகியவைகளை மறைத்துவிட்டு, குஜராத்தைப் பாருங்கள், அப்படியே இந்தியாவும் ஆக வேண்டும் என்று காவிக் கும்பலும், இந்துத்துவ மதவாதிகளும் நரேந்திர மோடியைத்   தாங்கி வருகின்றனர்!

     நரேந்திரமோடி முதலில் மனிதனாக மாற வேண்டும்.,செய்த தவறுகளுக்கு முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்  செய்த குற்றங்களை தாமாகவே முன்வந்து ஒப்புக்கொண்டு,தண்டனையை ஏற்கவேண்டும்!   கைவிடப்பட்ட தனது மனைவி யசோதா பாய் காலில் விழுந்து மன்னிப்பு கோரவேண்டும்! . அப்புறம் நாட்டை காப்பாற்றுவது குறித்து அவர்  யோசிப்பதுதான்  முறையாகும்.!




நான் சுடாத (எழுதிய ) கவிதை !

 இன்பமென்னும் முழு நிலவே ,
        எழில் செய்ய வாராயோ?
துன்ப இருள் நீயின்றி,
      துடைப்பது யார் கூரையோ?

குழல் அவிழ்ந்து மண்படர,
      குல மகளே நீ நடந்தால்;
நிழல் போல உனைத் தொடர்ந்து
     நெஞ்சம் வரக் காணாயோ?  ( இன்பமென்னும்..)

வானவில்லில்  தொட்டிலிட்டு,
        வண்ண மலர் மேற்பரப்பில்
 நான் அவளைத்  தாலாட்ட
        நாளெல்லாம் நினைத் திருந்தேன்!

  கருநீல விழி கூறும்..,
        கவிதைகளை படிக்க வந்தேன்!
  கண்ணீரில் தோன்றும் இந்த
        கவிதைகளை தூது விட்டேன்! ( இன்பமென்னும்..)

கற்பனையின் எல்லை தனை,
      கடந்து விட்ட பேரெழிலே!
அற்புதமான அழகுதனை
    அளிக்க வந்த புவிநிலவே.!

துன்பத்தைக் கருவாக்கி
     தோன்றுகின்ற கவிதைகள்தான்
இன்பத்துள் இன்பத்தை,
    ஏற்படுத்தும் கவிதைகளாம்..! ( இன்பமென்னும்..)
     

Monday, 13 May 2013

எப்போதோ சுட்ட (படித்த ) கவிதை!

  அது எனது கல்லூரிக் காலம். எல்லா இளசுகளுக்கும் பிடிக்கும் கவிதைகள் எனக்கும் பிடித்து இருந்தது.!  இளமையில்  படித்த கவிதைகள் பல.. அதில் ஒன்று இது..


     சாடையில் கண்களை தூது விட்டாய்,
             சாமந்தி மஞ்சத்தில் தூவி வைத்தாய்;
    ஆடையை இரவினில் பறக்கவிட்டாய்,
           ஆயிரம் முறை என்னைத்  தழுவவிட்டாய்!
    மலர் வாடையில் தலைவைத்து தூங்கிவிட்டு,
           வரவையும் செலவையும் மறந்து விட்டு;
    பாடையில் ஒருநாள் போகையிலே.
           பக்கத்தில் துணை யார் பைங்கிளியே?

   மதுவினை கொஞ்சம் பருகத் தந்தாய்,
           மலரிதழ் தேனையும் அருந்தத் தந்தை;
   புதுவித சுகம் தரும் கலைஞன் என்றாய்,
          பூங்கவி இசைதரும் கவிஞன் என்றாய்;
   வதுவையின் சுகம்தர உருகி நின்றாய்,
          வஞ்சிக் கொடியென குனிந்து நின்றாய்!
    எதுவரை உறவுகள் சொல் கிளியே.?
         இறந்தபின் துணை யார் சொல் மொழியே!

    ஆறடிக் கூந்தல் உன் சொந்தமடி,
            ஆயிரம் கனவுகள் நம் பந்தமடி!
    தேரென மென் நடை  நடந்திடுவாய்,
            தெள்ளென மின் இடை மிளிர்ந்திடுவாய்!
     ஆரிந்த மானென மனம் வியக்கும்,
             இடை கொடி தழுவிட கரம் துடிக்கும்,
     ஆரடி இறந்தபின் துணை வருவார்?
             ஆறடி நிலம்தான் அணைத்திடுமே!

