Thursday, 21 November 2013

தரம் தாழ்ந்து வரும் இந்திய ஜனநாயகம்...

       இந்தியாவில் நமது தலைவர்கள்சமீப காலமாக ஜனநாயகத்தைக் கேவலப்படுத்தி வருகிறார்கள்.

         வடமாநிலங்களில் தற்போது தேர்தல் நடைபெற்றுவரும் டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ,சத்தீஸ்கர், அஸ்ஸாம் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதா கட்சியும் ஒன்றை ஒன்று எதிர்த்து செய்துவரும் தேர்தல் பிரச்சாரத்தில் தனிமனிதத்  தாக்குதல்கள் முன்னிலை படுத்தப்பட்டு வருவதைப் பார்க்கும்போது, வேதனை ஏற்படுகிறது. இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருவதைக் காண முடிகிறது.


           பாரதிய ஜனதாவின் பிரதம வேட்பாளராக அக்கட்சியால் களம் இறக்கப் பட்டு உள்ள நரேந்திர மோடியின் பேச்சுகள் மிகவும் தரந்தாழ்ந்து, ஒரு பேட்டை ரவுடியின் திமிர்த்தனத்தைக் காட்டுகிறது.

         பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலத்தில் பொது சுகாதாரம் மோசமாக உள்ளது என்பதை ராகுல்காந்தி சுட்டிக்காட்ட,"பெரிய கொசுக்கள்என்னை கடிகின்றன" என்று சொல்ல, அதற்கு மெனக்கெட்டு, நரேந்திர மோடி,"  ராகுலைக் கடித்த கொசுக்களை பாராட்டி" இருக்கிறார்.

       தனது தவறை, ஆட்சியில் உள்ள குறைபாட்டை களையவும், தீர்க்கவும் ஆலோசனை சொல்லாமல், அதுகுறித்த குற்றவுணர்வு இன்றி,பொதுமக்கள் என்ன நினைப்பார்களோ என்ற கவலை இன்றி,  மோடி பேசியிருப்பது  ஆணவமான,திமிர் பேச்சாகும்!

          நாட்டின் மிகப்பெரிய பொறுப்பான பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் மோடியின் இந்தகைய பேச்சுகள் அவரது அரசியல் முதிர்ச்சி இன்மையைக் காட்டுவதுடன் அவரது தகுதிக் குறைவையும் காட்டுகிறது .இந்திய ஜனநாயகத்தின் தரம் தாழ்ந்து வருவதற்கு உதாரணமாகவும் உள்ளது.


           மோடி,ஒரு மாநிலத்தின் முதல்வராக கூட இருப்பதக்கு தகுதி அற்றவர் என்பதற்கு மற்றொரு உதாரணம், அவர் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் போது, 'ரத்தக்கறை  படிந்த கரம்' என்று கூறியிருப்பதாகும் !

           ஒருவரைப்பற்றி குறை கூறும்போது, முதலில் நாம் அந்தகைய குற்றங்களை செய்யாதவராக  இருக்கவேண்டும்.  மூவாயிரத்துக்கு மேல் முஸ்லிம்களை படுகொலை செய்து,  குஜராத்தை கலவர பூமியாக்கி, "நரவேட்டை ஆடிய நாயகன்"  நரேந்திர மோடி  காங்கிரசை ரத்தக்கறை  படிந்த கரம்  என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. !

            நரேந்திர மோடியின் பேச்சுக்களை கூர்ந்து கவனித்தால் தன்மீது சுமத்தப்பட்டு உள்ள குற்றங்களை எல்லாம் காங்கிரஸ் கட்சிமீது சுமத்தி வருவதைப்  பார்க்கலாம்.

            இதன்மூலம்,நான் மட்டும் குற்றம் செய்யவில்லை,காங்கிரசும் என்னைப் போலவே, குற்றங்களை செய்து இருக்கிறது என்றுஎடுத்துக்காட்டி, பொது மக்களிடம் தனது தவறுகளை   மறைத்து, தனது தவறுகளை நியாயபடுத்தும் போக்கில் மோடி  செயல்படுவது தெரிகிறது.

           ஜனநாயகத்தில் தவறுகளை உணர்ந்து,திருத்திக்கொண்டு,ஒட்டுமொத்த மக்களின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபடும் தலைவர்களே இன்று தேவைபடுகிறார்கள்.!

        " நீ  என்ன யோக்கியமா,?"   "நீயும் அயோக்கியன் தான்"..., அதனால், "நானும் அயோக்கியத்தனம் செய்வேன்"  என்பதுபோல பேசுவதும்,  நடந்து கொள்ளுவது ஜனநாயகத்திற்கும் நாட்டுக்கும் ஆபத்தானது.!

          இந்தியாவின் தலைமைப் பதவிக்கு வருபவர்களுக்கு பொறுமையும், சகிப்புத்தன்மையும் தேவை., எல்லா மக்களின் நலனைப்  பேணிப் பாதுகாக்கும் சமூக  சிந்தனையும் தேவை .  இந்தியாவின் இறையாண்மையை மதித்து நடக்கும் குணமும், சட்டத்தை மதித்து  கடமையாற்றும் எண்ணமும் தேவை.!

          நரேந்திர மோடியிடம் இவைகளை எதிபார்க்கவே  முடியாது.!1 comment:

  1. வணக்கம் சகோ..
    அரசியல் சாக்கடை என்று சும்மாவா சொன்னார்கள். உன்னைவிட நான் அதிகம் ஊழல் செய்யவில்லை நான் கம்மியாத் தான் ஊழல் பண்ணிருக்கேன் ஆதலால் நான் நல்லவன் எனும் தொணியில் தான் பேசிக்கொள்கிறார்கள். பார்க்கலாம் எங்கு போய் முடிகிறது என்று. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete