Monday, 7 July 2014

காமராசரும்,கல்விக் கொள்ளையர்களும்..

         இந்திய அரசியல் சட்டம் குடிமக்களுக்கு கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளில் கல்வி உரிமை முதன்மையானது . இந்த அடிப்படை கல்வி உரிமையைப் பற்றி இப்போதுள்ள அரசுகள் கவலைபடுவதில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

        காமராசர் முதல்வராக இருந்தபோது,அரசின் மொத்த வருமானத்தில் கல்விக்காக 30% வருவாயை செலவிட்டார். அனால் 50 ஆண்டுகள் கழிந்து நடக்கும் இன்றைய அரசு வெறும் 14% மட்டுமே செலவிடுகிறது. 

      இலவச,அடுப்பு,கேஸ்,மிக்சி,கிரைண்டர்,இலவச மடிக்கணணி,இலவச சைக்கிள்,  ஆடு, மாடு ஆகியவைகளை கொடுப்பதால் மட்டுமே ஒரு சமூகம் அறிவார்ந்த சமூகமாக மாறிவிட முடியாது  என்பதை ஆட்சியாளர்களும், அரசும் புரிந்துகொள்ளவேண்டும்.  அனைவருக்கும் தரமான கல்வியை, தாய் மொழிக் கல்வியை கொடுப்பதே  ஒரு சமூகத்தை அறிவார்ந்த சமூகமாக மாற்றும் என்ற உண்மையைத்  தெரிந்துகொண்டு, அதனை செயல்படுத்த முன்வர வேண்டும் !

      இன்றைய கல்வியாளர்கள் யாரென்று பார்ப்போமானால, கள்ளச் சாராயம் விட்ரவர்கள் கல்லூரி அதிபரகளாக இருப்பதும்,முன்னாள் அரசியல்வாதிகள் கல்வித்  தந்தைகளாக காட்சி அளிப்பதும்,சட்டவிரோதமாக மணல் கடத்தியவர்கள் கல்வி வள்ளல்களாக போற்றபடுவதும் தெரியும். சாமானிய மக்களைக் கொள்ளையடித்து, வள்ளல்களாக மாறிய இவர்கள், பத்திரிக்கை, தொலைகாட்சிகள் நடத்துவதும்  சாத்தான் வேதம் ஓதுவதுபோல நீதியைப் பற்றியும் நேர்மையை பற்றியும் பேசி, அரசுக்கு புத்தி சொல்வதையும் காணலாம்.

       ஒரு குடும்பத்தின் முழு வருமானமும்  குழந்தைகளின் படிப்புக்கே செலவிடப்படும் கொடுமையான சூழல் சமூகத்தில் இருப்பது, வெட்கப்படவேண்டிய தேசிய அவமானமாகும்

        பல ஆங்கிலபள்ளிகள்  ஒரு குழந்தையை L K G-யில் சேர்பதற்கு ரூ. 2 லட்சம் வரை வசூளிக்கின்றன்.  பிளஸ் 2-வரை படிப்பதற்கு பல லட்சம் செலவு செய்யவேண்டியது இருக்கிறது.  தனியார் கல்லூரிகள்  ஆண்டுக்கு 5, 6 லட்சம் நன்கொடை வாங்கிக்கொண்டுதான் கல்லூரியில் இடம் கொடுக்கின்றன. மருத்துவ படிப்பின் நிலையோ இன்னும் மோசம்.   ஒரு M.B.B.S -சீட்டு ஒரு கோடி வரை விற்கப்படுகிறது.  மருதுவ மேல்படிப்புக்கு  ரூ.3 கோடி செலவாகிறது..  மூன்று கோடி கொடுத்து மருத்துவம் படித்த மருத்துவர் ஏழைகளுக்கு எப்படி மருத்துவம் பார்க்க முடியும்? அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம்  இது.

           இன்று கல்வி ரியல் எஸ்டேட் தரகர்கள்,கள்ள சாராய வியாபாரிகள், திரைப்படம் எடுத்து நொடிந்து போனவர்கள்,அரசியலில் காணாமல் போனவர்கள் என அனைவரையும் வளாவைக்கும் துறையாக கல்வித்துறை மாறிவிட்டது.  பங்கு சந்தையை விட அதிக லாபம் தரும் தொழிலாக மாறிவிட்டது. கஞ்சா,சாராயம் விர்ப்பதைவிட அத்க லாபம் தருவது கல்வி என்றாகிவிட்டது.

         இந்த நிலைமை மாறவேண்டும். கல்வியை வியாபாரமாக்கும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடமையாக்க வேண்டும். கல்வி நிறுவனங்களை   அரசுடமையாக்க கோரி அனைவரும் குரல்கொடுக்கவும், போராடவும் வேண்டும்.

 ( தமிழக மக்கள் ஜனநாயக கட்சி இதனை வலியுறுத்தி ஜூலை-15-ம் தேதி D P I - வளாகம்  சென்னையில் போராட்டம் நடத்துகிறது )

 Saturday, 5 July 2014

எரியும் கொள்ளிக்கு பயந்து எண்ணைசட்டியில் விழுந்தது போல..

          காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நடந்த முறைகேடுகள், மக்களுக்கு எதிரான் செயல்கள்,விலைவாசி பிரசனை ஆகியவைகளால் அதிருப்பதிஅடைந்த பொதுமக்கள்  பி.ஜே.பி-க்கு ஆதரவளித்து, அறுதிப் பெரும் பான்மையுடன்  அக்கட்சியை ஆட்சியில் அமர்த்தி இருகிறார்கள்.

         பி.ஜெபி-அரசு தட்டிகேட்க ஆளில்லை என்ற மிதப்பில் மக்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாமல்,  தான் தோன்றிதனமாகவும், தன்னிச்சையாகவும் ,செயல்பட ஆரம்பித்து உள்ளதை  அதன் சமீபத்திய செயல்பாடுகள் காட்டுகின்றன.

        எரிவாயு சிலிண்டர் விலையை  ரூ 250 வரை உயர்த்த போவதாகவும், மண்ணெண்ணெய்,பெட்ரோல்,டீசல் விலையை  எண்ணெய் நிறுவனங்களே தங்கள் விருப்பபடி உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கவும் ஆலோசித்து வருகிறது

        போதா குறைக்கு மக்களுக்கு அளித்துவரும் மானியங்களை குறைத்தும், வழங்காமல் மறுக்கவும் முயற்சி செய்வதாக செய்திகள் வருகின்றன.

      இந்தியாவில் அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கும், தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கும், இந்திய அரசு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. உற்பத்தி பொருள்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு வரி சலுகை, மின்சாரம், குறைந்த வட்டியில் கடன், குறைந்த மதிப்பீட்டில் நிலம் வழங்கி, அந்நிய சக்திகளின் கொள்ளை லாபத்துக்கும்,சுரண்டலுக்கும் அனுமதி அளித்து வருகிறது.

        ஆனால், தனது சொந்த நாட்டு மக்களுக்கு இந்திய அரசு, சூடு வைக்கிறது.  அவர்களது வாழ்க்கையை வளபடுத்தத்   தேவையான நடவடிக்கைகளை  எடுக்க முன்வராமல், மேலும் மேலும் அவர்களுக்கு பதிப்புகளை ஏற்படுத்தவே  முனைந்து செயல்படுகிறது.

         பி.ஜே.பி-அரசு ரயில்வேதுறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது  இதனால் இலட்சக் கணக்கான  இந்திய தொழிலாளர்களின் வேலை  வாய்ப்பைபு, வருமானம் எதிர்காலம் கேள்வி குறியாகும்,  இரயில் போக்குவரத்தை நம்பியுள்ள,கோடிக் கணக்கான மக்களின் வாழ்வும் பாதிக்கப்படும் அபயம் ஏற்பட்டு உள்ளது.

         பொதுவாக முதலீடு செய்யும் எந்த முதலாளியும்,எந்தஒரு நிறுவனமும் தனது  முதலீட்டுக்கு ஏற்ப அதிக லாபத்தை எதிர்பார்ப்பது வியாபார நியதியாகும்.   லாபத்தை எதிர்நோக்கி  முதலீடு செய்யும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தங்களது முதலீட்டுக்கு  ஏற்ப அதிக லாபத்தை அடைய வேண்டி முதலீடு செய்யும் துறையின் நிர்வாகத்தில் சீர்திருத்தம் என்ற பெயரில்   குறுக்கீடு செய்வது தவிர்க்க இயலாததாகும்.

           இரயில்வேயில் முதலீடு செய்யும் அந்நிய நிறுவனங்கள்  முதலில் அதிகமாக தொழிலாளர்களை வேளையில் இருந்து நீக்குவார்கள், பயணிகளின் வசதியை அதிகரிப்பதாக கூறி,     இரயில் கட்டணத்தை தங்கள் இஷ்டத்துக்கு உயர்த்துவார்கள்,  சரக்கு     இரயில் போக்குவரத்தும் பாதிக்கப்படும்.  உணவுப் பொருட்களும் பிற அத்தியாவசியப் பொருட்களும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது கூட சிரமமாகும்

 இதனால , செயற்கையான தட்டுப்பாடும், அதன் தொடர்ச்சியாக பொருட்களின் விலையேற்றமும்  வரலாறு காணாத வகையில் உயரும் நிலை ஏற்படும்.

     எல்லாவற்றிலும் கொள்ளை லாபமும்,சுரண்டலும் நடக்கும். பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்கு  அப்பாவி பொதுமக்களின் உழைப்பும் வாழ்க்கையும்  பலியாகும்.       எந்த காரணத்திற்க்காக பொதுமக்கள் காங்கிரசை வெறுத்து, பி.ஜே.பி-அரசை  கொண்டுவந்தார்களோ,  அதனை  பி.ஜே.பி அரசு காங்கிரசை விட வேகமாக செய்ய முனைந்து வருகிறது.

      இதனைபார்க்கும்போது, எரியிற கொள்ளியில் தலையை சொறிவதற்கு பயந்து எண்ணைச் சட்டியிலே விழுந்துவிட்ட கதைபோல தெரிகிறது,இந்திய மக்களின் நிலை !


   

  

Wednesday, 2 July 2014

பிரதமர் மோடியின் கவர்ச்சி எத்தனை நாட்கள்?

              இந்தியாவை காப்பற்ற வந்தவர்,அவதாரம்,வளர்ச்சியின் நாயகன் என்று தேர்தலுக்கு முன்பு தூக்கி கொண்டாடிய இந்தியமக்கள் இரயில் கட்டண உயர்வு,சர்க்கரை விலை உயர்வு,பெட்ரோல்,டீசல் விலை உயர்வு,சரக்கு கட்டணங்கள் உயவு,தொடர்ச்சியாக காய்கறிகள்,அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றம் ஆகிய பிரச்னைகளில் இப்போது  சிக்கித் தவிக்கிறார்கள்.!

           தேர்தலில் மோடிக்கு வாக்களிக்காதவர்களுக்கு மட்டும் இந்த பிரசனை இல்லை. வாக்களித்தவர்களுக்கும்,மோடியை வானளாவப் புகழ்ந்தவர்களுக்கும் சேர்த்துதான் இப்போது பிரசனை ஏற்பட்டு இருக்கிறது.

          தேர்தலுக்கு முன்பு  எதையெல்லாம் காங்கிரஸ் அரசின் மோசமான செயல்பாடாக,நிர்வாக சீர்கேடாக சொல்லி,பி.ஜே.பி  கட்சி பிரசாரம் செய்ததோ அத்தனை பிரச்னைகளும் மோடியின் நிர்வாக மேம்பாட்டால் அதிகரித்து உள்ளது.

         வெகுஜன மக்களிடம் அரசும்,காங்கிரசின் இமேஜும் சரிந்துவிடும் என்று நினைத்தும்,இடதுசாரிகள் போன்ற கட்சிகளின் எதிர்ப்பை சந்திக்க வேண்டி  இருக்குமே என்ற தயக்கதாலும் காங்கிரஸ் அரசு புதிய பொருளாதாரக் கொள்கையை, சீர்திருத்தங்களை மெதுவாக செய்துவந்தது.

         ஆனால்,  மோடியின் அரசு மக்களுக்கு எதிரான,மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களை மிக வேகமாக செய்ய ஆரம்பித்து இருக்கிறது.கசப்பு மருந்தை சாப்பிட்டுதான் ஆகவேண்டும் என்று விளக்கம் சொல்லுகிறது. உண்மையில் அது கசப்பு மருந்துதானா? நோயை குணமாக்குமா?அல்லது உயிரைப் பறிக்கும் விஷமா?  என்று பலருக்கும்  குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

        இதனை மோடியின் அரசின்மீது எனக்குள்ள அதிருப்தியை காட்டவோ, அல்லது வெறுத்தோ எழுதுவதாக யாரும் கருதவேண்டியதில்லை..

         மோடியை பிரதமராக்கிய கார்பரேட்டுகள், பன்னாட்டு முதலீட்டாளர்கள்,  இந்தியாவை சுரண்ட இந்தியாவில் அந்நிய முதலீடுகளை அதிக அளவில் செய்ய உத்தேசித்து இருப்பவர்கள்  மோடியை சுயமாக செயலாற்ற விடுவார்களா? அதுவும் எதையும் உடனே தங்களுக்கு சாதகமாக செய்துகொள்ள நினைக்கும் பேராசை பெருமுதலாளிகள் நிர்பந்தத்தின்  பேரிலேயே மோடியின் அரசு நடந்து கொள்வதாக  தோன்றுகிறது.       ஜூன் 2-ம் தேதியில் இருந்து 27-ம் தேதிவரையில் இந்தியாவில் அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு ரூ.31764 கோடி செய்யப்பட்டு உள்ளது. இந்திய பங்குகளில்,கடன்பத்திரங்களில்,ஊகபேர வர்த்தகம் என்னும் ஆன்லைன் வர்த்தகத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடு இந்திய பொருளாதாரத்தை, உழைப்பே இன்றி அந்நிய முதலீட்டாளர்கள் சுரண்டவும்,கைப்பற்றவும் மேற்கொண்டிருக்கும்  முயற்சியாகும்.

        கார்பரேட்டு கம்பனிகள்,பன்னாட்டு நிறுவனங்கள்,பெருமுதலாளிகள் நலனை விரும்பும் மோடி அரசால், ஏழைகள் நடுத்தரமக்கள் தங்களது அன்றாட வாழ்கையை நடத்துவதற்கே சிரமப்படும் நிலைக்கே ஆளாகி வருவார்கள். அத்தகைய மக்களிடம் மோடிமீது அவர்களுக்கு இருக்கும் கவர்ச்சி இன்னும் எவ்வளவுகாலம் நீடிக்கும்?  என்பதே நமது சிந்தனையாகும்!    

Wednesday, 23 April 2014

தேர்தலில் இருக்கு நோட்டும் நோட்டாவும்..!

         நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயத்தின் மீது விரக்தியும், நமது வேட்பாளர்கள் மீது உள்ள அதிருப்தியையும் ஆளும் வர்க்கம் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டு இருக்கிறது. அதன் அடையாளமாகவே வாக்கு பதிவு இயந்திரத்தில் உள்ள பதினாறு பட்டன் களில் ஒன்றாக நோட்டா( NOT ABOVE THE OPTION ) இடம் பெற்று இருக்கிறது.

          ஒரு தொகுதியில் நிற்கும் வேட்பாளர்கள் யாரையும் பிடிக்கவில்லை, வாக்கு அளிக்க விருப்பமில்லாதவர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்கலாம்.!

        நோட்டாவுக்கு செல்லும் வாக்குகள்  செல்லாதவையாக கருதப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

        மேலும் ஒரு தொகுதியில் நோட்டாவுக்கு வேட்பாளர்களைக் காட்டிலும் அதிக வாக்குகள் பதிவானால் அந்த தொகுதியல் மறுதேர்தல் நடத்தபடுவதும், தற்போது வேட்பாளர்களாக உள்ளவர்களை மறுதேர்தல் நடைபெறும்போது தகுதி நீக்கமும் செய்வதுதான் சிறந்த ஜனநாயகமாக இருக்கமுடியும் !

            அத்தகைய நடைமுறையை கடைபிடிக்க  முன்வராமல் தேர்தல் ஆணையம் நோட்டாவுக்கு  அடுத்து அதிக வாக்குகள் பெற்றவரை வெற்றிபெற்றவராக அறிவிக்கும் முடிவை எடுத்து உள்ளது,இது கண்டிக்க வேண்டிய ஒன்றாகும்.!

       அதிக பணத்தைக் கொடுத்து, ஜனநாயகத்தை பணநாயகமாக, ஊழல், முறைகேடு உள்ளதாக  நமது அரசியல்கட்சிகள் பலவும் செய்துவிட்டன, வாக்களர்களுக்கு  பணம் கொடுத்து,  தங்களது தவறுகளை மறைக்க அரசியல்வாதிகள்  நினைகிறார்கள.!

        தாங்கள் சுரண்டிய  பணத்தை, முறைகேடாக சேர்த்த பணதைகொண்டே அடுத்த சுரண்டலுக்கும், முறைகேடுகளுக்கும்  மக்களிடம் அனுமதி வாங்கும் நோக்கத்தில் அரசியல்வாதிகள் நடந்துகொண்டு அப்பாவி மக்களுக்கு வாக்களிக்க பணம் தருகிறார்கள்.!

          அப்பாவி மக்களும், வறுமையில் வாடும் கிராமப்புறத்து ஏழைகளும்  இதனை அறியாமல், தங்களது வாக்குகளின் வலிமையைப் பற்றிய விழிப்புணர்வு இன்றி,  வேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிகொண்டு வாக்களிக்கும் அவல  நிலை இருந்து வருகிறது.!

  இதுபோன்ற காரணங்களால்,இ ந்தியாவின் ஜனநாயகம்  நாளுக்கு  நாள் ஏகாதிபத்தியமாக,அதிகார  வர்க்கங்களால் மாற்றப்பட்டு வருகிறது.!

  சர்வாதிகார,ஏகாதிபத்தியமாக இந்திய ஜனநாயகம் மாறி வருவதன் எதிரொலியே,  "இந்துக்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் வேற்று சமூகங்களுக்கு இடமில்லை"  என்ற கொள்கையுள்ள மோடி பிரதமர்  என்று கொக்கரிப்பதும், தேர்தலுக்கு முன்பே பிரவீன் தொக்காடியா  முஸ்லிம்கள் வெளியேறவேண்டும் என்று திமிராக பேசுவதும் மோடிக்கு வாக்களிக்க வில்லை என்றால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என்று கிரிராஜ் சிங் என்பவர் கொக்கரிப்பதும்  போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.

         இவர்கள் சொல்லியதையே, முஸ்லிம்களோ, கிருஷ்தவர்களோ, சொல்லியிருந்தால்  அவர்கள்மீது இந்நேரம் பயங்கரவாத தடைச்சட்டம் பாய்நதிருக்கும், தேசத்தின் இறையாண்மைக்கு, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக கைது செய்து சிறையில் அடைத்து இருப்பார்கள். !

       பிரவீன் தொகடியா,கிரிராஜ் சிங் ஆகியோர்களுக்கு அவ்வாறெல்லாம் நடைபெறவில்லை.நடைபெறப் போவதுமில்லை.!

       எனவே, இந்தியா எங்கு போகிறது?  இந்தியாவின் பிரதமராக யார் வரவேண்டும்?  யார் வரகூடாது.  இந்தியா இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானதாக இருக்க வேண்டுமா?  அனைத்து சமூகங்களுக்கும் ஆனதாக இருக்க வேண்டுமா? என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கிறது.

        ஆகவே, நோட்டாவை பயன்படுத்தினாலும் ஒன்றும் ஆவப்போவதில்லை. நோட்டை வாங்கிகொண்டு  நமது வாக்குகளை வீனடிகாதீர்கள். !

       நமது வாக்குகளை  அயோக்கியர்களுக்கு, நாட்டை துண்டாட நினைப்பவர்கள்,  வன்முறையாளர்கள், மதவெறி, சாதிவெறியர்கள்,  சுரண்டல் பேர்வழிகள்  ஆகியவர்களுக்கு அளிக்காதீர்கள்.!

       நல்லவர்களைத்தேர்ந்தெடுக்க,  நமது வாக்குகளைப் பயன்படுத்துவோம்.!   நமது ஜனநாயகத்தைக் காக்க அதுவே சிறந்த வழியாகும்.!


Saturday, 12 April 2014

மோடி எத்தனை முகமூடியடி!

            ராமன் எத்தனை ராமனடி என்று ஒரு பாடல் உள்ளதைபோல இன்று மோடி எத்தனை முகமூடியடி என்று பாடவேண்டும் போலிருக்கு! 

           அத்தனை வேசங்கள் போட்டு இந்தியாவில் தேர்தல் பிரசாரம் செய்துவரும் நரேந்திர மோடி இதுவரை தான் கல்யானமகதவர் என்று போட்டுவந்த வேசத்தை முதல்முதலாக கலைத்துவிட்டு, தனக்கு திருமணம் ஆனது, தனது மனைவி ஒரு பள்ளி ஆசிரியை,ஓய்வு பெற்றுவிட்டார். தனியாக வாழ்ந்துவருகிறார்.அவரது பெயர் ஜசோதாபென் என்று தனது வேட்புமனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

        இதுவரை தனக்கு திருமணம் நடந்ததை மறைத்ததாக அவர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

         தான் ஒரு பெண்ணுக்கு தாலி காட்டியதையே,தனக்கு திருமணம் நடந்ததையே,தனது மனைவி உயிருடன் இருப்பதையே, மறைத்த மோடி -இதுவரை எவை எதை மறைத்து இருப்பார் என்று இப்போது பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது !

        பிரதமர் பதவிக்காக தன் மனைவியை முதன்முதலாக அறிமுகபடுத்திய மோடி எவ்வளவவு பெரிய மோசடிகாரராக, போய்யானாக இருக்க வேண்டும் தன் மனைவியையே மறைத்த மோடி, நாளைக்கு நம் நாட்டை எதிரிகளுக்கு  காட்டியும் கொடுத்துவிட்டு அதனை  நம்மிடம் இருந்து மறைக்க எவ்வளவ நேரம் ஆகும? என்ற கேள்வி எழுகிறது! 


 Photo: மனைவியையே மறைத்த மோடி -எதை எதை மறைத்து இருப்பார் ? சிந்திக்கவும்

பிரதமர் பதவிக்காக தன் மனைவியை அறிமுகபடுத்திய மோடி எவ்வளவவு பெரிய போய்யானாக இருக்க வேண்டும் ?

தன் மனைவியையே  மறைத்த மோடி - நாளைக்கு நம்  நாட்டை எதிரிகளுக்கு  கூட்டியும் காட்டியும் கொடுத்துவிட்டு - நம்மிடம் இருந்து மோடி அதை மறைக்க எவ்வளவவு  நேரம் ஆகும் : இந்தியனே சிந்திக்கவும் !

தன் மனைவியை இந்தியர்களிடம் மறைத்த மோடி - நாளைக்கு நம் நாட்டை எதிரிகளுடன் கூட்டியும் காட்டியும் கொடுத்துவிட்டு - நம்மிடம் இந்த பொய்யன் அதை மறைத்துவிட்டால். .. ? நம்மிடம் மறைக்காமல் இருப்பார் என்பதற்கு என்ன சான்று ?

இந்தியனே சிந்திக்கவும் !

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது வேட்பு மனுவில் தான் ஜசோதாபென் என்ற பெண்ணை திருமணம் செய்ததாகவும், அவர் ஓய்வு பெற்ற ஆசிரியை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதுவரை தனக்கு திருமணம் நடந்ததை மறைத்ததாக அவர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடாவில் இன்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

மோடி எத்தனை முறை தேர்தல்களில் போட்டியிட்டார் என்பது தெரியாது. இதுவரை எந்த தேர்தலிலும் அவர் தன் மனைவி பெயரை குறிப்பிடவில்லை. முதல் முறையாக அவர் தனக்கு திருமணமானதை இப்போது எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் 2009-ம் ஆண்டு மோடி அரசின் உத்தரவின்பேரில் இளம்பெண் ஒருவர் வேவு பார்க்கப்பட்டார். ஆனால், அதன்பின்னர் டெல்லியில் பெண்களுக்கு மரியாதை அளிப்பதாக பா.ஜனதா கட்சியினர் போஸ்டர்கள் ஒட்டினார்கள். பெண்களுக்கு இப்படிப்பட்ட மரியாதையைத்தான் அளிக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.       தன் மனைவியை  பற்றிய உண்மையை நாட்டுக்கு சொல்லாமல் இதுவரை மறைத்த மோடி நம்பிக்கையுள்ளவரா? நம்பத்தகுந்தவரா? நாட்டை ஆள தகுந்தவரா?   நம் நாட்டை அவரிடம் ஒப்படைத்தால் நாளை எதையெல்லாம் அவர் மறைப்பார்.? மறைக்க மாட்டார்  என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது ?

        ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடாவில்   நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் "ராகுல் காந்தி, மோடி எத்தனை முறை தேர்தல்களில் போட்டியிட்டார் என்பது தெரியாது. இதுவரை எந்த தேர்தலிலும் அவர் தன் மனைவி பெயரை குறிப்பிடவில்லை.  முதல் முறையாக அவர் தனக்கு திருமணமானதை இப்போது எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். குஜராத்தில் 2009-ம் ஆண்டு மோடி அரசின் உத்தரவின்பேரில் இளம்பெண் ஒருவர் வேவு பார்க்கப்பட்டார். ஆனால், அதன்பின்னர் டெல்லியில் பெண்களுக்கு மரியாதை அளிப்பதாக பா.ஜனதா கட்சியினர் போஸ்டர்கள் ஒட்டினார்கள். பெண்களுக்கு இப்படிப்பட்ட மரியாதையைத்தான் அளிக்கிறார்கள்."என்று கூறி உள்ளார். 


     மோடி தனக்கு திருமணம் ஆனதை மட்டும்தானா மறைத்துள்ளார்.? தனது ஆட்சியில் பாதுகாக்க வேண்டிய முஸ்லிம்களை படுகொலை செய்ய உதவியதை, போலி என்கவுண்டர்களை மறைத்தார் ! ஊழல் அதிகாரிகளை, சமூக குற்றவாளிகளுக்கு புகலிடம் அளித்ததை மறைத்தார் !.அரசு நிலங்களையும்,விவசாயநிலங்களையும் கார்பரேட்டு கம்பனிகளுக்கு அடிமாட்டு விலைக்கு கொடுத்ததை,அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதை மறைத்தார்,!  

      சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் சலுகைகளை வழங்க மனமின்றி திருப்பி அனுப்பினார்.! ஒட்டு மொத்த குஜராத்தில் ஏழைகளின் அவலத்தை வளர்ச்சியாக காட்டி ஏமாற்றுகிறார்.! குடிக்க தண்ணீர் இன்றி குஜராத் மக்கள் அவதி படுவதையும் அபரிதமான வளர்ச்சியாக காட்டி ஏமாற்றி வரும் மோடி  ஒரு மோசடிக்காரர்.! பச்சை பொய்யன்.!

         மோடி தான் மறைத்த உண்மைகளை ஒப்புகொண்டால்..  உலகின் சர்வதேச பயங்கரவாதி போல தெரிவார்.!
 
       இப்படிப்பட்ட முகமூடியைத்தான் கார்ப்பரேட்டு கம்பனிகளும், ஊடகங்களும்   ஊதி,ஊதி  மோடியை அவதார நாயகனாக காட்டி மக்களை ஏமாற்றி வருகின்றன. !

         மோடியால் ஒட்டுமொத்த பெண்களும் அவமானபடுத்தபட்டு உள்ளனர்.! பெண்ணியத்துக்கு எதிரியான மோடி பிரதமரானால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்னவாகும்? சிறுபான்மையினர் நலம் என்ன? 

        இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையே மாற்றவேண்டும் என்று பேசும் பி.ஜே.பி-ஆட்சிக்கு வந்தால் நாடு.. சுடுகாடாகிவிடும் என்பதுதான் எதார்த்தம்.!
Tuesday, 8 April 2014

மீத்தேன் வாய்வுக்கு பின்னுள்ள பயங்கரம்!

            நூறுபேர் வாழ்வதற்கு, நாலு பேர் உயிர் விட்டால் தப்பிப்பில்லை என்று நியாயம் பேசுவார்கள்,ஆனால், மீத்தேன் திட்டம் இது போன்றதல்ல.. நான்கு பேர் வாழ்வதற்க்கு நூறுப் பேரை கொல்லும் திட்டம்.! .

        சாதாரணமாவே இது மாதிரியான திட்டங்களால் சுற்று சூழல் மாசுபடும், மக்களின் வாழ்வாதரங்கள் பாதிக்கப்படும், அதைவிட அவை மனித உயிர்களுக்கே உலை வைக்கும்!   இது மாதிரியான திட்டங்களால் எதிர் வினைகள் மிக மோசமானதாக இருக்கும்.!

           "மீத்தேன் வாயு திட்டம்"  என்ற பெயரில் கிட்டதட்ட 50 லட்சம் தமிழர்களை   விவசாயிகளை  காவிரி படுகையிலிருந்து துரத்தியடித்து விட்டு தெற்கே ஓர் தார் பாலைவனத்தை உருவாக்க முயல்கிறது மத்திய அரசு!

           நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பூமிக்கு கீழே ஏராளமான  மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உறபத்தி செய்யப் போவதாகவும் மத்திய அரசு இதற்கான ஒப்பந்தத்தை “ கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் லிமிடெட்” என்ற நிறுவனத்திற்கு 100 ஆண்டுகளுக்கு வழங்கி இருக்கிறது.   பாகூரிலிருந்து ராஜ மன்னார்குடி வரை. சுமார் 1,64,819 ஏக்கர் நிலப்பரப்பு வரை  திட்டம் பரந்து விரியப் போகிறது!

          இந்த நிலப்பரப்பின் கீழ் சுமார் 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன் வாயு இருக்கிறதாம்.,இந்த தொகைக்காக இவ்வளவு பெரிய நிலப்பரப்பை   நமது மத்திய அரசு பலி கொடுக்கிறது.இத்திட்டத்தின் பின்னே ஆழமான பயங்கர  நோக்கம் இருக்கிறது.!

         நம் காவிரி படுகையின் கீழே மாபெரும் நிலக்கரி சுரங்கம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்! .இந்த மீத்தேன் வாயு எல்லாம் முதல் 35 ஆண்டுகள் மட்டும்தான். அதன் பிறகு  நிலக்கரியைத்  தோண்டி எடுக்கவே  இந்த திட்டம் ! ஆனால், செய்திகளில் “மீத்தேன் வாயு திட்டம்” என்றுதான் முன்னிலை படுத்துகிறார்கள்!  ஏன்என்றால் முதலில் மீத்தேன் வாயுவை வெளியேற்றினால்தான்  நிலக்கரியை தோண்டி எடுக்க முடியும் இல்லையெனில் தீ விபத்து ஏற்படும்!  அதற்காக மீத்தேனை வெளியே எடுக்க வேண்டுமானால் முதலில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்ற வேண்டும்!

          நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால் பின் மெல்ல மெல்ல அந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு, பூமியின் கீழ் ரசாயன கழிவுகள் செலுத்தப்பட்டு, பின்  பூமியின் மேலே  நிலம் நஞ்சாகிவிடும்!இவையெல்லாம்  35 ஆண்டுகளுக்குள் நடக்ககூடும்!

          அப்புறம்  என்ன? அந்த பகுதி மக்கள் வேறு வழியில்லாமல், விவசாயம் செய்ய முடியாமல், நிலங்களை பாதி விலைக்கு விற்றுவிட்டு அந்த பகுதியை விட்டே வெளியேறி விடுவார்கள்  அப்புறமென்ன? எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் நிலக்கரி தோண்ட ஆரம்பித்து விடுவார்கள்!  என்ன  ஒரு மாபாதக திட்டம் இது! .

         அமெரிக்கா, கனடா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்  மீத்தேன் எடுக்கிறார்கள் என்றால், மக்கள் அடர்த்தி குறைந்த பகுதியிலும,மக்கள் அதிகம் வசிக்காத நிலப்பரப்பிலும்  இந்த திட்டத்தை செயல் படுத்துகிறார்கள்!

          ஆனால், இங்கே காவிரி டெல்டாவில் ஊர்களும் வயல்களும் இனைந்தே இருக்கிறது. .ஏற்கனவே திருவாரூர் பகுதியில் குழாய்கள் அனகொண்டா போல் ஊர்முழுவதும் புதைக்கப்பட்டு இருகிறது!

          நெற்களஞ்சியமாக காணப்பட்ட விளைநிலங்களை விலை நிலங்களாக மாற்றுவதோடு   பாலை வனமாகவும் மாற்ற கிளம்பி உள்ளார்கள் ! இந்த பயங்கரம்  நம் மாவட்டதில் ,தஞ்சையில் நடக்கிறது    இனியும் நினைக்காதீர்கள்.!

         தமிழனின் வீரம் ஜல்லிக்கட்டிலும், இளவட்டக்கல்லிலும் மட்டும் இல்லை...எங்கெல்லாம் தமிழனுக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் தமிழனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதும் வீரம் தான்! 

          நம் விவசாய நிலங்களை காக்கவேண்டிய மகத்தான பொறுப்பு இன்று நமக்கு இருக்கிறது! நம் வருங்கால சந்ததியினருக்கு சொத்துக்களை சேர்த்து வைப்பதை விட இயற்கை வளங்களையும் வளமான வாழ்வையும் ஏற்படுத்தி தருவதே நம் கடமை.!

          நம்   சந்ததியினர் சாப்பிடப் போகும் தட்டில்.. நாம் அரிசியை தரப் போகிறோமா? அல்லது கரியை தரப் போகிறோமா என முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டு உள்ளது. நமது மண்ணைக் காக்க,தமிழர்களைக் காக்க, விவசாயிகளைக் காக்க, நிலத்தடி நீரைக்காக்க, இயற்கை வளத்தைக்காக்க ,  உணவுதேவையைக் கருதி, எதிர்வரும் சந்ததிகளின் நலத்தைகருதி மீத்தேன் வாயுத் திட்டத்தை எதிர்போம் !
(நன்றி; பனிமலர் வைத்தி )

 

Wednesday, 2 April 2014

கருத்துக் கணிப்பும் மக்கள் நினைப்பும்

         தேர்தல் என்றாலே ஆட்சிக்கு வரும் கட்சி எது,?அதிக இடங்களைக் கைப்பற்றும் கட்சி எது?எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? எந்தவேட்பாளர் வெற்றிபெறுவார்?அல்லது எதனால் அவர் வெற்றி  பெறமாட்டார் என்று  பத்திரிகைகள், தொலைக் காட்சி ஊடகங்கள், தனியார் துப்பறியும் நிறுவனங்கள், தேர்தல் கணிப்புக்கு என்ற இயங்கும் அமைப்புகள் எல்லாம் கருத்துக் கணிப்புகள்  நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

       எப்போதேனும் ,அபூர்வமாக ஒன்றிரண்டு கருத்து கணிப்புகள் சரியாக அமைந்துவிடுவதும் உண்டு. ஆனால், கணிப்புகள் பெரும்பாலும்  மக்கள் நினைப்பை, அவர்களது எண்ணத்தைப் பிரதிபலிப்பதில்லை என்பதுதான் உண்மையாக இருக்கிறது.!

       காரணம், கணிப்புகள் நடத்தும் அமைப்புகள் வாக்களர்களில் சிறு பகுதியினரை மட்டுமே அணுகுவது, தொகுதிநிலவரம், வாக்களரின் தகுதி, கட்சியின் செல்வாக்கு,வேட்பாளர்கள்  தேர்தலில் செலவிடும் முறைகேடான கள்ளப் பணம், வாக்குக்கு கடைசி நேரத்தில் தரும் லஞ்சம், குவாட்டர், கோழி பிரியாணி,தொகுதியில் உள்ள ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை ஆகிய பலவற்றை  கணிப்பாளர்கள் கருத்தில் கொள்ளாத  காரணங்களால் கணிப்புகள் பொய்த்துப் போகின்றன.

         பிறகு, தேர்தல் கணிப்புகள் பிறகு எதற்காக நடத்தப் படுகின்றன?  மக்களின் திடமற்ற,ஊசலாடும் மனநிலையைத் தங்களது ஆதரவு அக்கட்சிக்கு, வேட்பாளருக்கு ஆதரவாக திசைதிருப்பவே நடத்தப்படுகிறது.!

 பல தேர்தல்களை  சந்தித்த,பல வேட்பாளர்களுக்கு  வாக்குகளை அளித்து ஏமாந்த  வாக்காளர்கள் பலரும் "எல்லோரும் அயோக்கியர்கள் எல்லா கட்சியும் ஊழல் கட்சிகள்" என்ற விரக்தியில் இருப்பார்கள்.  அத்தகைய மக்களுக்கு இந்த தேர்தலில் நீங்கள் யாருக்கு வாக்களிக்கலாம் என்று மறைமுகமாக தூண்டும்  மனோதத்துவ செயலாக தேர்தலுக்கு முன்பு நடத்தப்படும்   கணிப்புகள் இருக்கின்றன !

      வாழ்க்கை நெருக்கடியில் பல்வேறு வீழ்ச்சிகளை,தோல்விகளைச் சந்திக்கும்  பொதுஜனமான வாக்காளர்கள்,  இந்த வேட்பாளர்தான் வெற்றி பெறுவார், இந்த கட்சிதான் ஆட்சி அமைக்கும்  என்ற தேர்தல் கணிப்புகளால் மனமாற்றம் அடையும் நிலையை கணிப்புகள் ஏற்படுத்துகின்றன.!

        மனித மனம் தோல்வியை விரும்புவதில்லை. வெற்றியை விரும்புகிறது. வெற்றி சந்தோசத்தைக் கொடுகிறது. அந்த சந்தோசத்தைத் தரும் வெற்றியை விரும்பும் மனிதன் பின்விளைவுகளைக்  கருத்தில் கொள்ளாமல், கணிப்புகள் என்ற பெயரில் திணிக்கப்படும், வெற்றிபெறுவார் என்றுகருத்துக் கணிப்புகள் கோடிட்டுக் காட்டும் மோசமான வேட்பாளருக்கு வாக்களிக்கும் நிலையை  ஏற்கவைக்கும் உத்தியே கணிப்புகளின் நோக்கமாகும்!

     . "எப்படியும் அவர்தான் வெற்றிபெறுவார் என்று கணிப்புகள் சொல்லுகின்றன .  நாம் எதற்கு நமது வாக்கை தோல்வி அடையும்  வேட்பாளருக்கு போடவேண்டும்?. நாம் தான் வெற்றி பெறவில்லை நாம் வாக்களிக்கும் நபராவது (வேட்பாளர் )வெற்றிபெறட்டும்"  என்ற மன நிலைக்கு வாக்காளர்களை கொண்டுசெல்ல  கணிப்புகள் பயன்படுகின்றன. .

          உள்நோக்கத்துடன் குறிப்பிட்ட கட்சிக்கு, வேட்பாளருக்கு ஆதரவாக நடத்தப்படும்  கணிப்புகள் ஆபத்தானவை. இதனால், ஜனநாயகத்திற்கு எதிரான,   மிக மோசமான,நபர்கள்,கிரிமினல்கள் கூட தேர்தலில் வெற்றிபெரும் நிலை ஏற்படுகிறது.!

        ஜோதிடர்கள் எப்படி  ஆளுக்கு ஒருவர் அவரவர் எண்ணப்படி ஜோதிடம் என்ற பெயரில் சொல்கிறார்களோ,  அதுபோன்றதுதான்   தேர்தல் கணிப்புகளும் !

           ஆகவே, மக்கள் தேர்தல் கணிப்புகளை பொதுமக்கள் அலட்சியப் படுத்தவும் கணிப்புகளுக்கு  முக்கியத்துவம் அளிப்பதையும் த்விர்க்கவும்   வேண்டும்.  நல்ல வேட்பாளர்களை ,ஜனநாயகவாதிகளை  கட்சி வித்தியாசம் இன்றியும்   சாதி, மதம் பாராமலும் தேர்வு செய்ய முன்வரவேண்டும்!

       குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருவோருக்கு உதவும் கணிப்புகளை புறகணிக்க வேண்டியது வாக்களர்களின் முக்கிய கடமையாகும்.!  அவ்வாறு செய்தால்தான் இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கும் !  கிரிமினல்கள்,ஊழல் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியும் ! நாடும் வீடும் நலம்பெற நமது  வாக்குகளை  நல்ல முறையில் பயன்படுத்துவோம்!


Saturday, 22 March 2014

தேசத்தைப் பற்றி கவலைபடாத தலைவர்கள்.!

        நமது தலைவர்கள் தேசத்தைப் பற்றி,மக்களைப் பற்றி கவலைப்படுவதை எப்போதோ விட்டுவிட்டார்கள்.. இப்போது அவர்களது கவலை எல்லாம் தேர்தலைப் பற்றிதான்!

       இந்த தேர்தல் எதற்காக? ஆட்சியை பிடிக்கவும்,அதிகாரத்தைக் கைப்பற்றவும் உதவும்  பாதையாக  தலைவர்கள் நினைகிறார்கள்!  ஆட்சியைப் பிடித்து, அதிகாரத்தைப் பெற்று  என்ன செய்யப் போகிறார்கள்?

        இனி செய்வது இருக்கட்டும்! இதுவரை இந்திய பாராளுமன்றத்திற்கு 15 முறை தேர்தல் நடந்து இருக்கிறது. ஆட்சியை,அதிகாரத்தை பெற்றவர்கள் செய்தது என்ன? யோசித்துப் பார்த்தால், ஒன்றுமே  நடைபெறவில்லை! 

         இந்தியாவின் பொது சுகாதாரம்,மருத்துவம்,கல்வி வசதி,பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் முன்னேற்றம்,அடிப்படை வசதிகள், விவசாயம், வேலைவாய்ப்பு, சுற்றுசூழல் மேம்பாடு, ஆகியவற்றை செய்வதாக கூறியும் அதற்கு அதிக அளவில் நிதி தேவைப்படுவதாக சொல்லியும் உலக வங்கியில்,பன்னாட்டு நிதியத்தில் பல லட்சம் கோடிகள்  கடன் வாங்கி இருகிறார்கள். இந்த கடனுக்கு வட்டியாக பல்லாயிரம் கொடிகளை கட்டும்படி செய்து இருகிறார்கள்.!

       ஆனால், வாங்கிய கடனை முறையாக செலவு செய்யாமல், இந்திய மக்களின் நலத்தை பார்க்காமல், இந்தியாவின் முன்னேற்றத்தைப் பற்றி கவலை கொள்ளாமல்  தங்களது நலத்தை பார்த்துக் கொண்டார்கள். தங்களை வளமாக்கி  கொண்டார்கள்!

         விளைவு? கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன  கதையாக  இந்தியாவின் நிலைமை  மாறி விட்டது.  இருக்கிற விவசாயம், வேலைவாய்ப்புகள் பறி போகின்றன. சுற்றுசூழல்,சுகாதாரம் கேள்விகுறி ஆகிவிட்டது. இந்தியாவின் இயற்கை வளங்கள் கொள்ளை போகின்றன. வனங்கள், இரும்பு வளம், கனிமம்,நிலக்கரி எல்லாம் கொள்ளை போகிறது. தண்ணீரும், ஆறுகளும்  கூட தனியார் மயமாகி விட்டன. குடிக்க தண்ணீர் இன்றியும்,உண்ண  உணவு இன்றியும், தவிக்கும்  நிலைக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர் !