இந்த கவிதையை எழுதியது நானில்லை..! எழுதியவரைப் கண்டுபிடித்து  சொல்பவர்களுக்கு,   ஒரு அன்பு..   மு...... ....த் ........





  

Saturday, 11 May 2013

இந்திய ஜனநாயக லட்சணம்..


      ஒருவழியாக  பாராளுமன்ற முடக்கத்திற்கு பிறகும், உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு பிறகும் காங்கிரசின் அஸ்வினி குமாரும், பவன் குமார் பன்சாலும் தங்களது பதவியை ராஜினாமா செய்து இருகிறார்கள். காங்கிரஸ் செய்ய வைத்து இருக்கிறது.!

       இரண்டு அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்து விட்டதன் மூலம் ஊழல்,முறைகேடுகளை செய்தவர்கள் நீக்கப்பட்டு விட்டார்கள்,காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துவிட்டது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருகிறார்கள்!


        இந்திராகாந்தி படுகொலையை ஒட்டி, சீக்கியர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள்.  குற்றஞ் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்! 

      2ஜி-ஸ்பெக்ட்ரம் ஊழலின்போது..,  ஆ.ராஜா ராஜினாமா செய்தார். ஏர்டெல் நிறுவன உரிமை மாற்றத்துக்கு உடந்தையாக செயல்பட்டார் என்று தயாநிதி மாறன் ராஜினாமா நடந்தது.


       ஆனால், 2ஜி வழக்கு சி.பி.ஐ  நடவடிக்கையால்  இன்று  தீவிரத்தை இழந்துவிட்டது!   உச்ச நீதிமன்ற கண்காணிப்பு,கண்டிப்பு இல்லாமல் போனால்,  நிலகரி சுரங்க ஒதுக்கீடு விவகாரமும், ரயில்வே நியமன விவகாரமும்  (2ஜி-ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைப் போலவே)  தீவிரம் இழந்துவிடும் என்பதை எதிர்பார்க்கலாம்.

        மும்பையில் நடந்த   ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் முறைகேட்டை  மக்களே  மறந்துவிட்டதைபோல...,

         காமன்வெல்த் விளையாட்டு முறைகேடுகளை  கண்டு கொள்ளாததைப் போல, ஹெலிகாப்ட்டர் வாங்குவதில் ஏற்பட்ட  முறைகேட்டை மறந்து விட்டது போல...,  

   இப்போது பரபரப்பாக்கப் பட்டு உள்ள   ஊழல், முறைகேடுகளும்  மறக்கப்பட்டுவிடும். அல்லது  ஆதாரங்கள், சாட்சியங்கள் எரிக்கபட்டோ,காணமல்  போய்விட்டது என்றோ கூறி குற்றஞ் சாட்டப் பட்டவர்கள்  விடுவிக்கப்பட்டு, நிரபராதிகளாகஆக்கப்படுவார்கள்.

      அவர்களுக்கு பாராட்டு வழங்கி, மீண்டும்  ஆட்சியில் அமர வைத்து ,  ஊழல் முறைகேடுகளைச் செய்ய   காங்கிரஸ் கட்சிமீண்டும்  வாய்ப்பளிக்கும்.   மக்களும் மறந்துவிட்டு, வாக்களித்து மீண்டும் அவர்களை ஆட்சியில் அமரச்  செய்வார்கள்.!  இப்படித்தான் நடக்கிறது  நமது இந்திய ஜனநாயகமும், நமது ஆட்சியின் லட்சணமும்.!

     இன்றுவரை ஊழல்கள்,முறைகேடுகள் ஒழிந்த பாடில்லை! ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல்களுக்கும்  அளவே இல்லை! அதற்காக அவர்கள்  தண்டனை பெறுவதும் இல்லை.! என்கிறபோது,  எதற்கு இந்த வழக்கு,விசாரணை,  ராஜினாமா  நாடகங்கள் ? தெரியவில்லை!

   எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? 
   எத்தனை காலந்தான் ஏமாறுவார்கள் நம்ம மக்களுமே!

     

Friday, 10 May 2013

கர்நாடக காங்கிரஸ் முதல்வர்கள்..!

        மழைவிட்டும் தூறல் நின்றபாடில்லை என்பதுபோல,  தேர்தல் முடிந்தும்,பெரும்பான்மை பெற்றும் கூட காங்கிரசால்  ஆட்சிபொறுப்பு  ஏற்க முடியாத நிலை கர்நாடகாவில் இருக்கிறது.! காரணம், காங்கிரசின் கலாசாரமான  கோஷ்டிகள்,குழுக்கள்  கர்நாடக காங்கிரசிலும் இருப்பதுதான்.



       காங்கிரஸ் கட்சியின் முதல்வர் போட்டிலில்  சித்தராமையா, பரமேஸ்வர்,மல்லிகார்ஜுன கார்கே, ஆர்.வி.தேஷ் பாண்டே, வீரப்பமொய்லி எஸ்.சிவஷங்கரப்பா, டி.கே சிவகுமார்,  டி.பி.ஜெயச்சந்திரா, ஆகியோர்கள் இருகிறார்கள்!  இவர்களில் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் மற்றவருக்கு வருத்தம் ஏற்பட்டு, அதனால் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுமோ, வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமோ என்ற கவலை காங்கிரசுக்கு இருப்பது தெரிகிறது!



        கர்நாடக முதல்வராக விரும்பும் இவர்களில் சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே,  இருவருக்கும் சமவாய்ப்பு இருக்கிறது.
 இவர்களில், யார் முதல்வராக வந்தாலும் கர்நாடக  பொதுமக்கள் வரவேற்கவே செய்வார்கள்.!

            முதல்வர் போட்டியில் தொடக்கி, ஒருவருக்கு ஒருவர் குழிபறிக்கும்  செயலில் ஈடுபட்டு, ஒட்டுமொத்த கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தாமல், நல்ல ஆட்சியை,தந்தால்  போதும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.!

          கடந்த முறை ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சி செய்த தவறுகளை காங்கிரஸ் கட்சியும் செய்யகூடாது  என்பதை  காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும்  புரிந்து கொள்ளவேண்டும்!

Tuesday, 7 May 2013

கர்நாடகா சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்..


     " தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசே மேல்" என்பதுபோல  பாரதிய ஜனதா கட்சியைவிட  காங்கிரஸ் கட்சி  பரவாயில்லை என்று  கர்நாடகா  மக்கள் மனநிலைஇருந்ததை  தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன !  

     தேர்தல் முடிவுகளில் இருந்து பொதுவாக ஆளும் கட்சிகள் மீது மக்களுக்கு ஏற்படும்  அதிருப்பதி காரணமாக  மாற்று கட்சிக்கு வாக்களிக்கும்  மனநிலையும், முந்தைய கட்சியே பரவாயில்லை என்று நினைக்கும் மக்களின்  மனபோக்கை பிரதிபலிக்கிறது!

       கர்நாடகா தேர்தலில்  பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு அக்கட்சியினரின்  பதவி வெறியும், முறைகேடுகளும்,ஊழல்களும், எடியூரப்பாவின் குறுக்கீடுகளும்  முக்கிய காரணங்களாகும்!

       இவைகளைத்தவிர, தேர்தலில் புழங்கும்  பணமும்,முதலீடும்  வழக்கமாக  தேர்தலை  நிர்ணயிக்கும் சக்தியாக  விளங்குவதை கட்டுகிறது!

       தேர்தலில் 4,36,14.881 வாக்காளர்களுக்கு 52,034 வாக்கு மையங்களில் 79,364 மின்னணு வாக்கு எந்திரங்களைக் கொண்டு  நடத்தப்பட்ட தேர்தலில்170 பெண் வேட்பாளர்களுடன்,மொத்தம்  2,948 வேட்பாளர்கள் 224 தொகுதிகளுக்கு போட்டியிட்டனர்!

    போட்டி இட்ட வேட்பாளர்களில் 681 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்!  . 220 பேர்கள்  குற்றப்பின்னணி கொண்டவர்கள்!  இவர்களில், 13 பேர்கள் கொலை முயற்சி வழக்குகளிலும் ,2 பேர்கள் பாலியல் வன்கொடுமை வழக்குகளிலும் தொடர்புடையவர்கள்!

