Wednesday, 27 November 2013

சூத்திரனுக்கொரு நீதி,தண்டச் சோறுண்ணும் பார்பனனுக்கு ஒரு நீதி..!

           சூத்திரனுக்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்பனனுக்கு  ஒரு நீதி சாத்திரம் சொல்லிடுமானால் அது சாத்திரமில்லை, சதியெனக் கண்டோம்!   என்றான் பாரதி.

           இன்று நீதியின் பெயரால் சங்கராச்சாரியார் விடுதலை செய்யப்பட்டு இருப்பதையும்  சந்தேகத்தின் பெயரால்  பொட்டிகடை, பழக்கடை, பழைய இரும்பு செய்து   பிழைப்பு நடத்திவரும் முஸ்லிம்கள் பயங்கர சதி செயலில் ஈடுபட்டதாக பிடித்து ஜெயிலில் போட்டு சித்திரவதை செய்வதையும் நினைத்துப் பார்க்க தோன்றுகிறது.


           மகாகவி  பாரதி சொன்னதுபோல மனுதர்மம சாஸ்திரப்படி இந்தியாவில் நீதி பரிபாலனம் நடக்கிறதோ? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.!

           காஞ்சி மடச் சங்கராச்சாரியார்கள் விடுதலை செய்யப்பட தீர்ப்பின்படி  பார்த்தால்,படு கொலை செய்யப்பட்ட வரதராஜர்கோயில் மேலாளர் சங்கரராமன் தன்னைத்தானே வெட்டிக்கொண்டு இறந்துவிட்டதாக ஆகிறது.


          1998 ஜனவரி 28 அன்று பொள்ளாச்சியில் பழனிபாபாவை படுகொலை செய்த  வழக்கிலும், குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். சங்கரராமன் படுகொலையிலும் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.! 

        இதிலிருந்து நமக்கு தெரிய வருவது என்னவென்றால்,  இந்துத்துவ ஆதிக்கத்தை எதிர்க்கும் , எதிர்த்து  நீதி கேட்கும்,  நீதி கேட்டு போராடும் எவரையும்  இந்துத்துவ ஆதிக்க சக்திகள் கூசாது கொன்றுவிடும் என்பதுதான்.

       அவ்வாறு அவர்களை  கொன்றுவிட்டாலும்  கூட கொன்ற இந்துத்துவ வெறியர்கள்   குற்றவாளிகளாக மாட்டார்கள், கொலை செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்காது  என்பதைத்தான்  நமது ஆட்சி மன்றங்களும் ,இந்திய நீதிமன்றங்களும் சங்கரராமன் கொலை வழக்கு  தீர்ப்பின் மூலம் சொல்லியிருக்கிறது.


         அதே சமயத்தில்,  போதிய ஆதாரங்கள்,சாட்சிகள் எதுவும் இல்லா விட்டாலும்கூட அதிக்க சக்திகளை எதிர்ப்பவர்களை, சூத்திரர்களை,   ஆதிக்க பேரறிவாளன், அப்துல் நாசர் மதானி, போன்றவர்களை கேள்வியே இன்றி, ஆண்டுகணக்கில் சிறையில் அடைத்து, சித்தரவதை செய்து வரும் என்பதையும்  நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.!

       பல்லாயிரம் முஸ்லிம்களைப் படுகொலை செய்த, நரேந்திர மோடியை பிரதமர் ஆக்க துடிக்கும் இந்திய ஜனநாயகத்தில், இறையாண்மை பற்றி வாய்கிழிய பேசி,  பாபர் மசூதியை பகிரங்கமாக இடித்து தள்ளிய இந்து மதவெறியர்களை தண்டிக்காத நீதிமன்றம்,"  தண்ட சோறுண்ணும் பார்ப்பானுக்கு ஒரு நீதியும், சூத்திரனுக்கு ஒரு நீதியும்" வழங்கிவருகிறது.!

        வேடிக்கையான நீதி பரிபாலனம்..வேதனையான தீர்ப்புகள்.

Thursday, 21 November 2013

தரம் தாழ்ந்து வரும் இந்திய ஜனநாயகம்...

       இந்தியாவில் நமது தலைவர்கள்சமீப காலமாக ஜனநாயகத்தைக் கேவலப்படுத்தி வருகிறார்கள்.

         வடமாநிலங்களில் தற்போது தேர்தல் நடைபெற்றுவரும் டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ,சத்தீஸ்கர், அஸ்ஸாம் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதா கட்சியும் ஒன்றை ஒன்று எதிர்த்து செய்துவரும் தேர்தல் பிரச்சாரத்தில் தனிமனிதத்  தாக்குதல்கள் முன்னிலை படுத்தப்பட்டு வருவதைப் பார்க்கும்போது, வேதனை ஏற்படுகிறது. இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருவதைக் காண முடிகிறது.


           பாரதிய ஜனதாவின் பிரதம வேட்பாளராக அக்கட்சியால் களம் இறக்கப் பட்டு உள்ள நரேந்திர மோடியின் பேச்சுகள் மிகவும் தரந்தாழ்ந்து, ஒரு பேட்டை ரவுடியின் திமிர்த்தனத்தைக் காட்டுகிறது.

         பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலத்தில் பொது சுகாதாரம் மோசமாக உள்ளது என்பதை ராகுல்காந்தி சுட்டிக்காட்ட,"பெரிய கொசுக்கள்என்னை கடிகின்றன" என்று சொல்ல, அதற்கு மெனக்கெட்டு, நரேந்திர மோடி,"  ராகுலைக் கடித்த கொசுக்களை பாராட்டி" இருக்கிறார்.

       தனது தவறை, ஆட்சியில் உள்ள குறைபாட்டை களையவும், தீர்க்கவும் ஆலோசனை சொல்லாமல், அதுகுறித்த குற்றவுணர்வு இன்றி,பொதுமக்கள் என்ன நினைப்பார்களோ என்ற கவலை இன்றி,  மோடி பேசியிருப்பது  ஆணவமான,திமிர் பேச்சாகும்!

          நாட்டின் மிகப்பெரிய பொறுப்பான பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் மோடியின் இந்தகைய பேச்சுகள் அவரது அரசியல் முதிர்ச்சி இன்மையைக் காட்டுவதுடன் அவரது தகுதிக் குறைவையும் காட்டுகிறது .இந்திய ஜனநாயகத்தின் தரம் தாழ்ந்து வருவதற்கு உதாரணமாகவும் உள்ளது.


           மோடி,ஒரு மாநிலத்தின் முதல்வராக கூட இருப்பதக்கு தகுதி அற்றவர் என்பதற்கு மற்றொரு உதாரணம், அவர் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் போது, 'ரத்தக்கறை  படிந்த கரம்' என்று கூறியிருப்பதாகும் !

           ஒருவரைப்பற்றி குறை கூறும்போது, முதலில் நாம் அந்தகைய குற்றங்களை செய்யாதவராக  இருக்கவேண்டும்.  மூவாயிரத்துக்கு மேல் முஸ்லிம்களை படுகொலை செய்து,  குஜராத்தை கலவர பூமியாக்கி, "நரவேட்டை ஆடிய நாயகன்"  நரேந்திர மோடி  காங்கிரசை ரத்தக்கறை  படிந்த கரம்  என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. !

            நரேந்திர மோடியின் பேச்சுக்களை கூர்ந்து கவனித்தால் தன்மீது சுமத்தப்பட்டு உள்ள குற்றங்களை எல்லாம் காங்கிரஸ் கட்சிமீது சுமத்தி வருவதைப்  பார்க்கலாம்.

            இதன்மூலம்,நான் மட்டும் குற்றம் செய்யவில்லை,காங்கிரசும் என்னைப் போலவே, குற்றங்களை செய்து இருக்கிறது என்றுஎடுத்துக்காட்டி, பொது மக்களிடம் தனது தவறுகளை   மறைத்து, தனது தவறுகளை நியாயபடுத்தும் போக்கில் மோடி  செயல்படுவது தெரிகிறது.

           ஜனநாயகத்தில் தவறுகளை உணர்ந்து,திருத்திக்கொண்டு,ஒட்டுமொத்த மக்களின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபடும் தலைவர்களே இன்று தேவைபடுகிறார்கள்.!