     ஏழ்மையும் வறுமையும் இந்தியாவில் நிரந்தரமாகி விட்டது. கண்ணீர் சிந்துவோரும் செந்நீர் சிந்துவோரும் அதிகரித்து வருகின்றனர்.

    ஆனாலும், ஆட்சி வேண்டும்,அதிகாரம் வேண்டும் என்று நமது  தலைவர்கள் ஆளாக பறக்கின்றனர்   நாளொரு ஊழல் பொழுதொரு முறைகேடு  என தொடர்கின்றனர்.   லஞ்சம்,ஊழல் தவிர்க்க முடியாதவை என்று  வெட்கமே இன்றி,கொஞ்சமும் கூசாது புதிய விளக்கம் சொல்கின்றனர்.
   
      மக்கள் நலம்,தேசநலம் என்ற உயரிய சேவைக்காக பொதுவாழ்க்கைக்கு வரவேண்டிய,அரசியலில் நீடிக்க வேண்டிய தலைவர்கள் இன்று இவைகளை மறந்து விட்டு,ஊழல் செய்யவும், ஊழல் செயது  சம்பாதித்த சொத்துக்களை காப்பாற்றவும், தேர்தலை பயன்படுத்துகின்றனர்! ஆட்சியை,அதிகாரத்தைப் பெற துடிகின்றனர்.
    
     தேசத்தைப் பற்றி கவலைபடாத இந்த தலைவர்களை என்ன செய்வது? இவர்களை நம்பும் மக்களை யார்தான் காப்பது? தெரியவில்லை.!


Monday, 17 March 2014

அய்யா சாமி ..அம்மா தாயி..எதாச்சும்..

      அய்யா சாமி ..அம்மா தாயி..எதாச்சும் போடுங்க..!   இப்படி உங்கள் வீடுகளின் முன்பு குரல் கேட்டால்,  எதோ பிச்சைகாரன் குரல் குடுக்கிறான் என்பது நமக்கு தெரியும்  இன்னும் இரண்டு மாதங்களுக்கு இப்படி குரல் கேட்டால்  பிச்சைகாரர்கள்  என்று உறுதியாக சொல்ல  முடியாது.!

        காரணம், உங்களுக்கு தெரியும்.!  மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பிச்சைக் காரர்கள் எண்ணிக்கை ஆதிகரித்து இருப்பது  நமது தலைவர்களின் சாதனையாக இருப்பதுபோல,   அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து  இருப்பதும் சோதனையான சாதனைதான்.!

       இந்த அரசியல் பிச்சிகளும்  வழக்கமான பிச்சைகாரர்களைப் போல  எப்போதும் ஏழைகளாக இருக்கும் இந்திய மக்களின் வாக்குகளைக் கேட்டு வலம் வரப் போகிறார்கள்.!

   கோடிசுவரர்களுக்கும்,கொள்ளையர்களுக்கும்  வாக்குகள் என்னும் வரத்தை ஏழைகளாக இருக்கும் மக்கள் ஒருநாள் வள்ளலாக மாறி  வழங்கப் போகிறார்கள்.!  வாக்குகள் என்னும் வரத்தை தந்துவிட்டு வழக்கம்போல வறுமையை ஏற்றுக் கொள்ள போகிறார்கள்.! 

         பிச்சையாக பெற்ற வாக்குகளை வரமாக வாங்கியவர்கள்  மேலும் தங்களது  செல்வாக்கையும், செல்வதையும் வளர்த்துக் கொள்ள போகிறார்கள். இதுதான் இந்திய தேர்தல் ஜனநாயகமாக இன்றுவரை இருக்கிறது.!

       இதனை எப்படி மக்களுக்கான தேர்தலாகவும்,உண்மையான மக்களாட்சி மலர  செய்யும் ஜனநாயகமாகவும்  ஏற்க இயலும்?

      தேர்தலுக்காக கட்சிகள் தரும் தேர்தல் வாக்குறுதிகள் யாவும்   தேர்தலுக்கு பிறகு  செயல்படுத்தப்  படுவது  இல்லை.!  பொதுவாக மக்களும் அதனை நினைவில் வைத்து  ஏன் செய்ய வில்லை என்று கேட்பதும் இல்லை ! இந்நிலை மாறவேண்டும்.! 

      கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் உறுதியுடைய, மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சிகளையும், ஜனநாயகத்தை, நாட்டின் முன்னேற்றத்தை, மக்கள் நலனில் அக்கறை கொண்ட, மதம்,  சாதி என்று மக்களைக் கூறு போடாத,  இந்தியாவின் இறையாண்மை, அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள வேட்பாளர்களை,அவர்கள் எந்த சாதி, எந்த மதம், எந்த அரசியல் கட்சி என்று பார்க்காமல் வாக்களிக்க பொதுமக்கள் முன்வரவேண்டும். !

      வாக்குகளுக்கு பணம் தருபவர்கள் நிச்சயம் நல்ல வேட்பாளர்களாக, ஜனநாயகவாதிகளாக செயல்படமாட்டார்கள். ஆகவே, அப்படிப்பட்டவர்களை  ஒதுக்கிவிட்டு நமது வாக்குகளை அளிக்கும் எண்ணம் பொதுமக்களுக்கு வந்தால்தான்  தேர்தலும்,நாடாளுமன்ற ஜனநாயகமும் அர்த்தம் உள்ளதாக அமையும். பொதுமக்கள் மாற்றத்தை முதலில் தங்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஜனநாயகம் சிறக்க அதுவொன்றே சிறந்த வழியாகும்.! செய்வார்களா?


Wednesday, 12 March 2014

இந்தியாவுக்கு வந்த சோதனை..!

        பட்ட காலிலேயே படும் கேட்ட குடியே கெடும் என்று பழமொழியைபோல இந்தியாவுக்கு இன்னொரு சோதனையாக நாடாளுமன்ற தேர்தல் இருக்கிறது.
இதுவரை 15-முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்து இருக்கிறது. இப்போதைய தேர்தல் 16-வது நாடாளுமன்ற தேர்தல்.

         முந்தைய தேர்தலைவிட நடைபெறும் தேர்தலில் 10 கோடி வாக்காளர்கள் அதிகம் வாக்களிக்க உள்ளனர். இளம் தலைமுறை புதிய வாக்காளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் மிகபெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சக்திகளாக் இருகிறார்கள்.!

         இவர்கள்  ஹை -டெக் வாக்காளர்கள். மாற்றத்தை விரும்புபவர்கள். அறிவுபூர்வமாக சிந்திக்க கூடியவர்கள்.உண்மையிலேயே இந்தியாவின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்கள். ஊழல், முறைகேடு, லஞ்சம், விலைவாசி உயர்வு,  அரசியல்வாதிகள், தலைவர்களின் இலட்சணம் ஆகியவைகளை  பற்றிய மதிப்பீடுகளை கொண்டுள்ளவர்கள்.!

           புதிய வாக்களார்களான 10 கோடி வாக்காளர்களை கவரவும்,அவர்களின் கவனத்தை கவரவும் இன்று பாரம்பரிய, பழமைப் பஞ்சாங்க அரசியல்  வாதிகளும் கட்சிகளும் கூட முகநூல்,டுவிட்டர் என்று  இணைய வழி ஊடகங்களின் உதவியை நாடுகின்றனர்.!

        எனவே, இணையங்களிலும்,வலைதளங்களிலும்   அரசியல் வாடை,சர்ச்சைகள், தேர்தல் பிரசாரம், கருத்து  மோதல்கள்  போன்றவைகள்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

          இது இந்திய ஜனநாயகத்தில் என்ன விளைவை ஏற்படுத்தும்,புதிய வாக்களர்களை எந்த அளவு வசீகரிக்கும் என்று தெரியவில்லை.!

         இது ஒருபுறம் இருக்க, நமது நாட்டையும் ஜனநாயகத்தையும் காக்கவே அவதாரம் எடுத்துள்ள தலைவர்கள் பலரும் அடிதடி,குத்துவெட்டு, கலக்கல்,கவிழ்த்தல்,பொய்யுரைகள், புழுதிவாரி தூற்றல்கள், வாயெல்லாம் வாக்குறுதி, நெஞ்செல்லாம் பதவி கனவு  என்று பலப்பல காட்சிகளுடன் தங்களது  ஜனநாயகக் கடமையை நடத்த இருகிறார்கள்.

      நடைபெறப் போகும் இந்திய நாடாளுமன்ற தேர்தல் வரலாறு காணாத வகையில் நடக்கும் தேர்தல் மட்டுமல்ல. வரலாறு காணாத ஜனநாயகச் சீர்குலைவு மட்டுமல்ல.... இந்தியாவுக்கு வந்துள்ள இன்னொரு சோதனையும் ஆகும்.!
Wednesday, 5 March 2014

இந்திய அரசியலில் கக்கதண்டங்கள்.!

         விபத்து ஒன்றில் காலை இழந்த கிராமத் தலைவர் ஒருவர் கட்டையின் உதவியோடு நடமாடிகொண்டிருந்தார். அதன் மூலம் சில அதியங்களை நிகழ்த்திக் காட்டி, நிஜக் கால்களை விட கட்டைகால்களே சிறந்தது என ஊர் மக்களை நம்பவும் வைத்துவிட்டார்.

     ஊர் மக்களும் தங்களின்  நிஜக் கால்களை பன்படுதுவதை விட்டுவிட்டு கட்டைகளின் உதவியாலேயே நடக்க தொடங்கினர். பின்னால் வந்த சந்ததியினருக்கும்  அதுவே வாடிக்கையாகவும் ஆகிவிட்டன.!


           நடைவண்டிகளுக்கு பதில், கட்டைகால்களே குழந்தைகளுக்கும் என்று ஆனது.! இதனை பார்த்த ஊருக்கு புதியவன் ஒருவன், கட்டைகால்களை விட நிஜக்கால்களே சிறந்தது என்று காட்ட விரும்பி, அந்த ஊர் மக்களிடம் தனது கால்களை வைத்து, அதிசயங்கள் நிகழ்த்திக் காட்ட விரும்பினான். துரதிஷ்டவசமாக அவன் தடுக்கி விழுந்துவிட்டான்.!

           ஊர் மக்களும் பார்த்தாயா? நிஜக் கால்களை விட கட்டைகால்களே மேலானவை!  என்று சிரித்தனர்.

        இறையன்பு  ஐ.எ.எஸ். அவர்கள் தனது உள்ளொளிப் பயணம் என்ற நூலில் "கக்கதண்டங்கள்" என்ற தலைப்பில் இதனைக் குறிப்பிட்டு கட்டுரை எழுதியுள்ளார்.

    கட்டுரையை படித்தபோது, இந்திய அரசியலிலும் இதுபோன்ற கக்க தண்டங்கள் ஏராளமாய் இருப்பது நினைவுக்கு வந்தது!
   (காலில்லாத முடவர்கள்  நடப்பதற்கு உதவும் கட்டைகளை "கக்கதண்டங்கள்"  என்பார்கள், )

          அனைத்து மக்களுக்கும் சேவை செய்ய எண்ணி  கட்சிகள் தொடங்கியவர்கள்.. தங்களது சுயநலத்தால், தவறுகளால் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டனர்.!

         தங்களது சுயமான  கொள்கைகளை பின்பற்றுவதை,நிறைவேற்றவதை விட்டுவிட்டு, அதிகாரத்திற்காக  பதவி வெறியுடன்   கொள்கை முரண்பாடுகள் உள்ள கட்சிகளுடனும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும் அவல நிலைக்கு ஆளாகி உள்ளனர்.!

        இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இன்று கக்கதண்டங்களாக மாறிவிட்டன  !  இது  அரசியல் கட்சிகள் ஜனநாயகத்துக்கு செய்து வரும் மிகப்பெரிய தீங்காகும்.!

         தங்களை,தங்களது கொள்கைகளை ஏற்று கொண்டுள்ள தொண்டர்களுக்கு அரசியல் கட்சிகள் செய்யும் துரோகமாகும்.!

       பொது மக்கள் அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்து வருவதற்கு இந்த கக்கதண்டக்  கூட்டுகளும், கொள்கையற்ற கட்சிகளின் இதுபோன்ற செயல்களுமே காரணம் எனலாம்!
 
           ஜனநாயகத்தில் அதிக மக்களின் ஆதரவை,வாக்குகளை தனியாக பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ள கட்சிகள்தான் தேர்தலுக்கு தேர்தல், கட்சிகள்  மாறி, வெங்கங்கெட்டு  கக்கதண்டங்களாக இருக்கின்றன என்றால், அறுதி பெரும்பான்மையுள்ள, வாக்கு வங்கி உள்ள சமூகங்களும் கூட இன்று வரை கக்க தண்டங்களாகவே தேர்தலை ச்நதித்து வருகின்றன!

       இந்தியாவிலேயே அதிக அளவு வாக்கு வங்கி உள்ள தாழ்த்தப்பட்ட சமூகம் இன்றுவரை தங்களது வலிமையை சோதிக்காமல் உள்ளதும்,அது பிறகட்சிகளுக்கு கக்கதண்டங்கள் ஆகி புகலிடம் அளிப்பதும்  பிற கட்சிகளிடம் இருந்து  ஒன்றிரண்டு சீட்டுக்கே அவைகள் போராடுவதும்  நடந்துவருகிறது.!     சிறுபான்மை சமூகம் என்று இந்தியாவில் சொல்லப்படும் முஸ்லீம் சமூகத்தின் வாக்குவங்கியும்  பிற கட்சிகளுக்கு கக்க தண்டமாக்கப் பட்டு, பிற கட்சிகளிடம் பிச்சை கேட்கும் நிலையிலேயே  இந்தியாவில் இருந்து வருகின்றது

       ஒடுக்கப்பட்ட,தாழ்த்தப்பட்ட சமூகங்களை, முஸ்லிம்கள் தொப்புள் கோடி உறவுகள் என்று சொல்வதை கேட்டு இருக்கிறேன்.!   தேர்தல் சமயத்தில் இந்த இரண்டு சமூகங்களும் ஒன்று இணைந்து, பிற கட்சிகளிடம் பிச்சை எடுக்க மாட்டோம்,  "கக்கதண்டங்களாக இருக்க மாட்டோம்" என்று  உறுதிகொண்டு செயல்பட்டால்தான்   "தொப்புள் கோடி உறவுகள்" என்ற சொல்லாடலுக்கு பொருள் இருக்கும்!  இவ்விரு சமூகங்களின் உறவு இறுக்கமும், சமூகங்களின் வலிமையும் தெரிய வரும்.! 

         அதுவரையில், நிஜக் கால்கள்  இருந்தும், அந்த கால்களைப்  பயன்படுத்த முன்வாராத கிராமத்தினர்  நிலைதான்  தாழ்த்தப்பட்ட,சிறுபான்மையின சமூகங்களின் நிலையும் என்பதே உண்மையாகும்.!Monday, 3 March 2014

மோடியின் நிர்வாகத்தில் குஜராத் நிலை.!