        ஜனநாயகத்தில் எல்லோருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று இவர்களையும் சேர்த்து, நடத்தப்பட்ட தேர்தலில்  வழக்கம் போல பணநாயகம் வென்று,  ஜனநாயகமும் மக்களும்  தோற்கடிக்கப்பட்டு உள்ளனர் என்பதையே  கர்நாடகா சட்டமன்ற தேர்தலும்  நமக்கு விளக்குகிறது!



   

Monday, 6 May 2013

என்.டி.ஆருக்கு பாராளுமன்றத்தில் சிலை

        காங்கிரஸ் அரசு நடத்தும் அரசியல் நாடகங்களுக்கு அளவே இல்லை!
இந்தியாவில் தீர்வு காணவேண்டிய பிரச்னைகள் ஏராளமாக இருக்கின்றன! அத்தனையையும் கவனிக்காமல்  மக்களைஏமாற்றவும், மக்கள் கவனத்தை திசைதிருப்பும் செயல்களையும் தொடர்ந்து செய்து வருகிறது!

      பாராளுமன்றம்  நிலகரி விவகாரம், சட்ட அமைச்சர்  சி.பி.ஐ.-அறிக்கையை திருத்திய விவகாரம், பி.சி சாக்கோவின்  2ஜி-குறித்த அறிக்கை,பவன்  குமார் பன்சாலின் உறவினர்கள் ரயில்வேயில் ஆதாயம் தரும் பதவிகளில் நியமனம் செய்ய பெற்ற லஞ்ச விவகாரம்  என்று விழிபிதுங்கி,நடைபெறவே முடியாதபடி முடங்கிக் கிடக்கிறது!

     உருப்படியான மசோதாக்கள் நிறைவேற வழியில்லை!, ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெறுவது அரிதாகி விட்டது! இவைகளைப் பற்றியெல்லாம்  எந்த கவலையும் இன்றி,   காங்கிரஸ் அரசு நாளை( 7.05.2013) பாராளுமன்ற வளாகத்திலே எம்.டி .ராமராவின் சிலையை வைக்க இருக்கிறது!

         பாராளுமன்றத்தில் என்.டி .ஆரின் சிலைய,அந்த மனிதரின் பெருமையை உணர்ந்து,அவர் ஆற்றிய ஜனநாயக கடமையை, தியாகத்தை,தேச சேவையை மதித்து,   காங்கிரஸ் அரசு வைப்பதாக தெரியவில்லை!

         எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை உத்தேசித்து,  ஆந்திராவில்  காங்கிரஸ்  கட்சிக்கு இருந்துவரும் நெருக்கடிகளை சமாளிக்க வேண்டியே, என்.டி.ஆரின் சிலையை பாராளுமன்றத்தில் வைப்பது  விளங்குகிறது!

       ஆந்திர மக்களால்  கடவுளாக பார்க்கப்பட்ட என்.டி.ஆரின் சிலையை வைப்பதன் மூலம், ஆந்திராவில் தெலுகு தேசம் கட்சியை  சமாதானப்படுத்தி , கூட்டணியில்  கொண்டுவரலாம்,

         ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியையும், ஜெகன் மோகன் ரெட்டியை  சமாளிக்கலாம்,

       தெலுங்கான பிரச்சனையில்  கோபமாக இருக்கும் மக்களை ஏமாற்றலாம்,

        தீவிரமாக தனி தெலுங்கானா  போராட்டத்தில் இருக்கும் சந்திரசேகரராவ் இமேஜையும்  காலிபண்ணி  விடலாம்.

இவைகள் மூலம் காங்கிரசுக்கு கணிசமான சீட்டுக்களை,நாடாளுமன்ற தேர்தலில் பெற்றுவிடலாம்  என்ற அரசியல் காரணங்களுக்காகவே என்.டி.ஆரின் சிலை  பாராளுமன்ற வளாகத்தில் வைக்கப்படுகிறது!

      அற்புதமான  நடிகரை வைத்து  காங்கிரஸ் நடத்தும் நாடகம் இது!  




Thursday, 2 May 2013

ராமதாஸும் காந்திய சிந்தனைகளும்!

        படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்ற பழமொழிக்கு உதாரணமாக யாரையாவது சொல்ல முடியும் என்றால், டாக்டர் ராமதாஸை சொல்லலாம்!