        " நீ  என்ன யோக்கியமா,?"   "நீயும் அயோக்கியன் தான்"..., அதனால், "நானும் அயோக்கியத்தனம் செய்வேன்"  என்பதுபோல பேசுவதும்,  நடந்து கொள்ளுவது ஜனநாயகத்திற்கும் நாட்டுக்கும் ஆபத்தானது.!

          இந்தியாவின் தலைமைப் பதவிக்கு வருபவர்களுக்கு பொறுமையும், சகிப்புத்தன்மையும் தேவை., எல்லா மக்களின் நலனைப்  பேணிப் பாதுகாக்கும் சமூக  சிந்தனையும் தேவை .  இந்தியாவின் இறையாண்மையை மதித்து நடக்கும் குணமும், சட்டத்தை மதித்து  கடமையாற்றும் எண்ணமும் தேவை.!

          நரேந்திர மோடியிடம் இவைகளை எதிபார்க்கவே  முடியாது.!Tuesday, 12 November 2013

மோடி கூட்டத்தில் குண்டுவைத்த இந்து தீவிரவாதிகள்.

       நாம் எதை விதைகிறோமோ, அதனைத்தான் அறுவடை செய்ய முடியும்.என்பார்கள்   தீவிரவாததை  விதைத்த மோடி அந்த தீவிரவாதத்தை அறுவடை செய்ய தொடங்கி விட்டார் எனத் தெரிகிறது.மோடியின் பாட்னா கூட்ட தொடர்வெடிகுண்டு  நிகழ்சிகள் நேற்றுவரை நட்பு கொண்டிருந்த பி.ஜே.பி-யின் தோழன் நிதிஷ் குமாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.


           அரசியல் கொடுங்கோலன்  மோடியைக் கொல்ல முஸ்லிம்களுக்கு காரணங்கள்  இருக்கின்றன.  ஆனாலும் முஸ்லிம்கள் பல ஆயிரம் மக்கள் கூடும் மைதானத்தில், அதுவும் சக்திகுறைந்த குண்டுகளை வைத்து  நாசவேலை செய்வார்கள்என்றோ,மோடியைக் கொல்ல முயல்வார்கள் என்றோ  நம்ப முடியவில்லை. !

      பாட்னாவில் மோடி கூட்டத்தின் பொது வைத்த சக்தி குறைந்த வெடி குண்டுகள்,  மோடியின் செல்வாக்கை அதிகரிக்கவும், மோடியின் மீது பீகார் மக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்தவும், பிகார் முதல்வர்  நிதிஷ் குமாருக்கு நெருக்கடியை  ஏற்படுத்தவும்,  பிகாரில் உள்ள இந்துக்களை பி.ஜே.பி-க்கு ஆதாரவாக திரட்டவும், முஸ்லிம்களை அச்சுறுத்தவும், முஸ்லிம்கள் மீது  இந்துக்களுக்கு கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தி முஸ்லிம்களை பழி வாங்கவும்  வைக்கப்பட்ட வெடி குண்டுகள்தானோ  என்ற சந்தேகம் தோன்றுகிறது !


         இத்தகைய குண்டுவெடிப்புகளை, இடம்,காலம் சூழல் ஆகியவைகளை உத்தேசித்து  செய்யவும்கற்றவர்கள் இந்துத்துவ பாசிஸ்டுகள். மேலும் இந்துத்துவ சங்கபரிவார அமைப்புகள், வெடிகுண்டுகளை செய்யும் வித்தைகள் தெரிந்தவர்கள் என்பதும்  வெடிகுண்டுகளைக்  கையாள  அவர்களுக்கு இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்கள்,  ராணுவ பயிற்சி கொடுத்து வருகிறார்கள்  என்பதெல்லாம்  நாம்   முன்பே அறிந்திருக்கிற செய்திகள்தான்  என்பதால்,  சன் சனாதன் , அபினவ் பாரத் போன்ற ஏதாவது  ஒரு இந்துத்துவ அமைப்பு பாட்னாவில் மோடி கூட்டத்தில் சக்தி குறைந்த குண்டுகளை அதுவும் மோடி வருவதற்கு முன்பே வெடிக்கும்படி  வைத்திருக்க கூடும் என்று தோன்றுகிறது.

