Friday, 27 September 2013

ஆர்.எஸ்.எஸ்-இன் தேசபக்தி இலட்சணம்...

            தேசபக்திக்கு உதாரணமாக தங்களை கட்டிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கும் தேசபக்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.நடக்கும் காலகட்டத்தில் சுதந்திர போராட்டம் நடந்த காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசம் காட்டி, ஆங்கிலேயர்களின் காலை நக்கிப் பிழைத ஆர்.எஸ்.எஸ் கும்பல், தங்களது பழைய வரலாறு யாருக்கும் தெரியாது என்று நினைத்து, தங்களது இந்திய துரோகத்தை,மோசடிகளை மறைத்து  இந்தியாவின் தேசபக்தர்களாக வேஷம் கட்டி வருகிறார்கள்.

         ஆங்கிலேயர்கள் இராணுவத்துக்கு ஆட்களை சேர்த்தபோது, இந்து இளைஞர்களை ஆங்கிலேய இராணுவத்தில் சேர்த்த பாவிகள், இவர்கள்.! ஆர்.எஸ்.எஸ். காவிக்  கும்பலின் ராணுவ வீரர்களைக் கொண்டே ஆங்கிலேயர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தை ஒடுக்கி  வந்தார்கள்.

          அதுமட்டுமில்லை, ஆங்கிலேயர்களை வெளியேற்ற 1942-யில் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தை காங்கிரஸ் ஆரம்பித்து, கம்யுனிஸ்டுகள்,  முஸ்லிம்லீக் போன்ற அமைப்புகள் ஆதரித்து, போராடிய போது,  இந்த காவி துரோகிகள் சுதந்தியதுக்காக  போராட வில்லை அந்நியர்களை எதிர்க்கவில்லை! மாறாக ஆர்.எஸ்.எஸ்-இன் தலைவராக இருந்த கோல்வாக்கர்  இந்து இளைஞர்களை தமது அமைப்பில் சேர்க்கும் முயற்சியில் கவனம் செலுத்தினார். எங்கே தங்கள் பிள்ளைகள் காங்கிரசில் சேர்ந்து ,ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் நடத்தி,சிறைக்கு போய்விடுவார்களோ என்ற அச்சத்தில் பார்ப்பனர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்த்தனர்.(பார்ப்பனர்களுக்கு  என்னே தேசபக்தி !)

           எப்போதும் தங்களது நலனை மட்டுமே பெரிதாக நினைக்கும் பார்ப்பன கும்பல் இன்று தேசபக்திக்கு சொந்தகாரர்கள் போல போடும் வேடமும் அடிக்கும் கூத்தும், ஆர்ப்பட்டமும், நடிப்பும் சொல்ல தரமற்றது. வேட்கக்கேடானது.

          இந்தியாவில் எல்லோரும் சுதந்திரத்திற்காக போராடிய போது,சிறை பட்டபோது,செக்கிழுத்து,கல்லுடைத்து கஷ்டப்பட்டபோது ஆங்கிலேயர்களை எதிர்த்து தங்களது வாழ்வை, வசதியை இழந்தபோது, ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் ஆங்கிலேயரை   பயன்படுத்தி  தங்கள் சொந்த நலனை, வியாபரத்தை நடத்தினார்கள்.

டிரெவர் டிரைபர்க் என்ற பத்திரிக்கையாளர் அதனை  எழுதியுள்ளார்.

     "அதே நேரத்தில் பல ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பிரிட்டீஷ்  ராணுவத்துக்கு வேண்டிய  ராணுவ எந்திரங்களை சப்ளை செய்யும் கான்ட்ராக்ட் டுகளை எடுத்தனர்.1943-ம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டபோது,  இருந்த உணவுப் பொருள்களை எல்லாம்  இந்த ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வாரிக் கொண்டு போய், பிரிட்டீஷ் ராணுவத்தினருக்கு கொடுத்தனர். பஞ்சத்தால் பரிதவித்த மக்கள் மேலும் கொடுமைக்கு உள்ளாயினர். இந்த காண்ட்ராக்டு காரர்களிடம் பணம் ஏராளமாக வர ஆரம்பித்தது பிரிட்டீஷ் ராணுவ நிதிக்கு பணத்தை அள்ளி வீசினர்.( அப்போதுதானே காண்ட்ராக்டு கிடைக்கும் } ஆர்.எஸ்.எஸ்செய்தித்தாள்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அரசாங்கம்  பேருதவி செய்தது. ஏராளமான அரசு விளம்பரங்கள் தரப்பட்டன. இந்த நடவடிக்கைகள், ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தேசியப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்ற மாயையை உடைத்துக் காட்டுகிறது" 
என்று டிரெவர் டிரைபர்க் அவரது  FOUR FACES OF SUBVERSION என்ற நூலில்( பக்கம்-27) எழுதி  உள்ளார்.

          ஆங்கிலேயர்களிடம் விசுவாசம் காட்டி  இந்திய சுதந்திரத்துக்கு இடையுறாக ஆங்கிலேய ராணுவத்துக்கு ஆள் சேர்த்தும்,காண்ட்ராக்டு எடுத்தும், கூட்டிகொடுத்தும்,  காட்டிகொடுத்தும்  துரோகம் செய்த ஆர்.எஸ்.எஸ்-காரர்கள்  இன்று தேச பக்தர்களாக,சுதந்திர போராட்ட வீரர்களாக, தேச தலைவர்களாக,  தங்களை கூசாமல் சொல்லி கொள்ளுகிறார்கள்!   ஆர்.எஸ்.எஸ்-காரர்களின் ஆங்கிலபக்தியை  இன்று, இந்திய தேசபக்தியாக  சொல்லி  ஏமாற்றுவதை என்னவென்று சொல்வது?
 


