Tuesday, 29 October 2013

மோடியும் அமெரிக்க விசாவும்

         பகீரதப் பிரயத்தனம் என்பார்களே அதுபோல  மோடியின் விசுவாசிகள் பலரும் பலவிதத்தில் முயற்சித்தும்  மோடிக்கு அமெரிக்க விசா கிடைத்த பாடில்லை. எப்படியாவது அமெரிக்க விசாவைப் பெற்று ஒருமுறையாவது அங்கே சென்று வந்துவிட்டால் மோடியை சர்வதேச தலைவராக தலையில் தூக்கி வைத்து கொண்டாட சங்க பரிவார அமைப்புகள் துடித்துக் கொண்டிருக்கின்றன.

          அமெரிக்க அரசாங்கம்  மோடிக்கு விசா வழங்க மறுத்து வருகிறது. மோடிக்கு விசா வழங்கும் கொள்கையில் மாற்றம் இல்லை என்று இப்போது பகிரங்கமாக அறிவித்தும் விட்டது. மோடியை ஆஹா ஓஹோ என்று தூக்கிபிடிக்கும் இந்துத்துவவாதிகள்   ஏமாற்றம் அடைந்து இருப்பது தெரிகிறது.


          இவ்வளவு நடந்தும் கூட  இந்தியாவின்  பிரதமராக பி.ஜே.பி-யால் முன்னிறுத்தப் படும்  மோடி இன்றுவரை அமெரிக்காவுக்கு எதிராக  எந்தவித கருத்துக்களையும் சொல்ல வில்லை. அமெரிக்கா குறித்தும், தனக்கு விசா வழங்காமல் மறுத்து வருவது குறித்தும்  ஏதாவது சொல்லப்போய், அது இன்னும் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தின் காரணமாக ஒருவேளை மோடி சொல்லாமல் தவிக்ககூடும்.!   வடிவேலு பாணியில் சொல்வதென்றால்  எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா இவன் ரொம்ப நல்லவன் என்று அமெரிக்கா நினைக்க வேண்டும் என்று மோடி மவுனம் சாதிக்கலாம் .


           மோடியின்   அடிபொடிகள்,ஆதரவாளர்களும் அமெரிக்கா  என்றால் பேசாமல் வாயை மூடிகொள்வது ஏன் என்று புரியவில்லை.    மோடிக்கு அமெரிக்கா செய்துவரும் அவமதிப்பை மோடியின் ஆதரவாளர்கள் யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இந்திய ஊடகங்கள் கூட மோடியிடம் அமெரிக்கா  பற்றி அவர் என்ன கருத்தை கொண்டிருக்கிறார் என்று கேட்காமல் இருந்து வருகின்றன.

        போகட்டும்  மோடியை அமெரிக்கா ஏன் நிராகரிக்கிறது? விசா வழங்க மறுக்கிறது ? அமெரிக்க ஒன்றும் குஜராத்தில் மோடி நடத்திய முஸ்லிம் இன அழிப்பை, மனித உரிமை மீறலை நினைத்து விசா வழங்க மறுத்து வரவில்லை. அமெரிக்க மோடிக்கு விசா வழங்காமல் உள்ளதற்கு அவ்வாறான காரணத்தை கூறினாலும் அது உண்மை இல்லை.!

         சர்வதேச அளவில் முஸ்லிம்களை கொன்று  குவித்து, முஸ்லிம் நாடுகளில் அக்கிரமங்களை, அராஜகங்களை   செய்து வரும் அமெரிக்கா மோடியை தொடர்ந்து புறக்கணிக்க என்ன காரணம் இருக்க முடியும்? மோடி அமரிக்காவின் விருப்பப்படி நடந்து  இந்தியாவில் அராஜகங்களை, படுகொலையை செய்யவில்லை.! தன்னிச்சையாக,தனது நலத்திற்க்காக, தன்னிச்சையாக, இந்துத்துவ பாசிசத்தின் ஆதிக்கத்திற்காக முஸ்லிம்களை கொன்றவர். மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்தவர் என்பதும் தான் காரணமாகும்.


            இழவு வீடானால் பிணமாக கிடைக்கணும், மண வீடானால் மாப்பிள்ளையாக  இருக்கணும்.   முதல் மரியாதையும் மாலையும் தனக்குத்தான் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் அமெரிக்கா,  அதையே  நினைத்து மோடியும் செயல் படுவதை எப்படி ஏற்றுக்கொள்ளும்?

       பாம்பின்கால் பாம்பறியும் ! மோடியைப் பற்றி அமெரிக்காவும்,  அமெரிக்காவைப் பற்றி மோடியும்  புரிந்துகொண்டு இருப்பதால்தான் மோடி அமெரிக்கா  விசயத்தில்  மவுன சாமியாக வேசமிட்டு வருகிறார்.!


Wednesday, 23 October 2013

நில அபகரிப்பு தடுப்பு போலீசாரின் அராஜகங்கள்..

         கடந்த ஆட்சியில் தி.மு.கவினர்  முறைகேடாக  பல கோடி மதிப்புள்ள அரசு நிலங்களை ஆக்கிரமித்து உள்ளனர்.அதுமட்டுமின்றி, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி  அப்பாவி பொதுமக்களை,வியாபாரிகளை மிரட்டியும்  மதிப்பு மிக்க நிலங்களை  ஆக்கிரமிப்பு செய்து, அபகரித்து உள்ளனர். பலரும் மிரட்டப்பட்டனர்.

           தி.மு.க-வினரின் இந்த அராஜக செயல்களால்,  கட்டை பஞ்சாயத்துகளால்,  தமிழகம்  எங்கும்  பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற குற்றசாட்டுக்கள் அப்போது  எழுந்தன.           ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் ,  நில அபகரிப்பு குற்றங்கள் செய்தவர்களை   கண்டறிந்து  தண்டிக்கவும்  அபகரிக்கப்பட்ட நிலங்கள்  மீண்டும்  அதன் உரிமையாளர்களுக்கு  கிடைக்க செய்யவும்  நில அபகரிப்பு தடுப்பு பிரிவு எனறு  காவல்துறையில் புதிதாக ஒரு  பிரிவு தொடங்கப்பட்டது.

         மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தலைமையில்  மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரை கொண்டு தொடங்கப்பட்ட  நில அபகரிப்பு பிரிவானது    அது தொடங்கப்பட்ட உண்மையான  நோக்கத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

         எந்த சட்டத்தையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் காவல் துறையினர்,  இந்த பிரிவையும் பயன்படுத்தி புகார் கொடுக்கும் பொதுமக்களிடமும், புகாருக்கு  ஆளானவர்களையும்  மிரட்டி பணம் வசூலிக்கிறார்கள்.!  அதுவும் ஆயிரம், ஐநூறு இல்லை.!   லட்ச கணக்கில், நிலத்தின் மதிப்புக்கு ஏற்றபடி பணம் கேட்கிறார்கள்.!