  ஏற்கனவே, இதுபோன்ற பல்வேறு இடங்களில்  பல்வேறு குண்டு வெடிப்புகளை  நடத்திஅனுபவம் பெற்ற இந்துத்துவ அமைப்புகள்  குண்டுகள் மூலம் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பது  தெரிகிறது.


         மோடி தொடர்ந்து தீவிரவாதத்தை மோடிவிரும்புகிறார். அதனை இந்தியாவில் அதனை விதைக்கவும்,  தீவிரவாதத்தின்  மூலமே ஆட்சி அதிகாரத்தை அறுவடை செய்யவும் அவரும்  அவரது கட்சியும் ,சங்க பரிவாரங்களும் திட்டமிட்டு வருகிறார்கள் என்று நினைக்க தோன்றுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிவதற்குள் இன்னும் எங்கெங்கு குண்டுகள் வெடிக்குமோ,எத்தனை பேர்களை தீவிரவாதிகள் பலிகொள்ள இருக்கிறார்களோ என்பதை நினைக்கவே நெஞ்சம் பதறகிறது. இந்திய அரசியல் கொலைகார அரசியல்  ஆகி வருகிறது.

குறிப்பு; வழக்கம் போல முஸ்லிம் பெயரில் இயங்கும் ஏதாவது ஒரு அமைப்பு குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று கொண்டதாக செய்தி வரும்,அதுவும் ஈமெயிலில்முஸ்லிம்களில் சிலர் கைதுசெயயபடுவார்கள்.கைது செய்தவர்கள்தான் குண்டைவைதவர்கள் என்று போலிஸ் சொல்லும், அவர்களை தூக்கில் போடு என்று பி.ஜே.பி-கட்சியும் இந்துத்துவ அமைப்புகளும் கூக்குரல் இடும்.நாடாளுமன்றம் நடக்காது. அமலிதுமளியியில் குண்டுவெடிப்புக்கான நோக்கங்களும், குற்றவாளிகளும் காப்பாற்றபடுவார்கள்.

நரேந்திர மோடி கடந்த 27.10.2013-யில் பிகார் பாட்னாவில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து  மேலே உள்ள பதிவை எழுதி இருந்தேன் நான் சொன்னதுபோலவே நடந்திருகிறது. நரேந்திர மோடி கூட்டத்தில் இந்தியன் முஜாஹிதீன்கள் என்ற பெயரில் குண்டுவெடிப்பை செய்தவர்கள் இந்துத்துவ தீவிரவாதிகள் என்பது இப்போது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது,

குண்டுவெடிப்பு குற்றவாளிகளில் ஒருவரான ராஜு சாவோ என்பவனை பிகார் பொலிசார் ஜார்கண்ட் மாநிலம் தன்பத் மாவட்டத்தில் கைது செய்துள்ளனர். குண்டுவெடிப்புக்கு நிதி உதவி செய்ததாக கோபால் குமார் கோயல்,விகாஷ் குமார்,பவன் குமார்,கணேஷ் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தலைமறைவாகி விட்ட ராஜு சாவோ என்பவற்றின் மூன்று சகோதரர்களை பொலிசார் தேடிவருகின்றன.

       மோடி என்ற கேடியை  பிரதமர் ஆக்குவதற்காக   இந்துத்துவ தீவிரவாதிகள் இன்னும் என்னென்ன பயங்கரங்களை செய்யப் போகிறார்களோ,எத்தனை உயிர்களை  பழிவாங்கப் போகிறார்களோ, குண்டுவைத்து கொலை செய்துவிட்டு ஆறுதல் சொல்வதாக நாடகம் ஆடபோகிறார்களோ தெரிய வில்லை!

இது ஒரு மீள் பதிவு மற்றும் பாலோ- அப் பதிவும் ஆகும்.
 

Sunday, 10 November 2013

ராஜபக்சேவுக்கு வருத்தம் தெரிவிக்கும் பிரதமர்..

       பிரதமர் மன்மோகன் சிங் ராஜபக்சேவுக்கு காமன் வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாததற்கு தனது வருத்தத்தை தெரிவித்துராஜபக்சேவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

        ராஜ பக்சே-வுக்கு ஒரு மீட்டிங்கில் கலந்து கொள்ளாததற்கு வருத்தப்படும்  பிரதமர், இந்திய தமிழர்கள்,தமிழ் மீனவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு உள்ளதற்கும், சிறை பிடிக்கப்பட்டு வருவதற்கும் இன்றுவரை தமிழர்களிடமோ,தமிழக தலைவர்களிடமோ  வருத்தம் தெரிவிக்கவில்லை.!