       சமூக நீதி,சமத்துவம், சம உரிமைகளுக்காக, போராடிய அண்ணல் அம்பேத்கர்,பெரியார்  ஆகியோர்களின்  கருத்துக்களை  உள்வாங்கிக்கொண்டு அரசியல்,சமூக பணிகளை ஆற்ற வந்தவர்,  மருத்துவர்  ராமதாஸ் அவர்கள்!   தாழ்த்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட ,சிறுபான்மை சமூக மக்களின் வாழ்க்கை  நிலைகள்,அரசியல் பொருளாதார  நிலைகள் குறித்து அந்த சமூகத்தினரைக் காட்டிலும் அதிகம் தெரிந்து கொண்டிருப்பவர்!

          கடந்த காலங்களில்,மருத்துவர் ராமதாசும்,அவரது பாட்டாளி மக்கள் கட்சியும் மேலே சொன்ன  விஷயங்களை தங்களது கொள்கைகளாக கொண்டு செயல்பட்டது!

        தேர்தல் அரசியலில் தனக்கு ஏற்பட்ட தோல்விகளால், ஒடுக்கப்பட்டு வரும் தலித்,பிற்பட்டோர்,சிறுபான்மை சமூகங்களை ஒன்றிணைத்து, அவர்களின் அரசியல் அதிகாரத்துக்காக,பொருளாதார முன்னேற்றத்துக்காக, வாழ்க்கை மேம்பாட்டுக்காக போராடும் உயரிய லட்சியத்தில்  இருந்து ராமதாஸ் விலகிசென்றுவிட்டார்!

       இன்று சாதியம்  என்ற கொடிய ஆயுதத்தை  கையில் எடுத்துக் கொண்டு  எந்த சமூக மக்களுக்கு ஆதரவாக  போரடவேண்டுமோ,அந்த சமூக மக்களுக்கு  எதிராக  நடந்துவருகிறார்!

        ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டிய  தலித்துகளையும்   வன்னியர்களையும்  பிளவுபடுத்தி விட்டார்!  அந்த  மக்களின் வாழ்வையும், பொருளாதரத்தையும்,எதிர்காலத்தையும்  சீரழிக்கும்   நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்!  சமூக விடுதலைக்கு அரசியல்  முன்னேற்றத்துக்கு  அடித்தளம் இட்டு, போராடிய சமூக  விடுதலைப் போராளிகளுக்கு எதிரான, பெரியார், அம்பேத்கர் போன்றவர்களின் லட்சியங்களுக்கு எதிராக  இன்று செயல்பட்டு வருகிறார்!

        ராமதாஸின் இன்றைய  நிலைப்பாட்டால், தமிழகத்தில் பெரும்பான்மையினரான   தலித்துகளும், வன்னியர்களும்  சேர்ந்து செயல்படும் நிலை தடுக்கப்பட்டு இருக்கிறது! இரண்டு சமூகங்களும் சேர்ந்து   அரசியல்  அதிகாரத்தில் முக்கியத்துவம் பெறும்   சூழ்நிலையும்  தடுக்கப்பட்டு இருக்கிறது!  இரண்டு சமூகங்களும்  பகைமை உணர்வுடன் வாழும் நிலை ஏற்படுத்தப்பட்டு  விட்டது!  இரண்டு சமூகங்களின் அடிப்படை உரிமைகளும், வாழ்வாதாரங்களும்  பதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது! இவ்விரு சமூகங்களும் தொடர்ந்து  பிற சமூகங்களால் அடிமைபடுதத்ப்பட்டு,அடக்கி வைக்கப்பட்டு, ஆளப்படும்  நிலைக்கு ஆளாகியுள்ளன!

       பெரியாரை படித்த ராமதாஸ், பெரியாருக்கு முரணாக செயல்பட்டு வருகிறார்!   திருச்சி சிறையில்  காந்தியின் சிந்தனைகளை ராமதாஸ்  படித்துகொண்டு இருக்கிறார்!  காந்தியின் அகிம்சை,தீண்டாமை, போன்ற தத்துவங்களும்,  சிந்தனைகளும் ராமதாசிடம் என்ன மாற்றத்தை  ஏற்படுத்துமோ தெரியவில்லை!


அன்புமணி ராமதாஸின் கண்டுபிடுப்புகள்!