         பணம் கொடுக்க முடியாத  பொதுமக்களின் நியாயமான புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதில்லை.அரசு வழக்கறிஞரின் கருத்துரு பெற்று வழக்கு பதிவு செய்வதில்லை. மாறாக பொலிசார் புகார் கொடுக்க வருபவர்களை மிரட்டி நீதிமன்றத்திலே வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற்றுக்கொள்வதாக கட்டாயபடுத்தி எழுதி வாங்கிக் கொண்டு  வலக்கை முடித்து விடுகிறார்கள்.

         இதன் மூலம்  நிலத்தை அபகரித்து உள்ள குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, வழக்கு போடாமல் குற்றவாளியை காப்பாற்றுகிறார்கள். அவ்வாறு காப்பற்றியதற்கு   அவரிடம் கணிசமாக பணத்தை பெறுகிறார்கள்.!

        இதை விட கொடுமை என்னவென்றால்,  நிலத்தை அபகரித்தவர்கள் சார்பாக போலீசார் நடந்துகொண்டு, புகார் கொடுத்தவர்களை மிரட்டி, நிலத்தையே  எழுதி கொடுக்கும்படி நிர்பந்திப்பதும், கட்ட பஞ்சாயத்து செய்வதையும்  செய்து வருகிறார்கள்.!


        மேலும், அவ்வாறு போலிசின் மிரட்டலுக்கு பணிந்து நிலத்தை எழுதிக் கொடுக்க மறுக்கும் விவசாயிகள்,பொது மக்களை  நிலா அபகரிப்பு செய்தததாக வழக்கு போட்டு,கைது செய்து கொடுமைபடுத்தும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.! 

        ரியல்எஸ்டேட் செய்பவர்கள்,பெரும் தொழிலதிபர்கள், செல்வாக்கு மிக்க ஆளுங்கட்ச,எதிர்கட்சி பிரமுகர்களுக்கு  நில அபகரிப்பு செய்ய  உதவுகிறது நில அபகரிப்பு தடுப்பு பிரிவு.!

        மேலும், இந்த பிரிவில் பணியாற்றும் பொலிசார் குறுகிய  காலத்திலேயே  கோடிகணக்கான பணத்தை சம்பாதித்து வருகின்றனர். தங்கள்  பெயரிலும் பினாமிகள் பெயரிலும்  சொத்துக்கள் வாங்கி குவித்து வருகின்றன.

        நில அபகரிப்பு பிரிவில் போலீசார் நடத்திவரும் அராஜகங்களை  தடுத்து நிறுத்த வேண்டும். குறுக்கு வழியில் போலீசார்  பெற்ற  கோடிகணக்கான பணம், சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      ஆகவே, நில அபகரிப்பு பிரிவில்  இதுவரை பணியாற்றிய போலீசார்  அனைவரையும் விசாரணை நடத்த ஆவன செய்ய வேண்டும்.  போலீசார்  கையாண்ட புகார்கள், அதன்மீது மேற்கொண்ட நடவடிக்கைகள், புகார் தந்தவரின் நேரடி வாக்குமூலம் ஆகியவைகளை பதிவு செய்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய போலீசார்  மீது  நடவடிக்கை எடுக்க  தமிழக முதல்வர் முன்வரவேண்டும்!  .

      போலீசாரின் சட்ட மீறல்களால் பொதுமக்கள் பாதிக்க படுவதை  முதல்வர் தடுக்க  முன்வரவேண்டும்.   சட்டத்தின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை  காக்க வேண்டியது   முதல்வரின் கடமை மட்டுமல்ல, அவசர அவசியமும்  ஆகும்.  செய்வாரா?Friday, 18 October 2013

அமெரிக்க மர்மக் கப்பலுக்கு பின்னால்.?

     தீவிரவாத தடுப்பு குறித்து  புலனாய்வு போலீசும் போலீசுக்கு பக்க வாத்தியமாக ஊடகங்களும்  மோடியையும் மூன்று முஸ்லிம்களையும் சுற்றிசுற்றியே வட்டமடிகின்றன.  இதனை விட்டால்  வேறு வழியே இல்லை என்பதுபோல நடந்துகொள்ளும் நிலையில். தீவிரவாதம் என்றால் முஸ்லிம்கள்தான் அவர்களுக்கு பாகிஸ்தான் பின்னணி என்று கூறிவரும் நிலையில்  பயங்கர ஆயுதங்களுடன் அமரிக்காவின் கப்பல் ஒன்று  இந்திய கடல்பகுதியில் பலநாட்களாக சுற்றிவந்தது இப்போது  வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

      அமெரிக்காவின் இந்த மர்மகப்பல் கூடங்குளம் அணு உலை பகுதியில் ஆய்வு செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன.


       அமெரிக்காவின் வாஷிங்டன் ' அட்வான்போர்ட் நிறுவனத்தின் கட்டு பாட்டில் உள்ள இந்த கப்பலில் கேப்டன்  நிக்வாலன்டின் தலைமையில்  25 பாதுகாப்பு வீரர்கள்,10 மாலுமிகள் இருப்பதாக சொல்லப் படுகிறது.

         கப்பலில் இருந்தவர்களிடம்  நடத்திய விசாரணையில் ஒரு மண்ணும் தெரிந்து கொள்ள முடியவில்லை  என்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

      அமெரிக்க கப்பல் இந்தியாவில் நாச வேலைகள் செய்ய வந்தவர்களா ? அணு உலையை தகர்க்க வந்தவர்களா? தீவிரவாத பயிற்சி கொடுக்க வந்தவர்களா?   ஆயுதங்களை எடுத்துக்கொண்டுவந்து அமைதியை நிலைநாட்ட வந்தவர்களா?

       பாகிஸ்தான் மீதும் முஸ்லிம்கள்மீதும் எப்போதும்  இந்தியா பழிகூறுவதை பயன்படுத்திக்கொண்டு,  சந்தடி சாக்கில் இந்தியாவை பழிவாங்க வந்தவர்களா? என்று நமக்கு  ஆயிரம் சந்தேகங்கள் ஏற்படுகிறது. கப்பலில் வந்தவர்களிடம் கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் இருக்கிறது !

       ஆனாலும், தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்துள்ளது  அமெரிக்காவின் ஆயுதம் தாங்கிய கப்பல் என்பதால்,   அதுவும்  இங்கிலாந்து, இஸ்ரேல் போன்ற நாட்டின் மர்ம வீரர்களும் கப்பலில்  இருகிறார்கள் என்பதலாயே  நமது புலனாய்வுப் புலிகள் நியாயமான விசாரனையை நடத்த முடியாமல், விசாரணையை நடத்தி நாட்டுக்கு அறிவிக்காமல் மூடிமறைக்கும் வேளைகளில் ஈடுபட்டு வருவதாக   தெரிகிறது.!