      அவ்வளவு ஏன்? தனது ஆட்சியில், தனது நாட்டை சேர்ந்த மக்களை அண்டை நாடான இலங்கை கொல்வதைத்  தடுத்து நிறுத்த  முன் வரவில்லை. !  என்பதை  தமிழர்கள் அனைவரும்  கவனத்தில் கொள்ளவேண்டி இருகிறது.!

    இலங்கை கடற்படையினரால் தங்களது வாழ்வுரிமையை இழந்துள்ள தமிழர்கள் மீது, பிரதமர் கொண்டுள்ள மதிப்பீடு  இதுவென்றால்,   இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த  மனித உரிமை மீறல்கள்,போர் குற்றங்களைக் குறித்த பார்வையிலும் மாற்றம் ஏற்படவில்லை ! ராஜபக்சேவுக்கு பிரதமர் தெரிவித்துள்ள வருத்தக் கடிதம்  நமக்கு சொல்லுகிறது.! மேலும், இலங்கையின் செயல்களை இந்தியா தொடர்ந்து அங்கீகரித்து ஏற்று கொள்வதையும், நியாயப் படுத்துவதையும்  அது காட்டுகிறது.! 

   காமன் வெல்த் மாநாட்டில் பிரதமர்  கலந்து கொள்ளாமல் போனதால் மட்டும் மத்திய அரசும், மன்மோகன் சிங்கும் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கருத முடியாது.!

      இந்தியாவின் சார்பில் யாருமே கலந்துகொள்ளாமல் மாநாட்டை புறகணித்து இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் இந்தியா சார்பில் குர்ஷித் கலந்து கொள்வது  கண்டனத்திற்கு உரியது.!  தமிழர்களை மேலும் முட்டாளாக்கும் தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் தந்திரம்  இதுவாகும். !

   பிரதமர்  தமிழர்களுக்கு துரோகம் இளைத்து வருகிறார்.! அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவரும் கூட தமிழர்களுக்கு துரோகம் இளைப்பதை வாடிக்கையாகவும், வழக்கமாகவும் கொண்டுள்ளனர்.

        காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்கள்,எம்.பி-க்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து,  இந்தியாவின் இந்த இரட்டை வேடத்தை, கபட நாடகத்தை  கண்டிக்கவேண்டும்,!  மதிய அரசில் இருந்து விலகி தமிழர்களின் நலனுக்கு ஆதரவாக செயல்படவேண்டும்.தங்கள் பதவிகளை தூக்கி ஏறிய வேண்டும். ராஜினாமா செய்ய முன்வர வேண்டும், !

      இனியும் தமிழர்களுக்கு எதிரான செயல்களில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் காட்டும் மெத்தனமும்,அலட்சியமும் தமிழினத்துக்கு மட்டுமல்ல தங்களுக்கும் ஆபத்தானது என்பதை உணரவேண்டும் !


Tuesday, 5 November 2013

காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளும்..!

       காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும்  கேட்டுக்கொண்டு இருக்கின்றன.

      தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ,மதிய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனாலும் இன்றுவரை இலங்கையில் நடக்கும்  காமன் வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள போவதில்லை என்று இன்றுவரை  இந்தியா அறிவிக்காமல் உள்ளது.கள்ள மவுனம் சாதித்து வருகிறது.!


           சேனல் 4-யில் இசைபிரியாவின் கொடூர மரணம் குறித்த காட்சிகள் வெளியான சில நாட்களிலேயே  இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்குற்றங்கள் ஆகியவைகளை சுட்டிக் காட்டி கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் காமன் வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்து விட்டன. இன்னும் சில நாடுகளும் இலங்கையில் நடக்கும் மாநாட்டை புறக்கணிக்க போவதாக செய்திகள்  வருகின்றன.