       அப்பசைத்த குரங்கின் கதையை நினவு படுத்துகிறது  அன்புமணி ராமதாஸின் செயல்கள்! மக்களை சந்தித்து ஆதரவு பெறாமல், தேர்தலில் நின்று வெற்றி பெறாமல், அரசியலின் குறுக்கு பாதையாக கருதப்படும்  ராஜ்யசபா-வுக்கு  அப்பனின் தயவால்  சென்ற  அன்புமணி,  மருத்துவ துறைக்கு அமைச்சரானது பலரும் அறிந்த கதைதான்!

 இவர் அமைச்சராக இருந்தபோது,  சண்டிகர் பகுதியில் மருத்துவ கல்லுரி கட்ட முறைகேடாக அனுமதித்து, ஆதாயம் அடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது! மருத்துவ  கவுன்சிலின் தலைவராக இருந்த கேதான் சர்மா என்பவரது வீட்டில் நடத்திய லஞ்ச ஒழிப்பு சோதனையில் பல ஆயிரம் கொடிகளும் பல நூறு கிலோ தங்கமும் கைபற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது!

         மருத்துவ துறையின்  மத்திய அமைச்சராக இருந்த அன்புமணியின்  பங்குபற்றியும்,தொடர்புகள் பற்றியும் விசாரிக்க வேண்டும் என்று  சர்ச்சைகள் எழுந்தன! பயந்துபோன  அன்புமணி, காங்கிரசுடன் இணக்கமாக நடந்து கொள்ள ராமதாஸை  வற்புறுத்தி, காங்கிரசுடன்   பாட்டாளி மக்கள் கட்சி  கூட்டணி வைக்க செய்தார்!     இலங்கை தமிழருக்காக நீலி கண்ணீர் வடித்த இவர்களது துரோகத்தை தமிழக வாக்காளர்கள்  புரிந்துகொண்டதால்,   கடந்த சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மூன்று சீட்டுகள்  கிடைத்து,  மூன்று சீட்டு கட்சியாக ஆனது! 

      இதனை மக்கள் மறந்து இருப்பார்கள் என்று எண்ணி,வரும் 2016-யில் அன்புமணி ராமதாஸ்  தான் தமிழக முதல்வர் என்று கூறி அக்கட்சியினர் அன்புமணியை  ஒருபுறம் கொண்டாடி மகிழ்வூட்ட,அன்புமணிக்கு தனது நிலை  மறந்துபோய்விட்டது போல தெரிகிறது!  "நான் நினைத்தால், ஒபாமாவுடன் பேசமுடியும், ஹிலாரியுடன் பேசமுடியும், பில்கேட்டுடன் பேசமுடியும் " என்று  பெருமைபட்டு வருகிறார்!

      இந்தியாவில் இவரைத்தவிர யாருடனும் ஒபாமாவும்,ஹிலாரியும் பில்கேட்டும் பேச முடியாதது போல ஓவராக பீலாவிடும் அன்புமணியைப் பார்த்தால்  சிரிக்கத்தோன்றுகிறது!

        இன்றைய தொழில் நுட்பத்தில்,தகவல் தொடர்பு வசதியால்  யார் வேண்டுமேன்றாலும்  பேசமுடியும்,சாட் செய்யவும்,மெயில் பண்ணவும் முடியும் என்ற சாதாரண உண்மையை தெரியாமல்  பேசுகிறார்! அவரது கட்சியினர் சொல்வதுபோல, தமிழக முதல்வராக அன்புமணி வந்துவிட்டால் அவ்வளவுதான்!

     மரக்காணம் கலவரத்துக்கு காரணம் விடுதலை சிறுத்தைகளும் திருமாவளவனும்தான்   என்று சொல்லும் அன்புமணி, புதிதாக ஒரு கண்டுபிடிப்பையும்  சொல்லி இருக்கிறார்!  "தலித்துகள்  அரசிடம் நிவாரணம் பெறுவதற்காக,  அவர்களது குடிசைகளை,வாழ்விடத்தை  அவர்களே தீயிட்டு எரித்து கொண்டார்கள் " என்று ஆர்கிமிடீஸ் கணக்காக  அரிய உண்மையை கண்டுபிடித்து உள்ளார்!