 கூடவே, சாதாரண செய்தியையே (கண்,காத்து,மூக்கு வைத்து.).கதைகதையாய்  கற்பனை பண்ணித் தெரிவிக்கும் பத்திரிக்கைகள், பரபாரப்பாய் தலைப்பிட்டு,  முஸ்லிம் தீவிரவாதத்தை மட்டுமே வெளிபடுத்தி வியாபரத்தை செய்யும் ஊடகங்கள்  அமெரிக்க ஆய்த கப்பல் குறித்த விசயத்தில் தங்களது வாயை மட்டுமல்ல  எல்லாவற்றையும் மூடிக் கொண்டு இருக்கின்றன!

   அமெரிக்க என்றால்  ஆதரவு, கமுக்கம். !  பாகிஸ்தான் என்றால் புலிபாச்சல் என்ற பாசிச  தத்துவத்தை  பயன்படுத்தி வருகின்றன இந்திய புலனாய்வுத் துறையும் இந்துத்துவ  ஊடகங்களும்!     

Thursday, 17 October 2013

பாட்டாளி மக்கள் கட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும்!

         சமூகநீதிக்கு குரல்கொடுத்து உழைக்கும் மக்களின் தலைவராக மருத்துவர் ராமதாஸ் அவர்கள் உருவாக முன்முயற்சி எடுத்தவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்களும் தலித்துகளும்தான் என்பது சமகாலத்தில் மறக்கபட்டுவரும் வரலாறாகும்.

      முஸ்லிம்களின் உரிமைக்குரலாக விளங்கிய டாக்டர்.அல்ஹாஜ் பழனிபாபாவும், இந்திய குடியரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டாக்டர் அ.சேப்பனும் டாக்டர் ராமதாசுக்கு பக்கபலமாக இருந்தனர். வன்னியர் சங்கமாக இருந்த ராமதாஸின்  அமைப்பை பாட்டளிமக்கள் கட்சியாக மாற்றியதில் பெரும்பங்கு வகித்த இவ்விருவரும் ராமதாசுடன் இணைந்து தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பா.ம.கட்சியை கொண்டு சேர்த்தனர்.
 
 
           டாக்டர் பழனிபாபாவின் வசிகர பேச்சாலும்,அவர்மீது கொண்ட அளப்பரிய நம்பிக்கையாலும் முஸ்லிம் இளைஞர்கள் பலரும் பா.ம.கட்சியில் இணைந்து பணியாற்றினார்.தலித்துகளும் ராமதாஸை தங்கள் தலைவராக ஏற்றனர்.

         வடமாவட்டங்களில் வன்னியர்களிடம்  கணிசமான  ஆதரவை பெற்றிருந்த ராமதாஸை  தமிழகம் எங்கும்  தலித்துகளும் முஸ்லிம்களும் ஆதரிக்கும் நிலையை  பழனி பாபாவும் சேப்பனும் அன்று ஏற்படுத்தி இருந்தனர். இவர்கள் மூவரும் ஒன்றாக இணைந்து ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பாதுகாவலர்களாக, ஒருங்கிணைப்பாளர்கள் ஆக வளர்ச்சி அடைந்து வருவதை பொறுக்க முடியாத ஆதிக்க சக்திகள்  மூவரையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.!
 
       பழனிபாபா தலித்துகள்,வன்னியர்கள் இடையில் செல்வாக்குபெற்று வருவதாக,இராமதாஸ் கருதும் சூழலை ஏற்படுத்தினர். முஸ்லிம்கள் பா.ம.கட்சியில் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டது. தலித்துகளுக்கு கட்சியில் முக்கியத்துவம் குறைந்தது. ஆதிக்க சக்திகள் எப்படி தலித்துகளை தாழ்த்தபட்டவர் பிரிவு,சிறுபான்மையின பிரிவு என்று பாகுபடுத்தி  ஒரு குறுகிய வட்டத்துகுள் அடைத்து.கட்சியின் முக்கிய நிலைகளில் பொறுப்புக்கு வராமல்,அதிகாரம் பெறாமல் தடுக்கபடுகின்றனரோ அப்படியே முஸ்லிம்களும் தலித்துகளும் பா.ம.கட்சியில் தடுக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது. அதிருப்பதி அடைந்த முஸ்லிம்களும்,தலித்துகளும் பா.ம.கட்சியை விட்டு வெளியேறும் நிலைக்கு ஆளானார்கள்! 
 
 
         அன்று தொடங்கியது பா.ம.கட்சியின் வீழ்ச்சி. அதுவரை பெரியாரை, புரட்சிகர சிந்தனைகளை பேசிய,தலித் ஒருவரை தமிழக முதல்வராக ஆக்குவேன் என்ற, தவறு செய்தவர்களை சாட்டையால் அடிப்பேன் என்ற, எனது குடும்பம் அரசியலுக்கு வராது.நான் அதிகாரத்துக்கு ஆசைப்பட மாட்டேன் என்று சூளுரைத்து வந்த டாக்டர் இராமதாஸ் ஆதிக்க வர்கத்தின் அடிவருடியாக மாறி போனார்.ஆட்சி அதிகாரம்,பதவி மோகம், அவரை சராசரி அரசியல்வாதியாக மாற்றியது. 

      ஆதிக்க சக்திகள்  தலித்துகளும் வன்னியர்களும் மோதக் கூடிய சூழலை ஏற்படுத்தினர்.இரு சமூக மக்களிடம் ஏற்படும் சிறு மோதல்கள்,சண்டைகள் ஊதி  பெரிதாக்கப்பட்டது.தமிழகம் எங்கும் 20000 மேல் இருதரப்பிலும் வழக்குகள்.பதிவு செய்யப்பட்டது.பலர் கைது செய்யப் பட்டனர். ஆதிக்க சாதிகளின் சூழ்ச்சியால் இரண்டு சமூகங்களும் இணைத்து அரசியலில் பணியாற்றும் சூழல் தடுக்கப்பட்டது.

          மிகுந்த முயற்சிக்கு பிறகு  தோல்.திருமாவும் மருத்துவர் இராமதாசும் ஒன்றிணைத்தனர். ஆனால் இந்த ஒற்றுமை அதிககாலம் நீடிக்கவில்லை.! தருமபுரி கலவரம்,மரக்காணம் சம்பவம்  போன்றவற்றால் இன்று இரண்டு சமூகனகளும் ஒன்று சேர இயலாத நிலையை எற்படுத்தி கொண்டனர்.ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சி பலித்துவிட்டது.


       தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறினார். கொள்கைகள் காற்றில் பறந்தன. அவரது ஆரம்ப கால லட்சியம் யாவும் குதிரைபேர அரசியல் வியாபாரமாக ஆனது.  தமிழக வாக்காளர்களிடம் தான் ஒரு சந்தர்ப்பவாத  அரசியல்வாதி என்பதை இராமதாஸ் புரியவைத்தால், வன்னியர்களும் கூட அவரை வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்.!