        தமிழர்கள் படுகொலை மற்றும் இலங்கையின் போர்குற்றங்கள்  குறித்து வேறு  நாடுகளுக்கு இருக்கும் பார்வையும் மனிதாபிமானம் கூட நமது இந்திய தேசத்திற்கு இல்லை.! மத்திய அரசும்,பிரதமர் மன்மோகன் சிங்கும்   தமிழர்கள் குறித்த எந்த விசயத்திலும்தமிழர்களுக்கு ஆதரவாக இன்றுவரை செயல்பட்டதே இல்லை.  தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.களும் மந்திரிகளும் கூட மத்திய அரசுக்கு போதிய அழுத்தத்தைக் கொடுத்து வலியுறுத்தியதில்லை.!


       ஆந்திர  மாநிலத்தை பிரிக்கும் முடிவுக்கே அங்குள்ளவர்கள் எம்.பி. பதவியை,  மந்திரி பதவியை  ராஜினாமா செய்துவிட்டு, மத்திய அரசை மிரட்டுகிறார்கள். ஆந்திர அரசியல்வாதிகளிடம்  உள்ள காரமும் வீரமும் தமிழக எம்.பி.களுக்கும், மந்திரிகளுக்கும்  இல்லாமல் போய்விட்டது.

       மதிய அரசுக்கும் தமிழக அரசியல்வாதிகள் சும்மா பேசுவார்கள், மிரட்டுவார்கள்  ஆனால், காரியத்தில் இறங்க மாட்டார்கள்  என்ற விவரம் தெரிந்து இருப்பதால்தான், தமிழக அரசியல் வாதிகளின் வீரமும் ரோஷமும் வெத்து வேட்டுகள்   என்பதால்தான் தமிழர்கள் எவ்வளவு பாதிக்கபட்டாலும், நடுக் கடலில் அவர்களை சிங்களர்கள் கொன்று போட்டாலும், கற்பளிதாலும் சுட்டுக் கொன்றாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.  இலங்கைக்கு வக்காலத்து வங்கி, நட்புக்கரம் வீசுகிறது.! நாயைப்போல இலங்கைக்கு வாலை  ஆட்டுகிறது.

        எனவேதான்  தமிழர்களின் உணர்வுகளை மதித்து, இந்தியா மாநாட்டை புறக்கணிக்க போவதாக  அறிவிக்காமல் இருந்து வருகிறது.   அகில இந்திய காங்கிரஸ்-யின்  ஸ்கோர் கமிட்டி இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்திய கலந்துகொள்ளவும் மன்மோகன் சிங் கலந்துகொள்ளவும் அனுமதியும்  வழங்கி உள்ளது.

         நமது {?} இந்திய பிரதமரும்,வெளியுறவுத்துறை  செயலாளர் சிவசந்திர மேனன் சகிதமாக கலந்துகொள்ள ஆவலாகவும் ஆயத்தமாகவும் இருந்து வருகிறார்கள்! . மத்திய  அரசு இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதில் உறுதியாக இருக்கிறது ! என்றாலும் அதற்க்கு ஒரு சின்ன சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.! எங்கே இந்த கருணாநிதி திடீரென்று ஆட்சிக்கு தந்துவரும் ஆதரவு வாபஸ் என்று அறிவித்து விடுவாரோ என்ற சந்தேகம்தான். அதனை நிவர்த்தி செய்துகொள்ளவே ப.சிதம்பரம் வந்து கருணாநிதியை சந்தித்து விட்டு போயிருக்கிறார்.!

       மத்தளத்துக்கு இரண்டு புறமும் இடி என்பதுபோல   வாசன்,ஜெயந்தி நடராசன் ஆகியோர்கள் அல்லாடுகிறார்கள்.!  பாவம் அவர்கள். தமிழ்கதில்தானே  அரசியல் செய்ய வேண்டும், தேர்தலில் நிற்க முடியும் என்பது அவர்களது வேதனையாக இருக்கிறது.

        வீரத்துடன் பதவியை ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கக் கையாலாகாத தலைவர்களை, எம்.பிக்களை.அமைச்சர்களை வைத்துகொண்டு  இலங்கையை எதிர்த்து வெற்றிபெற நினைக்கும் தமிழர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள்.! பாவப்பட்ட ஜென்மங்கள் தமிழர்கள்.!