     அன்புமணி  சொல்வதைபார்த்தால், தருமபுரியில் மூன்று கிராமங்களிலும் தலித்துகளே தங்களது வீடுகளை அடித்து சேதபடுத்தி, தீவைத்து எரித்து, தாங்களே.. தங்கள் உடமைகளை கொள்ளை அடித்து விட்டு,  தங்களது கல்வி சான்று,குடும்ப அட்டை,நிலவுடமை,காப்பீடு  பத்திரங்கள்,வங்கி கணக்குகள், பணம், நகை ஆகியவைகளை இழந்துவிட்டார்கள் என்று சொல்லுவார் போல தோன்றுகிறது!

      ராமதாஸ் கைதுக்கு பிறகு  193 பஸ்கள் சேதமடைந்ததாகவும் போக்குவரத்து கழகத்துக்கு  70 லட்சம் நட்டம் ஏற்பட்டு உள்ளதாகவும் அதன் இயக்குனர்  தெரிவித்து உள்ள நிலையில்,  பேருந்தில்  பயணம் செய்த பயணிகள்தான் பேருந்தை  எரித்தார்கள், சேதப்படுத்தினார்கள்,   பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் உடந்தையாக செயல்பட்டார்கள்!   பஸ்களை சேதப்படுத்துவதை  டிரைவரும் கண்டக்டரும்  தடுக்க வில்லை!   என்ற மாபெரும் உண்மையை கண்டுபிடித்து  அன்புமணி சொன்னாலும்  ஆச்சரியம் இல்லை!   அல்லது  எங்கள் கட்சியினர் யாரும்  பஸ்களை சேதப் படுத்தவில்லை,  நடந்தவைகளுக்கு  எல்லாம்   ஒபாமாவும்,ஹிலாரியும் தான் காரணம் என்று புதிய கண்டுபிடிப்பை அன்புமணி வெளியிட்டாலும்   ஆச்சரியம் இல்லை !


    
    

Wednesday, 1 May 2013

பத்மாசூரன் கதையும், பா.ம.க கட்சியும்



      சிவபெருமானை நோக்கி  கடின தவம் இருந்த பத்மாசூரன் தான் யாருடைய தலைமீது கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாக வேண்டும் என்று சிவனிடம் வரம் பெற்றானாம்.தனக்கு வரம் கொடுத்த சிவனின் தலையில் கைவைத்து சோதிக்க முயன்று, இறுதியில் தனது தலையில் கைவைத்து அழிந்து போனதாக..   புராணக்  கதையில் படித்திருக்கிறோம்!

      பாட்டாளி மக்கள் கட்சியும் பத்மாசூரனைப்  போன்று  இருப்பதாக தெரிகிறது!  வன்னிய சங்கத்தை தடை செய்யும் நிலை இருப்பதாக அன்று மத்திய அமைச்சராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி போன்றவர்கள் தெரிவித்து எச்சரிக்கை செய்தனர். வன்னியர் சங்கம்," பாட்டாளி மக்கள் கட்சியாக" ஆனது!

         சிறந்த பேச்சாளரும் சிறுபான்மை சமூகங்களின்  பாதுகாவலருமாக இருந்த டாக்டர். பழனிபாபா  முஸ்லிம்களின் நல்வாழ்வுக்கு    தி.மு.க.கட்சி உதவும் , என்று நம்பிக்கொண்டு தி.மு.க  மேடைகளில் முழங்கி, பட்டி தொட்டி எல்லாம் அக்கட்சிக்கு  ஆதரவு சேர்த்துவந்தார். கருணாநிதி முஸ்லிம்களுக்கு துரோகம் செய்ததால் விலகிவந்து  எம்.ஜி.ஆருக்கு  நண்பராகி,  ஆ.தி.மு.க கட்சிக்கு  ஆதரவாக செயல்பட்டார்! எம்.ஜி.ஆரும்  கைவிடவே, புதிய அரசியல் கட்சியாக  பாட்டாளி மக்கள் கட்சியை  தேர்ந்தெடுத்தார்!

          முஸ்லிம்களுடன், இந்திய குடியரசு கட்சியையும்  டாக்டர்  சேப்பன்  உதவியுடன்  ஒருங்கிணைத்து,    பாட்டாளி மக்கள் கட்சி வலிமையுடன் தமிழக  அரசியல் களத்தில்  வலம்வந்தது!

