Wednesday, 23 April 2014

தேர்தலில் இருக்கு நோட்டும் நோட்டாவும்..!

         நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயத்தின் மீது விரக்தியும், நமது வேட்பாளர்கள் மீது உள்ள அதிருப்தியையும் ஆளும் வர்க்கம் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டு இருக்கிறது. அதன் அடையாளமாகவே வாக்கு பதிவு இயந்திரத்தில் உள்ள பதினாறு பட்டன் களில் ஒன்றாக நோட்டா( NOT ABOVE THE OPTION ) இடம் பெற்று இருக்கிறது.

          ஒரு தொகுதியில் நிற்கும் வேட்பாளர்கள் யாரையும் பிடிக்கவில்லை, வாக்கு அளிக்க விருப்பமில்லாதவர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்கலாம்.!

        நோட்டாவுக்கு செல்லும் வாக்குகள்  செல்லாதவையாக கருதப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

        மேலும் ஒரு தொகுதியில் நோட்டாவுக்கு வேட்பாளர்களைக் காட்டிலும் அதிக வாக்குகள் பதிவானால் அந்த தொகுதியல் மறுதேர்தல் நடத்தபடுவதும், தற்போது வேட்பாளர்களாக உள்ளவர்களை மறுதேர்தல் நடைபெறும்போது தகுதி நீக்கமும் செய்வதுதான் சிறந்த ஜனநாயகமாக இருக்கமுடியும் !

            அத்தகைய நடைமுறையை கடைபிடிக்க  முன்வராமல் தேர்தல் ஆணையம் நோட்டாவுக்கு  அடுத்து அதிக வாக்குகள் பெற்றவரை வெற்றிபெற்றவராக அறிவிக்கும் முடிவை எடுத்து உள்ளது,இது கண்டிக்க வேண்டிய ஒன்றாகும்.!

       அதிக பணத்தைக் கொடுத்து, ஜனநாயகத்தை பணநாயகமாக, ஊழல், முறைகேடு உள்ளதாக  நமது அரசியல்கட்சிகள் பலவும் செய்துவிட்டன, வாக்களர்களுக்கு  பணம் கொடுத்து,  தங்களது தவறுகளை மறைக்க அரசியல்வாதிகள்  நினைகிறார்கள.!

        தாங்கள் சுரண்டிய  பணத்தை, முறைகேடாக சேர்த்த பணதைகொண்டே அடுத்த சுரண்டலுக்கும், முறைகேடுகளுக்கும்  மக்களிடம் அனுமதி வாங்கும் நோக்கத்தில் அரசியல்வாதிகள் நடந்துகொண்டு அப்பாவி மக்களுக்கு வாக்களிக்க பணம் தருகிறார்கள்.!

          அப்பாவி மக்களும், வறுமையில் வாடும் கிராமப்புறத்து ஏழைகளும்  இதனை அறியாமல், தங்களது வாக்குகளின் வலிமையைப் பற்றிய விழிப்புணர்வு இன்றி,  வேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிகொண்டு வாக்களிக்கும் அவல  நிலை இருந்து வருகிறது.!

  இதுபோன்ற காரணங்களால்,இ ந்தியாவின் ஜனநாயகம்  நாளுக்கு  நாள் ஏகாதிபத்தியமாக,அதிகார  வர்க்கங்களால் மாற்றப்பட்டு வருகிறது.!

  சர்வாதிகார,ஏகாதிபத்தியமாக இந்திய ஜனநாயகம் மாறி வருவதன் எதிரொலியே,  "இந்துக்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் வேற்று சமூகங்களுக்கு இடமில்லை"  என்ற கொள்கையுள்ள மோடி பிரதமர்  என்று கொக்கரிப்பதும், தேர்தலுக்கு முன்பே பிரவீன் தொக்காடியா  முஸ்லிம்கள் வெளியேறவேண்டும் என்று திமிராக பேசுவதும் மோடிக்கு வாக்களிக்க வில்லை என்றால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என்று கிரிராஜ் சிங் என்பவர் கொக்கரிப்பதும்  போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.

         இவர்கள் சொல்லியதையே, முஸ்லிம்களோ, கிருஷ்தவர்களோ, சொல்லியிருந்தால்  அவர்கள்மீது இந்நேரம் பயங்கரவாத தடைச்சட்டம் பாய்நதிருக்கும், தேசத்தின் இறையாண்மைக்கு, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக கைது செய்து சிறையில் அடைத்து இருப்பார்கள். !

       பிரவீன் தொகடியா,கிரிராஜ் சிங் ஆகியோர்களுக்கு அவ்வாறெல்லாம் நடைபெறவில்லை.நடைபெறப் போவதுமில்லை.!

       எனவே, இந்தியா எங்கு போகிறது?  இந்தியாவின் பிரதமராக யார் வரவேண்டும்?  யார் வரகூடாது.  இந்தியா இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானதாக இருக்க வேண்டுமா?  அனைத்து சமூகங்களுக்கும் ஆனதாக இருக்க வேண்டுமா? என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கிறது.

        ஆகவே, நோட்டாவை பயன்படுத்தினாலும் ஒன்றும் ஆவப்போவதில்லை. நோட்டை வாங்கிகொண்டு  நமது வாக்குகளை வீனடிகாதீர்கள். !

       நமது வாக்குகளை  அயோக்கியர்களுக்கு, நாட்டை துண்டாட நினைப்பவர்கள்,  வன்முறையாளர்கள், மதவெறி, சாதிவெறியர்கள்,  சுரண்டல் பேர்வழிகள்  ஆகியவர்களுக்கு அளிக்காதீர்கள்.!

       நல்லவர்களைத்தேர்ந்தெடுக்க,  நமது வாக்குகளைப் பயன்படுத்துவோம்.!   நமது ஜனநாயகத்தைக் காக்க அதுவே சிறந்த வழியாகும்.!


1 comment:

  1. வணக்கம் நண்பர்களே

    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    ReplyDelete