Saturday, 18 January 2014

சஷிதரூரின் சர்ச்சைக் காதல்கள் ..

       மத்திய மனித வளத் துறை அமைச்சர் சசிதரூர்  சர்ச்சைகளில் சிக்கிகொள்வது புதிய செய்தி இல்லை. மந்திரியாக இருக்கும் இந்த மன்மத ராஜா..மன்னர்கள்  காலத்தில் வாழ்வதாக நினைக்கும் அதிசய விசித்திர பிராணி.. தனது அந்தரங்கத் தேவைகளுக்காக ஆட்சி,அதிகாரத்தைப் பயன்படுத்துவதிலும் அந்தப்புரங்களை  உருவாக்குவதில்அலாதி பிரியம் கொண்டவர்.


          கடந்த 2010-ம் ஆண்டு, தன் நீண்டநாள் காதலி சுனந்தா புஷ்கரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமே இது 3-வது திருமணம் ஆகும்.பண்பாடு,கலாச்சாரம் என்று பேசும் இந்தியாவில் இவருக்கு மனித வள மேம்பாட்டுத் துறை மந்திரிபதவி அளித்தார்கள்.
இவர் தனது மூன்றாவது மனைவிக்காக கேரளா கிரிகெட் அணியை வாங்க முயன்று அது சர்ச்சையானது. அதற்கு முன்பு, அணு ஆயுத பரவல் ஒப்பந்தம் 123-யில் இந்தியா கையெழுத்து இடக்கூடாது என்ற பொது  "தலை அறுந்த கோழிகள்" என்று இடதுசாரிகள்,எதிர்கட்சிகள் அனைத்தையும் ஏகமனதாக கிண்டலடித்தவர்.

         அப்படிப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரரான சஷிதரூருக்கு மூன்றாம் மனைவி சுனந்தா புஷ்கர் மீது இருந்த மோகம் குறைந்து போனதாலோ என்னவோ பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் மெர் தரார் என்பவருடன் பழக்கமும் நெருக்கமும் ஏற்பட்டதை உணர்ந்த சுனந்தா புஷ்கர் சுதாரித்துகொண்டு டுவிட்டர்,மூலம்  புலம்பி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தது இருந்தார் நேற்று மாலை அவர் மர்மமான முறையில்  டெல்லியில் அவர் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் இறந்துள்ளார்.

                                                                                                                                                                அவரது உடலை போலீசார் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதே பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவரது சாவு இயற்கைக்கு மாறானது என்பது தெரியவந்துள்ளது.எதிர்பாராத, இயற்கைக்கு மாறான முறையில் சுனந்தா மரணம் அடைந்திருப்பதாகவும், அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும்இந்த காயம் காரணமாக அவர் இறந்திருக்கலாம், தடய அறிவியல் துறை தலைவர் டாக்டர் குப்தா தெரிவித்து உள்ளார்.


            "13 வயதில்  மகன் உள்ள மெர் தரார், பாகிஸ்தான் நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.அவர்  ஏதோ காரணத்துக்காக சசிதரூரை என்னிடம் இருந்து அபகரிக்க முயற்சிக்கிறார். நான் சிகிச்சைக்காக 4 மாதங்கள் வெளிநாட்டில் இருந்தபோது, எங்கள் திருமண பந்தத்தை உடைக்க முயன்றார். அவர் சசிதரூருடன்  உறவை விரும்புகிறார்.அவருடன் வாழ்நாள் முழுவதும் உறவைத் தொடர விரும்புகிறார். அதற்காக என்னை விலகிச் செல்லுமாறு கூறுகிறார்." என்று கூறிய சுனந்தா,மெர் தராரிடம் இருந்து விலகி இருக்குமாறு என் கணவரிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.

      பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெர் தராருடன் சசிதரூர் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகவும், அதனால் சசிதரூரிடம் இருந்து விவாகரத்து கேட்கப் போவதாகவும் சுனந்தா கூறி இருந்த நிலையில் அவர் .. மர்மமாக இறந்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.         சுனந்தா கொல்லபட்டாரா? ஆம்என்றால்  யாரால்?கொலையாளி சஷி தரூரா? ஐ.எஸ்.ஐ-யா?  அல்லது அரசியல் எதிரிகளா? கொலையாளி சட்டத்தின் மூலம் தண்டிக்கபடுவாரா? அரசியல் காரணத்தால் நடந்த படுகொலையா? கள்ள உறவால் வந்த வினையா? தற்கொலையா?  சஷிதரூருக்கு மனிதவள மேம்பாட்டுத் துறையா? தகுமா? சொல்லுங்கள் தோழர்களே, இந்தியா  எங்கு செல்கிறது!