        டாக்டர் பழனிபாபா,டாக்டர் செப்பன், டாக்டர் ராமதாஸ் ஆகிய மூவரும் அன்று ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினர் ஆகிய உழைக்கும் பாட்டாளி மக்களின்   முன்னேற்றத்திற்காக, உரிமைக்காக, அரசியல்  களம் கண்டார்கள்!

         இந்த மூவரும்  (எனக்கு தெரிந்து )தமிழகம் எங்கும் சுமார் 300-க்கு மேற்பட்ட கூட்டங்களில்  இணைந்து பேசினார்கள்! இத்தகைய  சூழலில்தான் தாழ்த்தப்பட்ட ஒருவரை தமிழகத்தின்  முதல்வராக ஆக்கியே தீருவேன் என்றும் எனக்கு பதவி ஆசை இல்லை என்றும்  எனது வாரிசுகள்  அரசியலுக்கு வரமாட்டார்கள் என்றும்  டாக்டர் ராமதாஸ்  மேடைகளில் பேசிவந்தார்!

        தமிழக அரசியலில் குறிபிடத்தக்க வளர்ச்சியை பாட்டாளி மக்கள் கட்சி அடைந்தது!  தவிர்க்கமுடியாத சக்தியாக விளங்கியது!   பழனிபாபா படுகொலைக்கு பிறகு,  முஸ்லிம்கள் குறித்த பார்வை  பாட்டாளி மக்கள் கட்சிக்கு  மாறிப்போனது!  இன்றுவரை முஸ்லிம்களில் ஒருவருக்கு கூட சட்டமன்ற, நாடாளுமன்ற சீட்டு கொடுத்து  அவர்களை  எம்.எல்.ஏவாகவோ, எம்.பி.யாகவோ  ராமதாஸ் ஆக்கியதில்லை! முஸ்லிகள் ராமதாஸை புறக்கணித்து வருகின்றனர்!

        தாழ்த்தபட்டவர்களின் நிலையும் அதுதான்! தாழ்த்தப்பட்டவர்களுக்கு  சீட்டே கொடுக்காத ராமதாஸ், " தமிழக முதல்வராக"ஆக்குவார் என்பதை நம்ப தாழ்த்தப்பட்டவர்களும் தயாராக  இல்லை! எனவே ,அவர்களும் ராமதாசை கைவிட்டு விட்டனர்!

         வேறு வழி  இன்றி,  வன்னியர்களை வைத்து  பிழைப்பு நடத்தும் நிலை அவருக்கு ஏற்பட்டு விட்டது! எந்த சாதியை முதல்வர் ஆக்குவேன் என்றாரோ, அந்த சாதியை அழிக்கவும்,  அவர்களது பொருளாதாரத்தை ,வாழ்வாதாரத்தை முடக்கவும் இன்று  முனைப்பு காட்டிவருகிறார்! 

         பொது சொத்துகளை சூறை ஆடுவது, சேதப்படுத்துவது,  மரங்களை வெட்டி வீசுவது, பஸ்களை  எரிப்பது  என்று  தமிழக மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும்  சீர்குலைத்து வருகிறார்!பொதுமக்கள் வெறுப்பை சம்பாதித்து வருகிறது  ராமதாசின் கட்சி.!    தனக்கு கிடைத்த வாய்ப்புகளை  பத்மாசூரனை போல பயன்படுத்தி,  (ராமதாஸ்)  அழிவுக்கு ஆளாகி வருகிறார்!

        ஆகவே,   பாட்டாளி மக்கள் கட்சியை  எல்லாதரப்பு மக்களும் புறக்கணிக்க வேண்டும்,  இவர்களுடன்  தேர்தலில்  சுய ஆதாயத்திற்காக, சந்தர்ப்பவாத கூட்டு வைக்கும் அரசியல் கட்சிகள், சாதி அமைப்புகளையும்  புறக்கணிக்க பொதுமக்கள் முன்வர  வேண்டும்!

         இத்தனை அராஜகங்களையும் செய்துவிட்டு,  எப்படி தேர்தலில் பிற சமூக மக்களின் வாக்குகளை,ஆதரவை கோரமுடியும்?  என்பதை பாட்டாளி மக்கள் கட்சியினரும்  சிந்திக்க வேண்டும்!  சிந்திப்பார்களா?