Thursday, 26 September 2013

திருச்சிக்கு வந்த சோதனையும் தமிழர்களின் வேதனையும்

         திருச்சிக்கு நரேந்திர மோடி வந்திருப்பது  தமிழர்களுக்கு வரப்போகும் மிகபெரிய  வேதனைக்கு சான்றாகும்.  தமிழகத்தில்  வகுப்புவாத ஆர்.எஸ்.எஸ்-யும் அதன் பயங்கரவாதத்தை நடைமுறைபடுத்தும் கட்சியான பி.ஜே.பி-யும் வளர்வதும், அதற்க்கு ஆதரவு தருவதும் எரியும் கொள்ளியால் தலையை சொறிந்து கொள்வதாகும்.

         ஆர்.எஸ்.எஸ். என்பது ஆரியத்தை  அடிப்படையாக கொண்டது. தமிழர்களின் நாகரீகம்,பண்பாட்டுக்கு எதிரானது. தமிழ் மொழிக்கு எதிரானது  என்பதால் அதனை  ஆரம்பம் முதலே தமிழர்கள்  எதிர்த்து வந்தனர் என்பதே வரலாறு. இன்று இந்த வரலாற்றை மறந்து தமிழர்கள் அறிய ஆதிக்க ஆட்சிக்கு ஆதரவாக செயல்படுவது. தாயை வெறுத்துவிட்டு,தாசிக்கு மரியாதை தரும் இழிவுக்கு ஒப்பானதாகும்.
 
 
        ஒரு பியூனாகபார்ப்பனன்  இருந்தாலும் அவனது காலை  பெரிய அதிகாரியாக (மற்றவர்கள்) இருப்பவர்கள் தொட்டு வணங்க வேண்டும் என்று  குறிப்பிட்டு  கோல்வாக்கர்( bunch of thoughts )எழுதினார். 
 
ஆர்.எஸ்.எஸ்-இன் பிராத்தனை பாடல் என்ன தெரியுமா? 

நான் பிறந்த தாய் நாடே உன்னை வணங்குகிறேன்
என்னை வளர்த்த ஆரிய நாடே உன்னை வணங்குகிறேன்   
நாங்கள் உழைக்கும் புண்ணிய நாடே உன்னை வணங்குகிறேன்
நாங்கள் முழுமையான இந்துக்களாகும்
குணத்தை விரைந்து தாருங்கள்
உங்கள் கடவுளின் சக்தியை எங்களிடம் புகுத்துங்கள்
எங்களை ராமனின் சீடர்களாக்குங்கள்
நாங்கள் நம்பிக்கையின் காவலர்களாவோம்
சாம்ராட் ஸ்ரீ ராமதாசுக்கு வெற்றி கிட்டட்டும்
அவரே இந்த தேசத்தின் குரு
 இந்தியத்தாய் வெற்றிபெறட்டும்.    --என்பதாகும்.

           இப்பாடல் ஆர்.எஸ்.எஸ்.-கும்பலால் வழிபாட்டு பாடலாக 1939-ஆண்டுவரை மராட்டியிலும், இந்தியிலும் பாடப்பட்டது. பிறகு "எங்களை ஆளாக்கிய ஆரிய நாடே" என்பது தெரிய கூடாது  என்று பார்பனர்களின் பாசையான சமஸ்கிருததுக்கு மாறுதல் செய்யப்பட்டது. 
 
 
          அதுமட்டுமில்லை இவர்கள் இந்தியாவின் குருவாக வணங்கும்  ஸ்ரீ ராமதாஸ் யார் என்றால், அவர் சிவாஜி மன்னனின் குரு .!  தான் போராடி பெற்ற வெற்றிகளை இந்த பார்ப்பன குருவின் காலடியில் தான் காணிக்கையாக சிவாஜி செலுத்தி வந்தான்.  சிவாஜி மன்னனாக இருந்தாலும் இந்த நாட்டை ஆண்டவர் பார்ப்பனர் ராமதாஸ். !

     அதனால்தான் ஆர்.எஸ். எஸ். கார்கள் இவரை குருவாக ஏற்று பிராத்தனை நடத்துகிறார்கள். முஸ்லிம்களைப் போரிட்டு தோற்கடித்துவிட்டு, விரட்டி விட்டு, வெற்றிகளை பார்ப்பனர்கள் காலடியில் குவிக்க வேண்டும்  என்ற நோக்கத்தை வெளிபடுத்தும் பாடல்தான்  ஆர்.எஸ்.எஸ்-இன் பிராத்தனை பாடலாக, அதுவும் பார்ப்பனர்களின் மொழியான சமஸ்கிருதத்தில் இன்றும் பாடி வருகிறார்கள்.

                                                                                                                                                                              பார்பனீயத்தை,சாதிய  ஒடுக்குமுறையை,   எதிர்த்து போராடிய தந்தை பெரியார் பிறந்த மண்ணில், காந்தியை கொன்ற கும்பல்..,
மதகலவரங்களை நடத்தி நாட்டை சுடுகாடாக ஆக்கிவரும் கும்பல்..., கொள்ளையிட்டும்... , கொலை செய்தும்..., வன்முறையை தூண்டியும்..., வகுப்பு வாதத்தை ஆதரித்தும் வரும் வன்முறை கும்பல்...,
 
       அதுவும் பார்ப்பனர்கள் ஆட்சிக்கு பாதை அமைக்கும் கும்பல்.. ,
தமிழகத்தில் வளர்வதும்...,  தமிழர்கள் அக்கும்பலை ஆதரிப்பதும்...  
மிக பெரிய கொடுமையாகும். குற்றமாகும்.

         தமிழர்களுக்கு,  தமிழ் மொழிக்கு ,தமிழ் நாகரீகத்திற்கு,  தமிழர் நல்வாழ்வுக்கு எதிராக உள்ள பார்ப்பன, பாசிச சக்திகளை  தமிழர்கள் வரவேற்பது என்பது    தங்களுக்கு தாங்களே தமிழர்கள்   பாடை கட்டிகொள்வதற்கு ஒப்பாகும்!