       மோடி சிறந்த நிர்வாகி என செய்யப்படும் பிரசாரத்தில் உண்மை இல்லை. மோடியின் நிர்வாகத்தில் குஜராத் வளர்ச்சி அடையவில்லை.மோடியால் குஜராத்தின் இயற்கை வளம்,விவசாயம்,குஜராத்தின் எதிர்காலம் மிக மோசமான வீழ்ச்சியையே அடைந்துள்ளன.

        கடந்த தேர்தலில் ஒரு கோடி பேருக்கு வேலை தருவதாக காங்கிரஸ் மட்டுமல்லாது.பி.ஜே.பி.யும் வாக்குறுதி அளித்தது. ஆனால், கூறியவாறு வேலைகள்  வழங்கவில்லை.! வேலை வாய்ப்புகளையும் புதிதாக உருவாக்கவில்லை.! 

     மோடி ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பு பெருகும் என்பது கற்பனையாகும். மோடி ஆளும் குஜராத்தில் கடந்த 5 வருடத்தில் ஒரு சதவீதம் கூட வேலைவாய்ப்பு பெருகவில்லை.!  பொதுத் துறையிலும் அரசுத் துறையிலும் 9,70,000 என்ற வேலை வாய்ப்பு எண்ணிக்கை  தற்போது 7,94,000 என மோடி அரசு குறைத்துள்ளது.! . மோடியின் ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 16 % உயர்ந்துள்ளது.

       மோடியின் ஆட்சியில் அரசு பெருந்துக்களின் எண்ணிக்கை 10,048 -யில் இருந்து 6327 ஆக  குறைந்துள்ளதால் ஆயிரக் கணக்கான பேர்களின் வேலை வாய்ப்பு மோடியால்  பறிக்கப்பட்டு உள்ளது.!

          மின்சாரத் துறை,கல்வித் துறைகளில் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்தியாவிலேயே காண்ட்டி ராக்டு  அடிப்படையில் காவல்துறைக்கு ஆளெடுக்கும் மாநிலம் குஜரத்தான்.!
போலிசாருக்கு குறைந்த பட்ச கூலிகூட வழங்கபடாமல், ரூ. 2000 மத ஊதியம் வழங்கும் அரசு மோடியின் அரசுதான்.!

    உயர்  நீதிமன்றம்  போலிசாருக்கு குறைந்த பட்ச கூலி அடிப்படையில் ரூ.4500 வழங்க உத்திரவிட்டும், "ரூ. 2000 வழங்குவது தனது கொள்கை" என்று சொன்னவர்  மோடி.!  விலைவாசி இருக்கும் நிலையில் இந்த ஊதியத்தில் வாழ்க்கை நடத்த முடியுமா? மோடி பகதர்கள் சொல்லவேண்டும்!

       குஜராத்தின் ராஜ்காட்,ஜுனொகாட்,பவ்நகர்,போர்பந்தர்,ஜம்நகர்,சுரேந்திர நகா போன்ற 10 மாவட்டங்களில் 3918 கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் உள்ளது.! சவ்ராஷ்டிரா, பகுதியில் 4000 கிராமங்களிலும்,100 நகரங்களிலும், கஜ்ட்  மற்றும் வடக்கு குஜராத்திலும் தன்நீர்பஞ்சம் என்று மோடியின் அமைச்சர் அனந்திபென்  புள்ளிவிவரம் தருகிறார்.

         குடிநீர் பைப்பு,குழாய் போடசாதாரண மக்களுக்கு நிபந்தனை விதிக்கும்,10,000 அபராதம் விதிக்கும்  மோடி அரசு,பன்னாட்டு நிறுவனங்களுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.!
  
        மோடியின் குஜராத்தில்  சுகாதாரம் இந்தியாவிலேஎ படுமோசமாக உள்ளது. சுகாதாரத்துக்கு பட்ஜெட்டில் ஒருசதவீதம் மோடி ஒதுக்குகிறார். குஜராத்தில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு 70% குழந்தைகள் உள்ளன. குஜராத்தில் 12500 கிராமங்களில் வசிக்கும் 98% தலித் மக்கள் தனி தம்ளரில்தான் டீ குடிகிறார்கள்.!

          97% தலித் மக்கள் கோவிலுக்கு போக,பொது விழாவில் கலந்துகொள்ள அனுமதி இல்லை.!  தலித் மாணவர்களுக்கு பள்ளிகளிலும் சொல்லொண்ணா  கொடுமைகள்  நடக்கும் மாநிலம் குஜராத்.!  மனுதர்ம மனிதர் மோடி இந்தியாவின்  பிரதமர் ஆனால் என்ன நடக்கும்? என்பதை  எண்ணிப் பாருங்கள்.!

   வறுமை ஒழிப்பில்  ஓடிஸா 20.6%  குஜராத் 8.6% தான்.  குஜராத்தில் 65% திறந்தவெளி கழிப்பிடம்தான்.  மின் மிகை மாநிலம் என தம்பட்டம் அடித்து கொள்ளும் குஜராத்தில் 11,00000 வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை.!
 63,00000 வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு இல்லை. கல்வி நிலையில் சராசரியாக  8-ம்  வகுப்புதான் படிகிறார்கள்.!

     சராசரி ஊதியத்தில் 14-வது இடம்,கல்விநிலையில் 15-வது இடம்,சுகாதாரத்திலே 11-வது இடம், வகிக்கிறது மோடியின் நிர்வாகத்தில் குஜராத்.மாநிலம்,!

     இந்த லட்சணத்தில் இருக்கும் குஜராதைதான் வளர்ச்சி அடைந்த மாநிலம் என்றும் இந்தியாவை இதுபோன்ற வளர்ச்சி அடையச்  செய்யும் "அவதார் புருஷன்"  எனவும் மோடியை பன்னாட்டு கம்பனி முதலாளிகளும் இந்துத்துவ ஊடகங்களும் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றன. பொய்யையே  உண்மை என சித்தரிக்க  வைத்து  மக்களை ஏமாற்ற முனைந்து வருகின்றன.!

        மோடிஎன்றால் நமது நினைவுக்கு வருவது கலவர நாயகன், ரத்தகரை,கொலைகள், பாலியல் வன்புணர்வு,குழந்தையை வெட்டி எடுப்பது,தீக்கிறை ஆக்குவது, போன்றவைகள்தான். ஏனெனில்,அவைகள்தான் மோடியின் உண்மைகளும்,முகமும் ஆக உள்ளன.!


Wednesday, 26 February 2014

மோடி ஆட்சிக்கு வந்தால்...

       சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற ஒருமுறை எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என பி.ஜே.பி-யின் தலைவர் ராஜ்நாத் சிங் கேட்கிறார். அவர் கேட்பதுபோல வரும் நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம்கள்,இதர சிறுபான்மையினர் வாக்களித்து மோடி பிரதமர் ஆனால் என்ன நடக்கும்?

          இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கை கேள்விக்குறியாக ஆகிவிடும்! இந்துத்துவவாதிகளால் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் திருத்தப்படும் அபாயம் ஏற்படும்.!

      இந்திய அரசியல் சட்டத்திற்கு மட்டுமா, ஆபத்து?  சிறுபான்மை சமூகங்கள் இந்தியாவில் வாழ்வதற்கே  இயலாத நிலை ஏற்படும்.!  சிறுபான்மை சமூகங்களின்  வாழ்வாதாரங்கள் சட்டப்படியே பறிக்கும் செயலில்  பாசிச இந்துக்கள் முயல்வார்கள்.!

          மோடி ஆட்சிக்கு வந்தால்..அரசின் அனைத்து துறைகளும் காவி மயமாக்கப்படும். தங்கள் விருப்பம்போல வரலாற்றை திருத்துவார்கள்! கோட்சேவை தியாகியாகவும் காந்தியை துரோகியாகவும் கட்டுவார்கள்!

        இந்து மத ஆராய்ச்சி என்ற பெயரில் மக்களின் வரிப்பணம்   ஆர்.எஸ்.எஸ். கைகாட்டும் அமைப்புகளுக்கும் ஆட்களுக்கும் கோடிகணக்கில் ஒதுக்கப்படும்.! அதைப்பற்றி  எவனும் கேள்வி கேட்க முடியாது.! அப்படியே கேட்டுவிட்டு இந்திய திருநாட்டில் உயிருடன் உலவ முடியாது.!

     கல்வி என்ற பெயரில் பொய்களும்,புராணங்களும் உண்மை  என்று நம்ப வைக்க, நச்சு கருதுக்களை விதைப்பார்கள்!.சிறுபான்மையினரைப் பற்றி இழித்தும் பழித்தும் பொய்யுரைகளை  பரப்புவார்கள்! கல்வி என்ற பெயரில் மாணவர்கள், இளைஞர்களிடம் அதனை திணிக்கும் செயல்களைச்  செய்வார்கள்.!

        " இந்துவை ராணுவமாக்கு, இராணுவத்தை இந்துமயமாக்கு!"  என்று ஏற்கனவே  கொக்கரிக்கும் இவர்கள்,  உண்மையிலேயே இராணுவத்தை காவிமயமாக்கி விடுவார்கள்.!   சிறுபான்மையின மக்கள், உழைக்கும் மக்கள் மீது  இந்துவாக்கப்பட்ட  இராணுவத்தை ஏவுவார்கள்.! மோடி ஆட்சிக்கு வந்தால்.. உரிமைகள் கேட்டு  எந்த அமைப்புகளும்  போராட முடியாது.! நியாயம் கேட்க்க முடியாது. !மனித உரிமைகள் மறுக்கப்படும்.

      சிறுபான்மையினர்,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை  மத்திய அரசு வழங்கிவரும் இட ஒதுக்கீடு,கல்வி உதவித் தொகை, சலுகைகள் அனைத்தும் கிடைக்காது!

   ஊழலை ஒலிப்பதாக சொல்லும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் அரசாங்கமே ஊழலாக மாற்றப்படும்! லோக்பால் சட்டம்  வரவே வராது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு எட்டாக்கனி ஆகும்.

ராஜேந்திர சச்சார் கமிட்டியின்  பரிந்துரைகள்  கிடப்பில் போடப்படும். மதக் கலவர தடுப்பு மசோதாவை எதிர்க்கும் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால்," மதமாற்ற தடை சட்டம்"  நாடுமுழுவதும் கொண்டுவரப்படும்.!  சிறுபான்மையின மக்களை  இந்த சட்டத்தின் மூலமே  குற்றவாளிகள் ஆக்கி   சிறைகளில் போட்டு சித்திரவதை செய்ய முடியும்.! 

      எதிர்கட்சியாக இவர்கள் உள்ள நிலையிலேயே  இவர்களால் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட கலவரங்கள், படுகொலைகள் செய்யப்பட்ட சிறுபான்மையினர்,  கொள்ளையிடப்பட்ட  சொத்துக்கள், நாடெங்கும் நடத்திய வன்முறைகள்  ஏராளமாகும்.!

        பாபர் மசூதி இடிப்பு போன்ற தேசிய அவமானங்களைச்   செய்த  இவர்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவை ஆளும் நிலை ஏற்பட்டால்...    "பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்"  என்பது  உண்மையாகும்.!


ராஜ்நாத் சிங்கின் மன்னிப்பு..

      முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எப்போதாவது, எங்கேயாவது எங்கள் சார்பில் ஏதாவது தவறு நிகழ்ந்திருந்தால் அதற்கு தலை வணங்கி மன்னிப்பு கேட்கத் தயாராக உள்ளோம்; இந்தத் தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள்’  பாரதிய ஜனதா, முஸ்லிம்களுக்கு விரோதமான கட்சி அல்ல. எங்கள் கட்சிக்கு எதிரான பிரசாரத்தை நம்பிப் போகாதீர்கள். இந்த ஒருமுறை எங்களுக்கு நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு ஓட்டு போடுங்கள்.    என்று பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்  வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 

 
          எப்போதாவது எங்கேயாவது இவர்கள்  சார்பில் முஸ்லிம் சமுதாயத்துக்கு  இவர்களால் நன்மை விளைந்திருக்கிறதா? என்று கேட்கத் தோன்றுகிறது.!
 
        நரேந்திரமோடி குஜராத்தில் ஒரு முஸ்லிமுக்கு சட்டமன்ற சீட் கொடுத்து வெற்றிபெற செய்துள்ளாரா? குஜராத்தில் சிறப்பான்மையினருக்கு எதிரான 4000 வன்முறை வழக்குகளை மோடியின் அரசு முடித்துகொண்டது  ராஜ்நாத் சிங்குக்கு தெரியாதா? முஸ்லிம்களுக்கு இவர்களது அவதார புருஷன்," நமோ" செய்த நன்மைகள் என்னவென்று  கூற முடியுமா?
 
       பெஸ்ட் பேக்கரி வழக்கில் சாட்சியங்களுக்கு நெருக்கடி கொடுத்து 14 குற்றவாளிகளை விடுவித்தது  முஸ்லிம்களுக்கு செய்த நன்மையா? குஜராத் அரசு மீது, உச்ச நீதிமன்ற நீதிபதியே, நம்பிக்கை இல்லை என்று சொல்லி, மறுவிசாரணைக்கு ஆணை இட்டதே!   அதுதானா, இவர்கள் கூறும் நாட்டு நலன்?  என்று கேட்கத் தோன்றுகிறது.!
 
        இனப்படுகொலைக்கு ஆதரவானவர்களை அரசு வழக்கறிஞர்கள் ஆக்கி, விசாரணையை இழுத்தடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு அநீதி இழைத்தவர்  நரேந்திர மோடி.! 
 
       அரசு  நடத்திய   முஸ்லிம்களின் நிவாரண முகாம்களை மூடி, "குழந்தை உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்குவதை அரசு விரும்பவில்லை" என்று  முஸ்லிம்களை கேவலப்படுத்தியவர்  எப்படி சிறுபான்மை மக்களின் நலனை வரும் காலத்தில் பேணி காப்பார்? 
 
        இன்றுவரை, குஜராத்தில் முஸ்லிம்கள் அடிப்படை  வசதிகள் அற்றவர்களாக ஆக்கப்பட்டு உள்ளனர்.! அவர்களது வாழ்விடங்களில் பள்ளிகள், வங்கிகள், கைபேசிகள் போன்ற பல சமூக வசதிகள் கூட வழங்கபடாமல் மறுக்கப்பட்டு வருவதை அறியாதவரா? இந்த ராஜ்நாத் சிங் !
 