Sunday, 12 January 2014

இந்தியாவின் இரண்டு முகங்கள்..!

         அமெரிக்காவின் இந்திய துணைத் தூதராக இருந்த தேவயானி கோர்பகடேவை கைது செய்து,  அவமானபடுத்திய நிகழ்வில் வெகுண்டு எழுந்து பழிக்கு பழியாகவும், எதிர் நடவடிக்கையாகவும் இந்தியா நடந்துகொண்டது  இந்தியாவின் ஒரு முகம் என்றால்,   இலங்கை விவகாரத்தில் இந்தியா நடந்துகொள்வது மற்றொரு முகமாகும்.!

       அமெரிக்கா மீது புலிபாச்சல் பாயும் இந்தியா,    அண்டைநாடான இலங்கையின்  மீது அவ்வாறு பாயாமல்,  அந்நாட்டின் ஊதுகுழலாகவே நடந்து வருகிறது.


           தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தருணங்களில் இலங்கை  செயல்பட்டு வந்துள்ளது  என்றபோதும், அந்நாட்டுக்கு எதிராக இன்றுவரை கடும் நடவடிக்கை எதுவும் இந்தியா எடுக்கவில்லை. எடுக்கவும் விரும்பாமல் நடந்துகொள்கிறது !

        இத்தனைக்கும் ராஜீவ் காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை அமுல் படுத்தாமல்  ஏமாற்றிய போதும், இருநாட்டுத் தலைவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மதிக்காமல்,நடைமுறைப் படுத்தாமல் இருக்கும் நிலையிலும்  இலங்கைக்கு எதிராக இந்தியாகண்டனம் கூட தெரிவிக்காமல்,அமுல்படுத்த வற்புறுத்தாமல் இருந்துவருகிறது.! இலங்கைக்கு எதிரானா எதிர் நடவடிக்கை எதையும் எடுக்காமல் இருந்து வருகிறது.


             அதுமட்டுமின்றி, இலங்கை எதை செய்தாலும், இந்தியாவுக்கு எதிராக நடந்து கொண்டாலும்,இந்திய மீனவர்களை கொன்று குவித்தாலும், இந்திய கடல்பகுதியில் இலங்கை இராணுவம் அத்துமீறி பிரவேசித்தாலும், இந்திய மீனவர்களைச்  சுட்டு கொன்றாலும், இந்திய மீனவர்களின் வாழவாதாரத்தை தொடர்ந்து கேள்வியாக்கி, இந்தியாவின்  வல்லாண்மையை,அதிகாரத்தை கேலி செய்தாலும், கூட இந்தியா அமைதி  வருகிறது.!

         இதன் விளைவு , இந்தியாவின் ஒரு அங்கமாக உள்ள தமிழ் மக்களிடம் தேச பக்தியும், தேசிய உணர்வும்  இல்லாத நிலைக்கு தமிழர்களை ஆக்கி விட்டதுதான்! 
.
        ஒருநாட்டின் அயலுறவு கொள்கை என்பது   பொதுவானதாக இருக்க வேண்டும்.. எல்லாநாட்டு விவகாரங்களிலும் பாரபட்சமற்ற, நடுவு நிலையில், ஒரே விதமான அணுகுமுறையை கொண்டு இருக்க வேண்டும்!


            ஆனால், இந்தியாவின் அயலுறவு கொள்கை என்பது  நடுவு நிலை உடையதாகவும்,  ஒரேவிதமான  அணுகுமுறையைக் கொண்டதாகவும் இல்லை!   முற்றாக, முழுதாக  பாரபட்சம் உள்ளதாக இருக்கிறது.!

 .      இந்தியாவின்  அயலுறவு கொள்கையானது, இலங்கைக்கு ஒரு அளவு கோலையும்,  பாகிஸ்தானுக்கு,  சீனாவுக்கு, வங்காள தேசத்துக்கு ஒருவித அளவுகோலையும்,    அமெரிக்கா போன்ற நாடுகள் விசயத்தில் வேறு அளவுகோலையும், அணுகுமுறையையும் கொண்டுள்ளது.!  .