Wednesday, 25 September 2013

தமிழர்களும் இந்தியாவும் இலங்கையும்..

         பேரறிஞர் அண்ணா அவர்கள்," வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது" என்று மத்திய அரசும் இந்திய காங்கிரஸ் கட்சி ஆட்சியும் தென்மாநிலங்கள் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை இடுவது குறித்து அன்றே கூறினார்.           அண்ணா கூறிய மத்திய அரசின் பாரபட்சம் இன்றும் தொடர்கிறது. அன்றும் காங்கிரஸ் ஆட்சி இன்றும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிதான் மத்தியில் நடைபெறுகிறது. காங்கிரசின் பாரபட்சம், குறிப்பாக அது தமிழர்கள் மீதும் தமிழகத்தின் மீதும் கொண்டுள்ள பார்வையில் எந்த மாற்றமும் இல்லை.!


         தமிழர்கள் மீது  கடும் வெறுப்புணர்வை காட்டுவதற்கு காரணம், ஆதியில் இருந்து  பார்ப்பனிய பாசிசத்தை சாடியும், அதற்கு எதிராக திராவிடம் பேசியும் வந்ததாகும். !

           இன்று திராவிடம் என்ற சொல் அதன் அர்த்தத்தை இழந்துவிட்டது. திராவிடக் கொள்கை நீர்த்து போய்விட்டதாக தோன்றுகிறது. ஒட்டுமொத்த திராவிடர்களை,தமிழர்களை ஒற்றுமைப்படுத்தி தலைமையேற்கும் ஆற்றலை தமிழக தலைவர்கள் இழந்துவிட்டார்கள்.தங்களுக்குள் போட்டியும் ஆதிக்க குணமும் கொண்டு, சண்டை இட்டதால் ஆதிக்க சக்தியான பாசிச சக்திக்கும்,அதன் ஆட்சியாளர்களுக்கும் திராவிட வெறுப்பு இன்று தமிழின வெறுப்பாகவும்,விரோதமாகவும் வளர்ச்சி அடைந்து விட்டது. !

        இந்த உண்மையை உணராமல் தமிழின தலைவர்கள் இருந்து வருகிறார்கள் அதனால்  இன்றும் பாசிச ஆட்சியாளர்களால் தமிழர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.  இந்தியாவின் தமிழர்கள் மீதான வெறுப்பால்  தமிழர்களின் நலனும் முன்னேற்றமும் தமிழகத்தில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு நின்று விடவில்லை!   எங்கெல்லாம் தமிழர்கள் பெரும்பான்மையாக இருகிறார்களோ, எங்கெல்லாம் தமிழர்கள் தங்களது அடிப்படை உரிமைக்காக போராடுகிறார்களோ, அங்கெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.       இலங்கையில் பெருவாரியாக இருக்கும் தமிழர்களின் ஜீவாதாரம் அளிக்கப்பட்டு, பொருளாதாரம் நசுக்கப்பட்டு, வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு, உயிருக்கே போராடும்  நிலைக்கு தள்ளப்பட்டனர்.!  காரணம் இந்திய ஆட்சியாளர்களின் தமிழர் மீதான வெறுப்புணர்வும், பாரபட்சமும் தான்.!


         இந்திய ஆட்சியாளர்களின் பாசிச குணமே  இலங்கையை நடப்பு நாடாக கருத செய்து வருகிறது.  அங்கே ஒடுக்கப்பட்டு, உரிமை இழந்து, தமிழர்கள் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதற்கும் காரணமாகும்.

           சமத்துவம் சகோதரத்துவம் வேண்டும்,விரும்பும் பாகிஸ்தானை பகை நாடாக எண்ணுவதற்கும் இந்திய ஆட்சியாளர்களின் பாசிச குணமே காரணமாகும்.

         எதிரியாக பகை நாடாக கருதும் பாகிஸ்தான் கூட தமிழக மீனவர்களை கொல்வதில்லை,சித்திரவதை செய்வதில்லை, உணவிட்டு,கண்ணியமாக நடத்தி, அனுப்புகின்றது .

          ஆனால், இந்தியாவின் நட்பு நாடக உள்ள இலங்கை தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகள் கொஞ்சமா என்ன?  தமிழக மீனவர்களை கொன்று குவிப்பதை என்ன வென்று சொல்வது.?  இன்றும் ,இலங்கையில் தமிழக மீனவர்கள் சிறைபட்டு சிறுமைப்பட்டு,சித்தரவதையை அனுபவிக்கிறார்கள். !

      ஆனாலும்,  இந்திய அரசு தமிழர்கள் என்பதாலேயே கண்டுகொள்வதில்லை. இலங்கையை தட்டி கேட்பதும் இல்லை! அதே சமயத்தில்  இலங்கையை சேர்ந்த மீனவர்கள் இந்தியாவில் கொல்லபடுவதில்லை, சித்திரவதையோ, கடுமையான சிறைதண்டனையோ அடைவதும் இல்லை.  அவர்கள் இலங்கைக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்  படுகிறார்கள்.

        ஆக, இந்தியாவிலும், இலங்கையிலும்,  பாசிச கொடுமைகளை செய்யும் எந்த நாட்டிலும்  தமிழர்களுக்கு, சம உரிமை,  சமத்துவம், நியாயம் கேட்டு போராடும்  ஜனநாயக மக்களுக்கு கொடுமைகள் நடப்பது மட்டும் குறைய போவதில்லை என்பதையே  இந்தியாவும் இலங்கையும் தமிழர்களுக்கு  சொல்லும் செய்தியாக இருக்கிறது.!Friday, 20 September 2013

மோடியால் மூன்றாம் உலகப்போர் வரும்?

          ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,பங்களா தேஷ்,இலங்கை, நேபாளம், உள்ளிட்ட அகண்ட பாரதத்தை இந்து ராஜ்ஜியமாக  நினைக்கும், தனது லட்சியமாக வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்.-யின்  ஏவலாள் நரேந்திர மோடி  பிரதமர் வேட்பாளராக  அறிவிக்கப்பட்ட உடனே  காவி பண்டாரங்களும், காலிதனம் செய்யும் இந்துத்துவ குரங்குகளும் இந்தியாவில் மோடி அலை வீசுவதாக,இளைஞர்களிடம் எழுச்சி தோன்றி இருப்பதாக பொய்யையே மெய்போல பரப்பி வருகிறார்கள்!


         கள்ளுண்ட கருங்குரங்கு கணக்காய்  மோடியும் மயக்கத்தில் பிதற்ற ஆரம்பித்து விட்டார்.  முன்னாள் ராணுவ வீரர்களைக் கொண்டு  இந்நாள் ராணுவ வீரர்களை  இந்துத்வா சதியில் சிக்க வைக்கவும், ஷாகாக்களில்      தனது குண்டர்களுக்கு வெறியுட்டுவதைப் போல நாட்டு மக்களுக்கு வெறியேற்றும் விதமாக பேசவும் ஆரம்பித்துவிட்டார்.

            இந்தியாவில் சீனாவின் ஊடுருவலை தட்டி கேட்க  மன்மோகன் சிங்குக்கு தைரியமில்லை,பாகிஸ்தான் எல்லையில் செய்யும் அத்துமீறலை தடுக்க முடியவில்லை.இந்த அரசு  கையாலாகாத அரசு.என்பதுபோல பேசியும் பிரசாரத்தையும் ஆரம்பித்து விட்டார்.

      தமிழகத்தில்  வரும் 26-ம் தேதி இளந்தாமரை மாநாடு என்ற பெயரில்  பிரசாரத்தை ஆரம்பித்து, தனது பிரதாபத்தை காட்ட இருக்கிறார். அமைதியாக இருக்கும் தமிழகம்  மோடி வருகையால் ரணகளமாகும் சூழலுக்கு மாறும் ஆபத்து இருக்கிறது. காவிகளின் காலித்தனங்கள் ஜே-அரசுக்கும் அதிகாரத்துக்கும் ஆபத்து ஏற்படுத்துவதுடன் தமிழகத்தின் அமைதிக்கும் ஆப்பு வைக்கும் என்பதை இப்போதே சொல்லலாம்.

      இது ஒருபுறம் இருக்கட்டும், தேர்தல் நடந்து மோடி ஒருவேளை பிரதமர் ஆகிவிட்டால்  என்ன நடக்கும்? முஸ்லிம்கள் வழக்கம் போல பாதிக்கப் படுவார்கள்.  ஆட்சியையும்,அரசு இயந்திரமும்  காவி மயமாகும், பகவத் கீதையும்,  பஜனைகளும் பாடதிட்டங்கள் ஆகும்.  அரசு கஜானா ,மக்கள் வரிப்பணம்,  நலத்திட்டங்களுக்கு செலவழிப்பது மாறி,காவிகளின் வளத் திட்டங்களுக்கு திருப்பிவிடப்படும்.  கல்விகொள்கை என்பது காவி கொள்கை ஆகும்.  இதுபோன்ற சீர்கேடுகள்,கொடுமைகள் இந்தியாவில் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம் !

        ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படி,சர்வ வல்லமை உள்ள பிரதமராக அவதரித்து இருக்கும்  மோடியால்  இந்தியாவின் அயல் உறவுக் கொள்கையில் மற்றம் ஏற்படும்.பெட்ரோல் முதலியவைகளை  முஸ்லிம் நாடுகளிடம் இருந்து  இறக்குமதி செய்வது  மெல்ல மெல்ல குறையும், பெட்ரோல் அதிகம் உள்ள முஸ்லிம் நாடுகளை ஏற்கனவே  ஆக்கிரமித்து, அடாவடி செய்து  பெட்ரோல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அமரிகாவிடம் பெட்ரோலுக்கும்,ஆயுதத்தை போல கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். அமரிக்க வல்லரசு போடும் அணைத்து கண்டிசன்களுக்கும் ஆமாம் போடவேண்டிய நிலை மோடிக்கு ஏற்படும். 

        ஆமாம் போடுவதை இந்தியாவில் எதிப்பவர்களை சமாளிக்க அண்டை நாடுகளிடம் அடிக்கடி உரசிகொள்ளவும்,சீண்டிபார்க்கவும் வேண்டிய நிலை மோடிக்கு ஏற்படும். அதுமட்டுமின்றி, அகண்ட பாரத கனவை, இலட்சியத்தை வைத்திருக்கும்   ஆர்.எஸ்.எஸ். கொள்கையால், பாகிஸ்தானுடனோ, சீனாவுடனோ போர் தொடுக்கவும் மோடி முனையலாம். இந்துவை ராணுவமாக்கும்   இராணுவத்தை இந்துமயமாக்கும் ஆர்.எஸ்.எஸ். நிர்பந்தத்தால்...  அப்படி ஒரு நிலை ஏற்பட்டால்  அது  மூன்றாம் உலகபோராக  மாறுவதை நிச்சயம் தடுக்க முடியாது. ஏனென்றால், மூன்றாவது உலகப்போர் இந்தியாவை மையமாக வைத்தே நடக்கும் என்று  நாஸ்டர்டாம் என்பவர் எப்போதோ கணித்து சொல்லி உள்ளாராம்.! 

        மோடி.. நாஸ்டர்டாம் கணிப்பையும், ஆர்.எஸ்.எஸ். கனவையும் நிறைவேற்ற மாட்டார் என்பதை எப்படி நம்ப முடியும்..?

Wednesday, 18 September 2013

அரசியல் வாதிகளின் ஏழைகள் மீதான கருணை..

         ராகுல் காந்தி  காங்கிரஸ் கட்சியும்  ஆட்சியையும் ஏழைகளின் நலனுக்காக பாடுபடுவதாக சமீபத்தில் கூட்டமொன்றில் ஆவேசமாக பேசியுள்ளார். வழக்கம் போல பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.
 
          காங்கிரஸ் கட்சி ஆகட்டும்,பி.ஜே.பி-யாகட்டும்  பன்னாட்டு தரகு முதலாளிகள் கார்பரேட் கம்பனிகள், பெரும் தொழிலதிபர்களின் கண் அசைவுக்கும்,விருப்பத்திற்கும் ஏற்ப கைகட்டி  சேவகம் பார்க்கும் அடிமை ஊழியர்களாகவே இருந்து வருகின்றன.


                   இதுவரை ஏழைகளின் நலனுக்காக,அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக  இவ்விரு கட்சிகளும் பெரிதாக எதையும் செய்துவிடவில்லை. மாறாக மேலும் மேலும்  ஏழ்மையை வளர்த்து,ஏழைகளின் வாழ்கையை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கி வந்துள்ளன.

       பிகாரின் டொங்க்ரியா கோண்டு  இனமக்களின் வாழ்வாதாரமாக பன்னெடுங்காலம் இருந்துவந்த நியம்கிரி மலை  இப்போது லண்டனில் வாழ்ந்துவரும் இந்திய கோடிஸ்வரரான அனில் அகர்வால் என்பவருக்கு சொந்தமான வேதாந்தா என்ற மிகப்பெரிய சுரங்கத் தொழில் நிறுவனத்துக்கு விற்கப்பட்டு விட்டது. இதனால் ஆயிரகணக்கான பழங்குடியின மக்களின் வாழ்க்கை கேள்விகுறி ஆகிவிட்டது.         இதுபோலவே பல்வேறு  சுரங்க நிறுவனங்களுக்கு வரைமுறையே இன்றி,அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் ஏழைகளாக ஆகி உள்ளனர். தங்களது வாழ்விடத்தை பறிகொடுத்து உள்ளனர். இயற்கை ஆதாரங்கள்,ஊற்றுகள்,ஆறுகள்,காடுகள் அழிக்கப்பட்டு,மக்கள் வறுமைக்கு ஆளாகி இருப்பது குறித்து இந்த ஆளும் கட்சி, எதிர்கட்சிகளுக்கு கவலை இல்லை.

       லட்சகணக்கில் விவசாயிகள் தற்கொலை, புதிய தொழில் கொள்கையால் பல லட்சம் தொழிலாளர்கள்  வேலை இழப்பு, மக்கள் அன்றாடம் வாங்கும்,உணவுப்பொருள் விலை ஏற்றம்,பெட்ரோல் டீசல் விலை ஏற்றம்,சமையல் எரிவாயு விலையேற்றம்,   என்று  நடுத்தர மக்களும் ஏழைகளாக ஆட்சியாளர்களால்  மாற்றப்பட்டு வருவதை வசதியாக மறந்து விட்டு,இவர்கள் ஏழைகளின் நலனுக்காக  பாடுபடுவதாக கூறுவது ஏழைகளை கிண்டல் செய்து  அவமானபடுத்தும் செயலாகும்.  வக்கிர குணத்தை காட்டுவதாகும்.


            இது ஒருபுறம் இருக்க,  பாரதிய ஜனதா கட்சியும் ஏழைகளை உருவாக்குவதிலும்,அவர்களை சுரண்டி,கொடுமைப்படுதுவதிலும்  காங்கிரசுக்கு சளைத்த கட்சி இல்லை. அக்கட்சியின் ரிமோட் கண்ட்ரோலான ஆர்.எஸ்.எஸ். மற்றும் உள்ள சங்க பரிவார அமைப்புகள்  இந்தியாவில் நடத்திய வன்முறைகள்,கலவரங்களால், ஏழ்மைக்கு ஆளானவர்கள் ஏராளமாகும், உடமைகள்,வீடுகள்,இழந்து அகதிகள் ஆக்கப்பட்டு ஏழைகளாக ஆனவர்கள் எண்ணில் அடங்காதவர்கள்.

          இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, 1981-ஆம் ஆண்டுக்குள் ஆர்.எஸ்.எஸ். 5000-க்கு மேற்பட்ட கலவரங்களை நடத்தி நாட்டை சுடுகாடாக்கியது. இந்திய மக்களின் ஏழ்மையைக்கு  ஆர்.எஸ்.எஸ்,சங்க பரிவார அமைப்புகளை விட வேறு எந்த அமைப்பும் கட்சியும் அதிகம் உழைத்திருக்க முடியாது. அப்படிப்பட்ட கட்சி ஏழ்மையை பற்றிய கருத்துக்கு கண்டனம் செய்கிறது. எல்லாம் காலத்தின் கோலம்.

          போகட்டும் இப்போது காங்கிரசுக்கும் பி.ஜே.பி-க்கும் ஏழைகள் மீது எதற்கு இந்த கருனைபார்வை,பரிவு?  இன்னும் பறிக்க முடியாத  வாக்குகள்  ஏழைகளிடம் இருப்பதும்,அவைகளை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு  எய்த்து,பார்க்கவும்தான் இவ்விரு கட்சிகளும்  நாடகம் நடத்துகின்றன. நீலிகண்ணீர் வடிகின்றன. காமராஜர்  கூறியதுபோல ஒருகுட்டையில் ஊறிய மட்டைகள் அல்லவா ?


Monday, 16 September 2013

உ.பி கலவரத்தின் பயங்கரம்..