       சிறுபான்மையினருக்கு மத்திய  அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையைக்கூட பெற்று  வழங்காமல்,  அதனை திருப்பி அனுப்பிய   " காருண்ய மூர்த்தி" தான்   மோடி என்பதும்,  அதுகுறித்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் தற்போது நடந்துவருவதும்   ராஜ்நாத் சிங்குக்கு தெரியாதா?  
 
         அப்பாவி மக்களைக் கொன்றதை நியாப்படுத்தும் வக்கிர குணம் கொண்ட பி.ஜே.பி.தலைவர்கள்,  இப்போது முஸ்லிம்களின் வாக்குகளைப்  பெறுவதற்காக,  நாட்டின் நலனை  குறித்து பேசுவதும்,முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதாக பேசுவதும்   வேடிக்கையிலும் வேடிக்கையாகும்.!
 
       கோடிகோடியாக கார்பரேட்டுகளுக்கு கொடுத்து,அவர்களை காப்பாற்றும் மோடியின் குஜராத்தில், இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை ஊட்டச் சத்து குறைபாடு இருக்கிறது.  இதற்கு காரணம் குஜராத் தாய்மார்கள் உணவுக் கட்டுப்பாட்டில் இருகிறார்கள் என்று மனசாட்சியே இன்றி மோடி பேசுவதை என்ன வென்பது?  
 
        அதிகார போதை, ஆணவம், மதத்திமிர், வக்கிரகுணம், ஆகியவற்றின் உருவமான  மோடி, பன்முக சமூகங்கள் வாழும்  இந்தியா போன்ற நாட்டில் வாழத் தகுதியற்றவர. அவர் மனித வடிவில் உள்ள மிருகம்.   அவர் இந்தியாவின் பிரதமராக வந்தால் இந்தியாவில் சிறுபான்மையினர் நிலை கேள்விக்குறியாகும்!   
 
       மோடியை  நாட்டின் நலம் காக்க பி.ஜே.பி. முன்னிறுத்தி உள்ளது. மோடி  குஜராத்தின்  நலம் காப்பற்றியவரா?  ஒருமாநிலத்தின் நலனையே காப்பாற்ற முடியாத மோடி, எப்படி நாட்டின் நலத்தைக் காப்பாற்றுவார்?
 Tuesday, 25 February 2014

மோடியின் மோசடிகளும் முறைகேடுகளும்..

       மோடியின் மோசடிகளையும்  முறைகேடுகளையும்  மூடி மறைத்து அவைகளையே   இன்று   சாதனைகளாக  கார்பரேட் கம்பனிகள், ஊடகங்கள் மக்களிடம்  காட்டுகின்றன.. அப்பாவி விவசாயிகள், குஜராத் பழங்குடியினர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, கார்பரேட் முதலாளிகளை வாழ்விக்க மோடி செய்த முறைகேடுகள் ஏராளமாகும்.!

       மோடியின் கார்பரேட் கம்பனிகள் மீதான தாராள குணத்தையும், மோடியால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் சிலவற்றையும் பார்க்கலாம்.


           குஜராத் உஜ்ரா விகாஸ் நிகமுடன் கார்பரேட்குழுமத்தின் அதானி பவர் லிட்  உடன்படிக்கை செய்திருந்தது.  உடன்படிக்கைக்கு எதிராக நடந்து கொண்ட அதானி குழுமத்திற்கு ரூ  240.08 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ரூ  80.08  கொடிகளை மட்டும் அதானிக் குழுமத்திடம் பெற்றுக்கொண்டு, ரூ 160 கோடியை செலுத்த அக்கம்பனிக்கு விலக்கு  அளிக்கப்பட்டது.

      இதே.. அதானி நிறுவனதுக்கு சதுர மீட்டர் ரூ 1500 சந்தை மதிப்புள்ள குஜராத்தின் கடற்கரை பகுதி விலை நிலங்கள் சதுர மீட்டர் ரூ 1 முதல் 32 வரை சலுகை விலையில்  தொழில்  வளர்ச்சி மற்றும் துறைமுக அபிவிருத்திக்கு என்று மோடி அரசால் வழங்கப்பட்டன.மோடி அரசால் சலுகைவிலையில் பெற்ற நிலத்தின் ஒருபகுதியை மற்ற கார்பரேட் நிறுவனங்களுக்கு விதிமுறைகளை மீறி அதானி நிறுவனம் குத்தகைக்கு விட்டது. மோடிதான் கார்பரெடுக்கள்  நலம் காப்பவர் ஆயிற்றே! நடவடிக்கை எடுக்கவில்லை.!

      எஸ்ஸார் குழுமம் குஜராத்தின் ஹஜிரா பகுதியில் ஆக்கிரமித்து இருந்த 7'24'687 சதுர மீட்டர் நிலத்தை அந்த நிறுவனத்துக்கே சலுகைவிலையில் வழங்கினார். அரசுக்கு 238.50 கோடி இழப்பு ஏற்பட்டது. !

      மோடிக்கு லாபம் !  குஜராத் மக்களுக்கும் மாநில அரசுக்கும் நஷ்டம். இதில  வேடிக்கை என்னவென்றால் ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக  மோடி ஊழலை எதிர்கிராரார்ம். இந்தியாவை வளர்ச்சி அடைய  வந்துதித்த "நமோ"வாம்!  .ஊடகங்கள் கார்பரெட்டுகலின் எலும்பை கடித்துக்கொண்டு  நம்மை மூளை சலவை செய்கின்றன!


          அணுஉலை அமைக்க என்று லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்துக்கு சலுகை  விலையில் நிலம் வழங்கி  அரசுக்கு ரூ  128.71 கோடிகள் ஏற்படுத்தினார்.அதுமட்டும் இன்றி, இந்த நிறுவனத்துக்கு பரோடா மாவட்டத்தில் நிலம் ஒதுக்கி, 79.77 கோடிகள் லாபம் அடைய  மோடி உடந்தையாக  செயல்பட்டார்.

     குஜராத்தின், மஹுவா பகுதியில் விவசாய நிலங்களை  அரசு புறம்போக்கு நிலங்கள் என தவறாக  காட்டி, 'நிர்மா சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு  சிமெண்ட் ஆலை கட்ட'  மோடி அரசு நிலம் ஒதுக்கியது.  15000 மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் இச்செயலுக்கும்  மோடியே  காரணம்.! 

       டாட்டா குழுமத்தின் நானோ திட்டத்துக்கு, "நமோ-மோடி"  சந்தை மதிப்பு சதுர மேட்டருக்கு ரூ 10000 உள்ள நிலத்தை, ரூ.900 என்ற அளவில் ஒதுக்கியது.அவ்வாறு ஒதுக்கிய நிலம், ஒன்று இரண்டு ஏக்கர்  இல்லை!  1100 ஏக்கர் நிலத்தை மோடி ஒதுக்கினார். ஊழலின் அளவும், மோடியால் குஜராத் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு   எத்தனை  கோடிகள் இருக்கும்? என்பதை   நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்!

    இந்த  இலட்சணத்தில்  டாட்டா குழுமத்திற்கு 0.01 வட்டியில் மிகபெரிய அளவில் கடனும் வழங்கப்பட்டு  உள்ளது.  டாட்டா குழுமம் தயரிக்கும் ஒவ்வொரு காருக்கும் அரசாங்கம் தரும் மானியம் ரூ.60'000 என்று பொருளாதார புள்ளிவிவரம் கூறுகிறது.!

        ஊழல்,முறைகேடுகள், பெருமுதலாளிகளின் மேன்மை ஆகியவற்றை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படும் மோடியா இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல போகிறார்?

          மோடி புகழ்பாடும்  ஊடக மேதாவிகள், இந்துத்துவ அறிவு ஜீவிகள்   குஜராத் மக்களின் நிலை குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அடுத்த பதிவு .Monday, 24 February 2014

குஜராத்தின் உண்மை நிலை.! மோடியின் பொய்களுக்கு அளவே இல்லை. மோடியின் குஜராத் வளர்ச்சி பற்றி ஊடகங்கள்  இந்துத்துவ கண்ணாடி போட்டுகொண்டு உண்மையை மறைத்து பொய்களை விதைத்து வருகின்றன. காரணம் அவைகள் இந்துத்துவ பாசிட்டுகளின் ஏவல் நாய்களாக இருக்கின்றன என்பதற்கு  அருந்ததி ராய்  அவர்களது கேள்வியே சான்றாக உள்ளதை அறியலாம்.!

மோடியின் கோயபல்ஸ் பொய்களுக்கு அளவே இல்லை. அவைகள் அடுத்தும்  தொடரும்.Saturday, 22 February 2014

மோடியின் கோயபல்ஸ் பொய்கள்.!

        பொய்யையே திரும்பத் திரும்ப சொல்லி அதனை உண்மை என்று நம்ப வைக்கும் தந்திரத்தை செய்தவன் இட்லரின் மந்திரி கோயபலஸ் என்பார்கள்! 
அவனை போலவே, மோடியின் நிர்வாகத்தில் குஜராத் வளர்ச்சி பெற்றுள்ளது.மோடியால் குஜராத்தைப் போல இந்தியா வளர்ச்சி அடையும் என்ற பொய் பிரச்சாரம் தொடர்ந்து நடந்து வருகிறது!

              உண்மையில் குஜராத் வளர்ச்சி அடைந்து  உள்ளதா? விவசாயிகள்,தொழிலாளர்கள், சிறுபான்மையினர்,பழங்குடியினர், பெண்கள் வாழ்க்கை நிலை மோடியின் ஆட்சியில் முன்னேற்றம் கண்டுள்ளதா? என்று ஆய்வு செய்தால் அதிர்ச்சிதரும் வகையில் குஜராத்தில் அனைத்து தரப்பு மக்களும்  ஏழ்மையில்,வறுமையில் இருந்துவருவதும்  கல்வி,வேலைவாய்ப்பு,பொருளாதார முன்னேற்றம், தொழிலாளர்கள் நலம் மோடியால் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது பல்வேறு புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது. கல்வி,சுகாதாரம்,வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம்,வாழ்க்கைத்தரம் அனைத்திலும் உண்மையை மறைத்து கூறப்பட்டு வருகிறது. 

       பொய்யாக  மோடியைப் பற்றிய மாயையை மோடியால் பயனடைந்த கார்பரேட் கம்பனி முதலாளிகள்  உருவாக்குவதில் முனைப்புடன் செயல் பட்டுவருவதை அறிய முடிகிறது.  கார்பரேட் கம்பனிகள், மோடியை மிக சிறந்த நிர்வாகியாக,குஜராத்தை முன்னேற்றி,தொழில் வளர்ச்சி செய்தவராக ஊடகங்கள் மூலம் காட்டி வருகின்றன.  மோடியைப் பற்றிய மாய தோற்றத்தை, பொய்களை  ஊடகங்கள் மூலம் காட்டுவதை ஊக்குவித்து வருகின்றன.! 

            காரணம், மோடியால் பயன் அடைந்தவர்கள் கார்பரேட் கம்பனிகளும் பெரும் முதலாளிகளும்தான்.! மோடியை பூதாகரமாக காட்டி, அவரை ஆட்சிக்கு கொண்டுவந்து விட்டால், இந்தியா முழுமைக்கும் குஜராத்தைப் போல,  தங்களது கம்பனிகள் பயனடையும்என்று அவைகள் கோயபல்ஸ் பிரசாரத்தை  செய்துவருகின்றன.!
 
.        மோடியின் சிறந்த நிர்வாகி,மிகச் சிறந்த அரசியல்வாதி,நேர்மையாளர், அவரே இந்தியாவை ஆளத்  தகுந்தவர்!   என்று  பிரசாரம் செய்ய,  ஆப்கோ வேர்ல்ட் வைடு என்ற நிறுவனம் பணி அமர்த்தப்பட்டு  உள்ளது.

        இட்லர் தனது நாசிசத்தை நியாயபடுத்த கோயபல்ஸ் மூலம் செய்த மூளை சலவையை, இன்று மோடிக்காக ஆப்கோ வேர்ல்ட் வைடு( APCO Wide Wide) என்ற நிறுவனம் உலகம் முழுவதும் செய்து வருகிறது. இதற்காக இந்த நிறுவனத்திற்கு மாதம் 25,000 அமெரிக்க டாலர்கள் கொடுக்கப்படுகிறது. 

     இந்த நிறுவனம் உலக சுகாதார அமைப்புக்கு எதிராக புகையிலைக்கு ஆதரவாக உலகம் முழுவதும் பிரசாரம் செய்து வெற்றிகண்டது. .இந்நிறுவனத்தின் ஆலோசனைப்படியே மோடியின் உடைகள், தோற்றம், ஒவ்வொரு இடத்திலும் என்ன பேசவேண்டும் என்பவைகள் தீர்மானிக்கபடுகின்றன!  மோடியும் பேசி வருகிறார்.

        ஆப்கோ வேர்ல்ட் வைடு  நிறுவனம்  நாடாளுமன்ற தேர்தல் வரை ஊடகங்கள் மூலம்  மோடியையும் அவரது ஆட்சியில்  குஜராத் வளர்ச்சி பெற்றிருப்பதாகவும் அதுபோலவே, மோடி பிரதமர் ஆனால்   இந்தியாவும் வளர்ச்சி பெரும் என்று   பொய்யாக பிரசாரம் செய்யும். செய்துவருகிறது.  

        மோடியின் பொய்யான பிரசாரத்தையும், மோடிக்கு ஆதரவாக களம் இறக்கப்பட்டு உள்ள ஆப்கோ வேர்ல்ட் வைடு நிறுவனத்தின் கோயபல்ஸ் பொய்களையும்   பார்க்கலாம்.

      நிலமில்லதவர்களுக்கு வழங்கவேண்டிய நிலங்களை கார்பரேட் கம்பனிகளுக்கு அடிமாட்டு விலைக்கு மோடி அரசு விற்பனை செய்துள்ளது. காடுகளும்  இதற்கு விதிவிலக்கு இல்லை.!

       பழங்குடியினர் பட்ட கோரிய 1.20 லட்சம் மனுக்கள் மோடி அரசால் எந்தவித விசாரணையும் இன்றி,நிராகரிக்கப் பட்டுள்ளன. பழங்குடியினர் பட்ட கோரிய 1.20 லட்சம் மனுக்கள் மீது விசாரணை நடத்தகோரி குஜராத் உயர் நீதிமன்றதில் போடப்பட்ட வழக்கினால்,குஜராத் உயர்நீதிமன்றம், தற்போது  பொதுமக்கள் பட்ட கோரிய அனைத்து மனுக்களையும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு இட்டுள்ளது

     . ஏழைகள் நிலமற்றவர்கள் நலனில் மோடிக்கு  அக்கறை இல்லை என்பதற்கும்   குஜராத் வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்,பொய் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

      சிறப்பு முதலீட்டு மண்டலம் அமைவதற்காக குஜராத் மாநிலம், பகுச்சராஜி பகுதியில் 55000 ஏக்கர் நிலத்தை மோடி அரசு பலவந்தமாக, மலிவான விலையில்  கார்பரேட் கம்பனிகளுக்கு பெற்றுகொடுக்க முனைந்தது. மோடியின் இச்செயலை எதிர்த்து விவசாயிகள் இயக்கம் குஜராத்தில் தற்போது  கடும்போராட்டங்களை  நடத்தி  வருகிறது. மோடி அரசு மாருதி சுசுகி நிறுவனத்துக்கு 750 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது.