     இன்று  இழந்த செல்வாக்கை மீட்கவும் , தனது மகன் அன்புமணியின் மீது உள்ள ஊழல் முறைகேடு குற்றத்தில் இருந்து விடுபடவும், மதிய அரசில அதிகாரம் பெறவும் விரும்பி ராமதாஸ் பாரதீய ஜனதா .கட்சியுடன் கூட்டணி அமைக்க துடிக்கிறார்.

        காலம் காலமாக மிகவும் பிற்பட்ட வகுபினருக்கு அநீதி இழைத்து வந்த, பார்ப்பனர்களின் நலனுக்கு மட்டுமே பாடுபட்டு,ஆட்சி அதிகாரத்தை செயல்படுத்தும் கட்சியின் காலடியில் இன்று சரணாகதி அடைய துடிக்கிறார்.

       சாதிக்கு எதிராக போராடியவர் இன்று  சாதியை தூக்கி பிடிப்பதுடன், அனைத்து சாதி அமைப்புகளையும் ஆரத்தி எடுத்து வரவேற்கும் நிலைக்கு ஆளாகிவிட்டார்.  திராவிடன் என்ற அடையாளத்தை மறுத்துவிட்டு, வேசிமகன் என்ற  பட்டதை ஏற்க தயாராகி விட்டார்.  திராவிட கட்சிகளை தேர்தலில் எதிர்த்து தோற்க செய்வது காலம் நமக்கு இட்ட கட்டளை என்கிறார்.

    அரசியலில் ராமதாசின் வீழ்ச்சி  ஆரம்பமாகிவிட்டது. அஸ்தமனத்திற்கு வெகுதூரம் இல்லை.!Saturday, 12 October 2013

பாபுலர் பிரண்டும் பாட்டாளி மக்கள் கட்சியும்

       சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது.இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்படுவதையும், தாக்கபடுவதற்காகவே முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப் படுவதையும் உணர்ந்த முஸ்லிம்கள் காவி தீவிரவாதிகளின் இந்த சூழ்ச்சியை முறியடிக்கவும், முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அல்ல, முஸ்லிம்கள்  இந்திய சுதந்திரத்தின் காவலர்கள் என்பதையும் வெகுஜன மக்களுக்கு உணர்த்த முயன்றனர்.

         அதற்கான முயற்சியாக இந்தியாவெங்கும் பெருநகரங்களில் முஸ்லிம் இளைஞர்களை திரட்டி, சுதந்திர தின,குடியரசு நாள் கொண்டாட்டங்களை நடத்தினர். சுதந்திர தின,குடியரசு நாள் கொண்டாட்டங்களில் காக்கி சீருடை  அணிந்து,அணிவகுப்பு நடத்தினர். தமிழகத்தில் மதுரையிலும் கேரளாவிலும்  பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா இந்த அணிவகுப்புகள் நடந்தது.  காவி தீவிரவாதிகளுக்கு இது அதிர்ச்சியையும்,அச்சத்தையும் அளிததது.


        ஊடகம்,போலிசு,புலனாய்வு,அரசு இயந்திரம் எல்லாவற்றின் உதவியோடு முஸ்லிம்களை நாம் வெகுஜன மக்களிடம் தீவிரவாதிகளாக காட்டிவரும் நிலையில், முஸ்லிம்கள் இதுபோன்ற அணிவகுப்புகள் நடத்தினால் வெகுஜனமக்களிடம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டுவது எடுபடாது போய்விடுமே என்று கவலைப்பட்டன.

            ஆகவே,சட்டம் ஒழுங்குபிரச்னையைக்  காரணமாக காட்டி, முஸ்லிம்கள்  சுதந்திரதின அணிவகுப்பு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது!
சுதந்திரத்தைக் கொண்டாடக்கூட முஸ்லிம்களுக்கு உரிமையில்லை.! உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. 
     ஆனால்,இந்திய இறையாண்மைக்கு எதிரான, நாட்டுக்கு அச்சுறுத்தலையும்  உழைக்கும் மக்களை ஒடுக்கும் பாசிச காவி படைகளின் பயிற்சிக்கும் முயற்சிக்கும் எந்த தடையும் இல்லை.!

       ஆர்.எஸ்.எஸ்.பயிற்சிவகுப்புகள், நவீன ஆயுதங்களை கையாளுதல், துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சிகள் இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளைக்  கொண்டே நடத்தபடுகிறது. அரசும் பார்த்துகொண்டிருக்கிறது!

         இந்திய தலைநகர் புது டெல்லியில் சுதந்திர தின, குடியரசு நாள் கொண்டாடங்கள்  நடக்கும்போது,  இந்தியாவில் வாழும் பல தேசிய இனங்களின் கலாச்சார,பாரம்பரிய நடனம்,கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். சுதந்திரம் அடைந்து  67- ஆண்டுகளாகிறது.
இத்தனை ஆண்டு கொண்டாட்டங்களில் இந்தியாவில் வாழும் மிகபெரிய தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரியத்தை, அவர்களது கலையை விளக்கும்  நிகழ்சிகள்  நடத்தப்பட்டதை பார்த்திருகிறீர்களா ? பார்க்க  முடியாது!

       அவ்வளவு ஏன் ஒவ்வொரு மாநிலத்திலும் நாட்டுபுற கலைஞர்கள், கலைபண்பாட்டு பிரிவின் கீழ் பயன் பெறுகிறார்கள, நலிந்தவர்களுக்கு மாத ஊதியம்,ஒய்வு ஊதியம் போன்ற சலுகைகள் மாநில அரசால் வழங்கப்பட்டு வருவதை அறிவீர்கள். முஸ்லிம்களுக்கு அதுபோல் வழங்கப்படுகிறதா? இல்லை என்பதுதான் எதார்த்தமும் கசப்பான உண்மையும் ஆகும்!
       முஸ்லிம்கள் என்பதற்காகவே சுதந்திரம் அடைந்த பிறகு அவர்கள் தொடர்ந்து புரகநிக்கப்பட்டு,அடக்கி ஒடுக்கப்பட்டு, வாழ்வாதாரங்களை இழந்து,இம்மண்ணில் தீவிரவாதிகளாக ஆக்க்படுவதை காவிபயங்கரவாதம் இந்துத்துவ பாசிசம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?
        இப்படிப்பட்ட சூழல்கள் உள்ளநிலையில் சமூக நீதியை பற்றி,தந்தை பெரியாரை தூக்கி சுமந்து,திராவிட மக்களிடம், அதுவும் உழைக்கும் பாட்டாளி மக்களின் ஆதர்ச நாயகனாக உருவான  பாட்டளிமக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று என்ன சொல்கிறார் தெரியுமா?

   "திராவிட கட்சிகளை தேர்தலில் வீழ்த்தவேண்டும் என்பது காலம் நமக்கு இட்டுள்ள கட்டளை" என்கிறார். ராமதாசுக்கு  காலம்  இட்ட கட்டளை இல்லை அது ! காவிகளின் காலை பிடிக்க அவர்  போடும் நாடகமாகும்! 