         இந்தியாவின் இத்தகைய நிலைபாட்டால்தான்  இலங்கை போன்ற நாடுகள் தொடர்ந்து வாலாட்டி வருகின்றன.  இந்திய தமிழ் மீனவர்களை விடுவிக்கவேண்டும் என்ற இந்தியாவின் நியாயமான  கோரிக்கை கூட புறக்கணிக்கப் பட்டு வருகின்றன.

        இலங்கை விவகாரத்தில் தனது நிலைபாட்டைஇந்தியா மாற்றிகொள்ள வெண்டிய நேரம் இது.!


Thursday, 9 January 2014

பி.ஜே.பி யும், ஆம் ஆத்மியும், அப்பாவி பொதுமக்களும்..!

          இந்திய ஜனநாயகத்தின் புதிய வரவு ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தை இந்துத்துவ தீவிரவாதிகள்,குறிப்பாக மோடியை பிரதமராகவே நினைக்கும் ஆதிக்க சக்திகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

          காஸ்மீரில் ராணுவத்தைக் குவிப்பது குறித்து, அம்மாநில மக்களின் கருத்துகளைக்  கேட்க  வேண்டும், பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று  ஆம் ஆத்மி கட்சியின்  தலைவர்களில் ஒருவர் சொல்ல போய்... எப்படி சுதந்திரமாக கருத்து சொல்லலாம்?  என்று வெகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளன.           பொதுவாகவே, ஆதிக்க குணம் கொண்ட இந்துமத சக்திகள், இந்துத்துவ வாதிகள் தங்களுக்கு எதிரான, தங்களது  நலத்துக்கு எதிரான கருத்துக்களை யார் சொன்னாலும் எற்றுகொள்வதில்லை. அனுமதிப்பதில்லை.!

         ஆதிக்க சக்திகளைப் பொருத்தவரை கருத்து  சுதந்திரம் என்பது எட்டிகாயைபோன்றது. ! ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரம் என்பது அடிப்படையாக உள்ள நிலையில்,  பி.ஜே.பி-கட்சியும் அதன் ஆதரவு அமைப்புகளும்  கருத்தை சொன்னாலே  தாக்குதல் நடத்துகின்றன.! இது இந்திய ஜனநாயகத்தை, எந்த அளவு எதேச்சதிகார சக்திகள் சீர்குலைத்து உள்ளன என்பதற்கு எடுத்துகாட்டாகும்.          ஆட்சியில் இல்லாத போதே இவ்வளவு மூர்க்கமாகவும்,ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையிலும் நடந்துகொள்ளும் இந்துத்துவ பி.ஜே.பி.கட்சி ஆட்சிக்கு வந்தால், அக்கட்சி கட்டவிழ்த்துவிடும் பயங்கரங்களை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. !

         ஆம் ஆத்மி கட்சி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்களது வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்ற அச்சம்  பி.ஜே.பி.கட்சிக்கும் அதன் சங்கபரிவார அமைப்புகளுக்கும்  இருப்பதை  இந்த தாக்குதல் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.!


         இதையெல்லாம் பார்க்கும்போது,எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை பி.ஜே.பி.கட்சி அமைதியாக நடைபெற அனுமதிக்காது என்பது தெரிகிறது. !

         எதையாவது செய்து ஆட்சியைக் கைப்பற்ற துடிக்கும் பி.ஜே.பி.யின் பதவி வெறியால்,அதிகார போதையால் தேர்தலுக்குள் நிறைய கலவரங்களை,மத சண்டைகளை, குண்டுவெடிப்புகளை நடத்த வாய்ப்பு உள்ளது.!

         பி.ஜே.பி-யின் பதவி வெறிக்கு அப்பாவி பொதுமக்கள் பலியாவதும், பாதிக்கபடுவதும்  தடுக்கபட வேண்டும்  !

         சமூக நலனில் அக்கறை உள்ள அனைவரும் ஒன்றிணைந்து, இந்துமத வெறியர்களை .அதன் முகமூடியான பி.ஜே.பி-கட்சியை ஓரணியில் நின்று எதிக்க வேண்டும். !