விவசாயிகள் நலனில் மோடிக்கு அக்கறை இல்லை.ஆனால் கார்பரேட்டு,கம்பனிகள்,அதன் முதலாளிகள் மீதுதான் அக்கறை கொண்டுள்ளார்  என்பதற்கும்  குஜராத் வளர்ச்சி பற்றிமோடி  கூறும் பொய்களுக்கும்  இதுவும் ஒரு உதாரணமாகும்.

   2011-2012-ன் நிதியாண்டு CAG அறிக்கை ரூ. 1275 கோடிகளை கார்பரேட் கம்பனிகளுக்கு நரேந்திரமோடியின் குஜராத் அரசு வாரி வழங்கி உள்ளதாக தெரிவிக்கிறது.!  மோடியின் தாராள குணத்தால்,கார்பரேட்டுகள் மீதான பாசத்தால்   அதானி,எஸ்ஸார் ரிலையன்ஸ் மற்றும் லார்சன் அண்ட் டுப்ரோ போன்ற கம்பனிகளே  பயனடைந்து உள்ளன.!

      ஏழைகள், விவசாயிகள் நலனில் மோடிக்கு அக்கறை இல்லை என்பதற்கும் மோடியின் பார்வை கார்பரேட்டுகள் மீதும்,கார்பரேட்டுகளின் பார்வை மோடிமீது  உள்ளதற்கும்,   மோடியால் குஜராத் வளர்ந்துள்ளதாக கார்பரேட்டுகள் ,ஊடகங்கள் மூலம்  பரப்பும் பொய்களுக்கும்  இதுவும் ஒரு உதாரணமாகும்.!
        (மோடியின் பொய்யுரைகள்  அடுத்த பதிவிலும் தொடரும்)
Thursday, 20 February 2014

தமிழர்களுக்கு ராஜீவ் இழைத்த கொடுமைகள் !

        "இறந்தவர்களுக்கு நீதி வேண்டும்" என  தற்போது பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து காங்கிரசார். கேட்கிறார்கள்.காங்கிரஸார் கடந்த காலங்களில் தமிழர்களுக்கு நீதி வழங்கி இருகிறார்களா? என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்!  

        (1) நெல்லியடி முகாமை 1987 ஆடி ஐந்தில், கேப்டன் மில்லர் தகர்த்து எறிந்து, நூற்றுக் கணக்கான சிங்கள இராணுவத்தினரை கொன்று குவித்த பின்னர்,
         தமிழ் ஈழப் பகுதிகள் அனைத்திலும் அமைந்திருந்த சிங்கள முகாம்களில் இருந்த ராணுவத்தினர் நடு நடுங்கினர். படிப்படியாக புலிகள் ஒவ்வொரு முகாமையும் தகர்த்து அழிக்கவிருந்த வேளையில்தான் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, ராஜீவின் காலில் விழுந்து ஒப்பந்தம் செய்து இலங்கைக்கு இந்தியப் படைகளை வரவழைத்தார். இல்லையேல், 1990 --க்கு முன்னரே தமிழ் ஈழம் கிடைத்திருக்கும்!  தமிழ் ஈழம் அமைவதற்கு தடையாக இருந்தவர்,தமிழினத்திற்கு  விரோதியாக செயல்பட்டவர் ராஜிவ்காந்தி!

      (2) தியாக தீபம், திலீபன் இந்தியச் செயல்களைக் கண்டித்து உண்ணா நோன்பு இருந்தபோது, திலீபனை அநியாயமாக சாகவிட்ட சண்டாளர்தான் ராஜீவ் காந்தி.

      (3) குமரப்பா, புலேந்திரன் உட்பட 13 புலித் தளபதிகளை யுத்த நிறுத்தக் காலத்தில் சிங்கள ராணுவத்திடம் ராஜிவின் படைகள் ஒப்படைக்க இருந்ததால்தான் அவர்கள் சயனைட் உட்கொண்டு மடிந்தனர். 13 புலித்தலைவர்கள் தற்கொலைக்கு காரணமானவர் ராஜீவ்காந்தி.!

      (4) ராஜிவின் இந்திய அமைதிப் படையால் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 8000.பேர்கள்.
அதற்கு  பொறுப்பு ஏற்க வேண்டிய  இந்திய பிரதமர்   ராஜீவ் காந்தி. காங்கிரஸ்காரர்கள் நீதி வழங்கினார்களா?


     (5) ராஜிவின் கொலைவெறி, காமப் படையால் ஈழத்தில் மானபங்கப் படுத்தப் பட்ட ஈழத் தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கை, சுமார் 2000கு மேல்.
அதற்கு காரணம் ராஜீவ். காங்கிரசின் தமிழர்களுக்கான நீதி இதுதானா? 


     (6) இந்திய அமைதிப்படையால் கொள்ளை அடிக்கப் பட்ட ஈழத் தமிழர்களின் பணம்- சொத்து மதிப்பு சுமார் 1500கோடி ரூபாவுக்கு மேல். என்ன நிவாரணம் வழங்கப்பட்டது.?காங்கிரசார் பதில் சொல்வார்களா?

    (7) இந்திய அமைதிப் படையால் அப்போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்  (ஏதிலிகளாக)  அகதிகளாக ஆன தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 20,000 பேருக்கு மேல். தமிழர்களை அனாதைகளாக ஆக்கியவர் ராஜீவ் காந்தி.!

    (8) இந்திய அமைதிப் படையால் அவர்களின் துப்பாக்கி குண்டுகளாலும் எறிகணைகளாலும், கை கால்களை, கண்களை, செவித்திறனை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3000கு மேல். அதற்கு காரணமாக இருந்தவர் ராஜீவ்.! 

   
   தமிழீழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கும், கற்பழிக்கப்பட்ட எங்கள் தமிழ் சகோதரிகளுக்கும்  காங்கிரஸ் நீதி வழங்கவில்லை.!இத்தனை கொடூரங்களுக்கும், படுகொலைகளுக்கும் செய்யக் காரணமான ராஜீவுக்கு நீதி  கேட்கிறார்கள். ! 

      இலங்கையில் இன்னும் தொடரும் அவலங்களுக்கு இந்தியா காரணம். இன்றும் தமிழர்கள் சிங்களப்படையால்  கொல்லபடுகின்றனர். சொல்லொண்ணா துன்பத்திற்கு ஆளாகிவருகின்றனர்.!

      காங்கிரசார் தமிழர்களுக்கு  நீதிவழங்கவில்லை. காரணமாக இருந்து அநீதி இழைத்த  ராஜீவுக்கு நீதிகேட்பது   எவ்வளவு பெரிய கொடுமை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.! 
 

Wednesday, 12 February 2014

தி.மு.க-வின் நாடகங்கள்..!

      திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்த நாட்களில் அக்கட்சி  சினிமா, நாடகம் போன்ற கலைத்துறையை தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டு வளர்ந்தது.

       மற்ற கட்சிகளை விட அன்றுமுதல் இன்றுவரை கலைத்துறையினர் அதிகம் உள்ளக் கட்சியும் தி.மு.க-தான்.   அன்று எம்.ஜி.ஆர்,,எஸ்.எஸ்.ஆர். எம்.ஆர்.ராதா  என்று ஒரு பட்டாளம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்கள்.


             இன்று குஸ்பு, சந்திரசேகர், நெப்போலியன்,ரித்திஸ் என்று பலர்  இருகிறார்கள். அவ்வளவு ஏன்?  தி.மு.க-வின் தலைவர் கலைஞரே  திரைத் துறையை சேர்ந்தவர்தான்.!

         அதனால்தானோ, என்னவோ,அன்றுமுதல் இன்றுவரை அரசியலில் அவர் போடும் வேடங்களும் பேசும் வசனங்களும் நேரத்துக்கு தகுந்தபடியும் அவர் ஏற்றுகொண்ட  பாத்திரத்திற்கு தக்கபடியும் இருப்பதை கூர்ந்து நோக்கும் எவரும் அறிய இயலும்.

         ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டபோது, காங்கிரசின் உறவில் திளைத்து இருந்த கலைஞர், அப்போதுஅவர்களுக்காக அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை.!


            நாற்பது எம்பிக்கள் இவரது கட்டுபாட்டில் இருந்தும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று மத்திய அரசை மிரட்டவில்லை.போரை நிறுத்த முயற்சிகள் எடுக்கவில்லை. மூன்றுமணிநேரம் அன்ன சமாதியில் உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்தினார்.!

         தனது மகளும் குடும்பமும் 2-ஜி ஊழலில் சிக்கிக்கொண்டபோது  காங்கிரசை  மிரட்டியும் பயனில்லாமல் போனதால், ஆட்சியில் இருந்து வாபஸ் பெற்றார்.இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்து செத்துப்போன டெசோ அமைப்பை தொடங்கினார்.!

          தனது மகள் கனிமொழியை ராஜ்ஜிய சபை உறுப்பினர் ஆக்க அதே காங்கிரசின் தயவு தேவைப்பட்டதால்,மீண்டும் நேசக்கரம் நீட்டினார்.
இப்பொது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழர் நலம்,இலங்கை பிரசனை,மீனவர்கள் படுகொலை என்று ஒருபுறம் நாடகம் நடத்துகிறது.

         மறுபுறம், காங்கிரசோடு கூட்டணி வைக்க சோனியாவை சந்திக்க  தனது மகள் கனிமொழியை அனுப்புகிறார். ராகுலை சந்திக்க தோல்.திருமாவை அனுப்புகிறார்.!

         பார்த்தாயா தி.மு.க-வின் பலத்தை என்று காட்ட திருச்சியில் பலகோடிகளை  கொட்டி,மாநாடு நடத்துகிறார்.

           அன்று துண்டேந்தி பிச்சை எடுத்து தமிழர்களைக் காப்பாற்ற கட்சியை நடத்துவதாக சொன்ன தி.மு.க-வால் இன்றுகோடிகளை அனாவசியமாக செலவு செய்து மாநாடு நடத்த முடிகிறது. !

       இந்தப்பணம் எப்படி வந்தது? என்பது ஒருபுறம் இருக்க..
 தி.மு.க. வளர்ந்த அளவுக்கு தி.மு.க-வால் தமிழர்கள், திராவிடர்கள் வளர்ந்து உள்ளார்களா?என்ற கேள்வி எழுகிறது.!


           இன்றும் கையறுநிலையில்,வறுமையின் பிடியில் இலட்சக்கணக்கான தி.மு.க.தொண்டர்கள்,அப்பாவி தமிழர்கள் இருப்பதை காணும்போது, தி.மு.க யாரை வளர்த்துள்ளது என்ற கேள்வி எழுகிறது.!
       
                     கண்ணதாசன் சொல்வார்: 
."நாடகங்கள் ஆடுமாறு நாயகன்தன் கட்டளை
நாடகம் என்னும் பேரில் நடப்பதுதான் எத்தனை?"

"அன்பு ஒன்று செய்யுமாறு அண்ணலிட்ட கட்டளை
அன்பு என்னும் வாள்கொண்டு ஆளறுபோர் எத்தனை ?"

-    இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ,நிச்சயம் கலைஞருக்கு பொருந்தும்!

        சுயநலமும், சந்தர்ப்பவாதமும்,அடுக்குமொழி பேச்சும், தந்திரமும் அரசியல் சாணக்கியமாக தெரியலாம். ஆனால்,இவைகளால் யாருக்கு என்ன பயன்? சிந்திக்க வேண்டிய நேரம் இது.


Monday, 10 February 2014

ராமதாசின் (சொ)நொந்த மனம்..

          எந்த திராவிட கட்சிகளுடன் தேர்தலுக்கு தேர்தல் அணிமாறி கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தில் பங்குபேற்றாரோ அந்த திராவிடக் கட்சிகளை சனியன்கள் என்று மருத்துவர் ராமதாஸ் சாடி உள்ளதுடன்,இந்த கட்சிகளை வேரடி மண்ணோடு வீழ்த்தவேண்டும் என்று பேட்டி அளித்துள்ளார்.

          சமூக நீதிக்கு குரல்கொடுத்த ராமதாஸ்,  தந்தை பெரியார்,அண்ணல் அம்பேத்கர் போன்றோரின் எண்ணங்களுக்கு எதிராக இன்று நடந்து கொள்வதை காலத்தின் கோலம் என்பதா? வாக்கு வங்கி அரசியலுக்காக வழிதவறி போனவர் என்பதா? தெரியவில்லை.!


      தமிழ்குடிதாங்கி என்று தோல்.திருமா அவர்களால் அழைக்கப்பட்ட, அண்ணல் அம்பேத்கர் விருது பெற்ற திராவிடரான,  மருத்துவர் ராமதாஸ் அவர்கள் இன்று ஆரிய,பார்ப்பன சூழ்ச்சிக்கு பலியாகி,ஆதிதிராவிடர்களுக்கு எதிராக செயல்படத் தொடக்கி இருக்கிறார்.

     சாதிகளை ஒழிக்கவும்,சாதிகள் அற்ற தமிழ் தேசியத்தைக் கட்டியமைக்கவும் வேண்டிய மிகப்பெரிய சமுதாயக் கடமையை மறந்துவிட்டு, புறக்கணித்து விட்டு, சாதியத்தை முனைப்புடன் தூக்கி நிறுத்தவும்,சாதிய கட்சிகளின் தயவுடன் ஆட்சி அதிகாரத்தை பெறவும்  ராமதாசின் (சொ)நொந்த மனம் இன்று துடிக்கிறது. தவியாய் தவிக்கிறது.!

       இத்தனைக்கும் ராமதாஸ் திராவிடர்களான,தமிழர்களை ஆளவும், தமிழகத்தை ஆளவும் துடிப்பது  அப்பட்டமாக  தெரிகிறது.!
 

          கண்ணை விற்று சித்திரம் வாங்குவதைப் போல தமிழினத்தை சிதைத்தும்,  தமிழின ஒற்றுமைக்கு ஊறு விளைவித்தும், ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை  தமிழகத்தில் கொண்டுவர  ஒருபுறம் கூட்டணி பேரம் பேசியபடி, கூட்டணியில் தனக்கு அதிக சீட்டும்,நோட்டும் கிடைக்க வேண்டுமே என்ற பதைபதைப்புடன்,சமுதாய கூட்டணியை அமைத்து, நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க போவதாக ராமதாஸ் அவர்கள் கூறுகிறார்.!