    பாட்டாளி மக்கள் கட்சி காவிகும்பலிடம் சிக்கியுள்ள கதையை அடுத்த பதிவில் பார்க்கலாம்.Friday, 11 October 2013

காவி பயங்கரவாத பிடியில் தமிழகம்?

         எந்த ஒரு செயலும் காரண காரியம் இன்றி நடப்பதில்லை.எல்லா செயல்களுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது.எல்லா குற்றச் செயல்களுக்கும் ஒரு உள் நோக்கம் இருக்கும்..உள்நோக்கம் என்பது வெளியில் தெரிவதில்லை..!

          தமிழகத்தில் ஊடுருவி இருக்கும் காவி பயங்கரவாதசெயல்களும்  அப்படிப் பட்டதே!

          காவி பயங்கரவாதம் அரசு,போலிசு,சட்டம்,சாதாரண மக்களின் கடவுள் நம்பிக்கை,கோபம்,பிற சமூக மக்களிடம் காட்டும் வெறுப்புஉணர்வு ஆகிய அனைத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி  இந்தியாவில்  செயல்பட்டு  வருகிறது. இதற்கு எடுத்துகாட்டாக  குஜராத்தில் நடந்த முஸ்லிம்களின் படுகொலைகளைக் குறிப்பிடலாம் !            காவி பயங்கரவாதத்தின் பார்வை  தமிழகத்தில் சமீப காலமாகவேகமாக பரவிவருகிறது. அமைதிபூங்காவாக ,பெரியார்,அம்பேத்கர் போன்றவர்கள் போராடி நிலைநிறுத்தி உள்ள சமூகநீதிக்கு எதிராக,தமிழர்களின் ஒற்றுமை,வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் விதமாக பரவிவரும் காவி பயங்கரவாதத்தை சரியாக புரிந்துகொள்ளாமலும், கண்டிக்காமலும் கண்டுகொள்ளாமலும் இருக்கும் போக்கு தமிழகத்தில் அதிகர்த்து வருவதும் கவலை அளிக்கிறது !

            சுதந்திரத்திற்கு முன்புவரை ஆங்கிலேயர்கள் அண்டிப்பிழைத்த  ஆர்.எஸ்.எஸ்-யும், இந்துத்துவ மதவெறியர்களும் இன்று எப்படி தேசபக்தர்களாகவும் தியாகிகளாகவும்   இன்று  நம்ப வைக்க படுகிறது.

       அன்று சுதந்திரத்திற்காக போராடிய முஸ்லிம்கள்,தியாகிகள்,தேசபக்
தர்கள், இன்று தேச துரோகிகளாக, தீவிரவாதிகளாக ஆக்கும் முயற்சிகள் தமிழகத்தில் வேகமாக அரங்கேறிவருகின்றன.

        காவி பயங்கரவாதம் தமிழகத்தில் அரங்கேற்றும் செயல்திட்டங்களுக்கு அப்பாவி முஸ்லிம்கள் பளிகடவாக்கபடுவது ஆரம்பம் ஆகிஇருக்கிறது. அது முஸ்லிம்களை தீவிரவாதியாக கட்டுவதற்கு ஊடகங்கள்,உளவுத்துறை, ஆகியவற்றின் மூலம் முஸ்லிம்களின் சிறு தவறுகளும், பூதாகரபடுத்தபட்டு வருகின்றன. 
         நாயைக் கொள்ளவேண்டுமானால் அதற்கு வெறிபிடித்து இருக்கிறது என்று முதலில் சொல்லவேண்டும்,அவ்வாறு நம்பவைக்கவேண்டும் பிறகு நாயைக் கொள்ளவேண்டும். இந்த நியதிப்படியே  முஸ்லிம்களை அழித்து ஒழிக்க, முஸ்லிம்களை அச்சபடுத்தி அப்புறப்படுத்தவும் நினைத்து  சாதாரண பொதுமக்களிடம் முஸ்லிம்களைப் பற்றிய  நல்லெண்ணத்தை அழிக்க நினைத்தும்,முஸ்லிம்களை  பொதுமக்கள் வெறுக்க செய்யவும் எண்ணி தீவிரவாதிகளாக, தேசவிரோதிகளாக முஸ்லிம்களை  தொடர்ந்து காட்டி வருகிறார்கள்.

         தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறுகளை,வதந்திகளை பரப்பி வருகின்றன. முஸ்லிம்கள்  குறித்து தாங்கள் பரப்பிவரும் அவதூறுகளை உண்மையாக்க வேண்டி, குண்டுவெடிப்புகள்,  தீவிரவாத செயல்களை காவி பயங்கரவாதிகள் செய்து,  தீவிரவாத செயல்களை  ,முஸ்லிம்கள் செய்தததாக நம்ப வைத்து,   முஸ்லிம்களில் சிலரை கைதுசெய்து, காவல்துறை, ஊடகங்கள் மூலம் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் தீவிரவாதிகளாக,தேச விரோதிகளாக சாதாரண மக்களிடம் காவி பயங்கரவாதிகள் காட்டி வருகின்றனர்.!

        காவி பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புகளில் ஈடுபடுவது, குண்டு தயாரிப்பது,  பதுக்கி வைப்பது குறித்து ஏராளமான ஆதாரங்கள் இருந்தாலும் அவற்றை திட்டமிட்டே இந்துதுவ  சார்பு  ஊடகங்கங்கள் மறைத்து,இருட்டடிப்பு செய்து வருகின்றன.

         இந்த உண்மைகளை உணராமல் செய்திகளாக ஊடகங்களும், பொலிசும், சொல்லும் கதைகளை ,கற்பனைகளை சாதாரண பொதுமக்கள் எந்தவித சிந்தனையும் இன்றி அப்படியே நம்பி வருகின்றன. இவைகள் யாவும்
இந்தியாவை இந்து நாடாக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கைப்படி நடத்தப்படுகின்றன.  இந்தியாவை இந்து நாடாக்க வேண்டும் என்றால், இந்து அல்லாத மக்களை இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.அல்லது இந்துக்கள் அல்லாத மக்களை அழிக்க வேண்டும்.
       இந்துக்கள் அல்லாத மக்களான முஸ்லிம்களை அப்புறப்படுத்தவும்  அழிக்கவும் நினைத்து காவி பயங்கரவாதம் தமிழகத்தில் தனது செயல்திட்டத்தை ஆரம்பித்து உள்ளது.

           கடந்த ஆண்டு ரத யாத்திரை நடத்துவதாக கூறிக்கொண்டு, அத்வானி என்கிற காவி தீவிரவாதி மதுரைக்கு வந்தபோது இருந்து தமிழகத்தில் நடந்துவரும் பயங்கரவாத செயல்களை கவனித்தால் இந்த உண்மை விளங்கும்.!
          அவர் வந்தது முதல் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் ஆக்கபடுவது அதிகரித்து உள்ளது தெரியவரும்.  முஸ்லிம்கள் அதிகம் வாழும் வேலூர்,சேலம்,திருச்சி,மதுரை,திருநெல்வேலி,திருப்பூர்,கோவை ஆகிய அணைத்து இடங்களும் தீவிரவாதிகள் இருப்பதாக செய்தி பரப்பபடுவதையும், சோதனைக்கு ஆளாவதையும்,சந்தேகத்தின் பேரில் முஸ்லிம்கள் குறிவைக்க படுவதையும், கைது செய்யப்பட்டு வருவதையும் தீவிரவாத முத்திரை குத்த படுவதையும் பார்த்தால்,  காவி தீவிரவாதிகள் கங்கணம் கட்டிக்கொண்டு தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க திட்டமிட்டு உள்ளது தெரியவரும்.Wednesday, 9 October 2013

போலீசின்( பயங்கரவாத)கதைகளும், பின்னணியும்..

          தமிழக  சினிமா கதை ஆசிரியர்கள்  தமிழக பொலிசாரிடம் பாடம் கற்க வேண்டும்! தமிழக போலீசாரிடம் அவ்வளவு கற்பனைத் திறனும் விஷயம்  இருப்பதை இன்றுவரை கவனிக்காமல் சினிமா கதாசிரியர்கள் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது !

          தமிழக போலீசார் ஆலிவுட் ரேஞ்சுக்கு கற்பனை திறன் கொண்டவர்கள் என்பதை இன்று  நிரூபித்து வருகிறார்கள். அவர்கள், ஊடகங்கள் வாயிலாக சொல்லும் கதைகள் மயிர்கூச்செறியச் செய்கின்றான். பயங்கரவாதிகளை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டுவதாக சொல்லும் போலீசாரின்  கதைகள்,  சாதாரண மக்களுக்கு சுவாரசியமான, பொழுதுபோக்கும், ஆச்சரியம் ஊட்டும், திகில்,திரில் கதைகளாக ஒருபுறம் இருப்பதை அறிய முடிகிறது.
 சமீபத்தில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட புத்தூரில் பிலால் மாலிக் பன்னா இஸ்மாயில் ஆகியோர்களை ஜேம்ஸ்பாண்டு கணக்காக பிடித்ததாக சொன்ன கதை  அந்த ரகமாகும்.! 
 
 

சென்னையில் ஒரு லாட்சில் தங்கியிருந்த பொது, கைதுசெய்யப்பட்ட போலீஸ் பக்ருதீனை  ஓடும் பஸ்ஸில் பாலோவ் செய்து,அவனுடன் கட்டிபுரண்டு சண்டை போட்டதாக கதை சொல்லி வருகிற போலீசார், பிடிபட்ட பக்ருதீனிடம் விசாரித்ததில் அவன் விசாரணையில் சொன்னதாக கூறும் கதைகள் எதற்கும் ஆதாரம் இல்லை! அதைபற்றிய அக்கறை பொலிசாரின் கதைகளை அப்படியே ,தங்களது பத்திரிகைகளில்  பிரசுரிக்கும்  பத்திரிகையாளர்களுக்கும்  தேவையில்லை என்பது தெரிகிறது.!

ஊடகங்களுக்கு அவர்களின் செய்தி பரபரப்பாக இருக்கவேண்டும். வியாபாரம் நடக்கவேண்டும் என்பது ஒன்றே நோக்கமாக இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. !

        ஊடகங்கள் உதவியுடன் காவல்துறை அரங்கேற்றும் நாடகங்கள், அரங்கேற்றி வரும் கதைகள் எல்லாம் போலிசின் வீர பிரதாபங்களை  பொதுமக்களிடம் நிலைநிறுத்துவதை  கொஞ்சம் சுயமாக சிந்திக்கும் மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.!
 
 
            போலீசாரின் மோசமான செயல்பாடுகள் மறைக்கப்பட்டு, அவகளின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் பொலிசாரின் கையாலாகாத செயல்களை மூடிமறைக்கவும் உதவுவதை புரிந்து கொள்ள முடியும்.
. ஜே ஆட்சிக்கு ஏற்பட்டுவரும் கேட்ட பெயரை மறைக்கவும் நல்லாட்சி நடைபெறுவதாக பெருமை அடித்து பீற்றி கொள்ளவும் கூட இந்த கதைகள் வெகுவாக பயன்படுவதை  நாம்  காண முடிகிறது. ! 

       முஸ்லிம்களில் மூன்று பேரை பிடித்து,  அவர்கள் தீவிரவாதிகள்,  பயங்கரவாதிகள்  உயிரை துச்சமாக மதித்து அவர்களை பிடித்து இருக்கிறோம் என்று போலீஸு சொல்ல ஆகா..!  என்று சிலாகித்து, பாராட்டி ஆளுக்கு ஐந்து  லட்சமும், பதவி உயர்வும் ஜெ-வால் போலீசாருக்கு தரப்பட்டு உள்ளது.!
 
 
          காவல்துறையின் எல்லைமீறிய கடமை உணர்வுகளை ஜே பாராட்டுவது குறித்து நமக்கு வருத்தம் இல்லை. என்றாலும் காவல்துறையின் எல்லைக்குட்பட்ட செயல்களைகூட செய்யாமல் இருக்கும் அவர்களின் போக்கை பற்றி கவலை படாமல் இருக்க முடியவில்லை.!
 
          ஆயிற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேல் !  திருச்சியில்  முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி கொலையுண்டு....இன்றுவரை ஒரு மயிரைக்கூட பிடுங்க முடியவில்லை இந்த காவல்துறையால்!  
       இந்த போலிசுக்கு   தண்டனை கொடுப்பது? ஜே.சொல்வாரா? சொல்ல மாட்டார்.!

     மதுரையில் போட்டு சுரேஷ் கொலையாகி மாதங்கள் பல உருண்டோடி விட்டன. கொலையில் தொடர்பு இருப்பதாக சொல்லும் அட்டாக் பாண்டியை இன்றுவரை இந்த போலீசாரால் நெருங்க முடியவில்லை .!
        தண்டனை கொடுப்பது? பதவி நீக்கம் உண்டா? தெரியாது. ஜே.சொல்ல மாட்டார்.!

         மாட்டிக் கொண்டவன் முஸ்லிமா? போலீசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஒரே கொண்டாட்டம்தான்! அவர்களுடன் .ஊடகங்களும் சேர்ந்து பக்கம் பக்கமாக  விதவிதமாக காவல்துறையினர் சொல்லும் கதைகளோடு தங்கள் கற்பனைகளையும் சேர்த்து தங்கள் பத்திரிக்கைகளை அலங்கரித்து விடுகின்றன!  
         என்ன நடுவு நிலை என்று தெரியவில்லை! என்ன தொழில் தர்மம் என்றும் புரியவில்லை!