     உ.பியின் முஸாஃபர் நகரில் நடந்த கூட்டுப் படுகொலையின் கொடூரத்தை கண்டு முஸாஃபர்நகர் மாவட்ட மருத்துவமனையில் இறந்த உடல்களை போஸ்ட்மார்ட்டம் நடத்திய மருத்துவர்கள் கூட நடுங்கிப் போயுள்ளனர்.
மருத்துவர்களின் அனுபவத்தை கேட்டால் நெஞ்சு பதறும். ஒரு பெண்ணை இரண்டு துண்டாக பிளந்துள்ளனர். தீயில் பொசுக்கிய உடல்கள் ஆணா? பெண்ணா? என்று கூட அடையாளம் காணமுடியவில்லை. ஒன்பது வயது சிறுவனின் தலையை அடித்து சிதைத்துள்ளனர்.
செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் 12 உறுப்பினர்களை கொண்ட மருத்துவர்கள் குழு மாநிலத்தில் மிகக்கொடூரமாக நடத்தப்பட்ட இனப்படுகொலையில் பலியானவர்களின் உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக இரவு,பகலாக பணியாற்றி வருகின்றனர்.53 உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்ததில் 40 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. 13 உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கோரமாக உள்ளன.
                
      வெள்ளிக்கிழமை மிகக்கோரமான நிலையில் போப், சிகேரா ஆகிய போலீஸ் நிலையங்களில் இருந்து வந்த இரண்டு ஆண்களின் உடல்களை அடையாளம் காணமுடியவில்லை. பெரும்பாலானவை கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தி கொலைச் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
     புல்கானாவில் ஒரு குடும்பத்தில் நான்குபேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு பெண்ணை இரண்டு துண்டாக வெட்டிக் கொலைச் செய்துள்ளனர் காட்டுமிராண்டிகளை விட கேவலமானவர்கள். அவருடைய இடுப்புக்கு மேல் பகுதி தனியாகவும், இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி தனியாகவும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. அவரது முகம் கடுமையாக தாக்கி கோரமாக்கப்பட்டிருந்தது.
     புல்கானாவில் கடுமையான பழிவாங்கும் உணர்ச்சியோடு குற்றவாளிகள் மக்களை கொலைச் செய்துள்ளனர் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
     எட்டு வயது சிறுவர்கள் உள்பட முற்றிலும் தீயில் பொசுங்கிய இரு உடல்கள் செப்டம்பர் 10-ஆம் தேதி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது அவை ஆணா? பெண்ணா? என்று அடையாளம் காண முடியவில்லை. 11 பேரின் டி.என்.ஏ சாம்பிள் எடுத்து பரிசோதனைக்காக பாதுகாக்கப்பட்டுள்ளது.
    புல்கானாவில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
    தீயில் பொசுங்கிய குழந்தையின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்த தன்னால் 24 மணிநேரம் உணவு கூட சாப்பிட முடியவில்லை என்று மருத்துவர் ஒருவர் தனது வேதனையை வெளியிட்டுள்ளார்.
      பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருவதற்கு நடத்தும் வன்முறைகள், கலவரங்கள் படுகொலைகள் யாவும் நாகரீக சமூகத்தை  குழிதோண்டி புதைக்கும் செயல்கள்! அதுமட்டுமில்லைஅவைகள் காவி பயங்கரமாகும்! பண்டைய காலத்தில் வாழ்த்த காட்டுமிராண்டி காபாலிகர்கள்,காலாமுகர்கள் ஆகியவர்களின் நரபலி வேட்டைகளை இவர்கள் இப்போதும்  நடத்தி வருவதாக தோன்றுகிறது. (தகவல் உதவி (நன்றி:) பழனிபாபா.இன்)                      

Saturday, 14 September 2013

பாசிஸ தளபதி ரெடி பலிகள் எங்கே?

        கிராமப்புறத்தில் ஒரு பழமொழி உண்டு.. ஆடு அறுப்பதற்கு முன்பு ஈரல் எனக்குக்குதான் என்பார்கள். அதுபோல நாடாளுமன்ற தேர்தல் எப்போது வரும் என்றே தெரியாத நிலையில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிதான் என்று ஆர்.எஸ்.எஸ்.-உம  சங்க பரிவார அமைப்புகளும்,சிவசேனா போன்ற கட்சிகளும் முடிவுசெய்து அறிவித்து விட்டன. நாட்டுமக்கள் அவருக்கு அமோக ஆதரவு தருவதாக இந்துத்துவ பாசிஸ வாதிகள் ஆர்பாட்டஆரவாரம் வேறு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

         முன்பு  அத்வானியை இதுபோலவே பாசிச வாதிகள் தூக்கிபிடித்து வந்தார்கள். அவரும் பிரதமர் கனவில் மிதந்து, இரத்த யாத்திரை நடத்தினார்,ஏகதா  யாத்திரை நடத்தினார்கள்.           நாட்டில் ஏகப்பட்ட இடங்களில் இந்து-முஸ்லிம் கலவரங்கள் நடத்தி, இந்துக்களுக்கே இந்த தேசம் சொந்தம் என்று கூக்குரல் எழுப்பினார்கள். பாபர் முஸ்லிம் ஆகையால், அவரது பெயரில் மசூதி இருக்கலாமா? என்று விசம விஷத்தை பரப்பினார்கள்,  பாபர் மசூதியை இடிக்க செய்தார்கள்! முஸ்லீம்களை துடிக்கசெய்தார்கள் , கொலைசெய்தும்,கொள்ளையடித்தும் மத துவேஷத்தை வளரத்தார்கள்!  .இந்த்யாவின் இறையாண்மைக்கு சவால் விட்டு அச்சுறுத்தினார்கள்!! 