        நாம் என்ன சொன்னாலும்மக்கள்   நம்பிவிடுவார்கள், மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள்  என்ற எண்ணத்தில் ராமதாஸ் அவர்கள் நடந்து கொள்வது  தெரிகிறது.

        முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்பார்.  தேர்தலில் போட்டியிட இவர் முஸ்லிம்களுக்கு வாய்பளிக்க மாட்டார். கட்சியிலும், பதவிகளிலும் முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் தரமாட்டார்.!

       பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று குரல்கொடுப்பார். போராட்டம் நடத்துவார். ஆனால் இவரது கட்சியில் பெண்களை போட்டியிட அனுமதிக்க மாட்டார்.!


         ஒரு தலித்தைதான் தமிழ்நாட்டின் முதல்வராக ஆக்குவேன் என்று பேசுவார். தலித்துகள் பொருளாதாரத்தை,அடிப்படை உரிமைகளை மனுதர்ம வழியில் அழிக்கவும், ஒடுக்கவும்  செயல்படுவார்.!

        சினிமாவை வெறுக்கும் சினிமாகாரர்கள் அரசியலுக்கு வருவதை எதிர்க்கும் ராமதாஸ், அரசியலையே சினிமாவாக நினைத்து நாளொருவேசம் பொழுதொரு நடிப்பை வெளிபடுத்தி வரும் நடிகராவார்.!

      தமிழ் பழமொழி ஒன்று,படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்பதுதாகும். ராமதாசின் செயல்கள் அனைத்தும் அந்த ரகமாக இருக்கிறது.!
தமிழகத்தை பீடித்துள்ள எத்தனையோ பயங்கர நோய்களில் இவரையும் சேர்க்க வேண்டும்.!


தேர்தல் திருவிழாவும் திண்டாடும் மக்களும்..!

         நாடாளுமன்ற தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி விட்டது. எப்படியாவது இந்தமுறையும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவேண்டுமே என்று காங்கிரசும்,இந்தமுறையும் கோட்டை விடக் கூடாது என்று பி.ஜே.பி-யும் ஆளாய் பார்க்கின்றன. கொள்கை,லட்சியம், எல்லாவற்றையும் ஏறக் கட்டிவிட்டு முரண்பட்டு நிற்கும் அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி வைக்க பேரம் பேசுகின்றன.

        கூடாத நட்பாயினும் கூட்டணியில் அதிக சீட்டுகளைபெறவும்,கேட்ட தொகுதிகளை பெறவும் துடிக்கும் மாநில கட்சிகளும்,சாத்திய அமைப்புகளும், தங்கள் பலத்தை காட்டுவதற்கு மாநாடுகளை பிரமாண்டமான பொதுக் கூட்டங்களை போட்டு மக்களை திரட்டி காட்டுகின்றன.


         இந்தியா எங்கும் நடக்கும் இத்தகைய கூத்துக்கள் தேர்தல் என்பதை திருவிழாக் கொண்டாட்டமாக எண்ணி செயல்படும் அரசியல்வாதிகளை, அரசியல் கட்சிகளை அடையாளம் காட்டுகின்றன.!

          இவைகளில் இருந்து பொதுவான ஒரு விஷயம் நமக்குத் தெரிகிறது. எந்தக்கட்சிக்கும் தனது கொள்கைகளை சொல்லி,நியாயமான வாக்குறுதிகளை சொல்லி, பொதுமக்களிடம் தனித்து நின்று வாக்கு கேட்கும் தைரியம் இல்லை.


        மக்களுக்கு இந்த கட்சிகளின் யோக்கியதை  ஏற்கனவே தெரிந்து இருப்பதால், மக்கள் தங்களை புறக்கணித்து விடுவார்கள் என்கிற அச்சம் எல்லா கட்சிகளுக்கும் இருப்பது தெரிகிறது.!

        மேலும் இக்கட்சிகள் அனைத்தும் மக்களை கடந்த காலத்தில் ஏமாற்றி வந்ததால் மக்களின் அதிருப்திக்கு ஆளாகி உள்ளதும் தெரிகிறது. அதனாலேயே. தனித்து நாடாளுமன்ற தேர்தலைச் சந்திக்க முடியாமல் கூட்டணி என்ற பெயரில் கொள்கை முரண்பாடுகள் உள்ள கட்சிகளுடனும் கூட்டு வைக்க கொஞ்சமும் வெட்கமின்றி நடந்து கொள்கின்றன.!

        இவைகளைப் பார்க்கும்போது  ஒட்டுக்காகவும், எம்.பி.சீட்டுக்காகவும், ஆட்சி அதிகாரத்துக்காவும் ஆளை பறப்பது நாட்டை காப்பாற்றவும்,நாட்டு மக்களை முன்னேற்றவும் இல்லை என்பது தெரிகிறது.!


            கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்து கொள்ளையும் ஊழலும், முறைகேடுகளும் செய்ய நடக்கும் இந்திய நாடாளுமன்ற தேர்தலால்  நாட்டின் பொருளாதாரம் மேலும் வீணாகிறது என்பதும் மக்கள் மேலும் திண்டாடப் போகிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது.!

      மோசமான அரசியல் கட்சியின் மோசமான நபர்களை,மோசடியாக தேர்ந்தெடுக்கும் இந்திய தேர்தலைப் பார்த்தால் என்ன தேர்தலோ,என்ன ஜனநாயகமோ, என்று கத்தலாம் போல் இருக்கிறது.!


Saturday, 18 January 2014

சஷிதரூரின் சர்ச்சைக் காதல்கள் ..

       மத்திய மனித வளத் துறை அமைச்சர் சசிதரூர்  சர்ச்சைகளில் சிக்கிகொள்வது புதிய செய்தி இல்லை. மந்திரியாக இருக்கும் இந்த மன்மத ராஜா..மன்னர்கள்  காலத்தில் வாழ்வதாக நினைக்கும் அதிசய விசித்திர பிராணி.. தனது அந்தரங்கத் தேவைகளுக்காக ஆட்சி,அதிகாரத்தைப் பயன்படுத்துவதிலும் அந்தப்புரங்களை  உருவாக்குவதில்அலாதி பிரியம் கொண்டவர்.


          கடந்த 2010-ம் ஆண்டு, தன் நீண்டநாள் காதலி சுனந்தா புஷ்கரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமே இது 3-வது திருமணம் ஆகும்.பண்பாடு,கலாச்சாரம் என்று பேசும் இந்தியாவில் இவருக்கு மனித வள மேம்பாட்டுத் துறை மந்திரிபதவி அளித்தார்கள்.
இவர் தனது மூன்றாவது மனைவிக்காக கேரளா கிரிகெட் அணியை வாங்க முயன்று அது சர்ச்சையானது. அதற்கு முன்பு, அணு ஆயுத பரவல் ஒப்பந்தம் 123-யில் இந்தியா கையெழுத்து இடக்கூடாது என்ற பொது  "தலை அறுந்த கோழிகள்" என்று இடதுசாரிகள்,எதிர்கட்சிகள் அனைத்தையும் ஏகமனதாக கிண்டலடித்தவர்.

         அப்படிப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரரான சஷிதரூருக்கு மூன்றாம் மனைவி சுனந்தா புஷ்கர் மீது இருந்த மோகம் குறைந்து போனதாலோ என்னவோ பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் மெர் தரார் என்பவருடன் பழக்கமும் நெருக்கமும் ஏற்பட்டதை உணர்ந்த சுனந்தா புஷ்கர் சுதாரித்துகொண்டு டுவிட்டர்,மூலம்  புலம்பி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தது இருந்தார் நேற்று மாலை அவர் மர்மமான முறையில்  டெல்லியில் அவர் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் இறந்துள்ளார்.

                                                                                                                                                                அவரது உடலை போலீசார் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதே பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவரது சாவு இயற்கைக்கு மாறானது என்பது தெரியவந்துள்ளது.எதிர்பாராத, இயற்கைக்கு மாறான முறையில் சுனந்தா மரணம் அடைந்திருப்பதாகவும், அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும்இந்த காயம் காரணமாக அவர் இறந்திருக்கலாம், தடய அறிவியல் துறை தலைவர் டாக்டர் குப்தா தெரிவித்து உள்ளார்.


            "13 வயதில்  மகன் உள்ள மெர் தரார், பாகிஸ்தான் நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.அவர்  ஏதோ காரணத்துக்காக சசிதரூரை என்னிடம் இருந்து அபகரிக்க முயற்சிக்கிறார். நான் சிகிச்சைக்காக 4 மாதங்கள் வெளிநாட்டில் இருந்தபோது, எங்கள் திருமண பந்தத்தை உடைக்க முயன்றார். அவர் சசிதரூருடன்  உறவை விரும்புகிறார்.அவருடன் வாழ்நாள் முழுவதும் உறவைத் தொடர விரும்புகிறார். அதற்காக என்னை விலகிச் செல்லுமாறு கூறுகிறார்." என்று கூறிய சுனந்தா,மெர் தராரிடம் இருந்து விலகி இருக்குமாறு என் கணவரிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.

      பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெர் தராருடன் சசிதரூர் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகவும், அதனால் சசிதரூரிடம் இருந்து விவாகரத்து கேட்கப் போவதாகவும் சுனந்தா கூறி இருந்த நிலையில் அவர் .. மர்மமாக இறந்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.         சுனந்தா கொல்லபட்டாரா? ஆம்என்றால்  யாரால்?கொலையாளி சஷி தரூரா? ஐ.எஸ்.ஐ-யா?  அல்லது அரசியல் எதிரிகளா? கொலையாளி சட்டத்தின் மூலம் தண்டிக்கபடுவாரா? அரசியல் காரணத்தால் நடந்த படுகொலையா? கள்ள உறவால் வந்த வினையா? தற்கொலையா?  சஷிதரூருக்கு மனிதவள மேம்பாட்டுத் துறையா? தகுமா? சொல்லுங்கள் தோழர்களே, இந்தியா  எங்கு செல்கிறது!


Sunday, 12 January 2014

இந்தியாவின் இரண்டு முகங்கள்..!

         அமெரிக்காவின் இந்திய துணைத் தூதராக இருந்த தேவயானி கோர்பகடேவை கைது செய்து,  அவமானபடுத்திய நிகழ்வில் வெகுண்டு எழுந்து பழிக்கு பழியாகவும், எதிர் நடவடிக்கையாகவும் இந்தியா நடந்துகொண்டது  இந்தியாவின் ஒரு முகம் என்றால்,   இலங்கை விவகாரத்தில் இந்தியா நடந்துகொள்வது மற்றொரு முகமாகும்.!

       அமெரிக்கா மீது புலிபாச்சல் பாயும் இந்தியா,    அண்டைநாடான இலங்கையின்  மீது அவ்வாறு பாயாமல்,  அந்நாட்டின் ஊதுகுழலாகவே நடந்து வருகிறது.


           தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தருணங்களில் இலங்கை  செயல்பட்டு வந்துள்ளது  என்றபோதும், அந்நாட்டுக்கு எதிராக இன்றுவரை கடும் நடவடிக்கை எதுவும் இந்தியா எடுக்கவில்லை. எடுக்கவும் விரும்பாமல் நடந்துகொள்கிறது !

        இத்தனைக்கும் ராஜீவ் காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை அமுல் படுத்தாமல்  ஏமாற்றிய போதும், இருநாட்டுத் தலைவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மதிக்காமல்,நடைமுறைப் படுத்தாமல் இருக்கும் நிலையிலும்  இலங்கைக்கு எதிராக இந்தியாகண்டனம் கூட தெரிவிக்காமல்,அமுல்படுத்த வற்புறுத்தாமல் இருந்துவருகிறது.! இலங்கைக்கு எதிரானா எதிர் நடவடிக்கை எதையும் எடுக்காமல் இருந்து வருகிறது.


             அதுமட்டுமின்றி, இலங்கை எதை செய்தாலும், இந்தியாவுக்கு எதிராக நடந்து கொண்டாலும்,இந்திய மீனவர்களை கொன்று குவித்தாலும், இந்திய கடல்பகுதியில் இலங்கை இராணுவம் அத்துமீறி பிரவேசித்தாலும், இந்திய மீனவர்களைச்  சுட்டு கொன்றாலும், இந்திய மீனவர்களின் வாழவாதாரத்தை தொடர்ந்து கேள்வியாக்கி, இந்தியாவின்  வல்லாண்மையை,அதிகாரத்தை கேலி செய்தாலும், கூட இந்தியா அமைதி  வருகிறது.!

         இதன் விளைவு , இந்தியாவின் ஒரு அங்கமாக உள்ள தமிழ் மக்களிடம் தேச பக்தியும், தேசிய உணர்வும்  இல்லாத நிலைக்கு தமிழர்களை ஆக்கி விட்டதுதான்! 
.
        ஒருநாட்டின் அயலுறவு கொள்கை என்பது   பொதுவானதாக இருக்க வேண்டும்.. எல்லாநாட்டு விவகாரங்களிலும் பாரபட்சமற்ற, நடுவு நிலையில், ஒரே விதமான அணுகுமுறையை கொண்டு இருக்க வேண்டும்!


            ஆனால், இந்தியாவின் அயலுறவு கொள்கை என்பது  நடுவு நிலை உடையதாகவும்,  ஒரேவிதமான  அணுகுமுறையைக் கொண்டதாகவும் இல்லை!   முற்றாக, முழுதாக  பாரபட்சம் உள்ளதாக இருக்கிறது.!

 .      இந்தியாவின்  அயலுறவு கொள்கையானது, இலங்கைக்கு ஒரு அளவு கோலையும்,  பாகிஸ்தானுக்கு,  சீனாவுக்கு, வங்காள தேசத்துக்கு ஒருவித அளவுகோலையும்,    அமெரிக்கா போன்ற நாடுகள் விசயத்தில் வேறு அளவுகோலையும், அணுகுமுறையையும் கொண்டுள்ளது.!  .

         இந்தியாவின் இத்தகைய நிலைபாட்டால்தான்  இலங்கை போன்ற நாடுகள் தொடர்ந்து வாலாட்டி வருகின்றன.  இந்திய தமிழ் மீனவர்களை விடுவிக்கவேண்டும் என்ற இந்தியாவின் நியாயமான  கோரிக்கை கூட புறக்கணிக்கப் பட்டு வருகின்றன.

        இலங்கை விவகாரத்தில் தனது நிலைபாட்டைஇந்தியா மாற்றிகொள்ள வெண்டிய நேரம் இது.!