          நாளைக்கு ஆயிரகணக்கான கொலைகள்,கொள்ளைகள் கற்பழிப்புகள்,  வரதட்சணை கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகள், வீடு புகுந்து தாக்குதல்கள்  நடந்து வருகின்றன. இவற்றை செய்பவர்கள் சாதாரண குடிமக்களாம் . சாதாரண குற்றவாளிகளாம்.!

         அதில் எவனாவது ஒரு இளச்சவாயன் அதுவும் அவன் ஒரு முஸ்லிமாக   இருந்துவிட்டால் போதும்,  அவன்தான் தீவிரவாதி, பயங்கரவாத செயல்களை செய்பவன் என்று சொல்லி, மாட்டிகொண்டவனுடைய  செல்போனில் உள்ள எல்லா நம்பர்களும், தொடர்புகளும் சோதனை இடப்பட்டு விடும்.! மேலும்   எங்கே, எப்போது  யாரால் என்ன குற்றம் செய்யப்பட்டு  இருந்தாலும் , அந்த குற்றம் காவல்துறையின் கையாளாக தனத்தால் கண்டுபிடிக்க முடியாத குற்றங்கள் ஆகா இருந்தாலும் அவைகள் எல்லாம் மாட்டிகொண்ட முஸ்லிம் மீது காவல்துறையால்  சுமத்தப்பட்டு விடுகிறது. !

        மாட்டி கொண்டவன் குற்றவாளி,! தப்பித்து கொண்டவன் நிரபராதி என்ற பொது நியதியை  காவல்துறை கடைப்பிடித்து வருகிறது!

       வேலூரில் கொல்லப்பட்ட அரவிந்த ரெட்டியை கொன்றதாக சொல்லி வஜுர்   ராஜா- வை பிடித்தார்கள் சிறையில் அடைத்தார்கள்
இப்போது போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர்கள் செய்ததாக போலிசு சொல்கிறது.!  முன்பு குற்றவாளிகளாக போலிசாரால் சொல்லப்பட்ட வசூர் ராஜா  இப்போது குற்றவாளியா?  நிரபராதியா? 

         இப்போது குற்றவாளியாக போலீஸ் சொல்லும் பிலால் மாலிக் போன்றவர்களை சிறையில் அடைத்த பிறக்கு,  கொஞ்சம்னாட்கள் கழித்து  நான்தான் அரவிந்த ரெட்டியை கொன்றேன் என்று எவனாவது  போலீசிடம் மாட்டிகொண்டவன் சொன்னால் என்ன அப்போது பொலிசார்  என்ன செய்வார்கள்?

       ஆக,  போலிசார்  சொல்லும் கதைகள,போலிசார்  சொல்லும் குற்றவாளிகள் என்பவர்கள் உண்மையில் குற்றவாளிகளே அல்ல!  பயங்கரவாதிகளே அல்ல. ! தீவிரவாதிகளும் அல்ல1 . என்பது நமக்கு  தெரிகிறது!
.
        போலிசுக்கு முஸ்லிம்களை தீவிரவாதிகளாக ஊடகங்கள் மூலம் காட்டவேண்டும்! .தங்களது கையாலாகாத தனத்தை மறைத்து, ஆட்சிக்கு நல்லபெயரை பெற்றுத்தரவேண்டும்!  அத்துடன்  முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சொல்லி, இந்துத்துவ வாதிகளை சந்தோசப் படுத்த வேண்டும் !
 
          அவ்வாறு செய்தால்தான் எதிர்வரும் தேர்தலில் பெரும்பான்மையான மக்களின் ஓட்டுகளை -ஜே அரசு பெறமுடியும் என்று நினைக்கிறது. அதற்கு ஏற்ப,போலீசார்  ஆலிவுட் ரேஞ்சுக்கு கதைகள் சொல்லி முஸ்லிம்களை குற்றவாளிகளாக தீவிரவாதிகளாக ஆக்கி வருகிறார்கள் என்ற உண்மை தெரிகிறது!

Monday, 7 October 2013

இலங்கையின் தொடர் அடாவடிகள்..

          இலங்கை அரசும்  அதன் பாசிச இராணுவமும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும், தமிழக மீனவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து நடந்து கொள்கிறது.
          சர்வதேச சட்டங்கள்,மனித நெறிமுறைகள் எதைபற்றியும் அந்நாட்டு அரசு கவலைகொல்வதாக, மதிப்பதாக தெரியவில்லை.

         ஐ.நா .வின்  மனித உரிமைகள் குழு தலைவர்  நவநீதம் பிள்ளை, இலங்கையில் போர் நடத்தை மீறல்,மனித உரிமை மீறல் குறித்து காலம் கடந்து விசாரிக்க சென்றபோதும் கவலை படாமல் அவரை அவமதித்தது  இன்றும்  தமிழர் வாழும் பகுதிகளில் இராணுவத்தை கேடயமாக வைத்து மிரட்டி வருகிறது. 
          சமீபத்தில் வடக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலின்போதும் இராணுவத்தின் நெருக்கடிக்கு வேட்பாளர்களும் தமிழர்களும் ஆளாயினர். தேர்தல் முடிந்து தேர்வு பெற்ற விக்னேஸ்வரனும் ராஜபக்சேவுக்கு எதிராக, அவரது எண்ணத்திற்கு மாறாக எதுவும் செய்துவிட முடியாது என்ற நிலையே எதார்த்தமாக உள்ளது.

          இவைகள் அனைத்தும் அறிந்திருந்தும் இந்தியா இன்றுவரை இலங்கைக்கு எதிராக சிறு நடவடிக்கையையும் எடுக்காமல் இருக்கிறது.  தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் நிலையை இந்தியாவும் தொடர்ந்து ஆதரித்தும், கண்டுகொள்ளாமலும் இருந்துவருவதால் இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரசனை தொடர்கிறது.

         இந்தியா ஈழதமிழர்களின் மறுவாழ்வு,புனரமைப்பு பணிகளுக்கு வழங்கிய நிதி உதவியும்  இலங்கையால் தமிழர்களை  ஒடுக்கவும், தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் பயன்படுத்தி கொள்ளும் விதத்தில் இருப்பது வேதனையாகும்.!

          இதுதவிர தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த அரசியல் தலைவர்கள் தமிழக மீனவர்களுக்கு  இலங்கை அரசும் அதன் இராணுவமும் இழைத்துவரும் கொடுமைகளைப் பற்றி கூக்குரல் எழுப்பியும், கண்டனம் தெரிவித்தும் கூட இலங்கை தனது போக்கில் இருந்து மாறவில்லை.! தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்குவதையும்,சிறைபிடிப்பதையும், படகுகள், மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவதையும் வாடிக்கையாக செய்து வருகிறது.

         தனது நாட்டு மக்கள் பாதிக்கபடுவதை பார்த்தும் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலும் கண்டிக்காமலும் இருக்கும் இந்தியாவின் மவுனம் அதிர்ச்சி அளிக்கிறது.          இலங்கையுடன் இந்தியா கொண்ட கள்ள நட்பின் காரணமாக இந்தியாவுக்கு  எதிராகவும்  இலங்கை செயல்பட ஆரம்பித்து உள்ளதாக தெரிகிறது.
 