          ராமர் கோயில் கட்ட என்று இந்தியாவின் பலபகுதிகளில் இருந்தும் செங்கல்கள் பூஜை நடத்தி கொண்டுவந்து அயோத்தியில் குவித்தார்கள். எல்லாம் முடிந்து  பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தது. ஆனால் அத்வானி பிரதமர் ஆக முடியவில்லை.!   அதுமட்டுமில்லை. இன்றுவரை அயோத்தியில் இராமனுக்கு  கோவிலும் கட்ட முடியவில்லை. !  மசூதியை இடித்த குற்றவாளிகள்  அசோக் சிங்கால் முதல் அத்வானி வரை இன்றுவரை ஒருவரும் தண்டிக்கப்பட வில்லை.!

         இன்று  1992-யில்  உத்திர பிரதேசத்தில்  நடத்தப்பட்ட கலவரத்தைப் போல  இப்போதும் நடத்த முயற்சிகளை  இந்துத்துவ பாசிஸவாதிகள் செய்து   வருகிறார்கள். முஸ்லிம்களை ஆத்திரமூட்டியும்,அப்பாவி இந்துக்களிடம் பொய் பிரசாரத்தை தொடங்கியும்  உ.பி-யில் காரியங்கள் நடந்து வருகின்றன.

           குஜராத்தில்  இதுபோன்ற தந்திரத்தை செயல்படுத்தி,  கலவரத்தை ஏற்படுத்தி, வெற்றி கண்ட இந்துத்துவ பாசிசத்தின் கொடுங்கோலன், பாசிஸ கொடுஞ செயல்களைக்  கூசாமல் செய்த, இனியும் செய்யப்போகிற  பாசிச  தளபதி நரேந்திர மோடியை  இந்தியாவின் பிரதமராக இப்போது முன்னிறுத்தி  உள்ளார்கள்.

            குஜராத் கலவரப் புகழ்   மோடியும்  தனது குற்றங்களுக்கு இன்றுவரை தண்டனை பெறாதவர்.  குற்றமே செய்யவில்லை என்று கூறிவருபவர். அப்படிப்பட்ட நரேந்திர மோடியை, இறையாண்மை என்றால் என்ன விலை? என்று கேட்கும் குணமுள்ளவரை,  இந்திய நாடு பிரதமராக அடையும் நிலையை  இந்துத்துவ பாசிசம் ஏற்படுத்தி இருக்கிறது.! 

         பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பதுபோல, குற்றவாளையையே சட்டம் இயற்ற செய்யும் சாகசத்தை  ஜனநாயகத்தின் பெயரில் பாஸிசம் செயல்படுத்த முனைந்து விட்டது.

        பாசிசத்திற்கு தளபதி ரெடியாகிவிட்டார். அவர் பலிகொள்ளும்  ஆடுகளும் அப்பாவி மக்களும் தான் இன்னும் அறியாமல் இருகிறார்கள்.!  வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் எத்தனை கலவரங்கள் நடக்குமோ,அத்தனைக்கு பலிகள் இருக்கும். பாசிசத்தின்  வலிமைக்கு பயன்படும். என்பது தெரிகிறது.

   இந்த இலட்சணத்தில் நமக்கு கிடைக்கவேண்டிய நரபலி பூஜை நரேந்திர மோடிக்கு போய்விட்டதே என்ற வருத்தம்அத்வானிக்கு.! வயதாகிவிட்டதால் முன்பு போல வேட்டையாட முடியாது அல்லவா? அதனாலதான் அத்வானிக்கு பதில் இன்று அதகள,ரணகள  நரேந்திர மோடிக்கு தளபதி பட்டம்.!


Wednesday, 11 September 2013

கவிதைகள் வீரிய விதைகளாக வேண்டும்!

           எனக்கும் கவிதைகளுக்குமான  பரிச்சயம்   பள்ளி நாட்களுடன்  ஆனது. கல்லூரி காலத்தில், எல்லோருமே கவிதை எழுதுவதாக தோன்றியதால் கவிதை எழுதுவதை விட்டுவிட்டு, கவிதைகளை படிக்கும் ஆசை வந்தது. எளிமையான, மரபுக் கவிதைகளும்,பொருள்செறிந்த புதுக்கவிதைகளும் எனக்கு பிடித்தவைகள்!

                                                                                                                                                                               வாழ்க்கை பாதையில் பொருளைத்தேடி,வேலை தேடி,சமூக அங்கீகாரத்தை வேண்டி,எல்லோரையும் போல நானும் ஓடத் துவங்கியபோது, கவிதைகளும் என்னைப்போலவே எனது கவிதைகளும் தொலைந்து போய்விட்டன.

       எனது கவிதைகளின் நேசம் " பஞ்சத்தில்  ஏழை பார்க்கும் பழங்கணக்காக போய்விட்டது. "    இன்றும் கவிதைகள் என்னை கவனிக்கும்போது, அவைகள் என்னை அலை கடலாக்கி, ஆர்பரிக்க செய்து, சூறாவளியாக சுழலற்றுவதும் உண்டு. !  கவிதைகளைப்போல அவைகள் குறித்த கவலைகளும் இப்போது வருகின்றன..

          எது கவிதை? தனிமனிதனின் உணர்சிக்குவியல்களா ?  சமூக ஆதங்கங்களா?  தனிமனித உணர்சிகள்தான் கவிதைகள் என்றால், அவற்றிற்கு  என்ன சிறப்பும் பெருமையும் வேண்டிக்கிடக்கிறது?  சமூக ஆதங்கம்தான் என்றாலும் கூட அவைகளால் என்ன மாற்றம் நேருகிறது?  சொல்லபோனால், கவிதைகளின் நோக்கம் இவைகள் எதுவும் இல்லை!

       ஆனால், தன்னைபோன்ற மனிதர்களுக்கு ஆறுதலும் தைரியத்தையும் கவிதைகள் தருகின்றன.   பாலையில் சோலையாய், உற்ற தோழனாய் , உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும், வலிகளுக்கு மறுந்திடுவதாகவும் கவிதைகள்   இருக்கின்றன .