         இலங்கையின் கிழக்கு கடற்கரை பகுதியில்  இஸ்ரேல்  மொசாம்பிக் பயங்கரவாதிகள் தீவிரவாத பயிற்சியை சிங்களர்களுக்கு கொடுத்துவருவதாக செய்திகள் வருகின்றன.

         இந்தியாவுக்கு எதிராக நட்பு நாடான இலங்கையில் தீவிரவாத பயிற்சிகள் நடக்கின்றன.  தீவிரவாதிகள், பயங்கவாதிகள் என்றாலே அது பாகிஸ்தான் தான்,என்று முட்டாள்தனமான நம்பிக்கையில் இருக்கும் இந்தியாவால்,  இலங்கையில் இஸ்ரேல் அமெரிக்கா,சீனா போன்ற நாடுகளின் நடவடிக்கைகளைப் பற்றி  கவலைபடுவதில்லை.!

        சொந்த மக்களை காப்பாற்ற வக்கற்ற இந்திய அரசு  எதிர்வரும் காலத்தில், இலங்கையினால் ஏற்படப்போகும் ஆபத்துகளை எப்படி தடுக்கமுடியும்? என்ற கேள்விஎழுகிறது.

       இந்தியாவின் வெளிநாட்டு கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டால் ஒழிய, இந்தியாவுக்கு எதிர்காலம் இல்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.!
Thursday, 3 October 2013

ராகுல் இமேஜும், காங்கிரஸ் டேமெஜும் ..

           குற்றம் செய்த வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை பெரும் எம்.பி.கள்,எம்.எல்.ஏக்களை காப்பாற்ற காங்கிரஸ் தலைமையிலான அரசு கொண்டுவந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து,நிறைவேறும் தருவாயில் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

          வாபஸ் பெற காரணம், காங்கிரஸ் கட்சியின் துணைப் பொது செயலாளர்  ராகுல் காந்தி என்பது எல்லோரும் அறிந்த செய்திதான். !
 ஆரம்ப கட்டத்திலேயே இந்த அவசர சட்டத்தை எதிர்க்காமல் கடைசி நேரத்தில், அதுவும் பிரதமர் வெளிநாட்டில் இருந்தபோது  ராகுல் தனது எதிப்பை தெரிவித்தது, பலவேறு சர்ச்சைகளையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. 
 
 
      
    ஊழல்,கிரிமினல் நாடாளுமன்ற எம்.பி.களை பாதுகாக்க  காங்கிரசின்  தலைவர்  சோனியா முதல்  கபில்சிபல்,  ப.சிதம்பரம் வரை அவசர சட்டத்தை ஆதரித்து கருத்து தெரிவித்து இருந்தனர். 
 
     எனினும்,  ராகுலின் தீவிர எதிர்ப்பால்  குற்றம் புரிந்து தண்டனைக்கு ஆளாகும் எம்.பி.கள் பதவியை இழக்கும் நிலை தற்போது  ஏற்பட்டு உள்ளது !
 
        அவசர சட்டத்தை வாபஸ் பெற வைத்ததன் மூலம் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவராக ராகுல் காட்சி தருகிறார்.  இது,  ராகுலின் அரசியல் எதிர்காலத்துக்கு பயன்படும்.  நடைபெற இருக்கும் 5 மாநில தேர்தலுக்கும் காங்கிரசின் பிரச்சாரதிற்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தங்களை பரிசுத்தவான்களாக காட்டிக்கொள்ளவும் கூட பயன்படலாம், என்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. ! 
 
     ஏற்கனவே,  டேமேஜாகி உள்ள காங்கிரஸ் கட்சி  ஊழல் கிரிமினல் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு தரும்  சட்டத்தை கொண்டுவர முயற்சித்த செயலால்  பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மேலும்   டேமேஜாகி இருந்தது. 
 
 
 
        பா .ஜ.க.போன்ற கட்சிகள்  காங்கிரசின் ஊழலையும், முறைகேடுகளையும் கண்டித்தும்,வெளிபடுத்தியும் தனது செல்வாக்கை வளர்த்து வரும் நிலையில்  குற்றவாளிகளை பாதுகாக்கும் சட்டத்தையும் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன் படுத்திக் கொள்ளும்   வாய்ப்பை  ராகுல் தடுத்துவிட்டார். 
 
     மேலும் இளைஞர்கள் மத் தியில் தான்  முந்தைய காங்கிரஸ் காரார்களைபோல  ஊழலுக்கு, முறைகேடுகளுக்கு ஆதரவாளன் இல்லை. என்பதை வெளிபடுத்த  வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. !
 
          ராகுலின் அவசர சட்ட எதிர்ப்பு ஒருவகையில் வரவேற்கதக்கதுதான். இனி ஊழல்,குற்ற செயல்களை எந்தவித பயமும்,கவலையும் இன்றி செய்ய நினைக்கும் அரசியல்வாதிகள் சற்று நிதானித்து,சாட்சிகள் இல்லாமல் செய்ய முடியுமா?என்று கவலைபடுவார்கள்.!

         சிலர் திருந்தவும்,  குற்ற செயலில் ஈடுபட யோசிக்கவும் கூட வாய்ப்பு உள்ளது.   மேலும் சிலர், இதுவரை தாங்கள் செய்த குற்றங்களுக்கு தண்டனை பெறாமல் தப்பிக்க  நினைத்து முயற்சிகள்  மேற்கொள்ளுவார்கள் !   அதன் எதிர்வினையாக.. வக்கீல்கள்..ஏன் தீர்ப்பு சொல்லும் நீதிபதிகளை மிரட்டவும் நீதிபதிகளிடம்  பேரம் பேசவும் கூட பிரயத்தனம் செய்வார்கள். 
 
       இவைகள் இன்றி,  எல்லா கட்சிகளும்   குற்றப்பின்னணி கொண்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்துவது ஓரளவு தடுக்கப்படவும், உண்மையில் சில நேர்மையாளர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பும் சூழல் ஏற்படுவதும் நடக்கும்.!  
 
      ஆகவே,  அவசர சட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாட்டுக்கு,  நாட்டின் எதிர்கால நலனுக்கு,  நாட்டின் நலனை விரும்பும் கட்சிகளுக்கு,  நாட்டில் உள்ள நேர்மையாளர்களுக்கு  நல்லதுதான்  வரவேற்கத் தக்கதுதான் என்பது எனது கருத்தாகும் !

        இப்படீல்லாம் நடக்கும் என்று யார் கண்டார்கள் என்று நினைத்து புலம்பும் கிரிமினல் அரசியல் வாதிகளுக்கு வேண்டுமென்றால் இது வருத்தத்தை ஏற்படுத்தலாம்!