             ஆனால்,கவிதைகள் எனது பார்வையில் இவைகளையும் தாண்டி வரவேண்டும் என்கிறது. . ச முகமாற்றங்களுக்கும் அவைகள் பயன்படவேண்டும்  என்ற எண்ணம் தொன்றுகிறது..  சுதந்திரத்துக்கு முன்பு, பாரதியின் கவிதைகளைப்போல இப்போதும் சமுகத்தை மாற்றும் வீரிய விதைகளாக கவிதைகள்  இருக்க வேண்டும்!   இன்று இணையத்தளத்தில் கவிதைகளைப்   படைக்கும் எல்லோருக்கும் எனது அன்பான வேண்டுகோளாக இதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

                                                    

"எந்திர வித்தைகள் வீணது கற்றோம்,
 என்னெனவோ பல புதுமைகள் பெற்றோம்,
சந்திரன் செவ்வாய் மண்டலத்தோடு,
 சங்கதி பேசும் வழிகளைத்    தேடும்,
அந்தமில்லா பல சக்திகள் பெற்றும்,
 அடிதடி சண்டையை விட்டிட மட்டும்
தந்திரம் ஒன்றும் அறிந்திலம் அய்யா
தரணியில் மக்கள் தவிப்பது பொய்யா? "

                                                                             
"காக்கையின் குஞ்சு
பச்சையாகவா
 பரிணமிக்கும்?
இன்று, சீர்செய்கிறேன்..
 நாளை, சீர்பட்டுவிடும் என்று!"


Thursday, 5 September 2013

உச்ச நீதிமன்றம் VS கிரிமினல் அரசியல் வாதிகள்..

           தண்டனை வழங்கப்பட்ட அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டி இடுவதை தடுக்கும் தீர்ப்பை  மறுபரிசீலனை செய்ய   உச்சநீதிமன்றம் மறுத்து வருகிறது.

          அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் பொது,ஜனநாயகம் கேள்விகுறியாகிவிடுகிறது. மக்களின் சேவை,பொதுநலம் போய்விடுகிறது. சுயநலமும்,ஊழலும்,முறைகேடுகளும் நியாயமாகி விடுகிறது. அரசு இயந்திரம் செயல்பட முடியாதவாறு சர்வாதிகாரம் தலைதூக்கி விடுகிறது. நாட்டின் முன்னேற்றமும் கேள்விக்குறியாகி,அடிப்படை கட்டமைப்பே சீரழிந்து விடுகிறது.  அத்தகைய நிலைக்கு  இந்தியா ஆட்பட்டு வருகிறது.


             ஜனநாயக போர்வையில்  கிரிமினல் குற்றங்களை செய்து விட்டு, தேர்தலில் நின்றும், வென்றும்  வரும் அரசியல்வாதிகள் இன்று அனைத்து  கட்சிகளிலும் அதிகரித்து வருகின்றனர். . இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் கிரிமினல்களைத் தவிர யாரும் இந்திய அரசியலில் ஈடுபடவும், நிலைக்கவும் முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடும். ஆளுக்கு தகுந்தவாறு  நீதியும்  தர்மமும்,செயல்படும்  நிலை வந்துவிடும்.

           இதுபோன்ற கேடுகள் ஏற்படக்கூடாது என்பதால், தேர்தலில் கிரிமினல்கள் போட்டி இடுவதை தடுக்கும் வகையில்,தண்டனை தீர்ப்பு பெற்றவர்கள் யாரும் எதிர்வரும் தேர்தல்களில் நிரபராதி என்று தீர்ப்பாகும் வரை போட்டி இடுவதையும்,  தற்போது சட்டமன்ற, நாடாளுமன்ற  உறுபினர்களாக இருந்தால், அவர்கள் பதவி இழக்கவேண்டும் என்று  கருதி  உச்சநீதிமன்றம்  செயல்பட  முன்வந்து இருக்கிறது.         இந்த விசயத்தில் பாராட்டவேண்டிய,  ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டிய,  மத்திய அரசு   உச்ச நீதிமன்றத்தின் நல்ல நோக்கத்திற்கு   எதிரான மனநிலையில் இருந்து வருகிறது.  தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்யக்கோரி  இரண்டு சீராய்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தது. அவைகள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.

       பாராளுமன்றம் கவிழ்ந்துவிடும்,மெஜாரிட்டி போய்விடும், அப்பீலில் நிரபராதி என்று பிறகு தெரியவந்தால் என்ன செய்வது.? போட்டியிடும் கிரிமினல் அரசியல்வாதிக்கு நஷ்டம் ஏற்படும்  என்றெல்லாம் காரணங்களை   அரசியல் கட்சிகள் அடுக்குகின்றன. 


          அரசியல் என்பது மக்களுக்கு தொண்டு செய்யும் பணி , செவை மனப்பான்மை உள்ளவர்கள்,தன்னலம் கருதாத சமூக சிந்தனையாளர்கள், பொது வாழ்க்கைக்கு வரவேண்டும் . ஆகவே, கிரிமினல்களுக்கு நாங்கள்  தேர்தலில் போட்டியிட சீட்டு வழங்க மாட்டோம், அனுமதிக்க மாட்டோம் . கிரிமினல்களுக்கு எங்கள் கட்சியில் இடமில்லை, கிரிமினல்களால் மக்களுக்கு நன்மை செய்ய முடியாது,  என்று நினைத்து அரசியல் கட்சிகள் செயல்பட்டால் அதில் நியாயம்  இருக்கிறது.  மக்களும் அதனை வர வேற்பார்கள் !  

        அப்படி செய்யாமல், செய்ய முன்வராமல்,  குறைந்த பட்சம் அதுபோன்ற சிந்தனையைக்  கூட வளர்த்துக் கொள்ளாமல் மேலும் மேலும் கிரிமினல்களுக்கு ஆதரவாக செயல்படுவதை என்னென்பது?